மற்றவர்களின் மீது பழி சொல்லாமல் வாழப் பழகிக்கொள்ளுங்கள் .
வாழ்க்கை என்பது முழுவதுமாக நீங்கள் அதை எந்தக் கோணத்தில் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உள்ளதே நடப்பதற்கெல்லாம் மற்றவர்கள் மட்டும் பொறுப்பாக மாட்டார்கள் உங்கள் பங்கும் அதில் உள்ளது என்பதனை உணருங்கள்

மற்றவருடன் பேசும்போது அதிகமாய் கூர்ந்து கவனிப்பதின் அருமையை உங்கள் வாழ்க்கையின் ஏதாவது ஒரு தருணத்தில் ஆச்சர்யமாய் உணர்வீர்கள். அது உங்கள் பொது வாழ்க்கையில் மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்க்கையிலும் கூடத்தான்
உங்கள் கோட்பாடுகளுக்கும் மற்றும் வாழ்க்கை முறைக்கும் சேர்ந்து வராத நபர்களிடம் பழக நேர்ந்தாலும் அவர்களுடைய உறவை வெட்டிக்கொள்ள வேண்டாம் ஏனெனில் அவர்களும் நமக்கு ஒருநாள் வேண்டும் தான் .இந்த உலகம் வேடிக்கையானது மட்டுமல்ல சிறியதும் கூட .
வாழ்க்கையில் எதற்காகவும் பயப்படாதீர்கள் , மரணத்திற்குக் கூட. உங்களுடன் அமர்ந்து உரையாடும் 50 வயது ,60 வயது , அல்லது 70 வயது மனிதர்களின் வார்த்தைகளின் மத்தியில் நீங்கள் அடிக்கடி இதைக் கேட்கக் கூடும் “நான் ஒரு விசயத்தை அப்பச் செய்ய ஆசைப்பட்டேன் ,ஆனால் அது முடியாமல் போயிருச்சு “ என்று ஆதங்கப்படுவார்கள் . அது மாதிரியான வார்த்தைகளை உங்கள் வாழ்க்கையில் பயன் படுத்தாமல் இருக்க வேண்டுமென்றால் உங்களுக்குப் பிடித்ததைத் துணிந்து செய்யுங்கள் .
நீங்கள் கற்றுக்கொண்டவற்றை மற்றவருக்குக் கற்றுக்கொடுங்கள் .மக்கள் கற்றுக்கொள்வதை அதிகமாய் விரும்புவார்கள் .அது உங்களுக்கு இன்னும் அதிகமான மற்றும் ஆழமான அறிவை கொடுக்கும்
வாழ்க்கையின் எந்த ஒரு உயரிய நிலைக்குச் சென்றாலும் எங்கிருந்து நீங்கள் புறப்பட்டீர்கள் என்பதை மறக்காதீர்கள்
•••••••••••••
எல்லா நேரமும் சந்தர்ப்பங்கள் அழகிய பூங்கொத்தாக நம் முன் நிற்காது. அப்படி எதிர் பார்த்திருக்கும் போது ஒரு பூந்தோட்டமே உங்கள் முன் இருந்தாலும் உங்களால் இனங்காண முடியாமல் நல்ல சந்தர்ப்பங்கள் பிடிபடாமல் உங்கள் கண் முன்னாலே உங்கள் கை நழுவி சென்று விடக் கூடும்.
இந்த படிப்பு தான் வேண்டும், இந்த வேலை தான் வேண்டும் என தன் இலக்கில் உறுதியாக இருத்தல் தவறில்லை தான். ஆனால் எந்த வேலையும் ஒரு தொடக்கம் தானே தவிர அதுவே முடிவல்ல. நெருகலான ஒரு குறுக்கு சந்தும் பிரதான சாலைக்கான சுலபமான வழியாக இருக்கலாம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்கள். சின்ன வேலையும் பெரிய சாதனைக்கான குறுக்கு சந்தாக பல நேரம் அமையும்.
