நான் வாழ்ந்து வந்த வாழ்க்கை,
நான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை, இதன் வழியே நான் பார்த்த சமூகம் இதன் மூலமாக
பெற்ற பாடங்கள், நான் பெற்ற தாக்கம் மற்றும் நான் உணர்ந்து கொண்டவைகளை இங்கே கட்டுரைகளாக
“பயத்தோடு வாழ பழகிக் கொள்” என்ற பெயரில் உங்களுக்கு
தொகுத்து கொடுத்துள்ளேன்.
ஒவ்வொரு கட்டுரைக்கும் கீழே நான் எழுதிய தேதியை குறிப்பிட்டு
உள்ளேன். அதன் மூலம் அந்த சம்பவம் நடந்த காலத்தை உங்களால் ஒப்பிட்டுக் கொள்ள முடியும்.
இதில் உள்ள ஒவ்வொரு கட்டுரைகளிலும்
நீங்களும் வாழ்ந்து இருக்கக்கூடும்.
சமூகம் சார்ந்த கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள
முக்கிய பிரச்சனைகள் அனைத்தும் உங்கள் வாழ்க்கையோடு மட்டுமல்ல உங்கள் தலைமுறையின் வாழ்க்கையையும்
பாதிக்கக்கூடிய அம்சமாகும்.
நடுத்தரவர்க்கத்தின் அங்கத்தினரான
நாம் ஏதோ ஒன்றுக்காக பயந்து தினந்தோறும் நம் இருப்பை காப்பாற்றிக் கொள்ளத்தான் போராடிக்
கொண்டே இருக்கின்றோம்.
எத்தனை சமூகம் சார்ந்த பிரச்சனைகள் நம்மைச் சுற்றி நடந்தாலும்
நமக்கு அது நடக்கும் வரையிலும் நாம் அனைத்தையும் செய்திகளாகவே பார்த்து பழகி விட்டோம்.
இது தான் நம் வாழ்க்கையின் எதார்த்தம்.
"பயத்தோடு வாழப் பழகிக் கொள்" எனது ஐந்தாவது புதிய மின் நூலை இலவசமாக தரவிறக்கம் செய்ய சொடுக்க
7 comments:
இதோ செல்கிறேன் ஜி... நன்றி...
தரவிறக்கம் செய்து கொண்டேன் ஐயா
நன்றி
இப்போதே...பார்க்கிறேன்...தரவிறக்கம் செய்து கொள்கிறேன். உங்கள் எழுத்து நன்றாக உள்ளது உள்ளது போல்.....காட்டி நிற்கிறது. தொடரட்டும் உங்கள் எழுத்து பணி வாழ்த்துக்கள் சகோ. அவ்வப்போது வந்து உங்களுடைய எல்லா படைப்புக்களையும் நிதானமாக படிக்க வேண்டும். நன்றி
மீண்டுமொருமுறை வாழ்த்துகள்
புத்தகம் என்னென்ன பிரச்னைகள் பற்றிப் பேசுகிறது என்று அறிய ஆவல். இறக்கிக் கொள்கிறேன். நன்றி.
வாழ்த்துக்கள் அண்ணா...
தரவிறக்கம் செய்து படிக்கிறேன் அண்ணா...
வாழ்த்துக்கள் ஜி! தரவிறக்கம் செய்து கொள்கிறேன்! நன்றி!
Post a Comment