அஸ்திவாரம்

Tuesday, December 31, 2019

நன்றி 2019


@ இந்த வருடத்தின் கடைசி நாள்.  எழுத வேண்டிய அனைத்தும் எழுதிய திருப்தி வந்துள்ளது. இந்தப் பதிவில் எதுவும் எழுதும் எண்ணமில்லை.

2013 ஆம் ஆண்டு தான் தீவிரமாக எழுதினேன். மொத்தம் 167 தலைப்புகள். அதாவது இரண்டு நாளைக்கு ஒன்று என்ற கணக்கு. அதற்குப் பிறகு இந்த ஆண்டு தான் 150 தலைப்புகள் வந்துள்ளது.


Monday, December 30, 2019

கற்றதும் பெற்றதும் 2019


1. தியான வகுப்பு அறிமுகம் ஆனது. ஏழெட்டு மாதங்கள் தொடர்ந்து சென்றேன். இப்போது மகள்களுக்கு அதுவே பழக்கமாகிச் சென்று கொண்டிருக்கின்றார்கள்.

2. நடைப்பயிற்சி என்பது ஒரு பழக்கமாக உருவானது. முழு உடல் பரிசோதனை என்பது எடுக்க வேண்டியது அவசியம் என்பதனையும் இந்த ஆண்டு உணர்த்தியது.

3. ஆழ்மனதின் ஆற்றல் என்பதனையும், அதன் முழுப்பலன்கள் என்னவென்பதையும் இந்த ஆண்டு தான் பல புத்தகங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.  இதில் ஆழ்மனதின் அற்புத சக்திகள் என்ற புத்தகத்தைப் பரிந்துரைப்பேன்.

Sunday, December 29, 2019

உங்களைப் பார்த்து பொறாமைப்பட கூட வைக்கிறது....

Rajesh Ram 


அன்புடன் ஜோதிஜி,

உங்களுக்காக எழுத்துச் சோம்பேறி ஆகிய நான்... உங்களை உத்வேகம் கொள்ளவும் மேலும் வெறிகொண்டு எழுதவும் என்னாலான தார் குச்சி கடிதம். உங்கள் சமீபத்திய வெளியீடான 5 முதலாளிகளின் கதையை ஒரு ரயில் பயணத்தின்போது ஒரு மணிநேரத்திற்கு குறைவான நேரத்தில் படிக்க முடிந்தது என் பாக்கியமே.

Saturday, December 28, 2019

கோவி கண்ணன் பார்வையில் 5 முதலாளிகள் கதை

Govindaraju Kannan .


ஜோதிஜியின் 5 முதலாளிகளின் கதை - எனது பார்வையில் சிலவரிகள் பகிர்வு:

5 முதலாளிகளின் கதையை படித்ததும் அதன் தொடர்பில் எனது எண்ணங்களை பதிவு செய்கிறேன்

தொழில் முனைவர்களின் முறையற்ற பாலியல் சார்ந்த தனிமனித விருப்பு வெறுப்புகள் மட்டுமே அவர்களின் வீழ்ச்சியை முடிவு செய்துவிடாது, எனக்கு தெரிந்த ஒழுக்க சீலராக இருக்கும் சிலர் பண விசயத்தில் முறையற்று அதனை ஈட்டுவதில் காட்டும் ஆர்வம், எந்தவித கூச்சமும் மனத் தடைகளுமின்றி தன்னிடம் வேலையில் இருப்பவர்களின் பலவீனங்களை வைத்து அவர்களை கீழ்த்தரமாக நடத்துவதுடன் சக்கையாக பிழிந்தும் தனது திட்டமிட்ட வருவாயை பெருக்கிக் கொள்கின்றனர்.

நடுவில் அமர்ந்திருப்பவர் அமெரிக்கா நாசாவில் சீனியர் சயிண்ட்ஸ் ஆக பணிபுரியும் நா. கணேசன் அவர்களை சென்ற வாரம் சந்தித்தேன். என் வாசகர். பொள்ளாச்சியில் சந்திக்க அழைத்து இருந்தார்.

Friday, December 27, 2019

மனத்தடை நீங்கட்டும். இலவசமாக வாசிக்க 5 முதலாளிகளின் கதை.

நேர் வழி, அகலக் கால் விரிக்காத குணம், கடுமையான உழைப்பு, கொடுக்கல் வாங்கலில் வெளிப்படைத் தன்மை, சீரான முன்னேற்றம், தொழில் நுட்பம் புரியவில்லை விடு, தெரிந்ததைத் தெளிவாகச் செய்யும் அறிவு, அத்தனைக்கும் கணக்கு வழக்குகளைச் சரியாக வைத்திருத்தல், அதைப் பாதுகாத்தல், எல்லாவற்றிக்கும் மேல் போதுமென்ற மனம் இது இருந்தால் போதும் இந்த முதலாளி போல் வெற்றி பெறலாம் தொழிலில் மட்டுமல்ல வாழ்விலும் தான்.


Thursday, December 26, 2019

உயரிய விருது - 2019


2020 ஆம் ஆண்டு எப்படியிருக்குமோ? என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பார்வை, ஏக்கம், ஆசைகள். ஆனால் எனக்குத் தொடக்கமே வித்தியாசமாகத் தொடங்கப் போகின்றது.  .

