Tuesday, January 09, 2018

ஆன்மீக அரசியல்



ஆன்மீக அரசியல் என்றால் என்ன?

தீபம் காட்டும் அய்யருக்கு நூறு ரூபாய் போட்டு விட்டு கோவிலை விட்டு வெளியே வரும் போது அங்கே கோவில் வாசலில் பிச்சை எடுப்பவர்களைப் பார்த்து நாடு முழுக்க சோம்பேறிகள் அதிகமாகிவிட்டார்கள் என்று நாட்டைப் பற்றி கவலைப்படுவது.

+++++++++

திருப்பூரில் ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு சாயப்பட்டறைகள், சலவைப்பட்டறைகள் முழு வீச்சாக 700 க்கும் மேற்பட்ட ஆலைகள் இயங்கிக் கொண்டிருந்த போது திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள். கட்டுமஸ்தான தேகம் உள்ள அவர்கள் சாயப்பட்டறைகளில் பணிபுரிந்தனர். ஒடுக்கப்பட்ட, சொந்த ஊரில் வாழ வழியில்லாதவர்களின் வருமானத்திற்குத் திருப்பூர் உதவுவதாக இருந்தது. 

திருப்பூர் எல்லைப் புறத்தில் உள்ள சிறிய திரையரங்கங்களில் நிச்சயம் விஜயகாந்த் படம் தான் ஓடிக் கொண்டிருக்கும். எம்.ஜி.ஆரின் பழைய படங்களுக்கு எப்போதும் எந்த அளவுக்குக் கூட்டம் சேருமோ அதைப் போலவே விஜயகாந்த் படங்களுக்கும் மதிப்பு இருந்தது. 

இன்று வரையிலும் தொலைக்காட்சியில் விஜயகாந்த் படங்களைப் பார்க்கும் போது அவர் பேசும் நீண்ட வசனங்களையும், அவர் படிப்படியாகத் தன்னை மாற்றிக் கொண்டே வந்த வித்தைகளையும் ஆச்சரியமாகக் கவனிப்பதுண்டு. பதிவில் விஜயகாந்த் அதிர்ஷ்டக்காரர் என்று எழுதினேன். எவரும் யோசிக்க முடியாத அளவிற்குப் பா.ம.க கோட்டைக்குள் புகுந்து பிடரியை உலுக்கியது முதல் ஆச்சரியம். பத்துச் சதவிகிதம் ஓட்டு என்பது பழம் தின்று கொட்டை போட்டவர்களைப் பயப்பட வைத்தது. கடைசியில் என்ன ஆனது? 

"என் கணவன் கள்வன் அல்ல" என்று நீதி கேட்ட பெண்மணி அந்தக்காலம். "முதலமைச்சரின் மனைவி என்று என்னைச் சொல்ல வேண்டும்" என்று அண்ணியார் போராடியது, போராடிக்கொண்டிருப்பது இந்தக் கால அரசியல் அவலமாக முடிந்தது. அவரும் காரணம். அவரைச் சுற்றியுள்ளவர்கள் முக்கியக் காரணம். அதைவிட அவரின் பழக்கவழக்கங்கள் முக்கியக் காரணம். ஒருவர் வளரும் போது சிலவற்றை விட வேண்டும். சிலவற்றை ஒதுக்க வேண்டும். பலவற்றைப் பொறுத்துக் கொள்ளப் பக்குவத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். 

அவருக்கும் உயிர் பிழைத்திருக்கச் சிங்கப்பூர் தான் உதவிக் கொண்டிருக்கின்றது. இப்போது ஆன்மீக அரசியல் பேசுபவரை இப்படிப் பேச வைக்கக் காரணமாக இருந்ததும் சிங்கப்பூர் மருத்துவர்கள் தான். ஒன்றிரண்டு பழுதானால் ஆரோக்கியக் குறைபாடு. உடம்பு முழுக்க ஓவர் ஆயில் சர்வீஸ் செய்வது என்பது அதுவரையிலும் கற்ற வித்தைகள், காட்டிய வித்தைகளும் தந்த அன்புப்பரிசு. 

