1. புலிகேசி ஆட்சி அமைந்ததும் வெளிநாட்டில் வாழும் நண்பர் கொரோனா நிதி அனுப்பி விட்டு என்னையும் அனுப்பச் சொன்னார். நான் 48 000 கோடி ஒரு கணக்கிலும் மற்றொரு கணக்கில் 6 ஆயிரம் கோடி வைத்திருக்கின்றார்கள். வருகின்ற வட்டியை வைத்து என்னவெல்லாம் இப்போது செய்து கொண்டு இருக்கின்றார்கள்? உங்களுக்குத் தெரியுமா? என்று விளக்கினேன். இது தனி. செய்துள்ள முதலீடு தனி. பினாமி பெயரில் உள்ளது தனி என்று விளக்கினேன். அவர் சமாதானம் ஆகவில்லை.
2. இந்த நண்பர் மற்றொரு தகவல் சொன்னார். அற்புதமான நேர்மையான அதிகாரிகள் ஒவ்வொரு துறையிலும் போடப்பட்டதால் இனி அனைத்தும் அற்புதம் என்றார். இப்போது நடந்து கொண்டு இருக்கும் தகவல்களைப் பார்த்தால் உங்களுக்கே புரியும். உலக புத்திசாலி இறையன்பு ஒகே என்று கையெழுத்துப் போட மட்டும் கோப்புகள் போகின்றது என்று அவர் பக்கம் புலம்பும் புலம்பல்களை மற்றொரு பத்திரிக்கை கிசுகிசு பாணியில் எழுதியுள்ளது. ஆக மொத்தம் இணை துணை முதன்மைச் செயலாளர்கள் முதல் தலைமைச் செயலாளர்கள் வரைக்கும் அவர்களின் கட்டத்தைச் சரி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தொடக்கத்தில் எழுதி இருக்கின்றேன். நீங்கள் தான் சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
3. சில வாரங்களுக்கு நக்கீரன் இதழில் லேசாக எழுதத் தொடங்கி உள்ளனர். "கோட்டைக்குள் பி.ஏ போடும் ஆட்டம்" என்கிற ரீதியில் சுவரொட்டியில் இருப்பதைச் சாலையில் சென்ற போது பார்த்தேன்.
4. மற்றொருவர் சொன்னார். புலிகேசி மகன் பதவிக்கு வரும் வரை எந்த ஊழலும் இருக்கக்கூடாது என்பது உத்தரவு. அனைவரும் பயந்து சாகின்றார்கள் என்றார். என்ன ஆயிற்று? தற்போது புலிகேசி பேருந்துகளில் ஏறி இறங்கி ஆய்வு வேலை பார்த்துக் கொண்டு இருக்கின்றார். புலிகேசி மகன் படத்தில் நடித்துக் கொண்டு இருக்கின்றார். தமிழக மக்கள்? ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாங்கிய 500 ரூபாயை வைத்து செலவழித்து முடித்து புறங்கையை நக்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.
5. பத்திரிக்கைகள் எவரையும் தொடர்ந்து புகழ மாட்டார்கள். முடியாது. வாய்ப்பில்லை. வாசிப்பவர்களுக்குத் தெரிந்து விடும். வாசக வட்டம் குறைந்து விடும். என்ன தான் உருட்டல் மிரட்டல் அன்பளிப்பு எது என்றாலும் தேன் நிலவு காலம் என்பது ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் தான்.
6. ஆறு மாதங்கள் இன்னமும் முடியவில்லை. குடும்ப நிதி. கட்சி நிதி. அமைச்சர் நிதி. எடுப்பு நிதி. தொடுப்பு நதி என்று பலவாறாகப் பிரிந்து கொண்டே செல்ல எங்கிருந்து தொடங்கி எங்கே இந்தப் பாதை முடியும் என்பதே தெரியவில்லை.
கடைசியாக
மோடி ஒவ்வொரு பெரிய திட்டங்களையும் அறிவிக்கும் போது பத்து அல்லது பதினைந்து துறைகளை ஒன்று சேர்த்து மொத்த நிதி ஆதாரம், இணைத்த விபரங்கள், காரணங்கள், நோக்கங்கள், திட்டங்கள், இலக்கு, கால அளவு என்று உடனே வந்து விடுவதைப் பார்க்கலாம். அதே போல அந்தத் திட்டம் முடிந்தவுடன் அது சார்ந்த விபரங்களும் இணையத்தில் வாசிக்க கிடைக்கின்றது. ஏன் துறைகளைக் கட்டாயம் இணைக்கின்றார் என்றால் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையது. ஒன்றைக் காரணம் காட்டி மற்றொன்றைக் குறை சொல்லக்கூடாது. இங்கே நிலைமை எப்படி உள்ளது?
இதை இங்கே எழுதக் காரணம்
ராஜகண்ணப்பன் ஆவின் இனிப்பு வாங்கிக் கொடுக்க மனம் இல்லாமல் மகன் மூலம் 30 சதவிகிதம் வாங்கும் இனிப்பு மூலம் கொள்ளையடிக்க முடிகின்றது என்றால், கஜானாவில் காசே இல்லாத போது செந்தில் பாலாஜி திருடத் தயாராக இருக்கின்றார் என்றால், ஒவ்வொரு அமைச்சர்களும் அவரவர்களுக்கு உகந்த வரையில், முடிந்த வரையும் திருடுவதையே வாடிக்கையாக கொண்டு இருக்கும் இப்போதைய சூழலில், இவர்களுக்கு ஏன் ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும்?.
தமிழ்நாட்டிற்கு இறுதிச் சடங்கு செய்யும் இவர்களைப் போன்ற வெட்டியான்களுக்கு மரியாதை தேவையா?
கரப்ஷன், கமிஷன், கலெக்சன்
பகிரங்க விலாசல்
ReplyDelete