அக்டோபர் மாதம் என்றாலே மகாத்மா காந்தி மற்றும் கர்மவீரர் காமராஜர் தான் நம் நினைவுக்கு வருவார்கள்.  ஒருவர் பிறந்த நாள்.  மற்றொருவருக்கு இறந்த நாள்.  ஆனால் எனக்குக் கடந்த அக்டோபர் மாதம் 16ந் தேதி அதிகாலை வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக மாறப் போகின்றது என்று தெரியாமல் எப்போதும் போலக் காலையில் எழுந்தவுடன் கணினியை உயிர்ப்பித்து வேறெதும் தகவல்கள் வந்துள்ளதா? என்று பார்த்துக் கொண்டிருந்தபோது புதிதாக ஒரு மின் அஞ்சல் வந்து இருந்தது.

மு. பழனியப்பன் என்ற பெயரில் வந்திருந்தது. 

Wednesday, December 25, 2019

இணையத்தில் நடந்த முக்கிய நிகழ்வு 2019




2019 ஆம் ஆண்டில் இணையத்தில் நடந்த முக்கிய நிகழ்வு என்ன?

@ தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தவர்கள் முழு எழுத்தாளராக மாற முயன்றுள்ளனர்.

@ விரிவாக, விளக்கமாக, ஆழமாக எழுதிக் கொண்டிருந்தவர்கள் மாறிய இணைய எழுத்து வாசிப்புக்கேற்ப தங்கள் நடையை மாற்றியுள்ளனர்.

@ எழுத்தாளராக அவதாரம் எடுத்த ஒவ்வொருவரும் அதிவேக வாகனப் பயணம் போல தங்கள் எழுதும் நடையை மாற்றியுள்ளனர்.

@ நான்கு வரி எழுதிப் பழகியவர்கள் எழுத்தாளராக மாற வேண்டும் என்ற முயற்சியைத் தொடங்கியுள்ளனர்.


Tuesday, December 24, 2019

இசையுடன் வாழுங்கள் - 2019

தினமும் பத்து மணிக்கு ஒழுங்காகப் படுக்கைக்குச் சென்ற விடுவதுண்டு. அதிகபட்சம் பத்தரை மணி வரைக்கும்.  படுத்தவுடன் தூக்கம் வந்து விடும்.  காலையில் ஐந்து மணிக்கு அலாரம் வைக்காமல் எழுந்து விடுவதும் உண்டு.  இது இயல்பான பழக்கமாக உள்ளது.  நான் இதற்கென தனியான பயிற்சியே முயற்சியே எடுத்ததில்லை.  இயல்பாகவே வந்து விட்டது.

காரணம் தெரியாமல் சில நாட்கள் அதிகாலையில் நாலைரை மணிக்கே முழிப்பு வந்து விடும்.  ஏன் இன்று நீண்ட தூரம் நடந்து செல்லக்கூடாது என்று அதிகாலைப் பயணத்தைத் தொடங்கி விடுவதுண்டு.  ஆயத்த ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் போது முழித்துப் பார்க்கும் 'வீட்டு அட்மின்' முனங்கலாக ஏதோ சொல்வார். அதற்குள் வெளியே சென்று விடுவேன்.

நான்கு பெண்களும் எழுந்து புத்துணர்ச்சியாக தங்கள் கடமைகளில் மூழ்கியிருக்கும் போது அமைதியாக உள்ளே வந்து பூனை போல அவர்களுடன் சேர்ந்து கொள்வதுண்டு. உலகம் விழித்திருக்கும். அதிகாலையில் ஆள் அரவமில்லாத நடந்து செல்லும் போது மாறிக் கொண்டேயிருக்கும் சமூகத்தை, புதிதாக உருவான கட்டிடங்களை, பலவிதமான ப்ளக்ஸ் போர்டுகளை, அறிவிப்பு தட்டிகளை என்று ஒவ்வொன்றாக வேடிக்கை பார்த்துக் கொண்டே செல்வதுண்டு.


Monday, December 23, 2019

தமிழகத்தை ஆளும் திரைகள் 2019


இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்கு ரசிகர் அதிகம்.  அதிகம் என்பதனை விட மொத்தத் தமிழகமும் அப்படித்தான் உள்ளது என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிடலாம்.  விருப்பங்கள் மாறலாம். ஆனால் ஒவ்வொருவரின் ஆசைகளை, கனவுகளைக் கடந்த ஐம்பது ஆண்டுகளாக இங்கே திரைப்படங்கள் தான் தீர்மானிக்கின்றது என்று சொன்னால் அது மிகையல்ல. கட்சி, ஆட்சி, கொள்கை என்று சகல இடத்திலும் மூன்று திரைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றது.  சின்னத்திரை (தொலைக்காட்சி), வண்ணத்திரை (திரைப்படம்) தொடுதிரை (அலைபேசி). இந்தத் திரைகள் இப்போது நெடுங்கால நட்பில் விரிசலை உருவாக்குவதோடு நிரந்தர எதிரிகளாகவும் மாற்றி விடுகின்றது.

