"எவ்வளவு அடிச்சாலும் இவன் தாங்குறான்டா? இவன் ரொம்ப நல்லவன்டா!" என்ற வசனம் எவ்வளவு நமக்கு சிரிப்பை தந்ததோ அந்த அளவிற்கு உலகத்தில் உள்ள தமிழன் என்ற இனத்திற்கும் இந்த "அடிவாங்குதல்" என்பது இன்று வரையிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது,
இலங்கையில் நடந்து கொண்டுருக்கும் நிகழ்வுகள் தொடக்கத்தில் தலைப்புச் செய்தியாக இடம் பிடித்தது. பிறகு படிப்படியாக மாறி இன்று தினந்தோறும் துணுக்குச் செய்தியாக மாறிவிட்டது.
மலேசியா என்பது அன்று முதல் இன்று வரையிலும் உள்ளே "ஒருவிதமாக " நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் தந்திர வலையில் மந்திரமாய் மாயமாய் எல்லாமே வெளியே வந்து விடுவதில்லை.
இந்தியாவிற்குள் உள்ளே மாநிலங்களுக்குள் அனைத்து இடங்களிலும் பண்டிகை கொண்டாட்டங்கள் போல வருடத்திற்கு ஒரு முறை இல்லாவிட்டாலும் " பழைன கழிதல் புதியன புகுதல்" என்ற கோட்டிபாட்டின்படி மறைமுக கொண்டாட்டங்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. இருக்கும். ஆனால் எதுவுமே முழுமையாக மொத்த பின்புலமும் நம்மிடமும் வந்து சேர்வதில்லை.
அதிகாரம், ஆளுமை, அரசியல் கணக்கு இத்தனைக்கும் மேல் சகோதரத்துவத்தை பேணி காக்க வேண்டிய அவஸ்யமான ஜனநாயகத்தின் மேல் உள்ள அக்கறை.
மென்பொருள் துறையில் அத்தனை இடங்களிலும் கோலோச்சிக் கொண்டுருப்பவர்கள் நம்முடைய தமிழர்கள் என்ற கணக்கு விந்தையானது. காரணம் இந்தியா என்பதே சிறுபான்மையினரின் கணக்கு கொண்டு தானே அத்தனை ஆள்பவர்களின் அக்கறையும்? வெளியே படம் காட்டிக்கொண்டு அத்தனை மத மக்களையும் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்?
இன்றைய இலங்கை தமிழர்களின் வாழ்வியல் தடங்களை, பிரச்சனைகளை எந்த பாகுபாடும் இல்லாமல் அத்தனை ஊடகங்களும், சரித்திர சான்றுகளை, பட்டபாடுகள், கொண்ட ஒப்பந்தங்கள், அழிந்த கணக்கு என்று எல்லாவிதங்களிலும் தொடராகவே எழுதி வருகின்றன,
உணர்ச்சி வேக தமிழனாக இருப்பதால் படிப்பதை பாதியில் விட்டு விடுவோம் அல்லது உடனே மறந்து அடுத்த சுவாரசியத்திற்குள் நுழைந்து விடுவோம். எல்லா வரலாற்று பக்கங்களிலும் "எதிர்மறை நியாயங்கள்" இருக்கத்தான் செய்கின்றன.
உடனடியாக தவறு என்றோ சரி என்றோ உடனடி தீர்வுக்கு கொண்டுவர முடிவதில்லை. பிரபாகரன் என்று ஆளுமை என்னைப் போன்ற எத்தனை இளைஞர்களுக்கு ஆதர்சணமோ அந்த அளவிற்கு உள்ளே இன்றுவரையிலும் இன்னல்பட்ட, பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழர்களின் வாழ்க்கையும் அத்தனை கொடுமையானது? இன்று வரையிலும் இந்த கடுகு நாட்டுக்குள் நடக்கும் காரமான சமாச்சாரங்கள் கண்ணீரை வரவழைத்தாலும் "இப்படி எல்லாம் கூட மனிதர்கள் தற்போதைய நவீன வளர்ச்சி அடைந்த காலத்திலும் இருப்பார்களா?" என்று அத்தனை இலங்கையில் ஆளுமை செய்தவர்களையும் பார்த்து வியப்பாக இருக்கிறது.
