எனக்கு இந்த ஆட்சியின் மேல் எந்த வருத்தமும் இல்லை. விருப்பமும் இல்லை. காரணம் பத்திரிக்கையுலகமும் நீதிமன்றங்களும் திருந்தாத வரைக்கும் அரசியல்வாதிகள் அக்மார்க் வியாதிகளாகத்தான் இருப்பார்கள்.
1. உதயநிதி ரசிகர் மன்றத் தலைவர் போகின்ற இடமெல்லாம் அற்புதமாக பேட்டி கொடுத்துக் கொண்டே வருகின்றார். ஆனால் பத்துப் பைசாவிற்கு பெறுமானம் இல்லை. இதை நான் காழ்ப்புணர்வுடன் எழுதவில்லை.
2. ஒரு சின்ன உதாரணம் தருகின்றேன். கல்வி அமைச்சருக்குத் தனிப்பட்ட முறையில் ஒரு நேர்முக உதவியாளர் ஏழெட்டு வாரங்களுக்கு முன் சேர்ந்தார். அவரை பெரும்பாலானவர்களுக்குத் தெரியும். இப்போதைய முதன்மைச் செயலாளர் ஜெயச்சந்திரன் உடன் ஏற்கனவே பணியாற்றியவர். அவர் தான் கல்வி அமைச்சர் உதவியாளராக நியமிக்கப்பட்டார். தனித் தேர்வர்கள் குறித்து நண்பர் கேட்டுக் கொண்டே இருந்தார் என்று அவரை அழைத்துக் கேட்டேன். அப்படிங்களா? அந்த விபரம் தெரியவில்லையே? என்று சொன்ன போது அதிர்ந்து போனேன். அதாவது துறையில் நடப்பது என்னவென்றே அமைச்சர் முதல் அவரைச் சுற்றியுள்ள எவருக்கும் தெரியவில்லை. ஆணையர் நந்தகுமார் அவர்களை வேறொரு நண்பர் மூலம் தொடர்பு கொண்டு தகவல் பெற்றேன்.
2. கல்வி அமைச்சர் என்ன சொல்கின்றார்?
பள்ளி வரலாம். வராமலும் இருக்கலாம். பெற்றோருடன் வரலாம். வெளியே காத்திருக்கலாம். அனுமதி உண்டு. தேர்வு எழுதலாம். எழுதாமலும் இருக்கலாம். டிசம்பர் முதல் தேர்வு வைக்க எண்ணம் உண்டு. அடுத்த மூன்று மாதங்களில் பொதுத் தேர்வு உண்டு.
3. ஒரு மாணவ மாணவியர் கூடப் படிக்கத் தயாராக இல்லை. ஆசிரியைகள் செத்து சுண்ணாம்பு போல ஆகிக் கொண்டு இருக்கின்றார்கள். ஒவ்வொரு மாணவர்களும் இந்த வருடமும் தேர்வு வைக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் தான் இன்று வரையிலும் இருக்கின்றார்கள். அடிக்கக்கூடாது. பேசக்கூடாது. திட்டக்கூடாது. இன்னும் ஆசிரியர்கள் கழுவிவிட வில்லை. அதுவும் செய்தால் குழந்தைகள் போல ஆகி விடுவார்கள். பல ஆசிரியைகள் கதறுகின்றார்கள்.
4. ஒரு பக்கம் ஆணையர் ஆப்பு அடித்து நகர்த்திக் கொண்டே இருக்கின்றார். அந்தப் பயத்தில் ஆசிரியர்கள் கடந்த இரண்டு மாதங்களில் படு வேகமாக இருக்கின்றார்கள். ஆனால் அமைச்சர் என்ற பதவியில் இருப்பவர் பேசும் பேச்சு அனைத்தும் சிரிப்பைத் தருகின்றது. ஏற்கனவே ஒரு புத்திசாலி பள்ளம் தோண்டி வைத்து விட்டுப் போனார். இவர் பாதாளக்குழியை உருவாக்குவார் என்றே நினைக்கின்றேன்.
5. அமைச்சர் மற்றொரு விசயத்தைச் சொல்கின்றார். சுழற்சி முறையில் பள்ளிகள் செயல்படும் என்கிறார். காரணம் என்ன? ஆசிரியர்கள் பற்றாக்குறை? போட மனம் இல்லை. வகுப்பறை பற்றாக்குறை? உருவாக்க மனம் இல்லை. காசு இல்லை என்பார்கள். ஆனால் சுடுகாட்டை அலங்கரிக்க காசு இருக்கின்றது. மதுரையில் நூலகம் கட்ட பணம் இருக்கின்றது?