திரைப்படம் என்ற தமிழ் வார்த்தை என்பது கெட்ட வார்த்தையாக மறந்து போன சொல்லாக மாறிவிட்டது.  சினிமா என்பது தான் இப்போதைக்குத் தமிழ்ச் சொல். இதுவே தமிழர்களிடம் இயல்பான சொல்லாக மாறிவிட்டது. 

Sunday, December 22, 2019

புள்ளி விபர புள்ளி ராஜாக்களிடம் ஜாக்கிரதை!! 2019

Mrinzo Nirmal Cb

#அலார்ட்டா_இருக்கனும்ங்க..

புள்ளி விபர புள்ளி ராஜாக்களிடம் ஜாக்கிரதை!!

1 இணையத்தில் வரும் செய்திகள் உங்கள் உணர்வை உலுக்கும் செய்தியாக இருந்தால் அந்த செய்தியின் நம்பிக்கைத் தன்மையை ஆராயாமல் உணர்ச்சி வசப்படாதீர்கள். 90% அது போலியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. செய்திகளிலும் போலி உண்டு .

2. முடிந்தவரை உணர்வு கொப்பளிக்கும் காட்சிகள், வீடியோக்கள், பேச்சுகளை அடுத்தவர்களுக்கு ஃபார்வர்ட் செய்யாதீர்கள். அடுத்தவர்களுக்கு அனுப்பும் பொழுது நல்லதா அனுப்பினா நல்லதுதானே. சுகி சிவம், ஹீலர் பாஸ்கர், அப்துல் கலாம், போன்றவர்களின் வீடியோ செய்திகளை ஃபார்வர்ட் செய்வதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அதீக பார்வேர்ட் அதீத தீமை.


Saturday, December 21, 2019

அட... ச்சும்மாயிருங்க.. பாஜக வந்துரும்.- 2019


நான் இந்த வருடம் முழுக்க தமிழகத்தில் பயணம் செய்த ஊர்கள் முதல் சந்தித்த பலதரப்பட்ட மனிதர்கள் வரைக்கும் ஒருவர் கூட பாஜக மேல் நல்ல அபிப்ராயம் சொல்லவில்லை. அளவு கடந்த வெறுப்பு.  திட்டித் தீர்த்த வார்த்தைகள்.  கிண்டல், கேலி, நக்கல் என்று பாரபட்சமின்றி. 

தணிக்கையாளர்கள் முதல் வியாபாரிகள் வரைக்கும்.  

அரசியல் தெரிந்தவர்கள் முதல் அரசியலைப் பற்றிக் கண்டு கொள்ளாதவர்கள் வரைக்கும். 72 வருட சுதந்திர இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மோடியைப் போல மிக அதிக அவமானப்படுத்தப்பட்டவர் இங்கு யாருமே இல்லை. அதே போல இந்தியா முழுக்க மோடி என்றாலே தினமும் ஏதோவொரு வகையில் உச்சரிக்கப்படும் மந்திரம் போலவே பாவிக்கப்படுகின்றது.  இதில் குறிப்பிடத்தக்க அம்சம் யாதெனில் மோடி ஊடகங்களை மதிப்பதில்லை.  கண்டு கொள்வதும் இல்லை.  ஆனால் இன்றைய ஊடகங்களுக்கு மோடி தான் எல்லாமே.

இணையதளங்களில் செயல்படுபவர்களை நான் பொருட்படுத்திக் கொள்வதில்லை.  களத்தில் இருப்பவர்களைப் பார்ப்பேன்.  அங்கும் இதே எதிர்ப்பு. ஏளனம். என்ன காரணம்?  எனக்கு இந்த வருடம் கிடைத்த பட்டங்கள் சங்கி, மென்சங்கி, நீங்க ஆதரவு கொடுத்தாலும் சூத்திரன் தான் இன்னும் பல வாழ்த்துகள்.  பேசத் தொடங்கினாலே கொன்றுவிடுவேன் என்கிற அளவுக்கு அன்புக் கட்டளை.  ஏன்?

Friday, December 20, 2019

சீரியல் எனும் போதை

எனக்குத் தெரிந்த உறவுகள், நண்பர்கள் வட்டத்தில் உள்ள பெண்களிடம் காவலன் செயலி குறித்துப் பேசுவதுண்டு. எவருக்கும் இந்தச் செயலி குறித்துத் தெரியவில்லை. கட்டாயம் ஒவ்வொருவரின் அலைபேசியிலும் ஷேர் சாட் மற்ற பொழுது போக்கு செயலிகள் உள்ளது. வாழ்க்கையை அனுபவித்து வாழ்கின்றார்கள்.

இப்போது காவலன் செயலியை மாற்றி உள்ளனர். மிக எளிதாக வண்ணம், முக்கியமான விசயங்கள் மட்டும் கேட்கின்றார்கள். யூசர் ப்ரெண்லி என்கிற ரீதியில் மாற்றி உள்ளனர். கட்டாயம் இந்த செயலி பெண்களுக்கு மிகப் பெரிய பாதுகாப்பு அளிக்கும்.