பணம் வரும் போது அது மனிதர்களின் ஆரோக்கியத்தை விலை பேசும். கூடவே பதவி வந்த பின்பு தனி மனித ஆரோக்கியம் பொதுச் சொத்தாக மாறிவிடும். சுதாரித்துக் கொண்டவர்களும், பிரித்துப் பார்க்கத் தெரிந்தவர்களும், எதார்த்தத்தை உணர்ந்து கொண்டவர்களுக்கும் உண்டான உலகம் அரசியல் உலகம். 

கள அரசியல் என்பது வேறு. அதன் மூலம் அடையப் போகும் பதவிகள் மூலம் செய்ய வேண்டிய நிர்வாக அரசியல் வேறு. மாநில அரசியல் வேறு. அதன் மூலம் புரிந்து கொள்ள வேண்டிய இந்திய அரசியல் வேறு. இத்துடன் ஒவ்வொரு நிமிடமும் இப்போது வந்து சேரும் உலக அரசியல் என்பதனை புரிந்து கொள்ள நிறையவே பக்குவம் தேவை. அதிக அளவு நிதானம், சமயோசித தந்திரங்கள் தேவை? 

கலைஞரை வெறுக்க ஆயிரம் காரணங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கக்கூடும். ஆனால் "தன்னைத் தக்க வைத்துக் கொள்ள" என்ற கலையை அவரிடமிருந்து தமிழக அரசியலில் இருந்து வேறு எவரும் அவரைப் போலக் கற்றுத் தந்துவிட முடியாது. அதனால் தான் செயல்படாமல் இருந்தாலும் கோவில் போலக் கோபாலபுரம் செல்கின்றார்கள். 

ரஜினியும் விதிவிலக்கல்ல. 

ஏ1 குற்றவாளியைத் திறமைசாலி, தைரியசாலி என்று ஊடகங்கள் தான் முன்னிறுத்தியது. இன்னமும் அந்தப் பிம்பம் உடைந்துவிடக் கூடாது என்று அதிக அக்கறை எடுத்துக் கொள்ளவும் செய்கின்றது. அதே போல ரஜினிக்கு சிறந்த ஆன்மீக வாதி என்று பட்டம் மூலம் பறக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றது. 

ஆன்மீகம் என்பது மக்களுக்கானது என்றால் அது கோவில், சாமி, அவரவர் மனதோடு முடிந்து விடும். அதற்கும் அரசியலுக்கும் தொடர்பு இருக்காது. இருக்கவும் முடியாது. ஆனால் இப்போது மற்ற மதங்களில் இருந்து இந்து மதம் வரைக்கும் மதக் காப்பாளர்கள் கையில் அரசியல் சிக்கத் தொடங்கிய போதே எதைத் தொட்டால் சலசலப்பு அதிகமாகும் என்பதனை கருத்தில் கொண்டே ரஜினிக்குப் பின்னால் உள்ளவர்கள் வகுத்துக் கொடுத்த பாதையில் ரஜினி காலடி எடுத்து வைத்துள்ளார் என்று நினைக்கத் தோன்றுகின்றது. 

உணர்ச்சி வசப்படுபவர்கள், மற்றவர்கள் எழுதிக் கொடுத்த வசனங்களை வாசித்து, சொல்லிப் பழகியவர்களுக்கு எந்தப் பதவி எந்தக் காலத்தில் கிடைத்தாலும் அவர்களால் சிறந்த நிர்வாகியாக ஆக முடியாது என்பதனை கடந்த காலத் தமிழக அரசியல் உணர்த்தியுள்ளது. அப்படியே பதவி வந்தாலும் களத்தில் இறங்கி தன்னை மாற்றிக் கொண்டு, எதார்த்தம் புரிந்து, தன்னை மெருகேற்றிக் கொண்டவர்கள் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு உள்ளனர். 

சுகவாசி வாழ்க்கைக்கு அடிமையானவர்கள் கள எதார்த்த அரசியலுக்கு ஒத்து வர மாட்டார்கள் என்பதனையும் தமிழக அரசியலில் துண்டைக் காணோம். துணியைக் காணோம் என்று ஓடிய மற்ற நடிகர்கள் பல முன் உதாரணங்களை நமக்குக் காட்டியுள்ளனர். காரணக் காரியங்கள் அடிப்படையில் மற்றொரு அடிமையாக வேண்டுமானால் சொன்னதைச் செய்யும் கூலியாகச் செயல்பட முடியும். 

பாவம் ஆன்மீகம். 

