இன்றைய நவீன விஞ்ஞானம் தந்த ஏவுகணை கூட ஒரு நாட்டின்
குறிப்பிட்ட இலக்கை மட்டும் தான் தாக்கும். ஆனால் மதம் என்ற ஒரு சொல்லை மட்டும் வைத்துக்
கொண்டு மொத்த நாட்டையும் பற்றியெறிய வைக்க முடியும். மனிதர்களால் உருவாக்கப்பட்ட
விஞ்ஞானம் அணைவருக்கும் பொதுப்படையான வளர்ச்சியை தந்தது. ஆனால் இடையே உருவாக்கப்பட்ட
மதங்களோ இன்று உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டுருக்கிறது.
ஆனால் இந்திய நாடு மட்டும் இந்த விசயத்திலும் வித்தியாசமானது. மதம் என்ற சொல்லுக்குண்டான வலுவை விட சாதி என்ற
சொல்லுக்குத் தான் இங்கு வலிமை அதிகம். சாதி என்ற இந்த ஒரு வார்த்தையின் மூலம்
மட்டுமே இன்றைய இந்தியாவையே நிலைகுலைய வைக்கமுடியும்.
இந்தியாவை ஆண்டு கொண்டுருந்த ஆங்கிலேர்களுக்கு கடைசி
வரைக்கும் ஆட்சி புரிய உதவி புரிந்ததும் இங்கிருந்த சாதி தான்.
பிரிக்கப்பட்டு இருந்தார்கள். கடைசி வரைக்கும் பிரிந்தே இருந்தார்கள். இன்று வரையிலும் பிரிந்து தான் இருக்கிறார்கள். சுதந்திரம் வாங்கிய போது காந்தி சொன்ன மைனாரிட்டிகளின் உரிமையும் இன்று வரையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே தான் இருக்கிறது. சாதியைப் பற்றி பேசுபவர்கள் அடுத்து ஆரம்பிப்பது இந்த மைனாரிட்டிகளின் உரிமை என்பதை இந்திய அரசியல்வாதிகளால் அதிகம் உச்சரிக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது.
பிரிக்கப்பட்டு இருந்தார்கள். கடைசி வரைக்கும் பிரிந்தே இருந்தார்கள். இன்று வரையிலும் பிரிந்து தான் இருக்கிறார்கள். சுதந்திரம் வாங்கிய போது காந்தி சொன்ன மைனாரிட்டிகளின் உரிமையும் இன்று வரையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே தான் இருக்கிறது. சாதியைப் பற்றி பேசுபவர்கள் அடுத்து ஆரம்பிப்பது இந்த மைனாரிட்டிகளின் உரிமை என்பதை இந்திய அரசியல்வாதிகளால் அதிகம் உச்சரிக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது.
ஆனால் இவற்றையெல்லாம்
மற்றொரு பொக்ரான் அணுகுண்டு ஒன்று உண்டு. அது இந்தியாவில் உள்ள சாதிகளைப் பற்றி
பேசுதல் மற்றும் சாதிவாரியான இட ஒதுக்கீடுகளைப் பற்றி பேசுதல்.
இந்த ஒதுக்கீடுகளில் உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட
பழங்குடியினர் மற்றும் சீர்மரபினர் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடு
சதவிகிதங்களைப் பற்றி முரண்பாடாக பேசினால் போதும். நாடே பற்றியெறியத் தொடங்கும். பேசியவரின் தலை
இருக்காது. அந்த அரசியல் கட்சியே இல்லாமலேயே கூட போய்விடும். சாதிகள் இல்லையாடி பாப்பா என்று சொன்னவர்
பாப்பாவுக்கு மட்டும் தான் சொல்லியிருக்கிறார் என்று கணக்கில் எடுத்துக் கொண்டு இன்றைய தலைவர்கள் மறந்து விட்டார்கள்.
சாதி இன்றும் ஆலமரமாக ஏராளமான விழுதுகளுடன்
ஆரோக்கியமாகவே இருக்கிறது. இன்று அரசியல் என்ற உரம்
போட்டு வளர்த்துக் கொண்டுருக்கிறார்கள்.
இன்றைய
இந்திய அரசியலுக்கு சாதி தான் உயிர் நாடி. இந்த சாதி தான் பதவியைத்
தருகின்றது. தந்த பதவியை எடுக்க உதவுகின்றது. தரமுடியாத பதவியை தந்தே ஆக வேண்டும்
நிர்ப்பந்தம் மூலம் பெற முடிகின்றது. இதன் காரணமாகவே சாதிவாரியான ஒதுக்கீடுகளைத்
தாண்டி உள் ஒதுக்கீடு என்பது வரைக்கும் வளர்ந்துள்ளோம்.
இந்திய தலைவர்களில் இந்த பொக்ரான் அணுகுண்டின் மேல் ஏறி
நின்று பார்த்தவர் முன்னாள் பிரதமர் விபி.சிங்.
'மண்டல் கமிஷன்' என்ற ஆயுதம் பூமராங் போலவே அவரை உண்டு இல்லையென்று மாற்றி கடைசியில் அவரையே நிலைகுலையவும் வைத்துவிட்டது. இதன் காரணமாகவே எந்த அரசியல் கட்சிகளும் முடிந்தவரையிலும் இந்த ஒதுக்கீடு விசயத்தில் வாயைக் கொடுத்து புண்ணாக்கி கொள்ள விரும்புவதில்லை. முடிந்தவரைக்கும் எறியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவதைத் தான் எல்லா கட்சிகளும் இன்று வரைக்கும் செய்து கொண்டுருக்கிறார்கள்.
'மண்டல் கமிஷன்' என்ற ஆயுதம் பூமராங் போலவே அவரை உண்டு இல்லையென்று மாற்றி கடைசியில் அவரையே நிலைகுலையவும் வைத்துவிட்டது. இதன் காரணமாகவே எந்த அரசியல் கட்சிகளும் முடிந்தவரையிலும் இந்த ஒதுக்கீடு விசயத்தில் வாயைக் கொடுத்து புண்ணாக்கி கொள்ள விரும்புவதில்லை. முடிந்தவரைக்கும் எறியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவதைத் தான் எல்லா கட்சிகளும் இன்று வரைக்கும் செய்து கொண்டுருக்கிறார்கள்.
ஆனால்
உருவாக்கப்பட்ட சாதி வாரியான ஒதுக்கீடுகள் இப்போதைய நிலைமையில் உண்மையான
நபர்களுக்குத் தான் செல்கின்றதா? மைனாரிட்டிகளுக்கு வழங்கப்படும் உரிமைகள்
உரியவர்களுக்கு பயன்படுகின்றதா?
அப்துல்கலாம் இந்திய நாட்டின் ஜனாதிபதியாக ஆனது அவரின்
தனிப்பட்ட திறமைகளுக்காக அல்ல. அந்த
சமயத்தில் அரசியல் கட்சிகளுக்கு தேவைப்பட்ட 'மைனாரிட்டிகளின் காவலன்' என்ற
பட்டத்திற்காகவே முன்னிறுத்தப்பட்டார். எந்த நாட்டிலும் இந்த மைனாரிட்டிகளை பகைத்துக்
கொள்ள விரும்புவதில்லை. காரணம் தேர்தல் சமயத்தில் இவர்களின் ஓட்டு தான் முக்கிய
பங்காற்றுகின்றது.
ஆனால் அடுத்த முறை காட்சி மாறியது.
மைனாரிட்டி என்ற வார்த்தை மாறி பெண்ணுரிமை என்று வர பிரதிபா பாட்டீலுக்கு அடித்தது யோகம். இந்தியாவில் உள்ள பதவிகளுக்கு தகுதி என்பது முக்கியமல்ல. சந்தர்ப்ப சூழ்நிலைகள் தான் முக்கியத் தேவையாக இருக்கிறது.
அப்துல்கலாமைப் பொறுத்தவரையில் ஒரு விஞ்ஞானிக்கு இந்திய நாடு கொடுத்த கௌரவம் என்பதாகக் கூட எடுத்துக் கொள்ளலாம். பிரதிபாவுக்கு என்ன தகுதியிருந்தது?
மைனாரிட்டி என்ற வார்த்தை மாறி பெண்ணுரிமை என்று வர பிரதிபா பாட்டீலுக்கு அடித்தது யோகம். இந்தியாவில் உள்ள பதவிகளுக்கு தகுதி என்பது முக்கியமல்ல. சந்தர்ப்ப சூழ்நிலைகள் தான் முக்கியத் தேவையாக இருக்கிறது.
அப்துல்கலாமைப் பொறுத்தவரையில் ஒரு விஞ்ஞானிக்கு இந்திய நாடு கொடுத்த கௌரவம் என்பதாகக் கூட எடுத்துக் கொள்ளலாம். பிரதிபாவுக்கு என்ன தகுதியிருந்தது?
அவரின்
தகுதியைத் தான் அணைவரும் பார்த்து விட்டார்களே?
ஜனாதிபதி மாளிகையில் சுவற்றில் அடித்த சுண்ணாம்புகளைத் தவிர அத்தனையும் பதவி காலம் முடிந்ததும் வெட்கப்டாமல் தனது வீட்டுக்கு எடுத்துக் கொண்டு சென்று விட்டார். பெண்ணுரிமைக்கு முன்னுரிமை கொடுக்கின்றோம் என்று சொன்னவர்கள் தான் பாராளுமன்றத்தில் பெண்களுக்கு உரிய சதவிகிதத்தை கொடுக்கவும் மறுக்கின்றார்கள். காலங்கள் மாறும் போது காட்சியும் மாறுகின்றது. ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் கொள்கைகளை புதுப்பித்துக் கொள்கின்றது.
ஜனாதிபதி மாளிகையில் சுவற்றில் அடித்த சுண்ணாம்புகளைத் தவிர அத்தனையும் பதவி காலம் முடிந்ததும் வெட்கப்டாமல் தனது வீட்டுக்கு எடுத்துக் கொண்டு சென்று விட்டார். பெண்ணுரிமைக்கு முன்னுரிமை கொடுக்கின்றோம் என்று சொன்னவர்கள் தான் பாராளுமன்றத்தில் பெண்களுக்கு உரிய சதவிகிதத்தை கொடுக்கவும் மறுக்கின்றார்கள். காலங்கள் மாறும் போது காட்சியும் மாறுகின்றது. ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் கொள்கைகளை புதுப்பித்துக் கொள்கின்றது.
முன்னாள் பாரத பிரதமர் நரசிம்மராவ் ஆட்சி காலத்தில்
பம்பாயில் கலவரம் நடந்து கொண்டுருந்த போது அவரால் அமைதியாகவே இருக்க முடிந்தது.
அத்வானி கரசேவையின் மூலம் இந்தியாவை மத அச்சுறுதலுக்கு உரிய நாடாக மாற்றிய போதும்
கூட அமைதியாகவே இருக்க முடிந்தது. ஆனால்
ஆண்டது காங்கிரஸ். செய்தது பாரதிய ஜனதா
கட்சி. காங்கிரஸ் அமைதியாகத்தான் இருந்தது.
இதுவே பாரதிய ஜனதா ஆட்சியில் இருந்தால் அதன் முகமே வேறு விதமாக
இருக்கும். எதைத் தொட்டாலும் அதற்கு மத
சாயம் பூசப்படும். இன்று வரையிலும் அப்படித்தான் பேசப்படுகின்றது. குஜராத் வரைக்கும்.
இங்கு என்ன பிரச்சனை? என்று எவரும் பார்க்க
விரும்புவதில்லை. அது யாரால் என்பது தான்
முக்கியமாக படுகின்றது. அதை எப்படி
தேர்தல் சமயத்தில் பயன்படுத்தப்படலாம் என்ற யோசனை தான் முன்
வைக்கப்படுகின்றது.
ஆனால் எந்த பிரச்சனை
என்றாலும் அதை முழுமையாக தீர்க்கப்படுவதை எவரும் விரும்புவதிலலை. பாரதிய ஜனதா கூட
நாங்கள் முழுமையான இந்துத்துவா கட்சி என்று சொல்வதில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மைனாரிட்டிகளின்
உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுப்போம் என்று தான் தொடங்குகிறார்கள். காரணம் பயம்.
இந்தியா ஒரு மத சுதந்திர நாடு என்று சொல்லியே மங்கிய ஒளியில் காட்டும் உருவம்
போலவே பலதும் தெரிகின்றது. யாரும் வெளிச்சத்தில் நின்று உரக்க பேச முடியாத
நிலைமைக்கு வந்துள்ளது. இது தான் இன்றைய அரசியல்வாதிகளுக்கு பம்பர் பரிசாக இருக்கின்றது.
இந்த மைனாரிட்டிகளுக்கு உரிமை என்ற நோக்கத்தில் தான் பல
சட்டதிட்டங்கள் வளைந்து கொடுத்துக் கொண்டுருக்கிறது. இன்றைய கல்வியானது அநேக
மைனாரிட்டி நிறுவன பெயரைத் தாங்கிக் கொண்டு வியாபாரமாக மாறிவிட்டது. காரணம்
மைனாரிட்டி நிறுவனங்கள் என்றாலே அரசாங்கத்தின் பார்வை வேறுவிதமாக இருக்கிறது.
அதுவே மெஜாரிட்டி என்னும் போது தனியாக இருக்கின்றது.
சாதாரண மனிதர்கள் சந்திக்கும் எந்த
பிரச்சனைகளையும் மைனாரிட்டி நிறுவனங்கள் எதிர்கொள்ள தேவையில்லை. அதையும் மீறி
முறைப்படி சட்டம் தன் கடமையைச் செய்யும் பட்சத்தில் அதற்கு வேறொரு மூலாம்
பூசப்பட்டு நோக்கமே வேறொரு திசையில் கொண்டு போகப்படும். இதற்குப் பயந்தே பாதி
அதிகாரிகள் கண்டும் காணாமல் ஒதுங்கிப் போய்விடுகிறார்கள். இதே மைனாரிட்டி சார்பாக
தொடங்கும் நிறுவனங்களில் எத்தனை சதவிகிதம் மைனாரிட்டி சமூக மக்களுக்கு முன்னுரிமை
கொடுத்து வாழ்க்கை தருகிறார்கள். பட்டியலிட்டு பார்த்தால் அவரவர் பண
சம்பாத்தியத்திற்கு மட்டும் இந்த பெயர்களை பயன்படுத்திக் கொண்டுருப்பது புரியும்.
