எந்த சாமி மலையேறினாலும் ஏறாவிட்டாலும் இரவு பத்து மணிக்குள் படித்து முடித்து ஆழ்ந்த நித்திரைக்குள் நுழைந்து விடும் மகள் நேற்று ஹாட் ஸ்டாரில் ஐபிஎல் விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருந்த போது ஒன்றை மட்டும் கவனித்தேன். 70 லட்சம் பேர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இது தவிர தொலைக்காட்சி முதல் மற்ற வசதிகளின் வழியே பார்த்தவர்களின் எண்ணிக்கை தனி.
ஏழை, பணக்காரன் கோடீஸ்வரன் என்ற வித்தியாசமில்லை. கொரானா, முடக்கம், பணமில்லாத தவிப்பு எதுவும் இதனை பாதிக்கவில்லை. முடிந்தவர்கள் கொண்டாட்டத்தில் பங்கெடுத்துள்ளனர்.
தனி சொகுசு பேருந்து. தனி விமானம், போய்ச் சேரும் வரைக்கும், விளையாட்டு மைதானம் சென்று சேரும் வரைக்கும் தங்க முட்டையிடும் வாத்துக்களை பொத்திப் பொத்தி வைத்திருந்து ஆட வைத்தார்கள். "ஆளில்லா கடையில் ஏம்பா டீ ஆத்துற" என்ற வசனத்தைக் கேட்டு நாம் சிரித்து இருப்போம். ஆனால் இவர்கள் தொழில் நுட்பத்தை மட்டுமே நம்பி பல்லாயிரம் கோடிகளை அள்ளியுள்ளனர்.
12th League (IPL) மும்பையில் 2019 ல் நடந்த போது புதிய சாதனை நிகழ்ந்தது. Broadcast Audience Research Council கணக்கின்படி 462 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்தனர். ஸ்டார் டிவி மட்டுமே 24 சேனல் வழியாக பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பு செய்தது. ஆண்களை விடப் பெண்கள் தான் அதிகப் பார்வையாளர்கள். அதாவது மொத்தக் கணக்கின்படி 9.8 மில்லியன். நேற்றைய கணக்கு இன்னமும் வெளிவரவில்லை. தொடர்ந்து இது குறித்து எழுதுவேன்.
கிரிக்கெட்டுக்கு இந்தியாவிற்கு வெளியே ஆதரவு என்பது மிகவும் குறைவு என்ற போதிலும் இதன் முக்கிய சந்தை 132 கோடி இந்திய மக்கள். பாதிக்குப் பாதி கணக்கில் வைத்தாலும் 66 கோடி மக்கள் தங்களை அறியாமல் இந்த வணிக வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கின்றார்கள். இந்த முறையும் ஸ்டார் டிவி குழுமம் தான் நேரிடையான ஒலிபரப்பு உரிமையை எடுத்துள்ளார்கள். தொலைக்காட்சி வழியே ஒரு பக்கம். அவர்களின் ஹாட் ஸ்டார் ஒடிடி தளம் மற்றொருபுறம். கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா? என்பதெல்லாம் பழைய டயலாக். இவர்கள் தின்பது பல கோடி லட்சம் லட்டுகளைத் தின்னப் போகின்றார்கள்.
யார் முதலாளிகள்? எத்தனை கோடி வருமானத்தை எடுக்கப் போகின்றார்கள்? போன்றவற்றை ஆராய்ந்த போது நம் எளிய தமிழ்ப்பிள்ளைகள் இருவர் இருக்கின்றார்கள் என்பதே சங்கத்திற்குப் பெருமையாக உள்ளது.
Kings XI Punjab (KXIP) - Mohit Burman, Ness Wadia,(இவரைத் தெரிந்து கொள்ள பாகிஸ்தான் தந்தை ஜின்னாவில் இருந்து தொடங்க வேண்டும்) Preity ZiPaul.nta (பன் பட்டர் ஜாம் நடிகை ப்ரித்தி ஜிந்தா) and Karan
Rajasthan Royals - Manoj Badale. Lachlan Murdoch, Aditya S Chellaram and Suresh Chellaram.(பிர்லா குழும வாரிசுகள்)
Kolkata Knight Riders - Shah Rukh Khan, Juhi Chawla and her husband Jay Mehta (ஹிந்தி திரைப்பட வெற்றிகரமான ஜோடிகள் ஷாரூக்கான் ஜுகி சாவ்லா தொழில் ஜோடிகளாக மாறியுள்ளனர்)
Sunrisers Hyderabad - Kalanithi Maran (Sun TV Network).எளிய தமிழ்ப்பிள்ளை கலாநிதி மாறன்.
