Friday, October 01, 2010

ஐய்யோ போச்சே....

1983 -84

27 நிறுவனங்களுக்குச் சொந்தமான ஜேம்ஸ் பெட்ரிக் தான் வெகு நாளாக நினைத்துக் கொண்டுருந்த ஆசையை நிறைவேற்றத் தொடங்கிய போது அவரின் நினைவுக்கு வந்த பெயர் இந்த முமு.  ஆமாம்.  தினசரி என்ற பத்திரிக்கையை தொடங்கி இவரை முக்கிய செய்தியாளராக போட்டு ஆரம்பித்தார்.

அப்போது கர்நாடக மாநிலத்தில் நடந்த நிர்வாண பூஜையை தனி நபராகச் சென்று காவலில் இருந்த ஆயிரக்கணக்கான காவல் துறையினருக்கும் தண்ணீர் காட்டிவிட்டு எதிர்பாரதவிதமாக அவர்களின் வாகனத்திலேயே குறிப்பிட்ட இடத்திற்கு பயணம் செய்து இவர் எழுதிய கட்டுரை அன்று இவரை வேறொரு இடத்திற்கு அழைத்துச் சென்றது. இவரின் பெயர் தனித்தன்மையான தெரிய ஆரம்பித்த காலம் அது.

இலங்கையில் ஜெயவர்த்னே ஆட்சி. இவரின் தனிப்பட்ட தேடல்களும், இலங்கையில் இருந்து வந்து கொண்டுருக்கும் மக்களைப் பற்றி சிறு செய்திகளாக போட்டுக் கொண்டுருப்பதும் அன்றாட கடமையாக இருந்தது.  இவர் எப்போதும் கட்டுரை எழுதத் தொடங்க தேர்ந்தெடுத்துக் கொள்ளும் நேரம் இரவு 10 மணி. குடித்த டீ உற்சாகத்தைக் கொடுக்க அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதிக் கொண்டுருககும் ஒவ்வொரு தாளையும் பிரிண்டரில் இருப்பவர்கள் வந்து எடுத்துக் கொண்டு படித்துக் கொண்டே சென்று சேர்த்து விடுவர்.

அப்போது மண்டப முகாமில் இருந்து வந்த கடிதமொன்று தனது வாழ்க்கையை மறுபடியும் திசை திருப்பி விடப் போகிறது என்பது தெரியாமல் படிக்கத் தொடங்கினார்.  எத்தனையோ விசயங்களைப் பற்றி எழுதிக் கொண்டுருக்கிறீர்கள்? ஏன் எங்கள் பிரச்சனையைப் பற்றி எழுதுவது இல்லை? கடித வரிகள் சுருக்கமாக இருந்தாலும் அப்போது தான் அதுவரைக்கும் தேடலின் விளைவாக சேகரித்த தகவல்கள் ஒவ்வொன்றும் உதவத் தொடங்கியது.

விதி வலியது. மறுநாள் இரவு இரண்டு பேர்கள் சரியான நேரத்தை தெரிந்து கொண்டு இவர் அமர்ந்து இருந்த மேஜைக்கு அருகே வந்து நின்று கொண்டு பேச ஆரம்பித்தனர். வந்தவர்கள் இருவரும் இஸ்லாமிய பெரியவர்கள். முல்லை மார்க்கெட் பிரச்சனையினால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் பேசிய பேச்சகள், காட்டிய ஆதாரங்கள், கண்ணீர் அத்தனையும் இரண்டு நாட்கள் தடுமாற வைக்க கட்டுரை ஆரம்பமானது.

கட்டுரையின் தலைப்பு " இரத்தால் நனையும் தமீழீழ கொள்கை"

இவரிடம் மற்றொரு பிடிவாத குணம் ஒன்று உண்டு. 

