Sunday, November 17, 2013

நாம் (மட்டுமே) தான் காரணம்

புதிய வீடு ஒன்று தேவை என்ற போது நண்பர் மூலமாகத்தான் அவர் அறிமுகமாயிருந்தார். அவரைப் பற்றி வேறு எதுவுமே தெரியாது. கைபேசியில் தொடர்பு கொண்ட போது "வீட்டுக்கே வந்து விடுங்க" என்றார். 

அவர் சொன்னபடி ஞாயிற்றுக் கிழமையன்று காலையில் வீட்டுக்குச் சென்ற போது எனக்கு அங்கே ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. 

அந்த வீடு சமீபத்தில் தான் கட்டப்பட்டிருந்தது. புதிய வீடு. வெளியே அமர்ந்திருந்த போது ஜன்னல் வழியே உள்ளே உள்ள அறையின் அமைப்பு முழுமையாகத் தெரிந்தது. நூலகம் போன்ற ஒரு அமைப்பு தெரிய ஆர்வம் மேலிட எழுந்து சென்று உள்ளே எட்டிப்பார்க்க ஆயிரக்கணக்கணக்கான புத்தகங்கள் நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்தது. 

மனதிற்குள் குழப்பம் அலையடித்தது. இவர் தொழிலுக்கும் இங்குள்ள சூழ்நிலைக்கும் சம்மந்தமில்லாமல் ஏன் இத்தனை புத்தகங்கள்? என்பதை யோசித்துக் கொண்டே இருந்த போது பக்தி பழமாகப் பூஜையெல்லாம் முடித்து விட்டு வெளியே வந்து எங்களின் தேவையைக் கேட்கத் தொடங்கினார். 

நான் போன வேலையை மறந்து விட்டு எடுத்தவுடன் உள்ளே நூலகம் எதுவும் வைத்திருக்கீங்களா?என்று கேட்டு விட்டு அவர் அனுமதியை எதிர்பார்க்காமலேயே நான் பார்க்கலாமா? என்று கேட்டேன். 

அவர் சற்று நேரம் யோசித்து விட்டு "அந்தப் புத்தகங்கள் உங்களுக்குப் புரியாது" என்றார். காரணம் கேட்ட போது அங்குள்ள அத்தனை புத்தகங்களும் சித்த மருத்துவம் சார்ந்த புத்தகங்கள். அடுத்த அரை மணி நேரத்தில் அவரைப் பற்றிய முழுமையான விபரங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. 

இவரின் தாத்தா, அப்பா என்று தலைமுறையே சித்த மருத்துவத் துறையில் இருந்தவர்கள். இவரும் ஆர்வத்துடன் இதற்கான படிப்பு படித்து, மேற்கொண்டு ஆர்வத்தின் காரணமாகப் பல ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வாங்கித் தன்னை ஒரு தகுதியான சித்த மருத்துவராக மாற்றிக் கொண்டு ஐந்து வருடங்களுக்கு முன் கிளினிக் ஒன்றை தொடங்கியுள்ளார். 

தொடக்கத்தில் இருந்த மக்களின் ஆதரவு படிப்படியாகக் குறையத் தொடங்கியது. இவரின் தனிப்பட்ட திறமைகள் சில பணக்காரர்களின் தொடர்பை உருவாக்கிக் கொடுத்தது. ஆனால் அந்தப் பழக்கம் காசு சாம்பாரிக்க உதவவில்லை. இலவச ஆலோசனைகள் என்கிற ரீதியில் சென்று விடத் தடுமாற ஆரம்பித்துள்ளார். 

இதற்கு மேலாக இவர் மூலம் பலன் அடைந்தவர்களே பணம் என்கிற போது கவனமாகத் தவிர்த்து விடுவதும் வாடிக்கையாக இருக்கச் சித்த மருத்துவத்தை மட்டுமே படித்து வந்தவருக்கு அப்போது தான் மக்களின் மனங்களைப் படிக்கத் தொடங்கினார். 

தனக்கு எது வசதியாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு வீடு, அலுவலகம் பிடித்துக் கொடுக்கும் புரோக்கர் தொழிலில் இறங்கி விட்டார். எவரிடமும் தான் கற்று வைத்துள்ள சித்த மருத்துவம் குறித்து உரையாடுவது கூட இல்லை. காரணம் அவர் பெற்ற கசப்பான அனுபவங்கள். 

இவரின் தொடர்பு கிடைத்து, என் தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாக இந்தத் துறை குறித்த பல விபரங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வதுண்டு. 

பல சமயம் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உதவியுள்ளார். வீடு, அலுவலகத்திற்குக் கட்டிடங்கள் தேவை என்று எவர் என்னிடம் கேட்டு வந்தாலும் இன்று வரையிலும் இவரிடம் அனுப்பி வைப்பது வாடிக்கை. நல்ல தொடர்பில் இருந்தாலும், இவர் சொன்ன எதையும் முழுமையாக எதையும் நான் பின்பற்றியதே இல்லை. காரணம் சில உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாகக் கட்டுப்பாடுகள் என்பதைக் கவனத்தில் வைத்திருக்க வேண்டும். 48 நாட்கள் என்றால் முழுமையாக விடாமல் கடைபிடித்து மருந்துகளை உண்ண வேண்டும். 

லேகியம், மற்றும் சூரணம் வகையான பொடிகளைக் குழந்தைகளை உண்ண வைப்பதற்குள் நமக்கு நாக்கு தள்ளி விடும். பலன் கிடைப்பதற்குப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். 