உங்கள் ஆசைக்குப் பல கோடி மக்களின் நம்பிக்கைகளை அரசியல் மூல தனம் ஆக்காதீர்கள் ரஜினி. குடியையும், புகைப்பதையும் தமிழக இளைஞர்களுக்குக் கற்றுத் தந்தவர் நீங்கள். அரசியல்வாதிகள் கைவிட்ட அவர்களை இப்போது அவரவர் எளிய நம்பிக்கைகள் தான் அவர்களை வாழ்வதற்கான காரணங்களைப் புரிய வைத்து இயக்கிக் கொண்டிருக்கின்றது. ஆதனால் தான் இன்னமும் இந்தியா துண்டு துண்டாக உடையாமல் இருக்கின்றது. 

உங்கள் ஆன்மீக அறிவை உங்கள் வீட்டில் உள்ள மூன்று பெண்களுக்குப் புரியவைத்து அவர்களை முதலில் நல்வழிப்படுத்துவதில் இருந்து தொடங்கலாமே? உங்கள் மனைவிக்கு அரசாங்க சொத்துக்கு ஆசைப்படாத ஆன்மீகத்தைக் கற்றுக் கொடுக்கலாம். வாடகை கொடுத்தால் தான் அடுத்தவர் சொத்தை அனுபவிக்க முடியும் என்ற அடிப்படை அறிவை கற்றுக் கொடுக்கலாம். அப்பாவின் புகழையாவது கவனத்தில் எடுத்துக் கொண்டு உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் கவனமாக இருங்கள்? என்ற அறிவுரைகளை இரண்டு மகள்களுக்குக் கற்றுக் கொடுக்கலாம். 

ஆன்மீகம் என்பது அரசியல் அல்ல. அது ஒவ்வொரு தனிமனிதனின் அந்தரங்கம். 

அவரவர் மதம், அவரவர் நம்பிக்கைகள் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு உண்டானது. 

வெளிச்சத்தில் இருந்து பழகியே வந்த உங்களுக்கு அந்தரங்க அறைகளில் வெளிச்சம் பாய்ச்சுவது தவறென்பதைக் காலம் புரிய வைக்கும். 

04/01/2018  ( முகநூல் குறிப்புகள் )

17 comments:

நம்பள்கி said...
This comment has been removed by the author.
நம்பள்கி said...
This comment has been removed by the author.
karu said...

Really good writing.

வருண் said...

****இப்போது ஆன்மீக அரசியல் பேசுபவரை இப்படிப் பேச வைக்கக் காரணமாக இருந்ததும் சிங்கப்பூர் மருத்துவர்கள் தான். ஒன்றிரண்டு பழுதானால் ஆரோக்கியக் குறைபாடு. உடம்பு முழுக்க ஓவர் ஆயில் சர்வீஸ் செய்வது என்பது அதுவரையிலும் கற்ற வித்தைகள்,***

I dont know about Vijaykanth, people had a good opinion on you. You wrote decent blogs for a while unlike me. Now the quality of your writing here...

I never heard of any "over-oil" service when it comes to one's health. You write like an illiterate!

All I know is anybody can become ill. You and I are not exceptions. And people get treated when they get ill, and some get recovered and some die. The latter could have happened to Rajinikanth too. It would have made you happy of course! Unfortunately it did not happen. It all depends on so many factors. Life is never fair. Good people die. Not so good people live too. Just money and sophisticated treatment are not just enough sometimes. One's body should respond for the treatment- no matter which doctor treats her/him. JJ died with all the royal treatments. People die in Singapore too. Some recover and come back alive.

I thought he got some acute lung or kidney infection. Not a chronic one. It was treated and somehow he recovered because his body responded well. People generally don't criticize such things LIKE YOU DO. Because you and I can get unhealthy/ill too. Only an INDECENT GUY would describe the way you have described. You were a decent guy once. Not anymore!

When your friends Pattaapatti and Raja Narayanan passed away, you described those happenings like a decent gentelman- forgiving their bad habits if they had any such. I dont see that Ganesan when describing one another human beings' ILLNESS!

in ANY CASE,
You are saying Vijaykanth failed unlike what you predicted. So, you believe Rajinikanth will fail too.So be it.

If so, why does his political entry bothers you so much???!! Are you afraid that your prediction is going to go wrong this time too??!!

