Monday, December 07, 2009

இலக்கணம் படிக்காத பிரபாகரன்

1987 அக்டோபர் 12

அதிகாலை நேரம்.  இரண்டு காலாட்படை.  மொத்தம் 162 வீரர்கள்.

மெதுவாக முன்னேறிக்கொண்டுருக்கிறார்கள்.  மற்றொரு பக்கம்.  ஹெலிகப்டர் மூலம் காமெண்டோ படை.  மூன்று பிரிவுகள்.  கமெண்டோ படை ஒவ்வொன்றிலும் 30 பேர்கள்.  இவர்களுக்கு இடப்பட்ட கட்டளை காலாட்படை தாக்கும் போது மேலே இருந்து இறங்க வேண்டும்.தாக்க வேண்டும். இவர்கள் சீக்கிய பதிமூன்றாவது ரெஜிமெண்ட் படை. இது போக முன்னேற்பாடுகளில் உள்ள வீரர்கள் என்று தனியாக.

இந்த நிகழ்ச்சிக்கு இந்திய அமைதிபடை வைத்திருந்த பெயர் Operation Bhavan.

அமைதிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் படி பிரபாகரன் இருப்பதாக நம்மப்பட்ட இடம் யாழ்பாணம் மருத்துவமனைக்கு அருகே இருந்த வளாகம்.

மொத்த திட்டமும் தயார்.  வல்லரசு நகர்ந்தது.  தரைவழியே, ஆகாயம் வழியே ஊடுருவி நகர்ந்து முன்னேறியது.  காலாட் படை நகர்ந்து முன்னேற மேலே இருந்து ஹெலிகப்டர் மூலமாக இறங்குவதும் உத்வேகம் என்ற கருதிக்கொண்ட கருப்பு தினம் அது.  எந்திரங்களுக்கும் நிஜமான வீரம் என்பதற்கும் நடந்த கோர யுத்தம் அது.

சென்றவர்களுக்கு, கட்டளை கொடுத்தவர்களுக்கும் தமிழ்நாட்டு நிகழ்வுகளை மனதில் வைத்துருப்பார்கள் போல. சிறிய பிரதேசம்.  சிறிய குழுக்ககள்.  என்ன பெரிதாக இருந்து சாதித்து விடப்போகிறார்கள் என்று தனக்குள்ளே சமாதானம் செய்து கொண்டு களம் புகுந்தார்கள்.

ஹெலிகப்டர் வழியாக வந்தவர்கள் மொத்த பேர்களும், தரையை வந்து அடைவதற்கு முன் தொங்கிக்கொண்டு இறங்கிய வீரர்களுக்கு சொர்க்கலோகம் காட்டப்பட்டது.  முன்னேறி வந்த அத்தனை படை வீரர்களும் முகவரி அற்று முகம் பேந்து செத்து வீழ்ந்தனர். மொத்தம் 296 பேர்களில் இரண்டு பேர்களைத் தவிர மொத்த இந்திய வீரர்களும் ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதில் என்ன சிறப்பு என்கிறீர்களா?
வல்லரசு என்று கருதிக்கொண்டவர்கள் செய்த காரியங்கள் குறித்து பிறகு பார்க்கலாம்.
உள்ளே நுழைந்தது எதற்காக?
அமைதியை நிலைநாட்டுவதற்காக.
எதற்காக இந்தியாவிற்கு அன்று இத்தனை அக்கறை?
பல காரணங்கள்.  சிரிக்க வைக்கும் காரணங்களில் ஒன்று " நீங்கள் இந்த ஓப்பந்தத்தை உருவாக்கி காட்டிவிட்டால் இந்த நூற்றாண்டின் தீர்க்க முடியாத பிரச்சனையை தீர்த்த பெருமை உங்களுக்கு கிட்டும்"  என்று மறைந்த ராஜிவ் காந்தி அவர்களுக்கு சொன்ன பூசாரிகள்.

