Sunday, August 21, 2022

பொம்மையை வைத்து பொம்மலாட்டம் நடத்துபவர்களின் கவனத்திற்கு

20 ஆகஸ்ட் 2022 அன்று முரசொலியில் சிலந்தி என்ற புனை பெயரில் எழுதுகின்றவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் குறித்து தரம் தாழ்ந்து ஒரு கட்டுரை எழுதி வெளிவந்துள்ளது. அதற்குப் பதிலாகத் தமிழக பாஜக வில் இருந்து இரண்டு கட்டுரைகள் வெளிவந்துள்ளது.  ஒன்று குளவி என்ற பெயரில் ஒரே நாடு இதழில் வெளியாகி உள்ளது. (முரசொலி என்னும் முடைநாற்றக் காகிதம் – குளவி) மற்றொன்று காவி மகன் எழுதிய கட்டுரையிது.



பொம்மையை  வைத்து பொம்மலாட்டம் நடத்துபவர்களின் கவனத்திற்கு

மறைந்த தமிழக முதல்வர் சிஎன். அண்ணாதுரை அவர்கள் தோற்றுவித்த திமுக என்ற கட்சிக்கு அறுபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னால் சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்திற்கும் வித்தியாசம் தெரியாத ஒருவர் தலைவராக வந்து சேர்வார் என்று  அவர் மட்டுமல்ல திமுக வில் உள்ள எவருமே கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.  தற்போதைய தமிழக அமைச்சரவையில் இருக்கும் ஒருவர் சொன்ன பாராட்டு வார்த்தைகள் போல இந்த "மண்ணு மூட்டை" யைத் தமிழர்கள் சுமக்க வேண்டும் என்பதே காலம் போட்ட சதியாக உள்ளது. 

நேர்மையான காவல் துறை அதிகாரியாக பணியாற்றி "சிங்கம்" என் பெயரெடுத்து தமிழர்களுக்கு அரசியல் விடிவு காலத்தை உருவாக்கிட தன் தனிப்பட்ட வாழ்க்கையைத் தியாகம் செய்து  நிஜமான "அண்ணா"வாக   வந்து சேர்ந்துள்ளதைப் பார்த்து காலத்தோடு கரைந்து போன அண்ணாதுரை மகிழ்ந்தே பாராட்டியிருப்பார். தினமும் உளறுவதை வாடிக்கையாகக் கொண்டவரை நொங்கெடுப்பார் என்று நினைத்து மகிழ்ந்திருப்பார். 

எழுத்துக்கலை மற்றும் பேச்சுக்கலை என்பதனை உயிர் மூச்சாகக் கொண்டு வளர்த்த கட்சிக்கு இந்த இரண்டில் மட்டுமல்ல எந்த தனித்திறனும் இல்லாத தத்தியறிவு படைத்த ஒரு பொம்மை தலைமையாக வரும். அதனை இயக்க ஒரு கும்பலும் உருவாகும் என்று கருணாநிதி கூட நினைத்திருக்க மாட்டார்.

கருணாநிதி உயிருடன் இருந்தவரை தன் வாரிசுகள் எவரையும் தன் இடத்திற்கு வர ஏன் அனுமதிக்கவில்லை? என்பதனை இப்போது தமிழக மக்கள் உணர்ந்திருப்பார்கள் என்றே நம்புகிறேன். காரணம் தான் பெற்ற அனைத்துப் பிள்ளைகளும் "கடைசி பெஞ்ச்" என்பதனை அவர் உணராமல் இருந்து இருப்பாரா? அந்த கொடுமையான விளைவுகளைத்தான் நாம் இன்று தமிழகத்தின் முதல்வர் என்ற பதவியில் இருப்பவர்  மூலம் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றோம்.

நாள் தோறும் எழுதி வைத்த துண்டுச் சீட்டில் இருப்பதை வாசிக்கக்கூடத் தடுமாறுவதும், தொடர்ந்து மாறி மாறி உளறுவதையும் காணும் போது வருத்தமாக உள்ளது. தமிழக மானம் மற்ற மாநிலங்களில் காற்றாடி போல பறக்கின்றது. என்ன தான் திருட்டு திராவிடத்தின் கொத்தடிமை போல இருக்கும் ஊடகவாதிகள் மறைக்க முயன்றாலும் முதல்வர் முகத்தில் உள்ள  மேக்கப் போலவே ஒட்டாமல் இருக்கின்றது. முதல்வர் தன் வயதுக்குத் தொடர்பு இல்லாமல் தலையில் மாட்டியிருக்கும் கருப்பு விக் போல சிரிப்பை வரவழைக்கின்றது.

