Letter to Thol.Thirumavalavan
அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு ஒரு கடிதம்..
என் பிரியத்துக்குரிய திருமா அண்ணன் அவர்களுக்கு
Thol.Thirumavalavan நீங்க இந்த ஐடி யில் இருப்பீர்களா? அல்லது இது உங்கள் பார்வைக்கு வருமா? என்பது குறித்து எனக்கு கவலையில்லை. நீங்கள் செய்ய வேண்டிய வேலைகள் என்று ஓய்வாக இருக்கும் போது பட்டியல் இட்டுப் பார்த்தேன். அப்போது தான் இந்த துண்டுச்சீட்டு என் பார்வையில் பட்டது.
இதற்கு பெருமை சேர்ப்பவர் என்ன செய்வார்? என்று எனக்குத் தெரியாது. அவர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் நாடக நடிகராக வாழ்வதே கடமையாக வைத்திருப்பதால் நேரிடையாகவே உங்களுக்கு இந்த கடிதம் வாயிலாக என் விருப்பதைச் சொல்ல விரும்புகிறேன்.
1. தமிழகம் முழுக்க பள்ளி கல்வித்துறை, கல்லூரி சார்ந்து செயல்படக்கூடிய அனைத்து விதமான தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் படிக்கும் விடுதிகளை நேரிடையாகச் சென்று பாருங்கள். மாட்டுத் தொழுவத்தை விடக் கொடுமையாக இருக்கும் கட்டிட மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளைக் கண்டு காணாமல் இருக்கும் ஒவ்வொரு ஆட்சியாளர்களையும் நீங்கள் பார்த்தே வந்து இருப்பீர்கள். இப்போது நீங்கள் விரும்பிய அதிகாரம் உங்கள் கையில் உள்ளது தானே? இது உங்கள் கடமை தானே?
2. முனைவர் பட்டம் வாங்க உங்கள் சமூக மக்களுக்கு மத்திய அரசாங்கம் மாதம் தோறும் நிதி வழங்குகின்றது. அவர்கள் முடிக்கின்ற வரைக்கும் இந்த நிதி வழங்கப்படுகின்றது. ஆனால் முனைவர் பட்டம் முடித்தால் பணம் வருவது நின்று போய் விடும் என்று உங்கள் சமூக மக்கள் அதில் செய்து கொண்டு இருக்கும் சித்து விளையாட்டுக்களைக் கண்டு அவர்களுக்கு அறிவுரை சொல்லி நல்வழிப்படுத்தலாமே?
3. தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகள் முழுக்க உங்கள் மக்கள் வைப்பது தான் சட்டம். மற்ற இடைநிலைச் சாதிகள் கூட உங்கள் மாணவர்களிடம் பணிந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை தாங்கள் அறிந்தே வைத்திருக்கக்கூடும். ஆனால் உங்கள் சமூக மாணவர்கள் எத்தனை பேர்கள் உண்மையான வழக்குரைஞர் தொழில் செய்கின்றார்கள் என்று கணக்கு எடுத்துப் பாருங்கள்? அது தவிர்த்து மற்ற அனைத்து வேலைகளையும் செய்து கொண்டு இருக்கும் அவர்களை நல்வழிப்படுத்தலாமே?
பேச்சு வடிவில் கேட்க ( யூ டியூப்)
தொல் திருமா அவர்களுக்கு பகிங்கர கடிதம்
4. தினமும் நீங்கள் இரண்டு மணி நேரம் ஒதுக்கி மீண்டும் ஒரு முறை அம்பேத்கர் குறித்து வந்துள்ள அனைத்துப் புத்தகங்களையும் படிக்க வேண்டும் என்று அன்போடு கோரிக்கை வைக்க கடமைப்பட்டுள்ளேன். அவர் எந்த இடத்திலும் மற்ற சாதிப் பெண்களைக் கவர்ந்து திருமணம் செய்து கொண்டால் சாதியை ஒழித்து விடலாம் என்று சொன்னதாக எனக்குத் தெரியவில்லை.