**********

அமேசான் 2019 Pen to Publish நடத்தும் கிண்டில் போட்டி

அமேசான் 2019 ஆம் ஆண்டும் Pen to Publish நடத்தும் கிண்டில் போட்டியில் ஏன் கலந்து கொண்டேன்?

சென்ற வருடம் ஃபேஸ்புக் பக்கம் அதிகமாகச் செல்லவில்லை. இவ்வாண்டு தினமும் செல்லும் பழக்கம் உருவானது. தினமும் எழுதுகிறேன். முக்கியமாக நேரம் உள்ளது என்பதாக எடுத்துக் கொள்ளலாம். அப்போது தான் கிண்டில் போட்டி குறித்த அறிவிப்புகளைப் பலரும் எழுதியிருந்தனர்.  அதன் பிறகே அது குறித்தே தகவல்களை ஒன்றன் பின் ஒன்றாகப் பார்க்கத் தொடங்கினேன்.

பரிசுத்தொகை மற்ற போட்டிக்கான விதிமுறைகளைப் படித்து விட்டு மறந்து விட்டேன். கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை.

மனைவி, மகள்களிடம் சொன்ன போது நீங்கள் போட்டி எதிலும் கலந்து கொள்ள மாட்டீர்கள்? அப்புறம் இந்த வெட்டிப் பேச்சு? என்று கலாய்த்தார்கள்.  காரணம் இதற்கு முன் பல போட்டி விபரங்களை என்னிடம் சொல்லிக் கலந்து கொள்ள உற்சாகப்படுத்தியதுண்டு.  நான் மறுத்துவிடுவேன்.

Thursday, December 19, 2019

FIVE STARS தமிழர்கள் 2019


தமிழ் இணையத்தில் நீங்கள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு இருப்பவரா? வாசிப்பாளர், எழுதுபவர், பார்ப்பவர் என்று மூன்று நிலையில் இணையத்தை நாள் தோறும் ஏதோவொரு வகையில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் உங்களுக்கு இதற்குப் பின்னால் இருக்கின்றவர்கள் யார்? இருந்தவர்கள் யார்? என்பது போன்ற தகவல்கள் தெரியுமா? அதைப் பற்றி நீங்கள் யோசித்தது உண்டா?

நான் தமிழ் இணையத்தில் 2009 ஆம் ஆண்டு நுழைந்தேன். அடுத்த இரண்டு வருடத்தில் நிதானத்திற்கு வந்தேன். அடுத்த சில வருடங்களில் இது குறித்த ஆராய்ச்சியில் இறங்கினேன்.  இன்று அடிப்படை விசயங்களை, நபர்களைப் பற்றி என்னால் புரிந்து கொள்ள முடிந்துள்ளது.

தமிழ் இணையம் எப்படித் தொடங்கியது? தமிழ் எழுத்துருக்களை எவரெல்லாம் உருவாக்கினார்கள்? கணினி மொழியில் எப்படி மாற்றினார்கள்? எத்தனை சவால்களைச் சந்தித்தார்கள்? எத்தனை விதமான அரசியல் இதற்குப் பின்னால் இருந்தது? அரசு சார்ந்த நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் பங்களிப்பு என்ன? தமிழ் மொழி வளர்ச்சிக்கு மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம் என்ன செய்கின்றது?  


படங்கள் 2019

வெங்கட் நாகராஜ் ஞாயிற்றுக்கிழமையன்று கதம்பம் என்கிற ரீதியில் ஒரு பதிவு போடுவார். மிகவும் அற்புதமாக இருக்கும். அதில் கொடுக்கும் விளம்பரப் படம் மிக நேர்த்தியாக இருக்கும்.  

அதே போல என் தேவகோட்டை மீசைக்கார அண்ணாச்சி படங்களைக் கோர்த்து மிரள வைப்பார்.  இவர் போட்ட படங்களை எடுத்து என் பேஸ்புக்கில் போட்ட போது பலத்த வரவேற்பு.  

இந்த வருடம் நான் ரசித்த, யோசிக்க வைத்த, சமூகத்தைப் புரிந்து கொள்ள இந்தப் படங்கள் உங்களுக்கு உதவும்.  பெரிய பதிவு என்று சொல்பவர்கள் இதனையும் இத்தனை படங்களா? என்று கேட்க வேண்டாம் என்று பதினெட்டுப் பட்டி நாட்டார்கள் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.

Wednesday, December 18, 2019

FIVE STARS மனிதர்கள் 2019


அமேசான் தளத்தில் 2019 கிண்டில் போட்டிக்காக எழுதப்பட்ட படைப்புகளுக்கு "எனக்கு பைவ் ஸ்டார் கொடுங்கள்" என்று எழுதியவர்கள் கதறிக் கொண்டு மார்க்கெட்டிங் செய்கின்றார்கள். 

நான் என் 5 முதலாளிகளின் கதை படைப்புக்கு FIVE STARS கேட்க மாட்டேன்.  

கேட்கவும் விரும்பவில்லை. படிங்க என்று சொல்வது என் கடமை. படிப்பது என்பது அவர்கள் விருப்பம் சார்ந்தது.  படித்து முடித்தவுடன் என்ன தரம் என்று தீர்மானிப்பது என் திறமையின் அடிப்படையில் கிடைப்பது.  

