Thursday, October 06, 2016

விரும்பியபடி செயல்படு - மாவீரன் கிட்டு

திரைப்படத்துறையில் சார் என்ற வார்த்தை மிக முக்கியமானது. ரஜினி சார், கமல் சார், விஜய் சார் என்று எந்தப் பக்கம் திரும்பினாலும் சார் என்ற வார்த்தை தான் நம் காதில் விழும். அவரவர் இருப்பு மற்றும் மார்கெட் நிலவரம் பொறுத்து இந்த மரியாதை கூடும் குறையும். ஒரு தயாரிப்பாளரின் பின்னால் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் பல தரப்பட்ட நிகழ்வுகளைப் பொறுமையாக ரசித்தே ஆக வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றேன். 

சமயம் வரும் போது "டாலர் நகரம்" போல இந்த திரைப்படத்துறையில் இது வரையிலும் வெளியே தெரியாத பல விசயங்களைப் பற்றி எழுதுவேன். 

க்டோபர் 1 2016 மாலை வேளையில் சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் நான் பணியாற்றும் நிறுவனத்தின் துணை நிறுவனமான "ஏசியன் சினி கம்பைன்ஸ்" (Asian Cine Combines) முதல் தயாரிப்பான "மாவீரன் கிட்டு" படத்தின் முன்னோட்டக் காட்சி (டீசர்) வெளியிட்டு விழா நடைபெற்றது. இயக்குநர், நடிகர் சமுத்திரக்கனி மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் உடன் படத்தில் பங்கெடுத்த அனைவரும் கலந்து கொண்டனர். எங்கள் ஆயத்த ஆடை நிறுவன தயாரிப்பான காலர் சட்டையை 2500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் (SPONSOR) அணிந்து கலந்து கொண்டனர். 

வாசிக்க, எழுத நேரம் என்பதே இல்லாமல் போய்விட்டது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் என் எழுத்துப் பணி என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. ஆனால் சமீப காலமாகக் குழந்தைகளுடன், மனைவியுடன் செல்ல சண்டை போட ஞாயிற்றுக்கிழமையை ஒதுக்கி வைத்து விடுகின்றேன். விழாவில் கலந்து கொண்ட (மாவீரன் கிட்டு படத்தின் கதாநாயகி) நடிகை ஸ்ரீதிவ்யா அணிந்த வந்த "முழு கருப்பு கவுன்" குறித்து மனைவியுடன் விஸ்தாரமாகப் பேச குழந்தைகள் நக்கல் நையாண்டியுடன் என்னுடன் சேர்ந்து மனைவியை ஓரண்டை இழுக்கக் கடைசியில் நான் வெள்ளைக் கொடியை பறக்க விட வேண்டியதாகி விட்டது. 

கேரளாவின் எந்தப் பகுதிக்குள்ளும் மகிழ்வுந்து பயணத்தின் போது ரசிக்கக் காடு சார்ந்த இடங்கள் நிறைய உண்டு. ஆனால் திருப்பூர் முதல் சென்னை வரை ஆறு மணி நேரப் பயணத்தில் பகல் நேரமாக இருந்தாலும் இரவு நேரமாக இருந்தாலும் ரசிக்க ஒன்றுமே இல்லை என்பது நிதர்சனம். பொட்டல் காடுகளும், ஒழுங்கற்ற நகர்ப்பகுதிகளும், பல இடங்களில் கும்மிருட்டும், அத்துவானக்காடும் என ரசிக்க முடியாத ஊராக தமிழ்நாடு மாறிக் கொண்ட வருகின்றது. சுங்கவரி என்பது ஒவ்வொரு மனிதரையும் ரத்தம் சுண்ட வைக்கும் கொள்ளைக்கூட்ட சாம்ராஜ்யமாக உள்ளது. இது குறித்து விரிவாக எழுத வேண்டும். 

டீசர் வெளியிட்டு நிகழ்வுக்குப் பலருக்கும் அழைப்பு விடுத்து இருந்தேன். விழாவில் முன் வரிசையில் அமர்ந்து இருந்த காரணத்தால் முழுமையாகப் பலரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால் வாக்குறுதியைக் காப்பாற்றிய கார்டூனிஸ்ட் பாலா, உண்மைத்தமிழன் சரவணன், சென்னையைச் சேர்ந்த நண்பர்கள் அகலிகன், ராஜா என சிலரை அவசர நேரத்தில் சந்தித்துப் பேச வாய்ப்பு அமைந்தது. 

