Friday, October 01, 2010

எங்கே முமு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நெருங்கிய சகாவாக இருந்த முத்து விஜயன் என்ற நிலகிழாருக்கு மகனாக இருந்த முருகேசன் தான் தன்னுடைய பத்திரிக்கை உலக வாழ்க்கையின் தொடக்கத்தில் தான் முத்து முருகேசனாக மாறினார். இராமநாதபுர மாவட்டத்தில் அபிராமம் அருகே உள்ள நகரத்தார் குறிச்சி என்ற கிராமமே இவருடைய பிறந்த ஊர்.  இது பசும்பொன் அருகே இரண்டு மைல் தொலைவில் உள்ளது.

சொந்த ஊரில் இவர்களுக்குச் சொந்த நிலமென்பது காலஞ்சென்ற கருப்பையா மூப்பனார் வைத்திருந்ததைப் போலவே சற்று பொறாமை படக்கூடிய அளவில் இருந்தது.

ஆதிக்கக்காரர்களுக்கு மகனாக பிறந்தாலும் சிறுவயதில் குடும்பத்திற்கு சம்மந்தம் இல்லாத பல வித தேடல்கள் இயல்பாகவே உருவாகி இருக்க அதுவே. பள்ளிப் படிப்போடு காடு மலை வனாந்திரம் என்று சுற்ற வைத்தது. அப்பாவின் கவலை அதிகமானது. இதற்கு மேல் குடும்பத்திற்கு ஆதாரமான அறிவுரை சொல்லும் இடத்தில் இருந்தவர்கள் இவரைப் பற்றி எதிர்கால கணிப்பு என்று சொன்ன பல விசயங்களை கவனித்து இவர் மேல் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

இருந்த சொத்துக்கள் ஒவ்வொன்றும் அப்பாவின் இறப்புக்குப் பின்பு ஒவ்வொருவரும் கைப்பற்றி கடைசியில் ஒரு பிடி மண் நிலம் கூட இல்லாத வாழ்க்கையில் தான் மதுரை வந்து சேர்ந்து இருந்தார். சகோதர்கள் மற்றும் சார்ந்த உறவினர்கள் அத்தனை பேர்களும் சலிப்பாய் பார்க்க எப்போதும் போலவே நூலகமே வாழ்க்கையாக மாறி விட்டது.  எதிர்க்க வேண்டும் தன்னுடைய உரிமைகளைப் பெற வேண்டும் என்று எண்ணத் தோன்றாமல் எப்போதும் போல புத்தக வாழ்க்கையில் மூழ்கிப் போயிருந்தார்.

குடும்பம் குழந்தைகள் உருவான போது கூட புலனுக்கு விளங்காத அத்தனை விசயங்களிலும் கவனம் செலுத்திக் கொண்டுருந்தவர் கடைசி வரைக்கும் குடும்பத்தின் மேல் எந்த அக்கறையும் செலுத்தவில்லை.

காரணம் நண்பர் வீட்டில் திடீர் என்று பார்த்த பண்டிட் சேதுராமன் எழுதிய அதிர்ஷ் விஞ்ஞானம் என்ற எண் கணிதம் குறித்த புத்தகம் கண்களுக்கு தென்பட அது குறித்து ஆராய்ச்சியை சேர்த்துக் கொண்டு அலைய ஆரம்பித்தார்.

மேலே சொன்ன தேடல்கள் அத்தனைக்கும் ஒரு முக்கிய காரணம் ஒன்று உண்டு.

இவரின் தாய்வழி பாட்டன் பரம்பரையைச் சார்ந்த அத்தனை பேர்களும் இலங்கையில் வாழ்ந்தவர்கள்.  ஒவ்வொருவரும் லண்டன் பல்கலை கழகத்தில் படித்து பட்டம் பெற்று மலையகப் பிரதேசத்தில் ஒவ்வொருவரும் ஆயிரம் ஏக்கர்களுக்கு மேற்பட்ட எஸ்டேட் ஆள் அம்பு சேனைகள் அதிகாரங்கள் அதற்கும் மேலாக ஆங்கியேர்களின் ஆட்சியில் உயர்ந்த இடத்தில் இருந்த பதவிகள்.  அவர்கள் வாழ்ந்த கண்ணாடி மாளிகை வாழ்க்கையும், பொறாமைப்படக்கூடிய திரைப்பட சமாச்சாரம் போல் இருந்த அன்றாட நிகழ்வுகளுக்கு ஒரு நாள் முடிவு வந்தது.