பத்திரிக்கை தர்மம் என்பதை அச்சு பிறழாமல் கடைபிடிக்க வேண்டும் என்று நினைப்பவர்.  கூட்டம் முடிந்தவுடன் அரசியல் கட்சிகள் கொடுக்கும் அன்பளிப்புகளைக்கூட வாங்க மாட்டார்.  எவருடனும் பகைமை பாராட்ட மாட்டார்.  ஆனால் தான் நினைத்த கருத்துக்களை அச்சு பிறழாமல் கட்டுரையாக்கி கதிகலங்க வைத்து விடுவார். உடன் பணியாற்றும் மற்ற நிருபர்கள் கூட இவரின் கட்டுரையின் சராம்சத்தை எதிர்பார்த்து இருப்பார்கள்.

இவர் எழுத நினைத்த இரத்தத்தால் நனையும் தமீழழ கொள்கை கட்டுரையின் நோக்கம் இலங்கை என்ற தீவின் தொடக்கத்தை லேசாகத் தொட்டு, முக்கியமாக சமூக வாழ்க்கையில் தொடக்கத்தில் இருந்த தலைவர்கள் செய்யாமல் விட்ட காரியங்களை சுட்டிக் காட்டி விடுதலைப்புலி இயக்கத்தின் வளர்ச்சியையும் அவர்களின் தொடக்க கால விசயங்களையும் தொட ஆரம்பித்த போது அனல் பறக்க ஆரம்பித்தது.  இவரின் நோக்கம் விடுதலைப்புலிகளையும் அவர்களின் நோக்கத்தையும் தவறு என்று சொல்வதை விட ஏன் தவறாக இருக்கிறது என்பதை எதிர்மறை நியாயங்களுடன் பேச ஆரம்பிக்க எதிர்ப்பும் ஆதரவும் ஒன்றாக வரத் தொடங்கியது.  சரியான நேரம் பார்த்து இலங்கையில் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அப்துல் மஜீத் கொல்லப்பட் இயக்கத்தில் இருந்த 800 முஸ்லீம் இளைஞர்கள் வெளியேற ஒவ்வொன்றும் இவரின் கட்டுரைகளை கரை தாண்ட வைத்துக் கொண்டுருந்தது.

தினசரி பத்திரிககைகள் வந்த சில நிமிடங்களில் போதவில்லை என்று ஒவ்வொரு இடங்களிலும் செய்திகள் வந்து கொண்டுருந்தாலும் இவரின் பொருளாதார வாழ்க்கையிலேயோ அல்லது இதை வைத்து காரியம் சாதிக்க வேண்டும் என்ற எண்ணமோ இல்லாமல் எப்போதும் போல அத்துவான காட்டில் பயணிப்பவர் போலவே இவர் அலுவலகத்திற்கு வருவதும் போவதும் எவருக்குமே தெரியாது.  பத்திரிக்கை ஆசிரியர் ரூபனுக்கு இவரின் குணாதிசியங்கள் நன்றாகத் தெரிந்த காரணத்தால் எவரும் எதையும் எளிதாக இவரிடன் வந்து பேசி விட மாட்டார்கள்.

இப்போது மற்றொன்றும் நடந்துகொண்டுருந்தது.  பத்திரிக்கை அடித்து முடித்து டெலிவரி செய்ய வெளியே வேனில் ஏறற வரும் போது ஒரே ஒரு பத்திரிக்கை மட்டும் தனியாக பயணிக்கத் தொடங்கியது.  இந்த விசயமே பின்னாளில் தான் இவருக்குத் தெரிந்தது.

புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டுருப்பவர்களுக்கும், இன்று புத்தகத்தின் வாயிலாக படித்துக் கொண்டுருப்பவர்களுக்கும் ஜெயவர்த்னே குறித்து நன்றாகவே தெரியும். ஆனால் அன்றைய சூழ்நிலையில் அரசியல் ஆதாயத்திற்காக அவர் செய்த பல காரியங்கள் முஸ்லீம் மக்களுக்கு சாதமாகத் தெரிய அதையே வந்தவர்களும் அவரின் அருமை பெருமைகளை புகழ்பாட பலபேரிடம் அதை உறுதிபடுத்திக் கொண்டு எழுத ஆரம்பித்தார்.  

