Sunday, August 28, 2016

சினிமாவுக்குப் போகலாம் வாரீகளா?


மீண்டு(ம்) வந்தேன். 

என் எழுத்துலக பயணத்தில் தொடர்பில் இருந்த, தொடர்ந்து என் தனிப்பட்ட தொடர்பில் இருக்கும், இனி தொடரப் போகும் நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கம்.

அடுத்த மாதம் செப்டம்பர் 30 அன்று எழுதுவதை நிறுத்தி ஒரு வருடம் முடியப் போகின்றது. மீண்டும் இப்பொழுது எழுதலாம் என்ற எண்ணம் உருவாகியுள்ளது. முதல் பதிவு இன்று முதல் தொடங்குகின்றது. இனி தொடர்ந்து எழுதுவேன்.

என் கடந்த கால எழுத்துலக பயணத்திற்குக் கிடைத்த அங்கீகாரம் என்பது என் தகுதிக்கு மீறிய விசயமாகும்.  குறிப்பாக ஈழம் வந்தார்கள் வென்றார்கள் என்ற மின் நூல், வெளியிட்ட மின் நூல் தளத்தில் வெளியான அதிகபட்ச தரவிறக்கம் கொண்ட முதல் பத்து புத்தகங்களில் (46.846) ஒன்றாக உள்ளது என்ற மகிழ்ச்சியை இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன்.

இது தவிர வெளியிட்ட ஏனைய ஏழு மின் நூலும் சேர்த்து மொத்தமாக 1,51,298 பேர்களுக்குப் போய்ச் சேர்ந்துள்ளது. அத்தனை உள்ளங்களுக்கும் என் நன்றி.


காரணங்கள்  x காரியங்கள் 

சமீபத்தில் நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்த போது அவர் பேசிய வார்த்தைகள் அடுத்த இரண்டு நாட்கள் என் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. "காலமென்பது இரக்கமற்ற அரக்கன். ஒவ்வொரு சமயத்திலும் சல்லடையில் போட்டு சலித்துக் கொண்டேயிருக்கும். நீ பதரா? இல்லை அரிசியா? என்பதனை நீயே கண்டு கொள்வாய்" என்றார். எழுதியதை நிறுத்திய போது இனி நம்மிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று நினைத்தே எழுதிக் கொண்டிருந்ததை நிறுத்தினேன். ஆனால் கடந்த சில மாதங்களாகக் காலம் மற்றொரு புதிய பாதையை உருவாக்கியுள்ளது. அது தான் தமிழ்த் திரைப்பட உலகத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளது. 

மாற்றம்  x தக்க வைத்துக் கொள்வது? 

வாசிப்பின் தன்மையும் அளவு கோலும் மாறிக் கொண்டே இருக்கின்றது. கணினி பயன்படுத்தத் தெரிந்தவர்களும், நவீன தொழில் நுட்பத்தைக் கையாளத் தெரிந்தவர்களுக்கும் கூடுதல் அங்கீகாரம் கிடைக்க காரணமாக உள்ளது. வெறும் எழுத்தாளன் என்பதனைத் தாண்டி சமகாலத்தை பிரதிபலிக்கத் தெரிந்தவனுக்கு, வாசிக்க விரும்பும் நடையில், எளிமையுடன் கூடிய சுருக்கத்தைத் தரமுடிந்தவர்களால் மட்டும் எழுத்துலகில் நீடித்து இருக்க முடிகின்றது. நானும் மாறியுள்ளேன். மாற்றத்துடன் பயணிப்போம். 



எழுத்து  x சினிமா 

"எல்லாச் சாலைகளும் ரோம நகரை நோக்கி" என்ற பிரபல வாசகத்தைப் போல துண்டு துக்கடா கவிஞர்கள் முதல் முண்டாசு கட்டும் எழுத்தாளர்களின் இறுதி இலக்கு சினிமா.

ஃபேஸ்புக் மற்றும் சினிமா என்ற இந்த இரண்டு வார்த்தைகளும் நூறு சதவிகித தமிழ் வார்த்தைகளாக மாறிவிட்டது. நாம் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இது தான் உண்மை.

