Friday, October 28, 2016

தண்ணீர் மனிதர்கள் (தீபாவளி 2016)


2016 தீபாவளி (29.10.2016) 
ம் வாழ்க்கையில் நெருக்கடிகள் தோன்றும் போது நாம் எப்படிச் செயல்படுகின்றோம் என்பதனை வைத்தே நம் வாழ்க்கைப் பாதை அமையும். புரிந்தவர்கள் பட்டுத் தெளிந்தவர்கள் என்று அர்த்தம்.  பணம் சம்பாரிப்பது எளிது. பதவியைக் கைப்பற்றுவது கூடச் சாத்தியம்.

ஆனால் அதைத் தொடர்ச்சியாக தக்க வைத்துக்கொள்வது தான் முக்கியம். மற்றவர்களால் போட்டி போட முடியாமல் இருக்கும் சூழ்நிலையில் அவர்கள் குறுக்கு வழிகளை கடைப்பிடிக்கும் போது உயர் பதவிகளில் இருப்பவர்கள் தனக்கான தகுதியை நிர்ணயித்தே ஆக வேண்டிய கட்டாயம்

ஒவ்வொருவருக்கும் உருவாகும்.  இது திருப்பூரில் மட்டுமல்ல. தமிழ்நாட்டில் உள்ள எல்லா நிறுவனங்களிலும் பண்டிகை கால சமயங்களில் நடக்கும் வாழ்வா? சாவா? போராட்டம் தான். 

ஆச்சரியம் ஒன்றுமில்லை.  தொழில் வாழ்க்கையில் கருணைக்கு இடமில்லை என்பதே அடிப்படை விதி.

திறமை உள்ளவர்களுக்கும், திறமைகளை வளர்த்துக் கொள்ள விரும்பாத வர்களும் இடையே நடக்கும் தர்மயுத்தம். டார்வின் கொள்கை தான் நினைவுக்கு வருகின்றது. வாழ்நிலையில் தன்னை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயம் ஒவ்வொரு உயிரினத்திற்கும் உண்டு. அதற்குப் பிறகே இங்கே வாழ முடியும். எந்தத் தத்துவமும் எடுபடாது. 

"உயிர்பிழைத்தல்" என்பது மற்ற அனைத்தையும் விட இங்கே முக்கியமானது. 

இதைப் போலவே ஒவ்வொரு நிறுவனங்களிலும் தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே நடக்கும் இறுதிக் கட்ட யுத்தத்தில் உண்மைகள் ஒரு ஓரமாகக் கிடக்கின்றது. மனசாட்சி என்பது பணத்தின் முன்னால் நசுங்கிப் போய் விடுகின்றது.அதை யாரும் பொருட்படுத்துவதும்

கவலைப்படுவதும் இல்லை. 

ந்தத் தொழிலாளர்களும் தங்களின் நேர்மையான உழைப்பைக் கொடுக்க தயாராக இல்லை என்பது எத்தனை உண்மையோ அந்த அளவுக்கு எந்த நிறுவனமும் தற்போதைய உலகளாவிய போட்டிச் சூழலில் லாபகரமாகச் செயல்படவில்லை என்பதும் உண்மையே.

தொழில் நுட்பம் வளர வளர இங்கே ஒவ்வொருவருக்கும் "கவனச்சிதறல்" அதிகமாக உருவாகிக் கொண்டேயிருக்கின்றது.  தன் தவறுகளை எவரும் திருத்திக் கொள்ள தயாராக இல்லை. கொண்டாட்ட மனோநிலையில் தான் ஒவ்வொருவரும் வாழ விரும்புகின்றார்கள். எளிதாக உழைப்பில்லாமல் வாழ்வது என்பது குறித்து தான் ஒவ்வொரு யோசிக்க விரும்புகின்றார்கள். 

தன் "சுயபாதுகாப்பு" குறித்தே யோசிக்கின்றார்கள். நிறுவன வளர்ச்சியோ, சமூக வளர்ச்சி என்பதே இரண்டாம் பட்சமாகவே உள்ளது. 

"என் ஆதாயம் எனக்கு" என்ற நோக்கத்தில் தான் இங்கே ஒவ்வொருவரும் செயல்பட்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள். 

திருப்பூர் முழுக்க இந்த முறை அளவு கடந்த கூட்டம். அலைந்து கொண்டேயிருக்கின்றார்கள். எதையோ வாங்கிக் கொண்டே இருக்கின்றார்கள்.  தனக்கான தேவை என்ன? என்பதனைப் பற்றி யோசிப்பதும் இல்லை. எதிர்காலம் குறித்து கவலைப்படவும் இங்கே யாருக்கும் நேரமும் இல்லை. 

தெளிவாக யோசிக்கத் தெரிந்தவர்கள் சமகாலத்தில் முட்டாள்கள். 