தொடர் போல் வந்து கொண்டுருந்த கட்டுரையின் இப்போதைய தலைப்பு அரசியல் ஞானி ஜெயவர்த்னே.

பகவான் வேடிக்கை பார்த்துக் கொண்டுருந்தவன் இப்போது சோம்பல் முறித்து கண் திறந்த பார்க்க ஒரு நாள் இரவு தொலைபேசியில் அழைப்பு வந்தது.

அழைத்தவர் பழ.நெடுமாறன்.  கொடுத்த தகவல் " தம்பி உங்களைப் பார்கக வேண்டும் என்கிறார் ". 

காரணம் அப்போது பிரபாகரன் பழ நெடுமாறன் அவர்களுடன் தான் இருந்து இருக்கிறார.  மரியாதையின் பொருட்டு அனுமதியோடு வர வேண்டும் என்று அனுமதி கேட்க இவர் கொடுத்த பதில் " எனக்கு தம்பிகளோடு தொடர்பு விட்டு பல வருடம் ஆகி விட்டதே?" என்றார்.

காரணம் இவரின் சகோதர்ர்களில் ஒருவர் தினமலரிலும் மற்றொரு அத்தான் முறையில் உள்ளவர் ஹிண்டுவிலும் பணியாற்றிக் கொண்டுருந்தவர்கள்.  தினமலரில் முக்கியப் பொறுப்பில் கோவிந்தசாமி.  ஹிண்டுவில் இராமநாதன்.  பிராமணர் அல்லாத இவர்கள் இருவரும் இந்த இரண்டு நிறுவனங்களில் சாதித்த சாதனைகள் மிக அதிகம். 

இதில் மற்றொரு ஆச்சரியம் கோவிந்தசாமி. 

எம்.ஜி.ஆர் பத்திரிக்கை நிருபர்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டுமென்றால் கோவிந்தசாமி வந்து இருக்காரா? என்று கேட்டு பார்த்து விட்டு தான் ஆரம்பிப்பார்.  ஆனால் அவர்களின் எந்த செல்வாக்கையும் முமு தனக்காக பயன்படுத்திக் கொண்டதும் இல்லை.  அவர்களுடன் அதிகப்படியான தொடர்புகளும் வைத்துக் கொள்வதும் இல்லை.

மயிலே மயிலே என்றால் இறகு போடாது என்று பிரபாகரன் அந்த இரவு நேரத்தில் வந்து இறங்கி விட்டார். 

இவர் பிரபாகரனை புகைப்படத்தில் பார்த்து இருக்கிறாரே தவிர பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய வகையில் புரிந்து கொண்டதும் இல்லை.        செல்லும் முக்கிய இடங்களுக்கு பிரபாகரன் எப்படிச் செல்வாரோ தெரியவில்லை?  ஆனால் இப்போது நாலு முழ வேஷ்டி, அரைக்கைச சட்டை, ஒரு ஜோல்பை. 

கை மட்டும் ஜோல்னா பைக்குள் இருக்க இவர் இருந்த மேஜையின் முன்னால் வந்து நின்றார்.

பிரபாகரன் இருபுறம் துப்பாக்கி ஏந்திய இரு புலி வீரர்கள். சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள்.  அலுவலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் சென்று விட இவர் மட்டும் அன்றைய பிரிண்ட் ஆக வேண்டிய கட்டுரையை எழுதிக் கொண்டு இருக்கிறார்.  அலுவலகத்திற்கு பின்புறம் பிரிண்டர் மக்கள் வேலை பார்க்க மொத்தத்தில் அந்த இடத்தில் இவர்கள் நான்கு பேர்களைத் தவிர வேறு எவரும் இல்லை.

