Sunday, March 28, 2021

ஆண்டிமுத்து ராசா அருளிய வாக்குறுதி

இப்போது தான் தமிழக அரசியல் களம் உண்மையான மனிதர்களின் குணங்களை அடையாளம் கண்டுள்ளது. சில தினங்களுக்கு முன் சென்னை வேளச்சேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பேசிய முன்னாள் தொலை தொடர்பு அமைச்சரும் தற்போதைய நீலகிரி பாராளுமன்ற உறுப்பினருமான ஆண்டி முத்து ராசா தன் மனதில் உள்ளதை அப்படியே எடுத்து வைத்தார்.




தற்போதைய தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி "கள்ள உறவில் பிறந்தவர்" என்று. இது புதியவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.  ஆனால் திமுக வை தொடர்ந்து கவனித்தவர்களுக்கு இயல்பாகவே இருக்கும். காரணம் அவர்களின் வழித்தடம் அப்படிப்பட்டது.

படித்தவர், படிக்காதவர், தற்குறி, உலகம் தெரிந்தவர், உள்ளூர் நிலவரம் அறிந்தவர் எவராக இருந்தாலும் திமுக வில் இருந்தால் அவர்களின் ஒரே தகுதியை உங்களால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். 

அதற்கு அவர்கள் வெவ்வேறு காரணங்கள் வைத்திருப்பார்கள். சிரிப்பை அடக்கிக் கொண்டு கடந்து வந்து விட வேண்டும்.

நீ பத்தினி என்றால் தானே எனக்குப் பிரச்சனை? உன்னையும் மாற்றிவிட்டால்?

இது தான் அடிப்படைக் கொள்கை.  இதைத் தான் அவர்கள் விதவிதமாக வகைவகையாக வெவ்வேறு வார்த்தைகளில் இன்று வரையிலும் கொஞ்சம் கூடக் கூச்சப்படாமல் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருக்கின்றார்கள்.  

இதைத்தான் எளிய தமிழ்ப்பிள்ளைகளின் அகராதியில் ரொம்பவே ஆர்கசம் அடையாதீங்கப்பா? உயிர்ச் சத்துக் குறைந்தால் உடல் சத்து கெட்டுப் போய்விடும் என்று அன்போடு சொல்கின்றார்கள். 

2ஜி ஊழல் மூலம் இந்தியா முழுக்க நாற்றம் எடுக்கத் தொடங்கிய நேரத்தில் ராசா வை அழைத்து கலைஞர் அர்ச்சித்த வார்த்தைகளில் நாகரிகமாக எழுத முடிகின்ற ஒரே வார்த்தை.

"உங்கப்பன் கோவணம் அவிழ்த்த நேரம் சரியில்லை".

இதனை அப்போது சவுக்கு சங்கர் தளத்தில் கூடப் பதிவு செய்து இருந்தார். பல பேட்டிகளில் அப்போது நடந்தது என்ன? என்பதனையும் தெரிவித்துள்ளார். அப்போது வெளிவந்த பல வார இதழ்கள் இதனைப் பற்றி முழுமையாக எழுதியுள்ளனர்.

வார்த்தைகளில் வாசிக்கும் போதே பதவிக்காக இப்படியெல்லாம் உள்ளே இருப்பார்களா? என்று நமக்குப் பயத்தை உருவாக்கும்.

அங்கே இருக்க வேண்டும் என்றால் உங்களின் அடிப்படை மனித உணர்ச்சியே உங்களிடம் இருக்கக்கூடாது என்பது முதல் தகுதி.  எதைப் பார்த்தாலும் ஆர்கசம் அடையும் அளவிற்கு உணர்ச்சிப் பெருக்கோடு அணுக வேண்டும். பெண்களை உடலாகத்தான் பார்க்க வேண்டும்.

இதைத்தான் இப்போது பாஜக மேல் அவர்கள் அப்படியே மாற்றி சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள். காரணம் இப்படியொரு ஆயுதத்தை எடுத்தால் எவராயினும் அஞ்சத்தானே செய்வார்கள். 

ஆதரிக்கும் அப்பாவி தமிழ்ப்பிள்ளைகளுக்கு இது போன்ற தலவரலாறு தெரிய வாய்ப்பில்லை. சிரிப்பான் குறி சிங்கங்களுக்கு அவர்களின் ஆண்மைக்குறிகள் குறித்து சந்தேகம் இருக்குமா? என்பதும் புரியவில்லை. விருப்பக்குறி வித்துவான்கள் இது போன்ற நெஞ்சுக்கு அநீதி வரலாறுகளைப் படித்து உய்ய வேண்டும்.