சிலர் மூன்று நட்சத்திரம் கொடுத்துள்ளனர். சிலர் நான்கு நட்சத்திரம் கொடுத்துள்ளனர். 

ஆனால் பெரும்பான்மையினர் ஐந்து நட்சத்திரங்களைத்தான் கொடுத்துள்ளனர்.  இந்த விமர்சனங்களை இந்த மின்னூல் வழியாகப் பார்க்கலாம். படிக்கலாம்.  


இதன் மூலம் ஒரு படைப்புக்கு எத்தனை விமர்சனங்கள் வந்துள்ளது? எப்படி விமர்சனம் எழுத வேண்டும்? எத்தனை விதமான பார்வைகள் உள்ளது என்பதனை உங்களால் உணர்ந்து ஆச்சரியப்பட முடியும்.

()()()()()

Tuesday, December 17, 2019

Blog, Facebook,Twitter... அப்புறம் வேறு ஏதேனும் உண்டா? - 2019


2002 தான் முதன் முதலாக இணையம் எனக்கு அறிமுகமானது.  நான் 1992 முதல் ஆயத்த ஆடைத்துறையில் உற்பத்தி பிரிவில் தான் இருந்தேன்.  முதல் முறையாக 2002 ஆம் ஆண்டு சேர்ந்த நிறுவனத்தில் அலுவலகம் தொடர்பான வேலையில் விரும்பி சேர்ந்தேன்.  அந்தப் பதவிக்குப் பெயர் (Senior Merchandiser) சீனியர் மெர்சன்டைசர்.  வெளிநாட்டில் இருப்பவர்களுடன் உரையாடுவது, மின் அஞ்சல் வழியாகத் தினமும் தொடர்பில் இருக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான அனைத்து விசயங்களையும் நாம் நிறைவேற்ற வேண்டும். 

எனக்குத் தட்டெழுத்துப் பயிற்சி உண்டு.  மூன்று மாதம் கணினி பயிற்சியும் திருப்பூரில் கற்று இருந்தேன். உற்பத்தித் துறையில் இருப்பவர்களுக்கு அது தேவைப்படாது. 2000க்கு முன்னால் திருப்பூரில் கணினி என்பது பரவலாக இல்லை.  குறிப்பிட்ட சிலரின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்தது.  2000க்கு பிறகு முழுமையாக மாறத் தொடங்கியது.

உங்கள் வாழ்க்கை. உங்கள் கைகளில்.


ஒவ்வொரு வருடத்தின் ஜனவரி 1 அன்று எத்தனை சபதங்கள் போட்டுத் தொடங்கியிருப்போம். டிசம்பர் 31 அன்று நிதானமாக யோசிப்போமா?  நிச்சயம் செய்ய மாட்டோம்.  ஏன் நடக்கவில்லை? என்ன காரணம்? இந்த இரண்டு கேள்விகளை எழுப்பி அதற்கு விடை தேடிப் பார்த்தால் பெரும்பாலானவர்கள் "என் சூழல் சரியில்லை" என்று தான் முடிப்பார்கள்.  பொய் என்று தெரிந்தே சொல்வோம்.

எனக்குப் புத்தகங்கள் படிக்க நேரமில்லை?

எனக்கு நடைப்பயிற்சி செய்ய நேரமில்லை?

எனக்கு எழுத நேரமில்லை?

எனக்கு கற்றுக் கொள்ள நேரமில்லை? என்று இதைப் போல ஒரு பட்டியல் ஒவ்வொருவரிடமும் உண்டு.

2020 உங்களுக்கு எத்தனை கடமைகள் இருந்தாலும் இதை மட்டும் செய்ய முடியுமா? என்று பாருங்கள்.  


Monday, December 16, 2019

ஜெப் Jeff Bezos என்ற வியாபாரி


ஜெப் Jeff Bezos என்ற வியாபாரி தமிழுக்குச் செய்த தொண்டுள்ளம் பற்றி குறிப்பிட முடியுமா?

இந்திய சுதந்திரத்திற்குப் பின்னால் கடந்த 72 ஆண்டுகளில் மத்தியில் பல ஆட்சிகள் வந்து போய் இப்போது மோடி பிரதமராக இருக்கின்றார். வந்தமர்ந்த கட்சிகளும், இதுவரையிலும் பணிபுரிந்த மத்திய அரசின் அதிகாரிகளும் தமிழை மட்டுமல்ல ஒவ்வொரு மாநில மொழியையும் ஒவ்வொரு நிலையிலும் புறக்கணிக்க வேண்டும் என்பதில் தான் குறியாக இன்று வரையிலும் உள்ளனர். கட்சிகள், ஆட்சிகள் மாறியுள்ளது.  ஆனால் காட்சிகள் மாறவில்லை. இன்று சமஸ்கிருதம் முன்னெடுக்கப்படுகின்றது. 

