Wednesday, January 26, 2011

காந்தி காங்கிரஸ் முதல் இத்தாலி காங்கிரஸ் வரை

இன்று இந்திய குடியரசு தினம்.  இன்று நமக்கெல்லாம் 62வது ஆண்டு வாழ்த்துகளை அரசியலில் உள்ள பலவிதமான நோயுடன் போராடிக் கொண்டுருக்கும் பல தலைகள் தெரிவிப்பார்கள். "இந்தியா ஒளிர்கின்றது" என்று சொல்ல வேண்டியது அவர்களின் கடமை. நமக்கு வரும் கோபத்தை அடக்கிக் கொண்டு ஒளிந்து கொள்ள வேண்டியது நம் கடமையாகும். 

இந்த சமயத்தில் நாம் படித்த போது பள்ளிக்கூடத்தில் கொடுத்த ஒத்தக்காசு மிட்டாய் குறித்து நினைத்துக் கொள்வோம். நம் குழந்தைகளுக்கு இன்றைய சாக்லேட் குறித்து புரியவைத்து வேகமாக அனுப்பிவைப்போம். நம்முடைய குடும்பத்தில் அறுபது வயதை தொட்டவர்கள் அறுபதாம் கல்யாணம் செய்து தலைமுறைகளுக்கு ஆசிர்வாதம் தருவது போல இன்று இந்தியாவில் வாழ்ந்து கொண்டுருப்பவர்களுக்கு கிடைத்த விடுமுறையைப் பய்ன்படுத்திக் கொண்டு ஆசிர்வாதம் வாங்க தொலைகாட்சிகள் முன்பு அமர்ந்திருக்க முயற்சிப்போம். . 


நாம் எளிதில் எல்லாவற்றையும் மறந்து நகர்ந்து போய்விட இன்று ஏராளமான விசயங்கள் நம்மிடம் உண்டு. இன்று பார்க்கப் போகும் நடிகைகள் பேட்டியும், சில மாதங்களுக்கு முன்னே வெளியான அரதபடாவதியான படங்களை வெளிக்கு போக மறந்து கூட பார்க்கப்போகின்றோம்.  தொலைக்காட்சிகளின் போட்டிகளில் இன்று உச்சமாக இருப்பவர்கள் பத்து நொடி விளம்பரத்திற்கு 23000 ரூபாய் வாங்கும் அளவிற்கு நம்மால் முடிந்த அளவுக்கு உதவி செய்வோம் என்று இந்த நாளில் உறுதியேற்போம்..  

ஆனால் இந்த இராமநாதபுரம் மாவட்டம் தொடரில் இப்போது வந்துள்ள ஆங்கிலேயர்கள் குறித்து சற்று மேலோட்டமாக அடுத்து சில பதிவுகளில் பார்த்து தான் ஆக வேண்டும். அப்படி நகர்ந்தால் தான் நம் இந்திய "குடி"மக்களை, மது அருந்துவது அப்படி ஒன்றும் பெரிய தவறில்லை என்று மாறிப்போன சமூகத்தையும் ஓரளவுக்கேனும் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். தனி மனித ஓழுக்கம் குறித்து கவலைப்படாத இந்த சமூகம் எங்கிருந்து தொடங்கியது?  ஏன் தறுதலைகளை நாம் தலைவர்களாக தேர்ந்தெடுக்க விரும்புகின்றோம்.  எப்படி ஆங்கிலேயர்கள் இந்தியர்களை தங்கள் வழிக்கு கொண்டு வந்தார்கள் என்பதை புரிந்து கொள்ள உதவும்.

காரணம் சரித்திரம் என்பது ஒரு பதிவு எந்திரம்.  பாரபட்சம் இல்லாதது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் போகிற போக்கில் பலவற்றை பதிவு செய்து விட்டே நகர்கிறது.  உண்மைகள் வெளியே வருவதற்கு நாளாகுமே தவிர அது எதையும் விட்டு வைக்காது.