ஏன் போரிட வேண்டிய அவஸ்யம்?
ஜெயவர்த்தனே உருவாக்கிய தந்திரம். விடுதலைப்புலிகளுக்கு இந்தியா ஆதரவு என்பதை இந்த சமயத்தில் நிரந்தரமாக சமாதி கட்டிவிட்டால் போதும்.  விடுதலைப்புலிகளின் கொள்கைகளே இந்தியாவை "எதிர்காலத்தில்" பார்த்துக்கொள்ளும். வாழ்ந்த இலங்கை ஆட்சியாளர்களில் இந்த ஜெயவர்த்னேக்கு மட்டும் பத்து தலைப்புகளில் எழுதினாலும் போதாது.  அத்தனை "சிறப்பு" பெற்றவர்.

பலிகடா ஆக்கப்பட்டது யார்?
அப்போது இந்திய வீர்ர்கள்.  இறுதியில் ராஜீவ் காந்தி.
பலன் பெற்றது யார்?
இந்தியாவிற்கும் பிரபாகரனுக்கும் நிரந்தர பகையை உருவாக்கிய வகையில் ஜெயவர்த்தனே.  அன்றும் இன்றும் செல்லரித்த நிர்வாகத்தை சீறும் சிறுப்புமாக ஆண்டுக்கொண்டுருக்கும் தனிப்பட்ட ஒரு குழுவின் தலைமை.

இறுதியில் கிடைத்த பரிசு.
ராஜிவ் காந்தி படுகொலை வாயிலாக நீங்காத களங்கம் உருவாக்கிக்கொண்டதில் பிரபாகரன். முள்ளிவாய்க்கால் என்பது இந்திய இறையாண்மை உருவாக்கிய பிரேமையும் பிரேரணைகளும்.

இதில் எந்த இடத்தில் பிரபாகரன் ஆளுமை இருக்கிறது?.

படை எடுத்து உள்ளே அழைத்துச் சென்றவர்களும், படையை தாங்கி நடத்திச் சென்றவர்களும், மேலே இருந்து கட்டளை இட்டவர்களும் படித்த அடிப்படை போர்த்தந்திர அறிவு,கல்வியறிவு,பயிற்சிகள் எதுவும் பெற்றவர் அல்ல பிரபாகரன். போரிடும் கலையைக் கூட முறைப்படி புரிந்தவர் அல்ல.  அவருக்கு தெரிந்த ஒன்றே ஒன்று.  பதுங்கு தாக்கு.  மொத்த தத்துவம் கொரில்லா போர் முறை மட்டுமே.

பிறகெப்படி?
அதுதான் தலைமை ஏற்று நடத்திய பிரபாகரன்,

அன்று அவர் பின்னால் இருந்த மாத்தையா, ஜோனி, பொட்டம்மன், யோகி, நடேசன் போன்றோர்களின் ஆளுமை.  வீரம் என்பதை வீரனாகவே வாழ்ந்து நிரூபித்திக்காட்டியவர்.   இந்திய அமைதிப்படை தன்னை தேடிவரும் என்பதை யூகித்ததோடு மட்டுமல்லாமல் எந்த இடத்திற்கு வருவார்கள் என்பதையும் முன்னால் யோசித்து அவர்கள் வருவதற்கு முன்னே அத்தனை மறைவு இடங்களிலும் மொத்த விடுதலைப்புலி வீரர்களை அங்கங்கே நிறுத்தி அமைதியாய் தலைமையேற்று காத்து இருந்தார்.

வந்தார்கள்.  இறந்தார்கள்.

அப்போது இந்திய அமைதிப்படை வீரர்களுக்கு எடுத்த உதறல் என்பது காலம் காலத்திற்கு மறக்கமுடியாததாய் இருந்து இருக்கும்.  காரணம் பிழைத்த இரண்டு நபர்கள் பேசி இருப்பார்களா என்பதும் சந்தேகம்.

