Showing posts with label Govt School Students 7.5% for Medical Seat. Show all posts
Showing posts with label Govt School Students 7.5% for Medical Seat. Show all posts

Friday, December 31, 2021

அரசு பள்ளிக்கூட மாணவர்களின் கனவு 7.5 சதவிகிதம் - திமுக ஏன் அழிக்க விரும்புகின்றது

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இருவரும் தமிழகத்தில் உள்ள மிகப் பெரிய மாற்றங்களுக்குப் பின்னால் உள்ள சிறிய புள்ளியைத் தொடங்கி வைத்தவர்களாக என் கண்ணுக்குத் தெரிகின்றார்கள்.  இட ஒதுக்கீடு என்ற விசயத்தில் முறையே 50 சதவிகிதம் கடைசியாக ஜெயலலிதா உருவாக்கிய 69 சதவிகிதம் என்பது இங்கே மிகப் பெரிய சமூக மாறுதல்களை உருவாக்கியது. 



எம்.ஜி.ஆர். - ஜெ. ஜெயலலிதா: 1970 - 2016 Tamil Nadu Political History

இதனை இங்கே குறிப்பிட்டு எழுதக் காரணம் கருணாநிதி போல ஒவ்வொன்றிலும் தனக்கு என்ன ஆதாயம்? என்பதனைப் பார்க்காமல் அந்தப் பிரச்சனை தொடர்ந்து இருக்க வேண்டும் என்று கிரிமினல் தனம் செய்யாமல் முறைப்படி சட்டப் பாதுகாப்பு செய்து வைத்த காரணத்தால் இட ஒதுக்கீடு விசயத்தை எவராலும் கை வைக்க முடியவில்லை.