சரித்திரம் ஒவ்வொரு தலைவருக்கும் அவர் எத்தனை பெரிய கொம்பனாக இருந்தாலும் எந்த தனிப்பட்ட மரியாதையையும் அளித்து விடாது.  அவர்களால் உருவாக்கப்பட்ட சொல்லப்பட்ட வெற்றிகளை பதிந்து வைத்திருப்பதைப் போலவே அவர்களின் மறைவுக்குப் பிறகு அவர்கள் குறித்து அத்தனை அசிங்கமான சம்பவ நிகழ்வுகளையையும் சேர்த்தே பதிவு செய்து விடுகின்றது. பதினான்கு மொழிகளுக்கு மேல் எழுத பேச படிக்கத் தெரிந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் கடைசிகாலகட்ட நிகழ்வுகளை வாய்ப்பு இருந்தால் ஊன்றி கவனித்துப் பாருங்கள்.  

அவர் ஆட்சியில் இருந்து போது நடந்த பம்பாய் கலவரம் அவருக்கு பாடம் கற்பிக்கவில்லை என்றாலும் சரித்திரம் ஆந்திரப்பிரதேச பாடத்தில் இருந்தே அவர் குறித்த சம்பவங்களை நீக்கும் அளவிற்கு ஒரு தண்டனையை வழங்கியது.  இதுவே தான் இன்று வரைக்கும் நடந்து கொண்டுருக்கிறது.

நாம் தொடரில் வந்துள்ள ஆங்கிலேயர்களைப் பற்றி பார்ப்பதற்கு முன்பு இப்போது சிலவற்றை தராசில் ஏற்றிவிடலாம்.  

திருடனைப்போல சாவு வரும். திடுக்கிடுவாய் நீயும் அப்போது.
பாம்பின் வாயில் தவளை போல பரிதவிப்பாய் பரிதவிப்பாய்.

இந்த பாடலை கிறிஸ்துவர்கள் கேட்டுருககலாம். இதைப் போலத்தான் சுதந்திரம் கிடைக்க இருந்த போதும், கிடைத்த பிறகும் 62 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த இந்தியர்களின் நிலைமை இருந்தது. இப்போது எப்படி இருக்கிறது? என்ற கேள்வியை அப்படியோ கக்கத்தில் வைத்துக் கொண்டு மேலே வாருங்கள்.


ஏன் கொல்லப்படுகின்றோம்? எதற்காக கொல்லப்படுகின்றோம் என்பதே தெரியாமல் பல லட்ச மக்கள் இறந்தார்கள்.  பாகிஸ்தான் என்றொரு நாட்டை பிரிப்பதற்காக நடந்து கூத்தில் மட்டுமே இது போன்ற நிகழ்வுகள். அதைப்பற்றி இப்போது இந்த இடத்தில் பேசத் தேவையுமில்லை.  அதற்கான களமும் இதுவும் இல்லை.   இன்று வரையிலும் இந்தியா என்பது உலகத்திற்கே வழிகாட்டும் நாடு. மகத்தான ஜனநாயக நாடு என்று எல்லாவிதங்களிலும் நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொண்டு கண்முன் நடக்கும் அத்தனை கோரத்தையும் சகித்துக் கொண்டு வாழ பழகியுள்ளோம்.  

இந்தியாவில் எதுவுமே சிறிய அளவில் நடக்க வாய்ப்பே இல்லை.  இன்றைய அரசியல்வாதிகள் அடிக்கும் கொள்ளையாக இருந்தாலும் தனிமனித வெறுப்பில் உருவாகும் கொலையாக இருந்தாலும் சரி நம் நாட்டைப் போலவே எல்லாமே பெரிசு. ஒவ்வொரு தலைகளுக்கும் இருக்கும் வைப்பாட்டிகளின் எண்ணிக்கையைப் போலவே. 

அரசியலில் இருப்பவர்களுக்கு மட்டும் பிரம்மன் "சில" உறுப்புகளை தனியாக செய்வார் போல(?)

நூறு கோடிக்கு மேல் வாழும் ஜனத்தொகையில் ஒரு கோடி மனிதர்கள் ஒரே சமயத்தில் இறந்து போனாலும் நமக்கு அது பெரிய விசயமே இல்லை.  நாம் இரண்டு நாட்களில் அதை கடந்து செய்தியாக படித்து விட்டு நகர்ந்து அடுத்த வேலையைப் பார்க்க சென்று விடுவோம்.  அவலம் என்ற வார்த்தை சம காலங்களில் மறந்து போனதொன்று. அது ஈழம் என்றாலும் போபால் என்றாலும் ஒரே குறியீடு தான்.  