கரகரத்த குரலில் பிரபாகரன் தான் ஆரம்பிததார்.

" உண்மையான ஈழத்தமிழன் ஜெயவர்த்னேவை அரசியல் ஞானி என்று சொல்லியிருக்க மாட்டார்கள்.ஒரு தமிழனாக இருந்து கொண்டு ஜெயவர்த்னேவை அரசியல் ஞானி என்று எப்படி எழுதுகிறீர்கள்?"

"நீங்கள் யார்?"

அருகில் இருந்தவர்கள் " தலைவரை யார் என்று கேட்ட முதல் நபர் நீங்கள் தான் " என்றவுடன் அப்போது தான் இவருக்கு லேசாக புரிபடத் தொடங்கியது.  வந்து இருப்பவர் தான் பிரபாகரன்.  

எந்த பதட்டமும் இல்லாமல் " உட்கார்ந்து பேசலாமே " என்று சொன்னவரை மறுத்து விட்டு பிரபாகரன் நடந்த நிகழ்வுகளை பேச ஆரம்பிக்க பதிலுக்கு முமு " உங்கள் தரப்பு நியாயங்களைச் சொல்லுங்க.  அதையும் நான் கட்டுரையாக கொண்டு வருகின்றேன்.  ஆனால் என்னை எழுதக் கூடாது என்று சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை.  பாருங்கள் இந்த மேஜையில் இருக்கும் கடிதங்களை. அத்தனை பேர்களும் அவர்களின் அனுபவங்களை சொல்லியதை வைத்து தான் இந்த கட்டுரையை எழுதிக் கொண்டு இருக்கின்றேன்."

பிரபாகரனுக்கு புரிந்து விட்டது.  இவர் மசியக்கூடய ஆள் இல்லை  

மேஜையில் இருந்த அத்தனை கடிதங்களையும் அப்படியே அள்ளி தன்னுடைய ஜோல்னாபையில் போட்டுக் கொண்டு வநத வழியே திரும்பி விட்டார்.  அத்தனை கடிதங்களிலும் எழுதியவர்களின் முகவரியும் இருந்தது. 

பிரபாகரன் சற்று முன்னால் சென்றதும் பின்னால் வந்த அந்த இரண்டு புலி வீரர்கள் ஒரு பார்வையும் சில வாசகங்களையும் சொல்ல அதற்கு பதில் பேசாமல் அமைதி காத்தவர் எப்போதும் போல கடிதங்கள் அத்தனையும் எடுத்துக் கொண்டு சென்று விட்டாரே என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்.

அதன் பிறகு.....

17 comments:

எஸ்.கே said...

திரில்லர் கதை போல் செல்கிறது! அடுத்து என்ன ஆயிற்று!

Unknown said...

கதை நல்லா போகுது, பதிவு மின்னல் வேகத்தில் வருது.

ஹேமா said...

இப்பிடி நடுவில கதையை நிப்பாட்டினா எப்பிடி !

பிரபாகரன் அவர்களுக்குக் கரகரத்த குரலா ஜோதிஜி !

vinthaimanithan said...

விடுதலைப்புலிகள் இழைத்த அரசியல் தவறுகளையும் நாம் பேசித்தான் ஆகவேண்டும். அவர்கள் விட்டுச்சென்ற இடத்தில் இருந்து மீண்டும் பயணம் தொடர வேண்டுமெனில் எங்கெங்கே தவறுகள் நடந்தன என்பதைப் பற்றி ஆராயாமல் இருக்க முடியாது. ஆனால் இதைச் சாக்காக வைத்துக் கொண்டு புல்லுருவிகளும் சிந்துபாடத் தொடங்கிவிடுவார்கள் என்ற எச்சரிக்கை உணர்வும் தேவை!