அசட்டை பாதி. அவநம்பிக்கை பாதியென மனம் ஊசலாட்டத்தில் தவித்தாலும் எப்படியாயினும் இந்த ஆங்கில மருத்துவத்திலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மனதிற்குள் இருந்து கொண்டேயிருந்தது. 

இந்தச் சமயத்தில் மற்றொரு சம்பவம் என் நினைவில் வருகின்றது. 

வீட்டில் ஒருவருக்குத் தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனை உருவானது. நாள்பட நாள்பட அது படையாக மாறியது. மேலே உள்ள நண்பருடன் இது குறித்துக் கேட்க வந்து பார்த்து விட்டு வேலிப்பருத்தியை கொண்டு வந்து தினந்தோறும் கசக்கி அதைச் சாறாக்கி அந்த இடத்தில் தடவி வாருங்கள் என்றார். 

தேடிக்கண்டு பிடிப்பதில் உண்டான சவாலின் காரணமாக அதனைத் தொடர்ச்சியாகச் செய்து வர முடியவில்லை. ஆனால் அந்தப் படையின் அளவு மட்டும் பெரிதாகிக் கொண்டேயிருக்க மனதில் பயம் வர திருப்பூருக்குள் இருக்கும் தோல் மருத்துவர் குறித்து ஆராய்ச்சி தொடங்கியது. கடைசியாக இவர் தான் சிறப்பான மருத்துவர் என்று நண்பர்களால் அடையாளம் காட்டப்பட்டவரிடம் சென்ற போது சில மாதங்கள் அவர் சொன்ன மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்ட போதிலும் சரியானபாடில்லை. ஒவ்வொரு முறையும் ஐந்நுறு ரூபாய்க்குக் குறையாமல் தீட்டிக் கொண்டிருந்தார். 

அன்றொரு நாள் கோபத்தில் இதைச் சுட்டிக்காட்டி சொன்ன போது "ரத்த பரிசோதனை செய்து விடுங்க" என்றார். 

அதையும் எடுத்துக் கொண்டு போய்க் கொடுத்த போது "இது பிறவியிலேயே வந்த கோளாறு. ஹீமோகுளோபீன் குறைவாக உள்ளது. நிரந்தரமாகக் குணமாகக்க முடியாது. இந்த மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வாருங்கள். மாதம் ஒரு முறை வந்து காட்டி விட்டு போங்க" என்றார். 

இந்தத் தகவல் கிடைக்க ஏழு மாதங்கள் அவர் மருத்துவமனை சென்று காத்திருந்த நேரங்கள் என்று ஒவ்வொன்றும் மனதில் வந்து போனது. 

மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாமோ? என்று யோசித்துக் கொண்டு மற்றொரு நண்பரை அழைத்துக் குழந்தையின் தோல் சார்ந்த பிரச்சனையைச் சொன்ன போது அவர் ஒருவரின் கைபேசி எண் கொடுத்து இவரைப் போய்ப் பாருங்க. இரண்டு மாதத்தில் நிரந்தரமாகக் குணமாகி விடும் என்றார். 

ஆர்வம் பாதி அவநம்பிக்கை பாதி என அவரைச் சந்தித்த போது அங்கே ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. 

சித்த மருத்துவத்துறையில் மாவட்ட அளவில் உயர் அதிகாரியாக இருந்தவர். அரசாங்கம், அரசு மருத்துவமனைகளில் தேவைப்படும் மருத்துவர்களைப் போடாமல் இவரைப் படுத்தி எடுக்க விருப்ப ஓய்வு பெற்று விட்டு தனது சொந்த ஊரான திருப்பூரிலேயே குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றார். அடிப்படையில் வசதியான குடும்பம் என்பதால் பெயருக்கென்று கிளினிக் ஒன்று வைத்துக் கொண்டு நண்பர்கள் மூலம் வருகின்றவர்களுக்கு மட்டும் அவர் வீட்டிலேயே தயாரிக்கும் மருந்துகள் மூலமும், பல இடங்களிலிருந்து வரவழைக்கும் மருந்துகள் மூலம் வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கின்றார். 

மகளை அழைத்துச் கொண்டு போய்க் காட்டியதும் முழுமையாகப் பரிசோதனை செய்து விட்டு "ஒரு வாரம் கழித்து வாருங்க. ஒரு பொடி தருகின்றேன். தேனில் கலந்து இரண்டு மாதங்கள் சாப்பிட வைங்க. இந்தப் பிரச்சனை முழுமையாகப் போய் விடும்" என்றார். 

எனக்கு நம்பிக்கை வரவில்லை என்றாலும் பெண் குழந்தையின் தோல் சார்ந்த பிரச்சனை என்பதால் அவர் என்ன சொன்னாலும் கேட்கும் மனோநிலையில் இருந்தேன். அவர் சிறிய டப்பாவில் கொடுத்த பொடிக்கு நானூறு ரூபாய் வாங்கிய போது எரிச்சலாகவே இருந்தது. 

எங்கள் விடத் தோல் நோயால் பாதிக்கப்பட்டவர் ஆர்வமாக இருந்த காரணத்தால் முழுமையாக இரண்டு மாதமும் அவர் சொன்னபடியே செய்து முடித்த போது அந்த இடத்தில் சிறிய கரும்புள்ளி (மச்சம்) என்பது போல மாறி மற்ற அனைத்தும் அப்படியே மறைந்து போய் விட்டது. தோல் நோயால் உருவான அரிப்பு, அது சார்ந்த பிரச்சனைகள், கரும்படலம் என்று அனைத்தும் மறைந்து போன பின்பு தான் இந்தச் சித்த மருத்துவத்தின் மேல் முழுமையாக நம்பிக்கை வந்தது. 