Are you saying aanmeegam = antharangam???!! Where did you learn that??

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ஆன்மீக அரசியல் என்ற சொல்லுக்கான அருமையான விளக்கம். நம் நாட்டு அரசியலில் எதுவும் நடக்கும்.

G.M Balasubramaniam said...

முதலில் அரசியலில் ஈடுபடுவது என்றால் பதவிக்கு வருவது என்பது போல் தோன்றுகிறது . அதற்கு ஆன்மீகம் என்று எதையாவது சொல்லி தன்னை வித்தியாசமாகக் காட்டிக் கொள்வதுமொன்றோ

அது ஒரு கனாக் காலம் said...

உங்கள் அதீத பாசத்தால் கருணாநிதி பற்றியோ, ஸ்டாலின் பற்றியோ , அல்லது கனிமொழி பற்றியோ ஒன்றுமே எழுதவில்லை , கருணாநிதி சாதிக் பாட்சா என்ற ஒரு தலைவரை பக்கத்திலேயே வைத்து இருந்தார் , ரம்ஜான் நோன்பு சாப்பிட்டு , இந்து மத கோட்பாடுகளையோ அல்லது சம்பவத்தையோ அல்லது இந்து கடவுளையோ நிந்தித்து , ஆன்மீக நம்பிக்கை உள்ளவர்கள் மனது புண் படுமாறு எத்தனையோ சொல்லியிருக்கிறார் , அது என்ன அரசியில் , பகுத்தறிவு அரசியலா .

கடை வாடகை கொடுக்க வேண்டும் , மாற்று கருத்தே கிடையாது , கருணாநிதி அண்ட் கும்பல் என்ன கடை நடத்தினார்கள் இவ்வளவு பணம் வருவதற்கு . பதில் சொல்லமாடீர்கள் , உடனே அம்மாவும் இப்படித்தானே என்று ..இப்போ தானே தெரிகிறது அம்மாவுக்கு பின்னால் இப்படி ஒரு மாபியா இவ்வளவு பெரிது என்று.


ஓன்று உங்கள் கருத்துடன் உடன் படுகிறேன் , குழந்தைகளை சரியாக வளர்க்கவில்லை என்று மேலோட்டமாக தெரிகிறது . நிச்சயம் அந்த கவலை அவரிடம் இருக்கும், மரணம் வரை .

ஆன்மீக அரசியல் என்றால் எந்த ஒரு பிரிவை சேர்ந்தவர் என்றாலும் மனம் புண்படாத படி நடந்து கொள்வது . அவரவர்க்கு அவர் மதம் - அல்லது கொள்கை . நிச்சயம் திராவிட அரசியலுக்கு எதிர் புறம். let us wait and see

Amudhavan said...

உங்களுக்கு நிறைய எதிர்வினைகள் வரும் கட்டுரை இதுவாகத்தான் இருக்கப்போகிறது என்று நினைக்கிறேன்.

ஜோதிஜி said...

சுந்தர் தான் இதை எழுதியதா? என்று நான் மீண்டும் கிள்ளிப் பார்த்தேன். பொங்கி விட்டீர்கள்? உங்கள் கருத்துக்கு தனிப் பதிவாக எழுதுகிறேன். முதல் முறையாக மனதில் நினைத்ததை அப்படியே எழுதியது என் மேல் உள்ள உரிமையில் என் தளத்தில் தான் நீங்க எழுதியிருக்கீங்க என்று நினைக்கிறேன். நன்றி.

ஜோதிஜி said...

காற்று வரட்டும். மாசு மறையட்டும். நன்றி.

ஜோதிஜி said...

சாதி, மதம், நம்பிக்கைகள் இதன் மூலம் கவனம் செலுத்தினால் அரசியலில் உடனடி கவனம் கிடைக்கும்.

ஜோதிஜி said...

காரணம் மக்களின் அறியாமை.

ஜோதிஜி said...

நன்றி வருண். எனது கருத்தை தனிப் பதிவாக எழுதுகிறேன்.

ஜோதிஜி said...

நன்றி கரு

GANESAN said...

உண்மை .

GANESAN said...

அத்தனையும் உண்மை . உண்மை கசக்கும் . எதிர்ப்பை வரவழைக்கும் . வாழ்த்துக்கள் திரு .ஜோதிஜி..

SENTHIL KUMARAN said...

SUPER SIR