நண்பர்களே நலம் தானே?
எப்போதும் போல இணையத்தை விட்டு வெளியே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றேன். ஆனால் இம் முறை வேடிக்கை பார்க்க கூட முடியாமல்,. மொத்தமாக எட்டிப் பார்க்க கூட முடியாமல் கடுமையான வேலைப்பளூவில் பயணித்துக் கொண்டு இருக்கேன்.
இப்போது எனக்கு கிடைத்துக் கொண்டு இருக்கும் அனுபவங்களை ஏதோவொரு சமயத்தில் எழுத வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகின்றேன்.
சில மாதங்களுக்கு முன்பு கிழக்குப் பதிப்பகத்தில் இருந்து திரு. மருதன்
"நாங்கள் புதிய பத்திரிக்கை ஒன்று தொடங்கப் போகின்றோம் ஒரு கட்டுரை ஒன்று வேண்டும்" என்று சொல்ல பெட்ரோல் குறித்து எழுதி கொடுத்து இருந்தேன் தற்போது கிழக்குப் பதிப்பகத்தில் இருந்து "ஆழம்" என்ற பெயரில் மாத (தற்போதைக்கு) வெளி வந்துள்ளது.
இந்த பெட்ரோல் குறித்த முழுமையான கட்டுரையை இரண்டு பகுதியாக அடுத்து வெளியிடுகின்றேன்.
இது குறித்து கிடைத்த கொஞ்சூண்டு நேரத்தில் கூகுள் ப்ள்ஸ் ல் எழுதியது.
"கிழக்கு பதிப்பகம்" சார்பாக "ஆழம்" என்றொரு புதிய இதழ் வந்துள்ளது.
ஏறக்குறைய புதிய தலைமுறை வார இதழ் போலவே. ஆனால் ஆழம் மாத இதழாக வரும் என்று நினைக்கின்றேன். ஆண்டு சந்தா ரூபாய் 300. இந்த தனி இதழின் விலை இன்னும் போடவில்லை. அடுத்த மாதம் வரும் இதழ் கடைகளுக்கு வருமென்று நினைக்கின்றேன். பொறுப்பாசிரியர் மருதன் தலைமையில் அட்டகாசமான வடிவமைப்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் அதைவிட தரமான காகிதம், நேர்த்தியான முறையில் 80 பக்கங்கள் என்று பக்காவான வடிவமைப்பில் வந்துள்ளது.
இது பிப்ரவரி மாத முதல் இதழ். கடைக்கு வந்து இருக்காது என்று நினைக்கின்றேன். தனிப்பட்ட நபர்களுக்கு அனுப்பி உள்ளார்கள். எனக்கும் மருதன் அனுப்பி உள்ளார். காரணம் ஏற்கனவே மருதன் என்னிடம் எழுதி வாங்கிய "ஊரெல்லாம் பெட்ரோல் வாசம்" என்ற கட்டுரையும் வெளியாகி உள்ளது. சாயப்பட்டறை பிரச்சனை குறித்து "புதிய தலைமுறை" அட்டைப்பட் கட்டுரைக்குப் பிறகு இரண்டாவது முறையாக வெகுஜன ஊடகத்தில் பெட்ரோல் விலைவாசிக்கு பின்னால் உள்ள விசயங்களை எழுத வாய்ப்பளித்த நண்பர் மருதனுக்கு நன்றி. இதே தரத்துடன் இந்த பத்திரிக்கை தொடர்ந்து ஒரு வருடம் வரும் என்றால் நிச்சயம் நல்ல எதிர்காலம் உண்டு. பத்ரி என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை?
இப்போது மின் தடை காரணமாக பெரும்பாலும் இருட்டு வாழ்க்கை வாழ பழக வாய்ப்பளித்த அதிமுக அரசாங்கத்திற்கு ஒரு வகையில் நன்றி. காரணம் பெண்களை நெடுந்தொடர் போதையில் இருந்த காப்பாற்றியதைப் போல இணையத்தின் பக்கமே போகாதே என்று சொல்லியுள்ள ஆத்தாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஆழம் பக்கங்களை வலையேற்றுவதற்குள் எத்தனை முறை மின் தடை வருமோ என்று கணினி பக்கமே வர பயமாக உள்ளது.
18 comments:
ஜோதிஜி,
ஆழ்ந்த தரவுகளுடன் கட்டுரைகளைத் தரும் உங்கள் படைப்பு வெகுஜன பத்திரிக்கைகளில் வெளிவருவது பெருமகிழ்ச்சி!