சுதந்திரம் வாங்கும் போது ஹாலந்து நாட்டின் மொத்த ஜனத்தொகைக்கு சமமாக நம் நாட்டில் குஷ்டரோகிகள் இருந்தார்கள்.  ஹாலந்தும், பெல்ஜியமும் சேர்ந்த ஜனத்தொகைக்கு சமமாக நம் நாட்டில் பிச்சைக்காரர்கள் இருந்தார்கள்.  வீடு இன்றி இரண்டு கோடி மக்கள் இருந்தார்கள். அன்று முப்பது கோடி மக்கள் வாழ்ந்த ஜனத்தொகையில் பத்தில் ஒரு மடங்கு. இன்றுள்ள ஜனத்தொகையில் 40 கோடி மக்கள் ஒரு வேளை சோற்றுக்கு ஆளாய் பறந்து கொண்டுருக்கிறார்கள்.  நாம் வளர்ந்துள்ளோம் என்பதை எப்படி மறுக்க முடியாதோ அந்த அளவிற்கு இந்த நாட்டை வளர்ப்பதற்கு உதவியதை விட தங்களை வளர்த்துக் கொண்டு வளமான தலைவர்கள் தான் இந்தியாவில் அதிகம். இதுவும் உண்மை தானே? ஆனால் இது போன்ற அடிப்படை துணுக்குச் செய்திகளை விட மற்ற விசயங்கள் தான் ஆச்சரியமானது.

உலகம் முழுவதும் இருந்த முஸ்லிம் தலைவர்கள், மன்னர்கள் ஏற்றுக் கொள்ளாத கிலாபத் இயக்கத்தை நம்முடைய மோகன் தாஸ் கரம் சந்த் ஆதரித்தார்.  இன்றைய பாகிஸ்தானின் தந்தை ஜின்னா "அதுவொரு வெட்டி வேலை" என்று புறந்தள்ளியபோதும்.   இதன் காரணமாக ஜின்னா குறுகிய காலம் அரசியலைவிட்டு ஒதுங்கியும் இருந்தார். 

ஆனால் இதன் காரணமாகவே சம்மந்தம் இல்லாத ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள். இதே காந்தி லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு சுதந்திரம் என்ற வார்த்தையை உணர்வு பூர்வமாக ஊட்டியவர்.  நவகாளி, ஸ்ரீராம்பூர், கல்கத்தா போன்ற இடங்களில் உள்ள வன்முறைச் சம்பவங்களை தவிர்க்க அத்தனை முயற்சிகளையையும் தனியொரு மனிதராக இருந்து பாடுபட்டவர்.  என்னவொரு முரண்நகை?

இந்திய வரலாறு முழுக்க இது போல ஏராளமான திடுக்கிடும் சம்பவங்கள் நிறைய உண்டு.  நாமும் நம் குழந்தைகள் படித்துக் கொண்டுருக்கும் இந்திய சுதந்திரம் என்பது வேறு.  உள்ளும் புறமும் நடந்த சுதந்திர கோரங்கள் என்பது வேறு. 

இன்றைய ஊழல்களின் அளவுகளை அதன் எண்களை கூட்டிப் பார்க்க சற்று கூடுதல் நேரம் நமக்குத் தேவைப்படுகின்றது.  ஆனால் இந்தியா சுதந்திரம் பெறற இரண்டு மாதங்களில் நடந்த ஆடம்பர நிகழ்ச்சிகளைப் பார்த்த காந்திஜி, நேரு, படேல் போன்றவர்களிடம் "ஊழல்கள் மலிந்து விட்டன" என்று தனது கோபத்தை வெளிப்படுத்தினார் போன்ற செய்திகளையையும் இதே வரலாறு தான் பதிவு செய்துள்ளது.

" ஆடம்பரங்களை ஒழிக்க தலைவர்கள் எளிமையாக வாழ்ந்து காட்டுவது தான் ஒரே வழி"  என்று சொன்ன காந்தியின் வார்த்தையை அன்று இருந்த தலைவர்களுக்கும் வேப்பங்காய் போலவே இருந்தது. ஆனால் இன்று இருப்பவர்களுக்குத் தான் அந்த பிரச்சனையே இல்லை.  அது தான் முகம் முழுக்க பவுடர் பூசிக் கொண்டு ஒரு நாளைக்கு மூன்று வெள்ளை வேட்டி சட்டை உடுத்திக் கொண்டு காந்தியின் படத்திற்கு மாலை போட்டு போஸ் கொடுத்து விட்டு நகர்ந்து போக முடிகின்றதே?  

" பதவிக்கு வருகிற ஒவ்வொரு அமைச்சரும் முலலில் ஏதாவது ஒரு கிராமத்திற்குச் செல்லட்டும்.  கிராம மக்களுடன் தங்கி அவர்களது வேலைகளில் பங்கேற்று அவர்கள் உண்ணும் உணவையும் அவர்கள் அருந்தும் நீரையும் அருந்தி அவர்களது வீடுகளிலேயே உறங்கி சில தினங்களாவது பழகட்டும். அப்போது தான் மக்களின் நிலை தேவை என்ன என்பது அவர்களுக்குப் புரியும்" என்றார். நம்ம தலைகள் காந்திஜி சொன்ன இந்த வாசகத்தை படித்தால் என்ன சொல்வார்கள்?

இப்போது இந்தியாவில் உள்ள பொதுநல வழக்குகள் அரசியல் தலைகளுக்கு தலையிடியாய் இருக்கிறது. இதுவே தான் இப்போது பொது நல வழக்காக கொண்டு வந்து தோற்றுப் போன ஒரு நிகழ்வாகும்..

" ஜனாதிபதி சாப்பிடும் தினந்தோறும் சாப்பிடும் சாப்பாடு குறித்து சொல்லவேண்டிய அவஸ்யமில்லை.  அது அவர்களின் சொந்த விவகாரம்."
ஆனால் இந்தியா போன்ற ஏழை மக்கள் அதிகமாக வாழ்ந்து கொண்டுருக்கும் நாட்டில் தேவையற்ற பதவிகளாக இருக்கும் கவர்னர், ஜனாதிபதி போன்றோர்களுக்கு செலவழிக்கும் தொகையென்பது வருகின்றது?. மக்களின் வரிப்பணம்? 

இவர்கள் ஓய்வு பெற்ற பிறகும் கிடைக்கும் ஓய்யூவுதியம் முதல் மற்ற படிகள் வரைக்கும் இவர்கள் பாடைக்குச் செல்லும் வரை எப்போதும் போல கிடைத்துக் கொண்டுருக்கும். இப்போது சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உழைத்த உழைப்பிற்கு குண்டக்க மண்டக்க சம்பளத்தை வேறு ஏற்றியுள்ளார்கள். 

இது குறித்து எந்த குடிமகனும் கேள்வி கேட்கக்கூடாது. இது போன்ற நிகழ்வுக்கென்று இருப்பது தான் இந்திய இறையாண்மைச் சட்டம்.  எதைப் பற்றி விவகாரமாக கேட்டாலும் நீ இந்தியனா? என்று ஒற்றைச் சொல்லில் நம் பெரியவர்கள் நம்மை நோக்கி அவர்களின் ஒரு விரலைக் காட்டுவார்கள்.   ஆனால் மூன்று விரல்கள் அவர்களை நோக்கி காட்டிக் கொண்டுருப்பதை மறந்து போய்விடுகிறார்கள். ஒவ்வொரு சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் மீதும் உள்ள கொலை கொள்ளை கற்பழிப்பு வழக்கென்பது பத்திரிகைகளுக்கு பரபரப்பு சமாச்சாரம். படிப்பவர்களுக்குச் செய்தி.  சமூகத்திற்கு?

காந்தி என்ற கிழவன் வாழ்ந்து கொண்டுருந்த போது சற்று பயந்தாவது ஆட்சியில் இருந்தவர்கள் சற்று யோசித்துக் கொண்டு தங்களை அடக்கி வாசித்திருக்கக்கூடும். அவர் சுட்டுக் கொல்லப்பட்டு இறந்த போது அவரின் கொள்கைகளை பிடிக்காதவர்களுக்கு ஒரே ஒரு நோக்கம் தான் இருந்தது.  இவர் ஒரு முஸ்லீம் ஆதரவாளர் என்பதே. ஆனால் அன்றைய இந்து மத ஆதரவாளர்களை விட "இந்தாளு எப்படா சாவார்?" என்று காத்துக் கொண்டுருந்தவர்கள் அநேகம் பேர்கள். இவர்கள் காந்தியுடன் அவரின் கொள்கைகளையும் சேர்த்து புதைத்து மகிழ்ந்திருக்கக்கூடும். மகிழ்ந்தவர்கள் உருவாக்கிய ஜனநாயக கொள்கைகளில் இருந்து மலர்ந்து வந்துள்ளது தான் இன்றைய இத்தாலி ஆளுமை.  

