2030
இன்னும் பத்து வருடங்களில் என் யூகம் சரியாக இருக்குமானால் கீழ்க்கண்ட விசயங்கள் தமிழகத்தில் நடந்தே தீரும். சமீபச் சுற்றுப்பயணங்களில் வழியாகக் கண்டு அறிந்து கொண்டது. சமீப காலமாக ஊடகங்கள் முன்னெடுக்கும் விசயங்கள் வழியாகப் புரிந்து கொண்டது.
நான் எழுதிக் கொண்டிருக்கும் செல்பி நகரத்தின் ஊர்க்கதைகள் என்பதனைச் சுருக்கமாக இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும். இது தான் இப்போதைய சமூகம். இது என் பார்வை. உங்கள் பார்வை வித்தியாசமாக இருந்தால் உங்கள் கருத்துக்களை அறியத் தாருங்கள். நன்றி.
ஜனவரி 5 மற்றும் 6 (2020) அன்று நான் படித்த பள்ளியில் நடந்த ஆண்டு விழா கூட்டத்தில் கலந்து கொண்டேன். அதன் முதல் பகுதியை வெளியிட்டுள்ளேன். நேரம் இருப்பவர்கள் பார்க்கவும். அடுத்தடுத்த பகுதிகள் தொடர்ந்து வெளிவரும். நன்றி.
•••••••
1. தமிழக மொத்த ஜனத் தொகையில் பாதிப் பேர்கள் வட மாநிலத்தவர் இருப்பார்கள்.
2. தமிழக இளைஞர்கள் எந்த வேலைகளுக்கும் திறன் அற்றவர்களாக இருக்கக்கூடும். திறன் உள்ளவர்கள் வெளிநாட்டுக்கு ஓடி விடுவார்கள்.
3. ஏறக்குறைய பத்து லட்சம் மாணவர்கள் இப்போது ப்ளஸ் டூ படித்து வெளியே வருவது பாதியாகக் குறையும்.
4. அரசுப் பள்ளிக்கூடங்கள் குட்டிச்சுவர் போலப் பொறுக்கிகள் பயன்படுத்தும் கூடாரமாக மாறிவிடும். உயர்நிலைப் பள்ளிக் கல்வி முடிக்க சாதாரண குடும்பம் 30 லட்சம் செலவளித்தால் தான் முடிக்க முடியும் என்ற சூழல் உருவாகும்.
5. மருத்துக்குகூட தமிழர்கள் தமிழகம் எங்கும் மருத்துவர்களாக இருக்க மாட்டார்கள். மொழிக் குழப்பம் உருவாகும். தமிழ் மொழி அடையாளம் இன்னும் மோசமாகும். அப்போதும் தமிழக அரசு தமிழ் வெல்லும் என்று அரசாணையில் எழுதும்.
6. ஆண்கள் குழந்தைகள் தரும் தகுதியை இழந்து இருப்பார்கள். கல்லீரல் நோய், குடல் நோய் சார்ந்த மருத்துவர்களுக்குக் கிராக்கி அதிகமாகும். பாதி ஜனத்தொகை நடைபிணமாக மாறும். வாழும்.
7. விந்தணு வங்கி மூலம் உருவாக்கப்படும் குழந்தைகள் அதிகமாகும். கலப்பினக் குழந்தைகள் அதிகமாகும். யாரோ ஒருவரின் விந்தணுவைப் பெற வரிசையில் நிற்க வேண்டியதாக இருக்கும். நான் தமிழன் என்ற கொள்கை மாறும்.
8. சாதீயம் தலைவிரித்தாடும்.
9. பெண்கள் திருமணம் தேவையில்லை என்ற நிலைக்கு வரக்கூடிய வாய்ப்பதிகம். அவர்கள் எதிர்பார்க்கும் திறன் உள்ள மணமகன் கிடைக்க வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. மணமுறிவு இயல்பானதாக இருக்கக்கூடும்.