தொடக்க காலத்தில் திமுக வில் இருந்த பல மாவட்டச் செயலாளர்கள் நாகரிகமாக வாழ வேண்டும் என்று நினைத்து வாழ்ந்தவர்கள் பெற்ற அனுபவம் எல்லாம் எழுத்தில் எழுத முடியாது. அவர்களின் குடும்பம் அனுபவித்த தனிப்பட்ட துயரங்கள் எல்லாம் இன்னமும் பல தனிப்பட்ட புத்தகங்களில் வாசிக்கக் கிடைக்கும். 

ஆனால் அனைத்தையும் மாற்றி சூராதி சூரர்களாக இன்று கதையளந்து கொண்டு ஆர்கசம் அடைவதைப் பார்த்து ஆச்சரியமாக உள்ளது.

மேலிருந்து கீழ் வரைக்கும் அன்று முதல் இன்று வரைக்கும் இப்படித்தான். கட்சியில் எந்தப் பதவியில் இருந்தாலும் எழுதப்படாத கொள்கையாகவே இதனை இன்று வரையிலும் வைத்துள்ளார்கள். காரணம் ஒருவரை மற்றொருவர் குற்றம் சாட்டினால் குற்றம் சாட்டியவரை அடுத்த ஐந்து பேர்கள் குற்றம் சாட்டும் அளவிற்குப் புனிதப்பணியில் கவனம் செலுத்தியவர்கள் என்பதால் உனக்கு நான் எனக்கு நீ என்றே இன்னமும் ஒற்றுமையுடன் இருக்கின்றார்கள்.

ஆண்டிமுத்து ராசா ஊழல் வெளிவந்த தினம் முதல் இன்று வரையிலும், டெல்லியில் கொடுத்த பத்திரிக்கையாளர் பேட்டி முதல், தனிப்பட்ட பத்திரிக்கைகள் நடத்திய கலந்துரையாடல் வரைக்கும் அனைத்தையும் பார்த்தீர்கள் என்றால் ரொம்பவே ஆச்சரியமாக இருக்கும்.  ஒரு துளி கலக்கம் என்பதே இருக்காது.  அதற்குத் தப்பு செய்தால் தானே கலங்க வேண்டியிருக்கும் என்பார்கள். திமுக வை ஆதரிக்கும் நக்கீரன் கூட அப்போது திமுகவின் அறக்கட்டளை அந்தச் சமயத்தில் மட்டும் எத்தனை நூறு கோடிகள் உயர்ந்தது என்பதனை குறிப்பிட்டு எழுதி இருந்தனர்.

ராஜாத்தி அம்மாள் ஏன் தயாநிதி மாறன் மேல் கொலைவெறியாக இருந்தார்? என்பதெல்லாம் ராசா கொண்டு வந்து கொட்டிய நிதியின் அளவு பார்த்து நிதிக்குடும்பமே மிரண்டு போனது. 

இத்தனை பக்கவாட்டு சேனல்களை சமாளித்து, அறக்கட்டளையில் அள்ளிக் கொட்டிய பின்பு தீவுகளில் உள்ள வங்கியில் பெற்ற நிதி அனைத்தையும் கொண்டு போய் பத்திரமாகப் பதுக்க முடிந்த ராசா வை எந்த வார்த்தைகளில் உங்களால் பாராட்ட முடியும்?

இன்று வரையிலும் ஆண்டிமுத்து ராசா பேச்சில் அந்தக் கம்பீரம் குறையவே இல்லை.  என்ன காரணத்தினால் தயாநிதி மாறனை, ராசாவை மத்திய அரசு விட்டு வைத்துள்ளார்கள் என்பதே புரியவில்லை.  தயாநிதி மாறனுக்குக் கூட ஒரு பாஜக பிரமுகர் தயவு கிடைத்துத் தப்பித்துக் கொண்டார்கள் என்ற பேச்சு வந்தது. ஆனால் ராசா அப்படியல்ல? 

குறுகிய காலத்திற்குள் அத்தனை குறுக்குவழிகளையும் எளிதாகக் கற்று எல்லையில்லாத உயரத்திற்குச் சென்று எல்லாவற்றையும் அடைந்து கலைஞர் குடும்பத்தில் உள்ள பல லாபிகளை சமாளித்து இன்று வரையிலும் அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியை வைத்திருக்கிறார் என்றால் அவர் யாரைப் பற்றி வேண்டும் என்றாலும் என்ன வார்த்தைகளாலும் பேச முடிந்தவர் என்று தானே அர்த்தம்.

