Friday, March 16, 2018

மேலும் சில குறிப்புகள் 4

92 ஆம் ஆண்டு ஒரு நாள் மதிய வேளையில் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இறங்கி அருகே இருந்த உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு முதல் முறையாக ஆட்டோ பிடித்துக் கையில் வைத்திருந்த துண்டுச் சீட்டில் உள்ள முகவரியைச் சொல்லி வந்து இறங்கினேன். 

நான் அன்று வந்து சேர்ந்த இடம் திருப்பூரில் உள்ள கொங்கு நகர். ஒரு வருடம் அங்கே இருந்து திருப்பூரில் பல்வேறு பகுதிகளுக்குப் பல நிறுவனங்கள் மாறிய போது கொங்கு நகர் மறந்தே போய் விட்டது. அந்தப் பக்கம் செல்ல வேண்டிய வாய்ப்புகள் இல்லாமல் போனது. என் பள்ளித் தோழன் அந்தப் பகுதியில் தான் 27 ஆண்டுகளாக இருந்து வருகின்றான். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நினைவுக்கு வரும் போது அந்தப் பக்கம் செல்வதுண்டு. 

கடந்த ஒரு மாத காலமாக அலுவலக மற்றும் தொழிற்சாலைகளைக் காணும் பொருட்டுத் தினமும் செல்ல வேண்டியதாக உள்ளது. 

சென்னையின் வட சென்னை குறித்து அறிந்திருப்பீர்கள். ஆனால் திருப்பூரில் உள்ள கொங்கு நகர் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் ஏறக்குறைய வட சென்னைப் பகுதியில் வாழும் எளிய மக்கள் வாழ்க்கைத் தரத்தினைப் போலவே இருக்கும். முழுக்க முழுக்கத் தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தான். வீடு, நடைப் பாதைக் கடைகள், எளிய உணவு போன்ற அனைத்தும் திருப்பூரின் மற்ற பகுதிகளை விட வேறு விதமாக இருக்கும். 

கடந்த இரண்டு மாதமாகச் சூறாவளியாகச் செயல்படவேண்டி இருந்த காரணத்தால் என் உணவு பழக்கவழக்கங்கள் முற்றிலும் மாறிவிட்டது. எக்காரணம் கொண்டு வீட்டைத் தவிர வெளியே எங்கும் சாப்பிடாமல் இருந்த எனக்கு இந்த முறை கொங்கு நகர் பகுதியில் உள்ள பிரியாணிக் கடைகள், பதநீர், இளநீர், பனங்கிழங்கு, ஆட்டுக்கால் சூப்பு, பொறித்த மீன்கள், பொறித்த கோழிக்கறி, தரமுள்ள எளிய விலையில் கிடைக்கும் கொறிக்கும் சமாச்சாரங்கள் அனைத்தும் சபதங்கள் மீறி வயிற்றுக்குச் செல்ல துவங்கியது. 

வீட்டில் வந்து தவறாமல் சொல்லிவிடுவதுண்டு. பொறுக்கி என்ற பட்டமும் கிடைத்து. போக்குவரத்து விதிகளை மீறி வயிறு வெளியே எட்டிப் பார்க்கத் துவங்கியது. 


காலையில் கடந்த சில வாரமாக ராகிக் கூழ் குடித்துக் கொண்டிருக்கின்றேன். மகளுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக என்னுள் என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது? என்பதனை ஆவணப் படுத்தும் பொருட்டு வீட்டில் உள்ள தெனாவெட்டு பார்ட்டி நிற்க வைத்து எடுத்த படமிது. 

தேவன் மகிமை உண்டாகட்டும். உணவுகளுக்கு விசுவாசமாக இருப்போம்.

11 comments:

 1. அந்த மாற்றத்தைக் காண ஆவலோடு காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ரெண்டு கிலோ குறைந்தது. அவ்வளவு தான்.

   Delete
 2. Replies
  1. உணவு பழக்க வழக்கத்தில் இயல்பாக இருங்கள். திடீர் மாற்றம் வேண்டாம்.


   Delete
  2. நிறைய விசயங்கள் எழுதியிருந்ததைப் பார்த்தேன். ஏன் அழித்தீர்கள். என் வாழ்க்கை ஒரு காட்டாறு. ஒவ்வொன்றும் மாறிக் கொண்டேயிருக்கும்.

   Delete
 3. புகைப் படத்தை பார்த்ததுமே நினைத்தேன். கடைசியில் எழுதியே விட்டீர்கள்.முன்பை விட இளமையாகத் தான் தெரிகிறீர்கள்

  ReplyDelete
  Replies
  1. மனம் எப்போதும் ஒரே அளவில் நிலையாக வைத்திருப்பதும் காரணம் முரளி.

   Delete
 4. அடுத்ததையும் படித்துவிட்டு எழுதுகிறேன்....

  ReplyDelete
 5. ஆவலோடு காத்திருக்கிறேன் ஐயா

  ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.