Friday, October 16, 2009

அச்சமில்லை அச்சமில்லை

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி (50)

மகாத்மா காந்தி வாழ்க்கை கொள்கை இறப்பு சில உண்மைகள் (7)

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி (50)

" இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி புண்ணாக்கி வைத்து விட்டார்களே?" என்ற வசனம் காந்தி காலத்திலும் நடந்து இருக்கிறது.  காந்திஜி கூட்டும் பிரார்த்தனை கூட்டத்துக்கு வந்து கொண்டுருக்கும் ஒரு முஸ்லீம் அன்பர், "  பாபுஜி, பாகிஸ்தானில் இருந்து இங்கு ஓடி வந்த இந்துக்களும், சீக்கியர்களும் தங்கள் தலைமையில் 50 மைல் தூரத்திற்க்கு ஊர்வலமாக சகோதரர்களாய் கைகோர்த்து நடந்து வருவதை நான் என்னுடைய மனக்கண்களால் பார்க்கின்றேன்,  ஆஹா என்ன ஒரு அற்புதமான காட்சி அது"  என்றார்.

இது போதாதா காந்திஜிக்கு.

ஏற்கனவே காந்தி விரும்பிக் கொண்டுருந்த திட்டம் அது.  பாகிஸ்தானுக்கு போக வேண்டும்.  அங்குள்ள சூழ்நிலையை தானே நேரில் சென்று காண வேண்டும்.  காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்து சுதந்திரப்போராட்டத்திற்குள் நுழைவதற்கு முன்னால் இந்தியாவில் பெரும் பயணம் மேற்கொண்டவர்.  காரணம் பயணம் என்பது நிறைய விசயங்களை நமக்கு கற்றுக்கொடுக்கும்.

அதுவும் சராசரி மக்கள் பயணிக்கும் பாதையில், அவர்கள் உடன் பயணிக்கும் போது இன்னமும் நம்மை நெருங்கச் செய்யும்.  அதனால் தான் அவர் பிர்லா மாளிகையில் தங்கி இருக்கும் போதே அதிபர் பிர்லாவிடம் கேட்டார்.

"  நான் பாகிஸ்தான் பயணம் மேற்கொள்ள வேண்டும் " என்று.
கேட்டது தான் தாமதம்.  அவர் பின்னங்கால் பிடறி தெரிக்க ஓட்டம்பிடித்தார்.  பிறகென்ன அவனவன் கொலை வெறியோடு அலைந்து கொண்டுருக்கும் போது, அவஸ்த்தைகளுடன் வாழ்ந்து கொண்டுருக்கும் போது பயணமாவது ஒன்றாவது என்று பிர்லா மனதிற்குள் நிணைத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.

ஆனால் காந்தி விடுவதாய் இல்லை.  தன்னுடைய மருத்துவரான சுசீலா நய்யாரிடம்  " எல்லா ஏற்பாடுகளையும் கவனித்து முடித்து விட்டு நான்கு நாட்களில் அதாவது ஜனவரி 30 ஆம் தேதி வந்து என்னுடைய பிரார்த்தனை கூடடத்தில் கலந்து கொள்  "என்று அனுப்பி விட்டார்.



தன்னுடைய உண்ணாவிரத்தை முடித்துக்கொண்ட போது தான் கொடுத்து இருந்து ஏழு கொள்கைகளில் ஒன்று ஜனவரி 27ம் நாள் குவ்வாத் உல் இஸ்லாம் என்ற நிகழ்ச்சி அவஸ்யம் கொண்டாடப்பட வேண்டும் என்பது.


ஆமாம் அடிமை மன்னரும், டெல்லியின் முதல் சுல்தானுமான குத்புதீன் என்பவரது நினைவு நாள் அன்று.

 டெல்லியில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மசூதியில் வருடம் வருடம் அந்த நிகழ்ச்சிகளை கொண்டாடப்பட வேண்டும் என்பது அவரது ஆசை.  டெல்லியில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மசூதியில் வருடம் வருடம் அந்த நிகழ்ச்சியை கொண்டாடப்படுவது வழக்கம்.  ஆனால் இப்போது உள்ள கலவர சூழ்நிலையில் அந்த நிகழ்ச்சியை கொண்டாடுவதா?  என்று அத்தனை தலைவர்களும் யோசித்துக்கொண்டு இருந்தனர்.