ஆண்ட, ஆள்கின்ற வீபரித மனிதர்களை நாம் சுட்டிக்காட்டுவதற்கு முன் நம்முடைய தமிழ் இனம் என்பதன் தொடக்கம், வாழ்வியல், தடங்கள், ஏன் இன்று வரைக்கும் தொடர்ந்து கொண்ட இருக்கிறது? என்ன காரணங்கள்? என்பதை பார்க்க வேண்டும்.
நம்முடைய கைகள் அவர்களை சுட்டிக்காட்டும் ஒரு விரலைப் போல மூன்று விரல்கள் நம்மை நோக்கி பார்க்கின்றது என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது?
இலங்கை வரலாறு என்பது இந்தியாவின் சுதந்திர வரலாற்றைப் போல புதைக்கப்பட்ட ரகஸ்யங்கள் அல்ல. இது இன்று வரையிலும் ரத்தமும் சதையுமாய் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏதோ ஒரு ஊடகத்தின் வழியே உங்களை வந்து தாக்கிக்கொண்டே தான் இருக்கிறது. உங்களுக்கு அரசியல் ஈடுபாடு , தேவையில்லாத சமாச்சாரங்களில் தலையிட விரும்பாமை என்று எத்தனையோ காரணங்கள் இருந்தாலும்? ஆனால் இப்போதைய இந்த கால கட்டத்தில் மொத்த தமிழர்களின் வாழ்வியலை நாம் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்,
இந்த இடுகைக்காக , இலங்கை குறித்து, தலைவர்கள் குறித்து, வேதனைகள், கடிதங்கள், என்று எழுதிய அத்தனையும் மாற்றம் பெற்றுவிட்டது. காரணம் வாழ்வியலை தெரிந்து கொள்ளவதை விட இது ஒரு பரபரப்புக்குண்டான வார்த்தைகளின் ஜலமாக இருந்து விடக்கூடாது என்பதற்காக.
வெறுப்போ, அச்சமோ. அவசரமோ இல்லை. இதற்காக உழைத்த உழைப்பு வீணாகிப்போய்விடக்கூடாது என்பதற்காக.
ஆனால்?
"தமிழன் என்ற ஒரு இனம் உண்டு".
"தமிழன் என்று சொல்லடா"
"வீழ்வது நாமாக இருந்தாலும்"
"முன் தோன்றா மூத்த குடி"
"உலகின் மூத்த மொழி"
"வள்ளுவத்திற்கு பிறகு வேறொன்றா?"
இன்னும் எத்தனை எத்தனை மொழிகள், பகிர்தல்கள், வாய் மொழிகள்?
ரிஷிகள், ஞானிகள், கணக்குகள் நமக்கு உண்மையான ஞானத்தை முழுமையாக தந்து விடவில்லை. அமைதியாய் வாழ்வதே வாழ்வின் சிறப்பு என்று மட்டுமே சொல்லித்தந்து சென்றவர்கள், அடக்குமுறை நம் மீது திணிக்கப்படும் போது நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்பதைப்பற்றி சரியான புரிதல் ஏதும் அவர்கள் நமக்கு அளித்துச் செல்லவில்லை.
பண்பாடு, கலாச்சாரம், கண்ணியம், கட்டுப்பாடு, ஒழுக்கம் என்ற ஐம்பூதங்களையும் அக்கறையாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லிச் சென்றவர்கள் கரை தாண்டி சென்றவர்களின் வாழ்க்கை கண்ணீரில் மிதக்கும் போது?
