முன்பு கல்வித்துறையில் ஒரு திட்டம் நடைமுறைப் படுத்த வேண்டும் என்றால் அதிகாரவர்க்கத்தின் பல படிகளைக் கடந்து வரும். பல இடங்களில் ஆலோசனைகள் கேட்கப்படும். அதன் பிறகே கல்வித்துறை செயலாளர் பார்வைக்கு வந்து சேரும். இறுதியில் தலைமைச் செயலாளர் மூலம் கல்வி அமைச்சரின் அனுமதிக்குக் கோப்பு செல்லும். ஆனால் இப்போது கல்வி அமைச்சர் என்ன விரும்புகின்றாரோ அதுவே அந்தச் சமயத்தில் ஆணையாக மாற்றப்படுகின்றது. இதன் காரணமாகவே பரவசமாக இருக்க வேண்டிய கல்வித்துறை இன்று பரிதாபமாக மாறியுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 3500க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் தமிழகத்தில் மூடப்பட்டுள்ளன. நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் இணைப்பு என்ற பெயரில் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளை மூடுவதற்குத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஒருபுறம் அரசுப் பள்ளிகளில் சுத்தமான குடிநீர், கழிப்பறை வசதிகள், ஆய்வக வசதிகள், அனைத்துப் பாடத்திற்கும் ஆசிரியர் இல்லாமை, போதிய வகுப்பறை இல்லாதது என அரசுப் பள்ளிகள் திண்டாடி வருகிறது.
5 comments:
உண்மைதான். பரிதாபமான நிலை.
// 1627 கோடி திருப்பி அனுப்பியது // அடப்பாவிகளா...
காணொளியில் பல தரவுகள், நெஞ்சு பொறுக்குதில்லையே... இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்...
காணொளியை பற்றி ;
அடுத்து வரும் அனைத்திற்கும் இந்த காணொளி தான் முன்னுதாரணம்... வாழ்த்துகள்...
நல்ல பகிர்வு அண்ணா... விபரமான காணொளி...
Post a Comment