Monday, February 22, 2010

வழங்கிய முனிவர் வாங்கிய பிரபாகரன்

1947 முதல் தொடங்கிய இந்திய ஜனநாயகப் பாதை இன்றைய சூழ்நிலையில் இலங்கையில் பெற்ற அவமானம் என்பது நினைத்தே பார்க்க முடியாதது.  இந்திய அதிகாரவர்க்கத்தின் உள்கட்டமைப்பு எந்த அளவிற்கு இருந்தது என்று உலகம் முழுக்க முரசு அறிவிக்காத குறைதான். ஏன்?   ஒரே முக்கிய காரணம் உளவுத் துறையின் மோசமான செயல்பாடுகள்.  அதுவே தான் இன்று வரைக்கும் தொடர்ந்து கொண்டுருக்கிறது.  பிராந்திய நலன் முக்கியம் என்ற அளவிற்கு அதை மீட்டு எடுக்க உபயோகித்த முறைகள் தான் மொத்தத்திற்கு அவமானத்தை பரிசாக பெற்று தந்தது.

உள்ளே நுழைந்து பூர்வாங்க ஏற்பாடுகளை கவனிக்காமல் இருக்க அதுவே தீலிபன் மரணம் வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தியது.  அதை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பாளராகயிருந்த தீட்சித்க்கு அப்போது உளவுத்துறை கொடுத்த கேவலமான அறிக்கை, " இதற்குப் பிறகு புலிகளின் அரசியல் தந்திரம் இருக்கிறது"  என்பதாக இருந்தது.  அதைப்பார்த்து தீட்சித் பின்வாங்கியதும் அதுவே பிள்ளையார் சுழியாக இருந்தது.

மொத்த அமைதிக்கும் சட்ட ஒழுங்குமுறைகளுக்கு இந்திய அமைதிப்படை தான் இனி பொறுப்பு என்ற சூழ்நிலையில் படகில் இலங்கையை நோக்கி பயணித்து வந்த 17 விடுதலைப்புலிகளை கைது செய்தது முதல் தவறு என்றால், அவர்களை இலங்கையிடம் ஒப்படைத்தது முக்கிய தவறாகவும் முடிந்து விட்டது.  அமைதிப்படை நினைத்து இருந்தால் அந்த கைது சம்பவம் வெளியே தெரியாமல் அப்போதே அதை முடித்து இருக்கலாம்.  மோப்பம் பிடித்த ஜெயவர்த்னே துள்ளிக் குதித்து வந்ததும், இதையே காரணம் காட்டி பாதுகாப்பு அமைச்சராக இருந்த அதுலத் முதலி " அவர்களை விடுதலை செய்ய காரணமாக நீங்கள் இருந்தால் நானும் என்னைச் சார்ந்தவர்களும் அமைச்சரவையில் இருந்து வெளியேறிவிடுவோம் "  என்று மிரட்டத் தொடங்க ஜெயவர்த்னே அமைதியாகி விடவேண்டிய சூழ்நிலை.  உறுதியான முடிவு எடுக்க வேண்டிய தீட்சித் அப்போதும் அமைதி காக்க, கொழும்பு சென்றால் சித்ரவதைக்கு ஆளாக நேரிடும் என்று சயனைடு சுவைத்து பிடிபட்டுருந்த 17 பேர்களும் மரணமடைய தொடங்கிய பிரச்சனைகள் விஸ்ரூபம் எடுத்தது.  அப்போது தான் குமரப்பா, புலேந்திரனுக்கு திருமணம் ஆகியிருந்தது.  இவர்களுக்கு எப்படி இருந்து இருக்கும்.  இலங்கை ராணுவத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்த இவர்களின் மரணம் பிரபாகரனுக்கு எத்தனை பாதிப்புகளை உருவாக்கியிருக்கும்.

