Sunday, August 29, 2010

துளசி கோபால் நியூசிலாந்து புத்தக விமர்சனம்

நடன இயக்குநர் பிருந்தா ஒரு வெகுஜன ஊடகத்தில் நியூசிலாந்து குறித்து பேட்டி கொடுத்து இருந்தார்.  படித்து முடித்து சிரித்துக் கொண்டு அடுத்த செய்திக்கு தாவி விட்டேன்.  அவர் சொன்னபடி பார்த்தால் இந்தியாவில் வாழ்வதற்கே லாயக்கில்லை என்பது போல் இருந்தது. 

அடுத்த விமானம் பிடித்து நியூசிலாந்து சென்று விட்டால் அங்கே ஓடிக் கொண்டு இருக்கும் பாலையும் தேனையும் அள்ளிக் கொண்டு வரலாம் போல் அளந்து விட்டுருந்தார். அதிகபட்சம் பத்து நாள் பயணத் திட்டத்தில் பாடல் காட்சிகள் எடுத்த பிறகு கிடைத்த இடைவெளியில் அங்கங்கே தயாரிப்பாளர் செலவில் சுற்றி ஒவ்வொரு மக்களும் இப்படித்தான் இன்று வரை திரைப்பட மக்கள் ஊதி தள்ளிக் கொண்டு இருக்கிறார்கள். 

பயணித்த நாடுகள் சில என்ற போதிலும் இன்று வரையிலும் இந்த ஐரோப்பா மற்றும் அதனைச் சுற்றியுள்ள கண்டத்துக்குள் செல்ல ஏதோ ஒரு கண்டம் என்னை தடுத்துக் கொண்டே இருக்கிறது.  துளசி கோபால் எழுதியுள்ள நியூசிலாந்து என்ற புத்தகத்தை வாசித்து முடித்த போது அங்கேயே கால் நூற்றாண்டு காலம் வாழ்ந்தது போலவே ஒரு எண்ணத்தை உருவாக்கியது.

அரு. நாகப்பன், சோலெ, இதயம் பேசுகிறது மணியன், லேனா தமிழ்வாணன் போன்றவர்களின் பல பயணக் கட்டுரைத் தொடர்களை படித்து இருந்தாலும் இவரின் எழுத்துக்கள் ஒரு வித்யாச அனுபவத்தை தந்தென்னவோ உண்மை. போகிற போக்கில் ஒவ்வொருவரும் பார்த்த பார்வைக்கும், உள்ளேயே வாழ்ந்து அந்த நாட்டைப் பற்றி எழுதும் போது படிப்பவருக்கு நம்பகத்தன்மை யை மேலும் அதிகப்படுத்துகிறது.  அதைத்தான் துளசி கோபால் தான் வாழ்ந்த நியூசிலாந்து நாட்டைப பற்றி முழுமையாக புரிய வைத்து வெற்றி பெற்று உள்ளார். 

ஏற்றுமதி நிறுவனங்களின் முதலாளிகள் வெளிநாடுகள் செல்லும் போது ஒரு மாதத்திற்கு முன்பு அந்த நாடுகள் குறித்து தகவல்களை திரட்டி, அங்கிருந்து மற்றொரு நாட்டுக்குச் செல்லும் வழித்தடங்கள் முதல் தங்குமிடம் வரைக்கும் வலையில் திரட்டிக் கொடுக்கும் வாய்ப்புக்கு பிறகு இப்போது தான் முழுமை யாக ஒரு நாட்டைப் பற்றி புரிந்து படிக்க முடிந்தது, வெறுமே இந்த புத்தக விமர்சனம் என்று ஒரே பார்வையாய் பார்ப்பதை விட சற்று விபரமாக பார்க்க லாம் 