உன்னை அடிமையாக்க விரும்புகிறேன். அதற்கு முன்னால் உன் தாய் மொழியை கொன்று முடித்து விடுகிறேன் என்ற இந்த எதேச்சிகாரப் போக்கில் இருந்து மாநில மொழிகள் தப்பித் தடுமாறி தட்டுண்டு தத்தமது மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டே வருகின்றது.  ஆங்கிலத்தை பேசத் தெரியாதவர்கள், கற்றுக் கொண்டாலும் சரிவர கையாளாகதவர்கள் கணவான்களாக இருப்பது நம் நாட்டின் ஜனநாயகத்தின் முக்கிய அம்சமாக இருப்பதால் தமிழர்களுக்கு உலகம் முழுக்க மவுசும் மரியாதையும் உள்ளது.


Friday, December 13, 2019

ஆரோக்கியம் உங்களுக்கு உணர்த்தும் செய்தி?



உங்கள் வயதிற்கு உடல் ஆரோக்கியம் உங்களுக்கு உணர்த்தும் செய்தி என்ன?  நீங்கள் கடைப்பிடிக்கும் வழிமுறைகள் என்ன?

முதல் இருபது வயதில் உணவு தான் வாழ்க்கை. உணவு மட்டுமே வாழ்க்கை என்ற கூட்டுக்குடும்பக் கலாச்சாரத்திலிருந்து  வந்தவன் .நான். 

தேக ஆரோக்கியம், மன ஆரோக்கியம் என்கிற ரீதியில் மிகச் சிறப்பான வாழ்க்கையை அப்பா எனக்கு வழங்கியிருந்தார். 1974 ஆம் ஆண்டு வந்த பஞ்சம், அப்போது கூழ் சாப்பிட்ட நினைவுள்ளது. அதன் பிறகு எந்தக் காலத்திலும் உணவிற்காகக் கஷ்டப்பட்டதே இல்லை. 

திருப்பூர் வந்தும் கூட அடிப்படை வாழ்க்கைக்குத் துன்பப்பட்டது இல்லை. 

ஆனால் உணவென்பது ருசிக்கானது என்ற கொள்கையில் இன்று வரையிலும் மாற்றமில்லை.  பசிக்கு உணவா? ருசிக்கு உணவா? என்றால் இரண்டாவது தான் என் கொள்கை.  பட்டினியாக இருக்கச் சம்மதிப்பேன்.  அந்த உணவு அந்தத் தரத்திற்காக அளவீடுகள் இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பேன்.  இது இன்று வரையிலும் சண்டை சச்சரவுகளை, சங்கடங்களை உருவாக்கினாலும் இந்த ஒரு விசயத்தை மட்டும் என்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லை.  மாற்றிக் கொள்ளவும் விரும்பவில்லை.

Thursday, December 12, 2019

ரஜினிகாந்த் என்ற சிவாஜிராவ்

உங்களுக்கு ரஜினிகாந்த்தைப் பிடிக்குமா? பிடிக்காதா? என்று எனக்குத் தெரியாது.

ஆனால் சராசரிப் பெண்களைப் போல ஆசைப்படாத, ஆசைகள் அதிகம் இல்லாத என் மனைவிக்குப் பிடித்த ஒரே நபர் ரஜினிகாந்த்.

பலசமயம் என்ன காரணம்? என்று நானும் மகள்களும் கேட்டுள்ளோம். எனக்குப் பிடிக்கும் என்பதோடு நிறுத்திக் கொள்வார். அவர் அரசியலுக்கு வந்தால் நான் அவருக்கு ஓட்டுப் போடுவேன் என்று சொல்லியுள்ளார். அவருக்குப் பிடிப்பதால் வேறு அப்பீல் வேண்டுமா? முதல் நாள். முதல் காட்சி என்பதனை ஒவ்வொரு முறையும் நிறைவேற்றி விடுவதுண்டு.

நடப்பு செய்திகள் - டிசம்பர் 2019

ருத்தமாக உள்ளது.

தேவகவுடா வுக்கு குண்டு முழங்க ராணுவ பீரங்கி மரியாதை கிடைக்காமல் போய்விடும் போல.

கழிவுகளை காலம் சல்லடை போட்டு சலித்து விடும்.

என் பேரனை ஏன் கைவிட்டீர்கள் என்று முதலில் தேவகவுடா அழுதார்.

என் இதய நோய் பொறுத்து உங்களுக்காகத் தானே உழைத்துக் கொண்டிருக்கிறேன் என்று குமாரசாமி அழுதார்.

ஆனால் மக்கள்?

எதிரும் புதிருமாக அரசியல் செய்து, கள்ள நாடகம் நடத்தி, ஒன்றாக அதிகாரத்தை கைப்பற்றிய காவருத்தமாக உள்ளது.

கழிவுகளை காலம் சல்லடை போட்டு சலித்து விடும்.

நீங்கள் ஓய்வு எடுங்கள். உழைத்தது போதும் என்று வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு இங்கிலாந்து மக்கள் டாடா பை பை சொல்லி வழியனுப்பியதைப் போல வச்சு செய்து விட்டார்கள்.

**************

Wednesday, December 11, 2019

பஞ்சு முதல் பனியன் வரை

சில நிகழ்வுகள் கண நேரத்தில் நம் வாழ்க்கையில் நடந்து விட்டுப் போய்விடும். நம்மால் கூட நம்ப முடியாது. அதனை மற்றவர்களிடம் சொன்னால் என்னப்பா கதை விடுறே? என்று கூடச் சொல்லக்கூடும். அப்படியொன்று சில வாரங்களுக்கு முன்பு நடந்தது. அதனால் இந்தப் புத்தகத்தை இங்கே அறிமுகம் செய்கின்றேன்.