ஆனால் இதைத் தடுக்க முயற்சித்த இந்தியத் தூதுவர், தளபதி ஜெனரல் ஹக்கிரட் சிங், போன்றவர்களின் மொத்த உழைப்பும் அதுலத் முதலியின் கடுமையான பிடிவாதத்தால் தோற்றுவிட்டது.  அவர்கள் ஜெயித்தார்கள் என்பதை விட இவர்கள் அதற்கு காரணமாக இருந்தார்கள் என்பது தான் இங்கு முக்கியம்.
இந்தக் குழப்பத்திற்கிடையே இந்திய அமைப்படைக்கு தலைமையேற்று வந்த தளபதிக்கும் அரசாங்கம் சார்பாளரான தீட்சித்க்கும் சரியான புரிந்துணர்வு இல்லை.  மறைமுகமாக இருவரின் பகைமையும் வளர்ந்து கொண்டேயிருந்தது. தீட்சித்க்கு நான் சொல்வதை நீ கேள் என்ற மனோபாவம்.  தளபதிக்கோ எனக்கு கட்டளையிட நீ யார் என்ற நியாயமான கோபம், அன்றைய சூழ்நிலையில் நேர்மையான வழியில் அமைதிப்படையின் செயல்பாடுகளை கொண்டு செல்ல அத்தனை முயற்சிகளை எடுத்தவர் என்றால் இந்த தளபதி தான்.  கைது செய்யப்பட்ட புலிகளை ஒப்படைத்தால் முற்றிலும் வேறு பாதைக்கு பயணிக்க வேண்டியிருக்கும் என்று அவர் கதறியது எவருக்கும் அப்போது புரியவில்லை.  புரிந்தபோது மொத்தமும் கைமீறியிருந்தது.

ஜெயவர்த்னே எதிர்பார்த்துக்கொண்டுருந்த கலவரம் வெடிக்க அதுவரைக்கும் புலிகளுக்கு கொடுக்கப்பட்டுருந்த பொதுமன்னிப்பை விலக்க அது மேலும் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் ஆயிற்று. கலவரங்களை இந்தியாவிற்கு தெரிவிக்க, நடந்த மந்திர ஆலோசனைகளுக்குப் பிறகு விடுதலைப்புலிகளின் கையில் உள்ள ஆயுதங்களை வலுக்கட்டாயமாக பிடுங்க உத்தரவு வர பொங்கியிருந்த பானையை தரையில் போட்டு உடைத்தாகிவிட்டது.  பிறகென்ன?  அவசரம். அலங்கோலம், இறுதியில் அவமானம்.

உச்சகட்டமாய் இனி இந்தியாவுடன் போரிட்டுத்தான் ஆக வேண்டும் என்று பிரபாகரன் தீர்மானமாய் நம்புவதற்கு முன் அவர் தரப்பு விசயங்களை, ராஜீவ் காந்திக்கு (12.10.1987 முதல் 13,01,1988) வரைக்கும் கடிதம் வாயிலாக தெரியப்படுத்த ஒவ்வொரு கடிதமும் ராஜீவ் கைக்கு கிடைத்த போது அவருக்கு உளவுத்துறை கொடுத்த தகவல் " அவர்கள் வலுவிழந்து கொண்டுருக்கிறார்கள் " என்கிற அடிப்படையில் இருந்த காரணத்தால் ராஜீவ் அந்தக் கடிதங்களை பொருட்படுத்தாமல் இருக்க முற்றியது தீராப் பகை.

மக்களை மிரட்டுதல், தாக்குதல், எறிகணை வீச்சு, அப்பாவிகள் சாவு, என்று தொட்டுத் தொடரும் சொந்தங்கள் போல் மக்கள் மொத்த அமைதியையும் இழந்த போது பாரபட்சம் இல்லாமல் விடுதலைப்புலிகளின் பின்னால் அணிதிரளத் தொடங்கினர்.  காட்டுப்பாதை புதிது.  மேலே இருந்து வரும் கட்டளைகளும் வினோதம்.  எவரை அடிப்பது?  எவரை பிடிப்பது?  செயலில் காட்டிய இந்திய வீரர்கள் மாண்டு போனார்கள்.