மொத்தம் நான்கு பகுதிகளாக பிரித்துள்ளார். நியூசிலாந்து மண்ணின் மைந்தர்களைப் பற்றி, ஆங்கிலேயர்கள் படிப்படியாக நாட்டை ஆக்ரமித்தது என்ற இரண்டு பகுதிகளுக்குள் நீங்கள் பயணிக்கும் போது சற்று கடினமாக இருக்கலாம்.  ஆனால் நியூசிலாந்து நாட்டில் வாழ்பவர்களுக்கே இத்தனை விபரங்கள் தெரிந்து இருப்பார்களா? என்பது ஆச்சரியம்.  நம்மில் எத்தனை பேர்களுக்கு இந்தியாவின் முழுமையான சரித்திரம் தெரியும்?

இவருக்கென்று ஒரு நடை உள்ளது.  அதைத்தான் எழுத்தாளருக்கென்ற இருக்கும் நடையை உடைத்தெறிந்து எப்படி வேண்டுமானாலும் எழுதலாம்.  படிப்பவருக்கு புரிந்தால் சரி என்கிறார். அதைத்தான் இந்த புத்தகம் முழுக்க பாயச முந்திரிப்பருப்பு போல தூவிக்கொண்டே செல்கிறார்.

பார்த்த கேட்ட படித்த அத்தனையும் கலந்து அதன் மேல் நகைச்சுவைப் பொடியைத் தூவி நியூசிலாந்து என்ற சர்க்கரைப் பொங்கலைத் தந்துள்ளார். உண்மையிலேயே நியூசிலாந்து என்ற நாடு சர்க்கரை பொங்கல் தான். பொறாமையா இருக்கு.  யாருக்குத் தான் பிடிக்காது?

90 சதவிகிதம் அரசாங்க பள்ளிகள் மட்டுமே. மனப்பாடமா?  நோ, நோ,  சும்மா விளையாட்டு போல அப்படியே ஜாலியா..........நீங்கள் ஏழ்மை என்றால் உதவித்தொகை அரசாங்கமே கொடுத்து விடும்.  நம்ம மக்கள் அதிலும் மிச்சப் படுத்தி வந்து போகும் செலவிற்கு வைத்துக் கொள்ள முடியும் என்றால் தொகையின் அளவை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகின்றேன். ஆனால் இதையெல்லாம் விட ஒரு ஆச்சரியம்.  மக்கள் தொகையே 40 லட்சம்.  ஆனால் வளர்ப்பு ஆடுகளின் எண்ணிக்கை 480 லட்சம்.  எப்பூடி?
சிங்கப்பூர் மாதிரியே புள்ள குட்டிய பெத்துக்கிங்கன்னு அரசாங்கம் கெஞ்சாத குறை தான். அதுவும் எப்படி?  வயித்துப்புள்ள காரின்னா அரசாங்கம் கொடுக்கற ராஜமரியாதை ரொம்பவே அதிகம்.  உச்சகட்டமாய் புள்ளைக்கு ஆய் போனா கழுவி துடைச்சு விடுற வரைக்கும் அநியாயத்திற்கு வயித்தெரிச்சல் வர வழைக்கிற அரசாங்க அமைப்பு.

ஆனால் புருஷன் பொண்டாட்டிங்றதெல்லாம் கெட்ட வார்த்தை.  எல்லாமே பார்ட்னர் தான். நம்ம ஊரு கவுன்சிலருக்கு கட்டிங் வசூலிக்கிறது ஒரு தலையாய கடமை போல அங்குள்ள நகர கவுன்சிலுக்கு மண்டையிடி சமாச்சாரங்றது குளிர்காலத்துல உஷ்ணத்துக்காக கட்டைகளை எரிக்கும் போது வர்ற புகையை போக்க நடவடிக்கை எடுப்பது தான். 

விமான போக்குவரத்துக்கு இடைஞ்சலா இருக்க இப்பொழுதெல்லாம் ஹீட்டர் அந்த பிரச்சனையை போக்கிவிட்டது.  அந்த கவுன்சிலர் நிச்சயம் கூட ரெண்டு பெக் போட்டு ஓய்வு எடுத்துக்கிட்டு இருக்கக்கூடும்.