1962 ல் மிஞ்சியிருந்த உயிரை கையில் பிடித்துக்கொண்டு மானாமதுரைக்கு வந்து சேர பயணச்சீட்டுக்கு வழியில்லாமல் வந்து நின்ற வாழ்க்கை இவரின் மொத்த சிந்தனைகளை யையும் அப்போது தான் மாற்றியது.  அதன் பிறகு அரை குறையாய் தேடிக் கொண்டுருந்த தேடல்களை வாழ்க்கையில் முதன்மையாக எடுத்துக் கொள்ளத் தொடங்கினார்.

அவர்களைப் பற்றிய ஜாதக ஆராய்ச்சி முதல் ஒவ்வொரு கால கட்டத்தில் நடந்த நிகழ்வுகளையும் கோர்த்து தன்னுடைய அன்றாட கடமைகளில் ஒன்றாக வைத்துக் கொண்டு மறுபடியும் அலையத் தொடங்கினார்.  உறவினர்கள் பெற்ற துன்பங்கள் முதல் ஒவ்வொரு காலகட்டத்திலும் வந்து இறங்கிக் கொண்டுருக்கும் இலங்கை மக்களை சந்திக்க வேண்டும் என்று ஆவல் உருவாக இயல்பாகவே மண்டப முகாமிற்கு செல்வதும், தன்னுடைய ஊருக்கு அருகே இலங்கை சார்ந்த எவராவது வந்தால் அவர்களைப் பற்றி விசாரிப்பதும் என்று ஒவ்வொருவரின் துன்பங்களையும் உள்வாங்க ஆரம்பித்தார்.

அப்போது தான் இலங்கைக்குள் இருந்த தமிழர்களின் வேறுபாடுகள், பழக்க வழக்கங்கள், ஜாதி ரீதியான தாக்கம், பொருளாதார ரீதியான மனோபாவம், மலையகத் தமிழர்களின் தவிப்பான வாழ்க்கை என்று ஒவ்வொன்றாக புரிபடத் தொடங்கியது..  ஒரு மனிதன் எந்த சூழ்நிலையில் எவ்வாறு வாழ்கிறான்? எப்படி மாறுகின்றான்? எது மாற்றுகிறதுஆரம்பம் என்ன? முடிவு என்ன? ஏன்? எதற்கு? இது போன்ற கேள்விகளை சுமந்து கொண்டு எவரையும் பொருட்படுத்தாமல் நண்பர்கள் உதவியுடன் வாழ்ந்து கொண்டுருந்தவரின் வாழ்க்கையில் வேறொரு மனிதர் அறிமுகம் ஆகின்றார்.

1973

முத்து முருகேசனின் மற்றொரு பொழுது போக்கு நாள் முழுக்க புத்தகங்கள் படித்துக் கொண்டுருப்பது.  படித்த ஆங்கில தமிழ் புததகங்கள் குறித்து அதன் விமர்சனத்தை சம்மந்தப்பட்டவர்களுக்கு கடிதம் வாயிலாக தெரியப்படுத்துவது.

அப்போது இவர் படித்துக் கொண்டுருந்த பல புத்தகங்களில் ஒன்று காஷ்மீர் பிரச்சனைகள் குறித்த ஒரு புத்தகம்.( Chesterbowles அமெரிக்க அதிபர் கென்னடி அரசாங்கத்தில் வெளி விவகார அமைச்சராக இருநத்வர்). படித்து முடித்த பிறகு நூலாசிரியருக்கு காரசாரமாய் எழுதிய விமர்சனத்தில் தான் மாற்றிக் கொண்ட முத்து முருகேசன் என்ற பெயரை வைத்துக் கொள்ளத் தொடங்க நூலாசிரியரிடமிருந்து மிகப் பெரிய பண்டல் போல் புத்தக மூட்டையும் அன்பளிப்பும் கடிதமும் வந்து சேர்ந்தது.

இப்போது உள் அமைச்சராக இருக்கும் ப.சிதம்பரம் தொடக்க கால ஆலோசகர் வீ திருநாவுக்கரசு அப்போது தமிழ்நாடு அரசாங்கத்தில் மக்கள் செய்தி தொடர்பு துறையில் முக்கிய பதவியில் வகித்தவர். பின்னால் தூதர்ஷன் இயக்குநராக பணியாற்றியவர். அப்போது அறிமுகம் ஆக உங்கள் திறமை நாட்டுக்குத் தேவை என்று சொல்லாமல் கொண்டு போய் சேர்த்த இடம் கலைஞர் மு.கருணாநிதி அவர்களிடம். அப்போது இவருக்கு வயது 36.