ருகின்ற ஆயுத பூஜை அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஒரு பிரிவான புதுயுகம் நிகழ்ச்சியில் மாவீரன் கிட்டு குறித்துக் கலந்துரையாடல் படப்பிடிப்பு நடந்தது. இயக்குநர் சுசீந்திரன், இசையமைப்பாளர் டி.இமான், நடிகர் விஷ்ணு விஷால் ஆகியோரோடு எங்கள் நிறுவன நிர்வாக இயக்குநர் தயாரிப்பாளர் ஐஸ்வேர் சந்திரசாமி அவர்களும் கலந்து கொண்டார். நிகழ்ச்சி சிறப்பாக வந்துள்ளது.

ங்கள் நிறுவன படமாக இருந்தாலும் ஏற்கனவே பாடல் பதிவின் போது கேட்ட பாடலின் அடிப்படையில் நிச்சயம் இந்தப் படத்தின் பாடல் தமிழர்கள் மத்தியில் ஒரு மகிழ்ச்சியைக் கொடுப்பதாக இருக்கும் என்று என் பார்வையை எழுதியிருந்தேன். அதே போல டீசர் வெளியிட்டு விழாவின் போது அந்த எண்ணம் இன்னமும் வலுவானதாக மாறியது. எப்பேற்பட்ட பிரபலமாக இருந்தாலும் ஒரு சிலருடன் தான் நம்மால் உண்மையான உணர்வுடன் பேச முடியும். அப்படிப்பட்ட ஒருவர் தான் இயக்குநர் பா. ரஞ்சித். அவருடன் பத்து நிமிடங்களுக்கு மேல் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது நான் அவரை புரிந்து கொண்டது இப்படித்தான்.

எண்ணமும் செயலும் சொல்லும் ஒரே மாதிரியாக இருக்கும்படி தன் வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைக்கின்றார். மேடையில் ஏறி பேசிய போதும் அவரை முழுமையாக புரிந்து கொள்ள முடிந்தது.  இந்த விழா குறித்து காணொலித் தொகுப்பை விரைவில் வெளியிடுகின்றேன்.

மாவீரன் கிட்டு டீசர் குறித்து விழாவின் சிறப்பு அழைப்பாளர் மெட்ராஸ் மற்றும் கபாலி பட இயக்குநர் பா. ரஞ்சித் பின்வருமாறு கூறினார். 

"  
நம்முடைய வெற்றி என்பது நம்முடைய எதிரிகள் கூட வேறு வழியே இல்லாமல் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். அப்படி ஒரு வெற்றி இந்தப் படத்திற்கு கிடைக்கும் என்று நம்புகின்றேன்" என்றார். 

நீங்களும் இந்த முன்னோட்டக் காட்சியை பார்க்கும் போது புரியவரும்.

17 comments:

Unknown said...

ரசிக்க மட்டுமல்ல, வசிக்கவும் தகுதியற்ற மாநிலமாக உருமாறிக் கொண்டுள்ளது, தமிழகம்.

Amudhavan said...

நம்முடைய வெற்றி என்பது நம்முடைய எதிரிகள் கூட வேறு வழியே இல்லாமல் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். அப்படி ஒரு வெற்றி இந்தப் படத்திற்கு கிடைக்கும் என்று நம்புகின்றேன்"- பா.ரஞ்சித் சொன்ன அற்புதமான இந்த வரிகள் போன்றே உங்களின் பட வெற்றியும் அமையட்டும். வாழ்த்துக்கள்.

Unknown said...

கபாலி படம் பற்றிய விமர்சனங்கள், பா .ரஞ்சித் அவர்களை இப்படி பேச வைத்திருக்கிறதோ :)

S.P.SENTHIL KUMAR said...

திருப்பூர் டூ சென்னை மட்டுமல்ல, மதுரை டூ சென்னை நான்கு வழிச்சாலையும் வறட்சியாகத்தான் இருக்கும். ரசிக்க எதுவும் இருக்காது. கிட்டத்தட்ட தமிழ்நாடு முழுவதுமே இப்படித்தான் இருக்கிறது.

தங்களின் நிறுவன வெளியீடான 'மாவீரன் கிட்டு' படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

Avargal Unmaigal said...

சென்னை நண்பர்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்பி வெளிநாட்டு நண்பர்களை கலட்டிவிட்டதற்கு கண்டனம் ஜோதிஜி

Rathnavel Natarajan said...