சிங்கப்பூர் மக்களின் ஆங்கில உச்சரிப்பு போல இங்கும் ஒரு வினோத ஆங்கிலம் புழங்குகிறது.   காரணம் பக்கத்தில் ஆஸ்திரேலியா. குளிர் காலத்துல உங்களுக்கு போற வாய்ப்பு இருந்தால் படங்களில் கதாநாயகன் பொறாமைபடுத்திய பனிச்சறுக்கு விளையாட்டு விளையாடிப் பார்க்க வாய்ப்புண்டு. என்னவொன்று அந்த குளிருக்கு தாக்குப்பிடிக்க வேண்டும்.  ச்சும்மா அதிகமில்லை.  மைனஸ் கீழே போய் நிற்கும்.  வெடவெடன்னு குளிரத்தாங்குவீங்களா இல்லை குளிர போக்க வைக்க பார்ட்டனர தேடுவீங்களா? 

மற்றொரு கொடுமை இந்த நாட்டில் உண்டு.  நம்மூரு காவல் நிலையத்திற்குள் உள்ளே நுழைந்தால் ஒரு வாசகம் உங்களை வரவேற்கும். " உங்கள் நண்பன் காவல் துறை" ,  உள்ளே போனா என்ன மரியாதை கிடைக்கும்ங்றது  உங்களுக்கேத் தெரியும்.  உண்மையிலே இங்குள்ள காவல் துறை அத்தனை பேர்களும் அரிச்சந்திர பரம்பரைபோலவே இருக்கிறார்கள். எழுதிய ஆசிரியர் தான் கண்டுபிடித்த மற்றொருவருடைய கடவுச்சீட்டை கொண்டு போய்ச் சேர்த்த ஒரு நகைச்சுவையை படித்தால் ஒன்று நீங்க நம்பமாட்டீங்க.  அல்லது பூகோள சொர்க்கம்ன்னு சொல்லத் தோன்றும்.

எந்த வாகனமும் பெரும்பாலும் ஹாரன் சப்தம் அடித்து காது சவ்வை கிழிப்ப தில்லை. சாலை விதிகளை மீறி நீங்கள் ஏதாவது டகால்டி வேலை செய்ய நினைத்தால் உங்கள் முகம் ஏதோ ஒரு புகைப்பட கருவியில் தெரிந்து உங்கள் கூலியை கொண்டு போய் கொட்ட வேண்டியது தான். சட்டம் தன் கடமையைச் செய்யத் தொடங்க எந்த வட்டம் சதுரமும் வந்து பரிந்து பேச முடியாது.   காரணம் அரசியல்வாதிகள் கூட கடைத் தெருவில் வந்து காய்கறி முதல் சாமான்கள் வாங்குவது வரை சர்வசாதரணம்.  உங்களுக்கு இந்திய சமையல் நன்றாகத் தெரியுமா?  அப்படியே விசாரித்து மெல்ல கிளம்பி விடுங்க.  அங்கே போய் கடைதிறக்க வாய்ப்பு இருந்தால் துட்ட அள்ளி குவித்து விடலாம்.  அந்த அளவிற்கு இந்திய உணவகங்கள் அட்டகாசமா பெருகிகிட்டுருக்கு.