காரணம் தனக்கென்று ஒரு கொள்கை வகுத்து அதன் படியே சென்று ஊரே அயோக்கியத்தனம் என்று காறித்துப்பினாலும் அடுத்த சட்டை மாற்றும் போது மற்றவர்களுக்குத் தெரியுமா?

ராசாவின் அம்மா பாவம்? இப்படியொரு பிள்ளை தமக்குப் பிறக்கும்? என்றா நினைத்திருப்பார்.  ( நான் பொய் எழுதுகிறேன். ஆர்கசம் அடைகின்றேன். புழுதிவாரி தூற்றுகிறேன் என்று சொல்லக்கூடிய தமிழ்ப்பிள்ளைகள் இணைப்பில் கொடுத்த செய்தித்தாள் சொடுக்கிப் படிக்க வேண்டாம். படிக்கும் போதே உங்களுக்குப் புரியும், மீண்டும் சொல்கிறேன். இவர்களின் உண்மை முகம் வேறு. இணைய தள முகம் வேறு. குடும்ப வாழ்க்கை முகம் வேறு, )


9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அப்படிப் போடுங்க... இப்போ தான் வெகு தொலைவில் உங்களை காண்கிறேன் - தாத்தா வள்ளுவர் வகையில்...

Agni rama said...

சில கிணற்று தவளைகளுக்கு கொஞ்சம் பணம் சேர்ந்தாலே தான் ஒரு பெரிய மேதாவி என்று நினைப்பு வந்து விடும் . அரசாங்க கான்ட்ராக்ட்கள் வேண்டுமானால் மக்கள் விரோத அரசாங்கத்தை புகழ்ந்துதானே ஆக வேண்டும்.

Agni rama said...

சவுக்கு சங்கர் கட்டுமரத்தை பற்றி மட்டுமா எழுதினார் . மோசடி மார்வாடி கிழவனின் தகிடு தத்தங்களையும் சேர்த்துதான் எழுதினார் . தனக்கு வேண்டும்கிறதை எடுத்துக்கொண்டு வேண்டாததை மறைப்பது நடு நிலைமையா? அரசாங்க காண்ட்ராக்ட் தேவையிருப்பதால் அதை பற்றி எழுத முடியவில்லையா திமுக அயோக்கியர்களின் கூடாரம் என்பதில் சந்தேகம் இல்லை . பிஜேபி அதற்கு கொஞ்சமும் குறைந்தது இல்லை . எல்லோருமே திருட்டு இந்தியர்கள்தானே என்னையும் சேர்த்து

ஜோதிஜி said...

அண்ணன்மார்கள் எப்போதும் தடம் மாறாமல் தான் பயணிக்கின்றோம்.

ஜோதிஜி said...

தம்பிமார்கள் வரிக்கு வரி பாடம் போல வாசிப்பதற்கு நன்றி. டெண்டர் என்பது சில லட்சங்கள் தான். எங்களைப் போன்ற எளிய தமிழ்ப்பிள்ளைகள் எதிர்பார்பது சில நூறு கோடி. உள்ளவதெல்லாம் உயர்வுள்ளல் வேண்டும் தம்பி.

Agni rama said...

"சில கிணற்று தவளைகளுக்கு கொஞ்சம் பணம் சேர்ந்தாலே தான் ஒரு பெரிய மேதாவி என்று நினைப்பு வந்து விடும்"
proved

ஜோதிஜி said...

ஆபாச ராசா தம்பியை அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். அவர் எளிய ஒடுக்கப்பட்ட தமிழ்ப்பிள்ளை. அவரைப் போல இன்னும் பல பேர்கள் இந்த சமூகத்தில் மேலே ஏறி வர வேண்டும் என்பது தானே உங்களைப் போன்ற நல்ல மனம் கொண்டு வாழும் நல்ல தமிழ்ப்பிள்ளைகளின் நோக்கம். வாழ்த்துங்களேன்.

கிருஷ்ண மூர்த்தி S said...

மாப்பிள்ளை ராசாவைப்பார்த்து கருணாநிதி அப்படிப்பச்சையாகக் கேட்டிருப்பார் என்றா நினைக்கிறீர்கள்? சவுக்கு சங்கர் சாட்சியத்தை தவிர வேறு ஆதாரம் இருந்ததா என்ன?

ஜோதிஜி said...

முழுமையாக எழுதினால் இளையர்கள் படித்து நொந்து போய்விடுவார்கள். அப்போது வந்த வார இதழ்கள் கிழித்து தொங்க விட்டு இருந்தார்கள்.