நாளைக்கு வருகிற இரவு தான் இந்த வருடத்தின் கடைசி நாளாம். போன வருசம் இந்த நாளில் நாம் என்ன எழுதினோம் என்று போய் பார்த்தால் ஈழத்தை வைத்து அரசியல் வகுப்பு எடுத்ததை புரிந்து கொண்டு பொத்துனாப்ல அப்படியே திரும்பி வந்துட்டேன்.
அந்தச் சூடு குறைய இரண்டு மாதம் ஓய்வு எடுத்து கொஞ்ச நாள் எந்த புத்தகத்தையும் படிக்காம இருந்தேன். இப்பத்தான் புத்தக வேலைக்காக மறுபடியும் உள்ளே கொஞ்ச கொஞ்சமா மூழ்கிக்கிட்டு இருக்கேன்.
இந்த மாய உலகத்திலிருந்து விடுபட்டு வந்தும் இன்னமும் இந்த தேவியர் இல்ல வண்டி அச்சு உடையாம ஓடிக்கிட்டே தான் இருக்கு.
இந்த வருடம் முழுக்க உத்தேசமாக இரண்டு நாளைக்கு ஒரு பதிவு என்கிற ரீதியில் போட்டு தாக்கியிருப்பதை கறம்பக்குடி கணக்குபுள்ள இப்பத்தான் கூப்பிட்டுச் சொல்ல ஒரு ஓரமாய் துடிதுடியாய் துடித்துக் கொண்டுருக்கிறார். பூமிப் பந்தில் அந்தப்பக்கம் இருந்து கொண்டு இந்த காட்டுப் பயபுள்ள என்னோட தூக்கத்தையெல்லாம் கெடுத்துகிட்டு இருக்காரு.
இந்த வருடம் முழுக்க ஒரே மண்டைச் சூடு. இந்த சூட்டைத் தணிக்கவே இந்த படங்கள்????????????????
ஈழம், பிரபாகரன்,திருப்பூர், சாயம், மாயம், காம்ம், ஊரு, வெவசாயம், அந்நியச்செலவாணி, நம்ம அரசியலில் உள்ள களவாணிப் பயலுக , நித்தி, டாலர், தொடர்கதை என்று ஓட்டமாய் ஓடிவந்து மூச்சுவாங்கி இன்று இந்த வருடத்தின் கடைசி நாளுக்கு முந்தைய நாளில் நுரை கக்கிப் போய் நிற்பது புரிகின்றது.
குழந்தைகளுக்கு பள்ளிக்கூட விடுமுறை மாதிரி இந்த பதிவுலக தொடர்புகளில் இருந்து இடையே இரண்டு மாத விடுமுறை கொடுத்து மாயப்பித்தையும் போக்கிக் கொண்டாகிவிட்டது.
கடைசியாக இந்த வருடத்தில் மறக்கமுடியாத அனுபவம் தமிழ்மணம் நட்சத்திர வாரம். கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஏதோ கொஞ்சம் பரவாயில்லப்பா என்று சென்னைத்தங்கம் சொன்னதாக இன்று மாலையில் உரையாடிய தம்பி சொன்னார்.
தலைப்பைப் பார்த்து வெறியோட வந்தவுங்க அப்படியே ஓரமா உட்காருங்க. ஊரு, ஓலகம், நல்லது கெட்டது, பதவிய வச்சு திருட்டுத்தனம் செய்றவுங்க, எந்தலைவர், உன்னோட தலைவர் என்று கூறுகட்டி நிக்குறவுக, திருந்துங்கப்பான்னு சொல்றவுக என்று எந்த பாரபட்சம் பார்க்காமல் இந்த படத்தையும் நம்ம வசனத்தை ஒரு கைதியின் டைரிகுறிப்பா மனசுல வச்சுக்கிட்டு தூக்கி வந்த அறுவாளை அப்படி ஓரமா வச்சுட்டு படிச்சுட்டு நகர்ந்து போயிடுங்க.
அடுத்தவுக எப்படிங்றத விட நாம எப்படி இருக்குறோம்? தமிழ்மண ஓட்டுக்கு அடிச்சுகிட்டு இருக்றோம்? தேர்தலில் ஒவ்வொரு தடவையும் ஓட்டு போடுறோமான்னு மனசுக்குள் கேட்டுட்டு எப்போதும் போல கூகுள் பஸ்ஸில் கும்மியடிப்போம்.