சாதியோ, மதமோ எதுவானாலும் அரசியல் தலைவர்களுக்கு காசே தான் கடவுளடா?
இதன் தொடர்சசியாக தான் இன்று மத்திய அரசாங்கத்தின்
அமைச்சரவை தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமை என்ற நோக்கத்தில் ஒரு சட்டத்திற்கு அனுமதி
கொடுத்துள்ளது.
உச்சநீதிமன்றம் தொடர்ச்சியாக
முட்டுக்கட்டை போட்டுக் கொண்டேயிருக்க, இந்த பஞ்சாயத்தில் இனி நீதிமன்றங்கள் தலையிட
தேவையில்லை என்று இந்திய அரசு தனது அரசியல் சாசன சட்டத்தையே மாற்றப் போகின்றது. அதாவது
ஒதுக்கீடு மூலம் குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் அரசுபணியில் இன்று எளிதாக
நுழைந்து விட முடிகின்றது. வாழ்க்கையில்
மற்றவர்களைப் போல அவர்களும் சரிசமமாக உயர வேண்டும் என்று ஏராளமான சலுகைகள்
வழங்கப்பட்டு இருக்கிறது.
கல்வி முதல் வேலைவாய்ப்பு வரைக்கும் அத்தனை துறைகளிலும்
இந்த இன மக்களுக்காக பல சலுகைகள் வழங்கப்பட்டு வந்து
கொண்டுருக்கிறது. ஆனால் பிரச்சனை முடிந்தபாடில்லை. இவர்கள் பணிபுரியும் அலுவலகத்தில் இவர்களின் பதவி உயர்வு ஆதிக்க சாதியினரால் தடுக்கப்படுகின்றது
எனற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது.
உத்திரப்பிரதேச நவீன புரட்சித்தலைவி மாயாவதிக்கு இதுவொரு
ஆயுதமாகவும் கனவாகவும் இருந்தது. இன்றைய
சூழ்நிலையில் அவரது கட்சி தலைகுப்புற கிடந்தாலும் அவரே அங்குள்ள மொத்த
தாழ்த்தப்பட்ட மக்களின் ரட்சகராக இருப்பதாக பரப்பப்படுகின்றது. ஆனால்
பெரும்பான்மை பெற்று ஆட்சியில் இருந்த போது இந்த இன மக்களுக்கு இவர் உருப்படியாக
என்ன செய்தார் தெரியுமா? உத்திர பிரதேசத்தில் அவர் ஊரெங்கும் உருவாக்கிய அவர் கட்சியின்
சின்னமான யானை சிலைகளை தான் காட்ட முடியும்.
அவரைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநில கட்சிகளும், சாதி ரீதியான
கட்சிகளும் தாழ்த்தப்பட்டவர்களின் காவலன் என்ற பட்டத்தைப் பெற முடிந்தவரைக்கும்
முயற்சி எடுத்து வந்தது. இன்று அரசியல் சாசன திட்ட மாறுதல் வரைக்கும் வந்து நின்றுள்ளது.
தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்து அரசுப் பணியில் இருக்கும் ஒருவர் அந்த
துறையில் உச்சகட்ட பதவி உயர்வு வரைக்கும் வரும் அளவுக்கு உண்டான அங்கீகாரத்திற்கு
அனுமதி கொடுத்து நிறைவேற்றி உள்ளது.
அதாவது குறிப்பிட்ட துறையில் பணியாற்றும் போது
அவருக்குண்டான பணி சார்ந்த திறமைகள் குறித்து கவலைப்படத் தேவையில்லை. அவர் இன்ன சாதி என்ற
நோக்கம் ஒன்றே அவருக்கு பதவி உயர்வை தந்து விடும். இது தான் இந்த சட்டத்தின் மூலம் கிடைக்கும்
பலன்.
அண்ணல் அம்பேத்கார் தொடங்கி வைத்த பயணம் இது. தலித்
மக்களின் தலைவர் என்று கொண்டாடப்படும் இந்த தலைவர் பெற்ற கல்வியறிவு என்பது அன்றைய
காலகட்டத்தில் நினைத்தே பார்க்க முடியாத சாதனை. கல்வியறிவு பெற்று இருந்த போதிலும்
கூட தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பாடுபட்ட விதம் தான் குறிப்பிடத்தக்கது.
அடக்குமுறை, ஒடுக்குமுறை, அவமானங்கள் அத்தனையும் தாண்டி வந்த சாதித்த சாதனைகளின் விளைவுகளை
தான் இன்று ஒடுக்கப்பட்டவர்கள் அத்தனை பேர்களும் சுகவாசியாக அனுபவித்துக்
கொண்டுருக்கிறார்கள். ஆனால் தங்களின் உண்மையான விடுதலையென்பது கல்வியின் மூலம்
மட்டுமே என்பதை உணர்ந்தவர்களின் சதவிகிதம் குறைவாகவே இருக்கிறது.
இந்தியா சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகளை தாண்டி வெற்றிகரமாக
கடந்து வந்து விட்டோம்.
இந்த 66 ஆண்டுகளில் ஒவ்வொரு 20 ஆண்டுகளாக கணக்கில்
எடுத்துக் கொண்டாலும் இந்த இன மக்களில் மூன்று தலைமுறையாக கல்லூரி வரைக்கும்
வந்தவர்கள் மிக குறைவே. குடும்ப சூழ்நிலை, பொருளாதார காரணங்கள் என்று எத்தனை
அடுக்கிப் பார்த்தாலும் தங்கள் வாழ்க்கையை அரசாங்கம் கொடுத்த வாய்ப்புகளை
பயன்படுத்தி மேலே வந்து இருக்க வேண்டும். இன்றைய உண்மையான நிலை என்ன?
ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர் வளர்ச்சி பெற்று பெரிய
தொழில் அதிபராக இருக்கிறார். மற்றொருவர் கல்வியின் மூலம் அரசாங்கத்தில் நல்ல
பதவியில் இருக்கிறார். ஒருவர் இதே அரசாங்கத்தில் கடைநிலை ஊழியராக இருக்கிறார். இது
அரசாங்கம் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி மேலே வந்தவர்கள்.
நிச்சயம் இவர்களின் பொருளாதார வாழ்க்கை சிறப்பாக இருப்பதோடு
தனது தலைமுறைகளின் வாழ்க்கையை சரியான பாதையில் கொண்டு போக முடியும்.
இதைப் போலவே கூலி வேலை செய்து கொண்டுருப்பவர்களும்,
அடிப்படை வசதிகள் அற்ற இடங்களில் வாழ்ந்து கொண்டுருப்பவர்களும் என தனியான வாழ்க்கை
முறையில் வேறொரு கூட்டமும் வாழ்ந்து கொண்டுருக்கிறது. இவர்களுக்கு இரண்டு பிரச்சனைகள். பொருளாதார
வாழ்க்கையும் சுகமாக இருக்காது. தன்னை அடிமைப்படுத்தி வைத்திருப்பவர்களை தாண்டியும
எதுவும் செய்து விட முடியாது. பெரும்பாலான கிராமங்களின் இன்று வரையிலும் இது தான்
நடந்து கொண்டுருக்கிறது. இவர்களின்
தலைமுறையும் வேறுவழியே தெரியாமல் இதே பாதையில் தான் வாழ்ந்தாக வேண்டும்.
இது தவிர இந்த ஒடுக்கப்பட்ட மக்களில் வாழ்ந்து
கொண்டுருக்கும் நடுத்தர வர்க்கம்.
மேலே சொன்ன மூன்று கூட்டத்திற்கும் இந்த இட ஒதுக்கீடு ஒரே
மாதிரியான பார்வையில் தான் வைக்கப்படுகின்றது. அதிகாரியின் மகன் பெற்ற
ஒதுக்கீட்டின் காரணமாக வசதியற்ற குடும்பத்தில் உள்ளவனுக்கு எதுவும் போய்ச்
சேர்வதில்லை. இது தவிர ஒரு குடும்பத்தில் ஐந்து பேர்கள் இருக்கிறார்கள் என்றால்
அவர்கள் அத்தனை பேர்களுக்கும் இந்த வசதிகள் கிடைக்கின்றது. இட ஒதுக்கீடு மூலம்
பெற்ற வாழ்க்கைத் தரம் என்பதை அரசாங்கம் கணக்கில் எடுத்துக் கொள்ளாது. சாதி என்பதே
எல்லா இடங்களிலும் முன்னிறுத்தப்படுகின்றது.
பொருளாதார ரீதியான பங்கீட்டை அமல்படுத்த எவருக்கும் மனம்
இருப்பதில்லை. மொத்தத்தில் முறைப்படியான பங்கீடுகள் இல்லை. சேர வேண்டியவர்களுக்கு போய்ச் சேரவும்
இல்லை. மீண்டும் மீண்டும் அதே சுழல். அதே
வாழ்க்கை. அதே கொடுமை.
வர்க்கப்போராட்டத்தின் அரிச்சுவடியான "வசதியானவர்கள்
விட்டுத் தருவதில்லை. வாய்ப்பு
கிடைக்காதவன் அடித்துப் பிடுங்குவதும் தவறில்லை" என்கிற நிலைக்குத் தான் இப்போதுள்ள
இட ஒதுக்கீடு அழைத்துச் சென்று கொண்டுருக்கிறது.
பள்ளியில் சலுகை, பள்ளி முடித்த போது கல்லூரியில் சேர சலுகை. கல்லூரி முடித்த போது அரசு பணியில் சேர
சலுகை. பணியில் இருப்பவர்களுக்கு பதவி
உயர்வில் சலுகை. இப்போது கூடுதலாக
குறிப்பிட்ட துறையில் உச்சத்தை தொடும் அளவுக்கு பணித்திறமைகளுக்கு அப்பாற்பட்டு
தனிச் சலுகை.
இன்றும் சாதீய கொடுமை இருக்கின்றது என்பது மறுக்க முடியாத
உண்மை.
அதைப் போல அரசாங்கம் கொடுத்த சலுகைகளை பயன்படுத்தி மேலே வந்தவர்கள் அத்தனை
பேர்களும் அவர்கள் அடைந்த சுதந்திரத்தை மற்றவர்களுக்கும் தருகிறார்களா? குறைந்தபட்சம் தங்களது இன மக்களுக்காக தங்களால் முடிந்த உதவிகளை செய்து அடுத்தவர்
மேலேற உதவுகின்றார்களா என்பது தான் இன்று வரையிலும் கேள்விக்குறியாக இருக்கிறது.
இன்றும் பார்பனீயம் என்ற வார்த்தை இந்தியாவில் விடாது துரத்தும் கருப்பாக இருப்பதைப்
போலவே உயர்படிப்பில் காட்டும் பாரபட்சம் என்பதில் தொடங்கி உள்ளூர் கிராமங்களில்
தேர்ந்தெடுத்த தலித் பஞ்சாயத்து தலைவர்களை பணியாற்ற விடாமல் தடுப்பது வரைக்கும்
அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது.
உண்மையான காரணங்கள் எத்தனை இருந்தாலும் இதில் உளவியல் காரணமும்
இருக்கின்றது.
3000 வருடங்களாக இந்தியாவில் நடந்து வந்த கொடுமை இது. இன்று
வரையிலும் மனிதர்களால் தங்களை மாற்றிக் கொள்ள முடிவதில்லை. ஆண்டாண்டு காலமாக
தங்களைப் பார்த்து வணங்கிய கூட்டம் இன்று வசதியாக தங்களை மாற்றிக் கொள்ளும் போது
உருவான ஆதிக்கதீ உள்ளுற கொளுந்து விட்டு எறிந்து கொண்டு தான் இருக்கிறது. நாடாக
இருந்தாலும் வீடாக இருந்தாலும் இன்று பொருளாதாரம் தான் அனைத்தையும்
தீர்மானிக்கின்றது. பணம் இருந்து விட்டால் பதவி வந்து விடுகின்றது. பதவி வந்து விட்டால் பழையவை மறக்கப்படுகின்றது. கடந்து வந்த பாதையை மறக்கும் போது தனக்கு பின்னால் கண்ணீர் வடித்துக் கொண்டுருப்பவர்கள் எவரும் கணகளுக்கு தெரிவதில்லை.
சரி, உதவிகள் தான் செய்யவில்லை என்பதை கணக்கில் எடுத்துக் கொண்டாலும் இட ஒதுக்கீடு சலுகைகளை அனுபவித்து மேலே வந்தவர்களின்
வாழ்க்கையோ முற்றிலும் வேறு விதமாக இருக்கிறது.
படித்து மேலே வருபவர்கள் எவரும் நான் இந்த இனத்தைச்
சேர்ந்தவர் என்று சொல்லிக் கொள்ள விரும்புவதே இல்லை. முடிந்தவரைக்கும் தன் இடத்தை, தன் வாழ்க்கை
முறையை மாற்றிக் கொள்ளத் தான் விரும்புகிறார்கள்.
படித்தவர்கள், படித்துக் கொண்டுருப்பவர்கள், பணியில் சேர்ந்தவர்கள்,
வாழ்வில் உயர்ந்தவர்கள் என்று தெரிந்த வட்டத்தில உள்ளவர்களை கணக்கு எடுத்துப்
பார்த்தால் அவர்களின் உறவினர்களுக்கு கூட உதவி செய்யாதவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
மற்ற காரணங்களை விட இது தான் முழுமையான சுதந்திரம் கிடைக்காமல் இருக்க முக்கிய காரணமாக இருக்கின்றது. சுதந்திரம் என்பது கொடுப்பதல்ல. தான் உணர்வது. தான் உணர்ந்ததை மற்றவர்களுக்கு கொடுக்கும் போது தான் அதுவொரு உருவமாக மாற்றப்படுகின்றது. உணரும் போது தான் உண்மையான சுதந்திரத்தின் அருமை தெரியும். உணரவும் தெரியாமல் ஒதுங்கவும் முடியாமல் இன்றைய ஒடுக்கப்பட்டவர்களின் வளர்ச்சி வினோத கலவையாக இருக்கிறது.