நான் வலைப்பதிவில் எழுதத் தொடங்கிய முதல் நாள் முதல் கடைசி வரையிலும் திரைப்படங்கள் குறித்தோ, முதல் நாள் முதல் விமர்சனம் போன்ற மாயையிலிருந்து விலகியே தான் இருந்தேன். நான் எழுதிய 600 க்கும் மேற்பட்ட பதிவுகளில் நாலைந்து பதிவுகள் மட்டுமே திரைப்படங்கள் சார்ந்த விசயமாக இருந்தது. காரணம் வெறுப்பல்ல. திரைப்படம் என்பது மிகவும் கவனமாக கையாள வேண்டியது. ஆனால் இன்று காசு இருப்பவர்களின் கைப்பாவையாக மாறியுள்ளதால் ரசனை என்பது பின்னுக்குச் சென்று பணம் என்பதே பிரதானமாக மாறியுள்ளது. 



அரசியல் x சினிமா 

இந்த இரண்டு உலகத்திலும் ஊடகங்களில் வரும் செய்திகளை விட வெளியே பகிர முடியாத செய்திகள் தான் அதிகம். கிளுகிளுப்புத்தனமாக விசயங்களில் உள்ள ஆர்வத்தைத் தாண்டி வெளியே வந்து விட்ட காரணத்தால் அது குறித்து எழுதி ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதினால் மட்டுமே மற்றவர்கள் போல திரைப்படத்தை சிலாக்கியப்படுத்தி எழுதியதில்லை. ஆனால் பள்ளிப்பருவம் முதல் இன்று வரையிலும் நான் வாசித்த வாசிப்புகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் என் ஏற்றத்திற்கு உதவியுள்ளது. இன்று அதிகமாக உதவிக் கொண்டிருக்கின்றது. 

திரை  x  படம் 

வாழ்க்கை முழுக்க ஒவ்வொருவருக்கும் ஒரு திரை தேவைப்படுகின்றது. தங்கள் பலவீனங்களை மறைந்துக் கொள்ள ஒவ்வொருவரும் அவருக்கான திரைகளை உருவாக்கி வைத்துக் கொள்கின்றார்கள். நான் பணியாற்றும் ஏற்றுமதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அவர்களின் வாழ்நாள் லட்சியமான திரைப்பட தயாரிப்பாளர் என்ற நிலையைக் கடந்த ஒரு வருடத்தில் அடைந்துள்ளார். அதற்காக சில வருடங்கள் முன் முடிவுகளை எடுத்து, அதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைக்காகக் காத்திருந்து இப்போது சரியான இடத்தை அடைந்துள்ளார். "மாயை" என்று சொல்லப்படும் இந்தத் திரைப்பட உலகத்தை எந்த "மயக்கத்திற்கும்" மயங்காதவர் நிச்சயம் வெல்வார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

காரணம் கடந்த 25 வருடங்களாக ஊடகங்களை உள்வாங்கியவன் என்ற முறையில் நான் கற்று வைத்துள்ள வித்தைகளை அவருக்குப் பின்புலமாக நின்று கொண்டு அவருக்குத் தேவையான அனைத்து விசயங்களைச் செய்து கொடுத்துக் கொண்டிருக்கின்றேன். இது குறித்த பல தகவல்களை என் அனுபவங்களைத் தொடர்ந்து எழுதுகின்றேன். 

அங்கீகாரம்  x புகழ்

புகழ் என்பதனை வெளிச்சத்தோடு ஒப்பிட்டுப் பேசுகின்றார்கள். மயங்காதவர்கள் யாருமில்லை என்கிறார்கள். சுயம் இழந்து போய்விடுவோம் என்ற கவலைகள் உருவாவது இயல்பே. ஆனால் ஆணி வேர் என்பதனை எவரும் நினைவில் வைத்திருப்பதில்லை. அடிபட்டு மிதிபட்டு உள்ளே உள்ள ரணங்கள் அப்படியே தங்கிப் போய் இருக்க எத்தனைப் புகழ் மாலைகள் கழுத்தில் வந்து விழுந்தாலும் இது காய்ந்து போய் விடக்கூடும் என்பதனை உணராதவர்கள் மட்டுமே வெளிச்சத்தை விரும்புகின்றார்கள் என்று அர்த்தம், 

திரைப்பட உலகம் மாயை அல்ல. தொடர்ந்து வெளிச்சம் பாய்ச்சிக் கொண்டே இருப்பதால் நம்ப வைக்கப்படும் ஒரு வினோத உலகம். இது தான் சிலருக்குச் சுண்டி இழுக்கக்கூடிய விசயமாக உள்ளது. என்னைப் பொருத்தவரையிலும் முரண்பாடுகள் நிறைய உள்ள உலகத்தை அருகே நின்று கவனிக்கும் வாய்ப்பாகவே இதனைப் பார்க்கின்றேன்.