5. நீங்கள் மத்திய பாஜக வை எதிர்க்க வேண்டும் என்றால் உழைத்தே ஆக வேண்டும். கடந்த ஏழு வருடங்களில் எத்தனை திட்டங்கள் மோடி அவர்கள் இந்தியர்களுக்கு வழங்கியுள்ளார் என்பதனை வரிசையாக பார்த்து முடிக்க உங்களுக்கு சில நாட்கள் வேண்டும். அதன் பின் அதனை முழுமையாக புரிந்து கொள்ள, அதில் உள்ள நல்லது கெட்டது போன்றவற்றை அறிந்து கொள்ள கட்டாயம் நிச்சயம் சில மாதங்கள் ஆகும். அதுவும் எந்தத் தொந்தரவும் இல்லாமல் இதே வேலையாக நீங்கள் இருந்தால் மட்டுமே மோடி மேல் என்ன குற்றச்சாட்டு வைக்கலாம் என்பதனை இதன் மூலம் உங்களால் ஓரளவுக்கேனும் உணர முடியும். ஆனால் உங்களுக்கு ஜிஎஸ்டி குறித்தே தெரியவில்லை. ஆனால் மோடியைத் திட்ட வேண்டும் ஆசைப்படலாமா?
6. மூனா கானாவின் கொள்ளுப்பேரன் அதிகாரத்திற்கு வந்தாலும் அப்போது உங்களின் இந்த நிலைமை மாறாது. நீங்கள் அவர்களிடம் கையேந்தி தான் நிற்கவேண்டும். மீறிப் பேசினால் ஆர்எஸ்பாரதியின் மகன்கள் உங்களை உள்ளே விட்டது தவறு என்பார்கள். திமுக என்ற கட்சிக்கு ஒடுக்கப்பட்டவர்கள், கிறிஸ்துவர்கள்,இஸ்லாமியர்களின் ஓட்டு மட்டும் தான் தேவை. அவர்களின் வளர்ச்சியை விரும்ப மாட்டார்கள். ஆனால் மோடி ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பிரிவில் உள்ள அத்தனை சமூகத்திற்கும் பாரபட்சமின்றி பார்த்துப் பார்த்துச் செய்து கொண்டு இருப்பதைப் பார்த்து நீங்கள் பதற்றமடைவதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகின்றது. அத்து மீறு என்று சொல்லியே நாம் நம் இடத்தைத் தக்க வைத்து வளர்ந்து வந்துள்ளோம். மோடி அறிவை வளர்த்துக் கொள். கல்வி ரீதியாக முன்னேறு. சுயமாக போராடக் கற்றுக் கொள் என்று தேவையில்லாத அத்தனை விசயங்களையும் கற்றுக் கொடுப்பதைப் பார்த்து உங்கள் சக தோழர் வன்னியரசு என்ற கட்டப்பஞ்சாயத்து மூலம் மட்டுமே வளர்ந்த பெந்தகோஸ்த் ஜெயராஜ் க்கு கோபம் வரத்தானே செய்யும்? உங்கள் மொழியை அவர்கள் வாயிலிருந்து பேசுகின்றார்கள். இது சரியா?
7. தமிழகத்தில் பத்தாம் வகுப்பில் ஏறக்குறைய பத்து லட்சம் மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றார்கள். ஆனால் மேல்நிலை இரண்டாம் ஆண்டு வரும் போது இதில் நான்கில் ஒரு பங்கு காணாமல் போய்விடுகின்றார்கள். இதில் அனைத்துச் சாதி, மத மாணவர்களும் அடங்குவர். அதிலும் உங்கள் சமூக மாணவர்களின் நிலைமை மிக மிக மோசம். புள்ளிவிவரங்களைப் பார்த்து மிகவும் வருத்தமடைந்தேன். இது போன்ற வியங்களில் நீங்கள் கவனம் செலுத்தினால் நான் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியடைவேன்.
