இந்தப் பயணம் அடுத்தப் பதிவோடு முடிகின்றது.
திருவாவாடுதுறையில் நான் முதன் முதலாகப் பார்த்த இந்து மதத்தில் ஒரு அங்கமாக இருக்கும் ஆதீனம் என்றொரு உலகத்தைப் பற்றி எழுதுகின்றேன். நான் எதிர்பார்க்காத அளவுக்கு ஆயிரக்கணக்கான நண்பர்களால் அதிகம் படிக்கப்பட்ட பதிவாக ஒவ்வொரு பதிவும் சிறப்பு சேர்த்துள்ளது.
அத்தனை நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
சில பதிவுகளுக்கு முன் எழுதிய பதிவைப் படித்த நெருங்கிய நண்பர்கள் "நம்பிக்கைகள்" குறித்த என் பார்வை தவறு என்றார்கள். உண்மைதான். ஒவ்வொருவரின் பார்வையும் வெவ்வேறாக இருக்கும்.
அவரவர் அனுபவங்கள் அதை உணர்த்தும். சாதி, மதம் குறித்து இதுவரையிலும் எனக்குத் தெரிந்த நான் புரிந்து கொண்ட விதங்களில் பதிவுகளில் பகிர்ந்துள்ளேன்.
கடவுள் நம்பிக்கைகள் அல்லது ஏதோவொரு நம்பிக்கைகள் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களைப் பற்றியும், குறிப்பாக ஒவ்வொரு மதங்கள் சொல்லும் ஆன்மீகம் குறித்த செய்திகளையும், பின்பற்றும் மனிதர்கள் குறித்தும் தனியாக ஒரு பதிவாக எழுதி விட ஆசை. அதையும் எழுதுவேன். அதற்கு முன்னதாகப் பகிர்ந்து கொள்ள வேண்டியதாக இருந்த படங்களை அதிகம் எழுதத் தேவையில்லாத காட்சிகளை இங்கே பகிர்ந்துள்ளேன்.
அடுத்தப் பதிவாக வரும் திருவாவாடுதுறையில் நான் பார்த்த சில காட்சிகளை இங்கே தந்துள்ளேன். முழுமையான விபரங்கள் அடுத்தப் பதிவில் வருகின்றது.
திருவாவாடுதுறையில் எடுக்கப்பட்ட படங்கள்
தொடர்புடைய பதிவுகள்
15 comments:
கடவுள் நம்பிக்கைகள் அல்லது ஏதோவொரு நம்பிக்கைகள் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களைப் பற்றியும், குறிப்பாக ஒவ்வொரு மதங்கள் சொல்லும் ஆன்மீகம் குறித்த செய்திகளையும், பின்பற்றும் மனிதர்கள் குறித்தும் தனியாக ஒரு பதிவாக எழுதி விட ஆசை. அதையும் எழுதுவேன். //
ஆவலுடன் கத்திருக்கின்றோம்!
படங்கல் எல்லாமே நன்றாக உள்ளன்! குறிப்பாக கடலில் குளிக்கும் சிறுவர்கள் படம்! திருவாடுதுறை அந்த வீடு படம் மிக அழகாக உள்ளது!
பகிர்வுக்கு நன்றி!
திருவாடுதுறைப் படங்கள் எல்லாமே நன்றாக உள்ளன.
அனைத்து படங்களும் அருமை... குழந்தைகளின் படம் அழகு...
நம்முடைய நம்பிக்கையை நாம் எடுத்துச் சொல்வதில் யாரும் ஆட்சேபிக்க வேண்டிய அவசியம் இல்லை. 'நாம்' என்பதே நம்முடைய நம்பிக்கைகளின் தொகுப்புதானே! இன்னொருவரின் நம்பிக்கை நம்முடைய நம்பிக்கையோடு ஒத்துப் போகவேண்டிய அவசியம் இல்லையே!
இணையம் ஸ்லோவாக இருப்பதால் முழு படங்களை காணமுடியவில்லை! பிறகு வருகிறேன்! நன்றி!
படங்கள் அருமையாக உள்ளன .. குறிப்பாக கடலை ஆச்சர்ய கண்களுடன் பார்க்கும் குழந்தை அழகு.
பயணமும் படங்களும் - சுவாசித்த கவிதைகள் 2
அற்புதமான பதிவு. படங்கள் பேசுகின்றன.
எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி.
பேசும் படங்களின் பேசாத கவிதைகள்!
நன்றி
நன்றி
நன்றி
நன்றி
நன்றி
நன்றி
நன்றி
Post a Comment