தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள் "எந்த விசயத்திலும் திட்டமிட்டு தொலைநோக்குப் பார்வையோடு தான் செயல்படுவார்கள்" என்பதற்கு சமீப உதாரணம் ஒன்றைக் குறிப்பிட முடியுமா?
முடியும். இன்று ஞாயிற்றுக் கிழமை பொது ஊரடங்கு என்பதால் நேற்று டாஸ்மாக் ன் ஒரு நாளின் மொத்த விற்பனை 183 கோடி ரூபாய்.🙃
*****
இந்தத் தகவலை நீண்ட நாட்களாகத் தேடிக் கொண்டிருந்தேன். இன்று கிடைத்தது.
இதுவரையிலும் நமக்குக் கிடைத்த (தமிழகத்தில்) இட ஒதுக்கீடு வாய்ப்பின் மூலம் எந்தந்த பிரிவினர் எந்த அளவுக்கு உயர்ந்து உள்ளனர்?
தற்போது எடுத்த கணக்கீட்டின் படி..... (தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில்)
அரசுப் பள்ளியில் முன்னேறிய வகுப்பினர் 24 சதவிகிதம் படிக்கின்றார்கள்.
இவர்கள் ஒசி (பொதுப் பிரிவு) என்ற பிரிவின் அடிப்படையில் 76 சதவிகிதம் தனியார் பள்ளியில் படிக்கின்றார்கள்.
பிற்பட்ட வகுப்பினர் (BC) 60 சதவிகிதம் அரசுப் பள்ளியில் 40 சதவிகிதம் தனியார்ப் பள்ளியில் படிக்கின்றார்கள்.
மிகவும் பிற்பட்ட வகுப்பினர் (MBC) 25 சதவிகிதம் தனியார்ப் பள்ளியில் 75 சதவிகிதம் அரசுப் பள்ளியிலும் படிக்கின்றார்கள்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் இன்று வரையிலும் (SC/ST) 85 சதவிகிதம் அரசுப் பள்ளியிலும் 15 சதவிகிதம் மட்டும் தனியார் பள்ளியிலும் படிக்கின்றார்கள்.
50 வருட மாற்றம் உருவாக்கியது இது தான். தனியார் பள்ளி என்பது அவர்களின் பொருளாதாரப் பின்புலம் என்கிற அளவில் பார்த்தாலும் எட்ட வேண்டிய உயரத்திற்கும் எட்டிய உயரத்திற்கும் தொடர்பே இல்லாமல் தான் இருக்கின்றது.
*****
நம் குடும்ப உறவுகளை, குடும்ப புனிதத்தை நாம் நமக்குள் தான் வைத்திருப்போம்.
பொதுவெளியில் அதனை பகிங்கிரமாகப் பேச மாட்டோம். பேசினால் அதன் அர்த்தம் வேறு.
தெருவில் நடமாடும் மனிதர்களுடன் மனநலம் குன்றியவர்களும் வாழத் தான் செய்கின்றார்கள். அவர்களின் நடவடிக்கை சற்று வினோதமாகத்தான் இருக்கும்.
திருத்த வேண்டாம்.
திரும்பிப் பார்க்காமல் கடந்து சென்று விட்டாலே போதுமானது.
அவர்களுக்குரிய வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
நாம் நம் வாழ்க்கையை வாழ்ந்து விடுவோம்.😇
*****
சபாநாயகர் உத்தரவிட "பெண்கள் நலக் கூட்டணி" கண்காணிப்பில் எந்தப் பக்கமும் நகர விடாமல், எல்லாவற்றையும் ஒளித்து வைத்து விட்டு, அன்னம் தண்ணி கூட வாயில் பட விடாமல், எந்தப் பக்கமும் நகர விடாமல், மொத்த குடும்பமும் தின்பதைப் பார்த்து வாயில் எச்சில் ஊறினால் நீயும் என் தோழனே. அதனை உலகியல் கூற்றில் அம்மாவாசை விரதம் என்று அழைக்கின்றார்கள்.
4 comments:
அப்பாக்கள் பேசுவதில்லை - வாசிக்க வேண்டும்...
விரதம் - :)
அப்பாக்கள் பேசுவதில்லை - தரவிறக்கம் செய்து வைத்திருக்கிறேன். வாசிக்க வேண்டும்.
தரவிறக்கம் செய்து வாசிக்கிறேன் ஐயா
நன்றி
நன்றி. நன்றி. பெரிய புத்தக வேலை. அடுத்த பத்து வருடங்களுக்கு ஒவ்வொரு இளைஞர்களுக்கும் அவசியம் தேவைப்படும் புத்தகம். ஒருவர் தினமும் விரைவான வாசிப்பில் ஒரு மணி நேரம் படிக்க முயற்சித்தால் கூட ஒரு வாரம் ஆகும் அளவிற்கு ஏராளமான தமிழக அரசியல் தகவல்கள். 1921 முதல் 2020 வரை ஒரு நூற்றாண்டு சுரங்கம். வலைபதிவில் நண்பர்களின் பதிவுகளுக்கு எங்கும் சிறிது நாளைக்கு வர முடியாது. நண்பர்கள் பொறுத்தருள்க. இது என் வாழ்நாள் பணி. இது நான் வாழ்ந்தற்கான அடையாளம். காத்திருங்க நண்பர்களே.
Post a Comment