நாம நல்லாயிருந்தா தானே இன்னைக்கு விக்கிற கிலோ 52 ரூபாய் தக்காளியை வாங்கி ரசமாவது செஞ்சு சாப்பிட சத்து வேணும்ல?
அதனால நம்ம நித்திக்கிட்ட போய் சக்தியைக் கொடுப்பான்னு கேட்காம இந்த படத்தை படத்தைப் பார்த்து இழந்த சக்தியை எடுத்துக் கொள்வோம்.
எனக்கு இந்த படங்களை அனுப்பி வைத்த கோவையில் வாழ்ந்து கொண்டு என்னையும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டுருக்கும் மோகன் தாஸ் கரம் காந்தி என்று நான் ஆச்சரியப்பட்டுக் கொண்டுருக்கும் சி செந்தில் குமார் அவர்களுக்கு (அவருக்கு நான் எழுதிக் கொண்டுருப்பது இநத் நிமிடம் வரைக்கும் தெரியாது) நன்றி சொல்லி படம் பார்க்க அழைக்கின்றேன்.
மூன்றெழுத்தில் என் மூச்சு இருக்கும் என்ற பாட்டு உங்களுக்கு தெரியும்தானே?
அவர் பாடும் போது எதை நினைச்சுக்கிட்டு பாடுனாரோ தெரியல? ஆனால் இந்த மூன்று எழுத்து என்ன சொல்லுதுன்னு பாத்தீகளா?
சீக்கிரம் தமிழ்நாட்டில் தேர்தல் வரப்போகுது. இவங்க சொல்ற மாதிரி ஏதோவொன்னு மாறுதான்னு பார்ப்போம்?
கடந்து போன ஊழல் விவகாரங்களை மறந்து விட்டு விரலில் மை வச்ச பிறகு கை நீட்டி வாங்குன காசுக்கு வஞ்சகம் பண்ணாம மறக்காம குத்திட்டு திரும்பி பார்க்காம வீட்டுக்கு வந்துடனும்.
சுகி சிவம் தான் ஈழத்தை வைத்தே இந்த நாள் இனிய நாள்ன்னு பாடமே எடுத்து காட்டினாரே?
நாங்க எதையும் யோசிச்சா தானே எழுந்திரிக்க அப்பறம் சொக்கா போட? அப்புறம் எங்கே போய் எதைக் காட்ட?
ஆசிர்வதிக்கப்பட்டவனும (3000 வருடங்களுக்கு முன்பு), கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சபிக்கப்பட்டவனும் இநத் தமிழன் தான்.
தினந்தோறும் காலை தொலைக்காட்சிகளில் சொல்ற ராசிபலன் பார்த்து தான் இந்த குழந்த சொல்ற நம்புற நிலமையில் இருக்கோம்.
ஆனால் இந்தியாவுல மட்டும் அரசியல் கிழடு கட்டைகளுக்குத் தான் கட்டையில போற யோகமே வரமாட்டுது? ஆறு வயது குழந்தை போல சுறுசுறுப்பாயிருந்து அள்ளி அளளி குமிக்கிறாங்க.
நாங்க யாரையும் எப்போதும் வெறுக்கவே மாட்டோம். சீமான் சொன்னதுக்கு உள்ளே தூக்கி போட்டாக. இங்கு ஒரு சிங்களப் பயபுள்ள 2,50,000 (இரண்டரை லட்சம்) ஒரு மாச சம்பளம் வாங்கும் அளவுக்கு நாங்க சொதந்திரம் கொடுத்து வச்சுருக்கோம்.
வேற என்ன பண்றது? நமக்கு நாமே சந்தோஷம் கொடுத்துக் கொள்ளத்தானே அய்யா டாஸ்மார்க் தொறந்து வச்சுருக்காரு?
தமிழ்மண 2010 போட்டியில கலந்து இருக்கியளா? காய்ச்சல், தலைவலி எது வந்தாலும் மறக்காம எல்லா பதிவுக்குள்ளும் போயிட்டு வாங்க. டச் இருந்தாத்தான் ஓட்டு கிடைக்கும்.
குட்டிப்பயபுள்ள அல்ஜீப்ரா போட்டு இருட்டுக்குள்ள நிக்க பெரிய பயபுள்ள தப்பி பிழைத்து வெளிச்சத்துக்கு போயிட்டாரு பாத்தீயளா? இதுக்குத் தான் அனுபவமே ஆசிரியர் படிக்கோனும்.