எனது 25 வருட தொழில் வாழ்க்கை அனுபவத்தில் லட்சக்கணக்கான மனிதர்களைக் கையாண்டு இருக்கின்றேன். ஆச்சரியம், அதிசயம்,அவநம்பிக்கை என்று பலதரப்பட்ட உணர்ச்சிகள் வந்த போது எந்த மனிதர்களின் மீதும் வெறுப்பை உமிழ்ந்தது இல்லை.

காரணம் மனிதன் என்பவன் "சூழ்நிலைக் கைதி" என்பதனை தெளிவாக உணர்ந்து இருப்பதால் எவர் மீதும் காழ்ப்புணர்ச்சி உருவானது இல்லை. 

"பச்சோந்தித்தனமாக இருக்கின்றார்கள்" என்று பலரையும் குற்றம் சாட்டுகின்றோம். ஆனால் நண்பர் சொன்னார். அவர்"தண்ணீரைப் போன்றவர்". காரணம் தண்ணீர் எந்த இடத்திலும் எப்படி வேண்டுமானாலும் அதன் வடிவத்திற்கு ஏற்பமாறிவிடும். இதனை இந்த முறை ஒருவரைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். 

ஆனால் மனிதர்களின் அடிப்படை குணாதிசியங்கள் தெரிந்த காரணத்தால் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. தன்னிடம் வாங்கித் தின்று, தன்னால் ஆதாயம் பெற்ற போதும் அவர்களின் குணாதிசியத்தை மாற்ற முடியவில்லை என்ற போது தான் மற்றொரு நண்பர் சொன்ன கருத்து என் நினைவுக்கு வந்தது. 

"எப்போதும் காளை மாட்டில் பால் கறக்க முயற்சிக்காதீர்". சிலரை மாற்ற முடியாது. அது தேவையும் இல்லை என்றார். பதவிகள் என்பது சிலருக்கு அமைந்து விடும். ஆனால் நல்லகுணாதிசியங்கள் என்பது எல்லோருக்கும் அமைந்து விடாது என்றார். 

எதனையும் மாற்ற வேண்டும் என்று முயற்சிக்காதீர். நம்மை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே அடிப்படைவிதியாக வைத்துக் கொள்ளுங்கள். 

பட்ட பின்பு வருவது தானே ஞானம். 

ண்டிகைகள் என்பது பலரும் ஆராய்ச்சிக்குரியதாக எடுத்துக் கொண்டு பல கேள்விகளை கேட்கின்றார்கள். ஆரியர்,திராவிடர் தொடங்கி பட்டாசு வெடிக்கும் போது பறவையினங்கள் பாதிக்கப்படும் என்பது வரைக்கும் பல கேள்விகளை எழுப்புகின்றார்கள். அந்த அளவுக்கு யோசிக்கத் தேவையில்லை.

வ்வொரு பண்டிகையும் பல கோடி மக்களின் வாழ்வாதாரத்தோடு சம்மந்தப்பட்டது. சிறு குறு தொழில் நிறுவனங்கள் இந்தப் பண்டிகைகள் வைத்தே தங்கள்வாழ்வாதாரத்தை நகர்த்துகின்றார்கள். பன்னாட்டு நிறுவனங்கள், விளம்பரம் செய்து தங்களை நிலை நிறுத்திக்கொண்டவர்கள் என்ற பெரிய பட்டியலை எடுத்துக் கொண்டால் இவர்கள் அத்தனை பேர்களும் வருடத்திற்கு ஒரு முறை இரண்டு வாரங்களில் மட்டுமே லாபம் பார்க்கக்கூடியவர்கள். 

அவர்களுக்காக இது போன்ற பண்டிகைகளை வரவேற்கலாம்தானே? 

குழந்தைகள் வளரும் போது பண்டிகைகள் என்பது நமக்கு அந்நியப்பட்டுப் போகின்றது. அவர்களின் விருப்பமே மேலோங்கி நிற்கின்றது. வேடிக்கை மனிதர்களாகவே நம்மை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

இந்த முறையும் அப்படித்தான் உள்ளது. 

உங்களுக்கு நேரம் இருந்தால் இந்த இரண்டு கட்டுரையை நேரம் ஒதுக்கிப் படித்துப் பாருங்கள்.

திர்காலம் குறித்து நான் பலமுறை கவலைப்பட்டதுண்டு.  எப்படி மாறுதல்கள் உருவாகப் போகின்றது என்பதனை பல விதமாக யோசித்ததுண்டு?.  இவரும் யோசித்து உள்ளார்.  நிச்சயமாக உங்கள் (கல்லூரிக்குச் செல்லும்) வீட்டில் உள்ளவர்கள் படிக்க வேண்டிய கட்டுரையிது.


"மாவீரன் கிட்டு" படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற 04.11.2016 அன்று சென்னையில் நடைபெற உள்ளது.ஏராளமான பத்திரிக்கை நண்பர்கள், முக்கிய விருந்தினர்கள் முன்னிலையில் இந்த விழா நடைபெற உள்ளது.  இது குறித்த விபரங்களை விரைவில் எழுதுகின்றேன்.