ஒற்றைக் கைத்துப்பாக்கியுடன் பிரபாகரன் துவங்கிய பயணம் சாதித்தது மிகப்பெரிது. கற்பனைகளை விஞ்சியது! இன்னும் பயணம் தொடரும்! மீண்டும் வரலாற்றில் இனத்தின் மாண்பு பொறிக்கப்படும்! இதுகாறும் பயணித்துவந்த பாதையின்கண் நாம் விட்டுச் சென்ற பிழைகளைக் களைந்து...!

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

ஜோதிஜி! இலங்கை குறித்த எந்தத் தகவலும் நான் படிப்பதில்லை. காரணம் அன்றாட வேலைகளில் இருந்து என்னை ஒரு இனம் புரியாத கவலை,கண்ணீர் என்கிற தளத்திற்கு என்னைக் கொண்டு சென்று விடுவதோடு மட்டுமல்லாது, அவர்களின் இடத்தில் என்னை வைத்து கற்பனை ஆரம்பித்து, இம்சிக்கும். உங்களின் கட்டுரையைத் தவிர்க்க முடியாமல் படிக்க...இனம் புரியாத நெகிழ்வு,கண்ணீர்,வருத்தம்.ம்ச்!

ஜோதிஜி said...

சாந்தி லெட்சுமணன்

இரண்டு நாட்களாக நான் இடுகை பக்கம் வரமுடியவில்லை. மின்னல் வேகபதிவு நண்பர்கள் கேட்கும் காரணம் கடைசி தலைப்பில் வரும். உங்கள் பதில் பார்த்து உடனடியாக பதில் தெரிவிக்க வேண்டும் போல் உள்ளது.

அவர்கள் இடத்தில் என்னை வைத்து.

இந்த ஒரு வாசகம் தான் கடந்த 13 மாதங்கள் இது குறித்து ஆராய வைத்து இன்று நீண்ட புத்தகமாக மாறியுள்ளது.

ராசா உனக்கு கடைசி இரண்டு தலைப்பில் பதில் உள்ளது. குறிப்பாக முமு சொன்ன பிரபாகரன் குறித்த தகவல்கள்...

எஸ்கே உண்மையிலேயே மின்னல் தான் நீங்க.

வாங்க நந்தா.

சாந்தி முமு வை சென்ற வருடங்களில் அரை மணி நேரம் கைபேசியில் ஒரு வீடியோ போலவே பேச வைத்து வைத்து இருந்தேன். வைரஸ் கொள்ளை கொண்டு போய்விட்டது. புகைப்படம் தேடிப்பார்க்கின்றேன். மனிதரிடம் இப்ப நான் போகும் சூழ்நிலையில் இல்லை.

ஜோதிஜி said...

ஹேமா அந்த அரை மணி நேர உரையாடல் அங்க நடந்த பல விசயங்களை பகிர்ந்து கொள்ள நேரமில்லை. அது அவஸ்யமும் இல்லை. ஒரே வரியில் சொல்லப்போனால் பிரபாகரன் குறித்து வெளியே நம்பப்படும் விசயங்களுக்கும் அவரின் இயல்பான தன்மைகளும் குரலும் ஆச்சரியம் அளிப்பவை. முமு வுககு முன்னால் மற்றொரு நண்பரும் இதே தான் சொன்னால்.,
வேறொரு சமயத்தில் பேசலாம்.

துளசி கோபால் said...

நல்லாவே தேறிட்டீங்க......:-)))))

இப்படியா 'திடுக்'ன்னு தொடரும் போடுவது!!!

நெஞ்சு கிடந்து அடிக்குது......

அப்புறம்?????

தமிழ் உதயம் said...

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

ஜோதிஜி! இலங்கை குறித்த எந்தத் தகவலும் நான் படிப்பதில்லை. காரணம் அன்றாட வேலைகளில் இருந்து என்னை ஒரு இனம் புரியாத கவலை,கண்ணீர் என்கிற தளத்திற்கு என்னைக் கொண்டு சென்று விடுவதோடு மட்டுமல்லாது, அவர்களின் இடத்தில் என்னை வைத்து கற்பனை ஆரம்பித்து, இம்சிக்கும். //

நான் சொல்ல நினைத்து, சொல்லாமல் விட்டது.
க.நா.சாந்தி லெட்சுமணன் அவர்களுக்கு நன்றி.

