13 பில்லியன் டாலர் என்பது இந்திய மதிப்புக்கு ஒரு லட்சம் கோடி.
சீனா 76 பில்லியன் டாலர் அளவுக்கு இந்தியச் சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றது. இந்திய அலைபேசி சந்தை என்பதனை சீனா தன் அக்குள் வைத்துள்ளது. மின்னணு தொடர்பான அனைத்து அடிப்படை உபகரணங்களும் அவர்களை நம்பி இருந்து பழகிவிட்டோம். மேக் இன் இந்தியா செல்ப் எடுக்காமல் இருப்பதற்குப் பின்னால் உள் காரணத்தை நண்பர்கள் எழுத வேண்டும்?
ஆனால் இந்தியா சீனா ஊடல் தொடங்கிய சில மாதங்களில் தற்போது 6 பில்லியன் டாலர் அடிவாங்கியுள்ளது. அதாவது ஊரடங்கு சமயத்தில் இறக்குமதி அதிகமாக இருந்தது. இப்போது ஏற்றுமதி அதிகமாகியுள்ளது. இந்த ஆடு புலியாட்டம் எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை.
இராணுவம் தொடர்பான செய்திகள் என்பது 98 சதவிகிதம் கிளர்தெழுச் செய்யும் உணர்வுகளுடன் கூடிய செறிவூட்டப்பட்ட செய்திகளும், உள்ளே இரண்டு சதவிகிதம் உண்மைச் செய்திகளும் தான் இருக்கும். ரொம்பவும் உணர்ச்சி வசப்படாதீர்கள்.
இப்போது இந்தியாவும் சீனாவும் இங்கி பாங்கி விளையாட்டு விளையாண்டு கொண்டு இருக்கின்றார்கள். இது போருக்கான ஒத்திகை அல்ல. நான் உன்னிடம் இருந்து இவற்றையெல்லாம் எதிர்பார்க்கிறேன்?. நீ இப்படியெல்லாம் எனக்கு எதிராக இந்நத்த இடங்களில் பேசக்கூடாது? நான் தெற்கு ஆசியாவில் அண்ணாத்தே. நீ எப்போதும் என் சின்னத்தம்பி தான் என்பது போன்ற மறைமுக நிர்ப்பந்தங்களை அளிக்கவே இந்த டகால்டி வேலையை லடாக் பகுதியில் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
மேலும் அவர்களின் கனவுத்திட்டமாக ஒரே ரோடு, ஒரே சாலை, ஒரே இணைப்பு என்ற ஆப்ரிக்கா வரைக்கும் சென்று சேர்வது கனவாக மாறி போட்ட காசு வாய்க்கரிசியாக மாறிவிடுமோ என்ற அச்சமும் உள்ளது. இந்தச் சமயத்தில் கூட அமெரிக்கா தான் வேகமாகச் சீனா ஜவான்கள் எத்தனை பேர்கள் இறந்தார்கள் என்று வெளியிடுகின்றது.
சீன அதிகாரத்திற்கு மக்கள் மேல் கூட அக்கறையில்லை. தன் ஆளுமை சீன மக்கள் ஏற்றுக் கொண்டதைப் போல உலக மக்களும் இனி ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்று தான் மாமல்லபுரம் வந்த மகான் மறைமுகமாகச் சொல்ல வருகின்றார்.
தற்போது இந்தியாவிற்கு இருக்கும் ஒரே பலம் சீனா மேல் உலக நாடுகளில் முக்கால்வாசி நாடுகள் கொலை காண்டாக உள்ளது. எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் எவரும் வாயைத் திறக்க முடியாத அளவிற்குச் சீனாவை நம்பித்தான் ஒவ்வொரு நாடும் தத்தமது உற்பத்தித்துறைகளைப் படு மோசமாக வைத்துள்ளது.
சீனாவிற்கு எப்போதும் பணம் மட்டும் தான் முக்கியம். சாதி, மதம், கடவுள் என்பது எல்லாமே சீனர்களைப் பொறுத்தவரைப் பணம் மட்டுமே. கொள்கை என்பதோ அறம் என்பதோ, உபதேசம் போன்ற விசயங்களோ அவர்கள் தின வாழ்க்கையில் இல்லை. அரசியல் தலைகளிடம் அப்படியெல்லாம் இந்த உலகில் வார்த்தைகள் உண்டா? என்று கேட்கும் அளவிற்கு நல்லவர்கள்.
செயல்பாடுகளும், உழைப்பும் இத்துடன் அபகரிக்க வாய்ப்பு கிடைக்குமா? என்ற தொல்லை நோக்குப் பார்வையும் கொண்டவர்கள் சீனர்கள். சீனப் பொருட்கள் இறக்குமதியாகுவதில் இந்தியாவில் கொல்கத்தா துறைமுகத்தின் வாயிலாகத்தான் 20 சதவிகிதம் வந்த கொண்டிருக்கிறது.
2 comments:
இந்தியா சீனா ஊடல் - இராணுவம் தொடர்பான செய்திகள் என்பது 98 சதவிகிதம் கிளர்தெழுச் செய்யும் உணர்வுகளுடன் கூடிய செறிவூட்டப்பட்ட செய்திகளும், உள்ளே இரண்டு சதவிகிதம் உண்மைச் செய்திகளும் தான் இருக்கும். ரொம்பவும் உணர்ச்சி வசப்படாதீர்கள். - அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி
இந்த தீநுண்மி காலத்தில் தொல்லை நோக்குப் பார்வை (டகால்டி வேலை)...
நம்ம ஆட்களுக்கு மதம்...
Post a Comment