காரணம் பழைமையான   27 இந்து மற்றும் ஜெயின் ஆலயங்களில் இருந்து இடிக்கப்பட்ட பொருட்களில் இருந்து கட்டப்பட்டதாக கூறப்படும் இந்த மசூதி தான் இந்தியாவிலேயே பழமையானது.  பிரச்சனையான இடமும் கூட.                                                     Qila – e – Kuhna Mosque
(கலாச்சாரம் என்பது வெறும் செங்கல் அல்லது கட்டிடம் மூலம் புலப்படுவது அல்ல.  இடிப்பதும், உடைப்பதும் உங்களுக்கு உணர்த்துவது ஒன்றே ஒன்று தான்.  பின்னால் வருகிறவர்களின் கண்ணீர் காவியங்களுக்கு நீங்கள் எழுதி வைத்த முன்னுரை)
ஆனால் காந்திஜியை போன்றே புரிந்து கொள்ளப்படாத நிகழ்ச்சி அன்று நடந்தது. நடந்த ஆச்சரியத்தை என்னவென்று சொல்வது?

காந்திஜி வெற்றிகரமாக சந்தோசமாக தன்னுடைய பேத்திகள் (கைத்தடிகள்) என்று கூறப்பட்ட அபா காந்தி, மனு காந்தி புடை சூழ மசூதியின் உள்ளே சென்றார்.  அது மட்டுமல்ல.  அந்த இரண்டு பெண்களும் எல்லா இடங்களுக்கும் காந்திஜி உடன் செல்ல அங்கே இருந்தவர்கள் அனுமதித்தது முதல் ஆச்சரியம்.

பதினைந்து தினங்களுக்கு முன்னால் இதே இடத்தில் கிர்பான் என்று வாளுடன், கத்தி போன்ற ஆயுதங்களுடன் அலைந்து திரிந்த முஸ்லீம் சீக்கிய மக்கள் இருவரும் கட்டிப்பிடித்து தங்களுடைய ஆனந்த ஆசீர்வாத பறிமாற்றத்தை பரஸ்பரம் தெரிவித்துக்கொண்டனர் என்பது இரண்டாவது ஆச்சரியம்.

மொத்தத்தில் உள்ள வினோதமான ஆச்சரியம் பக்கத்தில் உள்ள இடங்களில் தேநீர், சிற்றுண்டி வகைகளை இலவசமாக வழங்கி சீக்கியர்கள் வந்து போகின்ற அத்தனை முஸ்லீம் மக்களுக்கும் கொடுத்து மகிழ்ந்தனர்.

இதைப் பார்த்த காந்திஜிக்கு பொக்கை வாய் முழுக்க ஒரே சிரிப்பு தான் போங்கள்?

" இதே போல் அணைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்"  என்று கம்பீர உரை நிகழ்த்தினார்.

பிர்லா மந்திருக்கு திரும்பி வந்த காநிதிஜி பின்வருமாறு அன்று இரவு தமது டைரியில் எழுதினார்.


" இந்த குண்டு வெடிப்பில் இருந்து ஆண்டவனது கருணையால் நான் தப்பித்துக்கொண்டேன்.  ஆனால் எப்போது என்னை ஆண்டவன் அழைக்கிறாரோ அப்போது நான் தயாராயிருப்பேன்.  பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி நான் டெல்லியை விட்டுப் போகப் போவதாக நினைத்துக்கொண்டு இருக்கின்றேன்.  ஆனால் என்னால் போக முடியும் என்று தோன்றவில்லை.  யாருக்குத் தெரியும்?  நாளைக்கு என்ன நடக்கும் என்று?"

அதேசமயம் நாதுராம் கோட்ஸே ஒரு முடிவுக்கு வந்து இருந்தான்.