இது போக உளவுத்துறை கொடுத்துக்கொண்டுருக்கும் தகவல்களுக்கும், போரை தலைமையேற்று நடத்திக்கொண்டுருந்த தளபதி மூலம் அனுப்பப்பட்ட, உள்ளே நடந்து கொண்டுருக்கும் எதார்த்த சூழ்நிலை அறிக்கைக்கும் முரண்பாடுகளின் மொத்த வடிவமாய் இருந்தது. ஆட்சியாளர்கள் உளவுத்துறைக்கு கொடுத்த மதிப்பு என்பதை கடைசி வரைக்கும் உண்மை நிலவரத்திற்கும் கொடுத்து இருந்தாலே புதிய பாதை அன்றே கிடைத்து இருக்கும்.  கொடுக்க எவருமே இல்லை என்பதை விட அந்த அறிக்கைகள் ராஜிவ் காந்திக்கு சென்றுவிடக்கூடாது என்பதிலும் கடைசி வரைக்கும் உறுதியாய் இருந்தனர்.  தலைமைத் தளபதி திபேந்தர் சிங் பின்னாளில் இதை அவர் புத்தகத்தில் சொல்லி வருத்தப்பட்டுருக்கிறார்.
தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பொம்மை அரசு என்பதை இந்தியா மட்டும் எதிர்பார்க்கவில்லை.  ஜெயவர்த்னேவும் அது போன்ற ஒரு பொம்மையைத் தான் உள்ளே அமைய வேண்டும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டுருந்தார். வலுவானவர்கள் வந்தால் அதுவே எதிர்காலத்திற்கு விபரீதத்தை உருவாக்கிவிடும் அல்லவா? சிங்கள தந்திரத்தில் அன்றைய இந்திய ஆட்சிப் பொம்மைகள் என்ன செய்வார்கள்? என்ன செய்ய முடியும் என்பதைக்கூட உளவுத்துறை உணரத் தயாராய் இல்லை என்பது மொத்ததிலும் சோகமான ஆச்சரியம்.

இந்த பொம்மை அரசு மூலம் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட வரதராஜப்பெருமாள் தங்களுடைய ஆட்சி அதிகார அலுவலகத்தை திருகோணமலையில் வைத்து ஆள விரும்பினர்.  இதில் விருப்பம் இல்லாத ஜெயவர்த்னே அங்கு அவர்களுக்கு தேவைப்படும் கட்டிடங்கள் கொடுக்க மறுக்க தேர்ந்தெடுத்தவர்கள் நொந்தவர்களாக இருந்தனர். ஒப்பந்தப்படி அதிகாரப் பகிர்வும் கொடுக்க தயாராய் இல்லை.  ஜெயவர்த்னே அரசியல் ஓய்வு பெற்ற 1988 இறுதி வரைக்கும் இப்படித்தான் போய்க்கொண்டுந்தது. இவர்களை ஆட்சி என்ற பெயரில் உள்ளே அமர வைக்க வேண்டும் என்பதை விரும்பிய இந்தியா அவர்கள் வலுவானவர்களாக மாற்ற ஏன் முயற்சிக்க வில்லை என்பதை விட பிரேமதாசா உள்ளே வந்த போது கூட இதில் எவரும் அக்கறை செலுத்தவும் தயாராய் இல்லை.  இந்திய வரிப்பணத்தை கொண்டு போய் கொட்டி தீர்த்து ஆடி அலங்கோலப்படுத்தி அவமானப்பட்டு இறுதியில் இது போன்ற முறைப்படியான விசயங்களில் கூட ராஜீவ் காந்திக்கு தெளிவான முறையில் எவரும் புரிய வைக்க தயாராய் இல்லை.