ஒரு சிலையை உடைத்து விட்டார்கள் என்று எழுச்சியோடு கூடும்
கூட்டம் தங்கள் இடங்களில் உள்ள பள்ளிக்கூடங்கள் தேவை என்பதற்காக அதிக எழுச்சியோடு
போராட்டம் செய்வது குறைவாகத்தான் இருக்கின்றது. எங்கள் பக்கம் ஓட்டுக்கு பணம்
கொடுக்கவில்லை என்று கதறிக் கொண்டு பேட்டி கொடுப்பவர்கள், தகுதி பார்த்து தங்கள்
தலைவர்களை தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. வலியோடு அதிகம் வாழ்பவர்கள்
தாங்கள் செய்யும் சிறிய தவற்றின் வலிமை அடுத்த பல தலைமுறைகளுக்கும்
கடத்தப்படுகின்றது. தகுதியான தலைவர்கள் உருவாகாமல் போனதற்கு இதுவே முக்கிய காரணமாக
இருந்து விடுகின்றது. இதன் காரணமாகவே இன்று வரையிலும் இந்த மக்களை வெறும் உணர்ச்சிக்கூட்டமாகவே
வைத்திருக்க முடிகின்றது.
இன்று வரையிலும் இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசாங்க இடங்கள் பெரும்பாலான சதவிகிதம் வருடந்தோறும் நிரப்பப்படாமல் தான் இருக்கின்றது. காரணம் கல்வியில் அக்கறையின்மை. தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டு எவர்
வந்தாலும் ஏற்றுக் கொண்டு கண்மூடித் தனமாக ஆதரவு அளிப்பது என்பது வரைக்கும் போய்க்
கொண்டே இருப்பதால் தன்னலமற்ற ஒரு தலைவர் கூட இந்த இன மக்களுக்கு
அமையவே இல்லை என்பது தான் உண்மை. முறையான தகுதியுள்ளவர்களுக்கும் இதன் காரணமாகவே
வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றது.
தாழ்த்தப்பட்ட மக்கள் என்று பொதுப்பபடையாக சொல்கின்றோமே
தவிர அதற்குள் இருக்கும் அத்தனை பிரிவுகளும் ஒன்றுடன் ஒன்று சேராமல தனித்தனி
தீவுகளாகத் தான் இருக்கிறார்கள்.
அதற்குள்ளும் நான் பெரியவன். நீ
எனக்கும் கீழே என்ற ஆதிக்க உணர்வு தான் இன்னமும் இருக்கிறது. பார்ப்னீயத்தை கேலி
செய்து கொண்டே தங்களையும் ஒரு பார்ப்னீய பாதையில் தான் கொண்டு போய்க்
கொண்டுருக்கிறார்கள்.
இந்திய அளவில்,
தமிழக அளவில் அத்தனை தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களும் இன்று வரையிலும் தேவதூதர்களாகத்தான்
இருக்கிறார்கள். கலவரம் உருவாவதற்கும்
காரணமாக இருப்பவர்கள் அத்தனை பேர்களும் கலவரம் அடங்கி உயிர்பலியை வேடிக்கைப் பார்க்கத்தான்
வருகிறார்கள். அதுவரையிலும்
பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள். பள்ளிக்கூட பாடங்களில் முதல் பக்கத்தில் நாம் பார்த்த
படித்த வரிகள் மிக முக்கியமானது.
தீண்டாமை பாவச் செயல்.
தீண்டாமை ஒரு பெங்குற்றம்.
தீண்டாமை ஒரு மனித தன்மையற்ற செயல்.
ஆனால் இப்போது நடந்து கொண்டுருக்கும் சூழ்நிலைகளை வைத்துப் பார்க்கும் போது இனிமேல் இப்படித்தான் எழுத வேண்டியிருக்கும் போலிருக்கு.
தீண்டாமை பாவச் செயல்.
தீண்டாமை ஒரு பெங்குற்றம்.
தீண்டாமை ஒரு மனித தன்மையற்ற செயல்.
ஆனால் இப்போது நடந்து கொண்டுருக்கும் சூழ்நிலைகளை வைத்துப் பார்க்கும் போது இனிமேல் இப்படித்தான் எழுத வேண்டியிருக்கும் போலிருக்கு.
தெளிவற்ற ஒதுக்கீடு பாவச் செயல்,
தேவையற்ற ஒதுக்கீடு ஒரு
பெருங்குற்றம்.
53 comments:
//தெளிவற்ற ஒதுக்கீடு பாவச் செயல்,
தேவையற்ற ஒதுக்கீடு ஒரு பெருங்குற்றம்.
தகுதியானவர்களை ஒதுக்குவது மனிதத்தன்மையற்ற செயல்.//
இப்போ என்ன அவசரம். வெந்தது போதும் முந்தானையில கொட்டு கதையா இருக்கு. விடுமய்யா, நாம சுவைச்சோம் இரண்டாயிரம் வருஷம்... அவிங்களுக்கு ஒரு 200 வருஷமாவது கொடுப்போம்.
இடையில என்ன கஷ்டம் வந்தாலும் சந்திப்போம்னு உறுதி பூனுவோம்... ;-)
ஜென்டில்மேன் படம் பார்த்த எபெக்டு :)
http://www.go-nxg.com/?p=3558 read this.
"சாதிகள் இல்லையாடி பாப்பா என்று சொன்னவர் பாப்பாவுக்கு மட்டும் தான் சொல்லியிருக்கிறார் என்று கணக்கில் எடுத்துக் கொண்டு இன்றைய தலைவர்கள் மறந்து விட்டார்கள்"
தயவுசெய்து, உங்கள் கட்டுரைக்காக பாரதியை வம்புக்கு இழுக்காதீர்கள். பாரதி ஒரு ஜாதி வெறி பிடித்த மிருகம். உலகில் ஆரிய இனமே உயர்ந்தது, தன் ஆரிய மொழியான சமஸ்கிருதமே உயர்ந்தது என நினைத்து வாழ்ந்த மிருகம்.
"தீண்டாமை பாவச் செயல்.
தீண்டாமை ஒரு பெங்குற்றம்.
தீண்டாமை ஒரு மனித தன்மையற்ற செயல்"
என்பதை எல்லாரும் ஏற்றுக் கொண்டு என்று அதை கடைப்பிடிகிறார்களோ அன்று இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விடலாம். அது
வரைக்கும் இருக்கட்டும். இட ஒதுக்கீட்டினால் ஆத்திக்க சாதியினர் இவ்வளவு கஷ்டப்பட்டும் அவர்கள் திருந்துவது மாதிரி தெரியவில்லை.
ஜோதிஜி,
தெ.கா.சொன்னதை வழி மொழிகிறேன்.
500 ரூ லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை பொடிப்போட்டு பிடித்து லஞ்ச ஒழிப்புத்துறை தான் செயல்படுவதாகக்காட்டிக்கொள்ளும், ஆனால் கோடிக்கணக்கில் என்றால் கண்டுக்காது.
அது போல இருக்கு உங்க கட்டுரையின் நியாயம்.
அருமையான அலசல்.
பிரச்சினைகலை பெரிதும் அலசினாலும் இட ஒதிக்கீடு வேண்டாம் என்று முடிக்க வேண்டும் என்று நினப்பிலேயே எழுதப்பட்டுள்ளது. பெரியாரியலாளர் சிலர் சாதி போடாமல் ஒதிகீடு பெறாமல் காரியமாற்றுகிறார்கள். உள் ஒதிகீடு தேவையே ஒதிக்கீடு தேவை என்று உறுதி செய்கிறது.இன்னும் இட ஒதிக்கீடிடிலேயே மூன்றாம் தலைமுறைக்கு தடுத்து முதல் தலைமுறைக்கு முன்னுரிமை என்று போக வேண்டிய்ள்ளது. ஆனால் இட ஒதிக்கீட்டுக் காவலர்கள் கூட இதனை ஒப்ப முன்வருவதில்லை. எனவே சாதி தடை செய்யப்படுகிறது என்றும், வாரிசு சொத்துரிமை தடை செய்யப்படுகிறது என்றும் சட்டம் வந்தால் ஒழிய ஏதும் உறுப்படியாக செய்ய முடியாது.
//இந்தியாவில் உள்ள பதவிகளுக்கு தகுதி என்பது முக்கியமல்ல. சந்தர்ப்ப சூழ்நிலைகள் தான் முக்கியத் தேவையாக இருக்கிறது.//
//ஒடுக்கப்பட்டவர்கள் அத்தனை பேர்களும் சுகவாசியாக அனுபவித்துக் கொண்டுருக்கிறார்கள். ஆனால் தங்களின் உண்மையான விடுதலையென்பது கல்வியின் மூலம் மட்டுமே என்பதை உணர்ந்தவர்களின் சதவிகிதம் குறைவாகவே
உணரவும் தெரியாமல் ஒதுங்கவும் முடியாமல் இன்றைய ஒடுக்கப்பட்டவர்களின் வளர்ச்சி வினோத கலவையாக இருக்கிறது.
//ஒரு சிலையை உடைத்து விட்டார்கள் என்று எழுச்சியோடு கூடும் கூட்டம் தங்கள் இடங்களில் உள்ள பள்ளிக்கூடங்கள் தேவை என்பதற்காக அதிக எழுச்சியோடு போராட்டம் செய்வது குறைவாகத்தான் இருக்கின்றதுஇருக்கிறது.//
ஒவ்வொரு மனிதனுக்குமுள்ள இந்த உணர்வுகள் ஆட்சியில் இருக்கும் மர மண்டைகளுக்கு புரிய மறுப்பதுதான் அவலம்.
தெகா
வவ்வுஜி
ரெண்டு பேரும் ஒரே வார்த்தையில் பொங்கீட்டீங்க.
அடுத்து வந்த இறைகற்பனை இலான் அவர்கள் கூட உள்வாங்கி அவர் கருத்தை பதிவு செய்து உள்ளார்.
எந்த இடத்திலும் இட ஒதுக்கீடு தவறு என்றோ வேண்டாம் என்றோ சொல்லவில்லை. அதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள், தற்போதைய நிலைமை அத்தனையும் நன்றாகவே பேசப்பட்டுள்ளன.
உண்மையான ஒதுக்கீடு உரியவர்களுக்கு சேரவில்லை என்ற போது இதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்பது தான் பேசு பொருள். அதற்காக இட ஒதுக்கீட்டை நிறுத்த வேண்டும் என்று அர்த்தம் இல்லை.
நிர்மல் ஜென்டில்மேன் கணக்காக யோசிக்கவில்லை. ஒடுக்கப்பட்டவர்கள் முன்னேறுவது முக்கியம் என்பதைப் போல பணியில் திறமையானவர்களும் இருக்க வேண்டும் என்பதும் முக்கியம் தானே. உள்ளே நுழைய அனுமதிக்கும் இட ஒதுக்கீட்டுக்குப் பிறகு அவரவர் திறமையை வளர்த்துக் கொள்ளாவிட்டால் தற்போது ஆசிரியர்கள் எழுதிய தேர்வில் 1 சதவிகிதம் கூட தேறாத நிலைமை தானே உருவாகும்.
நாம் உணர்ச்சி வசப்பட்டு பல விசயங்களைப் பேசலாம். ஆனால் அடுத்து வரும் தலைமுறைகளுக்கும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். கிடைத்த வாய்ப்புகளை பெற்றவர்கள் அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் உண்மை தானே? கிடைக்காதவர்களுக்கு உதவி புரிய காரணமாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தவறா?
இட ஒதுக்கீட்டினால் ஆத்திக்க சாதியினர் இவ்வளவு கஷ்டப்பட்டும் அவர்கள் திருந்துவது மாதிரி தெரியவில்லை.
யோசிக்க வைத்த வரிகள்.
வணக்கம் சகோ நல்ல பதிவு,
பெரும்பாலான பதிவர்கள் தவிர்க்கும் விடயத்தை கத்தி மேல் நடப்பது போல் சொல்லி இருக்கிறீர்கள்.
ஒரு விடயம் கருத்துரீதியாக் விவாதிக்கப் படுவதற்கும், சமூகத்தில் அமல் படுத்தப்டுவதற்கும் இடையே பல வேறுபாடுகள் உள்ளன.
சர் வின்ஸ்டன் சர்ச்சில் மக்கள் ஆட்சி பற்றி கூறியதை இங்கே சொல்கிறேன்.
நிச்சயமாக் மக்கள் ஆட்சிமுறை பல குறைகள் உள்ள ,மோசமான ஆட்சிதான் ,எனினும் இதற்கு முந்தைய கால ஆட்சிமுறைகளை விட சிறந்ததே.
Democracy is the worst form of government except for all those others that have been tried.
In a speech in the House of Commons on 11 November 1947, Winston Churchill said:
No one pretends that democracy is perfect or all-wise. Indeed, it has been said that democracy is the worst form of government except all those other forms that have been tried from time to time.
மக்கள் ஆட்சிக்குப் பதில் இட ஒதுக்கீடு என்று போட்டுப் பார்த்தால் சரியாக பொருந்தும்.
இட ஒதுக்கீட்டை விட சிறந்த முறை நமது 120+ கோடி மக்கள் கொண்ட இந்தியாவுக்கு வடிவமைக்க முடியுமா?சாத்தியம் மிக மிக.... குறைவு!!
எனினும் இட ஒதுக்கிடு குறிப்பிட்ட மத ,சாதிரீதியாக பிரிப்பதை தவிர்க்க வேண்டும்!!.இப்போது போலவே பொதுவான் பிரிவுகள் இருக்கட்டும்.
ஆசிரியர் தின வாழ்த்துக்கள் சகோ!!!
நன்றி
சார்வாகன் கலக்குறீங்க. நானும் வின்ஸ்டன் சர்ச்சில் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்காதீங்கப்பா என்று கதறியதை படித்துள்ளேன். ஆமா எப்ப உங்க முகமூடி இல்லா தரிசனம்? எனக்கு மட்டுமாவது சொல்லுங்களேன்.
படிக்க படிக்க “சுர்” என்று ஏறுகிற மாதிரியான பதிவு.
இச்சட்ட திருத்தம் ராஜ்ய சபையில் வந்த போது அதை எதிர்த்த ஒரே புண்ணியவான் “சோ” என்றும் அதற்கான காரணத்தையும் துக்ளக்கில் அதில் சொல்லியுள்ளார்.சோவிடம் கட்சி இல்லை, அதிகாரம் இல்லை,அரசாங்க பதவி இல்லை அதனால் நாட்டுக்கு எது நல்லது என்று யோசித்து எதிர்த்து இருக்கார்.கிட்டத்தட்ட அதே கருத்தை இங்கும் பதிவு செய்துள்ளீர்கள்.உழைக்கும் இடத்திலும் ஒதுக்கீடு என்பதை பலருக்கு சோம்பேரித்தனத்தையே உண்டாக்கும்.திறமை இருந்தால் தான் முன்னுக்கு வரமுடியும் என்பதை வேலை இடத்தில் உண்டாக்கவேண்டும் இல்லாவிட்டால் திறமையில்லாத ஒருவர் கீழே உள்ள நிர்வாகம் கொஞ்சம் கொஞ்சமாக அழியும்.