இராணுவம் வருவதற்கு முன்பே காத்துருந்தவர்கள் கொடுத்த பாடம் என்பது இராணுவத்திற்கான தாக்குதல் அல்ல.  துரோகம் என்றால் சுத்தமாக துடைத்து எடுத்து விடவேண்டும்.  மிச்சம் சொச்சம் என்பதெல்லாம் ஆகாது.  இதுவே தொடக்கம் முதல் உருவாக்கி வைத்திருந்த இந்த "லட்சிய வேட்கை" தான் மற்றவர்களை விட அவரை மாறுபடச் செய்தது.  இறுதிவரையிலும் இந்த கொள்கை மாறாமல் இருந்த ஒரே காரணத்தால் வாழ்க்கையும் வேறுபடச் செய்தது.

இதே பிரபாகரன் இந்தியாவைப்பற்றி மிகத் தெளிவாக தீர்க்கதரிசனமாக பேசியுள்ள அவரது நேர்காணல் மூலம் கொடுத்த வார்த்தைகளையும் உள்வாங்கிக்கொள்ளுங்கள்.

" இன்று இவர்களின் சுயலாபத்துக்காக எங்கள் பேராளிகளுக்கு ஆயுதப்பயிற்சி தருகிறார்கள்.  ஆனால் நாளை இவர்கள் தான் எங்களுக்கு எதிராக நிச்சயம் திரும்புவார்கள்".

" எங்கள் மண்ணில் இந்திய இராணுவம் இறங்கிய நாளே எங்கள் போராட்டத்தின் கருப்பு நாள்."

" இந்திய இராணுவத்தின் தலையீடு பற்றி நாங்கள் அதிர்ச்சி அடையவோ, வியப்படையவோ இல்லை.  எதிர்பார்த்து இருந்தது தான்.  இந்தியா என்ன எதிர்பார்க்கின்றது?  என்ன எதிர்பார்க்கும்? என்பது தொடக்கம் முதலே நான் புரிந்து வைத்து இருந்தது தான்.  தொடக்கம் முதலே எதிர்பார்த்து காத்து இருந்ததால் அவர்களை வெல்ல முடிந்தது."

" எங்களது இனப்போரைப் பயன்படுத்திக்கொண்டு இலங்கை அரசை தனது செல்வாக்கு எல்லைக்குள் கொண்டு வருவது தான் இந்திய அரசின் இராணுவத் தந்திர நோக்கம்.  மொத்தத்தில் எங்களை ஆயுதங்கள் இல்லாத நிராயுபாணியாகக்குவதே அவர்களது மொத்த நோக்கம்.  மொத்த தமிழர்களுக்கும் உண்டான தீர்வைப்பற்றி கவலை கொள்ளாமல் எங்களை வழிக்கு கொண்டு வருவதில் தான் அதிகம் செலுத்தினார்கள்."

" நாங்கள் இந்தியாவை வைத்துக்கொண்டு போராட்டத்தை தொடங்கவில்லை.  ஆதரவு கொடுத்தால் மகிழ்ச்சி.  அனுதாபம் காட்டினால் அதை விட சிறப்பு.  எனது மூதாதையர்கள் வாழ்ந்த நாடு.  இன்று எனக்கு மட்டுமல்ல.  எதிர்கால ஒவ்வொரு இலங்கை வாழ் தமிழர்களும் இந்தியா என்பதும், தமிழ்நாடு என்பது மறக்க முடியாத, மறக்கக்கூடாத மண். "

பிரபாகரன் வாழ்க்கையில் தொடக்க ஆண்டுகளைப் (19) பார்த்தால் நாடோடி,தலைமறைவு,பசி,ஏக்கம் என்ற பக்கங்களால் நிறைந்த வாழ்க்கை.  இளமைப்பருவம் என்பது மொத்த குடும்பத்திற்கும் சம்மந்தம் இல்லாத வாழ்க்கையாக மாறிப்போனது.

அதுவே தொடர்ந்து நட்பு கூடிய போதும், அவருடைய மொத்த கொள்கைகளுக்கு ஒத்துவராத நபர்களால் விரக்தி நிறைந்த பக்கங்கள்.  ஓதுங்க முயற்சித்து முன்னேறிக்கொண்டுருந்த காலகட்டத்தில் புதுப்புது பிரச்சனைகள்.