1973 ல் கலைஞர் தமிழ் முரசு என்ற பத்திரிக்கையை மதுரையில் ஆரம்பிக்க மற்றொரு முக்கிய காரணம் இன்றைய உரத்துறை அமைச்சர்.(?)

வீ. திருநாவுக்கரசு இவரை அழைத்துக் கொண்டு தல்லாகுளம் பெருமாள் கோவில் அருகே இருந்த அலுவலகத்திற்குச் சென்றார். அங்கே கலைஞருடன் இருந்தவர் காலஞ்சென்ற திரு. தென்னரசு. கலைஞருக்கு வலதுகரமாக செயல்பட்டுக் கொண்டு இருந்தவர்.

முத்து முருகேசன் எப்போதும் வெளியே சென்றாலும் நெற்றி நிறைய பட்டை அத்துடன் சந்தனம் கலந்த குங்குமபொட்டு கதர் ஜிப்பா நாலு முழ வேட்டி இத்துடன் ஒரு ஜோல்னா பை. காரணம் காந்தியை தெய்வமாக மதித்தவர். .  நேரு குடும்பத்தின் மேல் அலாதி பிரியம் வைத்து இருந்தவர்.

ஆனால் இப்போது இவர் பார்க்க காத்துக் கொண்டுருப்பது கலைஞர் அவர்களை. 

அங்கே இருந்த மற்றவர்கள் இவரை வினோதமாக பார்க்க எதையும் கண்டு கொள்ளாமல் அமைதியாக அவர்களுக்காக காத்துக் கொண்டுருந்தார். 

இவர் முறை வந்ததும் உள்ளே சென்று திருநாவுக்கரசு அறிமுகம் செய்து வைக்க கலைஞர் இவர் தோற்றத்தை மேலும் கீழும் பார்த்து விட்டு அமைதியாக கவனிக்கத் தொடங்கினார்.

இவரிடம் பேசியது தென்னரசு மட்டுமே. அவர்களின் பகுத்தறிவு கொள்கைகளுக்கும் இவரின் காந்தியவாதிய கொள்கைகளுக்கும் எந்த பெரிதான வாக்குவாதம் உருவாகமல் போனது மிகப் பெரிய ஆச்சரியமே. 

அதிலும் கலைஞர் ஒருவரை கவனிப்பதில் எப்போதுமே தனித் திறமை மிக்கவர்.

கலைஞர் பேசத் தொடங்கி விட்டால் அது முடிவாகத்தான் இருக்கும்.  

தென்னரசு இவருடன் பேசி முடித்த போது " உங்களுக்கு பத்திரிக்கை உலகில் இதுவரைக்கும் எந்த அனுபவமும் இல்லைன்னு சொல்றீங்க.  ஆனால் வேலை கேட்டு வந்து இருக்கீங்க.  எந்த நம்பிக்கையில்?" என்று கேட்க இவர் சொன்ன பதில் "என் தன்னம்பிக்கை அடிப்படையில் அதற்கு மேலும் நான் இப்போது துறை மாறி வேலைச் செயய வேண்டும் என்பது என் விதியின் கட்டாயம்" என்று சொல்ல தென்னரசுவுக்கு அதற்கு மேலும் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

அறிமுகம் செய்தவருக்காக தென்னரசு மீண்டும் "வேறு ஏதும் உங்களுக்கு அனுபவம் இருக்கா?" என்று கேட்க அப்போது தான் அமெரிக்க வெளிவிவகாரத் துறை அமைச்சர் அனுப்பிய அந்த பாராட்டுக் கடிதத்தை அவரிடம் காட்ட அதுவரைக்கும் பேசாமல் இவரையே பார்த்துக் கொண்டுருந்த கலைஞர் அந்த கடிதத்தை வாங்கி பார்த்து விட்டு" எப்போது நீங்க வேலைக்குச் சேர முடியும்?" என்றார். குறிப்பிட்ட காலத்திற்குள் எங்கே முமு கட்டுரை? என்று கலைஞர் கேட்கும் அளவிற்கு இவருடைய கட்டுரைகள் பிரசித்தமாகத் தொடங்கியது.

15 comments:

ப.கந்தசாமி said...

ஒரு நல்ல வாழ்க்கைக்குறிப்பு

துளசி கோபால் said...