உங்கள் எண்ணம் அழகாக வெளிப்பட்டு இருக்கிறது.
ஜோஜிதிஜி,
அப்போ மற்ற எந்த விஷயத்திலும் இதனை பொங்கி இருந்தால் சரி , இவ்விஷயத்தில் நீங்கள் சொல்லும் காரணம் தர்க்க ரீதியாக சரி என அறிவு ஜீவிகளுக்கு தோன்றலாம்,ஆனால் உங்கள் கட்டுரையில் வரிக்கு வரி ஒழிந்திருக்கும் அபத்த தர்க்கங்களை வெளிக்கொண்டு வரவும் முடியும், ஆனால் அது ஒரு சர்ச்சைக்கும், மனவருத்தத்திற்குமே வழிக்காட்டும் என்பதால் தவிர்க்கிறேன்.
சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகளில் சுமார் 50 ஆண்டுகளாவது காங்கிரஸ் தான் ஆண்டுள்ளது அதாவது நேரு குடும்பம் தான் ஆண்டுள்ளது, இப்போது கூட அடுத்து ராகுல் தான் என எழுதி வைக்காத குறையாக சொல்லப்பட்டு வருகிறது,அப்படி எனில் ராகுலை விட திறமை அனுபவம் மிக்கவர்கள் காங்கிரசில் இல்லையா? இது என்ன வகையான இட ஒதுக்கீடு.
மத்தியில் நிலவும் இதே நிலை எல்லா மாநிலங்களிலும் நிலவுகிறது.
இட ஒதுக்கீட்டின் படி அரசுப்பணியில் திறமை இல்லாதவர் வந்தால் பணித்திறன் குறையும் என்றால் நாட்டின் மொத்த நிர்வாகமும் ஒரு இட ஒதுக்கீட்டில் சிக்கி இருப்பதை யார் மாற்றுவது?
1947 க்கு முன் கல்விக்கற்ற சமூகம் ,கல்வியில் முன்னேறிய சமூகம் எது ? எனவே விடுதலைக்கு பின்னும் தொடர்ந்து அவர்கள் கல்வியில் அதிகம் சாதிக்க தடையே இல்லை, 47 இல் கல்வியறிவே இல்லாத நிலையில் இருந்து இப்போது கொஞ்சம் கல்வியறிவில் முன்னேறும் மற்றவர்கள் இடஒதுக்கீட்டை அனுபவித்தால் அதில் மட்டும் "கிரீமி லேயர்" என பூதக்கண்ணாடி வைத்து பார்ப்பது அறிவுஜீவிகளின் வேலையாக போச்சு :-))
66 ஆண்டுகளில் இட ஒதுக்கீட்டினை முதல் தலைமுறை அனுபவிச்சு ,இன்னும் அவர்களின் வழி வந்தவர்கள் தொடர்வது நடந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் புதிய முதன்முறை இட ஒதுக்கீட்டின் பலனை நுகர்வோர்களும் இருக்கிறார்கள், இப்படியே தொடர்ந்தால் மெதுவாக என்றாலும் அனைத்து ஒடுக்கப்பட்டவர்களும் சில,பல ஆண்டுகளில் முழுமையாக கல்வியறிவு பெற வாய்ப்புள்ளது ,அப்போது தான் சமலநிலை நிலவும். அதற்கு தெ.கா சொன்னது போல 200 ஆண்டுகள் ஆனால் ஆகட்டுமே.
நாட்டின் தலைமைப்பொறுப்பையே வாரிசுரிமை என்ற இட ஒதுக்கீட்டில் தூக்கி கொடுக்கும் ஒரு சமூகம் வாழ்வியலாதாரத்தில் மட்டும் விழிப்புணர்வுடன் இட ஒதுக்கீட்டினைப்பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?
The point is right.. but in a way the root cause for all these is England (which uphelp the caste system) and Ambedkar (who wrote the constitution with the help of 6 other fellows, and also taking all the faucist laws from UK and USA). Its churchill who has provided these info to Ambedkar. What we read about Ambedkar is all just plain lies told from generation to generation. I know most of them wont accept it, initially me too.. but think of it, how can a single guy can write the whole constitution (ofcourse with the help of 6 people). He never participated in any freedom struggle, not part of any freedom fighting family. From no where he comes into picture.. thats totally strange, people who dont accept this can research about him.. by all means.. and can come for a discussion. Discussion will only lead to truth..
யுவா,
தமிழில் எழுதப்பழகுங்கள், அப்புறம் உண்மையை கண்டறிய விவாதிக்கலாம்.
ஒரு பிஜேபி கட்சித்தொண்டர் போலவே பேசுறிங்க, அருண் ஷோரி எழுதின புத்தகம் படிச்சிங்க போல :-))
அடிப்படையான ஒரு உண்மையை புரிந்து கொண்டால் இப்படிலாம் பேச மாட்டிங்க.
அன்றைய நிலையில் அம்பேத்காருக்கு சமூக சுதந்திரமே ,அரசியல் சுதந்திரத்தினை விட முக்கியமாகப்பட்டது,இன்றும் அப்படித்தான்.
தமிழ் நாட்டிலேயே பல இடங்களில் இரட்டை குவளை, செருப்பு அணிய, சைக்கிள் ஓட்ட ஒடுக்கப்பட்டவர்களுக்கு தடை. இதெல்லாம் சுதந்திரம் வந்த பிறகும் இருக்கு என்றால் 1947க்கு முன்னர் என்ன நிலை இருந்திருக்கும்.
காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம் பூர்ஷ்வாக்கள் ,ஒடுக்கப்பட்டவர்களை இந்தியராகவே நினைக்கவில்லை,எனவே வெள்ளைக்காரன் இருக்கும் போதே சமூக சுதந்திரம் பெற்றுவிட வேண்டும் என நினைத்தார், போராடினார், அதுவும் சுதந்திரப்போராட்டமே.
அவர் எதுவும் செய்யாமல் எப்படி காந்திக்கு முன்னரே லண்டன் வட்ட மேஜை மாநாட்டுக்கு அழைக்கப்பட்டார்.இன்னும் சொல்லப்போனால் அக்காலத்தில் தமிழகத்தில் இருந்து இரட்டை மலை சீனிவாசன் என்பவரும் ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாக லண்டன் வட்ட மேஜை மாநாட்டுக்கு சென்றுள்ளார்.
வெள்ளைக்காரன் சும்மாவே கூப்பிடுவானா? ஏன் எனில் சமுகம்மக்களின் விடுதலைக்கு போராடியவர்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டார்கள் வெள்ளையர்கள்.
எனவே தான் காங்கிரசும் அம்பேத்கரை வேறு வழியில்லாமல் கட்சியினுள் அழைத்துக்கொண்டது.
அம்பேத்கர் தான் எதுவும் செய்யவில்லையே பின்னர் ஏன் அவரை காந்தி உண்ணாவிரதம் இருந்து மிரட்டி பூனா ஒப்பந்தம் போட வேண்டும்?
எல்லா நாட்டிலும் அரசியல் நிர்னய சட்டம் ஒருக்குழுவினரால் தான் அமைக்கப்பட்டுள்ளது, அதற்கு ஒருத்தலைவர் இருப்பார், அக்குழு தவிர்த்து பலரும் வேலை செய்தாலும் குழுத்தலைவரின் பெயராலே அறியப்படும் என்பது.
அமெரிக்க அரசியல் நிர்ணய சட்டக்குழுவின் தலைவராக மோரிஸ் என்பவர் இருந்துள்ளார், ஆனால் பலர் எழுத உதவியுள்ளனர்.
ஒரு தலைவரின் கீழ் தொகுக்கப்படுவது தான் அரசியல் நிர்ணய சட்டம்.
யுவா ரொம்ப அழகா புலமையோடு எழுதியிருக்கீங்க. வவ்வால் சொன்ன மாதிரி தமிழில் எழுதப் பழகினால் இதே போன்று நடையழகு வரும் என்பது எனது நம்பிக்கை. உங்கள் கருத்தை முழுமையாக படித்த பிறகு பதறிக் கொண்டு பதில் அளிக்க உள்ளே வந்தேன். ஏற்கனவே வவ்வால் கொல வெறியோடு இருக்கார். இப்ப நீங்க வேற புதுசா ஒரு பூதத்தை கிளப்புறீங்க?
ஆனால் நீங்க என்ன சொன்னாலும் அம்பேத்கர் பெற்ற வளர்ச்சி என்பது ஒரு தனி மனிதனின் நம்பிக்கை சார்ந்த உழைப்பு சார்ந்த சாதனை. பாராட்ட வேண்டிய மனிதர் என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும் யுவா. சீக்கீரம் உங்கள் தமிழ் பதிலை எதிர்பார்க்கின்றேன்.
குமார்.....வவ்வால்.
ரெண்டு பேரும் வெவ்வேறு துருவமாக இருக்கீங்க.
சோ கருத்தை நானும் ஒரு காலத்தில் பெரிதாக எடுத்துக் கொண்டவன் தான். ஆனால் இப்ப ச்சோச்சோ என்கிற ரீதியில்.
வவ்வுஜி இன்னும் வேறு யாராவது இன்னும் தெளிவாக இதற்கு பதில் தருவார்கள் என்று காத்துருப்போம்.
Thanks for the response from Vavval & Nethaji.. I understand and know why i must write in Tamil. But English comes easy for me, no offense seriously..
Ok back to the topic.. The history as we know is what we learned from School books, newspaper, magazines, net, elder people teaching us.. what if its wrong? I was always interested in the alternate view points, meaning i wont take for granted any views presented in the society without proof.
This search has led me to know, too many informations that are hidden from us.. So here i will argue based on what i read and think it might be true, upto my knowledge..I dont have any proof so as you.. we are not 70 years old to had seen the freedom struggle, what we know is the history from other people's mouth.
1) Divide and Rule is the strategy followed by (East India Company-EIC). There are many people who are used as tools to implement this. To divide people there needs to be separate society separate rules etc.. Bottomline is EIC along with the help of Ambedkar and fellows implemented this. They were the ones who created this division. Have we ever heard of untouchables in ancient history of India.. there has to be a starting point, and this was it..
First Round Table Conference was called upon by King George-V on 1930 at London and Ambedkar was invited as a delegate. Second such conference held on 1931 and he was again called as a delegate. The conferences were the ones where the decisions on controlling India were discussed. Search the list of candidates who attemded that conference. It was a conference help by EIC, why someone from India must go there? Is Gandhi not a better man for that, if it happened for a good..
2) Ambedkar was always seen as a hero of lower castes.. why did he married a Brahmin girl?
Why did he wear the coat and suit which is anti-swadeshi?
Of course the above 2 questions are his personal choice, but couldnt stop my urge to question this out..
3) There was a separate election held for the untouchables.. this is the first instance on when the untouchables were officially separated. (on the year 1932, Gandhi staged a fast from Central jail of Pune for this incident). This election was officially signed by Ambedkar upon the request of Churchill. Because Ambedkar was part of Bombay Presidency Committee. Since Gandhi's fast reached a peak, this election was called off and and an agreement was reached. Its called as Poona pact.
4) The constituion was written by a group of people, ya thats right.. Team composed of KM.Munshi, Alladi Krishnaswamy Iyer, N. Gopalaswami Ayengar , Madhava Rao , Mohammed Saadullah and TT Krishnamachari,Benegal Narsing Rao. So many eminent people up here, why Ambedkar was heading this..?
Above all he wrote a book titled 'Which is Worse? Slavery or Untouchability'.. he supported alavery ofcourse.. what does that show..
he participated in LS election thrice, but never won a seat.. Finally he was appointed as RS due to the pressure of Churchill. Then he was made as the Law minister.
I had not yet read Arun Shourie's book. Am somwhow not interested in his talks..
Read and think about it..
You can always deny the above facts with a statement which makes some logical sense. Nobody has any solid proof to anything, i accept. Its all about facts and nobody can deny facts until unless it got an alternate view point (as far as history is concerned)..
யுவா இதில் நீங்க சொல்லியுள்ள சில விசயங்களைப் பற்றி பேச விரும்புகின்றேன். எனக்குள்ளும் நீண்ட நாட்களாகவே அது மனதிற்குள் இருந்து கொண்டுருக்கிறது. ஆனால் எங்க தல வவ்வுஜி வரட்டும். அப்புறம் பேசறேன்.
வணக்கம் நண்பர் யுவா,
வரலாற்று ரீதியான நிகழ்வுகளைக் குறிப்பிடும் போது ஆதராமாக குறிப்பு காட்ட வேண்டும்.சொந்தக் கருத்துகள் பலன் தராது .
நீங்கள் கூறுவதை முதலில் எளிமையாக் கூறுகிறேன்
1. முதல் கருத்து ஆங்கிலேயரின் வருகைக்கு முன்பு இந்தியாவில் சாதி உயர்வு தாழ்வு கிடையாது.[மனு தர்மம் சொல்லி ஒரு புத்தகம் படியுங்கள்,அடிமை முறை,தேவ தாசி முறை பற்றி எல்லாம் கல்வெட்டு இருக்கிறது]
2. பிரித்தாளும் கொள்கையை ஆங்கிலேயரே முதலில் பின்பற்றினர். [அதற்கு முன் அனைவரும் ஒருவேளை நீங்கள் கூறியபடி ஒற்றுமையாக இருந்தும் படையெடுத்து வந்தவர்களின் கதை "வந்தார்கள் வென்றார்கள் " என்றால் நம் முன்னோர்கள் உதவாக்கரைகள் அப்படித்தானே!!!]
3.கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி 1857ல் முடிந்து விட்டது.என்ன சொல்ல வருகிறீர்கள்.இந்தியா விடுதலை அடைந்த போதே 500+ சம்ஸ்தானங்கள் இருந்த்ன. அங்கும் ஏன் சாதி உயர்வு தாழ்வு??அங்கு எப்படி பிரித்தாளும் சூழ்ச்சி?