மொத்தத்தில் திராவிட திருட்டு மாதிரி ஆட்சியைப் பார்த்து உலகின் மறுமுனையில் வாழும் தமிழர்கள் சிரிப்பதா? அழுவதா? என்று தெரியாமல் தங்கள் ஆதங்கத்தை சமூக வலைதளத்தில் எழுதித் தள்ளிக் கொண்டேயிருக்கின்றார்கள். தமிழக அரசியல் என்பது நாடக நடிகர் வேசம் கட்டுவது போல போய்க் கொண்டு இருக்கின்றது. நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பார்க்கும் போது தமிழக ஆன்மா இன்று அழுகி நாறிப் போய் தான் கிடக்கின்றது.

தமிழக முதல்வர் கோட்டையில் அமர்ந்திருக்கும் நாற்காலி கூட வருத்தப்பட்டு  கண்ணீர் சிந்தியிருக்கும். எப்பேர்ப்பட்ட திறமைசாலிகள் எல்லாம் இதில் அமர்ந்துள்ளனர். ஆனால் நான்கு வரிகளைத் துண்டுச் சீட்டில் எழுதி வைத்து வாசிக்கும் போதே தடுமாறும் இவர் வந்து அமரும் நிலை வந்து விட்டதே என்று நான்கு கால்களும் கண்ணீர் விடுவதைப் போலத் தமிழக மக்கள் ஆட்சி என்ற பெயரில்  நடந்து கொண்டிருக்கும்   நாடக கோமாளிகளைக் கண்டு வருத்தப்படாத நாளே இல்லை என்பதாக மாறியுள்ளது.

ஆங்கிலேய பாதிரி கால்டுவெல் உருவாக்கிய  பிரித்தாளும் வார்த்தை தான் திராவிடம். இந்த பொய்மால வார்த்தையைக் கடந்த 100 ஆண்டுகளாக பாதுகாத்து வந்து இன்று தமிழர்களை "நாங்கள் தமிழர்கள்" என்று சொல்லவே வெக்கப்படுகின்ற அளவுக்கு உருவாக்கிய நஞ்சு கொள்கைகளை உடைக்க வந்த அண்ணாமலையைப் பார்த்து உங்களுக்கு ஏன் இத்தனை அச்சம்?  

இந்து மதம் என்பது வாழ்வியல் நெறி என்பதனை உறக்கச் சொல்லி உறங்கிக் கிடந்த தமிழினத்தை மீண்டும் ஒன்று சேர்த்துக் கொண்டிருக்கும் தமிழக பாஜக தலைவரை எதிர்த்து நிற்க முடியாமல் அவர் காவல்துறையில் பணியாற்றிய காலகட்டத்தை பொய்யும் புனைவுமாக எடுத்துச் சொல்ல உங்களுக்கு என்ன தகுதியுள்ளது?

ஆட்சியைக் காட்சி போல நடத்துவதும், காவல்துறை அதிகாரிகளை டாஸ்மாக் பாதுகாவலர்களாக மாற்றுவதும் திருட்டு திராவிடத்தின் அடிப்படை என்றாலும் கர்நாடக காவல்துறை குறித்து உங்களுக்கு என்ன தெரியும்?

தமிழர்களின் இரத்தம் குடிக்க டாஸ்மாக் என்ற பெயரில் விஷ எரிசாராயத்தை உங்களைப் போல வழங்குகின்ற அரசியல்வாதிகள் அங்கே யாருமில்லை. கட்சிகள் வேறு. ஆட்சிகள் வேறு. கொள்கைகள் வேறு. ஆனால் அடிப்படையில் கர்நாடக அரசியல்வாதிகள் அதிகாரிகளை எப்படி நடத்த வேண்டும்? என்பதனை அறிந்தவர்கள். உண்மையான மொழிப்பற்று உள்ளவர்கள். தேச நலனைப் போலவே மாநில நலனில் அக்கறை கொள்பவர்கள். அப்படி வாழ்கின்ற மக்களிடம், மாணவர்களிடம் பலமுறை பல தலைப்புகளில் அண்ணாமலை பேசியிருப்பதும் இன்று வரையிலும் சமூக வலைதளங்களில் வைரலாக வந்து கொண்டு தான் இருக்கிறது.

