Wednesday, August 01, 2012

ஒரு நதியின் பயணம் -- 4ஆம் ஆண்டு


நாம் வாழ்க்கைக்காக எந்த தொழிலில் வேண்டுமானாலும் இருக்கலாம்.  ஆனால் அந்த தொழில் நமக்கு உளப்பூர்வமாக பிடிக்கின்றதா இல்லையா என்பது நம்முடைய மனதுக்கு மட்டுமே தெரியும். நான் இருக்கும் ஏற்றுமதி தொழில் என்பது பணத்தை மட்டுமே யோசிக்க வைக்கும் தொழில்.  மனிதர்களின் மனங்களைப் பற்றி அக்கறைபட வேண்டிய அவசியமில்லாத தொழில்.  

அப்படி யோசிக்கும் பட்சத்தில் அதிக இழப்புகளை சந்தித்தே ஆக வேண்டும்.  நான் அவ்வாறு ஏராளமான இழப்புகளை சந்தித்து இருக்கின்றேன்.

அவ்வாறு ஒரு தருணத்தில் தான் இந்த எழுத்தும் வலைபதிவுகளும் அறிமுகமானது.

உள்ளே இருக்கும் ஆர்வத்தினால் மடை திறந்த வெள்ளம் போல ஒரு 2008 ஜுலை 3  அன்று தொடங்கிய இந்த பயணம் சென்ற மாதம் நான்காம் வருடத்திற்கு அழைத்து வந்துள்ளது.  

சென்ற மாதத்தில் எப்போதும் போல எழுத வேண்டிய கட்டுரை கூட மறந்து விட்டது.  

பணம் துரத்திப் பறவைகளுக்கு திருப்தியும் வராது. திகட்டவும் செய்யாது. குடும்பம், குழந்தைகள், விருப்பம், கடன்கள், கடமைகள் என்று அடுத்தடுத்து ஆப்பு அடிப்பதும், அடித்த ஆப்புகளை கழட்டிக் கொள்வதுமாக பணத்தை நீ வீரும்பியே ஆக வேண்டும் என்று ஒவ்வொரு சந்தர்ப்பங்களும் உணர்த்திக் கொண்டேயிருக்கிறது. 

வெறித்தனமான ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளத்தான் வேண்டும்.  குழந்தைகள் உன் கண் எதிரே வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று வாழ்க்கை  ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உணர்த்திக் கொண்டேயிருக்கிறது.  

எழுதுவதை விட ஏற்றத்தின் பாதையில் கடந்த  ஏழு மாதங்களாக பயணித்த காரணத்தால் இந்த வருடத்தில் கடந்த ஏழு மாதங்களில் எழுதிய மொத்த பதிவுகளின் எண்ணிக்கை ஏழு மட்டுமே.

அதுவும் சிலரின் கட்டாயத்தின் பேரில் மீண்டும் எழுதத் தொடங்கினேன். மற்றவர்களைப் போல ஆகா நம்மால் எழுத முடியவில்லையே என்ற அங்கலாய்ப்பு இல்லாமல் வலையுலகத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஆகஸ்ட் 1 மிக முக்கியமான நாள் என்பது போல சென்ற மாதத்தில் உள்ள ஜுலை 3 இதைவிட முக்கியமான நாளாகும்.  

காரணம் இந்த நாள் நான் வலைபதிவுகள் என்று உலகத்திற்கு வந்த தினம்.  


என்னைச் சுற்றிலும் உள்ள மனிதர்களை கவனிப்பதை நிறுத்தவில்லை.
ஆனால் அதை எழுத்தாக்க நேரம் அமையவில்லை.

                                                               ---------------------------

சமீப காலமாக முகப்பு நூலை அதிகம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கின்றது.  இது தவிர கூகுள் ப்ளஸ்.  

இரண்டிலும் நடக்கும் கூத்துக்களை கவனிக்கும் போது கீழே வினவு தளத்தில் ஐந்தாம் ஆண்டு தொடக்க கட்டுரை வரிகள் தான் பொருத்தமாக இருக்கிறது.

"வினவின் ஆரம்ப வருடங்களிலேயே காத்திரமாக எழுதக்கூடிய பதிவர்கள் கொஞ்சம்தான் இருந்தனர். தற்போது பலர் பதிவுகளை எழுதுவதில்லை. முன்னாள் பதிவர்களும், இலக்கிய குருஜிக்களும், கூகிள் ப்ளசிலும், ட்விட்டரிலும் ‘அறிவார்ந்த அரட்டை’ என்ற பெயரில் ஒதுங்கி விட்டனர். அதிலும் பழையவர்கள் மெல்ல மெல்ல ஓய்வு பெற்றுக் கொள்ள, அவர்களது அடியொற்றியபடியே புதியவர்கள் ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள். அரசியலும், இலக்கியமும், திரைப்படமும் சென்சேஷன் தரத்திலேயே பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.