நம்முடைய வெற்றி என்பது நம்முடைய எதிரிகள் கூட வேறு வழியே இல்லாமல் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். அப்படி ஒரு வெற்றி இந்தப் படத்திற்கு கிடைக்கும் என்று நம்புகின்றேன்" = அருமை. வாழ்த்துகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களின் நிறுவன வெளியீடான 'மாவீரன் கிட்டு' படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள் அய்யா

ஜோதிஜி said...

முக்கியமான நண்பர் ஒருவர் இந்தப் பதிவுக்கு தனிப்பட்ட மடல் ஒன்றை மின் அஞ்சல் வாயிலாக அனுப்பி உள்ளார். என் பதிவை விட சுவாரசியமாக உள்ளது. எதிர்க்கருத்து என்றாலும் கூட. அவர் பெயரை மட்டும் வெளியிட அனுமதியில்லை. ரசிக்க ருசிக்க

ஜோதிஜி said...

ரஞ்சித் பற்றிய உங்களுடைய பதிவினைப் பார்த்தேன். நிறைய மாற்று கருத்துக்கள் இருக்கின்றன.

முதலில் ரஞ்சித் ஒரு தலித் ஐகானோ, பிரதிநிதியோ அல்ல. மெட்ராஸ், கபாலி இரண்டு படங்களுமே தலித்திய எழுச்சிக்கு எதிரான படங்கள். ஒன்று தலித்துக்களிடையே ஒற்றுமை இல்லை, எளிதில் விலைப் போகக்கூடியவர்கள், அதிகாரத்தை தந்தாலும் அதை பயன்படுத்திக் கொள்ள தெரியாத வக்கற்றவர்கள் என்று சொல்கிறது. இன்னொன்று தலித்துகள் பெண்களை, போதைப் பொருளைக் கொண்டு விளிம்புநிலை வியாபாரம் செய்பவர்கள். ரவுடிகள். பொறுக்கிகள் என்று ரஜினி மாதிரியான கதாநாயக பிம்பத்தோடு சொல்கிறது. இரண்டுமே தலித்திய அடையாளங்களாக இங்கே கொண்டாப்படுகின்றன. இதை சொல்ல நமக்கு எதற்கு ரஞ்சித் ?

காலங்காலமாக தமிழ் சினிமா, இலக்கியவாதிகள், தமிழ் படைப்புகளில் விளிம்புநிலை மனிதர்கள் இத்தகைய குணாதிசயங்களோடு தானே சித்தரிக்கப்படுகிறார்கள். இதில் என்ன புண்ணாக்கு தலித் எழுச்சி தெரிகிறது ? ரஞ்சித் அவருக்கு முன் தலித் மக்களை சித்தரித்தை விட எந்த வகையில் புதிய சிந்தனையை முன் வைத்திருக்கிறார் ? தசாவதாரத்தில் ஒரு வசனம் வரும் ‘உங்கள்ல எவனுக்குடா படிக்க தெரியும்’ என்று சந்தான பாரதி கேட்பார் அதற்கு கபிலனை வைத்துக் கொண்டு கமல் சொல்லும் பதில் ‘எங்கள்ல யாரு படிக்கலைன்னு கேளு. டாக்டர், என்ஜினியர், கவிஞன்னு எல்லா இடங்கள்லயும் நாங்க இருக்கோம்’ என்பார். இது தான் நாம் முன்வைக்க வேண்டிய பார்வை. இதிலிருந்து ஆதியில் என்ன சொன்னார்களோ அதையே தன்னுடைய பாணியில் சொல்லும் ஒருவரை எப்படி கொண்டாடுவது ?

ஒரு வடசென்னைவாசி என்ற முறையில் மெட்ராஸ் ஒரு அபத்தமான படம். வடசென்னை விளிம்புநிலை மக்களின் ஆதார பிரச்சனை சுவரல்ல. அது காற்றாடி. தெருவில் கிரிக்கெட் விளையாடுதல். கோவிலுக்கு வசூல் செய்தல். சுடுகாட்டில் இடம் தேடல். இதில் தான் அரசியல்ரீதியான பிரச்சனைகள் வெடிக்கும். சுவருக்காக வடசென்னை வரலாற்றில் கடைசியாக எப்போது வெட்டு குத்து நடந்திருக்கிறது ? அதெல்லாம் 70களோடு முடிந்து விட்டது. காலாவதியான ஒரு சமாசாரத்தை வைத்துக் கொண்டு அது தான் விளிம்புநிலை அடையாளம் என்று சொல்வது அந்த மக்களுக்கு செய்கின்ற துரோகம். ஆனால் இணையத்திலிருக்கும் எல்லா தலித் ஆதரவாளர்களும் அதை சாதனை என்கிறார்கள். இது அபத்தமில்லாமல் வேறென்ன.