ஆனால் குடும்பத்தோடு நீங்க வசிக்கனும்ன்னு நினைத்து போனா உங்க புள்ளையங்களை நீங்க மட்டுமல்ல சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் கூட அடிக்க முடியாது.  பயபுள்ளைங்க ஊரக்கூட்டி சட்டத்துக்கு முன்னால நிறுத்தி விடுவாங்க.  பசங்க ஆறடி இருக்க வாத்தியார் என்ன செய்து விட முடியும்?  எட்டி எட்டி பார்த்து விட்டு எட்டிப் போய்விட வேண்டியதுதான். 16. 17 வயதில் தொலைக்காட்சியிலும் பசங்க மத்தியிலும் சூடான விவாதம் என்ன தெரியுமா?  பாதுகாப்பான உடலுறவு.  நாம மாத்ருபூதம் பேசிய போது அவர் சொல்ல வந்ததை விட்டுட்டு வேறு ஏதும் சொல்வாரான்னு பார்த்த நாம் இன்னும் போக வேண்டிய தூரம் ரொம்ப இருக்கு.
இதெல்லாம் விட ஆச்சரியம் துளசிகோபால் குடியிருந்த பகுதியில் குடியேறிய முதல் தமிழ் குடும்பமே இவங்க தான்.

தொடர்ந்து பயணிப்போம்.....................

வெளியீட்டாளர்கள் 

சந்தியா பதிப்பகம்
ப,எண் 57 53வது தெரு,
9 வது அவென்யூ,
அசோக் நகர்,
சென்னை 600 083
தொலைபேசி 044 24 89 69 79
விலை 200 ரூபாய்.
பக்கங்கள் 352

ஆசிரியர் வலைதள முகவரி 

24 comments:

virutcham said...

நல்ல இருக்கே. வாங்கிட வேண்டியது தான்.

virutcham said...

இது என்ன குன்று(கடைசியாக உள்ள படம் )? அசப்பில் நம்ம சிவனார் போல் இருக்கு

ஜோதிஜி said...

விருட்ஷம்

நியூசிலாந்து மிகச் சிறந்த சுற்றுலா தலம். இது போன்று மலேசியாவின் அருகே உள்ள தீவில் பார்த்துள்ளேன். உங்கள் உவமை ஆசிரியரை தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியடைய வைக்கும்.

பின்னோக்கி said...

இயற்கைக் காட்சிகள் மிக அருமையாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். 40 லட்சம் தானா ?. ம்ம்ம்...

சி.பி.செந்தில்குமார் said...

அருமை அண்ணே,தாய்நாட்டுப்பற்றை கண்ணீயப்படுத்தும் இடுகையின் ஆரம்ப வரிகள்

பாலா said...

துளசி கோபாலுக்கு வாழ்த்துகள். :)

------

//வெடவெடன்னு குளிரத்தாங்குவீங்களா இல்லை குளிர போக்க வைக்க பார்ட்டனர தேடுவீங்களா?
//

பாய்ண்ட் நோட்டட்!!!!

ஒன்று சேர் said...

புத்தக விமர்சனம் எழுதுவதென்பதும் ஒரு தனி கவனம் வேண்டும். 400 பக்கஙகளில் படித்து உணர்ந்ததை 40 வரிகளில் சொல்ல வேண்டும். உங்கள் விமர்சன நடை நன்றாக இருந்தது. ஆனால் இந்த புத்தகத்தை நானும் படித்தபின்தான் உங்கள் விமர்சனத்தை பற்றி விமர்சனம் செய்வது பொருத்தமாக இருக்கும். ஏற்கனவே படிக்க பரிந்துரை செய்த டாலர் தேசம் என்பதுடன் இந்த புத்தகத்தையும் சேர்த்துக் கொள்கிறேன். அடுத்தவாரம் மதுரையில் புத்தகத் திருவிழா தொடங்குகிறது - பார்ப்போம்

ஜோதிஜி said...

பாலா

வரிக்கு வரி படிப்பதே ரொம்ப சந்தோஷமாயிருக்கு. ஆனா இது ரொம்ப ஓவரு!!!!!!!!!!!

சம்பத் நிச்சயம் உங்களுக்கு இந்த புத்தகம் ரொம்பவே பிடிக்கும். சிந்தாமல் சிதறாமல் அப்படியே ரசிக்கும் அளவிற்கு தந்துள்ளார்.