எனக்குச் சித்த மருத்துவத்தில் அரைகுறை நம்பிக்கை. ஆனால் வீட்டில் இருப்பவருக்கோ நம்பிக்கை என்பது துளி கூட இல்லை. 

ஆனால் இந்தத் தோல் வியாதிக்கு ஒரு சிறிய டப்பா பொடி கொடுத்தத் தாக்கத்தினால் என்னை விட இவரே ஆர்வமாக இருப்பதால் எனக்கு முக்கால்வாசி பிரச்சனைகள் தீர்ந்து விட்டது. 

இந்தச் சமயத்தில் தேன் நெல்லி, இஞ்சித் தேன், சத்து மாவு என்று இயற்கை சார்ந்த விசயத்தில் குடும்பத்தின் ஆர்வம் முழுமையாக மாற வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் ஆங்கில மருத்துவம் மிக அவசியம் தேவை ஏற்பாட்டாலொழிய அது அடிப்படை ஆரோக்கிய வாழ்க்கைக்குத் தேவையில்லை என்கிற நிலைமைக்கு வந்துள்ளோம்.

++++++++++++++++++++++++++++++

(மன்னிக்கவும், 

தனிப்பதிவாக போட வேண்டிய விசயங்களை இத்துடன் தந்து விடுகின்றேன். மேற்கொண்டு பதிவின் சாராம்சத்தை நீட்டிக்க விரும்பவில்லை. நேரம் இருக்கும் போது வந்து படித்துக் கொள்ளவும்)

கடைசியாகத் தற்போதைய சூழ்நிலையைப் பற்றிப் பேச வேண்டும். 

கல்வித்துறை, காவல் துறை, நீதித்துறை, மருத்துவத்துறை இந்த நான்கு துறைகளையும் சமூகத்தில் சேவைத்துறை சார்ந்தது என்கிறார்கள். 

குறிப்பாக மருத்துவத் துறை என்பது மிக முக்கியமானது. 

ங்கில மருத்துவர்கள் கொள்ளையடிக்கின்றார்கள் என்று பொத்தாம் பொதுவாகச் சுட்டிக்காட்டுகின்றோம். ஆனால் மக்களின் மனோநிலை தான் அவர்களை அப்படி மாற்றுகின்றது என்பதில் என்னைப் பொறுத்தவரையிலும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. 

த்துக்குப் பத்து அறையில் இருந்து கொண்டு மருத்துவம் பார்க்கும் உண்மையான மருத்துவருக்கு எந்த மரியாதையும் இல்லை. மக்கள் எதிர்பார்க்கும் திடம் மணம் குணம் போன்ற ஆடம்பர அட்டகாசங்கள் அவசியம் தேவைப்படுவதால் ஒவ்வொருவரும் கடன் வாங்கிக் கட்டிடங்கள் கட்டுவதும், மருத்துவ உபகரணங்களை வாங்கிப் போடுவதும் வாடிக்கையாக உள்ளது. கடன்களைக் கட்ட மக்களைக் கடன்காரர்களாக மாற்றுவது தான் நடக்கும். அது தான் நடந்து கொண்டிருக்கின்றது. 

யல்பாகச் சேவை மனப்பான்மையில் பணியாற்றும் நூற்றில் பத்து மருத்துவர்களைக் கூட நம் மக்கள் நம்பத் தயாராக இல்லை. தோற்றத்தை வைத்து எடை போடுவது தான் நம்மவர்களின் வாடிக்கை. மேலும் நம் மக்கள் அவர்களின் எதிர்பார்ப்புகளை ஒரேடியாகத் திணிக்க அவர்களும் பாதை மாறத் தொடங்கி விடுகின்றார்கள். 

ஆசை கொண்ட மனம் மாறுமா? 

மாற்றுச் சிந்தனைகளைப் பற்றி யோசிக்க மனமில்லாமல் மக்களின் சுய சிந்தனைகள் மழுங்கி எதற்கெடுத்தாலும் மாத்திரை, உடனே மருத்துவர், எப்போதும் பயம் என்கிற சூழ்நிலையில் வாழப் பழகி விட்டதால் பணம் தின்னிக் கழுகுகளாக மருத்துவர்கள் மாறுவது ஒன்றும் ஆச்சரியமல்ல. 

ன்றைய மருத்துவ உலகம் என்பது கார்ப்பரேட் கலாச்சாரம் என்கிற பாதைக்கு மாறி பல வருடங்களாகி விட்டது. இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு விடயம் ஷிப்ட் முறையில் மருத்துவர்கள் பணியாற்றுவது. ஒரே நபர் பல இடங்களில் ஒரு மணி நேரம் தொடங்கி மூன்று மணி நேரம் வரையிலும் பணியாற்றுவதால் நோயாளிகளின் ஆரோக்கியம் பல மருத்துவர்களின் காலில் சிக்கிய பந்தாக மாறியுள்ளது. 

நாமும் குளிர்சாதன வசதியுடைய மருத்துவமனைகளையே தேடிச் செல்லும் போது அவர்கள் குனிய வைத்து தான் குத்துவார்கள்.  குத்துதே, குடையுதே என்ற கத்த முடியுமா?