1947 British Raj Map
http://www.euratlas.net/history/hisatlas/india/194734ID.html
http://en.wikipedia.org/wiki/Princely_states
4.அம்பேத்கார் உடை அணிந்ததோ, வேறு சாதிப் பெண்ணை மணப்பது கூட உறுத்துகிறது என்பவர்களை என்ன் சொல்வது?.வெள்ளையருக்கு கொடி பிடித்த்வர்கள் ,சாமரம் வீசியவர்கள் ராவ் பகதூர்,திவான் பட்டம் வாங்கியவர்கள் யார் என்பதெல்லாம் வரலாற்று ஆவணம்.
5. காந்தி தென் ஆப்பிரிக்கவில் இருந்து வந்து உடனே இந்திய காங்கிரசுக்கு தலைவராகி நோகாமல் உண்ணாவிரதம்,சத்தியாக்கிரகம் என்று சுதந்திரம் வாங்கி கொடுத்தார் என்றால் கதையை அப்படியே ஏற்றுக் கொள்வீர்கள்.
காந்தியின் காலத்தில் அவரும் ஒரு தலைவர் ஆகவேதான் வட்ட மேசை மாநாட்டுக்கு முஸ்லிம் லீக்,இந்து மகா சபா,கிறித்தவ அமைப்பு உடன் அம்பேத்காரையும் அழைத்தனர். இங்கே பாருங்கள்!!
http://en.wikipedia.org/wiki/Round_Table_Conferences_(India)#First_Round_Table_Conference_.28November_1930_.E2.80.93_January_1931.29
Muslim League: Maulana Mohammad Ali Jauhar, Muhammad Shafi, the Aga Khan, Muhammad Ali Jinnah, Muhammad Zafrulla Khan, A.K. Fazlul Huq
Hindu Mahasabha: B. S. Moonje and M.R. Jayakar
Liberals: Tej Bahadur Sapru, C. Y. Chintamani and Srinivasa Sastri
Sikh: Sardar Ujjal Singh
Catholics: A. T. Pannirselvam
Depressed Classes : B. R. Ambedkar
Princely states: Akbar Hydari (Dewan of Hyderabad), Sir Mirza Ismail Diwan of Mysore, Kailas Narain Haksar of Gwalior, Maharaja Bhupinder Singh of Patiala, Maharaja Sayajirao Gaekwad III of Baroda, Maharaja Hari Singh of Jammu and Kashmir, Maharaja Ganga Singh of Bikaner, Nawab Hamidullah Khan of Bhopal, K.S. Ranjitsinhji of Nawanagar, Maharaja Jai Singh Prabhakar of Alwar and the rulers of Indore, Rewa, Dholpur, Koriya, Sangli and Sarila.
The idea of an All-India Federation was moved to the centre of discussion. All the groups attending the conference supported this concept. The responsibility of the Executive to Legislature was discussed, and B. R. Ambedkar demanded a separate electorate for the so-called Untouchables.
(contd)
ஜோதிஜி,
என்னது 'தல"யா ,நல்லா இருக்கே, என்னை மாட்டிவிட்டு கும்மவா :-))
மேலும் யுவாவிடம் பேசுவது நேர விரயமாக இருக்குமோனு தோன்றுகிறது காரணம்,
//Nobody has any solid proof to anything, i accept. Its all about facts and nobody can deny facts until unless it got an alternate view point (as far as history is concerned)..//
இவரும் சரியாக வரலாற்றினைப்படிக்கவில்லை, அடுத்தவங்களும் படித்த்திருக்க மாட்டாங்க என்பது போலவே முன்முடிவுடன் இருப்பதாகப்படுகிறது.
//Have we ever heard of untouchables in ancient history of India.. //
இப்படியாக ஏகப்பட்ட முன்முடிவுகள் அவரிடம் உள்ளது.
எதற்கும் ஒரு முறை முயற்சிக்கிறேன், இணையத்தில் எவ்வளவோ விவாதம் செய்தாச்சு :-))
----------
யுவா,
மேலே ஜோதிஜிக்கு சொன்னதைப்படித்திருப்பீர்கள், இந்திய சுதந்திரம், வரலாறுப்பேசினாலே பிச்சுக்கும், கூடவே அம்பேத்கார் பற்றி பேச வேண்டும் எனில் கவனமும் தேவை.
பழங்கால இந்தியாவில் தீண்டாமை இல்லை என்பதாக நீங்கள் பேசுவதே வேடிக்கையாக இருக்கிறது.
நந்தனார் கதை தெரியுமா? அவர் எல்லாம் வெள்ளைக்காரன் வரும் முன்னரே தீண்டாமையால் பாதிக்கப்பட்டாச்சு, அம்பேத்கர் பற்றி பேச வேண்டும் எனில் வர்ணாசிரமம் பற்றியும் அறிந்திருந்தால் மட்டுமே சரி வரும்,ஆனால் உங்களுக்கு அதில் ஆரம்பமே தகறாராக இருக்கே?
#அம்பேத்கர் காலத்தில் தீண்டாமை மிக அதிகம், மேலும் அவரது பால்யத்தில் மாட்டு வண்டியில் இருந்து தள்ளிவிடப்பட்டுள்ளார். இதை ஒத்த அனுபவம் காந்திக்கு பீட்டர்ஸ்பர்க்கில் பின்னாளில் தான் கிடைத்து ,நாம் சுதந்திரமானவர்கள் அல்ல, வெள்ளைக்காரனுக்கு சமம் அல்ல என்று அப்போ தான் காந்திக்கே தோன்றியது.
# அவர் கோட் அணியக்காரணம் அப்போது ஒடுக்கப்பட்டவர்கள் மேலே சட்டை,காலணிகள் அணியப்பல இடங்களிலும் தடை இருந்தது, படித்துவிட்டு அப்போதைய பிரிட்டீஷ் அரசில் வேலை செய்தவர்கள் மட்டுமே மேல் சட்டை அணிய முடியும்,அதுவும் பிரிட்டீஷ் சர்க்கார் ஊழியர் என்ற பயத்தினால் அப்போதைய ஆதிக்க சாதியினர் மவுனமாக இருந்தார்கள்.
இப்படியான சூழலைப்பார்த்து ,அனுபவித்து வளர்ந்த அம்பேத்கர், சட்டை அணிய என்ன தடை போடுறிங்களா, நான் கோட் சூட்டே போடுவேன் என எதிர்ப்பு காட்டவே அப்படி செய்தார்,இது ஒரு உளவியல் ரீதியான எதிர்ப்பு.
# பிராம்மண பெண்ணை இரண்டாவதாகவே மணம் புரிந்தார், இதன் பின்னால் ஒரு இந்துத்வா எதிர்ப்பும் இருக்கிறது.
உயர் குடி ஆண் ஒரு ,கீழ் குலப்பெண்ணை மணக்கலாம் அதனை வர்ணாசிரமம்ம் அனுமதிக்கிறது,அவர்களின் வாரிசுக்கு உயர்குல தகுதி வழங்கப்படும், அப்படி பிறக்கும் வாரிசுக்கு அனாமிகன், அனுலோமன் என குறியீட்டு பெயரும் உண்டு.
அதே சமயம் கீழ் குல ஆண் ,ஒரு உயர் குல பெண்னை மணப்பதை வர்ணாசிரமம் அனுமதிக்கவில்லை, அவர்களை ஊர் விலக்கம் செய்து விடுவார்கள், வாரிசுக்கும் எந்த மரியாதையும் இல்லை,சமூகத்தில் அங்கீகரிக்க மாட்டார்கள், அப்படி பிறக்கும் வாரிசை "சண்டாளன்" எனப்பெயரிட்டார்கள்.
இப்பவும் "சண்டாளன்"எனப்பொருள் தெரியாமல் மக்கள் திட்டுவதுண்டு.
எனவே அம்பேத்கர் ஒரு பிராம்மண பெண்ணை மணப்பதன் மூலம் வர்ணாசிரமத்தினை எதிர்த்து உளவியல் ரீதியாக சமூகத்திற்கு ஒரு சவால் விட்டார் என்றே சொல்லலாம்.
தொடரும்...
தொடர்ச்சி...
#அம்பேத்கர் சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் ,அக்காலத்திலேயே மும்பை சட்டக்கல்லூரி முதல்வராகப்பதவி வகுத்தவர், எனவே அவரை அரசியல் சட்ட நிர்ணயத்தலைவராக நியமிக்க முழுத்தகுதியும் உண்டு.
# மேலும் நீங்கள் தொடர்ந்து கிழக்கிந்திய கம்ம்பெனி என்றே சொல்லிக்கொண்டு இருக்கிறிர்கள் 1857 இலேயே இங்கிலாந்தின் காலனியாக இந்தியா சட்டப்பூர்வமாக மாறிவிட்டது.
# வட்ட மேஜை மாநாட்டில் ஒவ்வொரு மக்கள் பிரிவின் பிரததி நிதியும் கலந்து கொண்டார்கள்.அதன் அடிப்படையில் அம்பேத்கரும் கலந்து கொண்டார். அப்போது வின்ஸ்டன் சர்ச்சில் எல்லாம் இல்லை.பின்னர் ஏன் மூன்றாவது வட்ட மேஜை மாநாட்டில் காந்தி கலந்து கொண்டார்.
#1936 இலேயே அம்பேத்கர் காங்க்கிரஸ் விட்டு விலகிவிட்டார், தனியாக சுதந்திர உழைப்பாளர் கட்சி என உருவாக்கி கடைசிவரையில் தனித்தே இயங்கினார்.
#1947 இல் சட்ட நிர்ணய குழு அமைக்க என ஒரு தனி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது அப்போது ஒடுக்கப்பட்டோர் அமைப்பு என்ற ஒன்றினை உருவாக்கி அனைத்து ஒடுக்கப்பட்டோர் சார்பாக தேர்தலில் போட்டியிட்டார் ஆனாலும் காங்கிரசின் சதி மற்றும் அப்போதைய காங்கிரசின் செல்வாக்கினால் தோற்கடிக்கப்பட்டார்.
#1945 இல் சர்ச்சிலின் கன்செர்வ்ட்டிவ் கட்சி தோல்வி அடைந்து ,லேபர் கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டது,லேபர் கட்சியின் பிரதமர் "கிளெமெண்ட் அட்லீ" 1951 வரைக்கும் அவரின் ஆட்சி தான்.லேபர் கட்சி ஆட்சிக்கு வந்ததால் தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கவே செய்தது.
இப்படி இருக்க சர்ச்சிலின் உதவியால் ராஜ்ய சபா உறுப்பினர் ஆனார் என்பது எப்படி,மேலும் அப்போது ராஜ்ய சபா என்ற அமைப்பும் இல்லை.1950 இல் குடியரசு ஆகி 1952 இல் இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் நடைப்பெற்றது. 1956 இல் அம்பேத்கர் இறந்து விட்டார், 1952 முதல் 1956 வரையில் ஒரே ஒரு பொது தேர்தல் தான் நடந்துள்ளது.அதில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியுற்றார்,ஆனாலும் ராஜ்ஜ்ய சபாவிற்கு தேர்வு செய்யப்பட்டு 1956 வரையில் இருந்துள்ளார். பின்னர் எப்படி மூன்று முறை லோக்சபாவிற்கு போட்டியிட்டு , தோற்று பின்னர் சர்ச்சில் உதவியால் ராஜ்யசபா எம்பி ஆனார் என சொல்கிறீர்கள்?
1947 இல் நடந்த தேர்தல் "சட்ட நிர்ணய சபை தேர்தல்" என்றே அழைக்கப்பட்டது. அதில் தோற்றாலும் நேரடி நிர்ணய உறுப்பினர் என்ற ஒன்றும் உண்டு.அதன் மூலமே அம்பேத்கரை காங்கிரஸ் சேர்த்துக்கொண்டது. இது காங்கிரசின் அரசியல் ராஜதந்திரம்.
தமிழ் நாட்டை சேர்ந்த காளிங்கராயன் என்பவர் கூட அப்படி 1947 நாடாளுமன்றத்தில் நேரடியாக உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார், இன்று வரை உயிருடன் உள்ள ஒரே உறுப்பினர் அவர் தான்.சமீபத்தில் அவரை பாராளுமன்ற பொன்விழாவின் போது கவுரவிக்கவில்லை எனவும் பிரச்சினை கிளம்பியது.
எதையுமே சரிப்பார்க்காமல் மறைந்து கிடந்த வரலாற்றினைப்படித்தேன் என ரொம்ப தெளிவா சொல்லிக்கிட்டு மேற்கொண்டு பேசலாம்னு சொல்றிங்களே :-))
சகோ.சார்வாகன,
நான் தட்ட்டிக்கிட்டு இருக்கும் கேப்பில் நீங்க ஒரு கோல் போட்டுட்டிங்க போல :-))
நீங்கள் குறிப்பிட்ட சிலவும் நான் சொல்லி இருக்கேன். அவர் விக்கியை கூட படிக்காமல்,வர்ணாசிரம இல்லாதது போலவும், நிறைய மறைக்கப்பட்ட வராலாறுப்படிச்சேன் என புதுசா சொல்லிக்கிட்டு இருக்கார்.
இந்தியா சுதந்திரம் அடையும் போது யார் இங்கிலாந்து பிரதமர், எப்போ லோக்சபா எல்லாம் உருவாச்சுன்னு கூட தெரியலை, இதுக்கே கிழக்கிந்திய கம்பெனினே சொல்லிக்கிட்டு இருக்கார். :-))
சரி என்னமோ தெரியும்னு சொல்றாரே ஒரு தடவை பேசிப்பார்ப்போம்னு முயற்சித்தேன்.
Poona Pact
The Poona Pact refers to an agreement between Dr. B. R. Ambedkar and Mahatma Gandhi signed on 24 September 1932 at Yerwada Central Jail in Pune (now in Maharashtra), India.
http://en.wikipedia.org/wiki/Poona_Pact
History
To draft a new Constitution involving self rule for the native Indians, the British invited various leaders for Round Table Conferences in 1930-32. Mahatma Gandhi did not attend the first and last but attended the second of the Conferences. The concept of separate electorates for the Untouchables was raised by Dr. Ambedkar. Similar provisions were already available for other minorities, including Muslims, Christians, Anglo-Indians and Sikhs. The British government agreed with Ambedkar's contention, and British Prime Minister Ramsay MacDonald's Communal Award to the "depressed classes" was to be incorporated into the constitution for governance of British India. Gandhi strongly opposed it on the grounds that it would disintegrate Hindu society. He began an indefinite hunger strike at Yerwada Central Jail from September 20, 1932 to protest this Award.A compromise, was reached on September 24, 1932.