 கர்நாடக மக்களுக்கு உரையாற்றிய மேடைப் பேச்சில் குற்றம் கண்டு இன்று குதூகலமடையும் உங்களை யாரால் திருத்தமுடியும்? என்றே தெரியவில்லை.

கோபாலபுரம் தான் தமிழ்நாடு என்று கொத்தடிமையாக மாற்றப்பட்டு, வசூலிப்பதற்காகவே சேர்க்கப்பட்டு கொள்ளையடிப்பதே கொள்கையென்று உருவாக்கி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் தமிழர்களின் இரத்தத்தை உறிஞ்சி வாழ்வதே வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களைப் போன்றோர்களைப் பார்ப்பதையே அருவருப்பாக உணர்கின்றேன். உங்களுக்கு எல்லாம் பதில் அளித்துக் கட்டுரை எழுதத் தான் வேண்டுமா? என்று யோசித்துப் பார்க்கின்றேன். உறுதியாகவே சொல்ல முடியும். நிதானத்துடன்  தான் அண்ணாமலை அவர்கள் தன் அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார். நீங்கள் சிக்க வைக்க முடியாத அளவுக்கு நெருப்பு போல இருப்பதால் அந்த மலையைக் கண்டு உங்கள் குலை நடுங்குவதை உணர முடிகின்றது. உங்கள் உளறல் கண்டு சிரிப்பு வருகின்றது.

மனிதர்களுக்கு உருவாகும் பண விருப்பம் என்பது வேறு. பண வெறி என்பது வேறு. பணத்தாசை என்பது வேறு. ஆனால் திராவிட திருட்டு கும்பலிடமிருப்பது மனநோய்.  பத்தாண்டு தண்டனைக்காலம் முடிந்து தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தைச் சூறையாடிக் கொண்டிருக்கும் வேகத்தைப் பார்த்தால் மனரீதியாகப் பாதிக்கப்பட்டு வாழும் ஃபோபியா கொண்ட மனிதர்களாகவே ஒவ்வொரு நபரும் தெரிகின்றார்கள். குண்டர் சட்டத்தில் உள்ளே இருந்தவன். பாலியல் வக்கிரத்தை பட்டப் பகலில் வெளியே காட்டியவன். பல்வேறு வழக்குகளை சந்திப்பவன். ஐந்து கட்சி மாறி அடியாள் வேலை பார்த்துக் கொண்டிருப்பவன், வயது வித்தியாசம் கூட பார்க்காமல் சின்னப்பயலே சேதி சொல்லடா என்று வாழ்க கோஷம் போட்டு தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள நினைப்பவன் என்று அத்தனை குற்றவாளிகளையும் வைத்துக் கொண்டு அண்ணாமலை பேசிய பேச்சில் குற்றம் காணும் உங்களை எந்த பட்டியலில் சேர்ப்பது.  தமிழ்தாய் வாழ்த்து முழுமையாக சொல்லத் தெரியாத உங்களைப் போன்றவர்கள் தமிழகத்தின் சாபக்கேடு. 

பகுத்தறிவு என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு அதற்கு ஒருவரை உதாரணமாகக் காட்டிக் கொண்டு உதார் விடும் உங்களைப் பார்க்கும் போது பாவமாக உள்ளது. அனைவருக்கும் பொதுவான அரசு என்று சொல்லிக் கொண்டே அவரவர் வீட்டு மண் எடுத்து வேறொரு இடத்திற்குக் கொண்டு செல்ல உங்களுக்குக் கப்பம் கட்ட வேண்டும் என்று சொல்கின்றீர்கள். தமிழக வளங்களை எல்லாப் பக்கத்திலும் இருந்து சுரண்டுவதை, சுருட்டுவதை இன்னமும் நிறுத்தவில்லை.  

சமூகநீதி என்ற வார்த்தையை விடாமல் பிடித்துக் கொண்டு மாவட்டம் தோறும் ஒவ்வொரு பிரிவினரையும் சாதிய தமிழர்களாக மாற்றிய உங்களை யார் வந்து தான் திருத்தப் போகின்றார்கள்? எவர் வந்து பாடம் கற்பிக்கப் போகின்றார்கள்?

அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழ்க்கை வாழும் எளிய மனிதர்களை கூறுபோட்டு விலைக்கு வாங்கும் உங்கள் வாக்கு அரசியலை  எப்போது தான் நிறுத்தப் போகின்றீர்கள்?

சுடலை மாதிரி, தத்தி மாதிரி, துண்டுச்சீட்டு மாதிரி என்பதெல்லாம் கடந்து வந்து தற்போது திராவிட மாதிரி என்ற வார்த்தை அலறலாக எங்கு பார்த்ததாலும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.

இதன் நேரிடையான அர்த்தமென்பது மாதம் தோறும் கப்பம். ஒவ்வொரு துறையும் அலுங்காமல் குலுங்காமல் தினமும் வசூலிக்கும் பணத்தை தனிப்பட்ட முறையில் சுருட்டிக் கொள்ளாமல் கொண்டு வந்து கொடுப்பவனே அமைச்சர்.  திராவிட திருட்டு கும்பல் வந்த பாதையைக் கூட கிருமி நாசினி கொண்டு மக்கள் கழுவி விடவே நினைக்கின்றார்கள். ஆனால் வயலில் சிவப்பு கம்பளம் விரித்து விவசாயிகளிடம் குறை கேட்டுச் சென்ற கோமாளித்தனம் என்பது தமிழக அரசியலில் என்றும் நீங்காத கறை. விவசாயமும் தெரியாது. விவசாயிகளின் குமுறலைப் பற்றி சொல்லி புரிய வைத்தாலும் முடியாது என்கிற நிலையில் இருக்கும் வசூல் கும்பலிடம் தமிழகம் சிக்கியிருப்பதை நினைக்கும் போதே வருத்தமாக உள்ளது.

சிறையில் இருக்க மட்டுமே தகுதி படைத்த உங்கள் குண்டாயிச கூட்டத்தில் உள்ள ஒவ்வொருவரிடமும் நான் இனி என்ன பேசுவது? எப்படி புரியவைப்பது என்றே தடுமாறிப் போய் நிற்கின்றேன். காரணம் பார்த்தாலே பரவசம். நினைத்தாலே முக்தி என்பதாகச் சொல்லப்படும் பக்தி சார்ந்த ஊர்களைப் போலவே உங்களைப் பற்றி எழுத உட்கார்ந்தாலே என்னுள் எறியும் எரிச்சலைக் கண்டு உள்ளம் குமுறுகின்றது.

நெஞ்சுக்கு அநீதி என்பதாக ஒருவர் வாழ்ந்து முடித்துப் போய்ச் சேர்ந்து விட்டார்.  அவர் வாழ்ந்த காலத்தில் ஊழல் மூலம் மட்டுமே சம்பாதித்து எத்தனை லட்சம் கோடி என்பது இன்று வரையிலும் யாராலும் யூகிக்க முடியாத அளவுக்கு அவர் அரசியல் பணியை ஊழலில் தொடங்கி ஊழலை வைத்தே ஊழலுக்காகவே வாழ்ந்து தன் அரசியல் வாழ்க்கையை முடித்தும் போய்விட்டார். அவர் சமாதிக்கு எத்தனை அலங்காரம் செய்தாலும் ஊழலின் தந்தை என்பதனை உங்களால் மாற்ற முடியுமா?

ஆனால் தன்னுடைய ஒவ்வொரு வாரிசுகளும் தன்னை விட அரசு பணத்தை ஆட்டையைப் போடும் விசயத்தில் மட்டும்  பதினாறு அடிகள் பாய்வார்கள் என்று அவர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.

தமிழக அரசியலில் கர்மவீரர் காமராஜர் முதல் பலரும் உண்மையான தமிழக வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராகத் தமிழகத்திற்குச் சேவையாற்றியுள்ளனர். முதல் முறையாக முதல்வர் பதவியை அடைய ஏஜென்சி முறையில்  பீகாரிலிருந்து ஒரு பிராமணரை வரவழைத்துக் கூச்சப்படாமல் அவர் கும்பிடு போடச் சொன்ன இடங்களிலெல்லாம் குனிந்து கூத்துப்பட்டறை போல கும்பிடப் பழகிய கொடுமையெல்லாம் இதுவரையிலும் தமிழகம் பார்த்தே இருக்க முடியாத ஒன்று.