Tuesday, December 10, 2019

50 வயது


ஒவ்வொரு ஆங்கில வருடம் முடியும் நேரத்தில் அந்த வருடத்தின் நினைவுக்குறிப்புகளை எழுதி வைப்பது என் வழக்கம்.  இந்த வருடம் என் 50 வருட வாழ்க்கை அனுபவத்தில் நான் பார்த்த, சந்தித்த, என்னைப் பாதித்த, மகிழ்ச்சியடைய வைத்த, நான் பார்த்து ஆச்சரியப்பட்ட மனிதர்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். 

இது வலையுலகம், தொழில் உலகம், சொந்த வாழ்க்கை தொடர்பான மனிதர்கள் வருவார்கள். நான் இந்த வருடம் செய்த முக்கியமான பணிகள் குறித்தும், செய்த காரியங்களைப் பற்றியும் எழுதி வைக்க விரும்புகிறேன். இது என் நினைவில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் நீங்களும் இது போன்று எழுதி மற்றவர்களைப் பெருமைப்படுத்துங்கள். 

அத்துடன் உங்களுக்கு நீங்களே உற்சாகத்தை அளித்துக் கொள்ளுங்கள் என்ற கோரிக்கையும் வைக்கின்றேன்.  
↑↑↑↑↑↑↑↑↑↑

தனித்தனி பதிவாக நான் பிரித்து எழுத விரும்புவதில்லை.  பெரிதாக உள்ளது. என்னால் வாசிக்க முடியவில்லை என்பவர்களைப் பற்றி நான் எப்போதும் கண்டு கொள்வதில்லை.  வாசிக்க விரும்புபவர்களுக்கு, நிதானமாக உள்ளே வந்து ஆற அமர இவர் எழுத்தை வாசித்தே ஆக வேண்டும் என்ற கொள்கை கொண்டவர்கள் குறைவாக இருந்தாலும் அவர்களுக்காகவே என் எழுத்துப் பயணம் இன்று வரையிலும் தொடர்கின்றது என்பதனையும் நினைவூட்ட விரும்புகிறேன்.  

அப்படிப்பட்டவர்கள் இன்னமும் என் தொடர்பில் இருப்பதும் எனக்குக் கிடைத்த வரமாக அங்கீகாரமாகக் கருதுகிறேன்.  

எனக்கு நேரம் இருக்கும் போது மட்டுமே எழுத முடியும்.  இதற்கென தனியாகக் குறிப்பிட்ட நேரம் ஒதுக்க முடியாது.  குடும்பம் மற்றும் தொழில் அத்துடன் நம் கருத்துக்களைச் சொல்ல ஒரு தளம் என்ற நோக்கில் மட்டுமே நான் எழுதுகிறேன்.  பொழுது போக்கு, ஜாலி என்பது எனக்கும் உண்டு.  ஆனால் "வேலையின்னு வந்தால் வெள்ளைக்காரன்" என்கிற ரீதியில் நான் வாழ்வதால் ஒவ்வொன்றையும் அதன் பாதையில் என்னால் குழப்பம் இல்லாமல் இன்று வரையிலும் நகர்த்திச் சென்று கொண்டே இனிதாக வாழ முடிகின்றது என்பதனையும் நீங்கள் கவனத்தில் வைத்திருக்க வேண்டும்.

முதலில் சில விசயங்களைக் குறித்து கேள்வி பதிலாகத் தந்து விடுகிறேன். அடுத்த பதிவில் பெருமைப்படக்கூடிய, பெருமைப்படுத்த வேண்டிய உறவுகளைப் பற்றி எழுதுகிறேன்.

Monday, December 09, 2019

தர்மம் ஒரு நாள் வெல்லும்

இந்தியாவில் (மட்டும்) நீங்கள் கவனிக்கும், ஆச்சரியப்படும், அதிசியத்தக்க நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

டெல்லியில் நிர்பயா என்ற புனைப்பெயர் ஒரு புயலைத் தொடங்கி வைத்தது. இப்போது தெலுங்கானா வரைக்கும் வந்து நின்றுள்ளது.

கொடுமை. கொடூரம். கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத நிகழ்வுகள் இன்னமும் நின்றபாடில்லை. சூறைக்காற்று, சுனாமி போல பெண்களுக்கு எதிரான வன்முறை அதன் கோரத்தாண்டவத்தை நடத்திக் கொண்டேயிருக்கிறது.

இன்னமும் வேலைக்குச் செல்லும், இரவில் செல்லும் பெண்களுக்குப் பாதுகாப்புக்குரிய அம்சங்கள் இந்தியாவில் உருவாகவில்லை. ஆட்சியாளர்களுக்கு, சட்டத்துறைக்கு, நீதிமன்றங்களுக்கு அது குறித்த அக்கறையும் இல்லை. பொது விவாதங்களில் அதனைப் பற்றி மட்டும் பேசு பொருளாக எடுத்துக் கொள்ள எந்த ஊடகமும் விரும்புவதும் இல்லை.