ஜோதிஜி said...

மெட்ராஸாவது அரசியல் படம் என்கிறப் போர்வையில் பின்னப்பட்ட கலவை. கபாலி அதை விட மோசம். மலேசியாவில் அந்த படம் ஒடாமல் போனதற்கான காரணம், மலேசியாவிற்கு சம்பந்தமேயில்லாத அம்பேத்கரினையும், மால்கம் எக்ஸையும் வைத்து போதிப்பது. அம்பேத்கர் தன் வாழ்நாளில் மலேசியாவிற்கு போனதேயில்லை. பெரியார் போய் இருக்கிறார். 1920களில் பினாங்கில் பெரியார் பேசியிருக்கிறார். மலேசியாவின் பகுத்தறிவு சார்ந்த, சாதியொழிப்பு சார்ந்த எல்லா சங்களிலும் பெரியார் படமிருக்கிறது. அம்பேத்கர் இல்லை. ஆனால், மெட்ராஸ் / கபாலி -யில் பெரியார் படமேயில்லை. இது ரவிக்குமார் மாதிரியான ஆட்கள் முன்வைக்கும் ‘பெரியார் தலித்துகளுக்கு எதுவுமே செய்யவில்லை’ என்கிற அரசியலின் இன்னொரு பகுதி.

மேலும், கபாலியில் ரஞ்சித் சொன்ன முனைந்தது மலேசியாவின் சிக்கலே கிடையாது. உயர்சாதி மனிதர்கள் தாழ்ந்த சாதி மனிதர்களை ‘பறப்பயலே’ என்பது racial discriminatory statement என்றால், நாம் சீனர்களை சடையனெறும், மலாய் முஸ்லீம்களை மலாக்காரன் என்று இகழ்ச்சியாக சொல்வதும் அதே. கபாலியில் ரஞ்சித் செய்திருப்பது வரலாற்று திரிபு. மலேசியாவுக்கு 300 ஆண்டுகளுக்கு முன்பு போனது தலித்துகள் கிடையாது. அங்கே போன ஆட்கள் அத்தனைப் பேரும் கடலோர மாவட்ட ஆட்கள். திண்டிவனத்திற்கும் கடலுக்கும் என்ன பொருத்தமிருக்கிறது ? வரலாற்றினை திரிக்க முனையும் ஹிந்த்துவா ஆட்களை ஆழமாக சிந்திக்கக் கூடிய எவரும் அவர்களை கருத்தியல் எதிரிகளாக தான் வைத்து பார்ப்போம். அப்படி இன்னொரு நாட்டின் இனம் சார்ந்த வரலாற்று திரிபினை உருவாக்க முனையும் ரஞ்சித்தினை எப்படிப் பார்ப்பது ?

எப்படி லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் பெயர்களை வைத்து ஜல்லி அடித்துக் கொண்டு தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் சாரு எந்தளவிற்கு போலியோ, அதே அளவிற்கான போலி மேம்போக்கு தலித்திசம் பேசும் ரஞ்சித்தும் என்னளவில் அவ்வளவே. ரஞ்சித் பேசும் அரசியல் என்பது, இளையராஜா பேசும் டூபாக்கூர் கவிதைகள், கதைகளையொத்தது. ராஜா ஒரு இசை மேதை, ஆனால் அதற்கு வெளியே அவர் பேசும், எழுதும் எல்லாமே குப்பை. இதை விட தமிழ்சினிமாவில் புரட்சி செய்தவர் என்று மணிவண்ணனை சொல்லுவேன். கவுண்டர் என்று தெரிந்துமே கவுண்டர்கள் சார்பு படங்களாய் எடுத்து அதிலும் அவர்களை தோரணம் கட்டி தொங்கவிட்டவர் அவர் தான்.

இணையத்தில் தலித்துக்கு எதிராக எழுதினால் உடனே என்னை பார்ப்பான் என்று ஒரங்கட்ட தலித் போராளிகள் தயங்க மாட்டார்கள். இது தெரிந்தே, ரோஹித் வெமூலா, கன்ஹயா குமார் இப்போது ஜிக்னேஷ் மேவானி போன்றவர்களை தூக்கிப் பிடிக்க முயலும் ஆட்களின் அரசியலை தெளிவாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இது ஒரு கட்டுரையில் பேசி முடிகின்ற சிக்கல் கிடையாது. ஆனாலும் இதை பேசாமல் போனால் காலம் நம்மை மன்னிக்காது.

ஜோதிஜி said...