8. நீங்கள் காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கப் போவதற்குள் மோடியை, பாஜகவை, ஆர்எஸ்எஸ் போன்றவற்றை வாய்க்கு வந்தபடி விமர்சனம் செய்வதை நிறுத்துவீர்கள் எனக்கு நம்பிக்கையில்லை. உங்கள் விருப்பம். உங்கள் பாணியில் சொன்னால் கருத்துச் சுதந்திரம். ஆனால் நீங்கள் குல்லா போடுவதால் இஸ்லாமியர்களும், ஜெபக்கூட்டத்தில் கலந்து கிறிஸ்துவப் பெருமை பேசுவதால் இவர்கள் இருவரும் உங்களை உச்சி முகர்ந்து நெஞ்சுக்கு அருகே வைத்து உங்கள் உள்ளம் குளிர செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தால் தயவு செய்து மாற்றிக் கொள்ளவும். ஐம்பது வருடத்திற்கு முன்பு இருந்த கிறிஸ்தவமும், இஸ்லாமும் இப்போது இல்லை என்பதனை நீங்கள் மனதிற்குள் உணர்ந்தே இருப்பீர்கள். பிழைக்க எனக்கு வழியில்லை என்பதற்காக இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் வெள்ளை குல்லாவும், வெள்ளை அங்கியும் போட்டுக் கொண்டு திரிவதைப் பார்க்கும் எனக்கு வருத்தமாகவே உள்ளது. நீங்கள் செய்ய வேண்டிய காரியம் ஏராளமாக உள்ளது. உங்களை மனதார நம்பும் உங்கள் சமூக இளைஞர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். ஆனால் காலம் நோம்புக் கஞ்சிக்கும் கேக்குக்கும் உங்களை அடியாளாக மாற்றியுள்ளதை நினைத்து வருத்தமாக உள்ளது.
9. நான் அறிந்த வரையிலும் முன்னாள் ஜனாதிபதி சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் கல்வி அறிவை, தாகத்தை, வேகத்தை, ஆர்வத்தை உலகமே வியந்து போற்றியது. ஆனால் அவரின் சமூக பின்புலத்தில் அது பெரிதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் அம்பேத்கர் என்ற மனிதர் கல்வி மூலம் தன் சமூக இழிவுகளை எப்படி மாற்ற முடியும்? நடத்தப்பட்ட கொடுமைகளை மீறி தான் கற்றுக் கொண்ட கல்வி மூலம் எப்பேர்ப்பட்ட உயரத்துக்குச் செல்ல முடியும் என்பதனை அகில உலகத்திற்கும் வாழ்ந்து காட்டிய பெருமகன். உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். நீங்களோ உங்கள் கட்சியைச் சார்ந்தவர்களே எந்தக் கூட்டத்திலாவது "மாணவர்களே நீங்கள் கற்றும் கல்வி தான் உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்பது போலப் பேசி இருக்கின்றீர்களா"? வேலை வாய்ப்பு முகாம், வசதி குறைந்த மாணவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் அறக்கட்டளை சார்ந்த விசயங்கள் என்று ஆக்கப்பூர்வமான எந்தச் செயல்பாடுகள் இருந்தாலும் தயங்காமல் இணையப் பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளுங்கள். நான் அதனை அடுத்த சில மாதங்கள் என் வட்டத்தில் உள்ள அத்தனை பேர்களுக்கும் கொண்டு சேர்ப்பதைக் கடமையாக வைத்துச் செயல்படத் தயாராக உள்ளேன். செய்வீர்களா? செய்வீர்களா?
10. தமிழகத்தில் உள்ள எந்த அரசியல் கட்சிகளும் உங்கள் சமூக மக்கள் பொருளாதார ரீதியாக கல்வி ரீதியாக வளர்வதை, வளர்ந்து கொண்டு இருப்பதை அனுமதிக்க மாட்டார்கள். உங்களையே பல பிரச்சாரக்கூட்டங்களில் தவிர்ப்பதை நாங்கள் பார்த்தே வருகின்றோம். நீங்கள் உணர்ந்தால் உங்கள் வாழ்நாளுக்கும் பிறகும் தமிழக இளைஞர்கள் அம்பேத்கர் போலக் கொண்டாடக்கூடிய மனிதராக காலம் கடந்து நினைக்கப்படுவீர்கள். மோடியை, பாஜக வை எதிர்ப்பது மட்டும் தான் என் வேலை என்று வாங்கிய காசுக்குக் கூவுவது மட்டும் தான் என்று முடிவு செய்து செயல்படுவீர்கள் எனில் என் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த வருடம் அறுபதாவது பிறந்த நாளைக்குக் கொண்டாடப் போகின்ற உங்களுக்கு நீங்கள் நம்பாத இறையருள் உங்களுக்குப் பரிபூரண ஆயுளை வழங்க பிரார்த்தனை செய்கின்றேன்.
அருமை..படித்தாலும் புரிந்து கொள்ளும் பக்குவம் இருக்குமா...
ReplyDelete