காந்தி தாத்தா நீங்க கவலைப்படாதீங்க.  


உங்க பெயரை சம்மந்தம் இல்லாமல் இந்தியாவில் உள்ள பல பேர்கள் வைத்துக் கொண்டு வாழும் இந்த தலைமையை ஏற்றுக் கொள்ள இந்த குடியரசு தினத்தில் உறுதியேற்றுக் கொள்கின்றோம்.  காரணம் உங்க பெயரை ஏதோவொரு வழியில் நாங்க உச்சரித்தே ஆக வேண்டும் அல்லவா?.

20 comments:

எஸ்.கே said...

இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

துளசி கோபால் said...

காந்தி இல்லாம ஒரு நாளும் இங்கே நகராது நம்ம வாழ்க்கையில். நான் 'நோட்டை'ச் சொன்னேன்.

எப்படி அவர் படத்தைப்போட்டு ஊழலில் அவருக்கும் பங்கு வச்சுட்டாங்க பார்த்தீங்களா!!!!!!


'குடி 'அரசு தினத்திற்கான இனிய வாழ்த்து(க்)கள்.

தமிழ் உதயம் said...

இவ்வளவு பிரச்சனைகளில் இருந்தும் உங்களுக்கு விடிவு வேணுமா. நீங்களும் கை தேர்ந்த அரசியல்வாதியாக மாறுங்க. இன்னுமொரு கலைஞரா, இன்னுமொரு ராமதாஸா... உங்களை பற்றி யாரும் கவலைப்படாதப்ப, நீங்க ஏன் யாரைப்பத்தியும் கவலைப்படணும். அரசியல்வாதியாக மாறுங்க.

Murasoli Mran said...

குடியரசு தினமா? இலங்கை இனப்படுகொலை யின் போது கருணாநிதியும் அவர் மகளும் 'இந்தியப்பேரரசு' ,'இந்தியப்பேரரசு' என வாய் வலிக்காமல் சொன்னது அனைவருக்கும் மறந்துவிட்டது. இந்திய மகாராணி சோனியா என்பதையும் ,அவருக்கு கை கட்டி சேவை செய்யும் சிற்றரசு கருணாநிதி என்பதையும் பூடகமாக சொன்னார். குடியரசு எங்கே உள்ளது ?

'பரிவை' சே.குமார் said...

குடியரசு தின வாழ்த்துக்கள்!

சி.பி.செந்தில்குமார் said...

அடேங்கப்பா.. எப்படி சலிக்காம டைப்பறீங்க..எனக்கெல்லாம் 3 பேரா டைப் பண்ணுனாலே...கை வலிக்குது..

arasan said...

நல்ல பதிவை எங்களுக்கு வழங்கியமைக்கு மிக்க நன்றிங்க

சென்னை பித்தன் said...

//உங்க பெயரை சம்மந்தம் இல்லாமல் இந்தியாவில் உள்ள பல பேர்கள் வைத்துக் கொண்டு வாழும் இந்த தலைமையை ஏற்றுக் கொள்ள இந்த குடியரசு தினத்தில் உறுதியேற்றுக் கொள்கின்றோம்.//
உறுதியெடுப்பதா??இதுதான் ஐயா நம் தலையெழுத்து!கட்டுண்டோம்;
பொ-று-த்-தி-ரு-ப்-போ-ம்.......காலம் மாறும்?!

vinthaimanithan said...

உ.த அண்ணனுக்கு இப்படி ஒரு கடும் சவாலா?

இப்படியெல்லாம் பிபி எகிர்றத விட்டுட்டு வாங்க அப்டியே போயி அர்ஜூன், விசியாந்து படம் பாத்துட்டு அப்பாலிக்கா ஆரமிக்கப்போற வேர்ல்ட் கப்பு போட்டிக்குப் போயி "கமான் இண்டியா கமான்"னு கூவி 'தேசபக்தி'ய காட்டிட்டு வருவோம்

Unknown said...

ஒன்னும் சொல்றதுக்கு இல்ல ....

வெத்து வேட்டு said...