நம்ம சென்னிமலை செந்தில் குமார் சொன்னபடி ஒரு ஓட்டு கூட விழாட்டி பலான பட விமர்சனத்தில் இறங்கிட வேண்டியது தான்.
பள்ளிக்கூட விடுமுறையில இங்கே புள்ளகுட்டிக படுத்துற பாட்டுல நானும் இப்படித்தான் ஒரு ஓரமா உட்கார்ந்துகிட்டு துன்பம் வரும் வேளையிலே சிரிங்கன்னு சிரிச்சுக்கிட்டுருக்கேன். ஏன் பொஞ்சாதிக்கு மட்டும் இது போன்ற விசயங்கள் புரியமாட்டுது?
ஏற்கனவே தான் இது போல தொங்க விட்டு தவிக்க விட்டு பார்த்துக்கிட்டு தானே இருக்காங்க? தலைகீழா தொங்கும் போது கடன்காரனுங்க பயந்து போயிடறதும் நல்லாத்தான் இருக்கு.
பத்து நிமிசமா? தினந்தோறும் பொஞ்சாதி பக்கத்தில் வந்து அமருமே போது பல மணிநேரம் இப்படித்தான் பொழப்பு ஓடுது.
என்னைப் பற்றி யோசித்தே இன்னமும் நான் யார்ன்னு கண்டுபிடிக்க முடியல? அப்பறம் எங்கே போய் மத்தவுகள பத்தி யோசிக்க?
அப்துல் கலாம் என்ன சாதித்தாரோ இத மட்டும் கத்துக் கொடுத்துட்டு போயிட்டாரு. ஆனா நம்ம பயபுள்ளைங்க கனவ மட்டும் கண்டுகிட்டு தூக்கத்தில் இருந்து எழுந்தா தானே?
இந்த பிரச்சனைக்காகவே வீட்டுக்காரம்மாவோட எப்போதும் இலவசமா பேசுற சிம்கார்ட்டை அலைபேசி நிறுவனங்கள் கண்டு பிடிச்சு இருப்பாகளே?
அப்படிச் சொல்லனும்னா இந்த வலையுலகத்தில் கொறஞ்சது ஒரு நாளைக்கு 200 பேருக்காவது சொல்லனும்.
நானும் தினமும் நாடார் கடைக்கு மளிகைச் சாமான் வாங்க போயிக்கிட்டே தான் இருக்கேன். இரண்டு வருசம் ஆனாலும் ஒரு மில்லி மீட்டர் சிரிப்புக்கூட அவர் உதடடிலிருந்து பார்க்கவே முடியல?
பின்னூட்டத்தில் உண்மைத்தமிழன் எடுத்த முடிவின்படி இனி அவரும் ரவுடி தான் என்று வரும் 2011 முதல் முரசு (முரசொலியில் அல்ல) அறிவிக்கின்றார் செந்தழல் ரவி.
வயதுக்கு வந்தவர்களுக்கு மட்டும் என்று எழுத எனக்கும் ஆசை தான். ஆனால் அவங்க அனுபவம் எப்படின்னு கேட்டுட்டு அப்பாலிக்கா அந்த சேவையை தொடர வேண்டும்.
இப்படியே காத்திருந்து காத்திருந்து உசுப்பேத்தி உசுப்பேத்தி என்னத்த சொல்ல?
சிவப்பா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்ங்றத யார் சொன்னாங்க?
ஹிட்டு, பிட்டு, பெரபல்யம், சூடான இடுகை, சொறி இடுகை என்று எல்லாவற்றையும் மறப்பதாக இந்த நாளில் உறுதியேற்போம்.
36 comments:
Nice post. photo selection is super
ஹாஹாஹா... இந்த வேலைதான் ரொம்ப சின்சியரா செஞ்சிட்டு இருந்தீரா. பல புகைப்படங்களுக்கு கதை, வச்சனம் நெத்தியில சூடு வைச்ச மாதிரி பத்திகிட்டு எரியும் ரகம்.
பூரா படத்தையும் ஒரே பதிவா போடணும்னு யாருவே வுமக்கு வகுப்பு எடுத்தா... அனுமார் வாலுமாட்டமா நீண்டுகிட்டே போவுது சிரிச்சும் மாலமுடியல!
ஆமா, தூங்க விடாம பண்ணுற அந்த கட்டுபயபுள்ள யாருவே... ;-)
யாரோ யாரையோ copy அடிக்கிற மாஆஆஆஆஆஆஆஆஆதிரி இருக்கே.