ரஞ்சித் பற்றிய உங்களுடைய பதிவினைப் பார்த்தேன். நிறைய மாற்று கருத்துக்கள் இருக்கின்றன.

முதலில் ரஞ்சித் ஒரு தலித் ஐகானோ, பிரதிநிதியோ அல்ல. மெட்ராஸ், கபாலி இரண்டு படங்களுமே தலித்திய எழுச்சிக்கு எதிரான படங்கள். ஒன்று தலித்துக்களிடையே ஒற்றுமை இல்லை, எளிதில் விலைப் போகக்கூடியவர்கள், அதிகாரத்தை தந்தாலும் அதை பயன்படுத்திக் கொள்ள தெரியாத வக்கற்றவர்கள் என்று சொல்கிறது. இன்னொன்று தலித்துகள் பெண்களை, போதைப் பொருளைக் கொண்டு விளிம்புநிலை வியாபாரம் செய்பவர்கள். ரவுடிகள். பொறுக்கிகள் என்று ரஜினி மாதிரியான கதாநாயக பிம்பத்தோடு சொல்கிறது. இரண்டுமே தலித்திய அடையாளங்களாக இங்கே கொண்டாப்படுகின்றன. இதை சொல்ல நமக்கு எதற்கு ரஞ்சித் ?

காலங்காலமாக தமிழ் சினிமா, இலக்கியவாதிகள், தமிழ் படைப்புகளில் விளிம்புநிலை மனிதர்கள் இத்தகைய குணாதிசயங்களோடு தானே சித்தரிக்கப்படுகிறார்கள். இதில் என்ன புண்ணாக்கு தலித் எழுச்சி தெரிகிறது ? ரஞ்சித் அவருக்கு முன் தலித் மக்களை சித்தரித்தை விட எந்த வகையில் புதிய சிந்தனையை முன் வைத்திருக்கிறார் ? தசாவதாரத்தில் ஒரு வசனம் வரும் ‘உங்கள்ல எவனுக்குடா படிக்க தெரியும்’ என்று சந்தான பாரதி கேட்பார் அதற்கு கபிலனை வைத்துக் கொண்டு கமல் சொல்லும் பதில் ‘எங்கள்ல யாரு படிக்கலைன்னு கேளு. டாக்டர், என்ஜினியர், கவிஞன்னு எல்லா இடங்கள்லயும் நாங்க இருக்கோம்’ என்பார். இது தான் நாம் முன்வைக்க வேண்டிய பார்வை. இதிலிருந்து ஆதியில் என்ன சொன்னார்களோ அதையே தன்னுடைய பாணியில் சொல்லும் ஒருவரை எப்படி கொண்டாடுவது ?

ஒரு வடசென்னைவாசி என்ற முறையில் மெட்ராஸ் ஒரு அபத்தமான படம். வடசென்னை விளிம்புநிலை மக்களின் ஆதார பிரச்சனை சுவரல்ல. அது காற்றாடி. தெருவில் கிரிக்கெட் விளையாடுதல். கோவிலுக்கு வசூல் செய்தல். சுடுகாட்டில் இடம் தேடல். இதில் தான் அரசியல்ரீதியான பிரச்சனைகள் வெடிக்கும். சுவருக்காக வடசென்னை வரலாற்றில் கடைசியாக எப்போது வெட்டு குத்து நடந்திருக்கிறது ? அதெல்லாம் 70களோடு முடிந்து விட்டது. காலாவதியான ஒரு சமாசாரத்தை வைத்துக் கொண்டு அது தான் விளிம்புநிலை அடையாளம் என்று சொல்வது அந்த மக்களுக்கு செய்கின்ற துரோகம். ஆனால் இணையத்திலிருக்கும் எல்லா தலித் ஆதரவாளர்களும் அதை சாதனை என்கிறார்கள். இது அபத்தமில்லாமல் வேறென்ன.

Avargal Unmaigal said...

உங்கள் நண்பர் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்

Thulasidharan V Thillaiakathu said...

வாழ்த்துகள் நண்பர்/சகோ ஜோதிஜி! மாபெரும் வெற்றியடையட்டும்!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தங்கள் நிறுவன வெளியீடு சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கள் அண்ணா....
டீசர் அன்றே பார்த்தேன்... அருமையாக வந்திருக்கிறது....
படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Darren said...

Your friend's comment is right.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நாம் சரி என்று நம்பும் ஒவ்வொரு கருத்திற்கும் நாம் அறியாத இன்னொரு கோணம் உள்ளது என்பதை உணர முடிகிறது.