ன்று வரையிலும் சித்த மருத்துவம் என்றாலே பாலியல் சார்ந்த பிரச்சனைகளுக்கு அணுகுபவர்கள் தான் அதிகம். _என் ஆண் குறி அதிக நேரம் விறைத்து நிற்க என்ன செய்ய வேண்டும்?_ என்பது போன்ற கேள்விகளைத் தான் படித்த புத்திசாலிகள் கூடச் சில சித்த மருத்துவப் பதிவு எழுதிக் கொண்டிருப்பவர்களிடம் கேட்பதாக ஒருவர் எழுதியிருந்தார். 

இது சார்ந்த கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் பல பதிவுகளில் பின்னூட்டமாக வருகின்றது. நம்மவர்களின் அடிப்படை பலவீனமே இங்கிருந்து தான் தொடங்குகின்றது. இதைப் பயன்படுத்தி முடிந்தவரைக்கும் லாபம் பார்க்க விரும்புவர்களால் சித்த மருத்துவத்தின் மீது இருந்த நம்பிக்கையும் போய் விட்டது. 

சித்த மருத்துவம் என்பது அறிவு சார்ந்த பொக்கிஷம். ஆனால் குரு சிஷ்யன் என்ற நோக்கில் பாதி விசயங்கள் அடுத்தத் தலைமுறைக்கு வராமல் போய்விட்டது. மீதி எழுதப்பட்டு இருந்த ஓலைச்சுவடிக்களைக் கரையான் தின்று விட்டது. 

ஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மஹால் போன்ற இடங்களில் உள்ள சுவடிகளைப் பாதுகாக்க மனமில்லாத அரசாங்கம் ஒரு பக்கம். மிச்சம் மீதி வைத்திருப்பவர்கள் அதை மற்றவர்களுக்குப் புரிய வைக்க மனமில்லாமல் இருப்பது மறு பக்கம். 

து குறித்துச் சிறிதளவே தெரிந்தவர்கள் இன்று வரையிலும் கிடைத்த விசயங்களை வைத்து எப்படிக் காசாக்கலாம்?என்று தான் யோசிக்கின்றார்களே தவிர மேலைநாட்டுக் கலாச்சாரம் போல அதைப் பொதுவில் வைத்து அதன் நம்பகத்தன்மையை உணர வைத்து உலகறியச் செய்வது என்ற பழக்கம் நம்முடைய தமிழர்கள் பண்பாட்டில் எந்தக் காலத்திலும் இல்லை என்பதை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

சித்த மருத்துவம், ஆங்கில மருத்துவம் இடையே உள்ள வேறுபாடுகள்

ங்கில மருத்துவம் நோய்களை உடம்பு என்கிற ஒரே வரையறைக்குள் கொண்டு வந்து நிறுத்தி விடுகின்றது.

சித்த மருத்துவம் நோய்களை உடல், உயிர், ஆன்மா என்று பிரித்துப் பார்க்கின்றது.

சித்த மருத்துவத்தின் அடிப்படைத்தன்மை ஆன்மீகம்.  நம்பிக்கை இருந்தால் மட்டுமே ஆன்மா அமைதி பெறும்.  ஆங்கில மருத்துவத்தில் ஆன்மா என்றால் கிலோ என்ன விலை?

மேற்கித்திய மருத்துவமுறைகளில் சோதனை முக்கியம். இன்று காய்ச்சலுக்கு ஒரு மாத்திரை என்றால் அதை விட நாளை ஒன்று வந்தால் இது மறக்கப்படும்.  முக்கியமாக நிரூபிக்கப்பட வேண்டும்.

மது மருத்துவத்தில் ஒரே ஒரு மூலிகை என்றாலும் அதை எந்த சமயத்தில் எதனுடன் சேர்த்து பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் தான் கவனம் செலுத்தும்.

ங்கில மருத்துவத்தில்  மனித உடம்பு என்பது சோதனைச் சாலை.

சித்தர்களின் பார்வையில் உடம்பு என்பது இறந்து போகும் வரையிலும் ஆரோக்கியத்துடன் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்.

சித்த மருத்துவமென்பது உணவே மருந்து. அதற்கு நேர்மாறானது ஆங்கில மருத்துவம். இங்கே கண் கெட்ட பிறகே சூர்ய நமஸ்காரம்.

ம்புலன்களை அடக்க வேண்டிய அவசியத்தை போதிப்பது சித்த மருத்துவம். ஆனால் புலனாவது புடலங்காயவது என்பது ஆங்கில மருத்துவம். எல்லாவற்றுக்கும் மாத்திரை ஒன்றே போதும்.

சித்த மருத்துவத்தில் பட்டினி கிடப்பது பல முக்கியமான நோய்களுக்கு உதவக்கூடியதாக இருக்கும். ஆனால் இங்கோ அத்தனைக்கும் ஆசைப்படு. கடைசியில் இருக்கவே இருக்கு அறுவை சிசிக்சை.

நடைமுறைச் சிக்கல்கள்

2,50,000 மூலிகை சமாச்சாரங்கள் அடங்கிய இந்தச் சித்த மருத்துவத்தில் இன்று எத்தனை மூலிகைகள் இருக்கும் என்று நம்புகின்றீர்கள். 

னாலும் தற்போதைய நவீன உலக மாற்றத்திற்கு ஏற்ப பலரும் டானிக் போன்ற வகைகளில் இந்த மருந்துகளைத் தயாரிப்பதும், விபரம் புரிந்து வைத்திருப்பவர்களும், கடைசியாக வேறு வழியே இல்லை என்று இந்தச் சித்த மருத்துவத்திடம் அடைக்கலம் ஆனவர்களையும் பல இடங்களில் பார்க்க முடிகின்றது. 