ஆனால் என் விருப்பமான தொழில் என்பது கடைசி வரைக்கும் ஏற்றுமதி(ஆடைத் தொழில்) மட்டுமே. திரைப்படம் சார்ந்த பணிகள் என்பது ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே.

என்னைச் செதுக்கிய புத்தகம்

ஒவ்வொரு சமயத்திலும் யாரோ ஒருவர் என் மாற்றத்திற்குக் காரணமாக இருந்துள்ளார்கள். அதே போல ஒரு புத்தகம் என் சிந்தனை மாற்றத்திற்குக் காரணமாக இருந்ததுள்ளது. இப்போது என்னை அதிகம் பாதிப்புக்குள்ளாக்கிய புத்தகம் எழுத்தாளர் அமுதவன் எழுதிய சிவகுமார் எனும் மானிடன். இந்தப் புத்தகத்தைப் பற்றி தனிப்பதிவாக எழுதுகிறேன்.


இந்தப் புத்தகத்தை இன்னமும் முழுமையாகப் படித்து முடிக்கவில்லை. படித்தவற்றையே திரும்பத் திரும்ப படித்துக் கொண்டிருக்கின்றேன். பல அத்தியாயங்களை எளிதில் கடக்க முடியவில்லை. என் ஆன்மாவோடு பேசுவது போல அமுதவனின் எழுத்து நடை உள்ளது.

இரட்டையரில் மூத்தவர் வாசிப்பு பழக்கத்தின் அடுத்த கட்டத்திற்கு வந்து விட்ட காரணத்தால் அவரும் 100 பக்கங்களுக்கு மேல் வாசித்துள்ளார். அப்பாவை இது போல் கொண்டாடுவாயா? என்று கேட்ட போது சிவகுமார் போல வாழ்ந்து காட்டுவீர்களா? அப்படியென்றால் அமுதவன் மாமா போல எழுத முடியுமா? என்று யோசிப்பேன் என்று சொல்லியுள்ளார். 


56 comments:

வனம் said...

மீண்டும் எழுத தொடங்கியுள்ளீர்கள் என்பதே மகிழ்ச்சியான விடயம்தான். வாருங்கள் உலகை கொண்டாட நிறைய இருக்கின்றது.

Avargal Unmaigal said...

மீண்டு(ம்) வந்தற்கு பாராட்டுக்கள் .தரமான எழுத்துகளை படிக்க எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தற்கு மகிழ்ச்சி

'பரிவை' சே.குமார் said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கள் எழுத்தை வலையில் பார்த்து மிகுந்த சந்தோஷம் அண்ணா... தரமான எழுத்துக்குச் சொந்தக்காரர் ஆன தங்களின் எழுத்துக்களை மீண்டும் வாசிக்க இருப்பதில் மகிழ்ச்சி...

தொடர்ந்து எழுதுங்கள்.

Kalyankumar said...

சினிமா- அரிசியா பதரா என்பதை சலித்து விடும்???? தொடருகிறோம்!!!

http://thavaru.blogspot.com/ said...

Vanga jothigi...Welcome. ..

http://thavaru.blogspot.com/ said...

Vanga jothigi...Welcome. ..

Raja said...

வாழ்த்துக்கள் அண்ணா, தொடர்ந்து எழுதுங்கள்.

காரிகன் said...
This comment has been removed by the author.
காரிகன் said...

நண்பரே,

அமுதவனின் புத்தகம் வெளியானது குறித்து அறிந்தேன். நல்லது. இனி அவர் பதிவுகளை இணையத்தில் காணலாம் என்று தோன்றுகிறது.

சினிமா குறித்த உங்களது பார்வை மாறியது தேவையான ஒன்றே. தொடர்ந்து எழுதுங்கள்.

saidaiazeez.blogspot.in said...

//இனி தொடர்ந்து எழுதுவேன்// இன்ஷால்லாஹ்

அபயாஅருணா said...

மறுபடியும் எழுத ஆரம்பித்தமைக்கு வாழ்த்துக்கள் .
தொடர்ந்து எழுதுங்கள்.

Unknown said...

டிரைலர் ஓகே .சீக்கிரம் படத்தைக் காட்டுங்க ஜி :)

”தளிர் சுரேஷ்” said...

வாழ்த்துக்கள்ஜி! தொடர்ந்து உங்கள் அனுபவங்களுடன் பயணப்பட தயாராய் இருக்கிறேன்! தொடருங்கள்!

UmayalGayathri said...