" மொத்தமாக கூட்டமாக சேர்ந்து செயல்பட முடியாது.  நான் ஒருவனே போதும்.  கூட்டணி என்பது எப்போதுமே பிரச்சனை தான்?  அது வீணான சிக்கல்கள் உருவாகும்.  அது போன்ற சிக்கல்கள் இனிமேலும் உருவாகக்கூடாது.  காலம் கடந்து போய்க்கொண்டே இருக்கிறது.  இறுதி வெற்றி மட்டும் தான் நமக்கு முக்கியம்"  என்று தன்னுடைய கூட்டணி மக்களுடன் கலந்துரையாடினான்.

அனைவரும் நாதுராம் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தனர்.  ஆனால் நாதுராம் விரும்பிய ஒரு கைத்துப்பாக்கிக்குத் தான் அதிகம் சிரமப்பட்டனர்.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் அலைந்தனர்.  அவர்கள் விரும்பியபடி அது அவர்களின் கையில் அத்தனை சீக்கிரம் கிடைத்தபாடில்லை,

அவர்களின் நினைவுக்கு கடைசியாக வந்தவர் ஒரு மருத்துவர்.  குவாலியர் நகரில் உள்ள ஹோமியோபதி டாக்டர். தத்தாராய் பர்க்கூர் என்பவர்.

அவர் தீவிரமான ஆர்.எஸ்,எஸ். அனுதாபி.  இவர்கள் மொத்த பேர்களும் அவர் வீட்டை அலைந்து திரிந்து கண்டு பிடித்த நேரம் நடு இரவு தாண்டி பின் இரவு நேரம்.  ஆனால் வந்தவர்களை ஏமாற்ற விரும்பாமல் (பிதா மகன் (?) ) தன்னிடம் உள்ள கருப்பு பெராட்டா தானியங்கி கைத் துப்பாக்கியை கொடுத்தார்.

அது காந்திஜியை கொல்வதற்க்காக உபயோகப்படுத்தப்பட்ட ஆயுதம்.

ஆயுதம் கைக்கு வந்தாகி விட்டது.  ஆனால் கூட்டணியில் உள்ள எவருக்கும் இதற்கு முன் சுட்டு பழக்கம் இல்லை.  என்ன செய்வது?  சுட்டுப் பழக வேண்டும்.  மேலும் இந்த துப்பாக்கி சரியாக வேலை செய்யுமா? என்று அச்சம் அவர்களுக்குள் இருந்து கொண்டே இருந்தது.  டெல்லி வந்தடைந்தனர்.

வந்து இறங்கியதும் சுட்டுப் பழக எந்த இடத்தை தேர்ந்து எடுப்பது? என்று அனைத்து டெல்லி தெருக்களை பார்த்து அலைந்து திரிந்தனர்.  அனைத்து இடங்களில் இடப்பெயர்ச்சியின் காரணமாக


  எங்களை வந்து போட்டோ புடுக்கிறீங்க?  பின்னால பாகிஸ்தானில் இருந்து வர்றவங்க எல்லோரும் ரயில்ல தொத்திக்கிட்டு வர்றாங்க.  அந்தப்பக்கம் போங்க ஜி. (பாகிஸ்தானில் இருந்து இடம் பெயர்ந்து வரும் மக்கள் ஒரு சின்ன சாம்பிள்  இது.  ஆனால் ஒரு இடுகை முழுவதும் மொத்த அவலத்தை புகைப்படமாக போட்டால் நாதுராம் உருவான காரணங்கள் புலப்படலாம். )

மக்கள் கூட்டம் கூட்டமாக நிரம்பி வழிந்தனர்.  கடைசியாக வேறு வழியே இல்லாமல் அவர்களுக்கு அமைந்த இடம் காந்திஜி தங்கியிருந்த பிர்லா மாளிகையின் அருகே இருந்த காடு போன்ற பகுதி.  ஆள் நடமாட்டம் என்பது
அதிகம் இல்லாமல் இருந்த இடம்.  அவர்களுக்கு வசதியாய் போய் விட்டது.