"Forgive everyone for everything"-
மெய்யாலுமா? நெசமாலுமா? சாமி சத்தியமாவா?
வருஷ முடிவில் ஒரே தத்துப்பித்து தத்துவமழை. ஆனாலும், யதார்த்தம் சிரிக்கவும் வைக்குது. குறிப்பா தமிழ்மணத்தில் எனக்கு வோட் போடுங்கம்மான்னா போட்டுட்டுப் போறம்.
கலக்கியிருக்கிறீங்க!
நிறைய சொல்லலாம், மீண்டும் வருவேன்.
//பத்து நிமிசமா? தினந்தோறும் பொஞ்சாதி பக்கத்தில் வந்து அமருமே போது பல மணிநேரம் இப்படித்தான் பொழப்பு ஓடுது.//
பெரியவங்க எல்லாரும் இப்படியே பயமுறுத்தறதப் பார்த்தா சின்னப் பசங்க எங்களுக்குப் பயம் அதிகம் ஆகிட்டே வருதே :)
அத்தனையும் ரசனையான படங்கள்... பாராட்டுக்கள்.
சூட்டைத் தணிச்சாச் ங்கோ.
ஈழத்தமிழர் ராஜீவன் வாங்க. கருணாராசு, தாராபுரத்தான் அய்யாஇனிய 2011 புத்தாண்டு வாழ்த்துகள்.
தனசேகர் பயபடக்கூடாது. சீக்கிரம் களத்தில் மன்னிக்வும் குளத்தில் குதித்து சேறு சகதியை தடவிப் பார்க்க உங்களுக்கு இந்த 2011 உதவட்டும். நாங்க மட்டும் கஷ்டப்பட்டுக் கொண்டுருந்தா நல்லாவாயிருக்கும்?
ரதி கடந்து போன் 365 நாட்களுக்கு மெய்யாலும் சத்தியமா நாஞ் செஞ்ச பிரார்த்தனைக்கூட்டம்ன்னு வச்சுக்கலாம். வாங்க. எதிர்பார்ப்புகளுடன்.
அப்புறம் கனடாவிலிருந்து அட்லாண்டாவுக்கு இரு 20 பேர கூட்டிக்கிட்டு போக நீங்க ஒரு ஏற்பாடு செஞ்சே ஆகனும். ஒரு காட்டுப் பயபுள்ளய அடக்க இங்கே ஆள் கிடைக்க மாட்டாறாங்க.
தெகா இருங்க வந்து வச்சுக்கிறேன்.
ரதி 2011 உங்கள் மனதில் உள்ள லட்சியங்கள் நிறைவே 2011 உதவட்டும். தெகா 2011 பஞ்சாயத்து இல்லாத வருஷமா அமைந்து இனிய ஆண்டாக மலரட்டும். சிரிச்சு தானே ஆத்திக்க வேண்டியதாக உள்ளது?????????????????????????????????
நல்ல புகைப்படங்கள், பொறுமையாக தேர்வு செய்து தொகுத்தவிதம் அருமை
படங்களின் கருத்தும் அருமை அதற்க்கு உங்களின் விளக்கமும் நெறைய இடங்களில் சிரிக்க வைத்தது ,தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல வாழ்த்துக்கள் . .
ஹ ஹ...சூட்டை தணிக்க படங்கள்னு...படங்களுக்கு நீங்க கொடுத்த சில கம்மென்ட்ஸ் இல் எக்கச்சக்கமாய் சூரிய வெப்பம் தெரிகிறதே...நடக்கட்டும்..நடக்கட்டும்...:))) படங்கள் எல்லாம் அவளவு அற்புதம் சகோ! burn the candles....quote ரொம்ப ரொம்ப அற்புதம்...அற்புதமான பகிரிவுக்கு நன்றி....புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ..!!!
பதிவு அருமை. இனிய அகிலத்துப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
படங்களும், குறிப்பும் அருமைங்க..
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Nice photos and comments
Happy New Year.
நல்ல தொகுப்பு ... புத்தாண்டு வாழ்த்துக்கள்
வித்தியாசமான பதிவு சார், உங்களுக்கும், குடும்பத்தார்களுக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார் :-)
நீங்களா..போட்டியா..ஹ..ஹஹ..
உங்களுடைய தனித்துவம் உங்களுடைய சிறப்பு அன்பின் ஜோதிஜி.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! வரும் வருடம் பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்!