இந்த விக்கிபிடியா அம்பேத்கார் ,காந்தி இடையே ஏற்பட்ட பூனா ஒப்பந்தம் பற்றி கூறுகிறது.
அதாவது அப்போதைய கால் கட்டத்தில் ஏற்கென்வே கிறித்தவர்,இஸ்லாமியர்,சீக்கியர், ஆங்கிலோ இந்தியருக்கு இருந்த அரசியல்,சமூக இட ஒதுக்கீட்டையே அம்பெத்கார் தலித் மக்களுக்கு கேட்டார்.
தலித் மக்களும் இந்துக்கள் என்று கூறுபவர்களை வரவேற்கிறோம்.இதை உறுதிப்படுத்த உடனே அனைத்து கோயில்களிலும் அனைத்து சாதியினரும் பணியாற்ற சட்டமும், மடங்கள் கூட சாதி அடிப்படையில் கூடாது என்பதையும் முதலில் செய்யட்டும்.இந்து என்று சொல்பவர்கள் சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்கட்டும். சாதி வழக்கங்களை ஒழிக்கட்டும்.
இவ்வளவு நாள் இட ஒதுக்கீடு கொடுத்தே பெரும்பான்மை தலித் மக்களின் நிலை மோசம். இதில் காந்தி சொல்வதை கேட்டு இருந்தால் அதோ கதி.
அடுத்த ஜென்மத்தில் புண்யம் செய்து வேறு சாதியில் பிற என அறிவுரை மட்டுமே கிடைத்து இருக்கும்.
அம்பேத்கார் மட்டும் கிறித்தவராகவோ, முஸ்லிமாகவோ மதம் மாறி இருந்தால் இந்தியா இன்னும் சிதறி இருக்கும்,அவர் ஒரு நாட்டுக்கே கூட அரசர் ஆகி இருப்பார்.ஆனால் கொள்கைரீதியாக பவுத்த மதத்திற்கே மாறினார்
இஸ்லாமின் மீதும்,கிறித்தவத்தின் மீதும் கூட விம்ர்சனங்களை வைத்தார்.
அம்பேத்காரை விட அரசியல் அமைப்பு குழுவினார் யாரும் படிப்பிலோ, அறிவிலோ சிறந்தவர் என கூற இயலாது. அப்படி ஒப்பீடு கொடுங்கள் பார்க்க்லாம்.
http://en.wikipedia.org/wiki/B._R._Ambedkar
அம்பேத்கார் எழுதிய இந்துமதத்தின் சிக்கல்கள்[Riddles of Hinduism] என்னும் புத்தகம் படிக்க பரிந்துரை செய்கிறேன்.
http://www.ambedkar.org/riddleinhinduism/
Thank you for giving me an opportunity to discuss about a great man!!
சகோ வவ்வால்
இது ஒரு புனித ஃபோபியாக்கள். நம் சகோக்கள் சொலவ்து இல்லையா ஆதமில் இருந்து இன்றுவரை ஒரே மாறாத மார்க்கம் என்று அதே பாணியில் இந்துத்வ சரக்கு.
நாம் எளிய முறையில் விள்க்குகிறோம்!
புராண கால்த்தில் அனைவரும் நல்லவர்கள்,மன்னர்கள் தங்கள் குடிமக்களை பேணிக் காத்த்னர். சாதி முறை என்பதே ஒரு வேலை வாய்ப்புடன் வாழ்வாதாரம் அளிக்கும் முறை ஆகும். இதில் உயர்வு தாழ்வு கிடையாது.ஹி ஹி ஆனால் அவன் இடத்தில் அவனவன் அப்படியே இருக்க வேன்டும். தேவ தாசி முறை இருந்ததால் கலை வளர்ந்தது!!!
.இப்படி புண்னிய ஆத்மாக்கள் இருந்ததால் மாதம் மும்மாரி மழை பொழிந்து அனைவரும் சேமமாக இருந்த்னர்.கோயில்கள் செழித்தன,கலை வளர்ந்தது
ஆனால் இப்படியே சேமமாக இருந்து உண்டு உடுத்தி அனுபவித்ததால் வெளிநாட்டவன் வந்து படையெடுக்க தாக்கு பிடிக்க முடியவிலை.அப்புறம் அப்ப்டியே சுமார் 1000 வருடம் போயிட்டு. அரபி முதல் வெள்ளைக்காரன் வரை கூழைக் கும்பிடு போட்டே காலம் போனது. போராடியவர்களுக்கு மரணமே கிடைத்தது
வெள்ளைகாரனுக்கு உலகப் போரில் பிரச்சினை ஆகி அப்புறம் வெள்ளைக்காரனுக்கு அதிகம் தொல்லை கொடுக்காத காங்கிரசு கையிலே ஆட்சியை கொடுத்துட்டு போயிட்டான்.இப்ப உலகமயமாக்கம் என்ற பேரில் கொஞ்ச நாள் கழித்து திருப்பி கொடுக்கனும்னு அப்பவே ஒப்பந்தம் போட்டுவிட்டார்கள் போல் தெரிகிறது .
இதுதான் இந்திய புனித வரலாறு!!!!!!!!!!!!!!!
நன்றி
ஏன் யுவா இனிமேலும் இந்த இரண்டு மலைகளுடன் மோத விரும்புவீர்களா?
Vavval & Saarvagan, Thanks for the informations.. as i said this is a discussion only.. i never told - i know it all.. from your posts also am learning.. Now i can see you both really know a lot of things..
Am not adamant and not rude - am saying this because you had mentioned it like that.. if am wrong i will admit.. i need sometime to read what you had said.. i will reply, if at all i feel something is missing out..
Nethaji , thanks for this post.. :)
இட ஒதுக்கீட்டின் நோக்கம் கல்வி மற்றும் வேலை வாய்ப்பை பொருளாதாரத்தை உயர்த்தவா அல்லது வேறு ஏதாவது ஒன்றா?
ஏன் இட ஒதுக்கீடு என்று தெரியாமல் பேசுவது போல உள்ளது ஜோதிஜி :-(
ஏன் இட ஒதுக்கீடு என்று தெரியாமல் பேசுவது போல உள்ளது ஜோதிஜி :-(
கல்வெட்டு
நீங்களுமா? சற்று விரிவாக சொல்லுங்களேன். நான் சொல்ல வந்ததை சரியாக புரிந்து கொள்ளவிலலையோ என்று நினைக்கின்றேன்?
ஜோதிஜி,
இந்தக் கேள்விக்ளுக்கு பதில் சொல்லுங்கள். எந்த மேற்கோள்கள் உதாரணங்கள் இல்லாமல் உங்கள் புரிதலாக மட்டும் இருக்க வேண்டும். :-))))
கே1:
இடஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்ட நோக்கம் மக்களுக்குள் பொருளாதா சமநிலையைக் கொண்டு வரவா?
கே2:
ஒருவேளை கே1 ன் பதில் "இல்லை" என்றால் , ஏன் நீங்கள் உங்களின் பதிவில் "....பொருளாதார ரீதியான பங்கீட்டை அமல்படுத்த எவருக்கும் மனம் இருப்பதில்லை....." என்று சொல்கிறீர்கள்? "பொருளாதார ரீதியான பங்கீடு வேண்டும்" என்று சொல்கிறீர்களா?
இடஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்ட நோக்கம் மக்களுக்குள் பொருளாதா சமநிலையைக் கொண்டு வரவா?
கேள்வியில் சற்று மாறுதல் தேவை?
எதற்காக இந்த இட ஒதுக்கீடு என்று தான் வர வேண்டும் என்று நினைக்கின்றேன்? சரியா?
பொருளாதார சமநிலை என்பது இரண்டாம் பட்சம் தான். முதலில் ஒடுக்கப்பட்டவர்கள் சமூகம் மனிதர்களாக , மதிக்கப்படவேண்டியவர்களாக, சம உரிமையுடன் வாழ்வதற்காகவே உருவாக்கப்பட்டது.
இட ஒதுக்கீடு ஏன்?
ஒருவன் சமூகத்தில் மதிக்க அவனின் பொருளாதார பலம் முக்கிய குறியீடாக கருதப்படுகின்றது. ஒருவனை வெறுமனே பண ரீதியாக உயர்த்துவதை விட அவனை அதிகார ரீதியாக, கல்வி ரீதியாக, சட்ட ரீதியாக உயர்த்தப்படும் போது அவனின் உரிமை அவனுக்கும் புரியும். மற்றவர்களுக்கும் புரிய வைக்க முடியும். மேலும் அவனின் உயர்வு நிலையாகவும் இருக்கும். இதன் காரணமாகவே இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது.
நான் சொல்ல வந்த கருத்தின் கருப் பொருள் இது தான்.
நூறு பேர்கள் (ஒடுக்கப்பட்ட இனத்தில் ) அனுபவிக்க வேண்டிய இந்த உரிமையை, வசதியை அந்த இனத்தில் உள்ள குறிப்பிட்ட வட்டத்திற்குள் தான் இன்று வரை சுழன்று கொண்டுருக்கிறது. இந்த உரிமையின் மூலம் வளர்ந்தவர்களின் பொருளாதார பின்புலத்தை கணக்கில் கொண்டு அவர்களுக்குப் பின்னால் உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் போது இது இட ஒதுக்கீட்டின் பலன் பரவலாக்கம் பெறும். உத்தேசமாக இந்தியாவில் 40 கோடி மக்களுக்கு இந்த இட ஒதுக்கீடு போக வேண்டும். இதன் இலக்கு அடுத்த 50 ஆண்டுகள் என்பதை ஒரு உத்தேச கணக்காக எடுத்துக் கொள்வோம். ஆனால் இப்போது நடைமுறையில் இருப்பதை வைத்துப் பார்த்தால் தெகா சொன்னது போல 200 ஆண்டுகள் ஆனாலும் இந்த 40கோடி மக்களுக்கும் போய்ச சேராது. இதன் காரணமாக இட ஒதுக்கீடு மூலம் அனுபவித்து மேலே வந்தவர்களுக்கு கொடுக்கும் உரிமையை விட அடுத்து காத்திருக்கும் மக்களுக்கு முன்னுரிமை கொடுத்தால் இந்த வசதிகள் வெகு வேகமாக பரவும். பலருக்கும் போய்ச் சேரும் என்பது தான் என் கருத்து.
இட ஒதுக்கீட்டின் நோக்கம் என்ன என்று சரியாகச் சொல்லிவிட்டீர்கள். அல்லது நாம் இருவரும் அதைச் ஒரே மாதிரி புரிந்துள்ளோம்.
மனிதர்களுக்குள் சமூகச்சமைநிலையை எப்படிக் கொண்டுவருவது என்று சிந்தித்ததின் விளைவில் வந்த பல்வேறு விடைகளில் முக்கியமானவை
கல்வி
பொருளாதார உயர்வு
ஆனால்
இந்த இரண்டும் இருந்தாலும் இன்னும் சமூகசமநிலை வரவில்லை. அதுதான் உண்மை.
லட்சம் ரூபாயும் ஒரே பட்டப்படிப்பும் (ஒரே மதிப்பெண்) உள்ள இருளாண்டியும் , பத்ரிநாத் சுப்புவும் சமுதாயத்தில் ஒரே அந்தஸ்தில் மதிக்கப்படுவது இல்லை. இது ஏன்?
ஏன் கல்வியும் பொருளாதார உயர்வும் கிடைத்த பின்னால்கூட சமூச்சமநிலை நடக்கவில்லை என்று பார்த்து எந்த வழிகளில் சமூச்சமநிலை கொண்டு வரலாம் என்று பார்க்க வேண்டும். அதாவது சமூகச் சமநிலையே முக்கிய நோக்கம் என்றால்.
***
சமூகச்சமநிலையைத் தூக்கு குப்பையில் போடு , பொருளாதரச் சமநிலை மட்டுமே முக்கிஉஅம் என்றால், நீங்கள் சொல்லும் பொருளாதர வழி இட ஒதுக்கீடுகளைச் செய்யலாம்.
***
அடுத்து நீங்கள் சொல்லும் குறைகள்...
//நூறு பேர்கள் (ஒடுக்கப்பட்ட இனத்தில் ) அனுபவிக்க வேண்டிய இந்த உரிமையை, வசதியை அந்த இனத்தில் உள்ள குறிப்பிட்ட வட்டத்திற்குள் தான் இன்று வரை சுழன்று கொண்டுருக்கிறது.//
இந்த நூறுபேர்கள் சமுதாயச் சமநிலை அடைந்து விட்டார்களா?
இல்லை
பொருளாதாரம் உயர்ந்தாலும், இவர்களை வாரி அனைத்து "நீயும் இப்ப கோவிலில் மணியாட்டலாம்" என்று யாரும் சொல்வது இல்லை. அதற்கு வழக்குப்போட வேண்டியுள்ளது.
என்னதான் பொருளாதாரம் உயர்ந்தாலும் இவர்களுக்கு சமுதாயச் சமநிலை வரப்போவது இல்லை.
கல்வி மற்றும் பொருளாதாரத்தில் உயர்ந்தால் சமுதாயச் சமநிலை வரும் என்ற கனவு 60 ஆண்டுகளில் பலிக்கவில்லை. அதுதான் உண்மை.
அதற்கு என்ன செய்யலாம் என்று புதிய ஆராய்ச்சிகள்/உரையாடல்கள் தொடங்கப்படவேண்டும்.
***
நவபார்ப்பனர்கள் என்ற ஒரு வட்டம் உண்டு. எம்ஸ் சுப்புலட்சுமி போன்றவர்கள் இந்த வட்டத்தில் வருவார்கள். பிறப்பால் வேறு சாதி என்றாலும் பார்ப்பனர் வட்டத்தில் சேர்ந்துவிட்டார். ஆனால் அம்பேத்கர் போன்றவர்கள் படம்கூட பார்ப்பனர்களின் வீட்டில் இருக்காது.
***
சமூகச்சமநிலையைத் தூக்கி குப்பையில் போடு... இட ஒதுக்கீட்டால் பொருளாதரச் சமநிலையே அந்த வகுப்பில் உள்ளவர்களுக்கு சரியாகப் போய்ச்சேரவில்லை என்று குற்றம் சொல்வீர்களேயானால் அது உண்மை.
அதற்கு சாதியைத் தவிர்த்துவிட்டு வெறுமனே பொருளாதார அடிப்படையில் ஒதுக்கீடு செய்வது தீர்வல்ல.
எனக்கு இது போதும், எனது சமூகத்தில் உள்ள ஏழைக்கு வழிவிடுகிறேன் என்று சொல்லும் மனம் வேண்டும். அப்படி யாருக்கும் இல்லை. இப்படியான சூழலில் சரியான் மாற்றுத்திட்டம் வேண்டும். ஆனால் அது நிச்சயம் சாதியை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
என்றைக்கு கோவிலில் மணியாட்டவும்,திருமணத்திலும், அன்றாட சமுதாய வாழ்விலும் சாதி அழிகிறதோ அன்று இடஒதுக்கீட்டில் இருந்தும் சாதியை எடுத்துவிடலாம். சட்டைக்குள் பூணுலைப் போட்டுக்கொண்டு இடஒதுக்கீட்டை எதிர்ப்பதோ அல்லது நாங்க ஆண்ட அல்லது பேண்ட பரம்பரை என்று சவடால் அடித்துக்கொண்டு சாதிரீதியான இடஒதுக்கீட்டை ஆதரிப்பதோ அறமல்ல.
சாதியையும் மதத்தையும் துறந்தவனே அது பற்றிப் பேசலாம். ஏன் என்றால் இவன் ஒருவனுக்கு மட்டுமே இனிமேல் சாதி / மத ரீதியான ஒதுக்கலின் பயன் தேவை இல்லை. அவனின் கவலை உண்மையானது.
பொருளாதாரம் உயர்ந்தாலும், இவர்களை வாரி அனைத்து "நீயும் இப்ப கோவிலில் மணியாட்டலாம்" என்று யாரும் சொல்வது இல்லை. அதற்கு வழக்குப்போட வேண்டியுள்ளது.
பொதுவா எல்லோரும் சொல்ற மாதிரி மணியாட்ட விடப் போவது இல்லை என்கிற போது தான் எனக்கு எரிச்சலாக வருகின்றது. ஒருவரது உரிமை என்பது இதற்குத் தானா? எவர் நம்மை புறக்கணிக்கின்றார்களோ அவர்களை நாம் புறக்கணிக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. இதை சமூக கருத்தாக ஒவ்வொருவரும் ஏற்றுக் கொண்டு தன் அளவில் தன் வளர்ச்சியை தான் சார்ந்த இனத்தின் வளர்ச்சியில் கண்ணும்கருத்தாக இருக்க வேண்டும். உரிமை என்பது கொடுப்பதல்ல. உழைப்பின் மூலம், கல்வியின் மூலம், பகுத்து ஆய்ந்த அறிவின் மூலம் நாமே எடுத்துக் கொள்வது.
சாலையில் இறங்கி போராடுவது ஒருபக்கம்.
சாலையில் இறங்கி போராடுபவர்கள் நம்மிடம் வரவழைக்கும் அளவிற்கு கல்வியின் மூலம் அதிகாரத்தை பெறுவது மறுபக்கம்.
நான் இரண்டாவது பக்கம் உள்ளதைத் தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, அவர்களும் இந்த அளவுக்கு வர வேண்டும் என்று விரும்புகின்றேன்.
//////////////////////
எனக்கு இது போதும், எனது சமூகத்தில் உள்ள ஏழைக்கு வழிவிடுகிறேன் என்று சொல்லும் மனம் வேண்டும். அப்படி யாருக்கும் இல்லை. இப்படியான சூழலில் சரியான் மாற்றுத்திட்டம் வேண்டும். ஆனால் அது நிச்சயம் சாதியை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
குறிப்பிட்ட சில நண்பர்கள் என்னை அழைத்து கடிந்து கொண்டார்கள். ஏன் இப்படி எழுதினாய் என்று உரிமையுடன் சப்தம் போட்டார்கள்.
நீங்கள் இதில் சொன்ன கடைசி வரிகளில் உள்ள உண்மையை அவர்கள் புரியவைத்தார்கள். சில வற்றை இன்னமும் தெளிவாக எழுதி இருக்கலாம் என்று சங்கடமாய் உணர்ந்தேன்.
உங்கள் புரிதலுக்கு நன்றி.
சாதியையும் மதத்தையும் துறந்தவனே அது பற்றிப் பேசலாம். ஏன் என்றால் இவன் ஒருவனுக்கு மட்டுமே இனிமேல் சாதி / மத ரீதியான ஒதுக்கலின் பயன் தேவை இல்லை. அவனின் கவலை உண்மையானது.
இது தான் என் விருப்பம். பாதி கிணறு தான் தாண்டியுள்ளேன்.
//பொதுவா எல்லோரும் சொல்ற மாதிரி மணியாட்ட விடப் போவது இல்லை என்கிற போது தான் எனக்கு எரிச்சலாக வருகின்றது. ஒருவரது உரிமை என்பது இதற்குத் தானா? எவர் நம்மை புறக்கணிக்கின்றார்களோ அவர்களை நாம் புறக்கணிக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. //
:(((
இல்லை ஜோதிஜி..இது மிக முக்கியமான ஒன்று.
கடவுளின் முன்னாலேயே நான் சமம் என்று ஒருவன் நினைத்து விட்டால் அவனுக்கு மற்றவை துச்சமாகப் போய்விடும்.
கடவுளின் சன்னிதனத்திலேயே இடமில்லை என்று ஒருவனை நம்பச் செய்துவிட்டால் அவன் மற்ற எல்லா "இல்லை"களையும் ஏற்கவேண்டியவனாகிறான்.
இதை தகர்க்காமல் விலகிப்போவது என்பது பிரச்சனையைத் தீர்க்காது.
அவர்களைப் புறக்கணிக்கலாம் அவர்களின் தீண்டாமை அவர்களின் வீட்டில் இருந்தால்...தெருவில் இருக்கும் கோவில் என்றால் அது பொதுப்பிரச்சனை. அவசியம் கேட்கவேண்டும்.
விட்டால்
"அவர்கள் தெருவில் ஏன் நடக்கிறீர்கள்?"
"அவர்களுடன் ஏன் ஊரில் இருக்கிறீர்கள்?"
"ஏன் அவர்களுடன் வாழவேண்டும்?" ... என்று கேட்பீர்கள் போல உள்ளதே?
*****
சாதியின் பெயரால் கோவில் மணியாட்டல் தகர்க்கப்படவேண்டும் என்றால்...எங்களை ஒதுங்கிப்போகச் சொல்கிறீர்கள்.
அதே சாதியின் பெயரால் இருக்கும் இட ஒதுக்கீடு என்றால் "ஏன் இருக்கு" என்று ரொம்ப விசனப்படுகிறீர்கள்.
ஏன் நீங்களும் சாதியின் பெயரால் இட ஒதுக்கீட்டில் உங்களைப் புறக்கணிப்பவர்களைப் புறந்தள்ளி "எவர் நம்மை புறக்கணிக்கின்றார்களோ அவர்களை நாம் புறக்கணிக்க வேண்டும்" என்ற உங்களின் சித்தாந்தப்படி போகலாமே? ஏன் சம உரிமை கோருகிறீர்கள்?
நாடார் வரலாற்றை பல வித எழுத்தாளர்கள் மூலம் படிக்கும் போது சில ஆச்சரியங்கள் எனக்கு கிடைத்தது. இதில் கூட நாடார் வரலாறு பற்றி எழுதி இருக்கேன். அவர்களும் ஒடுக்கப்பட்டவர்களாகத்தான் இருந்து இருக்கிறார்கள். அவர்களுக்கும் நீங்கள் சொன்ன ஆலய மறுப்பு கொடுமை எல்லாம் நடந்து இருக்கிறது. ஆனால் அவர்கள் தனியே அவர்களுக்கென்று ஆலயத்தை அமைத்துக் கொண்டு அதன்படியே அவர்களின் முக்கியக் குறிக்கோளான பொருளாதாரத்தில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார்கள். இன்று? அவர்களின் ஒற்றுமை அதனைத் தொடர்ந்து கொண்ட கொள்கையில் தளரா மனம்.
எழுதத் தொடங்கிய பிறகு படிக்க கிடைத்த நிறைய புத்தகங்கள் மூலம் அவர்களின் வரலாறு மூலம் நான் புரிந்து கொண்ட உண்மை எதுவும் இயல்பாக கிடைக்காது. அடிப்படை தனி மனித மன மாற்றத்தின் மூலம் மட்டுமே ஒவ்வொன்றாக உருவாகின்றது. அதுவே ஒன்று சேரும் போது அதன் பலன் மொத்த வீர்யமாக இருக்கின்றது. இது தான் எதார்த்தம்.
ஏன் சம உரிமை கோருகிறீர்கள்?
கல்வி என்பது எவருக்கும் பொதுவான ஒன்று. ஆனால் அதுவே மறுக்கப்படும் போது அதில் சம உரிமை கேட்பதில் என்ன தவறு? கல்வி கிடைத்தாகி விட்டது. வேலை வாய்ப்பில் மறுபடியும் பிரச்சனையை உருவாக்குகிறார்கள். அதிலும் உள்ள உரிமையை சட்டங்கள் மூலம் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும். ஆனால் சட்டங்கள் தான் இங்கே சடங்காகத்தானே இருக்கிறது. மேலும் மேலும் அதை நீட்டித்து தானே ஆக வேண்டியிருக்கிறது.
கோவில் என்றவுடன் நான் எரிச்சல்படக்காரணம், பெரும்பாலும் இந்த பக்தி என்பது ஒருவனை அறிவை தள்ளிவைத்து விட்டு உணர்ச்சி குவியலாகத்தான் காலம் காலமாக உருவாக்கிக் கொண்டுருக்கிறது. கிராமத்தில் வாழ்ந்த காரணத்தால் நான் பார்த்த அத்தனை தனி மனித வெறுப்புகளும், பகைகளும், போட்டி பொறாமைகளும், வஞ்சகத்தை தீர்த்துக் கொள்ளுதலும் என்று எல்லாவகையிலும் பாகுபாட்டை அதிகமாக்கிக் கொண்டேதான் இருக்கிறது.
இன்று வரையிலும்?
என்னுடைய தனிப்பட்ட சொந்த கருத்தாக பார்க்காதீர்கள்? உங்கள் அனுபவம் மூலம் இதைப் பார்க்கவும். மறுக்கப்பட்ட உரிமைகளை நினைத்துக் கொண்டே அதே ஊரில் வாழ்வதை விரும்புவதா? இல்லை வெறுப்புடன் வேறு இடம் நடந்து தனக்கான வாழ்க்கையை வாழ நினைப்பார்களா?
இன்று புலம் பெயர்ந்தவர்களும், வேறு இடத்தில் வாழ்ந்து கொண்டுருப்பவர்களும் அவர்கள் பெற்ற வாழ்க்கை தரமும் இதைத்தான் உணர்த்துகிறது.
அப்படியென்றால் எல்லோருக்கும் இதே கதி தானா? இப்படித்தான் இருக்கும் இடத்தை விட்டு நகரனுமா?
சட்டங்கள் என்பது கண்துடைப்பாக அரசியல் கணக்குக்காக இருக்கும் போது இயல்பான விசயங்களை யோசிப்பதும் பேசுவதும் எழுதுவதும் உங்களுக்கு கோபத்தை தான் உருவாக்கும்.
நாடார்கள் குறித்து...
அவர்களின் முன்னேற்றம் கல்வி மற்றும் தனிக்கோவில் சார்ந்தது. பத்ரகாளி செல்லத்தம்மன் என்றும் பலர் கிறித்துவர்களாகவும் விலகிவிட்டார்கள். ஆனால் நவ பார்ப்பனர்கள் போல அவர்களும் மாறிவிட்டார்கள்.
கல்வி எப்படி உரிமை என்கிறீர்களோ அதுபோல சுயமரியாதையும்(அவமரியாதையைக் கேள்வி கேட்பது)உரிமையே.
ஒரு தெருவில ஒருவன் "இதுமட்டுமே பத்தினி வாழும் வீடு" என்று அட்டை எழுதிவைத்தால் , நீயும் தனியாக வைத்துக்கொள்" என்கிறீர்கள். :((
இது தவறு தட்டிக்கேட்க வேண்டும்.
உங்கள் பதில்படி பார்த்தால், இன்று கூடங்குள மக்கள்கூட வேறு ஊருக்கு போய் நன்றாக வாழலாம். எதுக்கு வெட்டிச் சண்டை சரியா ஜோதிஜி?
***
கோவிலை மக்கள் புறக்கணிக்க ஆரம்பித்தால் மகிழ்ச்சியே. ஆனால் அந்த அளவிற்கு மக்கள் இன்னும் வரவில்லை.
***
சமூகத்தில் சாதி என்ற ஒன்று இருந்து, சாதியின் பெயரால் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்வரை அதே சாதியின் பெயரால் மட்டுமே பாதிக்கப்பட்டவரை அடையாளம் காணமுடியும். எனவே இட ஒதுக்கீட்டில் சாதி அவசியம் அது சமூகத்தில் இருக்கும் வரை.
சாதி ஒழிந்து , அனைவரும் ஒரே சமூகச்சமன் கொண்டவர்களாக இருக்கும்போது மற்ற அளவுகோல்களும் வரலாம்.
சுனாமியால் பாதிக்கப்பட்டவனுக்கு நிதி வழங்கும் போது , "சுனாமியால் பாதிக்கபட்டவர்களே வாருங்கள்" என்றுதான் அடையாளம் காணமுடியும். சும்மா "எல்லா ஏழைப் பங்காளிகளும் வாங்க" என்று "அந்த சுனாமி உதவித்திட்டத்தில்" சொல்ல முடியாது. அதுபோல பல்லாண்டுகாலம் சாதி என்ற ஒன்றினால் பாதிக்கப்பட்டவர்களை கண்டு உதவும் ஒரு திட்டத்தில் எல்லா ஏழைகளுக்கும் பந்தி என்று சொல்ல முடியாது. ஏன் என்றால் இது சமூகச்சமனைக் கருத்தில் கொண்டு போடப்பட்ட திட்டம் பொருளாதரச்சமன் அல்ல.
