#கற்றுக்கொள்களத்தில்இறங்கு அமர்வில்
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை "கு. அண்ணாமலை எனும் நான்" என்ற தலைப்பில் நான் ஒரு மணி நேரம் பத்து நிமிடம் பேசினேன். இந்த தகவல் எத்தனை பேர்களுக்குத் தெரியும் என்று தெரியவில்லை. நாளை காட்சி வடிவம் கிடைக்கலாம்.
பேசிய முக்கிய தகவல்களை இங்கு எழுதி வைக்கின்றேன்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியில் அண்ணாமலை அவர்களுக்கு முன்னால் மாநிலத் தலைவராக இருந்தவர்களின் பெயர்களும் பணிபுரிந்த காலமும். இப்போது அண்ணாமலை காட்டும் வேகமும் உழைப்பும் இதற்கு முன்னால் இருந்து இருந்தால் இந்நேரம்?
முன்னாள் தலைவர்கள்
1. K. Narayan Rao 1980 to 1983
2. KN Lakshmanan 1984 to 1989
3. V. VijaRaghavalu 1990 to 1993
4. Dr. N.S. Chandra Bose 1993 to 1995
5. K N Lakshmanan 1996 to 2000
6. Dr. S. P. Kirubanithi 2000 to 2003
7. C P RadhaKrishnanan 2004 to 2007
8. L. Ganesan 2007 to 2010
9. Pon Radhakrishnan 2010 to 2014
10. Dr. Tamilisai Soundararajan 2014 to 2019
11 Dr. L. Murugan 2020 to 2021
12 K. Annamalai 2021 8 July 2021
()()()()()
#குஅண்ணாமலைஎனும்நான்"
எட்டு கோடி தமிழர்கள் என்கிறோம். ஆனால் எட்டு கோடியும் ஓட்டு போடுவதில்லை.
234 தொகுதிகளில் 88,937 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது, தமிழகத்தில் 6,28,69,995 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர், இதில் ஆண்கள் 3,09,23,651 மற்றும் பெண்கள் 3,19,39,112. தமிழகத்தில் மூன்றாம் பாலினத்தவர் பிரிவில் 7,192 வாக்காளர்கள் உள்ளனர்.
2021 தேர்தலில் நிலவரப்படி (சதவிகித கணக்குப்படி)
2021= DMK 37.65%
33.27% = AIADMK
2.60 % - BJP
மொத்தம் உள்ள 234 இடங்களில் 118 இடங்கள் ஆட்சி அமைக்க பெரும்பான்மை தேவை.
2021 ஓட்டு எண்ணிக்கை அடிப்படையில்
திமுக - 1 56 85 421
அதிமுக - 1 43 85 410
இருவருக்கும் உண்டான வித்தியாசம் பதிமூன்று லட்சம்.
பாஜக -11.80.456 பதிமூன்று மடங்கு நம்மை விட முன்னால் இருக்கின்றார்கள்.
அதாவது அந்த அளவுக்கு ஓட்டுக்களை விலை பேசி வாங்கும் அளவிற்குப் பணம் உள்ளது என்று அர்த்தம்.
முக்கிய காரணம்
கடந்த இரண்டு தேர்தல்களிடம் ஒவ்வொரு கட்சியும் பணம் செலவழித்தால், பணம் கொடுத்தால் மட்டுமே வாக்காளர்களைச் சந்திக்க முடியும். வாக்குகளைப் பெற முடியும் என்ற அதி உன்னத நிலையைத் தமிழகம் அடைந்துள்ளது.
மற்றபடி இந்த வாக்குகளைப் பெறுவது ஒன்றும் குதிரைக் கொம்பு அல்ல.
பாஜக விற்குள் இருக்கும் துரோகிகளை மட்டும் முதலில் களை எடுத்தால் போதும். அந்தப் பணியை அண்ணாமலை அவர்கள் எப்போது தொடங்குவார்கள் என்று ஒவ்வொருவரும் காத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
No comments:
Post a Comment
கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.