பயங்கர கேவலமாக பள்ளிக்கல்வித்துறை சென்று கொண்டு இருக்கின்றது.
மாறிய தொழில் நுட்ப உலகில் கல்வித்துறைக்கு வரக்கூடிய அமைச்சருக்கு அடிப்படை உலக அறிவு, இந்திய அளவில் உள்ள ஒப்பீடு அறிவு அல்லது குறைந்த பட்சம் நிஜமான அர்ப்பணிப்பு உணர்வு இல்லாமல் இதில் யாரையோ ஒருவரைப் போட்டுத் தான் ஆக வேண்டும் என்ற சூழலில் தமிழகக் கல்வித்துறை திமுக மற்றும் அதிமுக பினாமிகள் வேட்டைக்காடாகவே இன்னமும் உள்ளது.
கடைசியாக...
நீட் குறித்து திராவிட திருடர்கள் பொதுவெளியில் எப்படிப் பேசுகின்றார்கள்? எப்படி மடை மாற்றுகின்றார்கள்? எப்படி நாடகம் போடுகின்றார்கள் என்பதனை நாம் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றோம். சென்ற வருடம் அந்தப் புண்ணியவான் கடைசி வரைக்கும் கமிஷன் பிரச்சனையில் நீட் தேர்வுக்குத் தனிப்பட்ட ஆர்வத்தின் அடிப்படையில் அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்குப் பயிற்சி கொடுக்க வந்த ஒருவரையும் அனுமதிக்காமல் அலைக்கழித்து அவமானப்படுத்தி ஏனோ தானோ என்று மாணவர்களை மன உளைச்சல் அடைய வைத்தது தான் மிச்சம்.
இப்போது இன்று வரையிலும் அதற்கான ஏற்பாடுகள் ஒரு துளி கூட நடக்கவில்லை என்பதனை ஆதரிப்பவர்கள் யாராவது கல்வி அமைச்சர் அவர்களிடம் கொண்டு செல்லுங்கள்.
இந்த பாவம் நின்று கொல்லும் என்று உறுதியாக நம்புகிறேன்.
-----
(பசும்பொன் தேவர் திருமகனார்) நினைவு அஞ்சலி. ஒலி வடிவில் கேட்க சொடுக்கவும்.
Listen to "மீண்டும் பிறந்து வர மட்டாரா? கோவில்களை மீட்டெடுக்க மாட்டாரா? - 38"
by ஜோதிஜி பேச்சு JothiG Pechu. ⚓ https://anchor.fm/jothig/episodes/--38-e19gtiq
நான் கடந்த சில நாட்களாக வையாபுரிக்கு கட்சியை தானம் வழங்கியது. துரை வைகோ என்று பெயர் மாற்றியது தொடங்கி 28 வருடங்கள் பல ஆயிரம் இளைஞர்களின் வாழ்க்கையை அழித்த வெட்கமின்றி இன்றும் உயிரோடு நடமாடும் இவரை நினைத்து ஆச்சரியமாக உள்ளது.
--------------
இதனைப் படித்து விட்டு ஆதி தமிழிலில் மிக அழகாக அடுக்கடுக்காக எழுத விரும்புகின்றேன். தப்புங்களா பாஸ்? நான் தூங்கிக் கொண்டு இருக்கும் போது திட்டுவிங்களா பாஸ்?
நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் காமராஜர் ஒருவர் மட்டும் தூங்கிக் கொண்டிருக்கும் போது இறந்தார். வலி இல்லாமல் ஆன்மா பிரிந்தது. எப்போது இறந்தார் என்பதே அவர் உதவியாளர் வைரவனுக்கே தெரியவில்லை. வாழ்க்கை என்றால் இது தான் வாழ்க்கை. வாழ்ந்த வாழ்க்கைக்கு இயற்கை இறைவன் கொடுத்த பரிசு.
அய்யா செ. பாலாஜி ஆத்துமணல் தொடங்கி சரளை மண் வரைக்கும், டாஸ்மாக் ஹாலோகிராம் அச்சடிப்பது தொடங்கி ஸ்பிரிட் தனியாக வாங்கி தனி ஆவர்த்தனம் நடத்துவது வரைக்கும் எல்லோரும் செய்தது தான்.
விரைவில் நத்தம் விசு போல இந்தோனேசியாவில் நிலக்கரி சுரங்கம் வாங்க வாழ்த்துகிறேன்.
தொடரட்டும் உங்கள் பணி.
No comments:
Post a Comment
கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.