இந்தியா என்ற இறையாண்மை மிக்க நாட்டின் கௌரவம் என்பதை நடுத்தெரு சாக்கடையில் கொட்டி கவிழ்த்த அதிகாரவர்க்கத்தினர் ராஜீவ் காந்திக்கு வாழ்நாள் முழுக்க போக்க முடியாத களங்கத்தை உருவாக்கியிருந்தனர்.  பின்னால் வந்த பிரேமதாசாவிடமும் முரண்பட்டு முட்டி மோதிக்கொண்டு இருந்தனர். பல விதங்களிலும் தன்னுடைய செல்வாக்கை இழந்து இருந்த ராஜீவ் காந்தி அப்போது இந்தியாவில் தொடங்கப் போகின்ற தேர்தல் அறிவிப்பு காரணமாக தன்னுடைய தோல்வி மொத்தமும் வெளியே தெரிந்து விடுமோ என்று அமைதிப்படை இலங்கையில் இருந்து வெளியேறவேண்டிய விலகலை தள்ளிப்போட்டுக்கொண்டே நகர்த்தினர். இந்தப் பிரச்சனைகளில் தொடக்கம் முதல் பாய்ந்தவர்கள் இந்திய உளவுத்துறையினர். இவர்களுக்கு மேலே வானளாவிய அதிகாரம் உள்ளவராக பாய்ச்சல் காட்டியவர் தீட்சித்.  இறுதியில் பலிகடா ஆகியதென்னவோஅமரர் ராஜீவ் காந்தி.
 காசி ஆனந்தன், பழ, நெடுமாறான், பிரபாகரன், மாத்தையா, 
ஆனால் இத்தனை விசயங்களிலும் தோற்ற உளவுத்துறையினர் ஒரு வகையில் அன்றே சில அவர்கள் பாணியிலான நல்ல விசயங்களை செய்யத் தொடங்கினர்.  பிரபாகரனுக்கு சமமாக இருந்த மாத்தையாவை வளைத்துப் போட்டதும், விடுதலைப்புலிகளின் உளவுத்துறை தலைவர் பொட்டு அம்மன் பயணித்த காரில் வெடிகுண்டு வைக்கும் அளவிற்கு அவரை மாற்றியதும், கிட்டு மேல் வெடிகுண்டு வீசி அவரின் காலைப் போக்கியதும் நடந்தது. அதுவே இறுதி வரைக்கும் மாற்றம் பெறாமல் ஆயுதக்கொள்முதல் செய்துவிட்டு,  கிட்டு பயணித்து வந்த கப்பலை மாத்தையா மூலம் கண்டு கொண்ட இந்திய கப்பற்படை சுற்றிவளைக்க ஆயுதக்கப்பலையும் தன்னையும் அழித்துக்கொண்டு விடுதலைப்புலிகளின் வரலாற்றில் கிட்டு வீரமரணம் எய்தினார்.  அன்று தான் இந்திய உளவுத்துறையிடம் விலை போயிருந்த மாத்தையாவின் துரோகத்தை கண்டு உணர காரணமாக அமைந்தது. இது போன்ற மூன்றாந்தர காரியங்களில் இந்த விசயத்தில் அன்று கெட்டியாக இருந்தவர்கள் ராஜீவ் காந்தி மரணத்திலும் இருந்து இருக்கலாமே?  ஆனால் இதை விட மொத்ததிலும் கொடுமை இந்திய அமைதிப்படையின் தொடக்கம் முதல் கதாநாயகன் போல் காட்சியளித்தவரும், பிரபாகரனை அழிக்காமல் விட்டு விடுவேனா என்று டெல்லி அசோகா உணவு விடுதி முதல் இறுதி படை விலக்கல் வரைக்கும் உறுமிக்கொண்டுருந்த தீட்சித், பின்னால் அவர் எழுதிய புத்தகத்தில் நடந்த நிகழ்வுகளைப்பற்றி, பிரபாகரனைப் பற்றி எப்படி எழுதியுள்ளார் தெரியுமா?

" நான் பார்த்தவரைக்கும் மற்ற போராளிகுழுக்களின் தலைவரை விட எல்லாவிதங்களிலும் பிரபாகரன் மேம்பட்டவராக காணப்பட்டார். இவரைப் பற்றி தப்பாக புரிந்து வைத்துருக்கின்றேன். இவரது ஆழமான லட்சியம், அரசியல் அறிவு, ராணுவ போர்த்தந்திரங்கள், போர்த்திறமைகளை நான் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இவருடைய மதிநுட்பம் நிறைந்து பல சாதனைகளை போற்றத்தான் வேண்டும்.  அமைதிப்படைகளின் போருக்குத் தாக்கு பிடித்து தொடர்ந்து போராட்டத்தை முன் நடத்திய காரணத்தால் இவர் மக்களின் ஆதர்ஷ்ண நாயகனாக மதிப்பைப் பெற்றார் "