அனைவருக்கும் இனிய தீப ஒளி திரு நாள் வாழ்த்துகள்.

18 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இரு கட்டுரைகள் - நன்றி...

இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்...

திண்டுக்கல் தனபாலன் said...
This comment has been removed by the author.
Avargal Unmaigal said...

வழக்கம் போல உங்கள் பதிவு அருமை அது போல நீங்கள் அறிமுகப்படுத்தி வலைத்தளத்தில் வந்த பதிவுகளும் மிக பயனுள்ள தகவல்களை அள்ளித்தருகிறது இதை அனைவரும் அறிவது நலம்.

கரந்தை ஜெயக்குமார் said...

தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா

பரமசிவம் said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்....

Ranjani Narayanan said...

இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள், ஜோதிஜி.

'பரிவை' சே.குமார் said...

தங்களுக்கு தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

ஜோதிஜி said...

நலமா? நீண்ட நாளைக்குப் பிறகு, இனிய வாழ்த்துகள்,

ஜோதிஜி said...

நன்றி குமார். இனிய வாழ்த்துகள்.

ஜோதிஜி said...

நன்றி பரமசிவம். வாழ்த்துகள்.

ஜோதிஜி said...

மிக்க நன்றி. வாழ்த்துகள்

ஜோதிஜி said...

தொடக்கம் முதல் இன்று வரையிலும் மிகத் தெளிவாக அழகான புரிந்துணர்வோடு என்னை பின் தொடர்ந்து வரும் உங்கள் நட்புக்கு மிக்க நன்றி நண்பா. வாழ்த்துகள்.

ஜோதிஜி said...

வலையுலகமே உங்களை வலைவீசி தேடிக் கொண்டிருக்கின்றது. உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி தனபாலன்.

கிரி said...

"எதனையும் மாற்ற வேண்டும் என்று முயற்சிக்காதீர். நம்மை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே அடிப்படைவிதியாக வைத்துக் கொள்ளுங்கள்.

சரியா சொன்னீங்க :-) . கவுண்டர் சொல்ற மாதிரி என்ன நான் முதல்ல மாத்திக்குறேன் :-)

கிரி said...

க்ரோம் உலவியில் இருந்து பின்னூட்டம் இட்டால் வேலை செய்வதில்லை. என்ன பிரச்சனை என்று புரியலையே!

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

இரு வேறு பொருண்மைகளைக் கொண்ட பதிவு. நன்றி.

Sangeetha said...

Find the best details about cinema at edial to get more information

Thulasidharan V Thillaiakathu said...

மிக அருமையான பதிவு. ஒரு முறை எனக்கும் என் மகனுக்கும் விவாதம் வந்தது. பக்கத்துத் தெருவில் கோயில் திருவிழா. கூட்டம், ஒலிபெருக்கி சத்தம், என்று கொஞ்சம் நடைமுறைப் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. மகன் சொன்னான், ஏம்மா கோயில் திருவிழானா இப்படித்தான் கொண்டாடணுமா...ஒரே சத்தம், ஒரே குப்பை, ஒரே அடைசல்,. பொதுமக்களுக்கு நியூசன்ஸ் என்றான். உன்னுடையகருத்துகளை ஒத்துக் கொள்கிறேன் அதாவது, குப்பை, சத்தம், அடைசல்...அதற்காகக் காலம் காலமாக அவர்கள் கொண்டாடி வரும் விழாவைத் தயவாய் குறை சொல்லாதே. இவற்றை ஒழுங்குபடுத்திக் கொண்டாடலாம் என்று சொல்லலாம் ஆனால் திருவிழாவே கூடாது என்று சொல்வதில் அர்த்தம் இல்லை. ஏன் பணம் உள்ளவர்கள், நாகரீகம் என்று சொல்லி வாழ்பவர்கள் பலரும் வார இறுதி கொண்டாட்டங்கள் கொண்டாடவில்லையா?பொழுது போக்கு என்று. இந்த ஏழை மக்களுக்கும், சுத்த்ப்பட்டுக் கிராமங்களுக்கும் இது ஒரு பிக்னிக், பொழுது போக்கு. அவர்கள் பொருளாதாரத்திற்கு ஏற்ற ஒரு பொழுது போக்கு. இந்தத் திருவிழாவினால், எத்தனை எத்தனை ஏழை வியாபாரிகள் பயன் பெறுகிறார்கள் என்பதை நினைத்துப் பார். அவர்களுக்கும் குடும்பமுண்டு. எத்தனை எத்தனைக் கைத்தொழில்கள், குடிசைச் தொழில்கள் இதனால் பயன்பெறுகின்றன என்று நினைத்துப் பார். என்று விளக்கம் சொன்னேன். கிராமங்கள் சார்ந்த நம் நாட்டிற்கு வேண்டிய பொருளாதாரத்திற்கு இன்னும் நம் ஆட்சியாளர்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது எனது தீராத ஏக்கம்.

கீதா