கடந்த ரெண்டு பதிவுகளிலும் ( ஏ & எ) இருந்தவை எல்லாமே எனக்கு புதிய விஷயங்கள்.


இணையம் வருமுன் இங்கே உள்நாட்டு நடப்பு ஒன்னுமே தெரியாமல்தான் வாழ்க்கை ஓடிக்கிட்டு இருந்தது.

Unknown said...

படிக்க படிக்க ஆவலாக உள்ளது.இதுவரை அறியாத தகவல்கள்.

http://thavaru.blogspot.com/ said...

எங்கே ஜோதிஜி...? நட்ச்த்திரவாரம் கடுமையாக சிந்திக்க வைத்துவிட்டது போலும்.

எஸ்.கே said...

இது போன்று பலரின் வாழ்க்கை குறிப்புகளை படித்திருக்கிறேன். இவரின் வாழ்க்கை குறிப்பிலும் ஒரு படிப்பினை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்!

Jerry Eshananda said...

போற போக்க பாத்தா இதையும் புத்தகமா போட்டுறலாம் போல...

ராஜ நடராஜன் said...

போன இடுகையில் சொன்ன சந்திப்பை சொல்லாமல் நழுவுறீங்களே!

லெமூரியன்... said...

பிரமிப்பா இருக்கு......
வாழ்க்கை சக்கரம் எப்டிலாம் ஒரு மனிதனின் வாழ்வில் தடம் மாறுகிறது என்பதை நினைக்கும் பொழுது...

Unknown said...

//போற போக்க பாத்தா இதையும் புத்தகமா போட்டுறலாம் போல..//

வழிமொழிகிறேன் ....

ஹேமா said...

தகவல்கள் நிறைந்த நட்சத்திர வாரம் ஜோதிஜி !

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

ஜோதிஜி! திரு.மு.மு அவர்களின் புகைப்படம் தந்தால் கட்டுரை நிறைவாக இருக்கும்.

ஜோதிஜி said...

வணக்கம் கந்தசாமி ஐயா. உங்கள் விமர்சனம் குறித்து மனம் மகிழ்ச்சியடைகிறது.

டீச்சர் நீங்க சொல்வதும் உண்மைதான். இப்போது கூட சேகரித்து வைத்துள்ள பழைய செய்திதாள்களை படிக்கும் போது அத்தனை சுவாரஸ்மாக இருக்கிறது.

நந்தா இன்னும் எத்தனையோ பேர்களின் வாழ்க்கை நமக்கும் தெரியாமலே இருக்கிறது. இவரைப் பற்றி எனக்குத் தெரிந்தகாரணத்தால் இந்த இடுகையில் பகிர்ந்து கொள்ள முடிந்தது.

தவறு

இது குறித்து கடைசி தலைப்பில் தான் மக்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று புரிந்து கொள்ள முடியும்.

எஸ்கே ஒவ்வொருவரின் வாழ்க்கை குறிப்பும் நாம் படித்து முடிக்கும் போது தெரிந்து கொள்வது குறிப்பிட்ட விசயங்கள் மட்டுமல்ல. நாமே அந்த வாழ்க்கை வாழ்ந்த உணர்வு உருவாகும்.

ஆசிரியரே உங்கள் ஆசை பலிக்கட்டும். ஒரு பழைய பத்திரிக்கையாளர்களின் குறிப்புகள் என்று அவரை பேச வைத்து இடுகையில் தொடர் போல எழுத வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. மனுசன் ஒத்துழைக்காமல் ஓடி ஒழிந்து கொண்டு படம் காட்டிக் கொண்டுருக்கிறார். நீங்கள் சொன்னதும் இன்னமும் தீவிரமாய் முயற்சிக்கின்றேன் ஆசிரியரே.

ஜோதிஜி said...

ராஜ நடராஜன்

இது குறித்து கடைசி தலைப்பில் உங்களுக்கு பதில் கிடைக்கலாம்.

நன்றி செந்தில் மற்றும் ஹேமா. கடைசி தலைப்பில் மக்கள் என்ன சொல்லப் போகிறார்களோ?

சாந்தி லெஷ்மணன் முடிந்த வரைக்கும் தேடிப் பார்க்கின்றேன்.

ரோஸ்விக் said...

முமு ஒரு பொக்கிஷமாக இருந்திருக்கிறார். அவர் மூலம் (பற்றி) கிடைத்தவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி.

ஜோதிஜி said...

நன்றி ரோஸ்விக்