இந்த வேலை தான் வேண்டும் என வந்த வேலைகளையெல்லாம விட்டு விட்டு வெறுமனே காத்திட்டிருக்கிற நிமிடங்கள் உங்களை பின்னோக்கி மட்டுமல்ல இந்த உலகமே உங்களை விட்டு விட்டு முன்னோக்கி ஓடிக் கொண்டிருப்பதான ஒரு தாழ்வு உணர்வை, மன அழுத்தத்தை அது உங்களுக்கு ஏற்படுத்தி விடும். அதே நேரம் உங்கள் இலக்கில் பார்வையை வைத்துக் கொண்டு கிடைக்கின்ற வேலையை, நீங்கள் தவிர்க்காமல் இருந்தால் அது உங்களுக்கு ஒரு ‘வார்மிங்-அப்’ பாக, நீங்கள் விரும்பும் வேலைக்கான பயிற்சிக் களமாக, பல அனுபவங்களையும் பக்குவத்தையும் தரக் கூடியதாக அமையும்.
விளையாட்டு வீர்ர்களை பார்த்திருக்கிறீர்களா..? செஸ் விளையாடுபவர்கள் வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் நீச்சல் பயிற்சியில் ஈடுபடுவார்கள். கிரிக்கெட் வீர்ர்கள் கராத்தே, ஓட்டம் என தங்கள் துறைக்கு சம்பந்தம் இல்லாத மற்ற பயிற்சிகளை செய்து கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு துறையில் உள்ளவர்களும் அவர்கள் துறை சார்ந்த பயிற்சிகளைத் தாண்டி மற்ற பயிற்சிகளையும் செய்து கொண்டே இருப்பார்கள். அது அவர்களுக்கு மாற்று சிந்தனைகளையும், அவர்கள் களத்தில் நின்று ஆடக் கூடிய மனபலத்தையும், உடல் திடத்தையும் கொடுக்கும்.
உடலையும் மனதையும் ஆக்டிவாக வைத்திருக்க கூடிய எந்த முயற்சியும் வீண் போகாது. தான் சாதிக்க வேண்டும், வெற்றி பெற வேண்டும் என துடிப்போடு இயங்குபவனுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் தனக்கான களம் புலப்படும்.
நீங்கள் உண்மையில் ஏதாவது செய்ய நினைத்தால், அதற்கான வழியைக் கண்டு பிடிப்பீர்கள். இல்லையென்றால் எதுவும் செய்யாமல் இருப்பதற்கான காரணங்களைக் கண்டு பிடிப்பீர்கள் .
••••••
19/03/2020 காலை இங்கு முக்கியப் பதிவு வெளியாகின்றது.
ஆவலுடன் காத்திருங்கள். நன்றி.
•••••••
சமூக நீதி

11 comments:
ஆம்..பயப்படுவதனால் எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்தாலே பயம் பறந்தோடி விடும் தான்..
அருமை ஐயா
பயப்படுவதால் பயனேதுமில்லை
சிறப்பான பதிவு.
பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
முடிவில் இரு வரிகள், பதிவிற்கு மகுடம்...!
இப்படி நீங்கள் ஆரம்பித்தால், நாங்கெல்லாம் என்ன எழுதுவது தலைவரே...? குறள் மட்டும் தான் இல்லை என்பதால், அப்பாடா...!
நீங்கள் முனைவர் பட்டம் வாங்கியவர். நான் முயன்று கொண்டிருப்பவன்.
நன்றி வெங்கட்
நன்றியும் அன்பும்.
பயமென்பது ஆரோக்கியத்தை குலைக்கும்.
நீங்கள் உண்மையில் ஏதாவது செய்ய நினைத்தால், அதற்கான வழியைக் கண்டு பிடிப்பீர்கள். இல்லையென்றால் எதுவும் செய்யாமல் இருப்பதற்கான காரணங்களைக் கண்டு பிடிப்பீர்கள் ......super , In my opinion , i have had the pleasure of seeing lots of things, learning lots of things but there are simple things , which I could have learned or done it , but did not do it. For example , I always wanted to enjoy telegu keerthanai with the knowledge of telugu, actually speaking learning telegu shouldn't be difficult , so far I was only saying that i wanted to learn telegu ..now I have to really find ways to learn telegu ...what is applicable to telegu will apply for others too... at the same time, there is no limit for human desire too.
பலமொழி வித்தகர் பிவி நரசிம்மராவ் நினைவில் வந்து போகின்றார்.
பயப்படாமல் இருக்க என்னால் முடியவில்லை ஆனால், அதை புறக்கணிக்க பழகிக்கொண்டேன்.
எதையுமே சவாலாக எடுத்துக்கொண்டால், பயம் தெரியாது.
என்ன நடந்து விடும் பார்த்து விடுவோம் என்பது தான் என் எண்ணமாக உள்ளது. தற்போதைய கொரோனா பிரச்னை உட்பட.
Post a Comment