10. முதல் காட்சி. முதல் ஷோ. மாறாது. ஆனந்த விகடன் கவர் ஸ்டோரி கோடம்பாக்கம் சார்ந்ததாக இருக்கும்.
SRI SARASWATHI VIDHYASALAI GIRLS HIGHER SECONDARY SCHOOL. PUDUVAYAL.
ANNUAL FUNCTION - PART 1
12 comments:
அருமை நண்பரே பட்டியலிட்டவை மறுப்பதற்கில்லை இதில் 6-வது இப்பொழுதே அந்நிலைதான்.
எனது எண்ணங்களில் தோன்றி எழுதி வைத்தவை நிறையவே இங்கு எழுதி விட்டீர்கள் எனது கணினியின் கடவுச்சொல் கசிந்து விட்டது போன்ற நினைவோட்டம் எனக்கு...
பதிவுக்கு வாழ்த்துகள்
இதெல்லாம் வெறும் ஹேஷ்யங்களே நம் மீது உள்ள நம்பிக்கை பறி போனது போல் இருக்கும் புலம்பல் போல் இருக்கிறது
நாம் இருவரும் இரண்டாவது தலைமுறை. நம் குழந்தைகள் மூன்றாவது தலைமுறை. ஆனால் பாலசுப்ரமணியம் அய்யா முதல் தலைமுறை எந்த அளவுக்கு நம்பிக்கையுடன் எழுதி உள்ளார் பார்த்தீர்களா?
அவநம்பிக்கையூட்டுவதைப் போலத் தெரிந்தாலும் யதார்த்த நிலை இதுதான்...
ஜி.எம்.பி சாரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம் அவரது பார்வைகள் மாறுப்பட்டு இருக்கும்
1. மிகவும் நல்லது! #தமிழேண்டா வெட்டிச்சலம்பல்களும் பாதியாகக் குறையும்!
2. முதல்பாதி தவறான அனுமானம். வெளிநாட்டு வேலை மீது மோகம் இப்போதைக்கு குறைய வாய்ப்பில்லை.
3. இதுவும் தவறான அனுமானமே! +2 தேர்வெழுதி வெளியே வரும் மாணவர்கள் எண்ணிக்கை குறையாது.
4. இப்போது கொஞ்சம் மாறிவருகிறதோ? கல்லூரிக் கல்வி வேண்டுமானால் காஸ்டலியாக ஆகலாம்!
முகநூலில் சில கல்வியாளர்கள் மிகவும் பயமுறுத்திவிட்டார்களோ? அவநம்பிக்கை கொள்ளற்க
5. மூன்று ஊகங்களுமே மிகவும் அதீதமானவை.
6. ஆண் மலட்டுத்தன்மை கொஞ்சம் அதிகம் தான். நீங்கள் சொன்ன இரண்டுமே பத்தாண்டுகளில் மாறலாம்.
7. நீங்கள் ஏன் ஒரு science fiction எழுதக்கூடாது? அதற்கான சாத்தியங்கள் இந்த ஸ்டேட்மென்டில் இருக்கிறதே!
8. இப்போது மட்டும் சாதீயம் தலைவாரிப் பின்னல்போட்டுக்கொண்டா அலைகிறது?
9. திடீர் சுதந்திரத்தில் மயங்கும் பலபெண்கள் இப்போதே அப்படித்தான் இருக்கிறார்கள். அமெரிக்காவில்
பெண் சுதந்திரத்தின் ஒரு அடையாளமாக (அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன்னால்) bra அணியாமை
இருந்தது.
10. தியேட்டர்கள் இருக்குமா? விகடன் இன்னொரு 10 ஆண்டுகள் தாக்குப்பிடிக்குமா? இதற்கு விடை
தெரியுமா?
நம்பிக்கை மிகுந்தவர்கள் மனதளவில் ஆரோக்கியமாகவே கடைசி வரை வாழ்வார்கள்.
புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளேன்.
எனக்கும் நம்பிக்கையுள்ளது. ஆனால் தற்போது நடக்கும் ஒவ்வொரு மாறுதல்களும் தனி மனித விருப்பு வெறுப்பு அடிப்படையில் கட்டமைக்கப்படுவதாகவே எனக்குத் தோன்றுகின்றது.
1. அப்போ இந்த ஏற்கனவே உள்ள வட மொழி பேசும் - அய்யர்களும் ( அப்படி யாரவது இருந்தா சொல்லுங்க ...) வட நாட்டவர்களும் , திராவிடத்தை விரட்டி விடுவார்கள்...
2. , 3 ;- திறன் அற்றவர்களாக ஆகி விடுவார்கள் ... இப்ப நிலைமை எப்படி இருக்கு ,நான் இங்கு வசிக்கவில்லை என்பதால் எனக்கு தெரியாது... சாதாரணமாகவே , எல்லாரும் , எல்லாம் பெற்று, திறமை உடையவர்களாக இருப்பார்கள் என நினைப்பதே கொஞ்சம் அதிகம் ,
4. அரசு பள்ளிகள் - ரொம்ப சின்ன சின்ன சட்டங்கள் போதும் , குழந்தைகள் தனியார் பள்ளியில் படித்தால் ரேஷன் கிடையாது , ரயில்வே முன்பதிவு கிடையாது ...இது போல சில சலுகைகள் மறுக்கப்பட்டால் - எண்னிக்கை கூடும். ..கான்வென்ட் மோகம் குறைய வாய்ப்பு , அரசு பள்ளிகளை கான்வென்டு போல மாற்றலாம்..
5. மருந்து, மருத்துவர்கள், மருத்துவமனை - தனியார் துறையில் , மிக மோசமான ஒரு இலக்கை ( லாபம்) நோக்கி பயணிக்கறது - நான் கேள்விப்பட்டது , தமிழ் நாட்டில் , அரசு மருத்துவமனையில் நல்ல சிகிச்சை கிடைக்கிறது ...( Dr .Bruno )
6. இதற்க்கு முக்கிய காரணம் , எல்லாரும், எப்போதும் வெளி உணவையே விரும்புகிறார்கள் , பெண்கள் சமைப்பதை ஒரு சுமை போல கருதுகிறார்கள், ஆண்களும் வீட்டில் பெண்களுக்கு உதவுவதை தன்மானத்துக்கு இழுக்கு போல கருதுகிறார்கள் ( நம் அப்பா இது போல உதவுவதை நாம் பார்த்துஇருக்க மாட்டோம் ) - ப்ரோட்டா , சிக்கன் , எண்ணெய் , ஏதோ ஒரு மசாலா, இதெல்லாம் சேர்ந்த இந்த கலவை நிச்சயம் ஒரு வழி பண்ணிட்டுதான் போகும். சமயல் ரொம்ப சின்ன விஷயம், சுலபம், சுவையானது , சமயல் செய்தால் நாம் சாப்பிட்டாலும் திருப்தி, மற்றவருக்கு பரிமாறும் பொழுதும் திருப்தி .
7,8 - நோ ஐடியா
9. எங்கயோ படித்தது , ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் , பெண்களை , அவர்கள் எண்ணங்களை மாற்றினாலே போதும், கூடிய சீக்கரம் அந்த இனம் அழித்துவிடும் .....
10. ஆனந்தவிகடன் - அதெல்லாம் ஒரு பத்திரிக்கை ( நான் பசுமை விகடன் விரும்பி படிப்பேன் ) ...
நேர்மையாக எழுதியமைக்கு வாழ்த்துகள் சுந்தர்.
2030-ல் தமிழகம்... உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்தது சிறப்பு. சில விஷயங்கள் நடக்காமலும் போகலாம்! அப்படி நடவாமல் இருக்கட்டும்!
Post a Comment