வாழ்த்துக்கள் சகோ...மீண்டும் தங்கள் எழுத்தினை வாசிப்பு பயணம் செய்ய காத்திருக்கிறேன்

GANESAN said...

மீண்டும் தொடர்வதற்கு பாராட்டுக்கள் திரு . ஜோதிஜி . .உங்களுக்கு பிறகும் வாழ போவது உங்கள் எழுத்துக்கள்தான் . பாராட்டுக்கள். நன்றி சிவகுமாரய் பற்றி வந்த புத்தகம் recentகா வந்ததா?

கரந்தை ஜெயக்குமார் said...

வலையுலகிற்கு தங்களின் மீள் வருகை மன மகிழ்வினை அளிக்கிறது ஐயா
வாருங்கள் வாருங்கள்
தொடர்ந்து வாருங்கள்

ஜோதிஜி said...

வாங்க கணேசன். ஆமாம் சமீபத்தில் ஈரோட்டில் நடந்த புத்தக திருவிழாவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அல்லையன்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள்.

ஜோதிஜி said...

நன்றி ஜெயக்குமார். நல்வாழ்த்துகள்.

ஜோதிஜி said...

உமையாள் நலமா? வருக.

ஜோதிஜி said...

வாங்க சுரேஷ். நன்றி.

ஜோதிஜி said...

வாங்க தல. நலமா?

ஜோதிஜி said...

நன்றி அருணா.

Yaathoramani.blogspot.com said...

பதிவுலகு உங்களைப்போன்ற
சிறந்த படைப்பாளிகள் எழுதாததால்
கொஞ்சம் சோர்ந்துதான் கிடக்கிறது
தங்கள் வரவு நல்வரவாகுக
வாழ்த்துக்களுடன்....

ஜோதிஜி said...

உங்கள் முதல் விமர்சனம் மனோ ரீதியாக உவகையைத் தந்தது.

ஜோதிஜி said...

நன்றி நண்பா.

ஜோதிஜி said...

வாங்க குமார். நன்றி.

ஜோதிஜி said...

சிரித்து விட்டேன். புரிகின்றது.

ஜோதிஜி said...

நன்றி நண்பரே.

ஜோதிஜி said...

முதலில் மற்றொரு ராஜா என்று அவரை அழைத்துக் கேட்டேன். இப்போது தான் நீங்க யார் என்று? குழந்தை (பெண்) வளர்ந்து இருக்குமே? நலமா?

ஜோதிஜி said...

நன்றி நண்பரே. அவசியம் அந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்கவும்.

ஜோதிஜி said...

நான் மீண்டும் எழுதத் தொடங்கியதற்கு நீங்களும் ஒரு காரணம். பேசும் போது சொல்கிறேன்.

ஜோதிஜி said...

மிக்க நன்றி. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும்.

எம்.ஞானசேகரன் said...

மிக்க மகிழ்ச்சி ஜோதிஜி. வாழ்த்துக்கள்

Unknown said...

மீள் வருகைக்கு வாழ்த்துகள் அண்ணா. - புதுகை அப்துல்லா

Unknown said...

மீள் வருகைக்கு வாழ்த்துகள் அண்ணா. - புதுகை அப்துல்லா

Thulasidharan V Thillaiakathu said...

மீண்டும் வருகை தந்தமைக்கு வாழ்த்துகள் நண்பரே! வாருங்கள்! தங்கள் அனுபவங்களைத் தங்களின் பக்குவப்பட்ட எழுத்துகளின் வாயிலாக உள்வாங்கக் காத்திருக்கிறோம்! வாழ்த்துகள் நண்பரே!

த. சீனிவாசன் said...

மீண்டும் எழுத்துப்பணியை தொடர்வதற்கு நன்றிகள்.
இசைக்கு இனிமை சேர்க்கும் மொளனம் போல, இந்த இடைவெளி இனிவரும் படைப்புகளை இன்னும் செறிவாக்கும் என்பதாலேயே இடைவெளியை ஒப்புக்கொள்கிறோம்.

ஜோதிஜி said...

நன்றி. இன்னமும் தொடர்பில் இருப்பதற்கு

ஜோதிஜி said...

நன்றி. உங்கள் உதவி மறக்க முடியாதது. 1,50,000 வாசகர்களை எனக்கு தந்து இருக்குறீங்க,

ஜோதிஜி said...

ஆகா மிகவும் மகிழ்வாய் உணர்கிறேன்.

ஜோதிஜி said...

மகிழ்ச்சி அப்துல்லா. உங்கள் வருகைக்கும் அன்புக்கும்.