அவர்களுக்கு கை கொடுக்க இன்றைய இந்திய தமிழ்நாட்டு தலைவர்கள் போல் யாரும் இருக்க மாட்டார்கள். அங்கே இருக்கும் ஒற்றுமையற்ற தலைவர்கள் போலவே, பாதி கடலில் நின்ற வணங்காமண் கப்பல் போல பரிதாபமாய் பாதியில் நிற்கும்.
ஆனால் இன்று எந்த மொழியிலும் காணாத சோகம் தமிழ் மொழியில், அதைப்போலவே உலகில் எந்த இனமும் இந்த அளவிற்கு கேவலம் அடைந்தது இல்லை என்று கூசிப்போகும் அளவிற்கு இலங்கையில் தமிழர்களின் வாழ்வியல் அவலங்கள் நம் கண்முன்னே காட்சியாய் தினந்தோறும் நம்மை வந்து அடைந்து கொண்டுருக்கிறது.
ஏன் என்பதை முதன் முதலில் பண்டையகாலத்து சோழ மரபு என்ற நம்முடைய முன்னோர்களின் பாதையில் இருந்து பயணிக்க வேண்டும். பின்னோக்கி பார்த்தால் தான் இன்று உங்கள் முன்னோக்கி விரிந்து பயம் காட்டிக்கொண்டுருக்கும் காட்சிகளின் உண்மைகள் புரியும்?
ஈழப்பிரச்சனைகளுக்கும் பண்டைய தமிழ் மன்னர்களுக்கும் என்ன சம்மந்தம் என்று கேலி செய்கிறீர்களா? உங்கள் அத்தனை கேள்விகளுக்கும் இந்த மன்னர்கள் தரும் பதில் மூலம் பிரபாகரன் வரைக்கும், இன்று நானும் சகிப்புத்தன்மையுடன் வாழ்ந்து கொண்டுருப்பது வரைக்கும் புரியும். உண்மை,
மூலத்தில் இருந்து முகவரி இழந்து முள் கம்பிகளுக்கு பின்னால் வாழும் வரைக்கும் உண்டான தமிழனத்தின் தொடர் நிகழ்வுகள்
12 comments:
ஜோதீஜி சார்,
நல்ல பதிவு,மனசு கஷ்டமாஇருக்கு.
வேறு ஒண்ணும் செய்ய முடியலை.
என் லைன் மேனேஜர் ப்ரிட் அவன் என்னிடம் ஏன் இந்தியா இந்த மாதிரி ஒரு நெகெடிவ் சப்போர்ட் தருதுன்னு கேட்டு, அவன் போக இருந்த இலங்கை சுற்றுலாவையும் காறி துப்பி ரத்து செய்துவிட்டான்.
நாம் என்ன செய்ய முடியும்? சொல்லுங்க?
துயரத்தின் வரலாற்றைப் படைப்பதும்,படிப்பதும் எவ்வளவு துயரமான செயல் என்பதை உணர்கிறேன்.
ஆனால் இந்த ஆய்வின் முகவுரையே நீண்டு கொண்டிருப்பது போல எனக்கு ஒரு தோற்றம்,ஜோதிஜி.
தெளிவு படுத்தவும்.
நன்றி. வேறுவழியில்லை. 350 சுதந்திர அடிமையின் பின்னால் உள்ளவைகளை ஒருங்கே 51 தலைப்பில் கொண்டு வர முடிந்தது. காரணம் அஹிம்மையும் அதன் பின்னால் ஹிம்சையும் இருந்தது. ஆனால் இங்கு தொடக்கம் முதல் நான் பார்த்த வரையில் இங்கு ஹிம்சையும் தந்திர அரசியலும் மட்டும் தான் இருக்கிறது. எல்லோரையும் போல பிரபாகரன் ஏன் ஆயுதம் எடுத்தார்? ஏன் இன்று இந்த மக்களுடைய அவல வாழ்க்கையில் வந்து முடிந்தது? இரண்டு கேள்விகளுடன் மொத்த வாழ்ந்து விட்டு போன தமிழ் மன்னர்கள் குணாசிதியங்கள் தான் என்ன? என்று ஆராய்ந்து பார்க்கும் போது தெளிவாக தெரிவது?