உள்ளே இருந்த ஒரு மரத்தை தேர்ந்து எடுத்து அதில் ஒரு மனிதன் உருவம் வரைந்து அதில் நாதுராம் இருபது அடி தொலைவில் நின்று கொண்டு சுட்டான்.

டெல்லியின் முதல் மசூதி இது.  அவருக்கு வெற்றிச்சின்னம்.  இன்று வரை அவஸ்த்தை பட்டுக்கொண்டு இருப்பவர்களுக்கு?

ஆச்சரியம்.

இது வரையில் முன் பின் துப்பாக்கியே சுட்டுப் பார்த்து பழகியிருக்காத நாதுராம் கோட்ஸே சுட்ட துப்பாக்கி குண்டுகள் நான்கும் ஒன்றன் பின் ஒன்றாக அந்த வரைந்த படத்தின் மார்பில் சரியாக போய் துளைத்து நின்றது.

" அற்புதம்.  அட்டகாசம்.  மிக நன்றாக சுடுகிறாய் நாதுராம் " என்று பாராட்டினார்கள் அவனுடைய நண்பர்கள் ஆப்தேயும் கார்கேயும்.

ஆமாம்.  காந்திஜி இறப்பதற்கு இன்னும் 72 மணிநேரம் மட்டும் தான்
இருக்கிறது.



குறி தவறவில்லை.  ஆனால் மனித மாண்புகள் பெற்ற அத்தனை குறியீடும் மட்டும் தான் தவறி விட்டது.  இன்று வரைக்கும்?

4 comments:

ஜோதிஜி said...

உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தினர்களுக்கும் உங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக்கொண்டுருக்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும்

தேவியர் இல்லத்தின் இனிய தீப ஒளி திரு நாள் வாழ்த்துக்கள்.

மதம் என்பது மனிதர்களுக்கு நல்ல மாண்புகளை கற்றுத்தந்து.
உருவாக்கும் மகிழ்ச்சி, கடந்து வந்த பாதையை மறக்காமல் இருக்க கற்றுத்தந்ததாக இருக்கட்டும்.

நேசம் என்பதும், உருவாகும் அக்கறை என்பதை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எல்லையில்லா சிந்தனைகளை நமக்கு அளிக்கட்டும். நம்முடைய சிந்தனைகளில் இருளை அகற்றி வெளிச்சத்தை உருவாக்கக் கூடியதாக இருக்கட்டும்.

நாகரிகம் மிகுந்ததாக கருதிக்கொண்டுருக்கும் நம்முடைய வாழ்க்கையை நம்முடைய வழிதோன்றல்களுக்கு இன்னும் சிறப்பான முன்னேற்பாடுகளுடன் வழங்குவோம் என்று இந்த நாளில் உறுதி ஏற்போம்.

இனம் என்பதை மறந்து வாழும் நாம், அக்கரையில் உள்ளவர்களுக்கு நம்முடைய அக்கறையினால் வலிமையான சிந்தனையினால் அவர்களின் வாழ்வில் வளம் அமைய வேண்டும் பிரார்த்திப்போம். முடிந்தவரையிலும் முயற்சிப்போம்.

விடியல் வராமலா அரக்கன் அழிந்த தினம் என்று இந்த தீபாவளியை கொண்டாடுகிறோம்?

நட்புடன்

ஜோதி கணேசன் தேவியர் இல்லம். திருப்பூர்.

தமிழ் அஞ்சல் said...

):!

பின்னோக்கி said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

// கூட்டணி என்பது எப்போதுமே பிரச்சனை தான்?

:)

//என்னால் போக முடியும் என்று தோன்றவில்லை

அவருடைய உள் உணர்வு அவருக்கு உணர்த்தியிருக்குறது போல

ஜோதிஜி said...

உங்கள் இருவரின் இடைவிடாத ஆர்வம் வியக்க வைக்கின்றது. மற்றொரு வகையில் சொல்லப்போனால் புதுத்துணி கசங்காத நேரத்திலும் கூட தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் என்பவர்களின் கூட்டணி (?) நன்றி.