நாம் நியூசிலாந்தில் வாழ்ந்த மகிழ்ச்சியை தருகிறது. ரொம்பவே பொறாமை பட்ட நாடு நியூசிலாந்து.

செந்தில்குமார் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க.

ராம்குமார் உங்களுக்குத் தான் இது போன்ற புத்தகங்கள் ரொம்ப பிடிக்கும் தானே? படித்துப் பாருங்கள்.

ரிஷபன்Meena said...

துளசி கோபால் பயணக் கட்டுரைகள் பல படித்திருக்கிறேன். ரொம்ப ரசித்து ருசித்து அவர் சுற்றிப்பார்த்ததைப் பற்றி எழுதியதைப் படிக்கும் போது எதோ நாமே அங்கே நிற்பது போல தோன்றும். அருமையான பயணக் கட்டுரையாளர்.

ரிஷபன்Meena said...

ஜோதிஜி,

என்னுடைய தளத்தில்
Link to this post and Creat a Link ஆகிய இரண்டும் உள்ளது. இது தவிர வேறு எதாவது பற்றி சொல்கிறீர்களா ?
ப்ளாக்கரில் எப்படி செய்வது என்று சொன்னால் உதவியாக இருக்கும்

யாசவி said...

துளசி கோபாலுக்கு வாழ்த்துக்கள்.

நல்ல இடுகை

கோவி.கண்ணன் said...

// அதைத்தான் துளசி கோபால் தான் வாழ்ந்த நியூசிலாந்து நாட்டைப பற்றி முழுமையாக புரிய வைத்து வெற்றி பெற்று உள்ளார். //

வாழ்ந்த அல்ல.......வாழும் நாடு...இன்னும் அங்கு தான் வசிக்கிறார். அவர் அவ்வூர் குடிமகன். தற்சமயம் தற்காலிகமாக இந்தியாவில் நீண்ட நாள்கள் இருக்கிறார்.
:)

நானும் நியூசிக்கு இல்லத்தினரோடு சென்று அவர் வீட்டில் கொஞ்ச நாள் தங்க ஆசை தான். அவரும் அழைப்பு விடுத்திருக்கிறார். காலம் வாய்க்கனும். ஆனா அவர் சிங்கப்பூர் வழியாகப் போனால் எங்களை அழைத்துப் பார்க்காமல் இருந்ததில்லை.

துளசி அம்மாவின் நூல் எனக்கு இன்னும் வாசிக்கக் கிடைக்கல. சிங்கப்பூர் நூலகத்தில் வந்திருக்கானு பார்க்கனும்.

Chitra said...

wow! Super!

ஜோதிஜி said...

வாங்க சித்ரா. நாட்டைப் பற்றி படிக்கும் நீங்க சொன்னது தான் பலமுறை ஞாபகத்திற்கு வந்தது.


வாழ்ந்த அல்ல.......வாழும் நாடு...இன்னும் அங்கு தான் வசிக்கிறார். அவர் அவ்வூர் குடிமகன். தற்சமயம் தற்காலிகமாக இந்தியாவில் நீண்ட நாள்கள் இருக்கிறார்.

கண்ணன் இது எனக்கு புதிய செய்தி,

யாசவி
உங்கள் மகத்தான வாசிப்பு அனுபவத்திற்கு நல்ல தீனி போடக்கூடியது இந்த புத்தகம்.

ரிஷபன் இப்போது எல்லாம் ஓகே, இணைத்துக் கொண்டேன், நன்றி,

Thenammai Lakshmanan said...

வாழ்த்துக்கள் துளசி.. விமர்சனம் அருமை ஜோதிஜி..

Unknown said...

அன்புடன் நல்வாழ்த்துகள்..

vinthaimanithan said...