ஒவ்வொன்றும் கோர்த்து மாலையான போது பிரபாகரனின் உருவம் இவ்வாறு மாறிப்போனது.

தனிமை விரும்பி, தேவையில்லாத பேச்சில் ஈடுபடாமை, ஆயுதம் குறித்த அடக்கமுடியா அறிவுத்தேடல், எத்தனை பழைய ஆயுதமாக இருந்தாலும் அக்கு வேறு ஆறு பாகமாக பிரித்து மேய்ந்து உருவாக்கிய அறிவை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் அளவிற்கு ஆழ்ந்த புலமை.
மணம் அதிகம் இருக்கும் மாலை என்பது அதிகமாக விரும்பப்படுவது தானே.  ஆனால் அந்த மாலை எங்கு அளிக்கப்படுகின்றது என்பதும் முக்கியம்.  அவருடைய விதையை தோண்டிப் பார்க்கலாம்.  ஒவ்வொரு தோண்டலின் போதும் புதையலும் வரும். எலும்புக்கூடுகளும் வரும்.

அதன் தான் பெயர் தான் வர்க்கப்போராட்டங்கள். அதனை இலங்கை ஆளுமைவாதிகள் பயந்து நடுங்கியபடி சொன்னார்கள்.
"விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் என்பவர்களை நினைத்தாலே பயம் வருகிறது.  எங்கு இருப்பார்கள்? எப்படி வருவார்கள்?  எவ்வாறு தாக்குவார்கள்? என்பதெல்லாம் நடந்து பிறகு தான் வெளியே தெரியும்".

இலக்கணம் வகுத்து வாழ்ந்தவரின் இலட்சியங்கள் எங்கிருந்து தோன்றியது?  யார் வளர்த்தார்கள்? சுயம்பு என்றாலும் அவரும் வாசித்த பக்கங்கள் உண்டு.  அவர் வாயாலே சொல்லக்கேட்டு தொடர்வோம்.......

9 comments:

இந்திய தமிழன் said...

290 பேர் சாகலாம் , அதுதான் மொத்தமாக துடைக்கப் பட்டுவிட்டார்களே , மகிழ்ச்சி

சுடுதண்ணி said...

நன்றி, தவிர வேறெதும் சொல்ல முடியாத ஒரு உணர்வு..படித்ததும்...

shiva said...

Iyoooo kadavuley innum how long you ppl are going to sing the old stories?Think about how to solve the problems faced by the Tamil ppl of sri lanka.Just sitting in a foreign country and writing blogspots wont solve any problems my dear.

TAMILNADU TAMILAN said...

Must teach a lesson again to india another time.

thiyaa said...

உங்களின் தொடர் மூலம் பல வசியம் அறிய முடிகிறது

ரோஸ்விக் said...

நான் அறிந்திராத தகவல் இது. மிக நன்றி.

லெமூரியன்... said...

தொடருங்கள்...! பகிர்வு அருமை..!
வீழ்ந்துவிட்டார்கள் என்று கொக்கரிக்கும் சில்வண்டுகளை பார்க்கும்போது ஆச்சிரியமாக இருக்கிறது..
வர்க்க போராட்டங்கள் தீர்வின்றி முடிந்து போனதாக வரலாறு இல்லையே எங்கும்..!

வல்லாதிக்க சக்தியாக கான்பித்துகொன்டாலும் வக்கற்ற கோழைகள் என்பது மத்திய இந்தியாவில் நடக்கும் போராட்டம் மூலமே
உலகிற்கு தெரியுமே..! :-) :-)

Anonymous said...

நன்றி, தவிர வேறெதும் சொல்ல முடியாத ஒரு உணர்வு..படித்ததும்...
raavan rajhkumar-jaffna

மணிபாரதி said...

Hi bloggers/webmasters submit your blog/websites into www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends....


www.ellameytamil.com