நடிகர் போல வசனத்தை மனப்பாடம் செய்து ஒப்புவித்து, பயிற்சி அளித்து, அலங்கார பொம்மைக்கு மேக்கப் போட்டு, தலைக்குக் கரு கருவெனப் பொருந்தாத விக் அணிவித்து  ஒரு கோமாளியைத் தமிழக அரசியல் காணும் என்பதனை யாராவது யூகித்து இருப்பார்களா?

அரசியல் குடும்பத்தில் பிறந்தவர், அரசியலில் வாரிசாக வரக்கூடியவர், பிறந்த போதே திருட்டுப் பணத்தில் வாங்கிய தங்க ஸ்பூனில் உணவருந்தியவர் என்று கூறப்பட்டவர் கூமுட்டையாகத்தான் வளர்வார் என்பதனை அவர் அப்பாவே உணர்ந்து இருக்க மாட்டார். உணர்ந்த நாள் முதல் இது இனி தேறாத கேஸ் என்று தான் கடைசி வரைக்கும் அல்லக்கையாகவே வைத்திருந்து தன் பதவி நாற்காலி பக்கம் வர அனுமதிக்காமலேயே கூட்டத்தோடு கூட்டமாக வைத்திருந்தார்.

தமிழக அரசியல் அரிச்சுவடி என்பதனையே அறியாத ஒரு அப்பாவியை முதல்வராக மாற்றிய விஷ கும்பலின் சாமர்த்தியத்தை நினைத்து நிஜமாகவே ஆச்சரியப்பட்டுள்ளேன்.  மேக்கப் கலையாத வரைக்கும் நடிகர் என்பது போல தினமும் இதற்கென பாடுபடும் கூட்டத்தைக் கண்டு வியந்து போய் நிற்கிறேன்.

பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தன் காவல்துறை பணியில் சந்தித்த சாதாரண குற்றவாளிகளை விட இந்த ஓயிட் காலர்  திராவிட திருடர்களின் திறமையை நிச்சயம் மனதிற்கு வியந்திருப்பார் என்றே நினைக்கின்றேன்.

தேர்தல் சமயத்தில் ஏலம் விடுவதைப் போல பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து அதனைப் பாட்டாக, வசனமாக ஒப்புவித்து விட்டு ஆட்சிக்கு வந்தவுடன் அமைச்சராக இருக்கும் ஒரு ஆணவ கோமாளி கேட்பது என்னவென்றால் நாங்கள் தேதி போட்டு கொடுத்து இருக்கிறோம்? பொய் பேச அஞ்சுவதில்லை. தவறான தகவலை மீண்டும் மீண்டும் உண்மை போலவே எழுதப் பேசக் கூச்சப்படுவதும் இல்லை.

திருட்டுக்கூட்டத்தில் ஒருவருக்கொருவர் விஞ்சுவதாக இருப்பதைப் பார்த்து தமிழக மக்கள் ஆச்சரியமாகவே பார்க்கின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் நிர்வாக அறிவு என்றால் என்னவென்றே அறியாத மக்குகளுக்கு முதல்வர் பதவி கிடைக்கும்.  மற்ற மாநிலங்கள் எல்லாம் கழட்டி அடித்துக் காணாமல்  புதைத்திருப்பார்கள்.

கடந்த ஐம்பது வருடங்களில் சட்டமன்ற உறுப்பினர் பதவி முதல் மேயர் பதவி வரைக்கும் கூடுதலாகத் துணை முதல்வர் வரைக்கும் அதிர்ஷ்ட காற்று இழுத்துக் கொண்டு சென்றதன் பலன் முதல்வர் பதவி வரைக்கும் கொண்டு வந்து சேர்த்துள்ளது? இங்கே என்ன நடக்கின்றது? அதிகாரிகள் கையில் ஆட்சியைக் கொடுத்து விட்டு பேருந்தில் செக்கர் வேலை பார்க்கவும், எளிய வறுமை நிறைந்த வீடுகளில் தான் நுழைவதற்கு முன்னால் லைட்டும் கேமராவும் நுழைய வைத்து செட் பிராபர்ட்டி போல ஒடுக்கப்பட்ட மக்களை அசிங்கப்படுத்துவது தான் நடந்து கொண்டுருக்கின்றது. முதல்வர் என்ற பதவி கடைசியில் நடிகர் போல மாறியுள்ளது.