நாட்டு மருந்துக் கடைகளில் இருக்கும் கூட்டத்தைப் பார்க்கும் போது உணர முடிகின்றது. இருமலுக்கு, சளிக்கு துளசி கண் கண்ட நிவாரணி.  இதைக்கூட டானிக் முறையில் கொண்டு வந்துள்ளார்கள்.  ஒரு வருடத்தில் தீராத பிரச்சனை நாற்பது ரூபாயில் தீர்த்ததோடு நிரந்தர நிவாரணியாகவும் உள்ளது.

சித்தர்களால் சொல்லப்பட்ட விசயங்களும், சராசரி வாசிப்பு உள்ளவர்களுக்குப் புரிய வைக்க முடியாத சூட்சுமமான பாடலாகவே ஒவ்வொருவரும் எழுதியிருப்பதால் இது பலருக்கும் செல்லாமல் இன்று இதன் பலன் தெரியாமலேயே போய்விட்டது. 

மிழர்களிடத்தில் எதையும் ஆதரிக்கும் தன்மை குறைவு. ஆதரிப்பவர்களையும் அதட்டி உட்கார வைத்து விடும் தன்மை அதிகம். 

சுய முனைப்பு அறவே இருக்காது. தங்கள் சிந்தனைகளை சுருக்கியே வாழப் பழகிக் கொண்டதுமான தமிழர்களின் கலாச்சாரமும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் உருவாக்கியவர்களை விட அதைத் தானே செய்து சாதித்ததாகத் தம்பட்டம் அடித்துக் கொள்வதில் நம்மவர்களுக்கு மிஞ்சியவர்கள் எவருமே இல்லை. 

இதற்கு மேல் வேறென்ன சொல்ல? 

உங்கள் ஆரோக்கியம். உங்கள் சிந்தனைகளிலிருந்து தொடங்கட்டும். 

(எழுதக் காரணமாக இருந்த ராஜா, அமுதவன், தமிழ் இளங்கோ அவர்களுக்கு நன்றி)


தொடர்புடைய பதிவுகள் 







43 comments:

கவியாழி said...

தங்களின் சித்தமருத்துவ நிவாரணி அனுபவம் என்னையும் ஆர்வமுரச்செயகிறது.ஆங்கில மருத்துவத்தை விட்டு மெல்ல மெல்ல எல்லோரும் சித்தமருத்துவத்தைப் பயன்படுத்தினால் நல்ல பலன் இருக்குமென எண்ணத்தோன்றுகிறது.

எம்.ஞானசேகரன் said...

உங்களின் சித்த மருத்துவம் குறித்த அனைத்து பதிவுகளும் அருமை. பல அறியாத தகவல்கள். நானும்கூட ஆங்கில மருத்துவத்தை அவசியம் ஏற்பட்டாலொழிய அதிகம் நாடுவதில்லை. ஆனாலும் சித்த மருத்துவத்தின்பாலும் அதிகம் ஆர்வம் இருந்ததில்லை. இயற்கை உணவுமுறைகளை அவ்வப்போது பின்பற்றுவதுண்டு. இங்கே வெளிமாநிலங்களில் மருத்துவமனைக்கு போவதை அறவே தவிர்த்துவிடுவதுண்டு.

கோவை சிபி said...

In tirupur sidda doctor contact &address please

கோவை சிபி said...

In tirupur sidda doctor contact &address please

கோவை சிபி said...

In tirupur sidda doctor contact &address please

கோவை சிபி said...

In tirupur sidda doctor contact &address please

கோவை சிபி said...

In tirupur sidda doctor contact &address please

திண்டுக்கல் தனபாலன் said...

இரண்டிலும் உள்ள வேறுபாடுகளிருந்து நமது பொறுமை + அவசரம் புரிந்து கொள்ள முடிகிறது...

அபயாஅருணா said...

எனக்கும் பல முறை ஆயுர்வேத முறையில் பிணிகள் தீர்ந்தன

Amudhavan said...

சித்த வைத்தியத்துறையிலும்கூட இப்போது பலரும் பெரும்பணம் செய்ய ஆரம்பித்துவிட்டவர்களெல்லாம் இருக்கின்றனர். மூலிகைமணி டாக்டர் வெங்கடேசன் (இப்போது இவர் கோயம்புத்தூரில்தான் இருக்கிறார்) போன்ற ஒரு சிலர்தான் இன்னமும் ஆராய்ச்சி, தேடல், அதைத் தொடர்ந்து மருத்துவம் என்று வளைய வருகிறார்கள். சித்த வைத்தியர்கள் என்பவர்கள் ஆன்மிகவாதிகளாக இருப்பதுடன் தமிழ்ப்புலமையும் உள்ளவர்களாக இருந்தால்தான் சரிப்படும். இதெல்லாம் இல்லாமல் வெறும் இரண்டொரு புத்தகங்களைப் படித்துவிட்டு வைத்தியத்தொழில் ஆரம்பித்துவிடுவதில் ஒரு பயனும் இல்லை. பாலியல் தொந்தரவுகளுக்கு அது இது என்று சொல்லிக்கொண்டு காசு பார்க்கலாம் அவ்வளவுதான்.
நீங்கள் மேலே எழுதியிருக்கும் தகவல்களில் சித்த மருத்துவம் உடல் மனம் ஆன்மா என்ற மூன்றையும் அணுகி குணப்படுத்துகிறது அல்லது சாந்தப்படுத்துகிறது என்பதுபோல் எழுதியிருக்கிறீர்கள்.
மனம் ஆன்மா இவற்றை அணுகுவது ரெய்கி சிகிச்சைதான். இது மருந்தில்லா மருத்துவம் வகையைச் சேர்ந்தது. நான் இப்போது வீட்டில் ரெய்கிதான் பிராக்டிஸ் பண்ணுகிறேன். இரண்டு சிக்கல்கள். முதாலாவது, மக்களை நம்ப வைப்பது பெரும் பாடாக உள்ளது. இரண்டாவது, மற்ற சிகிச்சை முறைகள் போல் மருந்து எழுதிக்கொடுத்துவிட்டு அடுத்த வாரம் வந்து பாருங்கள் என்றோ இன்னமும் பதினைந்து நாட்கள் கழித்து வந்து பாருங்கள் என்றோ சொல்லாமல் தினசரி வந்து சிகிச்சை பெற்றுக்கொண்டு போகவேண்டும் என்ற நிலை இருப்பது.
புரிந்துகொண்டு தினமும் வந்து சிகிச்சைப் பெற்றுச் செல்கிறவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் 'மற்ற' சிகிச்சை முறைகளால் குணமாகாத பல வியாதிகள் - ஆமாம், பல வியாதிகள்- ரெய்கியில் குணமாகிவிடுகின்றன.
இது ஒரு விவாதக்களம் என்பதனால்தான் இதனை இங்கே சொல்லியிருக்கிறேன். ஏனெனில் என்னுடைய பதிவில்கூட ரெய்கி பற்றி ஒரேயொரு கட்டுரை எழுதியதுடன் சரி. சுய விளம்பரமாகப் போய்விடும் என்பதனால் எதுவும் எழுதுவதில்லை.
தாங்கள் நன்றி சொல்லியிருப்பதற்கு என்னுடைய நன்றி.

தி.தமிழ் இளங்கோ said...

// தனக்கு எது வசதியாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு வீடு, அலுவலகம் பிடித்துக் கொடுக்கும் புரோக்கர் தொழிலில் இறங்கி விட்டார். எவரிடமும் தான் கற்று வைத்துள்ள சித்த மருத்துவம் குறித்து உரையாடுவது கூட இல்லை. காரணம் அவர் பெற்ற கசப்பான அனுபவங்கள். //

இப்போது யாரும் தங்களை “வீடு புரோக்கர்” என்று சொல்லிக் கொள்ள விரும்புவதில்லை. “ரியல் எஸ்டேட் “ என்றுதான் சொல்லிக் கொள்கிறார்கள்.

// இந்தச் சமயத்தில் தேன் நெல்லி, இஞ்சித் தேன், சத்து மாவு என்று இயற்கை சார்ந்த விசயத்தில் குடும்பத்தின் ஆர்வம் முழுமையாக மாற வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் ஆங்கில மருத்துவம் மிக அவசியம் தேவை ஏற்பாட்டாலொழிய அது அடிப்படை ஆரோக்கிய வாழ்க்கைக்குத் தேவையில்லை என்கிற நிலைமைக்கு வந்துள்ளோம்.//

நல்ல தேர்வு. வாழ்த்துக்கள்! நீங்கள் இந்த தலைப்பில் எழுதுவதற்கு நானும் ஒரு காரணம் என்பதில் மிக்க மகிழ்ச்சி! நன்றி!

தி.தமிழ் இளங்கோ said...
This comment has been removed by the author.
தி.தமிழ் இளங்கோ said...

கருத்துரை இரண்டு முறை வந்துவிட்டது. ஒன்றை நீக்கி விட்டேன்.

உஷா அன்பரசு said...

உழைப்பு, உடல் பயிற்சி, உணவு, ஓய்வு... இந்த விஷயங்களை நல்லமுறையில் கடைபிடித்தாலே போதும்...அடிப்படை ஆரோக்கிய வாழ்விற்கு.! ஆனால் இதில் ஏதாவது ஒன்றில் அலட்சியமாகத்தான் இருந்து விடுகிறோம். துன்பத்தின் தன்மையை பொறுத்து அவசியமேற்பட்டால் மட்டும் ஆங்கில மருத்துவம் பார்க்கலாம். மற்றபடி இயற்கை மருத்துவங்கள் மிக சிறந்தது! சளி, இருமல், தலைவலி போன்ற சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட மருத்துவம் தேடுவதை விட, அவற்றை இயற்கை முறையில் சரி செய்யலாம். சித்தா வைத்தியங்களுக்கு 'பத்தியம்' இருக்க வேண்டும். ஹோமியோபதிக்கு பத்தியமும் கிடையாது... பின்-விளைவுகளும் கிடையாது. அவசியம் ஏற்பட்டால் நான் பார்ப்பது ஹோமியோ பதிதான்! என்னோட தினசரி பழக்கம் காலையில் வெறும் வயிற்றில் கொஞ்சம் துளசி இலைகளை கிள்ளி மென்று சாப்பிட்டு 3 டம்ளர் தண்ணீர் குடிப்பேன்! துளசி மிக சிறந்த கிருமி - நாசினி ... அதன் அருமை யாருக்கும் தெரிவதில்லை... தினசரி வெறும் வயிற்றில் துளசி + தண்ணீர் ( இரண்டு அல்லது மூன்று டம்ளர் ) பிறகு எளிய உடற்பயிற்சி. தண்ணீர் அருந்திய பிறகு அரைமணி நேரம் கழித்துதான் உடற்பயிற்சி செய்ய வேண்டும். காலையில் வயிறு நிறைய... மதியம் போதும் என்பதற்கு முன்பாக, இரவில் போதுமான அளவு - இப்படித்தான் உணவு பழக்கம் இருக்க வேண்டும் . இந்த அளவுகள் மாறும் போதுதான் எல்லோருமே பருமனா ஆயிடறாங்க. எதோ ஒன்றில் கவனம் குறைந்து கொஞ்சம் எடை கூடுகிறேன் என்று தெரிந்தாலே மீண்டும் சரி செய்ய முனைந்து விடுவேன். உயரத்திற்கு ஏற்ற உடல் பருமன் அவசியம். சிறந்த மருத்துவம் பார்த்துக்கொள்ளும் வேளையில் சிறந்த ஆரோக்கியத்தை காப்பதும் அவசியம். நல்லது என்று சொல்லி கம்பு, சோளம், திணை வகைகளை வாரத்தில் இருமுறை செய்வேன்.... ஆனா வீட்ல இருக்க என் குட்டியிலிருந்து என் மாமியார் வரை உடம்புக்கு நல்லதை விட நாவிற்கு நல்லதைதான் விரும்பறாங்க...! பழங்களில் மாதுளை, ஆப்பிள், சீதா அடிக்கடி பயன் படுத்துவதுண்டு! ( எப்படி இருந்தாலும் எதோ ஒரு காரணங்களால் உடல் துன்பம் வரலாம்... அதை தாங்கி நீக்க உடல், மன பலம் தேவை)

Unknown said...

சித்த மருத்துவம், ஆங்கில மருத்துவம் இடையே உள்ள வேறுபாடுகளை பட்டியலிட்ட விதம் உண்மை !
என் தந்தையும் ஹோமியோபதி மருத்துவத்தில் நன்றாக தேர்ச்சி உள்ளவராக இருந்தார் ,அவருடைய தர்ம சிந்தனையின் காரணமாக கிளினிக்கை லாபகரமாக நடத்த முடியாமல் மூடிவிட்டு வேறு தொழிலை மேற்கொண்டார் !
நோயை அடிப்படை வேரை கிள்ளி எறிவது ஹோமியோபதி மருத்துவத்தின் தனித் தன்மை !ஆங்கில மருத்துவத்தைவிட செலவு குறைவானதும்கூட !மக்கள் விழிப்புணர்வு
இவ்விசயத்தில் இன்னும் அதிகமாய் தேவை !

கிரி said...

நல்ல கட்டுரை.... சித்த மருவத்திற்கும் ஆங்கில மருவத்திற்கும் உள்ள வித்தியாசத்தை தெள்ள தெளிவாக எடுத்து வைத்துள்ளீர்கள்... மிக்க நன்றி.... தொடரட்டும் உங்கள் எழுத்து பணி....

Paramasivam said...

அருமையான பதிவு. சித்த மருத்துவம் குணமாக்க சிறிது காலம் பிடிக்கிறது. நாம் அதற்குள் பயந்து விடுகிறோம். அது தான் உண்மை என எண்ணுகிறேன்
பரமசிவம்

இராய செல்லப்பா said...

தோல் வியாதிகளுக்கு சித்த மருத்துவம் மிகச் சிறந்த தீர்வைத் தந்திருக்கிறது என்பதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.

'பரிவை' சே.குமார் said...

நல்லதொரு பகிர்வு அண்ணா....
ஆயுர்வேதம் மூலம் எனக்கும் சில பிரச்சினைகள் குணமாகி இருக்கின்றன.

Harish said...

அருமையான பதிவு. அனுபவம் உள்ளவர்கள் எல்லாம் இப்படி நொந்துபோய்விட்டால் நம்முடைய சொத்தான சித்த மருத்துவத்தை யார் தான் கடைத்தேற்றுவது. சித்த மருத்துவ
நண்பர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். நீங்கள் உதவினால் சித்த மருத்துவர் வளம்பெறுவார். அவரை எல்லாருக்கும் அறிமுகம் செய்யுங்கள். இலவச ஆலொசனை வேண்டாம். ஆன்லைன் ஜோதிடர்கள் எப்படி தொழில் செய்கிறார்கள் ?. முயற்சி திருவினையாக்கும். நம்பிக்கையுடன் தொடங்க வழிகாணுங்கள்.

அன்புடன்,
ஜெ.ஹரிகிருஷ்னன்.
பெங்களூரு.
+91 9036492018.
haritiens@gmail.com

kumar said...

n tirupur sidda doctor contact &address please

Raja said...

அண்ணா,
நான் தற்பொழுது பெங்களூரில் என்மகளுக்காக நல்ல மாற்று முறை( சித்த,ஆயுர்வேத,ஹோமேயோபதி) மருத்துவரை தேடிக்கொண்டு உள்ளேன். என்னைபோன்று பெங்களூரில் உள்ள வேறு யாராவது அத்தகவலை அளித்தால் எனக்கும், என்போன்று தேடிக்கொண்டு உள்ளவருக்கும் மிக பயன்படும்.தாங்கள் உங்கள் தளத்தின் மூலம்சித்த ஆயுர்வேத மருத்துவர்களின் விவரங்களை (தங்களுக்கு தெரிந்தவரை )வெளியிட்டால் மற்றவர்களும் அப்பதிவில் அவர்களுக்கு தெரிந்த மருத்துவர்களின் பெயர்களை தெரிவிப்பார்கள். இது ஒரு "mini database" மாதிரி அனைவருக்கும் பயன்படும்.

ஜோதிஜி said...

ஞாயிற்றுக் கிழமை அதி காலை வாசிப்பில் என் தளமா? நன்றி கண்ணதாசன்.