" தமிழீழ லட்சியத்தில் பிரபாகரனிடமிருந்த தணியாத வேட்கை, தீராத வெறி, தொடர்ந்த போராட்டங்கள் அத்தனையிலும் இழக்காத மன உறுதி ஆகியவற்றை நாங்கள் குறைவாக மதிப்பீடு செய்தமையே இந்தியா செய்த மாபெரும் தவறாகும் "

வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்ற பட்டம் போல? காரணம் இவரும் முனி பிடித்தவர் போலத்தான் எப்போதும் கோபப்பார்வையாய் வாழ்ந்தவர். இவர் எளிதாக பாராட்டுரை வழங்கி விட்டு போய்விட்டார். இவர் உருவாக்கிய இவரால் உருவாக்கப்பட்ட உருக்குலைத்த அடிப்படை இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமை போராட்டங்களின் எச்சமும் மிச்சமுமாய் உலகை ஸ்தம்பிக்க வைத்த காந்தி, இந்திரா மரணத்திற்குப்பிறகு ராஜிவ் காந்தி மரணம் வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தியது.  அவருக்கென்ன போய்விட்டார்?  அகப்பட்டவர் ராஜிவ் காந்தி?

ஜெயவர்த்னேவுக்குப்பிறகு ஆட்சிக்கு வந்த பிரேமதாசா மொத்தத்திலும் வித்யாசமான பார்வை. ஜெயவர்த்னே ஆட்சியில் பிரதமராக இருக்கும் போதே அமைதிப்படை உள்ளே இருப்பதை வெறுத்தவர். காரணம் அமைதிப்படை இன்னமும் உள்ளே இருந்து கொண்டுருக்கிறார்கள்.  இதையெல்லாம் விட மிகப்பெரிய ஆச்சரியம் மேல்தட்டு மக்கள் வந்து அமர்ந்த இலங்கை அதிபர் பதவி என்பது இவர் வந்து அமர்ந்ததும் மொத்த ஆச்சரியம்.  ஆமாம் இவர் சலவைத்தொழிலாளி வம்சத்தில் பிறந்து வந்த அடித்தட்டு மக்களின் சார்பாளர்.

11 comments:

துபாய் ராஜா said...

வித்தியாசமான கோணத்தில் அரிய புகைப்படங்களுடன் தொடரட்டும் உங்கள் சிறந்த பணி.

Anonymous said...

மாத்தையாவின் அருகே இருப்பவர் ரா அதிகாரி இல்லை, தமிழீழத்தின் ஆஸ்தான கவிஞன் புதுவை இரத்தினதுரை.

ஜோதிஜி said...

நன்றி ராஜா.

நான் எடுத்து வைத்துருந்த புகைப்படமும் அதன் சார்பான விசயங்களையும் அவசரத்தில் தேர்ந்தெடுக்க முடியாத சூழ்நிலையில் நீங்கள் ஈழத்தவரை சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்ற நோக்கத்தில் மாற்றியுள்ளேன். நன்றி.

தமிழ் உதயம் said...

இந்தியா மாதிரியான மிகப் பெரிய, பல் வேறு மொழி, மதம், கலாசாரம் மற்றும் பிரச்சனைகள் அதிகமுள்ள தேசத்தின் தலைமை, பிற நாடுகளின் பிரச்சனைகளில் தலையிடுவதே முட்டாள்தனமான செயல். ஏன் எனில் தீர்க்க முடியாத பிரச்சனை என்று நமக்குள்ளேயே ஆயிரம் உள்ளன. உள் நாட்டு பிரச்சனையையே தீர்க்க முடியாத நாம் , பிராந்திய வல்லரசாக வேண்டும் என்று நினைப்பது எப்படி சரியாகும். ஒரு வேளை, ஈழப் பிரச்சனையில் தலையீட்டு தான் ஆக வேண்டும் எனில், அதிலும் நேர்மை வேண்டும்.

மதி.இண்டியா said...

//இந்த சூழலில் அமைதிப்படையில் எவராவது குற்றமிழைத்திருந்தால் அது அமைப்பு ரீதியான செயலாக இருப்பதை விட தனி மனித ரீதியான செயலாக இருப்பதாற்கான சாத்தியங்கள்தான் அதிகம்;அப்படி இருக்கும் போது ராசீவை குற்றவாளியாக்கி தீர்ப்பு வழங்கினார் பிரபா.//

எங்கோ படித்தேன்

Unknown said...

