பாட்காஸ்ட் குறித்து நண்பர்களுக்குப் பெரிய குழப்பம் இருக்கும் என்றே எனக்குத் தோன்றுகின்றது. பலருக்கும் அதனைப் பற்றி அதன் முக்கியத்துவம் குறித்துப் புரியவில்லை என்றே நினைக்கின்றேன்.
சில தினங்களுக்கு முன் அமேசான் கிண்டில் செயலி குறித்து விளக்கமாக எழுதி இருந்தேன். கோவையிலிருந்து தம்பி தரவிறக்கம் செய்து வாட்ஸ்ஆப் வாயிலாக உறுதிப் படுத்தி இருந்தார். மகிழ்ச்சி.
நாம் மனத்தடைகளுடன் இருப்பதால் எதைப் பார்த்தாலும் பயம். உள்ளூர இருக்கக்கூடிய அச்ச உணர்வு புதிய வாய்ப்புகள் பக்கம் நம்மை நகர விடாமல் குண்டுச் சட்டிக்குள் கழுதை மேய்க்க வைத்துக் கொண்டே இருக்கின்றது என்பதனை உணரும் போது வயது அறுபது ஆகி விடுகின்றது. கடைசியில் என்ன? கழிவிரக்கத்துடன் அடுத்தவர்களைப் பார்த்து பொறாமையுடன் புலம்பி கடைசியில் போய்ச் சேர வேண்டியது தான்.
வானொலி இருந்த வரைக்கும் நாம் செய்து கொண்டு இருந்த வேலைகள் நிற்காது. அதே சமயத்தில் பாடல்களைக் கேட்டுக் கொண்டே நாம் நம் கடமையைச் செய்து கொண்டே இருந்தோம். தொலைக்காட்சி பரவலாக அறிமுகம் ஆனதும் அதன் முன்னால் அமர்ந்து நாம் நம் கடமைகளைத் தியாகம் செய்து நேரம் ஒதுக்கி யாருக்காகவே அழ வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டோம்.
ஆனால் பாட்காஸ்ட் என்பது உங்கள் நேரத்தைத் திருடாது. இதுவும் வானொலி போலத் தான். இதனைத் தமிழில் செய்தியோடை என்கிறார்கள்.
பலவிதமான செய்தியோடைகள் உள்ளது.
1. கூகுள் 2. ஸ்பாட்டிபை 3. ஆங்கர்
இவை மூன்று உலகம் முழுக்க அதிகமான பேர்களுக்குத் தெரிந்த செயலி ஆகும். ப்ளே ஸ்டோரில் சென்று உங்கள் அலைபேசியில் தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம். உங்கள் மின் அஞ்சல் முகவரி அல்லது பெயர் மற்றும் கடவுச் சொல். எப்போதும் போல.
பாடல்கள் பேச்சுகள், உரையாடல்கள் (அனைத்து மொழிகளும் உண்டு) என்று பயணம் செய்யும் போது மற்ற வேலைகள் செய்து கொண்டு இருக்கும் போது கேட்கலாம்.
கட்டணத்துடன் பிரிமியம் சேவைகளும் உண்டு.
இலவசச் சேவைகளில் பெரும்பாலான அனைத்தும் உங்களுக்குக் கிடைக்க வாய்ப்புண்டு.
(பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் கடித வரிகளை ஏன் பாட்காஸ்ட் ல் தொடர்ந்து வலையேற்றி வருகின்றேன் என்பதற்கு ஒரே காரணம் அது வெறுமனே அரசியல்வாதிகள் எப்போதும் எழுதும் கடிதம் அல்ல. அதில் சமூகவியல், சர்வதேச அரசியல், தேசிய மற்றும் மாநில அரசியல் போன்ற அனைத்துத் துறைகளையும் தெரிந்து கொள்ள முடிகின்றது)
ஃபேஸ்புக், ட்விட்டர் என்பது ஒரு அளவுக்கு மேல் உங்கள் சிந்தனைகளை வளர்க்காது. அதை விட்டு வெளியே செல்லவும் உங்களுக்கு மனமும் வராது. காட்சி ஊடகம் பக்கம் சென்றால் மொத்தமும் காலி. அது பேஸ்புக் காணொளி, ரீல்ஸ், இன்ஸ்டா ரீல்ஸ், படங்கள் கடைசியாக யூ டியூப். முடிந்தது ஜோலி.
சினிமா... சினிமா... இது தான் கடைசி வரைக்கும் உங்கள் மண்டைக்குள் இருக்கும்.
சில மாதங்கள் கழித்து உங்களை நீங்களே கவனித்துப் பாருங்கள். கட்டாயம் தமிழக தொலைக்காட்சி விவாதங்களை பார்க்கவே பார்க்காதீர்கள். அரை மெண்டல் ஆகி விடுவீர்கள்.
உங்களை உங்களுக்கே பிடிக்காமல் போக வாய்ப்புண்டு. மனரீதியாக பல மாறுதல்களும் உருவாகி இருக்கும்.
முக்கியமான மூன்று பாட்காஸ்ட் இணைப்பு கொடுத்து உள்ளேன். உலகம் முழுக்க அத்தனை வளர்ந்து நாடுகளிலும் இந்த சேவை தான் சக்கைப் போடு போட்டுக் கொண்டு இருக்கின்றது.
இதன் தொடர்ச்சியாக ஆடியோ புத்தகங்கள் வந்து கொண்டு இருப்பதை நீங்கள் அறிந்து இருக்க வாய்ப்புண்டு.
நாமும் மாறித்தான் ஆக வேண்டும்.
முந்திக் கொள்ளுங்களேன். முடிந்தால் உங்கள் நண்பர்களிடமும் தெரியப்படுத்துங்கள்.
()()()
06 December 2021
தமிழக பாஜக தலைவர் திரு. கு. அண்ணாமலை அவர்களின் ஒவ்வொரு உரையும் அறிவார்ந்த ஆச்சரியப்படத் தக்க வகையில் அமைந்துள்ளது. இது போன்ற உரை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாணவர்களையும் சென்று அடைய வேண்டும். கேட்கும் ஒவ்வொருவரும் இதனை கடமையாகச் செய்ய வேண்டும். ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் கல்வி அறிவு மூலம் தங்களை உயர்த்திக் கொள்ள முடியும் என்பதனை உணர்ந்து அம்பேத்கார் உருவாக்கிய உண்மையான கொள்கைகளையும், அம்பேத்கார் என்ற பெயரை வைத்து ஓட்டு அரசியல் செய்து தங்களையும், தங்கள் அதிகார வெறிக்காக பட்டியல் இன சகோத சகோதரிகளை காலம் முழுக்க அடிமைகளாக வைத்திருக்க விரும்புகின்றவர்களைப் பற்றி முழுமையாக புரிந்து கொள்ள திரு. அண்ணாமலை அவர்கள் பின்னால், பாஜக பின்னால் நிற்பது அவசியம்.
06 December 2021
Annamalai Kuppusamy Nov 28 பாஜக பட்டியல் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பேசிய பேச்சின் ஒலிவடிவம்
Listen to "அம்பேத்கார் வகுத்து தந்த மக்கள் பாதை மகத்தான பாதை (கு. அண்ணாமலை)" by ஜோதிஜி பேச்சு JothiG Pechu.