//நம்மில் எத்தனை பேர்களுக்கு இந்தியாவின் முழுமையான சரித்திரம் தெரியும்?//

சினிமா சரித்திரம் பற்றி வேண்டுமானால் கேட்டுப்பாருங்கள்... வயிற்றெரிச்சலைத் தூண்டாதீர்கள்...

நீங்க சொல்றதயெல்லாம் கேக்குறப்ப ரொம்ப ஆசையாத்தான் இருக்கு! ம்ம்ம்... மெட்ராஸுக்கு ஆம்னில போலாமா இல்ல கவர்ன்மெண்ட் பஸ்ஸுல போலாமா...ன்னு யோசிட்டு இருக்குறப்ப....

vinthaimanithan said...

//நம்மில் எத்தனை பேர்களுக்கு இந்தியாவின் முழுமையான சரித்திரம் தெரியும்?//

சினிமா சரித்திரம் பற்றி வேண்டுமானால் கேட்டுப்பாருங்கள்... வயிற்றெரிச்சலைத் தூண்டாதீர்கள்...

நீங்க சொல்றதயெல்லாம் கேக்குறப்ப ரொம்ப ஆசையாத்தான் இருக்கு! ம்ம்ம்... மெட்ராஸுக்கு ஆம்னில போலாமா இல்ல கவர்ன்மெண்ட் பஸ்ஸுல போலாமா...ன்னு யோசிட்டு இருக்குறப்ப....

துளசி கோபால் said...

அன்புள்ள ஜோதிஜி,

கூடுதலான புகழ்ச்சிகளைக் கேட்டால் கூச்சமாக இருக்கிறது.

உங்கள் நடையின் விமரிசனம் அருமை.

இங்கே வாழ்த்துகள் கூறிய அத்தனை அன்பு நண்பர்களுக்கும் என் நன்றி.

பி.கு: ப்ருந்தா என் தோழியும்கூட!

ஜோதிஜி said...

ப்ருந்தா என் தோழியும்கூட!

Ahahahahhahah


நீங்க சொல்றதயெல்லாம் கேக்குறப்ப ரொம்ப ஆசையாத்தான் இருக்கு! ம்ம்ம்... மெட்ராஸுக்கு ஆம்னில போலாமா இல்ல கவர்ன்மெண்ட் பஸ்ஸுல போலாமா...ன்னு யோசிட்டு இருக்குறப்ப....

heheheheheh

வல்லிசிம்ஹன் said...

புத்தகத்தைப் படிக்கும் அனுபவத்தில் பாதி மகிழ்ச்சி நீங்கள் விமரிசிக்கும் அழகில் இருக்கிறது. தோழி துளசியின் புத்தகத்தை மிகுந்த சிரத்தையுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி.

கிரி said...

//நம்மூரு காவல் நிலையத்திற்குள் உள்ளே நுழைந்தால் ஒரு வாசகம் உங்களை வரவேற்கும். " உங்கள் நண்பன் காவல் துறை" , உள்ளே போனா என்ன மரியாதை கிடைக்கும்ங்றது உங்களுக்கேத் தெரியும்//

:-)))

துளசிகோபால் அவர்கள் புத்தகம் பற்றிய விமர்சனம் நன்றாக உள்ளது ஜோதிஜி. வாய்ப்பு கிடைத்தால் படிக்கிறேன்.பயணக்கட்டுரையில் அவர்களை அடித்துக்கொள்ளவே முடியாது.

ஜோதிஜி said...

கிரி மற்றும் வல்லிசிம்ஹன் அவர்களுக்கு நன்றி.

kingofnature said...

100க்கும் மேற்பட்ட பதிப்பகங்களின் அனைத்து புத்தகங்களும் நூல் உலகத்தில்.. தற்போது 10% தள்ளுபடியில் கிடைக்கின்றன. மேலும், 500 ரூபாய்க்கு மேல் ஆர்டர் செய்தால் டெலிவரி முற்றிலும் இலவசம்...click me...