Delhi Capitals - GMR Group (நீங்கள் பார்க்கக்கூடிய இந்திய விமான நிலையங்கள் தேசிய நெடுஞ்சாலைகளை டெண்டர் எடுக்கும் பகாசூர நிறுவனம்)
RCB - Royal Challengers Bangalore முதலாளி அய்யா லண்டனில் நீதிமன்ற படிக்கட்டுகளை தினமும் சுத்தம் செய்து கொண்டிருப்பதால் அவர் நிர்வாகத்தில் உள்ள Mahendra Kumar Sharma (current Chairman of USL and Anand Kripalu acts as its Managing Director and Chief Executive Officer)
CSK - N. Srinivasan’s India Cements.முத்தமிழ் அறிஞர் ஆட்சியில் ஒரே நாளில் சிண்டிகேட் அமைத்து சிமெண்ட் விலையை ரூபாய் 300க்கு மேல் விற்று சாதனை புரிந்த எளிய தமிழ்ப்பிள்ளை சீனி மாமா. பக்கத்து மாநிலத்தில் இருந்து குறைவான விலை சிமெண்ட் இங்கே கொண்டு வரக்கூடாது என்று அன்புக்கட்டளையிட்டு அள்ளிய மகான்.
Mumbai Indians Mukesh Ambani and his wife Neeta Ambani (அம்பானி குறித்து தனியாக சொல்ல வேண்டுமா?)
தமிழ்ப்பிள்ளைகள் என்று பார்த்தால்....
ஒன்று. சீனிவாசன். மற்றொருவர் கலாநிதி மாறன்.
வட ஆதிக்கத்தை ஒழிக்க விரைவில் சங்கம் ஏதாவது ஒரு போராட்டத்தை முன்னெடுக்கலாமா? என்று நிரந்தரப் பொதுச்செயலாளர் யோசித்துக் கொண்டிருக்கின்றார். ஆனால் இந்த வணிகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பல விதங்களில் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டினால் இவர்கள் என்ன வேறு வகையில் சம்பாதிக்க இளைஞர்களை மடை மாற்றுகின்றார்கள் என்பதற்குக் கீழே கொடுத்துள்ளேன்.
விளையாட்டை ரசிங்க. அதற்குப் பின்னால் உள்ள வணிக வலைபின்னல்களையும் தெரிந்து கொள்ளுங்க. அது உங்களை வழிநடத்தும். புதிய சிந்தனைகள் உருவாக காரணமாகவும் இருக்கக்கூடும்.
••••••••••
தொழில் சமூகமாக உயர்ந்திருந்த தமிழ்ச் சமூகம் இன்று தன் வாழ்க்கை தன் பாதுகாப்பு என்று சின்ன வட்டத்திற்குள் பொருத்திக் கொண்டு பயச் சமூகமாக மாறியது ஏன்?
6 comments:
ஐ.பி.எல். - சம்பாதிக்க இவர்களுக்கு ஒரு வழி! அதை பார்க்க வைக்க என்னவெல்லாம் செய்கிறார்கள்! யார் எவ்வளவு கஷ்டப்பட்டால் எங்களுக்கென்ன, இந்த வருடம் நடத்தவில்லை என்றால் எங்களுக்கு எப்படி பணம் கிடைக்கும் என நடத்திக் கொண்டிருக்கிறார்கள்! மக்களும் மதிமயங்கி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
காணொளி பிறகு காண்பேன்!
தமிழக சீரழிப்பை மடை மாற்ற IPL...
காணொளி : 3 வருடம் ISO Consultant ஆக இருந்த போது, நிர்வாகத்திடம் பேசின சில வரிகள் ஞாபகம் வந்தது... ஆனால், எப்போது விலை கொடுத்து ISO Certificate வாங்கப் பட்டதோ, அப்போதே வேறு துறைக்கு மாறி விட்டோம்... அதற்கு காரணம் எனது ISO ஆசிரியர்... இல்லை குரு... அவர் இன்றும் கிடைத்த வேலைகளை செய்தாலும், தனது இரு மகனையும் ஒரு மகளையும் நன்றாக படிக்க வைத்துள்ளார்... நேர்மை என்றால் அவரும் எனக்கு ஒரு உதாரணம்... நன்றி அண்ணே... யதார்த்தமான சிறப்பான உரை...
இவ்விளையாட்டினைப் பார், பார் என குறுஞ்செய்திகள் அலைபேசிக்கு வந்து குவிந்து கொண்டே இருக்கின்றன.
நீங்க எழுதியவுடன் வடிவேல் நான் தான் அந்தப் பக்கம் போகாதே கிட்னி திருடுவானுங்க என்று எச்சரித்த நகைச்சுவை ஞாபகத்திற்கு வருது ஆசிரியரே
தாக்கம் என்பது இது தான். எத்தனை வருடங்கள் ஆனாலும் நம் மனதில் இருக்கும்.
4000 கோடி.
Post a Comment