தமிழக அரசியலில் இன்று நடந்து கொண்டு இருப்பதைப் பார்த்து துண்டுச்சீட்டு சுடலை என்பது மக்கள் அளித்த பட்டப் பெயர் அல்ல. தமிழக அரசியல் வரலாற்றில் இப்படிப் பட்ட  தத்தியெல்லாம் இந்த புனிதமான முதல்வர் பதவியில் அமர்ந்த கொடுமையை எந்த கருப்பு மை பேனாவால் காலம் எழுதப் போகின்றது என்பதனை பலமுறை யோசித்துள்ளேன்.

ஸ்ரீமதி மரணம் | கள்ளக்குறிச்சி கலவரம் நடந்தது என்ன...? | திட்டமிட்டு செயல்பட்டது யார்?? | JothiG

2021  மே மாதம் முதல்வர் பதவியில் அமர்ந்த நாள்  முதல் இன்று வரையிலும் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தது இல்லை. சந்திக்கக்கூடிய எண்ணமும் இல்லை.  காரணம் மேடையில் பேசும் பேச்சே உளறலாக இருக்க ஊரே கைகொட்டிச் சிரிக்க இதற்கு மேலாக ஊடகங்கள் கேட்கும் கேள்விகளுக்கு எப்படி பதில் அளிக்க முடியும்?  காட்டிய இடத்தில் கையெழுத்துப் போடுவதும் நடக்கும் நாடகத்தில் நடிகராக மாறுவதும் உள்ள இந்த காட்சி எப்போது முடிவுக்கு வரும் என்று என்னைப் போலவே பலரும் கேட்கின்றனர்.

தமிழக காவல்துறை என்பது தமிழக அரசியல்வாதிகளுக்கும், டாஸ்மாக் பாதுகாப்பு  அளிக்கக்கூடிய சாதாரண நபர்கள்.  ஆனால் அண்ணாமலை பணிபுரிந்த கர்நாடக காவல் துறை என்பது வேறு. வெவ்வேறு கட்சிகள். வேறுவிதமான கொள்கைகள் என்றாலும் முதல்வர் பதவியில் அமர்ந்தவர்களுக்குக் கர்நாடக காவல்துறையின் கண்ணியத்தைக் காக்கத் தெரியும்.  அதனால் தான் அண்ணாமலை அவர்கள் தான் பணி புரிந்த போது மிகக் குறுகிய காலத்தில் ஐஎஸ்ஓ தரச்சான்று என்பதனை முதல்முறையாகக் காவல் நிலையங்கள் பெற முடியும் என்பதனை நிரூபித்தார்.  மக்கள் விரும்பக்கூடிய உடனடி "முதல் தகவல் அறிக்கை" என்பதனை செயலாக்கத்தில் கொண்டு வந்து ஆச்சரியப்படுத்தினார்.  

விலைப்பட்டியல் போட்டு கொள்ளையடிக்கும் தி.மு.கழக கண்மணிகள் |

கர்நாடக முதல்வராக இருந்த சித்தராமையா முதல் குமாரசாமி வரைக்கும் அண்ணாமலையின்  பணிவிலகலை அனுமதிக்கவே இல்லை என்பதற்குப் பின்னால் உள்ள அர்ப்பணிப்பு பற்றி உங்கள் கூட்டத்திற்குத் தெரிய வாய்ப்பே இல்லை.  சாதனைப்பட்டியல் என்று வசனம் எழுத ஒரு கூட்டம். பரஸ்பரம் பட்டங்கள் வழங்கிக் கொண்டு புளகாங்கிதம் அடைய மற்றொரு கூட்டம்.  இடையில் தகுதியில்லாதவர்களைக்கூடப் பணி உயர்வு என்ற கருவாடு காட்டி ஊழல் பக்கம் திருப்பி பலன் அடைந்த அதிகாரிகளை வைத்து நிர்வாகத்தை மாற்றிய உங்களை எல்லாம் காலம் என்ன பாடுபடுத்தப் போகின்றதோ? 

உங்கள் கூட்டத்திற்கு தெரிந்த வார்த்தைகள் மூன்றே மூன்று தான். 

கமிஷன், கலெக்சன், கரப்ஷன்.

காத்திரு பகையே. காலம் கவனிக்கும்.

No comments: