Monday, December 26, 2011

வெள்ளைத் தோல் சிந்தனைகள் மாறுமா?

இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை நிறுவியவர் என்றழைக்கப்படும் இராபர்ட் கிளைவ் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

குறிப்பாக நமது அரசியல்வாதிகள் அத்தனை பேர்களும் மோசம் என்று கருதிக் கொள்பவர்கள் இராபட் கிளைவ்பற்றி தெரிந்து கொள்வது அவசியமானதாகும்.

மேலை நாட்டு வரலாற்றாசிரியர்கள் இவரைப்பற்றி வானாளவ புகழ்ந்து எழுதித் தள்ளியிருக்கிறார்கள். வரலாறு என்பது எப்போதும் ஜெயித்தவர்களை கொண்டாடுவது வாடிக்கை என்றாலும் ஒழிந்திருக்கும் உண்மைகளை ஒரு நாள் வெளியே வரத் தானே செய்யும். .

கிழக்கிந்திய நிறுவனம் தென்னிந்தியாவில் வர்க்கத்தை தொடங்குவதற்காக 17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் முகலாய சக்ரவர்த்தியின் அனுமதியை பெற்றுருந்தது. அப்போது ஆங்கிலேயர்கள் நிறுவியது தான் தற்போது தமிழ்நாட்டு மாநில முதலமைச்சரின் அலுவலகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் புனித ஜார்ஜ் கோட்டை. இந்த கோட்டையை அடிப்படையாகக் கொண்டு இப்போது சென்னை என்றழைக்கப்படும் நகரம் வளர்ச்சியடைந்தது. ஏறக்குறைய இந்த கோட்டையை சுற்றியுள்ள பகுதிகள் மேல்மட்டத்தினர் உலாவும் பகுதியாகவே இருந்தது.


இந்த கோட்டைக்கு சாதாரண எழுத்தராக 1743ம் வருடம் வேலைக்கு வந்தவர் தான் இராபட் கிளைவ். அப்போது இவருடைய வருட சம்பளம் 15 பவுண்ட். ஆனால் இவர் சில வருடங்களிலேயே ஜெனரலாக பிற்காலத்தில் பிரபுவாக (பிலாஸி) தன்னை உயர்த்திக் கொண்டார். இவரைப்பற்றி எழுதிய வரலாற்று ஆசிரியர்கள் மிகச் சிறந்த மதிநுட்பமும், இராணுவ திறமையும் மிக்கவர்.

இதன் காரணமாகவே வாழ்வில் உயர்ந்து பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இந்தியாவில் ஆழமாக வேறூன்ற உதவினார் என்றே எழுதியிருக்கிறார்கள். ஆனால் இவரிடம் இருந்த ராணுவ பலம் என்பது வெகு சொற்பமே. மேலும் இவருடன் இருந்த முக்கால்வாசிப் பேர்கள் பொறுக்கிகளும், காலிகள், சமூகக் கழிசடைகள் போன்றவர்களும் தான் இருந்தனர்.

முகலாயர்களின் வழிவந்த நிலப்பிரபுத்துவ அரசர்கள் தமக்குள் இடைவிடாது சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். தன்னிடம் இருந்த விசுவாசமான போக்கிரிகளை துணை கொண்டு, இராபர்ட் கிளைவ் தந்திரத்தாலும், வஞ்சகம், சூதுக்களாலும் முறியடித்து படிப்பயாக இங்கே சாம்ராஜ்யத்தை விரிவாக்கினார்.

இந்தியாவின் முதல் தலைமுறை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், இன்றைய அரசியல்தலைவர்களின் முன்னோடியாக திகழ்ந்தனர். லஞ்சம், ஊழல், பொறாமை, பேராசை, காட்டுமிராண்டித்தனம், எது குறித்தும் அஞ்சாமை போன்றவற்றை குணாதிசியமாக வைத்து இந்தியாவை முடிந்தவரைக்கும் சூறையாடினர்.

இராபட் கிளைவ் கவர்னராக இருந்த போது மற்றொரு காரியத்திலும் கவனமாக இருந்தார். இந்தியாவின் கல்வி முறை, விவசாய முறையையும் நீண்ட ஆராய்ச்சியாக எடுத்துக் கொண்டு முடிவாக இரண்டு தீர்மானத்திற்கு வந்தார். கல்வியை மெக்காலே என்ற புண்ணியவான் எடுத்துக்கொள்ள இவர் விவசாயத்தில் கை வைத்தார்

கால்நடைகள், மற்றும் பசுக்கள் இந்திய விவசாயத்திற்கு ஆதாரமாக இருப்பதை அழிக்க வேண்டுமென்று கணக்கில் எடுத்துக் கொண்டு 1760 முதல் பசுவதைக்கூடம் நிறுவி நாள்தோறும் கறிக்காக என்ற நோக்கில் 50,000 கால்நடைகளை கொல்லும் புனிதப்பணியை துவங்கினார்.

ஒரு ஆண்டில் மட்டும் கொல்லப்பட்ட கால்நடைகளின் எண்ணிக்கை ஒரு கோடியாகும்.

காரணம் அப்போது இந்தியாவில் இருந்த விவசாயம் நம்முடைய கால்நடைகளின் சாணம், மூத்திரம் இவற்றை அடிப்படையாகக் கொண்டே ஒரு ஏக்கரின் மூலம் 54 குவிண்டால் அரிசியை உற்பத்தி செய்து கொண்டிருந்தது. 1910 வரைக்கும் இரவு பகலாக இந்த பசுவதைக் கூடம் இயங்கிக் கொண்டேயிருந்தது. இன்று வரைக்கும் நவீணமாக்கப்பட்டு இந்த தொழில் நடந்து கொண்டேதான் இருக்கிறது. இதன் பலன் இன்று கோடிக்கணக்கான பணத்தை இறக்குமதி ரசாயன உரத்திற்கு கொண்டு போய் கொட்டி மானிய விலையில் உழவர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
பழங்கதை பேசாதே என்று எளிதாக பலவற்றை புறந்தள்ளி விடுகின்றோம்.

நமது விவசாயத்தில் இருந்த ஏராளமான சாத்தியக்கூறுகள் இன்று இருந்த சுவடே தெரியாத அளவிற்கு காணாமல் போய்விட்டது.

ஒரு சின்ன உதாரணத்தை பார்த்து விடலாம்.

விதை நெல் கோட்டை என்பது கீழ் தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு நன்றாக தெரிந்த வார்த்தை இது. தங்களுக்கு தேவைப்படும் விதை நெல்லை சேகரிக்கும் முறையைத்தான் இப்படி குறிப்பிடுவார்கள். அறுவடை முடிந்ததும் விதை நெல்லை நன்றாக வெயிலில் காய வைத்து சுத்தமான வைக்கோலைக் கொண்டு பிரி (கயிறு போன்று திரித்து) செய்து அதன் மேல் வைக்கோல் பரப்பி அதில் 18 மரக்கால் (55 கிலோ) விதை நெல்லை வைத்து பந்து போல இறுக்கி சுற்றி வைத்து விடுவார்கள். இதற்கு பெயர் தான் விதை நெல் கோட்டை.

இந்த கோட்டையின் மேல் காற்றுப் புகாதவாறு பசு மாட்டு சாணத்தை பூசி நன்றாக காய்ந்த பிறகு தனியாக ஒரு பகுதியில் அடுக்கி வைத்து விடுவார்கள். இது போன்று செய்வதால் உள்ளே உள்ள நெல் ஒரே தட்பவெப்ப நிலையில் இருக்கும். எந்த பூச்சி புழுவும் அண்டாது. தேவைப்படும் போது இதை தனியாக எடுத்து அப்படியே 10 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து மூன்று நாட்கள் முட்டம் போட வைத்து அப்படியே நாற்றாங்காலில் தெளிக்க பயிர்கள் ஜம்மென்று பச்சையாய் சிரிக்கும்.

ஆனால் சணல் பைக்கு மாறி ப்ளாஸ்டிக் பைக்கு மாறி இன்று இன்னும் பல நவீன வசதிகளுடன் வந்து விட்டது. இன்று பச்சையாய் பயிர் சிரிக்கவில்லை. விவசாயிகளுக்குத் தான் பயிர் பலன் தருவதற்குள் இரத்தம் சிவப்பாய் வருகின்றது.

இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு சென்று கொண்டிருந்த செல்வம் அங்கே தொழிற்துறையை வெகு சீக்கிரமே முன்னேற்ற உதவியது. இந்தியாவுடன் வர்த்தகம் செய்து கொண்டிருந்த பிரிட்டன் தொழிலதிபர்களுக்கு கிடைத்த அபரிமிதமான லாபத்தைப் போலுள்ள உதாரணத்தை உலக பொருளாதார உறவுகளின் வரலாற்றிலேயே பார்க்க முடியாது.

உலகத்தின் தொழிற்சாலையாக பிரிட்டன் மாறுவதற்கு இராபட் கிளைவ் உதவினார்.


அத்துடன் தனக்காக சேர்த்த சொத்துக்களும் கணக்கில் அடங்காது. நகையாக, பணமாக, பண்ணை வீடுகளாக என்று சேர்த்து குவித்தார். இதையே பிரிட்டன் நாடாளுமன்றத்தில் " இந்தியர்கள் தங்களுடைய பாதாள அறைகளிலிருந்த தங்கத்தையும் மாணிக்கங்களை எனக்கு முன்னால் குவியலாகக் கொட்ட அந்த குவியல்களுக்கிடைய நான் உலாவுவதுண்டு " என்று ஆணவமாக பேசினார்.

இதைத்தான் நேரு பின்வருமாறு எழுதினார்.

"அது பகற்கொள்ளையே. அவர்கள் "பண மரத்தை" ஆட்டினார்கள். பயங்கரமான பஞ்சங்கள் வங்காளத்தை அழிக்கும் வரை அந்த மரத்தை திரும்பத்திரும்ப ஆட்டினார்கள்."

ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் நடத்திக் காட்டிய இந்த அரசியல் அயோக்கியனுக்கும் இன்றைய அரசியல்வாதிகளுக்கும் என்ன பெரிதான வித்யாசம்?

அப்போதும் இப்போதும் எப்போதும் அரசியல் என்பது தந்திரம், சமார்த்தியம், சுயநலம் இந்த மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு தான் இயங்குகின்றது. அன்று நம்முடைய வளங்கள் பிரிட்டனுக்கு மட்டுமே சென்றது. இப்போது கருப்பு பணமாக பல நாட்டு வங்கிகளுக்கும் சென்று கொண்டுருக்கிறது.

தற்போது ஸ்விஸ் வங்கியில் மட்டும் இருக்கும் இந்தியர்களிள் பணம் 25 லட்சம் கோடி. மற்ற வங்கிக் கணக்குத் தொகை எத்தனையோ?. .

இந்தியக் கறுப்புப் பணத்தின் அளவு, இந்தியாவின் மொத்தக் கடன் தொகையிலும் அதிகம் என்கிறார்கள்.

                                                ++++++++++++++++++++++++++

தென்னிந்தியாவின் கதை தான் இப்படி என்றால் இந்தியாவின் அதிபர் மாளிகை எப்படி உருவானது?

1910 ஆம் ஆண்டு முதல் 1916 ஆண்டு வரைக்கும் பல்லாயிரக்கணக்கான இந்திய வேலையாட்களை, ஆங்கில கட்டிடக்கலை நிபுணர்களைக் கொண்டு அப்போது வைசிராயாக இருந்த ஹார்டிங் பிரபு தேர்ந்தெடுத்த இடம் எப்படிப்பட்டது தெரியுமா?

14 ஆம் நூற்றாண்டில் கொடூரமான தைமூர் போரில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான இந்தியர்களின் மண்டை ஓடுகளைக் கொண்டு அந்த இடத்தில் ஒரு பிரமீடைக் கட்டியதாக சொல்லப்படுவதுண்டு. இந்த இடத்தில் மொகலாயச் சக்கரவர்த்திகள் சிவப்பு பாறைக் கற்களைக் கொண்டு தங்களுடைய ஆட்சிக்கு நினைவுச் சின்னங்களான செங்கோட்டை, ஜும்மா மசூதியையும் கட்டினார்கள். ஆனால் ஹார்டிங் பிரபுக்கு இது போன்ற வரலாற்று பின்புலம் பற்றி எதுவும் தெரியாமல் நிர்மாணித்த கட்டிடம் தான் இன்று வரைக்கும் இந்தியாவை ஆட்சி செய்ய உதவிக் கொண்டிருக்கின்றது.

சாம்ராஜ்யங்கள் சாம்பலாகிப் போவதும், மீண்டும் வேறொரு வகையில் உயிர்தெழுவதுமான இந்த நிகழ்வுகள் கால வரலாற்றில் வந்து போய்க் கொண்டேதான் இருக்கிறது.

வரலாற்றில் எத்தனையோ பேரரசுகள் வந்து போன சுவடே இல்லாமல் அழிந்தும் போய்விட்டது. பழங்காலத்தில் தோன்றிய வட ஆப்பிரிக்காவில் தோன்றிய பேரரசுகள், மத்திய கிழக்கு ஆசியா, பாரசீகம், கீரிஸ்,ரோம், சிலுவைப் போர்கள், கொலம்பஸ்க்கு பிறகு வந்த ஐரோப்பிய பேரரசுகள் போன்றவற்றின் ஏகாதிப்பத்திய வளர்ச்சியே பெரும்பாலான போர்களுக்கும், உலகில் பசி, பட்டினி, பஞ்சம் போன்றவை உருவாக காரணமாக இருந்தது.

பல்லாயிரக்கணக்கான மக்களின் கலாச்சாரம், பண்பாடுகளையும் காணாமல் போகவும் வைத்தது. உலகில் அமைதியற்ற சமூகங்களை உருவாக்கிய பேரரசுகள் தங்கள் நாடுகளில் அதிக அளவு போதைப் பழக்கத்தையும் மனோ ரீதியான பிரச்சனைகளும் உடைய நாகரிக மனிதர்களையும் தான் வளர்க்க முடிந்துள்ளது.

ஆனால் இன்று வரைக்கும் அமெரிக்கா தனது ஏகாபத்திய வாழ்க்கையை இழந்துவிட தயாராய் இல்லை என்பதை இங்கே குறிப்பிடலாம். பிரிட்டன் வரலாற்றை உற்றுக் கவனித்துப் பாருங்கள்.

எந்த இடத்திலும் ஒரு துளி கூட கருணை, காருண்யம், மனிதாபிமானம் என்பதை மருந்துக்குகூட பார்க்கமுடியாது. வெறிகொண்ட வேங்கை போலத்தான் வேட்டையாடி தங்களை வளர்த்துக் கொண்டே வந்துள்ளார்கள். ஆனால் அமெரிக்காவை ஆண்டவர்கள் இன்று அமெரிக்காவை அண்டிப் பிழைப்பவர்களாக மாறியுள்ளது காலத்தின் கோலம் தானே?

உலக வரலாற்று சரித்திரத்தில் எந்த பேரரசும் நீடித்து இருந்ததாக சரித்திரமே இல்லை. இன்று வியப்பை தந்து கொண்டிருக்கின்ற அமெரிக்காவின் நிலையும் இதுவே. எந்த நாடும், தனி மனிதனும் மற்றவர்களை சுரண்டி நீண்ட காலம் வாழ்ந்ததாக இல்லை.

ஆனால் இந்தியா கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாகவும் ஏராளமான பஞ்சம், பசி, பட்டினிகளைத் தாண்டி வந்தபோதிலும் இன்று வரையும் அடிப்படை கட்டுமானம் சிதையாமல் தானே இருக்கிறது? எப்படி?

இந்தியா இப்போது 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை விட உயர்ந்திருக்கிறது. உண்மை தான். முழுமையான கல்வியறிவு தேசம் என்று இல்லாவிட்டாலும் கூட நடுத்தர வர்க்கத்தின் மூளை அறிவு இன்று உலகம் முழுக்க மென்பொருள் துறை முதல் பல்வேறு துறைகளிலும் கொடி கட்டி பறக்கின்றது. இந்தியர்கள் உலகம் முழுக்க பரவ காரணமாகவும் இருக்கிறது.. இதை மற்றொரு வகையில் பார்க்கப் போனால் நவீன அடிமைகளை உருவாக்கி உலகம் முழுக்க அனுப்பிக் கொண்டிருக்கின்றோம்..

இந்தியர்களின் திறமையை உள்நாட்டில் பயன்படுத்த ஆளில்லாத காரணத்தால் எவர் வந்து நம்மை கொத்திக் கொண்டு போகமாட்டாரோ என்று ஏக்கத்தில் தான் ஒவ்வொரு துறையிலும் இருப்பவர்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நிறுவன வர்க்கமும் அதிகார வர்க்கமும் உருவாக்கும் கூட்டணியின் மூலம் இந்த பரந்த உலகம் ஒரே கூரையின் கீழ் கொண்டு வரப்படுகின்றது. மேல்தட்டு மக்களை அவர்களின் வாழ்க்கையை விளம்பரங்களும், ஊடகங்களும் முன்னிறுத்துகின்றது. நடுத்தர வர்க்கத்தையம் அவ்வாறு ஒருவிதமான வாழ்க்கை வாழ் வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறது.

உலகமயமாக்கல், தராளமயமக்கல், பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் எல்லாவிதமான வசதிகளையும் பெறுவதும் பின்னால் உள்ளவர்களை சுரண்டலுக்கு உட்படுத்திக் கொண்டிருப்பதுமே ஆகும்.

இதன் காரணமாகவே எனக்கு என்ன லாபம்? என்ற பேராசை என்பது அடித்தட்டு மக்கள் முதல் அதிகாரவர்க்கம் வரைக்கும் ஊடுருவிப் போனதால் எவரிடம் சேவை மனப்பான்மையை எப்படி எதிர்பார்கக முடியும். மாற்றம் என்பது தனிமனிதனில் இருந்து தொடங்குவது என்பதையே நாம் உணராமல் மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

இங்கு மதம் முக்கியம். அதற்குள் பிரியும் ஜாதிக்கூறுகள் அதைவிட முக்கியம். பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிபவராக இருந்தாலும் பள்ளர் எவரும் பறையரை திருமணம் செய்ய விரும்பதில்லை. செட்டியார் எவரும் நாடாரை நினைத்துப் பார்ப்பதில்லை. இதைவிட முக்கியம் அவரவரின் கடவுள் நம்பிக்கை.

இந்தியர்களின் பெரும்பாலனோருக்கு இருக்கும் மறுபிறவி நம்பிக்கை ஒன்று தான், நிகழ்கால அவலத்தை பொறுத்துக் கொள்ள வைக்கின்றது. விலங்குகள் போல நின்று கொண்டே மூத்திரம் போய்க்கொண்டிருக்கும் சந்தை கடந்து போய் தெரு முனையில் இருக்கும் கோவில் தரிசனத்தை பயபக்தியுடன் வணங்குவது நம்முடைய பண்பாடு..

ஒழுக்கத்தை விட நமக்கு பயமே முக்கியம். 

அந்த பயம் ஒவ்வொருவர் மனதிலும் இருந்து கொண்டேயிருப்பதால் இவ்வளவு பெரிய நாட்டை மிகக்குறைவான கண்காணிப்பு மூலம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடிகின்றது. 

அவரவர் மத நம்பிக்கைகளின் காரணமாகவே மதத்தால், மொழியால், ஜாதியில், குணத்தால் பிரிந்து வாழும் இந்த அகண்ட தேசம் பலவீனமாகாமல் தொடர்ந்து சிறிதளவேனும் முன்னேறிக் கொண்டிருக்கிறது. ..

                                                                 ++++++++++++++++++++++++++

ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு வந்த போது கூட பெரும்பாலன மக்கள் தங்கள் அன்றாட கடமைகளில் தான் கவனமாக இருந்தார்களே தவிர எவர் ஆட்சி செய்கிறார்கள் எவ்வளவு கொள்ளையடிக்கிறார்கள் என்பதைப் பற்றி எந்த அக்கறையும் இருக்கவில்லை. இப்போதும் அப்படித்தான் இருக்கிறார்கள். ஆனால் அன்று தங்கள் உழைப்பின் மூலம் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தார்கள். காந்தி அழைத்தவுடன் பாரபட்சம் இல்லாது சத்தியாகிரக போராட்டத்தில் பங்கெடுத்து சுதந்திர பொறியை பற்ற வைத்தார்கள்.

இப்போது தகுதியான தலைவர்கள் எவரும் இல்லாத போதும் அடிப்படை வாழ்வாதாரமே பாதிப்படைய போகின்றது என்றதும் கம்பம் பகுதியில் தன் எழுச்சியாக கேரளவுக்கு எதிர்ப்பை காட்டும் பட்சத்தில் ஒரு லட்ச மக்கள் திரண்டுள்ளார்கள்.

புரட்சி என்பது எப்போது உருவாகும்?.

இன்று வாழ்வாதாரம் பாதிக்கப்போகின்றது என்றதும் லட்சக்கணக்கில் திரளும் மக்கள், நாளை உணவுக்கே பஞ்சம் என்றால் எத்தனை கோடி பேர்கள் இது போன்ற புரட்சியில் இறங்கக்கூடும்?. மாற்றத்தை விரும்புவர்கள் அதிகமாகும் போது இது போன்ற தன்னெழுச்சியான நிகழ்வுகள் நடந்தே தீரும்.

நமது இந்தியாவை அதிக காலம் ஆண்டுள்ள காங்கிரஸ் வந்துள்ள பாதையில் இன்று நாடே திக்குத் தெரியாத பாதையில் போய்க் கொண்டிருக்கின்றது.

ஏன்?

                                                ++++++++++++++++++++++++


1929 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு காந்திஜி நேருவை முன்மொழிந்தார். காந்தி தனக்குப் பதிலாக அந்த பதவிக்கு மிக பொருத்தமானவர் நேரு என்றே தீர்மானமாக நம்பினார். சர்தார் வல்லபாய் படேல், மௌலானா அபுல் கலாம் ஆசாத் மற்றும் வேறு சில செல்வாக்குள் காங்கிரஸ்கார்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. மூர்க்கத்தனமான போட்டி பொறாமைகளுக்கிடையே நேரு கூட இந்த பதவியை விரும்பவில்லை. காரணம் காங்கிரஸ் கட்சியில் கூட பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு ஒத்து ஊதி காலத்தை ஓட்டிவிடலாம் என்ற மாற்றத்தை விரும்பாதவர்கள் என்ற ஆதிக்கமும் சரிக்கு சரியாக இருந்தது.


இதன் காரணமாகவே காங்கிரஸ் செயற்குழு தலைவராக இருந்த சி.ஆர். தாஸ் பதவி விலகினார். ஆனால் இன்று வரையிலும் இந்தியாவிற்கு மாற்றம் வேண்டும் என்ற எண்ணிக்கை கொண்ட ஆட்சியாளர்கள் அதிகமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் இவர்களின் அத்தனை நோக்கமும் ஏதோவொரு நாட்டின் மூலம் இந்த மாற்றம் இருக்க வேண்டும் என்று எண்ணத்தில் முடிவது தான் நாட்டின் பிரச்சனையின் தொடக்கமாக இருக்கிறது. இப்போது மன்மோகன் சிங் நம்பும் அமெரிக்கா உலகத்திற்கு சொல்ல விரும்பு செய்தியை ஒரே ஒரு உதாரணம் மூலம் நம்மால் சொல்லிவிட முடியும்.

அமெரிக்கா சமீபத்தில் ஈராக்கில் போர் நடத்த 87 பில்லியன் அமெரிக்கன் டாலர் செலவழித்தது. ஆனால் உலகமக்கள் அணைவருக்கும் சுத்தமான நீரும், போதுமான உணவும் மற்ற அடிப்படை வசதிகளும் கல்வியும் அளிக்க இதில் பாதித் தொகையே தேவைப்படும் என்று ஐ.நா சபை மதிப்பிட்டுள்ளது. 

உலகத்திற்கே அமைதியை போதிக்கும் அமெரிக்கா ஏன் இவ்வாறு செய்கின்றது? 

அது தான் அமெரிக்காவிற்கென்றே இருக்கும் அராஜக அரசியல்.

அமெரிக்கா இந்தியாவின் மேல் வைத்துள்ள கழுகுப்பார்வை என்பது இன்று நேற்றல்ல. சுதந்திரம் பெற்று முதல் பிரதமராக இருந்த நேரு காலத்தில் இருந்தே நடைபெறுகின்றது.

உலோகத் தொழில், மின்சார சக்தி உற்பத்தி, இரசாயனம், இயந்திரங்களைக் கட்டுதல், போக்குவரத்து, சுரங்கத் தொழில் போன்ற துறைகளை வளர்க்கப்பட வேண்டும் என்று நேரு கொண்டு வந்த ஐந்தாண்டு திட்டத்தைப் பார்த்து அப்போது டில்லியில் அமெரிக்க தூதராக இருந்த ஹென்ரி ஜே. கிரேடி சொன்ன வார்த்தை என்ன தெரியுமா?

"இந்தியாவை தொழில் வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற முயற்சிப்பது அதன் பொருளாதார வளர்ச்சியின் "இயற்கையான போக்கை" அழிப்பதில் கொண்டு போய்விடும்" என்று பயமுறுத்தினார். மேலும் நேரு ஒரு மறைமுக கம்யூனிஸ்ட் என்று தூற்றினார்.

இவ்வாறு சொன்ன அமெரிக்கா நேருவை தங்கள் ப்க்கம் கொண்டு வந்தே ஆக வேண்டும் என்று பலவித முயற்சிகளையும் செய்து பார்த்து 1948 ஆம் ஆண்டே அமெரிக்கா வரச்சொல்லி அவருக்கு அழைப்பு விடுத்தது. காலம் கடத்தி ஆனால் உறுதியான நிலைப்பாட்டுடன் அமெரிக்க சென்ற போது (1949 அக்டோபர்) வாஷிங்டன் விமான நிலையத்தில் நேருவை வரவேற்ற அதிபர் ட்ரூமன் பின்வருமாறு கூறினார்.

" உங்கள் நாட்டுக்குப் புதிய பாதையைக் கண்டுபிடிக்கப் புறப்பட்டவர்கள் எங்கள் நாட்டைக் கண்டுபிடிக்க வேண்டுமென்பது விதியின் முடிவாக இருந்தது. உங்கள் வருகை ஒரு அர்த்தத்தில் அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதாக இருக்குமென்று நம்புகின்றேன்."

ஆனால் அமெரிக்கா எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை.

இந்திய சுதந்திரத்தில் எந்த வித கட்டுப்பாடுகளையும் விதிக்க அமெரிக்காவுக்கு எந்த யோக்கியதையும் இல்லை என்று வெற்றி நடை போட்டு இந்தியர்களை நம்பி இந்தியாவை வடிவமைக்கத் தொடங்கினர். ஆனால் அன்று நேரு காங்கிரஸ் தொடங்கிய பயணம் இன்று இத்தாலி காங்கிரஸ் ஆக மாறி, மறுபடியம் அதே அமெரிக்காவின் காலடியின் சமர்ப்பிப்பதில் முடிந்துள்ளது.

இதைத்தான் வாழ்க்கை என்பது ஒரு வட்டம் என்று சொல்கிறார்களோ?....

இங்கே எடுத்து நோக்கப்பட்ட விடயங்கள் எண்ணத்தில், சிந்தனையில், ஏற்றப்பட்டால் இந்தியர்கள் எல்லோர்க்கும் வாழ்வு .

இல்லையேல்.......?



தொடர் பயணத்தில் பங்கெடுத்த உங்களுக்கு என் நன்றி.

4 தமிழ்மீடியாவில் தொடராக வெளிவந்தது. அதன் ஆசிரியர்  வார்த்தைகளில்.........

இவ்வாறான ஒரு தொடர் ஒரு இணைய ஊடகத்தில் வெளிவருவதனால் எவ்விதமான சாதகங்களைத் தோற்றுவிக்க முடியும் என்ற கேள்வி எழுவது நியாயமானதே.   பாதிக்கப்படும் விவசாயிகளில் பலரும் பாமர மக்கள். அவர்களுக்கு இணைய வாசிப்போ இது போன்ற விடயங்களோ சென்றடைந்துவிடுமா..? என்ற கேள்விக்கு இல்லையென்பதே மிகத் தெளிவான பதிலாக இருக்க முடியும்.

அப்படியானால் யாருக்காக இந்த முயற்சிகள்..?

சந்தேகமில்லை. இந்த முயற்சிகள் இணையப் பாவனையில் உள்ள நடுத்தர மற்றும் படித்தவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே.

ஏகாதிபத்திய சாம்ராஜ்யங்கள் இன்று இந்த நடுத்தரவர்க்கத்தையே குறிவைத்துக் காய் நகர்த்துகின்றன. தாம் சுரண்டப்படுவது தெரியாமலே  நம்பிக்கை மோசம் போய்க் கொண்டிருக்கிறது இந்த நடுத்தர வர்க்கம்.

வெள்ளந்திகளான பாமார மக்கள் பாதிப்புத் தமக்கென உணரும் போது, உணர்வோடு போராடப் புறப்பட்டுவிடுகின்றார்கள். அவ்வாறு புறப்படுபவர்களை ஆட்சியாளர்கள் தீவிரவாதிகளாகவோ, அல்லது வேண்டத்தகாதவர்களாகவோ உருமாற்றிக் காட்டும் போது, அதையே  உண்மையென உச்சுக் கொட்டி ஏற்றுக் கொள்ளும் ஏமாளிகளாக அல்லது எதிர்ப்பதற்கு இயலாதவர்களாக இருப்பவர்கள் இந்த நடுத்தர வர்க்கத்தினர்.

வழங்கப்படும் ஏட்டறிவு, வேலைவாய்ப்பு, அதற்கும் மேலான பொழுது போக்குச் சுவாரசியங்கள் எல்லாமே, இதற்கெனத் திட்டமிட்ட வகையிலேயே காப்ரேட் கடவுளர்களால் படைக்கப்பட்டு, இரட்சிக்கப்படுகிறது நடுத்தரவர்க்கம். அதனால்தான் இவ்வாறான சிந்தனைகள் இணையவழியில் அவர்களிடத்தில் பகிரப்பட வேண்டும், படிக்கப்பட வேண்டும் என்பதை விரும்புகின்றோம்.

எல்லைகள் தாண்டிப் பயணிக்கும் இணையவழியில் இவ்வாறான செய்திகள் எண்ணற்ற பேர்களைச் சென்றடைய வேண்டுமென்பதே எங்கள் விருப்பம். அந்த விருப்பத்தின்படி ஆயிரக்கணக்கான பேர்களை இந்தத் தொடர் சென்றடைந்திருக்கின்றது. அதற்கப்பால் சில முக்கிய நிலைகளிலும் முட்டி மோதியிருக்கிறது என்பதையும் அறிவோம். ஆனால் உள்வாங்கி உணர்ந்து கொண்டோர் ஓராயிரம் பேர்களல்ல ஒரு நூறு பேராக இருந்தாலும், அதுவே  ஆரம்பம்....!

40 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

பயனுள்ள தொடர்...

தொடரட்டும்..

ப.கந்தசாமி said...

நுனிப்புல் மேய்ந்தேன்.உண்மையைச் சொல்லிவிட்டேன். ஆனால் உண்மை சுடும். என்ன செய்வது?

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

//பழங்கதை பேசாதே என்று எளிதாக பலவற்றை புறந்தள்ளி விடுகின்றோம்.//
அது தான் நமது வீழ்ச்சிக்கு காரணம்.

மிக நல்ல பதிவு.
பல செய்துகளினூடே .
வாழ்த்துக்கள்.

Paleo God said...

ஊதற சங்கை ஊதி வைப்போம் தலைவரே.

ஜோதிஜி said...

வருக கந்தசாமி, வழக்குரைஞரே.

ஷங்கர் என் நோக்கமும் இஃதே. சென்னையில் என் பள்ளித்தோழனின் மனைவி ஒரு திருவாசகம் சொன்னார். இது போல யோசித்தால் பேசினால் நம்மை தள்ளிவைத்து விட மாட்டார்களா? அவர் ஆதங்க கேள்விகள் நமது தற்போதைய சமூகத்தின் ஆயிரமாயிரம் முகத்தை காட்டியது.

கோவி.கண்ணன் said...

சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்.

MANI said...

அருமையான தொடர். அற்புதமான விஷயங்கள் என்று கலந்து கட்டி அடிக்கிறீர்கள். இவ்வளவு புள்ளிவிபரங்கள், வரலாற்று உதாரணங்கள் என்று எங்கிருந்து பெறுகிறீர்கள் ஐயா.

இந்தியாவின் சரித்திரத்தை பார்க்கும் போது எப்போதுமே இந்தியா மற்றவர்களால் சுரண்டலுக்கு ஆளாகும் ஒரு தேசமாகவே பார்க்கப்படுகிறது.

எவர் வந்து சுரண்டினாலும் எவ்வளவு சுரண்டினாலும் அவர்களுக்கு மேலும் மேலும் வாரி கொடுத்துக்கொண்டிருக்ம் தேசம் நம் இந்தியா.

நிச்சயம் நம் வாழ்க்கை சக்கரம் மாறும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.

அது ஒரு கனாக் காலம் said...

ரொம்ப நாட்களாக பின்னூட்டத்தில் வரவில்லை ..பதிவை கவனித்து படித்து வருகிறேன்... சில நாட்கள் முன்பு NDTV யில் Politically incorrect என்ற ஒரு நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தது , அதில் மணி ஷங்கர் ஐயர் ( நம்ம மாயூரம்) .. பேசுவதை பார்த்து வியந்து போனேன்..அவர் நிஜமாக எந்த கொள்கையை கடைபிடித்தார், என்ன செய்தார் என்று சத்தியமாக தெரியாது, ஆனால் St stephen's college ல , IIM ல , Indian institute of foreign studies ல பேசியதை கண்டிப்பாக பார்க்க வேண்டும், அமெரிக்கா யார், எந்தனை பேரை கொன்றார்கள் , ஐரோப்பியா யார் யாரை எல்லாம் கொள்ளை அடித்தார்கள் .... சும்மா மனுஷன் பொளந்து கட்டுவார். நமக்கு என் வர்தக்கதில் FDI வேண்டாம் என்று அழுத்தம் திருத்தமாக சொல்வார். உங்கள் பதிவும் அது போல இருந்தது .... நிறைய தெளிவு இருக்கு, இன்னமும் வரும், அடிக்கடி சந்திப்போம் பதிவுகளில் ....

வவ்வால் said...

ஜோதிஜி,

நல்ல கவர்ச்சிகரமாக எழுதி இருக்கிங்க :-)) ஆனால் ஏதோ ஒன்று குழப்புது கட்டுரையில்?(வை.கோ விற்கு உரை தயாரித்துக்கொடுக்கிறிங்களா ?)

1) இந்தியாவில் உள்ள தொழிநுட்ப வல்லுநர்களை பயன்ப்படுத்த உள் கட்டமைப்பு இல்லை என்று வருந்துகிறீர்களா?

2)விவசாய நாடாக இருப்பது தான் சரினு சொல்ல வறிங்களானு புரியவில்லை?

இரண்டும் சேர்த்து வளரனும் சொல்றிங்களா? அப்படி செய்ய இத்தனைக்காலமாக ஏன் முடியவில்லை?

அப்புறம் இரசாயன உர விவசாயம் பற்றி,

இராசயன உரம் , புதிய நெல் வகைகள் , பூச்சி மருந்துக்கெல்லாம் காரணம் இராபர்ட் கிளைவ் தான்னு சொல்லிட்டு எளிதாக உங்க ஆதர்சம் நேருவை காப்பாத்திட்டிங்களே? :-))

இராபர்ட் கிளைவ் இந்தியாவை சுரண்டினார் என்பது எந்த அளவு உண்மையோ அதே அளவு பொய் தான் அவர் செய்தது தான் இரசாயன உர விவசாயம் நடைபெறக்காரணம் என்பதும்.

இந்தியாவில் 1965 இல் பசுமை புரட்சி என்று ஒன்று ஆரம்பிக்கப்பட்டது, காரணம் நேரு , அவரின் விருப்பதை சி.சுப்ரமணியம், எம்.எஸ்.சுவாமிநாதன், நார்மன் போர்லார்க் ஆகியோர் தான் நிறைவேற்றினார்கள்.

இராபர்ட் கிளைவ் காலத்தில் இரசாயன் உரமே இல்லை, யூரியாவை 1822 இல் முதன் முதலில் ஜெர்மனியை சேர்ந்த பிரட்ரிக் வோலர் தான் செயற்கையாக தயாரித்தார்.அப்படி இருக்கும் போது 1774 இல் செத்துப்போன கிளைவ் என்ன செய்து இரசாய உரம் கொண்டு வந்தார்?

பாரம்பரிய இந்திய நெல்,கோதுமை வகைகள் இராசய உரத்திற்கு பயன்படாது என "high yielding ,fertilizer responsive" கலப்பின நெல் கோதுமை வகைகளை நார்மன் போர்லாக் உதவியுடன் ,எம்.எஸ்,சுவாமி நாதன் , தான் கொண்டு வந்தார் , சி.சுப்ரமணியம் எல்லா உதவிகளும் செய்தார்.நேருவின் ஆசையும் நிறைவேறியது.

அப்படி வந்த நெல்வகைகள் தான் ஐ.ஆர்-8,ஐ.ஆர்-36 போன்றவை,நாமாலும் ADT-11 co-1 இப்படி பல புதிய கலப்பின வகைகள் கொண்டு வந்தோம்.

உணவுத்தேவைக்காக நாம் செய்த பிழைகள் அவை. எம்.எஸ்.சுவாமி நாதன் ஒரு காலத்தில் தான் செய்த சாதனை பசுமை புரட்சி என்று சொன்னவர் பின்னாளில் அதற்காக வருத்தமும் தெரிவித்தார்.

வவ்வால் said...

//இங்கு மதம் முக்கியம். அதற்குள் பிரியும் ஜாதிக்கூறுகள் அதைவிட முக்கியம். பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிபவராக இருந்தாலும் பள்ளர் எவரும் பறையரை திருமணம் செய்ய விரும்பதில்லை. செட்டியார் எவரும் நாடாரை நினைத்துப் பார்ப்பதில்லை. இதைவிட முக்கியம் அவரவரின் கடவுள் நம்பிக்கை.//

ஏன் ஒரு அய்யங்கார் அமெரிக்காவில் இருந்தாலும் அய்யர் பெண்ணைக்கட்டிக்கொள்வாரானு கேட்க தோன்றாதா? இல்லை ரோமன் கத்தோலிக் கிருத்துவர் பிராட்டஸ்டண்ட் கிருத்துவரை எளிதில் கல்யாணம் கட்டிப்பாரானு கேட்டு இருக்கலாமே?

என்னமோ போங்க உதாரணம் காட்டனும்னா கூட எளியோர் தான் சிக்குறாங்க?

-----------------------

//ஆனால் அன்று தங்கள் உழைப்பின் மூலம் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தார்கள். காந்தி அழைத்தவுடன் பாரபட்சம் இல்லாது சத்தியாகிரக போராட்டத்தில் பங்கெடுத்து சுதந்திர பொறியை பற்ற வைத்தார்கள்.//

அப்படினா காந்திக்கு முன்னர் இந்தியாவில் யாரும் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபடவில்லையா?

ஏற்கனவே உருவாக்கி, ஒரு நிலைக்கு சுந்திர உணர்வு மக்களிடம் தூண்டப்பட்டிருந்தது, காந்தி காலத்தில் உச்சம் ஆனது.

காந்தி இந்தியாவுக்கு திரும்பிய காலத்தில் அவரை கண்டுக்கொள்ள ஆள் இல்லை,பின்னர் அவர் பல பூர்ஷ்வா, முதலாளித்துவ காங்கிரஸ்காரர்கள் ஆதரவு பெற்ற பின்னரே பெரும் தலைவராக உயர்த்தப்பட்டார்.

அவர் உழைப்பின் மூலம் வாழ்ந்த மக்களின் மீது கொண்டிருந்த அக்கரையை விட பெரு முதாலாளிகள், ஜமீந்தார்கள் மீதான பிடிப்பே அதிகம்.

சென்னையில் பின்னி மில் தொழிலாளர் போராட்டத்தை வெள்ளையருக்கு சாதகமாக முடித்துக்கொடுத்தவர் காந்தி.இந்தியாவில் முதன் முறையாக தொழிலாளர் போராட்டத்தில் துப்பாக்கி ,சூடு நால்வர் சாவு என உயிர் இழப்பு ஏற்பட்டது சென்னையில் தான், இறந்தது தமிழர்கள்.

காந்தி பிர்லா குடும்பத்திற்கும், நேரு , டாடா குடும்பத்திற்கும் இந்தியாவை பங்குப்போட்டார்கள் என்பதே வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகள்.

ஜாம்ஜெட்பூரில் டாடா இரும்பு தாது எடுக்க எவ்வளவு ராயல்டி கொடுக்கிறார்கள் என கண்டுப்பிடியுங்கள், உண்மைத்தெரியும்.

--------------------

இந்தப்பதிவுகளையும் பார்க்கவும்.
1) விவசாயி படும் பாடு-1

2)விவசாயி படும் பாடு-2

திண்டுக்கல் தனபாலன் said...

அறியாத பல தகவல்கள். நல்லா அலசல். விதை நெல் சேகரிக்கும் முறையை மாற்றியதால் ஏற்படும் தீமையை, இப்போது நடக்கும் உண்மையை சொல்லி உள்ளீர்கள். நன்றி நண்பரே!

MANI said...

///இராபர்ட் கிளைவ் காலத்தில் இரசாயன் உரமே இல்லை, யூரியாவை 1822 இல் முதன் முதலில் ஜெர்மனியை சேர்ந்த பிரட்ரிக் வோலர் தான் செயற்கையாக தயாரித்தார்.அப்படி இருக்கும் போது 1774 இல் செத்துப்போன கிளைவ் என்ன செய்து இரசாய உரம் கொண்டு வந்தார்?////

நண்பரே! ஜோதிஜியின் கட்டுரையில் ராபர்ட் கிளைவ் ரசாயன உரத்திற்காக பசுவதையை தொடங்கினார் என்று கூறவில்லை.

இந்தியாவின் உயிர்நாடியான விவசாயம் பசுக்கள் மற்றும் எருதுகளின் வாயிலாக சிறப்பாக இருந்ததை அறிந்து அவற்றை சீர்குலைக்கவே அவர் பசுவதையை அமல்படுத்தினார். அவரது நோக்கம் விவசாயத்தை சீர்குலைத்து அதன்வாயிலாக நாம் அனைத்திற்கும் ஆங்கிலேயர்களை சார்ந்திருக்க வேண்டும் என்பதே.

///சென்னையில் பின்னி மில் தொழிலாளர் போராட்டத்தை வெள்ளையருக்கு சாதகமாக முடித்துக்கொடுத்தவர் காந்தி.////

காந்தி நாட்டுவிடுதலைக்காக பாடுபடவில்லையா? இதைதான் யானை போறது தெரியாது எறும்பு போறது தெரியுதா? என்று பழமொழியாக சொல்றாங்களோ?

ஒரு மனிதன் மறைவிற்கு பின்பு அவன் வாழ்வில் செய்த மிகப்பெரிய நன்மைகளை நினைத்து நன்றியுடன் போற்ற வேண்டுமே அல்லாமல் அவர் செய்த சிறிய தவறுகளை பட்டியலிட்டு தங்கள் வழக்கறிஞர் திறமையை பறைசாற்றிக் கொள்ளக்கூடாது.

Paleo God said...

வவ்வால் கலக்கறாரே? :))

ஜோ,

கோ.நம்மாழ்வாரின் வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் என்ற புத்தகம் - நமது நெல்லைக் காப்போம் இயக்கம் வெளியீடு புத்தகம் இருக்கிறது. அதைப் படித்தால் உங்களின் இந்தப் இடுகையை ஒட்டிய நிறைய வரலாற்று வெளிச்சம் கிடைக்கும்.

ஜோதிஜி said...

ஷங்கர்

நமக்கு ஒரு தனிப்பட்ட ராசி உண்டு. ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு பெரிய மனிதர்களும் நமது இடுகைக்கு(இல்லத்துக்கு) வந்து தம்பி நீ இன்னும் ரொம்ப படிக்கனும்ங்ற மாதிரி குத்திவிட்டு போவங்க. அந்த வரிசையில் மிக சமீபத்தில் வந்தவர் இந்த வவ்வால்.

இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் வேர்ட்ப்ரஸ் ல் எழுதிக் கொண்டிருந்த போது இரவுப்பறவை ( என்னவொரு பெயர் பொருத்தம்) வந்தார். அப்புறம் தமிழ் உதயம். தொடர்ச்சியாக கல்வெட்டு.

இடையே பெருசு என்பவர் ( இவர் திருப்பூரில் வாழ்ந்து இப்போது அமெரிக்காவில் இருக்கின்றார் என்று நினைக்கின்றேன்) இப்ப கடைசியாக இந்த வவ்வால்.

இவர்கள் அணைவருக்கும் ஒரே ஒற்றுமை என்னவென்றால் பய புள்ளைங்க அத்தனை பேரும் படு பயங்கர உசார் பார்ட்டிங்க. இவங்கள பத்தி எதுவும் நாம தனிப்பட்ட முறையில் தெரிஞ்சுக்க முடியாது. தங்கள் முகமூடியை பலமாக கருதிக் கொள்பவர்கள். ஆனால் ஒவ்வொருவரும் கருத்து கந்தசாமிங்க. அடி ஒவ்வொன்னும் இடி மாதிரி விழும்.

ஆனா நம்ம நிசாரை கழட்டாமல் விடமாட்டாங்க போலிருக்கு.

ஆனால் எத்தனையோ மத்த பயபுள்ளைங்க வந்தாலும், இதன் மூலம் ஒன்னுமன்னா பழகியிருந்தாலும் விமர்சனம் எழுதும் போது சற்று மென்மையான போக்கை கடைபிடிப்பது போல இந்த பயபுள்ளைங்க செய்வது இல்லை.

இதுல நம்ம உமர் (கும்மி) மட்டும் விதிவிலக்கு. பயபுள்ளை பழகி தொலைஞ்சுடுச்சு.

இதில் ஏன் இன்னும் பல பேரை குறிப்பிடப்படவில்லையென்றால் மத்த அத்தனை பேர்களும் தங்களை வெளிப்படுத்திக் கொண்டவர்கள். பழகிக் கொண்டும் இருப்பவர்கள்.

ஆனால் இந்த வவ்வால் கருத்துக்களை உங்களை போலவே நானும் சற்று பயபக்தியோடு ரசிகனாக வாசகனாக படித்துக் கொண்டு இருக்கேன்.

காரணம் எத்தனை வருடங்கள் நாம் படித்து வந்த போதிலும் எழுதுவதற்கென்று அதன் ஆழ அகலத்தை சற்று புரிந்து படித்து மண்டையில் ஏற்றிக் கொண்டு வெளிப்படுத்த கடந்த மூன்று வருடங்களாகத்தானே முயற்சித்துக் கொண்டு இருக்கேன்.

அதனால் வவ்வால் போன்ற ஆட்களின் அறிவுரை, நக்கல், நையாண்டி மேளத்தை உங்களைப் போல நானும் ரசிக்கின்றேன்.

அப்புறம் நம்மாழ்வார் எழுதிய தாய் மண்ணே வணக்கம் சென்ற வாரம் தான் நண்பர் இராஜராஜன் கொடுத்தார். முதல் அத்தியாயம் முடிப்பதற்குள் முழி பிதுங்கி விட்டது. அவர் கூற்றுப்படி ஏறக்குறைய தினந்தோறும் நாம் சயனைடு குப்பிகளைத்தான் உணவாக தின்று கொண்டு இருக்கின்றோம்.

மணி,,,,,,

வவ்வால் சொன்னதற்கு கோபப்பட வேண்டாம். அவருக்கு தனியாக நான் பதில் சொல்கின்றேன். அவர் சொல்வதில் சில (?) உண்மைகளும் உண்டு. மீண்டும் வருவேன்.

ஜோதிஜி said...

நல்ல கவர்ச்சிகரமாக எழுதி இருக்கிங்க :-)) ஆனால் ஏதோ ஒன்று குழப்புது கட்டுரையில்?(வை.கோ விற்கு உரை தயாரித்துக்கொடுக்கிறிங்களா ?)

இந்த பாராட்டை (???) இப்ப எடுத்துக்றேன். மிக்க நன்றி. அப்ப எனக்கு அரசியலில் எதிர்காலம் இருக்குன்னு சொல்லவர்றீங்க. ரொம்ப நன்றி தல.

Unknown said...

@வவ்வால் ரோமன் கத்தோலிக் கிருத்துவர் பிராட்டஸ்டண்ட் கிருத்துவரை எளிதில் கல்யாணம் கட்டிப்பாரானு கேட்டு இருக்கலாமே?

அப்படிபட்ட திருமணம் நடக்கிறது.. இல்லைனு நீங்க சொன்னா நடக்கிறதுன்னு நிரூபிக்க நான் தயார்.

இது மட்டும் இல்லை இந்து கிறிஸ்தவர். வேறு வேறு சாதி திருமணங்கள் கூட நிகழ்காலம் தான்.

ஜோதிஜி....
இப்பெல்லாம் இது மாதிரி விஷயங்களை படிக்காமல் இருப்பது தான் சரியோன்னு தோணுது...
ஏன்னா... படிச்சு தெரிஞ்சு நாம் நம் குடும்பம் , வாழ்கை சூழலைத்தாண்டி ஒன்றும் செய்ய முடியாது.

விவசாய நிலம் வைத்து இருந்தபோதும்.. இப்போது நுகர்வோராக பொருள் வாங்குபோது இருக்கும் வித்தியாசத்தை புரிந்துகொள்ள முடிகிறது..

ஆனால் நாம் என்ன செய்யமுடியும் ?

இதெல்லாம் படித்து குழம்பி, கோபபட்டு, யாராவது ஏதாவது சொன்னா நாம் பதில் சொல்ல போய்... அவர்களையும் குழப்பி..

ஒரு முறை ஒரு சினிமா விமர்சகர் எழுதி இருந்தார்." பத்திரிக்கையில் திரை விமர்சனம் எழுத ஆரம்பித்தது முதல் எந்த படத்துக்கு போனாலும் அதில் என்ன குறை? யார் எதை சரியாக செய்யவில்லை..? என்ன செய்து இருக்கலாம்னு விமர்சன பார்வையிலேயே படத்தை பார்க்கவேண்டி இருக்கிறது...

ஒரு சாதாரண ரசிகனாக அதுவும் திரை அரங்குக்குள் வந்தால் மொத்த உலகையும் மறந்து திரையோடு ஒன்றி .. சந்தோஷமா பார்க்கணும்னு நினைச்சாலும் முடியலை."

அதேபோல் ..நம்மால் ஒன்றும் செய்ய முடியாதபோது .இதெல்லாம் தெரிந்து என்ன ஆகபோகிறது...? என் மகனுடன் கூட்டல் கழித்தல் விளையாண்டாலே போதும் என தோன்றுகிறது

Unknown said...

ராபர்ட் கிளைவ் இந்தியாவுக்கு வெறும் கையுடன் வந்தான் போகும்போது 4 கப்பல் நிறைய தங்கம் வைரம் பொருட்கள்னு கொண்டு போனான் .. இது வரை நிறைய பேருக்கு தெரியும்....

தன் கடைசி காலத்தில் மன அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டது எத்தனை பேருக்கு தெரியும் ?

வவ்வால் said...

//காரணம் அப்போது இந்தியாவில் இருந்த விவசாயம் நம்முடைய கால்நடைகளின் சாணம், மூத்திரம் இவற்றை அடிப்படையாகக் கொண்டே ஒரு ஏக்கரின் மூலம் 54 குவிண்டால் அரிசியை உற்பத்தி செய்து கொண்டிருந்தது. 1910 வரைக்கும் இரவு பகலாக இந்த பசுவதைக் கூடம் இயங்கிக் கொண்டேயிருந்தது. இன்று வரைக்கும் நவீணமாக்கப்பட்டு இந்த தொழில் நடந்து கொண்டேதான் இருக்கிறது. இதன் பலன் இன்று கோடிக்கணக்கான பணத்தை இறக்குமதி ரசாயன உரத்திற்கு கொண்டு போய் கொட்டி மானிய விலையில் உழவர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.//

மணி சார்,

அது எப்படி சார், பதிவ படிக்காமல் கமெண்ட் போடுறிங்க , அது பரவாயில்லை, ஒருத்தர் கமெண்ட் போட்டா அதுக்கும் அப்படியேவா?

உங்களுக்காக அந்த பகுதிய காபி&பேஸ்ட் போட்டு இருக்கேன் பாருங்க, கிளைவ் மாடு வெட்டலை ஆரம்பித்து வைக்க இன்றும் மாடு வெட்டப்படுகிறது அதனால் ரசாயன உரம் போடும் நிலைக்கு வந்துவிட்டோம்னு என்பதாகவே இருக்கு.

உண்மை அதுவா? இல்லையே இன்று வரைக்கும் உலக அளவில் அதிக எண்ணிக்கையில் கால்நடைகளை கொண்ட நாடு இந்தியா சுமார் 28,170,000 கால்நடைகள் இந்தியாவில் இருக்கு.அப்போ எல்லா, சாணிய வச்சு விவசாயம் செய்றாங்களா? சொல்லுங்க. நேரு கொண்டு வந்த கொள்கை தான் இரசாயன் உர விவசாயத்துக்கு வழிப்போட்டது.
காவிக்கட்சிக்காரங்க சொல்றது போல மாடு வெட்டப்படுவது தான் எல்லாத்துக்கும் காரணம் என்பதாக சொன்னதால் தான் அதை சுட்டிக்காட்டி இருக்கேன்.
//காந்தி நாட்டுவிடுதலைக்காக பாடுபடவில்லையா? இதைதான் யானை போறது தெரியாது எறும்பு போறது தெரியுதா? என்று பழமொழியாக சொல்றாங்களோ?

உங்களுக்கு யானை எறும்பாகவும், எறும்பு யானையாகவும் தெரிகிறது காட்சிப்பிழையாகவும் இருக்கலாம், எனக்கும் அதுவே!

காந்தி பாடு படவில்லை என சொல்லவில்லை ,காந்திக்கு முன்னரும் பாடுபட்டதை சொல்லவில்லை என்பதை சொன்னேன். மேலும் காந்திக்கு முக்கியத்துவம் கிடைக்க காரணம் என்ன என்பதையும் சொன்னேன். அவ்வளவே.

//ஒரு மனிதன் மறைவிற்கு பின்பு அவன் வாழ்வில் செய்த மிகப்பெரிய நன்மைகளை நினைத்து நன்றியுடன் போற்ற வேண்டுமே அல்லாமல் அவர் செய்த சிறிய தவறுகளை பட்டியலிட்டு தங்கள் வழக்கறிஞர் திறமையை பறைசாற்றிக் கொள்ளக்கூடாது.//

நாம் தான் நன்றியுடன் இருக்கிறோம், வட இந்தியாவில் போனால் பாரதி, வ.ஊ.சி, காமராஜர் என்ற பெயரை எல்லாம் காண முடியாது , தமிழ்நாட்டில் சந்திர போஸ், காந்தி, நேரு, இந்திரா, ராஜிவ், பெயர் கூட பசங்களுக்கு வைக்கப்பட்டிருப்பதை காணலாம்.

அப்போ இதை எல்லாம் சொன்னா வழக்கறிஞர் பட்டம் கிடைக்குமா, அதை வச்சு கோர்ட்ல பொழப்பு ஓட்டலாம்னு சொல்றிங்க :-))
---------------------------------------

//வவ்வால் கலக்கறாரே? :))//

ஷங்கர் என்ன வச்சு காமெடி,கீமெடி செய்யலையே அவ்வ்வ்வ்!
---------------
ஜோதிஜி,

//ஆனால் இந்த வவ்வால் கருத்துக்களை உங்களை போலவே நானும் சற்று பயபக்தியோடு ரசிகனாக வாசகனாக படித்துக் கொண்டு இருக்கேன்.//

நமக்கு எல்லாம் வாசகனா ... உங்களுக்கு நகைச்சுவை உணர்வு ரொம்ப அதிகம் போல! :-))நான் என்ன கில்மா படத்துக்கு படம் போட்டு விமர்சனம் எழுதுறேன்னா வாசகராக:-))
-------------------------------
வினோத்,

//அப்படிபட்ட திருமணம் நடக்கிறது.. இல்லைனு நீங்க சொன்னா நடக்கிறதுன்னு நிரூபிக்க நான் தயார்.//
ஹி..ஹி பதிவ படிக்காம பின்னூட்டம் போடலாம், ஆனால் ஒரு பின்னூட்டத்திற்கு பதில் சொல்லும் போதும் அப்படியே செய்தால் எப்படி?

பதிவில் பள்ளர்-,பறையர் , நாடார்-செட்டியார் ஆகியோர் இடையே அவர்கள்" பன்னாட்டு நிறுவனப்பணியில் இருந்தாலும்" என அழுத்தம் கொடுத்து சொன்னதுக்கும் இதே கேள்வியை நீங்க கேட்டிருந்தால் உங்க நேர்மையை பாராட்டி இருப்பேன்!

பன்னாட்டு நிறுவனத்தில் பெரும்பாலும் மேற்சொன்னவங்களா பணியில் இருக்காங்க? அப்போ அங்கே பெரும்பான்மையா வேலை செய்றவங்கள உதாரணம் காட்ட முடியாதா?

//தன் கடைசி காலத்தில் மன அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டது எத்தனை பேருக்கு தெரியும்//

நல்ல வேளை உங்க ஒருத்தருக்காவது தெரிஞ்சு இருக்கே , இல்லைனா எங்களுக்கு தெரியாம போய் இருக்கும். :-))

இந்தியாவில் அவர் ஊழல் செய்ததாகவும், தேவை இல்லாமல் போர் செய்ததது, சில இந்திய சமஸ்தான உள்விவகாரங்களி; தலையிட்டது என பல குற்ற சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்கு நடந்து, அதற்கு செலவு செய்தே கடனாளி ஆகி பின்னர் தற்கொலை செய்துக்கொண்டாராம். அவர் இந்தியா வரும் போது கப்பலிலேயே தற்கொலை செய்துக்கொள்ள முயன்று தோல்வி அடைந்தார்னும் கேள்விப்பட்டேன்.

ராஜ நடராஜன் said...

உண்மைத் தமிழன் பாரம்பரியத்துல பதிவும்,நான் விட்டேனா பார்ன்னு பின்னூட்டங்களும் வந்தா நான் எப்ப படிச்சு முடிச்சு பின்னூட்டம் சொல்றது! தொடர முடியலைன்னாலும் நீண்ட பதிவுகளின் ஆதரவாளன் நான்.

நான் சொல்ல வந்த விசயமே வேற.விவசாயப் பதிவுன்னா இதுக்கு தோதான்ன ஆளு நம்ம வவ்வால் அவர்கள்தான்.கூப்பிடறதுக்கு முன்னாடியே பந்தி வரிசைக்கு முந்திகிட்டார்.

வவ்வால் எதிர்க்கேள்விகள் போட்டாலும் கூட உங்களுக்கு ஆதரவாக நான் நினைப்பது என்னவென்றால் அச்சடிச்ச புத்தக முறையில் ராபர்ட் கிளைவை மாணவர்கள் படிக்காமல் இணையத்தில் தெரிந்ததை சொல் என ராபர்ட் கிளைவ் பற்றி பள்ளிக்கூடங்களில் பாடம் நடத்தினால் அறிந்தோ,புரிந்தோ அல்லது வெட்டி ஒட்டியோ கூட பரிட்சை எழுதும் தகுதி பெற்றது இந்த பதிவு:)

மேலும் ராபர்ட்டுக்கு தெரிஞ்சது இல்ல யாராவது சண்டைக்கு வந்துடப் போறாங்க...கிளைவுக்கு தெரிஞ்சது ஜார்ஜ் கோட்டை,கப்பல்,பொருள் கடத்தல்,சென்னை ரயில் நிலையம்,மூர் மார்க்கெட் போரடிச்சா கூவத்துல சவாரி,நிர்வாகம்,திருச்சி, மலைக்கோட்டை,நிஜாம்,ஆர்காட் நவாப்,பாண்டிச்சேரி பிரெஞ்சுக்காரங்களாத்தான் இருந்திருக்கும்.மீறிப்போனா லண்டன்ல குளுரு ரொம்ப அதிகமா இருக்குதுன்னு ஊட்டி,வால்பாறைக்கு தேயிலைத் தோட்டம் போடறதுக்கு அனுமதி கொடுத்திருக்கலாம்.தேயிலைக்கு கூட விவசாயத்துக்கு சாணி,மாட்டு மூத்திரம் மாதிரி காஞ்சு போன தேயிலையே மலைப்பிரதேச உரமாக இருந்துள்ளது.ரசாயன உர புத்தியெல்லாம் சுதந்திர இந்தியாவின் மாற்றங்களே என்ற வவ்வாலின் பாதிப்பு என்னிடமும் இருக்குது.

வவ்வால் said...

சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதிய விவசாயம் சார்ந்த சில பழைய பதிவுகள்.

மணி, ஜோதிஜி நேரம் இருந்தால் பார்க்கவும்.

1)பஞ்ச கவ்யம்

2)காணாமல் போகும் நாட்டுக்காளைகள்-1
3)காணாமல் போகும் நாட்டுக்காளைகள்-2

4)நடவு எந்திரம்

5) ஒருங்கிணைந்த விவசாயம்

ராஜ நடராஜன் said...

//வவ்வால் said... நாம் தான் நன்றியுடன் இருக்கிறோம், வட இந்தியாவில் போனால் பாரதி, வ.ஊ.சி, காமராஜர் என்ற பெயரை எல்லாம் காண முடியாது , தமிழ்நாட்டில் சந்திர போஸ், காந்தி, நேரு, இந்திரா, ராஜிவ், பெயர் கூட பசங்களுக்கு வைக்கப்பட்டிருப்பதை காணலாம்.//

நோட் த பாய்ண்ட் யுவர் ஹானர்!

Unknown said...

@வவ்வால் பதிவில்
//...பள்ளர்-,பறையர் , நாடார்-செட்டியார் ஆகியோர் இடையே அவர்கள்" பன்னாட்டு நிறுவனப்பணியில் இருந்தாலும்" என அழுத்தம் கொடுத்து சொன்னதுக்கும் இதே கேள்வியை நீங்க கேட்டிருந்தால் உங்க நேர்மையை பாராட்டி இருப்பேன்!...//

அதாகபட்டது பதிவை நான் படிச்சு புரிஞ்ச அளவில் பன்னாட்டு நிறுவன பணியில்.. அப்படின்னா .. ஏதேனும் ஒரு பொறியியல் பட்டம், நுனி நாக்கு ஆங்கிலத்துடன் .. குளிர் சாதன வசதி உள்ள அலுவலகத்தில் கணிணி திரைகளி பணிபுரிபவர்கள்..மொத்ததில்.. சாதாரண மக்களை விட அதிக பொருளாதார, கல்வி, மற்றும் நாகரிகம் அடைந்தவர்கள்.

அப்படி பட்டவர்களே ..சாதிய மனபான்மையை விடாமல் இருக்காங்கனு சொல்ல வர்றார்...
நான் சொல்ல வந்தது அவருக்கும் சேர்த்து தான்.

இதில் அவர் கவனிக்காமல் விட்ட ஒரு விஷயம் உண்டு. அது என்னவென்றால் ...
ஆனால் வேறு சாதியை சேர்ந்த ஆண்களை அரேஞ்சுடூ மேரஜ் செய்யும் பிராமின் குடும்ப பெண்கள் உள்ளனர். அதையும் நான் அறிவேன்.

இதற்கு முக்கிய காரணம் பொருளாதாரம், தன் சாதியை /படிப்பை /அந்தஸ்தை எல்லாம் பார்த்து தான் மணமுடிப்பேன் என்று எழைகள் சொல்ல முடியாது. Begger have no choice.

எனவே நடைமுறையில் பொருளாதரத்தில் பின் தங்கிய மக்களிடத்தில் சாதிய மத உணர்வுகளை காட்டிலும் தன் மகன் / மகளின் திருமண வாழ்கை முக்கியமானதாக காணப்படுகின்றது.

ஆனால் பன்னாடு நிறுவன பணி, அது தரும் பொருளாதர சுதந்திரம் எனவே, ஆண் ஆனாலும் பெண் ஆனாலும் தன் எல்லா விழுமியங்களும் நிறைவேறவேண்டும் என்று எதிர்பார்க்க வைக்கிறது.

சோதிடத்தில் ஒரு விஷயம் உண்டு. 2 ம் வீடு, குடும்பம் 7ம் வீடு மண வாழ்க்கை துணையை குறிக்கும் 10 தொழில், 11 வருமானம்..

இதில் எதாவது 1/2 விஷயங்களே எல்லார் சாதகத்திலும் நல்ல பலத்துடன் இருக்கும், பொதுவாக குடும்பம் நன்றாக இருந்தால் தொழில் நன்றாக இராது ... அனைத்தும் நன்றாக இருக்கும் சிலருக்கு நீண்ட ஆயுள் இருக்காது .. இது பிரம்மன்( பிராமின் அல்ல) விளையாட்டு...

ராஜ நடராஜன் said...

ஜோதிஜி!ராபர்ட் கிளைவ்க்கு கிடைத்த பட்டம் பேரன்?(Baron)என்பதே.பிலாசியோ அல்லது பிளாசியோ கல்கத்தா நகரின் யுத்தத்தைக் குறிக்கும் விதமாக பிளாசி யுத்தம் என வரலாற்றில் அழைக்கப்படுகிறது.எனவே Baron Robert Clive of plassey என்பதே சரி.

வரலாறு முக்கியம் வாத்யாரே:)

ஜோதிஜி said...

//வவ்வால் said... நாம் தான் நன்றியுடன் இருக்கிறோம், வட இந்தியாவில் போனால் பாரதி, வ.ஊ.சி, காமராஜர் என்ற பெயரை எல்லாம் காண முடியாது , தமிழ்நாட்டில் சந்திர போஸ், காந்தி, நேரு, இந்திரா, ராஜிவ், பெயர் கூட பசங்களுக்கு வைக்கப்பட்டிருப்பதை காணலாம்.//

நானும் கவனித்துள்ளேன் நடா. பழைய சுதந்திர வரலாற்று பொக்கிஷங்களை படிக்கும் போது இது போல ஏராளமான விசயங்கள உண்டு. இன்று வரைக்கும் தென்னிந்தியா என்றாலே எல்லாவற்றிலும் வினோத மனப்பான்மை தான். இதைப் பற்றி தனியாக ஒரு நாள் கச்சேரி வைத்துக் கொள்ளலாம்.

வவ்வால் உங்கள் பதிவைகளை இது மட்டுமல்ல. ஜனவரி முழுக்க எழுத்து வேலை இருக்காது. படிப்பு மட்டும் தான். உள்ளே வந்து குடியிருந்து விடலாம்.


இந்தியாவில் அவர் ஊழல் செய்ததாகவும், தேவை இல்லாமல் போர் செய்ததது, சில இந்திய சமஸ்தான உள்விவகாரங்களி; தலையிட்டது என பல குற்ற சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்கு நடந்து, அதற்கு செலவு செய்தே கடனாளி ஆகி பின்னர் தற்கொலை செய்துக்கொண்டாராம். அவர் இந்தியா வரும் போது கப்பலிலேயே தற்கொலை செய்துக்கொள்ள முயன்று தோல்வி அடைந்தார்னும் கேள்விப்பட்டேன்.

நடா நீங்க சொன்ன மாதிரி ஒன்றை தோண்ட ஒவ்வொன்றாக வந்து கொண்டேயிருக்கு பாத்தீயளா?
பேசாம இராபட் கிளைவ் நல்லவரா? கெட்டவரா என்று சாலமன் பாப்புவை வைத்து ஒரு பாட்டி மன்றம் நடத்தி விடலாம் போலிருக்கே?

ஜோதிஜி said...

சுந்தர்

மணி சங்கர அய்யரைப்பற்றி நிறைய எழுதலாம். காங்கிரஸில் இருந்த உருப்படியான நபர்களில் இவரும் ஒருவர். இவர் பெட்ரோலிய துறை அமைச்சராக இருந்த போது அவர் முயற்சித்த வளைகுடா நாடுகளில் இருந்த குழாய் வழியாக இந்தியாவிற்கு பெட்ரோல் கொண்டு எடுத்த தீவிர முயற்சிகளே இவருக்கு எமனாக போய் பதவி இழக்க வைத்தது.

இதை யார் செய்து இருப்பார்கள் என்று உங்களுக்கு சொல்ல தேவையில்லை தானே?

வவ்வால் said...

ராஜ்,

எங்க சாமி கொஞ்ச நாளா காணோம், ஏதாவது அரபியன் நைட்ஸ் 1001 இரவுகள் அட்வெஞ்சருக்கு போயிட்டிங்களோனு பார்த்தேன் :-))

வாங்க நம்ம கடையோ , அடுத்தவர் கடையோ நமக்கு ஆதரவா ஒரு குரல் கேட்டா ஒரு குதுகலம் தேன்!

//நான் சொல்ல வந்த விசயமே வேற.விவசாயப் பதிவுன்னா இதுக்கு தோதான்ன ஆளு நம்ம வவ்வால் அவர்கள்தான்.கூப்பிடறதுக்கு முன்னாடியே பந்தி வரிசைக்கு முந்திகிட்டார்.//

ஹி ஹி .. அதிதி எனப்படும் அழையா விருந்தாளி கேள்விப்பட்டிருக்கீரா அது நாந்தேன்! கூப்பீட்டாலும் கூப்பிடா விட்டாலும் வாலண்டியர் வவ்வாலாக போய்டுவோம் இல்லை.:-))

பத்திரிக்கை இல்லாவிட்டாலும் பந்திய விட முடியாது :-)) ஜோதிஜி என்ன கழுத்தப்பிடித்தா தள்ளிடப்போறார் என்ற நம்பிக்கை தான்!

இராபர்ட் கிளைவ் பற்றி நீங்க சொல்றத பார்த்ததும் "பொண்ணால நடந்தது இராமாயனம், மண்ணால நடந்தது பாரதம்னு" ரெண்டு வரில இரண்டு பெரும் காவியங்களை சொன்ன புலவர் கதை தான் நியாபகம் வருது :-))

சுருக்கமாக புட்டு வைக்குறிங்க!

//.ரசாயன உர புத்தியெல்லாம் சுதந்திர இந்தியாவின் மாற்றங்களே என்ற வவ்வாலின் பாதிப்பு என்னிடமும் இருக்குது.//

ஜோதிஜி கவனிக்கவும் :-))

-------------------

வினோத் குமார்,

என்ன தான் சொல்ல வறிங்க :-))

அது சரி ,இது தப்பு என்று சொல்ல வறிங்களா , சரி நீங்க நாலும் தெரிந்தவர் அப்போ சரியா தான் இருக்கும் :-))

-----------------
ஜோதிஜி,

//வவ்வால் உங்கள் பதிவைகளை இது மட்டுமல்ல. ஜனவரி முழுக்க எழுத்து வேலை இருக்காது. படிப்பு மட்டும் தான். உள்ளே வந்து குடியிருந்து விடலாம்.//

வாங்க நம்ம வீட்டுக்கு கதவும் இல்லை காவலும் இல்லை தாரளமாக எப்பவும் வரலாம்! :-))

Unknown said...

வவ்வால் அவர்களே...
//...என்ன தான் சொல்ல வறிங்க :-))

அது சரி ,இது தப்பு என்று சொல்ல வறிங்களா , சரி நீங்க நாலும் தெரிந்தவர் அப்போ சரியா தான் இருக்கும் :-))..//
நான் சொல்லவர்ரது இன்னனா...
பூனை உடல் முழுவதும் சூடு போட்டலும் புலி ஆகாது. பன்னாட்டு நிறுவனம் பதவி பணம் , படிப்பு இருந்தாலும் இந்தியர் அதிலும் தமிழகத்தை சேர்ந்தவர்( கவனிக்க தமிழன்னு சொல்லலை) மனதில் சாதி வெறி ஒழியாது.

சாதி ஒழிய ஒரே வழி குறைந்து ஒரு தலைமுறை சோத்துக்கு லாட்டரி அடிக்கனும். காசில்லைனா சாதி அந்தஸ்து பார்க்க முடியாது..

இல்லைனா இலங்கை மாதிரி மொத்த தமிழகமும் /இந்தியா ராணுவம், அரசு, மக்களில் கொஞ்சம் எல்லாம் அழியும் அளவுக்கு முழு யுத்தம் வரணும். யார் எங்க இருக்காங்க யார் பிழைப்பாங்கனு , தெரியாத் போதும் சாதி பார்க்க முடியாது.

ஒரு தலைமுறை சாதி கடந்திட்டா அப்புரம் சாதிய பேசுறதில் அர்த்தம் இல்லைனு ஆய்டும்.

நான் பார்க்கும் அள்வில் 2வது சாத்தியகூறு தெரிகிறது. சீனாவின் வலைவிரிப்பும் அமரிக்க வீழ்ச்சியும் பார்த்தா 10 வருசத்தில், இந்திய மண்ணில் குண்டு சத்ததை கேட்கலாம்.

அடுத்து வரும் தலைமுறை முழு சுதந்திர யுத்ததை சாதியாக இல்லாமல் இந்தியனாக நடத்தும். அதன்பிறகு தான் நாட்டுக்கு உண்மையான அரசு, முன்னேறம் எல்லாம் சாத்தியம்.

MANI said...

வணக்கம் வவ்வால் சார்,

///மணி சார்,
அது எப்படி சார், பதிவ படிக்காமல் கமெண்ட் போடுறிங்க , அது பரவாயில்லை, ஒருத்தர் கமெண்ட் போட்டா அதுக்கும் அப்படியேவா?///

நான் எந்த பதிவையும் படிக்காமல் கமெண்ட் போடுவதில்லை. நன்றாக படித்து அவர் சொல்வதையும், சொல்ல வருவதையும் புரிந்து கொண்டு உண்மையிலேயே நல்ல நோக்கத்துடன், விஷயத்துடன் கஷ்டப்பட்டு பதிவு எழுதியிருந்தால் மட்டுமே எனது கருத்துரையை எழுதுவேன். அவ்வாறே கமெண்டையும் நன்றாக புரிந்து படித்துவிட்டு தான் பதிலளிப்பேன்.

ஜோதிஜி எழுதிய பதிவில் நீங்கள் கீழே குறிப்பிட்ட படி எங்கேயும் எழுதவில்லை.

///அப்புறம் இரசாயன உர விவசாயம் பற்றி,
இராசயன உரம் , புதிய நெல் வகைகள் , பூச்சி மருந்துக்கெல்லாம் காரணம் இராபர்ட் கிளைவ் தான்னு சொல்லிட்டு எளிதாக உங்க ஆதர்சம் நேருவை காப்பாத்திட்டிங்களே? :-))////

இதற்கெல்லாம் காரணம் ராபர்ட் கிளைவ் என்று பதிவில் எங்கும் ஜோதிஜி குறிப்பிட்டு எழுதவில்லை.

ஜோதிஜி எழுதியதை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.

///1910 வரைக்கும் இரவு பகலாக இந்த பசுவதைக் கூடம் இயங்கிக் கொண்டேயிருந்தது. இன்று வரைக்கும் நவீணமாக்கப்பட்டு இந்த தொழில் நடந்து கொண்டேதான் இருக்கிறது. இதன் பலன் இன்று கோடிக்கணக்கான பணத்தை இறக்குமதி ரசாயன உரத்திற்கு கொண்டு போய் கொட்டி மானிய விலையில் உழவர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.///

இந்த அளவிற்கு தான் நீங்கள் பதிவை படிப்பதும், புரிந்து கொள்ளும் திறனும் இருக்கிறது.

வவ்வால் சார், உங்களுக்கு ஒரு விஷயம் தெரிந்திருக்கிறது என்பதற்காக அடுத்தவர்களுக்கு அது தெரியாது என்றாகிவிடாது. உங்களுக்கு தெரிந்திருந்தால் கூடுதல் தகவலாக அதையும் கருத்துரையில் கொடுக்கலாம்.

அதை விடுத்து மற்றவர் எழுத்தில் குற்றம் காண்பதும், தவறாக புரிந்து கொண்டு விமர்சிப்பதும் நமது அறிவு குறைபாட்டை நாமே வெளிப்படுத்துவது போல் ஆகிவிடாதா?

ஒரு விஷயத்தைப் பற்றி நன்றாக தெரிந்தவர்கள் அதிகம் பேச மாட்டார்கள். அதைப்பற்றி தெரியாதவர்களுக்கும் ஒன்றும் பேசத்தெரியாது. ஆனால் இந்த இரண்டு வகையிலும் சேராமல் இருப்பது தான் நம்மில் பலரிடமும் உள்ள குறைபாடு.

நேரம் இருக்கும் போது உங்கள் பதிவுகளையும் படித்து புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.

வவ்வால் said...

மணி சார் ,

// நன்றாக படித்து அவர் சொல்வதையும், சொல்ல வருவதையும் புரிந்து கொண்டு உண்மையிலேயே நல்ல நோக்கத்துடன், விஷயத்துடன் கஷ்டப்பட்டு பதிவு எழுதியிருந்தால் மட்டுமே எனது கருத்துரையை எழுதுவேன். அவ்வாறே கமெண்டையும் நன்றாக புரிந்து படித்துவிட்டு தான் பதிலளிப்பேன்.//

நீங்க ரொம்ப நல்லா புரிந்துக்கொள்வீர்கள் என்பது உங்கள் பின்னூட்டங்களைப்பார்த்தாலே விளங்குது :-))

நான் உங்களுக்கு சுட்டிய ஒரு விஷயம்,

"இல்லையே இன்று வரைக்கும் உலக அளவில் அதிக எண்ணிக்கையில் கால்நடைகளை கொண்ட நாடு இந்தியா சுமார் 28,170,000 கால்நடைகள் இந்தியாவில் இருக்கு.அப்போ எல்லா, சாணிய வச்சு விவசாயம் செய்றாங்களா? சொல்லுங்க."
அதனைக்கவனிக்கவே இல்லை!

''//இந்த அளவிற்கு தான் நீங்கள் பதிவை படிப்பதும், புரிந்து கொள்ளும் திறனும் இருக்கிறது.//''

//அதை விடுத்து மற்றவர் எழுத்தில் குற்றம் காண்பதும், தவறாக புரிந்து கொண்டு விமர்சிப்பதும் நமது அறிவு குறைபாட்டை நாமே வெளிப்படுத்துவது போல் ஆகிவிடாதா?//

இரசாயன உர விவசாயத்திற்கு காரணம் மாடுகள் வெட்டப்படுவது என்று சொல்வதே உண்மையை திரிப்பது ஆகும், அதனை சொல்வது அறிவுக்குறைப்பாடு என்றால் , எனக்கே அறிவே இல்லை என்று சொன்னாலும் தொடரவே செய்வேன்.

//இதற்கெல்லாம் காரணம் ராபர்ட் கிளைவ் என்று பதிவில் எங்கும் ஜோதிஜி குறிப்பிட்டு எழுதவில்லை.//

அய்யா உங்க அளவுக்கு எனக்கு தமிழ் தெரியாமல் போய்விட்டதே என வருத்தமாக இருக்கு :-))

உங்களுடைய தமிழ் ஆசான் மகா பண்டிதராக இருந்திருப்பார் போல அல்லது நீங்க அவரையும் விஞ்சியவராக இருக்கலாம். என்ன செய்வது இராபர்ட் கிளை மாடு வெட்ட ஆரம்பித்து இன்றும் அது தொடர்வதனால் தான் இரசாயன உர விவசாயம் நடக்குதுனு சொல்வதை எனக்கு அப்படி தான் எடுத்துக்கொள்ள தோன்றுகிறது.

நடுவில் வந்த நேருவோ, சி.சுப்ரமணியமோ, எம்ஸ் சுவாமி நாதனோ, அல்லது நார்மன் போர்லாக்கோ என்ன பாவம் செய்தாங்க அவங்களை நான் குற்றம் சொல்லிட்டேனே, இனிமே அந்த பாவத்தை நான் எங்கே போய் கழுவுவேன் :-))

எல்லாத்துக்கும் காரணம் மாடுகள் கறிக்காக வெட்டப்படுவதே :-)) இந்தியாவில் எத்தனைக்கோடி மாடுகள் இருந்தால் என்ன , மாடுகள் வெட்டப்படும் வரையில் இரசாயன உர விவசாயம் நடைப்பெற்றே தீரும் ! :-))

இப்போ சரியா புரிஞ்சுக்கிட்டேன் தானே மணி சார் :-))

//ஒரு விஷயத்தைப் பற்றி நன்றாக தெரிந்தவர்கள் அதிகம் பேச மாட்டார்கள். அதைப்பற்றி தெரியாதவர்களுக்கும் ஒன்றும் பேசத்தெரியாது. ஆனால் இந்த இரண்டு வகையிலும் சேராமல் இருப்பது தான் நம்மில் பலரிடமும் உள்ள குறைபாடு.//
ஏன் நம்மில் என பண்மையாக சொல்லிக்கிட்டு என்னோட குறைபாடு அதான் சொல்லுங்க.

அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லாம , உண்மைகளை மறைத்து சுவையான எழுத்து நடையில் திரித்து பதிவு போட்டாலும் , பதிவுக்கு போனமா அருமையான பதிவு, சிறப்பான புள்ளி விவரம் ,கலக்கிட்டிங்கனு ஒரு வரில பின்னூட்டம் போட்டு பிழைக்க தெரியவில்லை, இனிமே தினம் 100 பேருக்கு ஒரு வரி பின்னூட்டம் போட்டு பிழைக்கும் வழியை பார்க்கிறேன்!

ஜோதிஜி said...

வவ்வால்

1. பிரிட்டன் எப்படி கொள்ளையடித்தார்கள். தொடங்கி வைத்தவர் யார்? அதன் மூலம் என்ன? பிரிட்டன் என்ற நாட்டின் அடிப்படை கொள்கை என்ன? அன்று முதல் இன்று வரை அவர்களின் பண்பாடு கலாச்சாரம் என்ற சொல்லிக் கொண்டு இருப்பதன் பின்புலம் தான் என்ன?

இவற்றை தனித்தனியாக விவரிக்க முடியாது. அடிப்படையில் ஈனத்தனமான காரியங்களை செய்து, அதைத் தொடர்ந்து இன்று வரையிலும் செய்து கொண்டு இருப்பதும் மேற்கத்திய நாகரிக பண்பாடுகள். விட்டகுறை தொட்டகுறையாக இன்று அந்த புனிதப்பணியை கையில் எடுத்து கலக்கிக் கொண்டு இருப்பது மகா வீரன் அமெரிக்கா.

விவசாயத்தை அழிக்க என்ன செய்யலாம்? இந்தியாக்ள் பிரிட்டனை சார்ந்திருக்க என்ன செய்ய வேண்டும்? இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் தந்ததோடு அதனை நடைமுறையில் செயலாக்க முறையில் காட்டியவர்கள் மெக்காலே மற்றும் இந்த இராபர்ட் கிளைவ். அவர்கள் செய்தார்கள்? நம்ம நேரு என்ன செய்தார் என்பது போன்ற கேள்விகள் அல்லது கேலிகளை புறக்கணித்து விட்டு பார்த்தால் ஓட்டைப் பானையை வைத்து விட்டு சென்ற பிறகு உருவான வெற்றிடத்தை நிரப்ப வேண்டிய சூழ்நிலையில் தான் நேரு இருந்தார். இடையே முகமது அலி ஜின்னா நடத்திக் காட்டிய வீரக்காட்சிகள் தனியே உள்ளது.

மெக்காலே எழுதிய ஆவணத்தை பாருங்க.

நான் இந்தியா முழுக்க சுற்றி வந்தேன். ஒரு பிச்சை எடுத்து நிலையில் எவரும் வாழவில்லை என்று தான் சொல்லியிருக்கிறார். அப்படி என்றால் என்ன அர்த்தம். மூன்று வேளை சாப்பாட்டுக்கு பிரச்சனை இல்லாத வாழ்க்கையைத்தானே வாழ்ந்து இருக்கிறார்கள்.

பிரிட்டன் ஒவ்வொரு முறையும் உருவாக்கிய செயற்கை பஞ்சங்கள், விடாத வரி வசூல் போன்ற காரணத்தினால் புலம் பெயர்த்ல் நடந்தேறத் தொடங்கியது.

ஜோதிஜி said...

காந்தி இந்தியாவுக்கு திரும்பிய காலத்தில் அவரை கண்டுக்கொள்ள ஆள் இல்லை,பின்னர் அவர் பல பூர்ஷ்வா, முதலாளித்துவ காங்கிரஸ்காரர்கள் ஆதரவு பெற்ற பின்னரே பெரும் தலைவராக உயர்த்தப்பட்டார்.

என்னைப் பொறுத்தவரையிலும் காந்தி என்பவரை குற்றங்குறையுடன் நேசிக்க முடிகின்ற மனிதர். அவரின் கொள்கைகள் இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் இந்தியாவிற்கு தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும். காரணம் நாம் தான் நம்மை புரிந்து கொள்ள விரும்புவதே இல்லையே? அப்புறம் எங்கே நாம் தேர்ந்தெடுத்த அரசியல்வியாதிகள் நமக்கு நன்மைகள் செய்வார்கள் என்பதை எதிர்பார்க்க முடியும்?


அப்படினா காந்திக்கு முன்னர் இந்தியாவில் யாரும் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபடவில்லையா?

வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு முன்னால் எத்தனை பேர்கள் போராடினார்கள்? என்ன தீர்வு கிடைத்தது. உடனே கடைசி கட்ட போராட்டத்தை வைத்துக் கொண்டு நக்கல் செய்ய வேண்டாம். ஒருங்கிணைப்பு என்பது காந்திக்குப் பிறகு தானே உருவானது.


இராசயன உரம் , புதிய நெல் வகைகள் , பூச்சி மருந்துக்கெல்லாம் காரணம் இராபர்ட் கிளைவ் தான்னு சொல்லிட்டு எளிதாக உங்க ஆதர்சம் நேருவை காப்பாத்திட்டிங்களே? :-))

எந்த இடத்திலும் எவரையும் தூக்கி தாழ்த்தி பேசவில்லை. என்ன? ஏன்? இந்த கேள்வியை கேட்டதால் தான் உங்களால் இங்கே விவாதிக்க முடிகின்றது.

ஒரே ஒரு கேள்வி.

நிச்சயம் மேலைநாடுகள் அவர்களின் ஒப்பந்தங்கள் அத்தனையும் இந்தியாவை வளர்க்குமா? வாழ வைக்குமா? அதற்கு பதில் சொல்லுங்க.....

அடுத்த வருட கடைசி பதிவை போட்டு இந்த வருடத்தை முடித்து வைக்கின்றேன். அதைப்படித்துப்பாருங்க. உங்கள் மண்டைச் சூடு கொஞ்சம் குறையலாம்???????????? அதில் என்ன வில்லத்தனம் செய்யப் போறீங்கன்னு பார்க்றேன்? ச்சும்மா நக்கலு வவ்வால்........

Paleo God said...

இங்கே ஏதோ ஒரு கருத்துக்குழப்பம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.

நம்முடைய பாரம்பரிய மாடுகளைப் பற்றி வவ்வாலே எழுதி இருக்கிறாரே!

அதாவது. மாடுகளின் சாணங்கள் குறிப்பாக நமது பாரம்பரிய மாடுகளின் சாணங்களில்தான் சிறப்பான இயற்கை உரங்கள் தயாரிக்க முடிகிறது. ஜெர்ஸி போன்ற வகைகளின் சாணத்தையும் பாரம்பரிய மாடுகாளின் சாணத்தையும் ஒப்பீடு செய்து பால் முதல் சாணம் வரை பாரம்பரிய மாடுகளில் இருக்கும் சிறப்பு இறக்குமதி இனங்களில் இல்லை.

திமில் வைத்த அந்தப் பாரம்பரிய கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமும், வைக்கோலும் திறந்தவெளியும் போதுமானதாக இருந்தது. தானாக மேய்ந்துவிட்டு வந்த மாடு பால் கொடுத்தது, ஈன்ற காளைக்கன்று உழுவதற்கும் வண்டி இழுக்கவும் பயன்பட்டது.

ஒரு பயிரை விளைவிக்கிறார்கள், அதிலிருந்து விதை எடுத்து வைத்துக்கொள்கிறார்கள், மாடுகள் கொண்டு உழவு வேலை செய்துகொள்கிறார்கள், போக்குவரத்திற்கும் அதையே பயன்படுத்திக்கொள்கிறார்கள். அதிலிருந்தே பால், தயிர், வெண்ணெய், நெய், தோல், கருவி என்று பலதும் வாழையடி வாழையாக வந்துகொண்டிருக்கிறது. எப்படி இவனிடமிருந்து சம்பாதிப்பது என்று யோசித்தார்கள்..


அதிக பால் ஆசைக் காட்டி ஜெர்ஸியை நுழைத்தார்கள். பாரம்பரிய மாடுகள் ஜெர்ஸிகளாலும் கலப்பினங்களாலும் நிரப்பப்பட்டன.

அதற்கென்று தனித் தீவனம், கூரை, அடிக்கடி நோய் தாக்குவதால் மருத்துவ செலவு, அதிகக் கவனிப்பு என்று பராமரிப்பு வேலைகள் அதிகமாகின.

அதை வைத்து உழ முடியவில்லை, வெயில் அதற்கு ஆகவில்லை, இது கோ மாதா இல்லை வெறும் பால் தரும் மெசின்.

சரி பாரம்பரியத்திற்கு மாறலாமென்றால் மேய்ச்சல் நிலங்கள் வீட்டு மனைகளாகவும், குடியிருப்புகளாகவும் ஆகிவிட்டது. நீண்ட வைக்கோல் இல்லாத குட்டை ரக நெல் விளைச்சல் அறிமுகப்படுத்தப்பட்டு, இயந்திர அறுவடையால் வைக்கோல் என்பதே மாடுகளுக்குக் கிடைக்காமல் போய் விட்டது. மீதி நக்கித் தின்பதற்குப் போஸ்டர்கள் இருந்ததும் போய் ஃப்லெக்ஸ் போர்டுகளும் ப்ளாஸ்டிக்குகளும் வந்துவிட்டன.

உழவுத் தொழிலை ட்ராக்டர்கள் ஆக்கிரமித்துக்கொண்டன. ட்ராக்டர் சாணி போடாது. எனவே ரசாயண உரம் தேவைப்படுகிறது. ட்ராக்டருக்கென்று டீசல், உதிரி பாகங்கள், மெக்கானிக் வேலைகள் என்று அதன் பின்னே ஒரு கூட்டம் இருக்கிறது. ஒரு முறை உரத்தைப் போட்டு போட்டு நிலத்தை வளமாக்கிவிட்டால் என்ன செய்வதென்று புதிய புதிய ரகங்கள், புதிய புதிய நோய்கள், புதிய புதிய மருந்துகள், மீள முடியாத அளவுக்கு ஒரு சுழலில் போய் சிக்கிக்கொண்டான் விவசாயி.

சரி இயற்கைக்கு மாறலாமென்றால் நிலத்தை உழுவதிலிருந்து, விளைச்சல் எடுக்கும் வரைக்கும் ரெக்கார்ட் பண்ணவேண்டிய விஷயங்களே பயங்கரமாக இருக்கிறது, அதாவது விஷத்தை நீங்கள் விளைச்சலுக்காகக் கொட்டுவதற்கு எந்த விவரங்களும் எழுதிவைக்க வேண்டியதில்லை, விஷத்தை அண்டவிடாமல் பார்த்துக்கொள்வதற்கு ரெக்கார்ட் வைத்திருக்கவேண்டும் அனுமதி வேண்டுமாம்.

இதெல்லாம் நீண்டகால திட்டங்களாக நம்முடைய நாட்டின் முதுகெலும்பை உடைக்கும் பொருட்டு என்றோ ஆரம்பித்து வைத்துவிட்டார்கள், க்டமையே கண்ணாயிரமாக பசுமைப் புரட்சி என்று சூப்பராக ஒரு பெயர் வைத்து நடு விரலை விவசாயின் வாயில் வைத்து சூப்ப வைத்து விட்டார்கள். பாரம்பரியத்திலிருந்து கடந்து வந்த இரண்டாவது தலைமுறை இன்றைய விவசாயிகளுக்கு ஆராய்சிக்கழகங்கள் சொல்வதே வேதம். அவர்கள் தருவதே விதைகள், அவர்கள் இடச்சொல்வதே உரம். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கவனமாக கைமாற்றிவிடப்பட்ட விவசாய ஞானங்களை இன்றைக்கு இழந்துவிட்டு நிற்கிறோம். நிழல் பார்த்து நேரம் சொன்னதும் வானம் பார்த்து பருவ நிலை கண்டதும் போய், சாட்டிலைட் சொல்லும் பொய்களை நம்பி சோரம் போகிறோம்.

இனி கார்பொரேட் விவசாயத்தைக் கையிலெடுக்கும். அவன் எதை வேண்டுமானாலும் விதைப்பான். அவன் கொடுப்பதைத் தின்றுவிட்டு வருவதை முக்கி வெளியிலெடுக்கவேண்டியதுதான்.


பசுமைப் புரட்சி வாழ்க!
வெண்மைப் புரட்சி வாழ்க!
விஞ்சானம் வாழ்க!

வவ்வால் said...

ஜோதிஜி,

வெள்ளைக்காரன் கொள்ளை அடித்தான், நாம் நாட்டு விவசாயம் , உற்பத்தி எல்லாம் மாற்றியமைத்தான் உண்மை அவன் போய் 60 ஆண்டுக்கு மேலாயிடுச்சே ஏன் நாம சரி செய்யவில்லை, அவன் செய்ததை விட மிக மோசமாக நம்ம ஆட்கள் செய்தார்கள் என்பது தானே உண்மை.

//நிச்சயம் மேலைநாடுகள் அவர்களின் ஒப்பந்தங்கள் அத்தனையும் இந்தியாவை வளர்க்குமா? வாழ வைக்குமா? அதற்கு பதில் சொல்லுங்க.....//

அப்படி எங்கும் நான் சொல்வதில்லை. ஆனால் என் கேள்வி அவர்கள் வரவில்லை என்றாலும் உள்நாட்டு வணிகர்கள், அரசியல்வாதிகள் வாழ விடுகிறார்களா விவசாயிகளை ,மக்களை என்பதே.60 ஆண்டுகளாக இவர்கள் தானே சுரண்டுகிறார்கள். அதை யாரும் தடுக்கவில்லையே ஏன்?

//எந்த இடத்திலும் எவரையும் தூக்கி தாழ்த்தி பேசவில்லை. என்ன? ஏன்? இந்த கேள்வியை கேட்டதால் தான் உங்களால் இங்கே விவாதிக்க முடிகின்றது.//

ஜோதிஜி,

உங்க தன்னம்பிக்கைய சிறப்பானது தான்!

அந்த கேள்வி என்று இல்லை , உங்கள் கருத்தில் கேள்விக்கேட்க ,நான் வில்லத்தனம்??!! செய்ய 100 ஓட்டைகளை காட்ட முடியும். முக்கியமாக தெரிந்த சிலவற்றை தான் சொன்னேன்.

மேலும் தூக்கி/தாழ்த்தி பேசினீர்கள் என சொல்லவரவில்லை, உண்மையை ஒதுக்கி விட்டு சம்பந்தம் இல்லாத மாட்டிறைச்சி வியாபாரம் தான் இப்போதைய இரசாயன விவசாயத்திற்கு காரணம் என சொன்னதை தான் குறிப்பிட்டேன். மேலும் இப்போதும் உலகிலே அதிக கால்நடைகள் கொண்ட நாடாக தானே இந்தியா இருக்கு என்பதையும் சுட்டிக்காட்டினேன் பதில் சொல்ல உதவிக்கு ஆள் தேவையோ? :-))

சரி அது இருக்கட்டும், பன்னாட்டு நிறுவனத்தில் பணிப்புரிந்தாலும் ,பள்ளர்-பறையர், செட்டியார்-நாடார் திருமணம் நடைபெறாது என்று சொன்னதையும் தான் கேள்விக்கேட்டேன், ஆனால் ஒன்றும் சொல்லக்காணோமே :-))

அப்புறம் இதற்கு முன்னர் ஒரு பின்னூட்டம் போட்டேன் வரவில்லை , மட்டுறுத்தல் இல்லை என நினைத்தேன்?

வருட கடைசியில் எல்லாம் நீரோடும் சீரோடும் குதுகலம் தான் .எனவே சூடு இப்போதைக்கு இல்லை, (சொரணையும் இல்லாம போக ஆண்டவன் அருளினால் நல்லா தான் இருக்கும்)

ஜோதிஜி said...

அப்புறம் இதற்கு முன்னர் ஒரு பின்னூட்டம் போட்டேன் வரவில்லை , மட்டுறுத்தல் இல்லை என நினைத்தேன்?
வவ்வால்

இன்று இணைய இணைப்பு வேகம் மற்றும் மின் தடை படாய் படுத்திக் கொண்டு இருக்கிறது. இன்று வெளியிட்டுள்ள தலைப்பை வீட்டுக்காரம்மா படிக்க வேண்டும் என்று சொன்னதால் இந்த நேரத்தில் வந்தேன். உங்கள் பதில் பார்த்து திகைத்து விட்டேன்.


அப்புறம் இதற்கு முன்னர் ஒரு பின்னூட்டம் போட்டேன் வரவில்லை , மட்டுறுத்தல் இல்லை என நினைத்தேன்?

வலையில் வீராதி வீரம் பேசுபவர்கள் கூட பூட்டிக் கொண்டு தான் குடியிருக்கிறார்கள். நான் கதவை திறந்து வைத்து பல மாத காலம் ஆகிவிட்டது. எதிலும் கைவைப்பதில்லை.

எவர் வேண்டுமானாலும் குத்தலாம், ரசிக்கலாம், உரையாடலாம். அது அவரவர் சிந்தனைகள் அல்லது அனுபவம் கொடுத்த தாக்கம். நான் அதில் தலையிட மாட்டேன். விருப்பம் இருந்தால் பதில் கொடுப்பேன். இல்லாவிட்டால் அமைதியாக அடுத்தவர்கள் படிக்க விட்டு விடுவதுண்டு.

இன்று வெளியிட்டுள்ள பதிவுக்கு கூட ரிஷி என்பவரின் விமர்சனம் கூட மின் அஞ்சலில் வந்துள்ளது. ஆனால் பின்னூட்டத்தில் வரவில்லை.

காரணம் தெரியாது சாமியோவ்.......


சரி அது இருக்கட்டும், பன்னாட்டு நிறுவனத்தில் பணிப்புரிந்தாலும் ,பள்ளர்-பறையர், செட்டியார்-நாடார் திருமணம் நடைபெறாது என்று சொன்னதையும் தான் கேள்விக்கேட்டேன், ஆனால் ஒன்றும் சொல்லக்காணோமே :-))

இதுக்கு ஒரே பதில் என்னிடம் உண்டு.

இந்த இனத்தில் வளர்ந்தவர்கள் குறிப்பிட்ட நிலைக்கு உயர்ந்தவர்கள், சமூகத்தில் சொல்லக்கூடிய இடத்திற்கு வந்த பிறகும் கூட தங்கள் இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லத் தயங்குவது ஏன்? தங்கள் இனம் சார்ந்த மக்களின் வளர்ச்சியில் வாய்ப்பு இருந்தும் கூட உதவி செய்ய மறுத்து கண்டும் காணாமல் இருந்து விடுகிறார்களே? அது ஏன்?

அதுக்கு காரணம் சொல்லுங்க? மற்றபடி தொடரலாம்.

மற்றபடி ஷங்கர் நான் பேச நினைத்த விசயத்தை போட்டு உடைத்துள்ளார்.

வவ்வால் said...

//வலையில் வீராதி வீரம் பேசுபவர்கள் கூட பூட்டிக் கொண்டு தான் குடியிருக்கிறார்கள். நான் கதவை திறந்து வைத்து பல மாத காலம் ஆகிவிட்டது. எதிலும் கைவைப்பதில்லை.//

ஜோதிஜி ,

நன்றி! நான் மீண்டும் வெளியிடப்பார்க்கிறேன்.

நீங்களும் அஞ்சா நெஞ்சர் தான் ! ஆரம்பம் தொட்டே நான் திறந்த வெளி தான்! அதான் கேட்டுக்கொண்டேன், இங்கும் இணையம், மின்சாரம் எல்லாம் ஆடிகிட்டே இருக்கு!

மேலும் நீங்க ஒரு பின்னூட்டம் போட்டதாக மெயிலில் இருக்கு ,ஆனால் பதிவில் இல்லை, ஒரு வேளை நீங்களாக நீக்கிட்டிங்களா? எனத்தெரியவில்லை. அப்படி இல்லை எனில் நானே பேஸ்ட் செய்து விடுவேன்.

என் சோக கதை என்னானா என் மெயில் உள்ள நானே போக முடியல கொஞ்ச நேரமாக அப்புறம் கடவு சொல் மாத்திட்டு வரேன் :-))

//இந்த இனத்தில் வளர்ந்தவர்கள் குறிப்பிட்ட நிலைக்கு உயர்ந்தவர்கள், சமூகத்தில் சொல்லக்கூடிய இடத்திற்கு வந்த பிறகும் கூட தங்கள் இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லத் தயங்குவது ஏன்? தங்கள் இனம் சார்ந்த மக்களின் வளர்ச்சியில் வாய்ப்பு இருந்தும் கூட உதவி செய்ய மறுத்து கண்டும் காணாமல் இருந்து விடுகிறார்களே? அது ஏன்//


இதை ஏன் பதிவில் போடவில்லை, நீங்கள் மணம் முடிப்பதில்லை ஏன் என்று கேள்விக்கேட்டிங்க, அப்போ மத்த ஜாதி, மத உட்பிரிவுகள் மணம் முடிக்கிறாங்களானு கேட்டா, இப்போ இப்படி கதைய வேற டிராக் இழுக்கிறிங்க? பதிவில போட்ட உதாரணத்துக்கு கேள்விக்கேட்டேன் , என்ன பதில் சொல்லுங்க?

அப்புறம் நாடார் -செட்டியார் இவங்களும் வெளில சொல்ல தயங்குறாங்களா புதிதாக சொல்றிங்களே? அவங்க மட்டும் இல்லை எல்லாம் தங்கள் இனம் சார்ந்து உதவிக்கொள்ளவும் செய்கிறார்கள்.ரொம்ப கொழம்பிபோய் என்ன பேசரோம்னே தெரியாம போச்சா :-))

இதுல நீங்க வினவுல வேறப்போய் கமெண்ட் போட்டு ஆகா ஒஹோ சொல்லிகிறிங்க,இந்த பதிவை உங்க வினவு தோழர்களைப்படிக்க சொல்லுங்க அப்புறம் தெரியும சேதி? ஏதோ நானாவது கேள்விக்கேட்டு விட்டேன் ,அவங்க உங்க டவுசரை கிழிப்பாங்க சாமி!

நான் எதாவது பதிவு போட்டா நான் யார்னே தெரியாம வேற நோக்குல கயிறு திரிக்கிறாங்க அவங்க. இப்போ உங்க கொள்கை ,என்ன வினவு கொள்கை என்னனு இந்த பதிவு மூலமாக தெரிஞ்சுக்கலாம் :-))

---------------------
//மற்றபடி ஷங்கர் நான் பேச நினைத்த விசயத்தை போட்டு உடைத்துள்ளார்.//

அது எப்படி உங்களால மட்டும் இப்படிலாம் முடியுது ஜோதிஜி, பதிவுல எல்லாம் வெள்ளைக்காரன் தான் சொல்லிப்பீங்க, அவன் போய் 60 ஆண்டுக்கும் மேல ஆன பிறகும் இதான் நிலை என்பதை மறந்து விடுவிங்கஆனால் இதுக்கு உண்மையான காரணம் வேற என்று நான் சொன்னால் இல்லை மண்டை சூடு என்பீர்கள், ஆனால் ஷங்கர் போட்ட பின்னூட்டம் பார்த்து நான் பேச நினைத்தது என்கிறீர்கள்! :-))

மண்டை சூடு ,பரவாயில்லை உங்களுக்கு காமாலை வராமல் பார்த்துக்கொள்ளவும், அப்புறம் எல்லாம் மஞ்சளாக தெரியும் :-))(தமாசு சார்)

-----------------------

ஷங்கர் என்பதிவுகளை படித்தற்கு நன்றி, நீங்கள் சொல்லி இருக்கும் கருத்தினை நான் பல இடங்களில் சொல்லி இருக்கேன், எனக்கு ஒரு சந்தேகம் அது நான் சொன்னதை நீங்கள் மீண்டும் எடுத்து போட்டு இருக்கிங்களா?

ஏன் எனில் டிராக்டர் சாணிப்போடாது என நான் வழக்கமாக சொல்வேன். அதான் கேட்டேன். அது உங்கள் கருத்து எனில் நல்லதே.

ஜோதிஜி said...

இதுல நீங்க வினவுல வேறப்போய் கமெண்ட் போட்டு ஆகா ஒஹோ சொல்லிகிறிங்க,இந்த பதிவை உங்க வினவு தோழர்களைப்படிக்க சொல்லுங்க அப்புறம் தெரியும சேதி? ஏதோ நானாவது கேள்விக்கேட்டு விட்டேன் ,அவங்க உங்க டவுசரை கிழிப்பாங்க சாமி!

இதென்ன குதர்க்கம். வினவு தளத்தில் என் கட்டுரை ஒன்று வந்துள்ளது. அதாவது தெரியுமா? அவர்கள் அலுவலகத்திற்கே போய் பல விசயங்களில் என் கருத்தை ஆணித்தரமாக பேசி உள்ளேன் என்பதாவது நம்ப முடியுமா?

வெள்ளைக்காரன் போய்விட்டார்கள். போகும் போது சுத்தமாக சுரண்டியும் சென்றதோடு கொள்ளையடிப்பது என்பதையும் கற்றுக் கொடுத்தார்கள். அதன் பிறகு அங்கிருந்தே பிழைக்கின்ற வழி இது தான்டா என்று சொல்லிச் சொல்லியே நம்மவர்களை கொள்ளையடிப்பதையே கலையாக கொண்டவர்களின் எண்ணிக்கையையும் அவர்கள் தான் இன்று வரைக்கும் வளர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இல்லாவிட்டால் ஏன் வெளிநாட்டு வங்கிகள் வளமாக இருக்கிறது???


மண்டை சூடு ,பரவாயில்லை உங்களுக்கு காமாலை வராமல் பார்த்துக்கொள்ளவும், அப்புறம் எல்லாம் மஞ்சளாக தெரியும் :-))(தமாசு சார்)

நீங்களே கவர்ச்சிகரமாக எழுதுகின்றேன் என்று பாராட்டிவிட்டு ம.கா வரும் என்று வேறு பயமுறுத்துகிறீர்கள்? நமக்கு அதெல்லாம் வராது? பூச்சிக்கே பூச்சியா? வாய்ப்பே இல்லை?

அப்புறம் சாதி பற்றி கேட்டீங்க. உடனே தடம் மாறிப் போய்விட்டேன் என்று வேறு சொல்வீங்க. இதை இதில் உள்ள பின்னூட்டத்தையும் பாருங்க. நாங்க இது போன்ற விசயங்களை ஏற்கனவே ஒரு ரவுண்டு போய் டன் கணக்காக வாங்கி பொத்துனாப்ல இருந்துகிட்டு இருக்கோம்லே.........

http://deviyar-illam.blogspot.com/2011/01/blog-post_29.html

ஜோதிஜி said...

மேலும் நீங்க ஒரு பின்னூட்டம் போட்டதாக மெயிலில் இருக்கு ,ஆனால் பதிவில் இல்லை, ஒரு வேளை நீங்களாக நீக்கிட்டிங்களா? எனத்தெரியவில்லை. அப்படி இல்லை எனில் நானே பேஸ்ட் செய்து விடுவேன்.

தலைவா நான் தான உங்கள் பதிவில் உள்ளே வந்தேன். அவசியம் போடுங்க.

எனக்குத் தெரிந்து எழுத்தை பாடமாக வலையில் நடத்திக் கொண்டு இருப்பவர்கள் சிலர்.

அதியமான் (முழுக்க முழுக்க பொருளாதாரம் சார்ந்த விசயங்கள்)

அப்புறம் உங்கள் எழுத்துக்கள். (நீங்க கவர்ச்சிக்குத்தான் எதிரின்னு சொல்லிட்டீங்களே?)

நடா சொன்ன மாதிரி உங்கள் பதிவுகளை நிச்சயம் உருப்படியான முனைவர் பட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த அளவுக்கு நமக்கு அறிவு இல்லை வவ்வால். ஓரளவுக்கு தெரிந்து கொள்ள முயற்சிப்பதறகே சில நாட்கள் தூக்கம் போய் விடுகின்றது. உங்க அளவுக்கு தெரிந்து பின்னி எடுத்தால் இங்கே பைத்தியம் பிடித்து விடும் தல.

வெளியிட்டுள்ள புதிய பதிவுக்கு உங்கள் கருத்துரை வேண்டும்.

வவ்வால் said...

ஜோதிஜி,

வணக்கம்,

//விவசாயத்தை அழிக்க என்ன செய்யலாம்? இந்தியாக்ள் பிரிட்டனை சார்ந்திருக்க என்ன செய்ய வேண்டும்? இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் தந்ததோடு அதனை நடைமுறையில் செயலாக்க முறையில் காட்டியவர்கள் மெக்காலே மற்றும் இந்த இராபர்ட் கிளைவ். அவர்கள் செய்தார்கள்? நம்ம நேரு என்ன செய்தார் என்பது போன்ற கேள்விகள் அல்லது கேலிகளை புறக்கணித்து விட்டு பார்த்தால் ஓட்டைப் பானையை வைத்து விட்டு சென்ற பிறகு உருவான வெற்றிடத்தை நிரப்ப வேண்டிய சூழ்நிலையில் தான் நேரு இருந்தார்.//

சித்தாந்த ரீதியாகவே நீங்கள் பிற்போக்கு தன்மைக்கொண்டவராகவே காட்டுகிறது உங்கள் பின்னூட்டங்கள், பதிவுகள்!

வினவுடன் பேசுவதோ, அவர்கள் தளத்தில் கட்டுரை எழுதுவதோ முற்போக்கு சாயத்தை வேண்டுமானாலும் பூசலாம், ஆனால் சிந்தனையில் மாற்றம் கொண்டு வந்துவிடாது என்பதற்கு தங்கள் எழுத்துகளே சாட்சி!

வெள்ளைக்காரன் எல்லா கெடுதலும் செய்தான் , ஆனால் அவன் போய் 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது , ஒரு மாமங்கம் கூட தாண்டி விட்டது, ஆனால் இப்போதைய இழி நிலைக்கு காரணம் அவன் தான் என்று சொல்வது என்ன வகையில் சரி?

ஓட்டைப்பானை அதை வைத்து இவ்வளவு தான் செய்ய முடியுமா? அந்த ஓட்டை அடைக்க , செம்மை படுத்த தானே ஆட்சியை நம்மவரிடம் கொடுத்தார்கள் மக்கள்.

வெள்ளைக்காரன் விட்டுப்போன பானை ஓட்டை நான் என்ன செய்வேன் என லீ.கியுவான் யூ நினைத்திருந்தால் சிங்கப்பூர் வளர்ந்திருக்காது.

ஜப்பானில் அணுகுண்டு போட்டு பெரும் ஓட்டை வந்த போது அவ்வளவு தான் என நினைத்திருந்தால் சாம்பல் மேடாகவே ஜப்பான் இருந்திருக்கும்.

சுளையாக 60 சொச்சம் ஆண்டுகள் கையில் கிடைத்தும் சீரழித்துவிட்டவர்கள் நம்ம ஆட்கள், அவர்களை சுட்டிக்காட்ட தைரியம் இல்லாமல் கிளைவ் , மெக்காலே என பழைய பஞ்சாங்கமே படிப்பேன் என்றால் படியுங்கள், ஆனால் அதை சுட்டிக்காட்டுவது மண்டை சூடு என்றால் , அந்த சூடு தொடர்ந்து இருக்கும்!

இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படுவது தான் இரசாயன உர விவசாயத்திற்கு காரணம் என எப்படி சொல்ல முடிந்தது உங்களால், காவி இந்துத்துவ சிந்தனையாளர்கள் மட்டுமே அப்படி சொல்வார்கள்.

சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கி வைத்திருப்பதற்கும் மாட்டிறைச்சி தான் காரணமா :-))

வர்ணாசிரம அடுக்கில் மேல் உள்ள அய்யர்- அய்யங்கார் உட்ப்பிரிவுகளிலேயெ மணம் முடிக்க தடை இருக்கும் போது, சமீபகாலமாகவே பன்னாட்டு வேலைகளுக்கு செல்லும் வர்ணாசிரம அடுக்கில் கீழ் உள்ள பள்ளர்-பறையர், செட்டியார்-நாடார் என கேள்விக்கேட்க எங்கிருந்து மனம் வந்தது?

மேலும் பறையர் என்று எழுதுவதும் பேசுவதும் குற்றம் என்றாவது தெரியுமா? ஏன் நாடார்களை சாணார்கள் என்று சொல்லிப்பாருங்களேன் தெரியும். சாதிய, இந்துத்வ சிந்தனைகளை எழுதிவிட்டு வினவில் நான் எழுதினேனாக்கும் என பெருமை வேறு!

இது வரை நான் எழுப்பிய கேள்விகளுக்கு நேரடியாக பதில் வராமால் உங்கள் பழைய பெருமையை சொல்லிக்கொண்டு நீங்கள் எழுதியது சரி என சொல்லும்போதே பதில் இல்லை என்பது தெரிகிறது.

உங்கள் வினவுத்தோழர்கள் என்ன சொல்ல நினைக்கிறார்கள் என்பதைக்கேட்டு சொல்லவும்!

மதியின் வலையில் said...

அனைத்து கருத்துக்கரும் அருமை. எனது பார்வையில் சில...

/// இந்தியா இப்போது 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை விட உயர்ந்திருக்கிறது. உண்மை தான். முழுமையான கல்வியறிவு தேசம் என்று இல்லாவிட்டாலும் கூட நடுத்தர வர்க்கத்தின் மூளை அறிவு இன்று உலகம் முழுக்க மென்பொருள் துறை முதல் பல்வேறு துறைகளிலும் கொடி கட்டி பறக்கின்றது. இந்தியர்கள் உலகம் முழுக்க பரவ காரணமாகவும் இருக்கிறது.. இதை மற்றொரு வகையில் பார்க்கப் போனால் நவீன அடிமைகளை உருவாக்கி உலகம் முழுக்க அனுப்பிக் கொண்டிருக்கின்றோம்..
////////

ஏன் அடிமை என்று கூறுகிறீர்கள். அங்கே அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை இங்கேதானே அனுப்புகிறார்கள். நம்மிடமிருந்து திருடிய சொத்தை மீட்கும் ஒரு முயற்சியாக கருதலாமே. நாம் நேர்மையானவர்கள். ஆதலால் நம் அறிவை விற்று நம் பணத்தை மீட்கிறோம். இல்லையென்றால் அவர்களுக்கும் நமக்கும் வித்யாசம் இல்லாமல் போய்விடும் அல்லவா. ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டில் இருந்து நம்நாட்டுக்கு வரும் பணத்தின் தொகை அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை.

////இந்தியர்களின் திறமையை உள்நாட்டில் பயன்படுத்த ஆளில்லாத காரணத்தால் எவர் வந்து நம்மை கொத்திக் கொண்டு போகமாட்டாரோ என்று ஏக்கத்தில் தான் ஒவ்வொரு துறையிலும் இருப்பவர்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்./////

பயன்படுத்த ஆளில்லாத என்ற ஒரு காரணம் மட்டும் அல்ல. முடிந்தவர்கள் வெளிநாடு சென்று தனக்கென்று இங்கே இருக்கும் பதவியை வேறொருவருக்கு விடலாம்.

அதுமட்டும் அல்ல. இங்கே யாரேனாலும் சுயதொழில் செய்ய இயலவில்லை. அனைத்திலும் அரசியல் தலையீடு. வாழ்க்கையில் விரக்கிதியடைந்த சிலரிடமிருந்து கேட்டது "சொந்த நாட்டில் எதுவும் செய்யாமலிருப்பதை விட அன்னிய நாட்டில் அடிமையாய் இருக்கலாம்" என்று. எவ்வளவு வருத்தம் இருந்தால் இப்படி ஒரு சொல் அவர்களிடம் இருந்து வரும்.

இன்னும் நிறைய சொல்லலாம்.......

Anonymous said...

arumayana padhivu padhivittamaikku nandri
surendran