இடைக்காலத்தில் சூடுபிடித்த முகநூல் – ஃபேஸ்புக் அறிவுஜீவிகளுக்கும் கருத்துரிமையாளர்களுக்கும் கருத்தாழமற்ற உரையாடலை கற்றுக் கொடுத்து ஏதோ கொஞ்சம் வாழ வைக்கின்றது. முகநூலில் நான்கு வரியில் பகிறப்படும் நிலைச்செய்தியினைத் தாண்டி வாசிப்பதற்கு விருப்பமற்ற மனங்களோடு அவர்கள் காலந்த தள்ள வேண்டிய நிலையில் வினவு அப்படி மாறியோ, சோர்ந்தோ வீழ்ந்து விடவில்லை. அரசியலை மேலும் மேலும் ஆழமாக கற்றுக் கொள்ளும் நெடிய கட்டுரைகளோ, நீண்ட விவாதங்களோ வினவில் மட்டும்தான் அரங்கேறுகின்றன.

ட்விட்டரிலும், முகநூலிலும் அறிமுகமாகி அரசியல் ஆர்வத்தோடு தேடி வரும் நண்பர்களை நாங்கள் வினவு தளத்திற்குள் அழைத்துச் செல்கிறோம். வாசகரையும் வாசிப்பையும் உயர்த்துதல் எங்களது நோக்கமாக இருக்கிறது. ஆனால் பின்நவீனத்துவ அறிஞர்கள், இலக்கியவாதிகள், சிறுபத்திரிகைகாரர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சி ஆர்வலர்கள் அனைவரும் தங்களது ‘அறிவார்ந்த’ படைப்புகளை ஆளில்லாத டீக்கடையில் ஆறவிட்டுவிட்டு சூடான பாப்கார்ன் கடையில் வார்த்தைகளை கொறித்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுவான வாசக வெளிக்கு பாப்கார்னே போதுமானது என்றாகி விட்டது".
                                                                          -----------------

புதுக்கோட்டை ஞானலயா என்ற தனிநபரால் நிர்வகிக்கப்படும் ஒரு நூலகத்திற்காக நண்பர்களுடன் சேர்ந்து சில முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டுருக்கின்றோம்.  அது குறித்து 4 தமிழ்மீடியா தளத்தில் வெளியான கட்டுரை இது.  

இது தொடர்பாக ஒரு நீண்ட பயணம் தொடங்க வேண்டியிருக்கிறது.  நிதி உதவி என்பதைத்தாண்டி தமிழ் என்பதை கணினியுகத்திற்கு தகுந்தாற்போல இன்னும் மேம்படுத்த வேண்டிய விசயங்களில் மென்பொருள் துறை சார்ந்த நண்பர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்.  

அது குறித்து அடுத்த பதிவில்.......
 

மூன்றாம் ஆண்டு கட்டுரை

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

என்னைப் பொறுத்தவரை... ப்ளாக்-பதிவு-etc,,etc.,-எல்லாம்-வாழ்வில் மிகச் சிறிய பகுதி...
நம் மனதிற்கு பிடித்த புத்தகங்கள் படிப்பதே நன்று...
நன்றி நண்பரே...

Rathnavel Natarajan said...

அருமை.
நன்றி.

நிகழ்காலத்தில்... said...

தமிழ் என்பதை கணினியுகத்திற்கு தகுந்தாற்போல இன்னும் மேம்படுத்த வேண்டிய விசயங்களில் மென்பொருள் துறை சார்ந்த நண்பர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம். //

தமிழுக்குச் செய்ய வேண்டிய கடமையாக ஓசிஆர் பணி இருக்கிறது. பல நண்பர்களும் இப்போது ஒன்று கூடி இயங்க வேண்டியது காலதேவனின் கணக்கு...கூடி இயங்குவோம் ஜோதிஜி.,

வாழ்த்துகள்...

துளசி கோபால் said...

இனிய வாழ்த்து(க்)கள் ஜோதிஜி!

பணம் துரத்திப் பறவை என்ற சொற்கள் .... அருமை!!!!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நல்வாழ்த்துக்கள்.

எஸ்.கே said...

வாழ்த்துகளும் வணக்கங்களும்....

//தமிழ் என்பதை கணினியுகத்திற்கு தகுந்தாற்போல இன்னும் மேம்படுத்த வேண்டிய விசயங்களில் மென்பொருள் துறை சார்ந்த நண்பர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்.//
என்னால் இயன்றவைகளை செய்ய நானும் ஆவலாய் இருக்கின்றேன்...

cms said...

please write at least weekly.

ஜோதிஜி said...

சி எம் எஸ்

நிச்சயம் எழுதுகின்றேன்.

எஸ் கே.. உங்கள் அக்கறைக்கு நன்றி.

வாங்க வழக்கறிஞரே.

டீச்சர் பணம் துரத்திப் பறவைகள் பழகிய வார்த்தை தானே? இந்த சுட்டியைப் பாருங்க

http://deviyar-illam.blogspot.in/2010/08/blog-post_10.html

ஒரு ஆக்கபூர்வமான விசயத்திற்கு என்னை அழைத்துச் சென்ற சிவா உங்களுக்கு எனது நன்றி.

வாங்க ரத்னவேல். தொடர் வாசிப்பு மற்றும் உங்கள் உளப்பூர்வமான அக்கறைக்கு மிக்க நன்றி.

விடாமல் என்னை துரத்தும் தனபால் உங்களுக்கு மிக்க நன்றி.