அஸ்திவாரம்

Saturday, October 23, 2021

"விஷ்வ சம்வாத் கேந்திரா" சார்பாக விருது


22/10/2021 கோவையில், "விஷ்வ சம்வாத் கேந்திரா" சார்பாக விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
"இங்க விருது வாங்குன மத்தவங்கள்ளாம் ஊடக துறையில ஒரு நீண்ட கால அனுபவம் உள்ளவங்க, ஆனா வலைமனைகளிலும், சமூக ஊடகங்களிலும் எழுதிகிட்டிருக்க என்னை போன்றவர் களையும் கவுரவிச்சு விருது வழங்குனது பெருமை.

மொதல்ல நான் பொதுவான பல விஷயங்களை பத்தி தான் எழுதிட்டிருந்தேன்.  அப்புறம் இந்த மோடிங்கற மனிதர் பத்தி தெரிஞ்சுக்க  ஆரம்பிச்சு, அவரோட அசாத்திய செயல்களாள ஈர்க்கப்பட்டு, ஏன் இவருக்கு எதிரா தமிழ்நாட்ல மட்டும் இப்படி ஒரு அவதூறு பிரச்சாரத்தை செய்யறாங்க என யோசிக்க ஆரம்பிச்சேன்.  

ஒரு சாமானியனா, ஒரு இந்திய குடிமகனா இவரை ஆதரிக்கறது என் கடமைனு உணர ஆரம்பிச்சு அவரோட சாதனைகள் பத்தி நிறைய எழுத ஆரம்பிச்சேன்.  

எனக்கு விருது வாங்க தகுதியிருக்கானு தெரியல.  ஆனா இனிமே அந்த தகுதிய வளர்த்திக்க கடுமையா உழைப்பேன்.




**************

சென்ற வருடம் 2020 ஜனவரி 6 அன்று நான் 1 முதல் 8 வரை படித்த பள்ளியில் அழைத்து வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்புரை பேச வைத்து அங்கீகரித்தார்கள்.  என் எழுத்தைத் தொடர்ந்து படித்து வந்த பள்ளி தாளாளர் மகன் அப்பாவிடம் சொல்லி அதன் பிறகு நான் பள்ளியில் படித்த பழைய மாணவன் என்று அறிந்து ஆச்சரியப்பட்டனர்.  எதிர்பாராத நிகழ்வு. 1922 முதல் நடந்து வரும் பள்ளி. அரசு உதவி பெறும் பள்ளி. அடுத்த வருடம் நூற்றாண்டு விழா கொண்டாடப் போகும் பள்ளி.  அடுத்த வருடமும் பேச அழைத்து உள்ளனர்.  ஆனால் சென்ற வாரம் தாளாளர் உடல் நலக்குறைவால் வயது முதிர்வால் காலமானார். வருத்தமாக இருந்தது.

இந்த வருடம் இந்த விருது மற்றும் அங்கீகாரம். 

என் எழுத்துப் பணியைக் கவனித்து அழைத்துப் பேசினார்கள். அப்போது நான் சென்னையில் இருந்தேன்.  தகவல் சொன்னதும் "நீங்கள் தவறாக அழைத்து உள்ளீர்கள். நான் பெரிதாக எந்தச் சாதனையும் செய்யவில்லை" என்று சொல்லிவிட்டு அலைபேசியை நிறுத்த முயன்ற போது மேலும் பல தகவல்கள் சொன்ன போது சற்று நம்பினேன்.

சிறிது நேரத்தில் நண்பர் குறுஞ்செய்தி அனுப்பினார்.  அதன் பிறகு தான் புரிந்தது.  யாரிடமும் சொல்லவில்லை.  சொல்வதற்கு என்ன இருக்கின்றது? என்றே தோன்றியது.  இப்போது வரைக்கும் அந்த எண்ணம் தான் மனதில் உள்ளது.  இந்தப் படத்தை இங்கே போடலாமா? வேண்டாமா? என்ற எண்ணம் மாறி மாறி வர சில தகவல்களைத் தெரிவிக்கும் பொருட்டு இதனை இங்கே போட்டே ஆக வேண்டும் என்று தோன்றியது.



என்னுடன் நிற்கும் பெண்மணி தி ஹிந்து வில் பணிபுரிபவர்.  மற்றொருவர் தமிழ் இந்து திசையில் பணிபுரிபவர்.  

ஆர்எஸ்எஸ், பாஜக போன்ற கட்சிகளுக்கும் இந்தப் பத்திரிக்கைகளும் தொடர்பு இல்லையே என்று உங்களுக்குத் தோன்றும்.  

கள அரசியல் வேறு.  எதார்த்த அரசியல் வேறு.  

நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த, நடத்திய, வந்து கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

*************

Listen to "பெருமிதம் கொள்கிறது தேசம். மோடி அவர்களின் மக்கள் நேசம் - 33" by JothiG ⚓


*******

மோடி அரசின் காப்பீடு திட்டங்கள்-பகுதி 2- கேசவன் சிதம்பரம்

5 comments:

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.