:-)
நல்லாத்தான் படம் காட்டி இருக்கீங்க :))))
புத்தாண்டு வாழ்த்துக்கள்........
ஒவ்வொரு படதுக்கும் உங்க மைண்ட் வாய்ஸ் அருமை.........
ஜோதிஜி....
நாங்களும் இப்பிடிப்படமெல்லாம் போடுவம்ல !
http://veliyoorkaran.blogspot.com
தத்துவம் ...
படங்களும்,அதற்கான உங்கள் குறிப்புக்களும் அருமை.இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
ஒன்று சேர்
வலைபதிவுகளில் தீ போல் செயல்படவேண்டியவர். உங்களின் வேலைப்பளூவால் பல விசயங்கள் அம்பலத்திற்கு வராமலேயே இருக்கிறது.
சுனில் சிரிக்க வைப்பதற்காக இந்த பதிவை சேர்ந்தெடுத்தேன். பல பேருக்கு போய்ச் சேரவேண்டும் என்பதற்காகவே இந்த தலைப்பு. மக்கள் தலைப்பு பார்த்து தானே உள்ளே வருகிறார்கள். வலைபதிவுகளில் தலைப்பு ரொம்பவே முக்கியம்.
நன்றி ஆனந்தி. புத்தாண்டு வாழ்த்துகள் சகோதரி.
பாண்டிச்சேரி வலைப்பூ
நான் விரும்பி படிக்கும் 4 தமிழ் மீடியா போல உங்கள் சேவையும் கூட அற்புதம்.
இனியவன் உங்கள் எண்ணங்கள் நிறைவேறக்கூடிய ஆண்டாக 2011 அமையட்டும்,
சுரேஷ் சார் மோரெல்லாம் வேண்டாம் நண்பா. வாழ்த்துகள் சுரேஷ்.
வாழ்த்துகள் இளங்கோ.
தவறு
எப்பூடீடீடீடீடீடீடீடீ?
நன்றி எஸ்கே. அப்படியே?? நீங்கள் சொல்லும் மனப்பதிவுகள் தானே வாழ்க்கையின் நிகழ்வுகள்.
கும்மி
குறியோடு நிப்பாட்டீங்க?
ராசா உண்மைதான்.
நன்றி யோகேஷ். இதைத்தான் தவறு தனித்துவம் என்று பெருந்தன்மையாக சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார். வாழ்த்துகள் யோகேஷ். அமெரிக்காவில் கொஞ்சம் தாமதமாகத்தானே இந்த நள்ளிரவு கொண்டாட்டம் வரும்? சரிதானே?
செந்தில்
தத்து வள் வள் வள். சரிதானே?
சென்னைபித்தன்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
ஹேமா
ரதி கூட இப்பத்தான் எழுத ஆரம்பித்துள்ளார். ஆனால் நீங்க தமிழ்மண 100க்குள் வருவீர்கள் என்று நினைத்து இருந்தேன். பதிவு போட்ட சில நிமிடங்களில் வந்து குவியும் பின்னோட்டத்தை வைத்தேன் யூகித்து இருந்தேன். எனக்கு ஏமாற்றம் தான்.
ஒரு வேளை நான் சரியா கவனிக்கவில்லையோ?
வித்யா சுப்ரமணியம்
உங்களின் வாழ்த்துகளையும் என்னைப் பற்றி தங்கள் பதிவில் எழுதிய பெருந்தன்மைக்கும் இந்த வருட முதல் நாளில் இங்க பதில் அளிப்பதன் மூலம் மிகுந்த மகிழ்வாய் உணர்கின்றேன்.
தேவியர் இல்லம் திருப்பூர் புகைப்பட பின்னனி கவரவில்லை அன்பின் ஜோதிஜி.
நல்ல தொகுப்பு ... புத்தாண்டு வாழ்த்துக்கள்
ஜோதிஜி, தமிழ்மண முதல் நூறிலுள்ள ஐந்தில் ஓர் இடம் உங்களின் தளத்திற்குரிய, சமூக அக்கறையுள்ள எழுத்துக்குரிய அங்கீகாரமாக இருக்கும் என்று நினைத்தேன், ஏமாந்தேன். 49 வது இடம்???
தலைவரே நான் அழிக்க சொன்னதை அப்படியே விட்டுட்டீங்க!... அப்படியே இதையும் அழிச்சிடுங்க... :-)
Post a Comment