இப்போது எல்லா விதமான செய்திகளும் உடனுக்குடன் உலகம் முழுவதும் பரவுகிறது...
இனி இந்திய அரசியல்வாதிகளை எல்லோரும் திருடர்கள் மாதிரி தான் பார்ப்பார்கள்..
ஆகவே..இனி திருந்தி தான் ஆகவேண்டும் (அல்லது திருட்டு ஆவது வெளியில் தெரியாத மாதிரி செய்யோணும் )
ஆனால் முடியுமானால் உங்களை போன்று மக்களை பற்றி கவலை படுபவர்களும் அரசியலுக்கு அல்லது கிராம/நகராட்சி மன்றங்களுக்கு வரவேண்டும்..
தமழ்நாட்டில் ஒரு சரியான ஆட்சி நிகழும் என்றால்..தமிழன் வாழ்வான்..இல்லை என்றால் காலத்தோடு கரையவேண்டியது தான்..

உமர் | Umar said...

//உ.த அண்ணனுக்கு இப்படி ஒரு கடும் சவாலா?//

ரிப்பீட்டு

Bibiliobibuli said...

சரி, சரி விடுங்க. ஓர் இந்திய குடிமகனின் ஆதங்கத்தை கொட்டியிருக்கிறீர்கள். உங்களுக்கும் கீழே ஈழத்தமிழர்கள் உள்ளார்கள் என்று சந்தோசப்படுங்கள்.

அடுத்த மாதம் அங்கே சிங்களத்தில் தானே யாழ்ப்பாணத்தில் தேசியகீதம் பாடப்போகிறார்கள்.

Saminathan said...

விந்தைமனிதன் said...

//இப்படியெல்லாம் பிபி எகிர்றத விட்டுட்டு வாங்க அப்டியே போயி அர்ஜூன், விசியாந்து படம் பாத்துட்டு அப்பாலிக்கா ஆரமிக்கப்போற வேர்ல்ட் கப்பு போட்டிக்குப் போயி "கமான் இண்டியா கமான்"னு கூவி
'தேசபக்தி'ய காட்டிட்டு வருவோம் //

க க போ....

Thekkikattan|தெகா said...

சுருக் நறுக்கென்று எகிறு எகிறுன்னு எகிறியிருக்கீங்க...

//கிராம மக்களுடன் தங்கி அவர்களது வேலைகளில் பங்கேற்று அவர்கள் உண்ணும் உணவையும் அவர்கள் அருந்தும் நீரையும் அருந்தி அவர்களது வீடுகளிலேயே உறங்கி சில தினங்களாவது பழகட்டும். அப்போது தான் மக்களின் நிலை தேவை என்ன என்பது அவர்களுக்குப் புரியும்"//

அது விவரம் தெரியாத சொல்லியிருப்பாரு. நம்மாளுங்க அங்கும் போயி களப்பணி ஆற்றி, வேறு எங்கெல்லாம் பணத்தை அதெக்கென ஒதுக்கி லபக்க வாய்ப்பா இருக்கும்னு வேண பயன்படுத்திக்குவாங்க.

ஏன் பாராளுமன்றத்திற்குள்ளர இருக்கிற மூஞ்சியெல்லாம் என்ன செவ்வாய் கிரகத்தில இருந்து வந்த மாதிரியா இருக்கு? ஒரு புகைவண்டி பயணம் இந்தியாவை குறுக்காக வெட்டி பயணம் சென்றாலே என்ன தேவைன்னு தெரிஞ்சி போயிடுமே!

இதெல்லாம் முத்தி போன வியாதி ஸ்டேஜ்ல இருக்கு ஜோதிஜி... மண்டை போனாகூட திருந்தாதுங்க.

ஜோதிஜி said...

ரதி தெகாவின் விமர்சனத்தை

விந்தைமனிதன் கும்மி நம்ம பூந்தளிர் சாமி போன்றோர்களுக்கு டெடிகேட் செய்றேன்.

ஒன்று சேர் said...

12 லிருந்து 14 மணி நேர பனியன் பணி போக மீத நேரத்தில் 4 தேவியர்களுக்கு நடுவில் இருந்து கொண்டு அவ்வப்போது எழுதிவிடுகிறீா்களே-நிறைய யோசிக்கிறீா்கள் /வாழ்த்துக்கள் ஜோதி கணேசன்

ப.கந்தசாமி said...

ஆஜர்.

http://thavaru.blogspot.com/ said...

"இந்தியா ஒளிர்கின்றது" அன்பின் ஜோதிஜி

தாராபுரத்தான் said...

பாட புத்தகத்தில் போடும் அளவுக்கு பதிவு போயிக்கிட்டு இருக்குதுங்க.