Unknown said...

Welcome jothiG

Unknown said...

Welcome jothiG

Amudhavan said...

சிவகுமார் எனும் மானுடன் புத்தக அறிமுகத்திற்கு நன்றி ஜோதிஜி. புத்தகத்தைப் பற்றி நீங்கள் விரிவாக எழுதிய பிறகு மற்றதைப் பேசுவோம்.

ஜோதிஜி said...

நன்றிங்க.

Unknown said...

welcome,pls continue ur contribution

தி.தமிழ் இளங்கோ said...

ஃபேஸ்புக் பக்கம் ஒரு ரவுண்டு வந்துவிட்டு, மீண்டும் வலைப்பக்கம் எழுத வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி! இனி வலையுலகில் உங்களை முன்னிட்டு, எழுதாமல் நிற்கும் பல பிரபல பதிவர்கள், அவரவர் பின்னூட்டங்கள் மூலம் வலைப்பக்கம் தலை காட்டுவார்கள். வலையுலகம் இனி ’கலகல’ ‘லகலக’ தான். வாழ்த்துகள்!

சினிமா என்றாலே ரசனைதானே? ரசனை மிக்க உங்கள் தொடரை தொடர்ந்து வாசிப்பேன். மரியாதைக்குரிய எழுத்தாளர் அமுதவன் அய்யா அவர்களது ’சிவகுமார் எனும் மானுடன்’ என்ற நூலினைப் பற்றிய தங்களது கருத்துக்களையும் அறிய ஆவலாக இருக்கிறேன். தொடர்ந்து வருவேன்.

ஜோதிஜி said...

வணக்கம். நன்றி.

ஜோதிஜி said...

நலமா? நிச்சயம் தொடர்ந்து எழுதுவேன். உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

ஜோதிஜி said...

"எழுதியதை நிறுத்திய போது இனி நம்மிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று நினைத்தே எழுதிக் கொண்டிருந்ததை நிறுத்தினேன்."

உங்களைப் போன்றவர்கள் இவ்வாறு எண்ணியதே எனக்கு ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது! உங்கள் பணி காரணமாகவே குறைத்துக் கொண்டீர்கள் என்று நினைத்தேன்.

எழுதுவது நமக்கு பிடித்து இருக்கும் வரை அதில் இருந்து விலகுவது என்பது சாத்தியமில்லாத ஒன்றே! ஃபேஸ்புக் போன்றவையின் மூலம் மாற்று வழியிலாவது எழுத்து தொடர்ந்து கொண்டே இருக்கும்.

நீங்கள் திரும்ப பழைய பன்னீர் செல்வமா வந்ததுக்கு மகிழ்ச்சி :-) .

கிரி
http://www.giriblog.com/2016/08/11th-year-of-giriblog.html

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

முழுக்க முழுக்க சமூகப் பார்வையுடன் எழுதுபவர் நீங்கள். சினிமாவாக இருந்தாலும் அதே பார்வையுடன் எழுதுவீர்கள் என்பதில் ஐயமில்லை. முகநூலில் உங்கள் பகிர்வுகளை படித்து வருகிறேன்.மீண்டும் வலைப்பூவில் பதிவுகள் தொபர்வதை வரவேற்கிறேன்

S.P.SENTHIL KUMAR said...

வித்தியாசமான பல பதிவுகளை தந்த தாங்கள் வலையில் இருந்து ஒதுங்கியது என்னைப் போன்றவர்களுக்கு பெரும் வருத்தமாக இருந்தது. மீண்டும் எழுத வருகை தந்ததற்கு நன்றி!
நிறைய எழுதுங்கள்! மனமார்ந்த வாழ்த்துக்கள்!

ஜோதிஜி said...

உங்கள் அன்புக்கு அக்கறைக்கு மிக்க நன்றி செந்தில்

ஜோதிஜி said...

வாங்க முரளி. இளைப்பாறுதல் என்பது எழுத்து மூலமே நடக்க வாய்ப்புள்ளது என்பதனை உணர்ந்து மீண்டும் எழுதத் தொடங்கியுள்ளேன். நன்றி.

ஜோதிஜி said...

வாங்க முரளி. இளைப்பாறுதல் என்பது எழுத்து மூலமே நடக்க வாய்ப்புள்ளது என்பதனை உணர்ந்து மீண்டும் எழுதத் தொடங்கியுள்ளேன். நன்றி.

ஜோதிஜி said...

உங்கள் அன்புக்கு அக்கறைக்கு மிக்க நன்றி செந்தில்