இப்படிச் சொல்வதால் நான் பொருளாதரச் சமனுக்கு எதிரி அல்ல. அதற்கான ஒரு திட்டம் வந்தால் அதையும் ஏற்பேன்.
**
நீங்கள் ஒரு விசயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். திட்டங்கள் சரியே. அதைப் பயன்படுத்தும் மக்கள் தனக்கு அடுத்து வரிசையில் இருக்கும் தனது சகோதரனையே ஏய்க்கப்பார்க்கிறான். அதுதான் பிழை. தான் ஏறியவுடன் ஏணியை அல்லது கயிறை அடுத்தவனுக்கு கொடுத்து விலக மறுக்கும் குணமே எதிரி.
**
திட்டங்கள் சரியே. அதைப் பயன்படுத்தும் மக்கள் தனக்கு அடுத்து வரிசையில் இருக்கும் தனது சகோதரனையே ஏய்க்கப்பார்க்கிறான். அதுதான் பிழை. தான் ஏறியவுடன் ஏணியை அல்லது கயிறை அடுத்தவனுக்கு கொடுத்து விலக மறுக்கும் குணமே எதிரி.
நான் எழுதிய நோக்கம் நிறைவேறி விட்டது. நன்றி.
நான் எழுதிய நோக்கம் நிறைவேறி விட்டது. நன்றி.
:-)))
எல்லாம் நன்மைக்கே நாரதர் கலகம்போல
கல்வெட்டு ,
கலக்கிட்டிங்க, இதையே நான் சொல்லி இருந்தேன் , ஜோதிஜி சண்டைக்கு வந்திருப்பார் :-))
நவபார்ப்பணியம்னு எங்கே இருந்து சொல் கண்டுபிடிச்சீங்க? அருமை.
இந்தக்கட்டுரையே நவபார்ப்பணிய சிந்தனையின் வெளிப்பாடு தான்.
பார்த்தால் உலக நாயம் பேசுவது போல ஒரு முக்காடு.
---------------
ஜோதிஜி,
இந்தப்பதிவு எனக்கு உடன்படாத ஒன்று,ஆனாலும் உங்களை சொல்லிக்குற்றமில்லை , நம் சமூகம் இப்படித்தான் சிந்திக்கிறது,அதன் இணைய முகம் நீங்கள் என எடுத்துக்கொண்டேன்,கல்வியோ ,இணைய புழக்கமோ சிந்தனையில் உடனே மாற்றம் கொண்டு வராது என்பதனை அடிக்கடி உங்கள் கருத்துக்கள் எனக்கு நினைவூட்டுகின்றன.
நன்றி!
பி.கு:
இதனை சொன்னால் உங்களுக்கு வருத்தமாக இருக்கும் என்றே சொல்லாமல் இருந்தேன்,ஒரு வேளை எனக்கு மட்டும் தான் அப்படியோ என, கல்வெட்டும் அதே போல சொன்னதை பார்த்ததும் , ஒரு தெளிவு உருவாயிற்று.
இதனை சொன்னால் உங்களுக்கு வருத்தமாக இருக்கும் என்றே சொல்லாமல் இருந்தேன்,ஒரு வேளை எனக்கு மட்டும் தான் அப்படியோ என, கல்வெட்டும் அதே போல சொன்னதை பார்த்ததும் , ஒரு தெளிவு உருவாயிற்று.
விவாதம், வாக்குவாதம்
புரிந்துணர்வு, புரிய வைக்க முயற்சித்தல்
தெளிவு, தெளிவை நோக்கி நகர்தல்.
மேலே உள்ள வித்தியாசம் தெரிகின்றதா வவ்வுஜி
நட்பையும் சிந்தனைகளையும் குழப்பிக் கொள்ளக்கூடாது. கல்வெட்டுக்கு என்னைப் பற்றி தெரியும்.
உங்களுக்கு உங்கள் அனுபவத்தின் வாயிலாக, படித்த சிந்தனைகளின் மூலம் வருவது உங்கள் கருத்துரைகள். அது போலவே எனக்கும் வந்தால் நாம் அணைவரும் எழுத தேவையே இருக்காது.
மாற்றுக் கருத்துக்கள் வரும் போது, அதை ஏற்றுக் கொள்ளும் மனம் பக்குவம் இருந்தால் மட்டுமே என்னைப் போல கதவை திறந்து வைக்க முடியும்.
இதில் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது. என் வாழ்க்கையை, என் அனுபவங்கள் மூலம் வாழ்ந்து கொண்டுருக்கின்றேன். அதைப் போலவே நீங்களும்.
ஆனால் ஒவ்வொரு உண்மைகளுக்கும் உண்மையில்லாத தன்மைகளுக்கும் இடையே ஒரு உண்மையான உண்மை ஒளித்து இருக்கிறது. என்ன குழப்பமாக இருக்கிறதா?
உண்மைகள் என்பது உண்மையாகத்தான் இருக்கும். நாம் பார்க்கும் பார்வைகள் தான் வெவ்வேறு.
எனது தளத்தில் அருவருக்கத்தக்க விமர்சனங்களை தவிர வசைமொழிகள் கூட அத்தனை விமர்சனங்களையும் வரவேற்கின்றேன். மற்றவர்கள் போல பூட்டி வைத்துக் கொண்டு நான் பிஸ்தா என்று காட்டிக் கொள்ள விரும்புவது இல்லை என்பதை தங்களில் மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன்.
ஜோதிஜி,
//விவாதம், வாக்குவாதம்
புரிந்துணர்வு, புரிய வைக்க முயற்சித்தல்
தெளிவு, தெளிவை நோக்கி நகர்தல்.
மேலே உள்ள வித்தியாசம் தெரிகின்றதா வவ்வுஜி//
ஹி...ஹி இதில் எனக்கு குழப்பம் இல்லை, ஆனால் உங்களுக்கு குழப்பம் இருக்கலாம்னு நான் நினைத்திருந்தேன்.காரணம் சமீப கால நிகழ்வுகள், ஒருவர் சொன்ன கருத்துக்கு மாற்றுக்கருத்து சொல்லிவிட்டால் எதிரியாக நினைக்கிறார்கள், ஆனால் எல்லாம் பேசுவது கருத்து சுதந்திரம் மிக்கவன் நான் அப்படி இல்லை என்பதே :-))
நீங்கள் அப்படி இல்லை என்றாலும், சரி அப்புறம் பார்த்துக்கலாம் என இருந்தேன்,கல்ல்வெட்டும் நான் நினைத்த பல புள்ளிகளை சென்றுள்ளார், எனவே எனக்க்கு எளிதாகிடுச்சு.
நீங்களே ஒரு முறை நான் வினவில் எழுதி இருக்கேன் ,எனக்கேவா என சொன்னதாக நினைவு.
எல்லாவற்றிலும் பல பரிமாணங்கள் உண்டு ,ஆனால் அவற்றில் சிலவற்றை மட்டுமே "ஹை லைட்" செய்து எழுதியைப்படித்தால் சொன்னது எல்லாம் சரி போலவே இருக்கும்,ஆனால் விடுபட்டவற்றை "சேர்த்து" பார்த்தால் வேறு ஒரு உண்மை வெளிப்படும்.
நீங்கள் கவனமாக தவிர்த்துவிட்டு பல கட்டுரைகளை படைத்து இருக்கிறீர்கள், படிக்கும் போது நீங்கள் சொன்னது சரியானவை என்ற பிம்பம் கொடுக்கும்,உண்மையும் கூட. அப்படியான ஒரு கட்டுரையே இதுவும், தவிர்க்கப்பட்ட பகுதியை கல்வெட்டு சுட்டிக்காட்டிவிட்டார்.
நீங்கள் முழு வடிவத்தில் அனைத்து பரிமாணமும் தொட வேண்டியதில்லை, எப்பொழுது எனில் நீங்கள் விரும்பிய கருத்தாக்கத்தினை மட்டும் எடுத்து சொல்ல மட்டுமே எழுதுவதாக இருந்தால்,ஆனால் சமூகத்திற்கு பொதுவான ஒரு கருத்தினை சொல்கிறேன், நான் பொதுவான நபர் என சொல்வதானால் கட்டுரையில் முழுப்பரிமாணமும் விளக்கப்பட வேண்டும்.
//ஆனால் ஒவ்வொரு உண்மைகளுக்கும் உண்மையில்லாத தன்மைகளுக்கும் இடையே ஒரு உண்மையான உண்மை ஒளித்து இருக்கிறது. என்ன குழப்பமாக இருக்கிறதா?
உண்மைகள் என்பது உண்மையாகத்தான் இருக்கும். நாம் பார்க்கும் பார்வைகள் தான் வெவ்வேறு.//
இந்திய விடுதைப்போரில் இந்துக்கள் பங்கு என்று எழுதினாலோ, இஸ்லாமியர்கள் பங்கு என தனியாக எழுதினாலோ முழு விவரம் இருக்காது, ஆனால் தனிப்பட்டு பார்த்தால் அவரவர் எழுதியது உண்மையாக இருக்கும், முழு உண்மை என்ன என எழுத வேண்டும் எனில் இந்தியர்களின் பங்கு என எழுதினால் மட்டுமே சாத்தியமாகும் இல்லையா?
------
மட்டுறுத்தல் இல்லாமல் இருப்பதனை வரவேற்கிறேன், அதனாலேயே நான் அடிக்கடி உங்கப்பதிவுக்கு வருவதுண்டு.
நீங்க உண்டு உங்க பதிவு உண்டு என இருப்பதால் ,மட்டுறுத்தல் இல்லை என்றாலும் பெரிய பிரச்சினை இல்லை, என்னப்போல பிறப்பதிவுகளுக்கு போய் மாற்றுக்கருத்து சொல்லிவிட்டு திறந்து வச்சு பாருங்க தெரியும் :-))
--------------
ஒதுக்கீடுகள் கிடைத்தாலும் அதை பயன்படுத்தும் மனநிலையை முஸ்லிம்கள் வளர்த்துக் கொள்வதும் இங்கே செய்யவேண்டிய ஒன்று, நன்றாகப் படித்தால் இங்கேயே நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கலாம் என்ற எண்ணம் முதலில் அவர்களுக்கு வர வேண்டும்.
ஒரு குடும்பத்தில் நாலு பேர் இருந்தால், அதில் ஒருவன் உழைத்தால் போதும்… மற்றவர்கள் அவனுடைய உழைப்பில் வாழலாம் என்கிற மனப்போக்கு இருக்கிறது. மற்ற சமூகங்களில் உள்ளவர்களைப் போல நாமும் படிக்க வேண்டும், நிர்வாகத் துறைகளுக்கு வரவேண்டும் என்ற விருப்பமே பலருக்கு வரவில்லை.
தங்களுக்கு அடிப்படையான தகுதிகளை வளர்த்துக் கொண்ட பிறகு கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பற்றிப் பேசுவது தானே சரியாக இருக்கும்? எதற்காகப் போராடுகிறோம் என்று தெரியாமல் போராடுவதில் என்ன நடந்துவிடப்போகிறது?
குர்ஆனில் வாசகம் ஒன்று உண்டு.
‘உங்கள் மனதில் மாற்றத்தை கொண்டுவராத வரையில் நாங்கள் கொடுக்கின்ற அருட்கொடைகளை மாற்றித்தரப் போவதில்லை’
இப்போதைய சூழ்நிலைக்கு மிகவும் பொருந்தக்கூடிய வாசகம்!
குங்குமம் இதழுக்காக எழுத்தாளர் நாகூர் ரூமி ‘இஸ்லாமிய தீவிரவாதம்’ குறித்து பேசியதின் எழுத்து வடிவம் இது.
அட...பதிவை படிக்கப்படிக்க காரமாக கமெண்ட் யோசித்துக்கொண்டு இருந்தேன். முழுசா படிக்க படிக்க கோபம். கடைசியில், கல்வெட்டும், வவ்வால் அண்ணனும் எல்லாத்தையும் ஏற்கனவே பண்ணீட்டாங்க :)
எனக்கு ரொம்ப நாட்களாகவே மனதைக்குடையும் சந்தேகம் ஒன்று.....நமது தமிழக அரசியல்வாதிகள் மற்றும் சமூக முன்னேற்றத்துக்காகப் பாடுபடுவதாக வெளிப்படுத்திக்கொள்ளும் நபர்கள் ஒருவர் விடாமல்
" தாழ்த்தப்பட்ட....பிற்படுத்தப்பட்ட ....." என்ற வார்த்தைகளை அடிக்கடி பிரயோகம் செய்கிறார்களே...( நீங்கள் செய்கிறீர்களா என்று எனக்குத் தெரியாது ) அவை ஆங்கிலத்தில் scheduled caste , backward class , scheduled tribe , என்றுதானே உள்ளன. அவைகளுக்கு நேர்முகமான வார்த்தைகள் " அட்டவணை சாதியினர் , பின்தங்கிய வகுப்பினர் ........." இப்படித்தானே வர வேண்டும். இவைகளை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட என்று சொல்லி சொல்லியே இன்றளவும் சமூகத்தில் ஒரு வெறுப்புணர்வையே விதைப்பதில் இவர்களுக்கு என்ன ஒரு குரூர திருப்தி ?
அருமையான, ஆழ்ந்து படிக்க வேண்டிய பதிவு.
நன்றி திரு ஜோதிஜி.
எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
குரூர திருப்தி
இந்த இன மக்கள் இரண்டுவிதமான நபர்களிடம் பிடிபட்டு உள்ளார்கள்.
நான் உங்களை காக்க வந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு அவர்களை வைத்துபிழைத்துக் கொண்டு இருப்பவர்கள்.
மற்றொருவர், நீங்கள் எக்காரணம் கொண்டும் மேலே வந்து விடக்கூடாது என்று கங்கணம் கட்டி செயல்பட்டுக் கொண்டுருப்பவர்கள்.
உங்கள் பதிலில் நான் எடுத்த வார்த்தை இவர்கள் இருவருக்கும் பொருந்தும்.
vovs...Really super...
by---Maakkaan
Really excellent..
by---Maakkaan
I disagree with your article. Truth is in the lines of Voval, kalvetu, and Sarvagan.
I saw your comments on Voval's blog, but i never come to your blog. Today, my first reading of your article is this, but I didn't say the truth. :-(
By,---Maakkaan
மக்கான் உங்கள் கருத்துக்கு நன்றி
Post a Comment