தமிழர்களின் ஓற்றுமையின்மை 3000 வருடங்களாக,
தெளிவான நோக்கம் இல்லாத தன்மை. பின்னால் வருகின்ற 9 தலைப்புகள் நீங்கள் படிக்கும் போது உங்கள் தமிழ் ஆசிரியர் நிணைவில் வருவார். பிரிந்த மொழி வாரி தமிழ்நாடு வரைக்கும் உங்கள் நினைவில் உள்ளவைகளை பதிந்து விட்டு தான் இலங்கை தீவுக்குள் போக வேண்டும். இப்போது தான் இங்கிருந்து போன அங்கு வாழ்ந்த தொடக்க தமிழ் தலைவர்களின் குணாதிசியமும், அவர்கள் இட்டுச் சென்ற அவல வாழ்வில் மிச்சமும் சொச்சமும் தான் பிரபாகரன் என்பவரின் குணாதிசியங்கள் உங்களுக்கு புரியும். புரிதல் இருந்தால் தான் இது வரலாற்று சம்பவம். இல்லாவிட்டால் இது ஒரு பரபரப்பு செய்தியாக முடிந்து விடும்.
எழுதுங்கள்
:(
வாசிக்க காத்திருக்கிறோம்.
ம்ம்..
:(
//
புரிதல் இருந்தால் தான் இது வரலாற்று சம்பவம். இல்லாவிட்டால் இது ஒரு பரபரப்பு செய்தியாக முடிந்து விடும்.
//
சரிதான் அய்யா...எல்லோரும் புரிதல் இல்லாமல் அவசர பரபரப்பில் எல்லா விஷயங்களையும் எடுத்துக்கொள்வதால் தான் எல்லாம் பட்டுப் பூச்சியின் வாழ்வுபோல் விரைவே மறந்துவிடுகிறது, மற்றோர் புதிய விஷயம் ஆக்கிரமித்துக்கொள்கிறது. செலெக்டிவ் அம்னீஷியா என்பார்களே அதுபோல் இருப்பதால்தான் அரசியல்வாதிகளால் இன்றும் ஏமாற்றி மக்களை நாசப்படுத்த முடிகிறது. மற்ற இனத்தாருக்கு இருப்பதுபோல் தமிழர்களுக்கிடையே ஒற்றுமை இல்லை. கோபப்படவும், ஆவேசப்படமட்டும்தான் நமக்கு நன்றாய் தெரிகிறது. அதுதான் நம்மையெல்லாம் இந்த அவல நிலைக்கு கொண்டுவந்திருக்கிறது என எண்ணுகிறேன்.
ஆவலாயிருக்கிறேன், உங்களின் எழுத்துக்களை வாசிக்க...
பிரபாகர்.
மற்ற இனத்தாருக்கு இருப்பதுபோல் தமிழர்களுக்கிடையே ஒற்றுமை இல்லை. கோபப்படவும், ஆவேசப்படமட்டும்தான் நமக்கு நன்றாய் தெரிகிறது. அதுதான் நம்மையெல்லாம் இந்த அவல நிலைக்கு கொண்டுவந்திருக்கிறது என எண்ணுகிறேன்.
தொடருக்கு வாழ்த்துக்கள். அறிந்து கொள்ள பல விஷயங்கள் இருக்கிறது.
ஜோதிஜி, உங்கள் கருத்துடன் எனக்கும் ஒப்புமை இருக்கிறது. தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லாததாலேயே ஒவ்வொரு துறையிலும், ஊரிலும் சிறுமைப்பட்டுக் கொண்டும், பெற வேண்டிய உரிமைகளைப் பெறாமலும் இருக்கிறோம்.
இழக்கக் கூடாததை தவிர்க்க
தெரியாத தமிழர் நாம்.
Post a Comment