ஜோதிஜி said...

வெளிமாநில அரசு மருத்துவமனைகள் எப்படி செயல்படுகின்றது என்பதைப் பற்றி எழுதலாமே?

ஜோதிஜி said...

உங்கள் தளம் சோதிக்கவும்

ஜோதிஜி said...

அவசரம். உண்மைதான். இங்கிருந்து தான் பிரச்சனையே தொடங்குகின்றது.

ஜோதிஜி said...

மகிழ்ச்சியாக உள்ளது.

ஜோதிஜி said...

உங்கள் தளத்தில் நீங்க எழுதியுள்ள ரெய்கி குறித்து அறிய தேடிய போது என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. உங்களின் ஆங்கில தளத்தை மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது. எனக்கு அதைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவல். இணைப்பு தாருங்கள்.

ஜோதிஜி said...

இடம் வாங்கி விற்பவர்களைத் தானே ரியல் எஸ்டேட் என்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியோ?

ஜோதிஜி said...

உங்கள் விமர்சனத்தை வீட்டிலும் படித்தார்கள். மிக்க நன்றி.

ஜோதிஜி said...

ஆகா உங்கள் தந்தையும் இதே துறையில் இருந்தவர் தானே? அதனால் தான் இன்றும் உங்களிடம் ஆரோக்கியமும் நக்கலும் குறைவில்லாமல் இருக்கிறது என்று நினைக்கின்றேன். கலக்குங்க.

ஜோதிஜி said...

நன்றி கிரி.

ஜோதிஜி said...

உண்மை தான் பரமசிவம். பொறுமை தான் அவசியம் தேவை.

ஜோதிஜி said...

உங்கள் அனுபவம் இந்த எழுத்திற்கு வலிமை ஊட்டுவதாக பலருக்கும் இருந்துருக்கும். நன்றிங்க.

ஜோதிஜி said...

நல்ல செய்தி குமார். நன்றி.

ஜோதிஜி said...

நீங்கள் சொல்வதும் உண்மை தான். தற்போதைய சூழலில் சந்தைப்படுத்துதல் ஒவ்வொன்றுக்கும் முக்கியத்துவம் கிடைக்க காரணமாக இருக்கின்றது. ஆங்கில மருத்துவர்கள் தாங்கள் செய்து கொள்ளும் விளம்பரங்கள் அளவிற்கு சித்த மருத்துவர்களால் செய்து கொள்ள முடியவில்லை. செய்து கொள்பவர்களும் லேகியம் பார்ட்டீகளாக இருப்பதால் பலரும் சென்றும் ஏமாந்து போய்க் கொண்டிருக்கின்றார்கள். தேடல் உள்ளவர்களுக்கு நிச்சயம் சரியான நபர்கள் கிடைப்பார்கள். உங்கள் வருகைக்கு மிக்க நன்றிங்க.

ஜோதிஜி said...

மின் அஞ்சல் வழியே தொடர்பு கொள்க.

ஜோதிஜி said...

உங்கள் அக்கறைக்கு நன்றி குமார். தனிப்பட்ட அனுபவங்களை எழுதியதால் நான் இதில் இது போன்ற விசயங்களில் ஆலோசனை சொல்லும் அளவிற்கு தகுதி இருப்பதாக தெரியவில்லை. பொதுவில் இது போன்ற பரிந்துரைகள் பல சமயம் எதிர்விளைவுகளை உருவாக்கும்.

திரு. அமுதவன் என்னை விட வாழ்க்கையில் எழுத்தில் அனுபவத்தில், இது போன்ற துறையில் மூத்த அனுபவம் பெற்றவர். அவரும் பெங்களூரில் தான் இருக்கின்றார். அவருடன் தொடர்பை உருவாக்கி வைத்துக் கொள்ளுங்க. பலன் உள்ளதாக இருக்கும் என்றே நம்புகின்றேன். வாழ்த்துகள்.

ஜோதிஜி said...

நன்றி குமார் என்பதை ராஜா என்று படித்துக் கொள்ளுங்க.

ezhil said...

காலத்திற்கேற்ற பதிவு... பொதுவாக அலோபதி வலிகளுக்கு மருத்து கொடுக்கிறது. ஹோமியோபதி வலி உருவாகும் காரணிக்கு மருந்து கொடுக்கிறது...வலி தீரலாம் ...ஆனால் வலியின் காரணி மீண்டும் வர வாய்ப்பிருக்கிறது.... நானும் சமீபத்தில் தான் ஹோமியோவிற்கு மாறியுள்ளேன்..அதேபோல் இயற்கை உணவிற்கும்....மேலும் பல சித்தா, மற்றும் ஹோமியோ மருத்துவர்கள் என்ன மருந்து கொடுத்துள்ளோம் என்பதை சொல்லாததாலும், அதற்காக வாங்கும் பணம் மாறுவதாலும் இன்னமும் அது குறித்து ஒரு தெளிவு ஏற்படவில்லை.....

Amudhavan said...

நீங்கள் கேட்ட ரெய்கி பற்றிய இணைப்பு இங்கே; http://amudhavan.blogspot.in/2010/12/blog-post.html

ஜோதிஜி said...

ராஜா எந்த இடத்திலும் உங்க மின் அஞ்சல் முகவரியை கண்டு பிடிக்க முடியலையே. தொடர்பு கொள்க.

ஜோதிஜி said...

தைரியமாக உரையாடவும். பதில் சொல்லாதவர்களை தைரியமாக புறக்கணித்து விடுங்க.