அருமையான பதிவு.. தெரியாத பல விசயங்களை விளக்கியுள்ளீர்கள்..

ஜோதிஜி said...

நேர்மையுடன் வாழும் நபர்களும் நாடுகளும் எந்த விசயத்திலும் தலையிட மாட்டார்கள். அருகில் உள்ள சிங்கப்பூரைப் பாருங்கள்?

நன்றி மதி இண்டியா உங்கள் முதல் வருகைக்கு.

நீண்ட நாள் தவறவிட்டுவிட்டேன் முகிலன். வருகைக்கு நன்றி.

suvee said...

தொடரட்டும் உங்கள் பணி நன்றி.....

M.Thevesh said...

மதி.இண்டியா said...

//இந்த சூழலில் அமைதிப்படையில் எவராவது குற்றமிழைத்திருந்தால் அது அமைப்பு ரீதியான செயலாக இருப்பதை விட தனி மனித ரீதியான செயலாக இருப்பதாற்கான சாத்தியங்கள்தான் அதிகம்;அப்படி இருக்கும் போது ராசீவை குற்றவாளியாக்கி தீர்ப்பு வழங்கினார் பிரபா.//

எங்கோ படித்தேன்
ஒரு அதிகாரி செய்திருந்தால், ஒன்று அல்லது இரண்டு கொலைசெய்திருந்தால், ஒன்று அல்லது
இரண்டு கற்பழிப்பு நடந்திருந்தால், ஒரு வீடு நகைக்
காக கொள்ளை அடிக்கப்பட்டிருந்தால் நீங்கள் சொல்
வதுபோல் தனி மனித ரீதியிலான செயலாகப்பார்க்
கலாம் ஆனால் செய்த கொலைகள் பல்லாயிரம்,
கற்பழிக்கப்பட்ட பெண்கள் பல்லாயிரம், கொள்ளை
அடிக்கப்பட்ட நகைகளோ பல லட்சம் உண்மை இப்
படியிருக்கையில் இவை எல்லாம் தனிமனித ரீதியி
லான செயல் என்று சப்பைக்கட்டு கட்டினால் உண்
மையின் பரிமாணத்தை அறிந்து கொள்ளவும் அதை
ஏற்றுக்கொள்ளவும் உங்கள் அடிமை மனப்பான்மை
இடந்தரவில்லை என்பது புலனாகிறது.ஒரு அதிகாரி
தவறிளைத்தால் அதன் முழுப்பொறுப்பும் அவரின்
மேல் அதிகாரி மேல் விழுகிறது.அரியலூர் இரயில்
விபத்தில் மேல் அதிகாரியில்லாத இரயில் இலாகா
மந்திரி லால்பகதூர் சாஸ்திரி பதவியைத்துறந்தார்.
அதேபோல் இந்தியப்படைகளின் மேல் அதிகாரி
இராஜீவ் காந்தி பிரபாகரனால் தண்டிக்கப்பட்டார்.
நீங்கள் போட்டுக்கொண்ட முகமூடியைக்கழட்டி உண்
மையை ஒத்துக்கொள்ளும் தைரியமும் மனோதிட
மும் இருந்தால் தான் பிரபாகரனின் தீர்ப்ப்ய் நீதி
தேவனின் தீர்ப்பு என்பதை ஏற்றுக்கொள்ளமுடியும்.
அனுபவித்தால்தான் வலியின் கொடுமை புரியும்
பார்வையாளர்களால் புரிந்துகொள்ள முடியாது.

ஜோதிஜி said...

அனுபவித்தால்தான் வலியின் கொடுமை புரியும்

ttpian said...

india may be happy that tamil community has lost it's power:
onething is certain,we can regain POWER more than what we had:
Now,most of the (TRUE) tamilians does not like One india business:if india gets beating by china or pakisthan, we will not regret:we will ask them to beat more:when there is no room for tamil community in the world...ell, there should be no room other communities as well!