வனம் said...

நன்றாகவே போகின்றது

இதை ஒரு தனிமனித வரலாறாக நான் பார்கின்றேன்.

தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள் நிறைய இருக்கிறன.

ராஜ நடராஜன் said...

//இப்பிடி நடுவில கதையை நிப்பாட்டினா எப்பிடி !

பிரபாகரன் அவர்களுக்குக் கரகரத்த குரலா ஜோதிஜி !//

ரிபீட்டே போட்டுக்கறேன்!

Bibiliobibuli said...

ஜோதிஜி,

உங்கள் தலைப்பு பார்த்தவுடன் கோபப்பட்டேன். "அய்யோ" அல்லது "ஐயோ" என்று தமிழில் எழுதுங்கள். அதென்ன "ஐய்யோ"?

லெமூரியன்... said...

அமைதியாக , நிறுத்தி நிதானமாக படித்து பார்க்கிறேன்..!
அடுத்து எழுதுங்க...

ஜோதிஜி said...

வாங்க லெமூரியன் மேலே எஸ்கே சொன்னதை பார்த்தீர்களா? இயல்பாகவே அமைந்துவிட்டது.

ரதி உங்களுக்கு கடைசி தலைப்பில் பதில் உண்டு.

ராஜநடராஜன் மற்றும் ஹேமா உங்கள் கேள்விகளுக்காகவே மறுபடியும் உறுதிபடுத்திக் கொள்ள கேட்டேன்.

அவர் சொன்னதை அப்படியே தருகின்றேன்.

வந்து நின்றவர் மிக அவசரமாய் பேசத் தொடங்கினார். என்னை எதிர்பார்க்கவில்லை. என் பதிலை கேட்கவும் தயாராய் இல்லை. அப்படியோ, சொன்னார்களா? யார் சொன்னார்கள்? ஈழத்தமிழன் இப்படிச் சொல்லி இருக்க மாட்டார்களே? என்று தொடர்ச்சியாக எறிகணை போல் ஒவ்வொன்றும் கேள்விகளாகவே வந்து கொண்டுருந்தது. வரும் கேள்விகளில் அழுத்தமும், கோபமும் அதிகமாக இருந்தது. குரல் இயல்புக்கு மீறி கரகரப்பாய் வெளி வந்து கொண்டுருந்தது. நான் பேச முடியவில்லை. அவர் என்னை புரிந்து கொள்ளவும் தயாராய் இல்லை. உங்கள் தரப்பு நியாயங்களைக் கொடுங்க. அதையும் எழுதுகின்றேன் என்ற போது அதை விரும்பாமல் மேலே இருந்த அத்தனை கடிதங்களையும் தன்னுடைய ஜோல்னா பையில் எடுத்துப் போட்டுக்கொண்டு விடுவிடுவென்று வந்த வழியே திரும்பினார்.

ஜோதிஜி said...

இராஜராஜன் அற்புதமாக விமர்சனம்.

தமிழ் உதயம்

நீங்கள் ஈழத்தில் கொடுத்துள்ள விமர்சனங்கள் அத்தனையும் பொக்கிஷம். அது மட்டும் தான் கொடுக்காமல் இருந்தது என்ற போது இருவரின் கருத்தும் ஒன்று போல் இருந்து இருக்கிறது. நல்வாழ்த்துகள்.

டீச்சர் எனக்கே ஆச்சரியமா இருக்கு. உங்களுக்கு பதில் கடைசி தலைப்பில்......

Unknown said...

மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/

ஜோதிஜி said...

நன்றி டெனிம்