மின்வெட்டைச் சுட்டியும் ஒரு ’ஆப்பு’ கட்டுரை எழுதுங்களேன், ப்ளீஸ்!
வணக்கம்! தகவலுக்கு நன்றி! தொடர்ந்து
எழுதவும்!
இனிய பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
நல்ல ஆழமா ஆராய்ச்சியில் இறங்கிட்டீங்கபோல!!!!!
வாழ்த்துக்கள் அண்ணே...
Arumai. COngrats !
ஆழம் ஆலமரம் போல் வேரூன்ற என்னுடைய வாழ்த்துக்களும் !!!
வாழ்துக்கள் ஜோதிஜி. நீங்கள் மேன்மேலும் பல படைப்புகளை படைக்க எல்லாம் வல்ல இறைவன் அருள வேண்டுகிறேன்.
வாழ்த்துக்கள் நண்பரே !
கட்டுரையாளருக்கான தகுதி உங்களிடம் நிறையவே இருக்கிறது.இணையம் கடந்தும் நடை போட வாழ்த்துக்கள் ஜோதிஜி!
வாழ்த்துகள் தலைவரே !!!
மனப்பூர்வ் வாழ்த்துகள்.
சத்ரியன்
நீண்ட நாளைக்குப் பிறகென்றாலும் உங்களின் முதல் விமர்சனத்திற்கும் பாராட்டுரைக்கும் நன்றி.
மிக்க நன்றி தமிழ் இளங்கோ.
டீச்சர் உண்மைதான். சற்று ஆழமான கட்டுரை தான். ஆனால் நம்ம வவ்வால் போன்றவர்கள் அடுத்து வலையேற்ற போவதை பார்த்து விட்டு நிச்சயம் கவர்ச்சி ச்சீ என்று சொல்வார்கள் என்றே நினைக்கின்றேன். காரணம் இது போன்ற விசயங்களை படிப்பவர்களை தொந்தரவு படுத்தாமல் இருக்க இயல்பாக எழுதியதில் நான்கில் ஒரு பங்கே பத்திரிக்கையில் வந்துள்ளது.
நன்றி செந்தில்.
மோகன் மிக்க நன்றி. உங்கள் பார்வை என் மேல் எப்போதும் உண்டு என்பதை பல சமயம் புரிந்துள்ளேன்.
சுரேஷ் உங்கள் வேலைப்பளூவில் டாண் என்று வந்து உள்ளே வந்துட்டீங்க. பலே......
மணி உங்கள் தொடர் உற்சாகத்திற்கும் அன்புக்கும் மிக்க நன்றி.
நன்றி தனபாலன். நான் தொடக்கத்தில் வலையுலகமே கதியென்று இருந்தது போலவே விடாமல் சூறாவளியாக இருக்கீங்க. நிச்சயம் நீங்களும் மேலேறி வர வாழ்த்துகள்.
நடாஜி உங்கள் வார்த்தைகளை ஒரு சிறிய அங்கீகாரமாக எடுத்துக் கொள்கின்றேன். அதற்கான தகுதியை உருவாக்கிக் கொள்ள முயற்சிக்கின்றேன்.
ரவி ஆசச்ரியமாக இருக்கிறது. விடாமல் தொடரும் உங்கள் அக்கறைக்கு நன்றி.
வணக்கம் ரத்னவேல். நிறைய பயன் உள்ள செய்திகளை தொடர்ந்து தந்து கொண்டு இருக்கீங்க. தொடர வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள். மின்தடை பற்றிய கட்டுரையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.......
தகவலுக்கு நன்றி! வாழ்த்துகள்!
Nice Blog
Just read...thanks
வாழ்த்துகள் ஐயா..! கிழக்குவின் 'ஆழம்' புதிய இதழை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி!
SIR
CONGRATS FOR NEW STEP.
DON'T STOP WRITING. I AM YOUR FAN
KARUNAKARAN
CHENNAI
நன்றி கருணாகரன்
நிச்சயம் தொடர்ந்து எழுதுவேன். ஒவ்வொரு கால கட்டத்திலும் வாழ்க்கையின் பாதை வெவ்வேறு சூழ்நிலையில் பயணிக்க வேண்டிய நிலையில் இருப்பதால் இந்த பயணங்கள் ஒரு சமயத்தில் எழுத்தாக வரும். அது வரையிலும் பொறுமையாக இருப்பது என் வழக்கம்.
நன்றி பழனி.ஊரான், செந்தில்குமார்.
Post a Comment