Friday, October 24, 2014

வேலையைக்காதலி

நமக்கு விருப்பமானவற்றைச் செய்யும் போது நம் தகுதிகள் புரிபடத் துவங்கும். நேரம் காலம் மறந்து தொடர்ந்து வேலை செய்து கொண்டேயிருந்தாலும் நமக்கு சோர்வு வருவதில்லை. 

அதுவும் மற்றவர்களால் சாதிக்க முடியாதவற்றை நாம் சாதித்து விடுவோம் என்ற நம்பிக்கையில் செயல்படும் போது  நம்முடைய வேகம் அசாத்தியமானதாக இருக்கும். அதுவரையிலும் இனம் கண்டு கொள்ளாமல் நமக்குள் இருக்கும் அத்தனை திறமைகளும் ஒன்றன் பின் ஒன்றாக வெளி வரும். அப்படித்தான் எனக்கும் இந்த நிறுவனத்தில் நடந்து கொண்டிருந்தது. 

உழைக்கும் எண்ணம் கொண்டவனுக்கு அடுத்தவன் குறைகள் குறித்து யோசிக்க நேரம் இருக்காது.  அடுத்தடுத்த வேலைகள் என்னவென்றே மனம் ஓடிக் கொண்டேயிருக்கும். வேலையில்லாதவர்களுக்கும், வேலை செய்ய மனமில்லாதவர்களின் மனமும் தான் பிசாசு போல செயல்படும். பழிவாங்குதல், கடமைகளில் இருந்து தப்பித்தல், காரணம் சொல்லுதல், காரணங்களை தேடிக் கொண்டே இருந்தல் என்று தொடங்கி தான் வாழ எவரை வேண்டுமானாலும் பழிகிடா ஆக்கி விடலாம் என்று எண்ணத்தில் கொண்டு வந்து நிறுத்தும்.  


ஒரு நிர்வாகத்தின் வளர்ச்சி வீழ்ச்சியடைய பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் முக்கியமான முதன்மையான காரணமாக இருப்பது மனித மனங்களை கையாளத் தெரியாத பட்சத்தில் வீழ்ச்சி விரைவாகும். 

நாகரிகம் வளராத காலகட்டத்தில் மனிதர்களின் தேவைகள் குறைவாக இருந்தது.  இன்று ஒவ்வொரு மனிதனையும் தேவைகள் தான் இயக்குகின்றது. அவரவர் தேவைக்கேற்றபடி தான் இன்றைய உலகம் இயங்குகின்றது. ஆனால் இங்கே என் தேவை என்பது என்னை நிரூபித்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தது. அந்த நோக்கத்திற்காக என்னை நானே வளைத்துக் கொண்டேன். அடுத்தவர் கௌரவம் பார்த்து நுழையத் தயங்கும் ஒவ்வொரு இடத்திலும் புகுந்து வெளியே வந்து கொண்டிருந்தேன். 



9 comments:

Unknown said...

Sir, I read this episode in Valai tamil, your narration is very good and every time I feel how much effort you have put into your job to become like this. Your writing style is very good and I enjoy reading this.

Thulasidharan V Thillaiakathu said...

நண்பரே! தங்களது கட்டுரையை முழுவதும் படிக்க அதை அழுத்தினால் வரும் பக்கம் தமிழ்வலைப்பக்கம் மல்வேர் என்று வந்து வைரஸ் அட்டாக் ஆகும் என்று சொல்லி கட்டுரை வர மறுக்கின்றதே! ஒரு வேளை எங்கள் கணினியில்தன் பிரச்சினையா? மீண்டும் மீண்டும் அப்படித்தான் வருகின்றது!

ஜோதிஜி said...

சரியாகத்தான் உள்ளது. இந்த இணைப்பை பயன்படுத்தி பாருங்க. நன்றி.

http://www.valaitamil.com/oru-tholirchalai-kurippugal-part-13_13663.html#.VEuu2fmUeAu

http://www.valaitamil.com/literature_literature-article_jothiji-thiruppur/


கரந்தை ஜெயக்குமார் said...

வேலையைக் காதலி
அருமை ஐயா

Thulasidharan V Thillaiakathu said...

மிக்க நன்றி நண்பரே! படிக்க முடிந்தது!

வேலையைக்காதலி! ஆம் தாங்கள் சொல்லியிருப்பது போல், வேலையில்லாமல் இருந்தால் தான் பிறரைக் குறித்து வம்புப் பேச்சுக்கள்."Idle mind is the devli's paradise" ..

சிறிய புத்தி, பெரிய புத்தி....சரிதான்...சுயதம்பட்டம் மிகவும் ஆபத்தானதே! அதுவும் தாங்கள் பாலபாடம் என்று சொலியிருப்பதும், வொர்க் மோர் ...டாக் லெஸ் போன்ற அனைத்தும் ஒரு தொழிற்சாலை இயங்க எத்தனை முக்கியம் என்பதைச் சொல்லியவிதம் அருமை.

என்ன நண்பரே! நிஜப்பாம்புகளா?! இப்படி டென்ஷனான தொடரும் போட்டுவிட்டீர்களே! காத்திருக்கின்றோம் என்ன ஆயிற்று என்று அறிய...சுயதம்பட்டிகள் பற்றியும்....தொடர்கின்றோம்!

'பரிவை' சே.குமார் said...

வேலையைக் காதலி...
மிகச் சிறப்பான பகிர்வு அண்ணா...

துளசி சார் சொன்னது போல் அன்று திறக்கும் போது மால்வேர் வைரஸ் காட்டியது அந்த இணைப்பு. இன்று தாங்கள் சொன்ன இணைப்பில் போய் படித்தேன்...
நன்றி.

'பரிவை' சே.குமார் said...

பாம்பு என்றால் படையும் நடுங்கும்தானே... காக்க வைத்து விட்டீர்கள்..

Rathnavel Natarajan said...

வேலையைக்காதலி = திரு ஜோதிஜி அவர்களின் தொடர் பதிவு.
தொழில் செய்பவர்களும், அனைவரும் படிக்க வேண்டிய, கற்றுக் கொள்ள வேண்டிய அருமையான பதிவு.
எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி.

UmayalGayathri said...

வேலையைக் காதலி அருமை.பேச்சை விட செயலே முக்கியம்.

சுய தம்பட்டம் - செவிக்கு ஈயம் வாய்ச் சொல் வீரர் தான் அவர்கள். வேலை செய்வோருர்க்கு எவ்வளவு மன அழுத்தம் . சுவாரஸ்யம் தொடருங்கள்.