Saturday, December 07, 2019

டாலர் நகரம்- விமர்சனங்கள்

டாலர் நகரம் விமர்சனங்கள் என்பதனை ஏன் தொகுத்தேன்? என்பதற்கு முக்கியக் காரணம் ஒன்று உண்டு. இணையத்தில் கடந்த பத்தாண்டுகளாக என் தொடர்பில் வந்த, என்னுடன் தொடர்பை உருவாக்கிக் கொண்ட ஒவ்வொருவரும் என் எழுத்துப் பயணத்தில் வெவ்வேறு விதங்களில் உதவி உள்ளனர். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் பொருட்டு, அவர்கள் பெயர் புத்தகத்தில் வர வேண்டும் என்பது என் முதல் ஆசை.

டாலர் நகரம் புத்தக விழாவில் என்னை முன்னே பின்னே நேரிடையாக தெரியாமல் என் எழுத்தை மட்டும் நம்பி புத்தக விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பது என் இரண்டாவது ஆசை.

நான் சொன்னவுடன் இருந்த வேலையெல்லாம் விட்டுவிட்டு அவசரம் அவசரமாக விமானம் வழியே திருப்பூர் வந்து சேர்ந்த அப்துல்லாவுக்கு, ரவிக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பது அடுத்த ஆசை.

என்னை நம்பி முதலீடு செய்த மலைநாடன் ஒரு பக்கம். என்னை அறிமுகம் செய்து வைத்து புத்தகம் அடித்துக் கொடுத்த பிகேஆர் மற்றொருபுறம்.

ஏராளமான புண்ணிய ஆத்மாக்கள் இன்னமும் என் தொடர்பில் இருக்கின்றார்கள்.

Friday, December 06, 2019

வாழ்க ஜனநாயகம்.

நிகழ்வு 1

நேற்று சேலத்தில் மத்திய அரசாங்கத்தின் பங்களிப்போடு நம் அரசாங்கம் துணையோடு நுண்ணியிரி சேகரிப்பு மையம் தொடங்க இடம் பார்த்து பல கட்ட ஆய்வு முடித்து நேற்று முறைப்படி அந்த வேலையைத் தொடங்க அதிகாரிகள் வந்துள்ளனர். அதுவரையிலும் ஒருவரும் மூச்சு கூட விடவில்லை. நேற்று திடீரென்று அந்தப் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் எதிர்ப்பு என்பதோடு அதிகாரிகளை சிறைப்படுத்தி, பொக்லைன் எந்திரங்களையும் பிடித்து வைத்துக் கொண்டனர். அதிகாரிகள் சமாதானப் பேச்சு நடத்தி அதற்குப் பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் சென்று விட்டனர்.

நிகழ்வு 2

சில மாதங்களுக்கு முன்பு திருப்பூர் தென்னம்பாளையம் அருகே அலைபேசி கோபுரம் இங்கே அமைக்கக்கூடாது என்று அந்தப் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து வந்த தனியார் ஊழியர்களை விரட்டியடித்தனர். இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் கோபுரம் அமைப்பது ஒரு தனியார் வீட்டில் உள்ள சும்மா கிடக்கும் இடம். அவருக்கு இதன் மூலம் நிரந்தர வருமானம் கிடைக்கும். ஆனால் எதிர்ப்பு தெரிவித்த மக்கள் எங்கள் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும். அவர் அனுமதி கொடுத்தாலும் நாங்கள் இங்கே கோபுரம் அமைக்க அனுமதி அளிக்க மாட்டோம் என்று மொத்தமாக எதிர்ப்பு தெரிவிக்க வந்த ஊழியர்கள் திரும்பிச் சென்றனர்.

நிகழ்வு 3

சில மாதங்களுக்கு முன்பு விளைநிலங்களின் வழியே உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கக்கூடாது. நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எங்கள் நிலம் பாதிக்கப்படுகின்றது என்று அரசியல்கட்சி துணையோடு ஆர்ப்பாட்டம் செய்து அதிகாரிகளை திருப்பி அனுப்பினர்.

நீங்கள் தினசரி செய்தித்தாளைத் திருப்பினால் ஏதோவொரு பக்கத்தில் இதுபோன்ற செய்திகளை நிச்சயம் நீங்கள் வாசிக்க முடியும்.

ஜெ ஆட்சியில் இருந்த போது மழைநீர் சேகரிப்பு திட்டம் தொடங்கினார். கட்டாயப்படுத்தினார். வீடு கட்ட அனுமதி கொடுக்கும் போது அதிகாரிகள் வலியுறுத்தினார்கள். அதற்காக இடம் ஒதுக்கச் சொன்னார்கள். ஏற்கனவே இருக்கும் வீடுகளில் அதனை மேம்படுத்த ஆலோசனை வழங்கினார்கள். அப்படி செயல்படுத்தாமல் இருந்த வீடுகளில் உள்ளே நுழைந்து உருவாக்க கட்டாயப்படுத்தினார்கள். ஆச்சரியமாக நிலத்தடி நீர்மட்டம் பரவலாக உயரத்தொடங்கியது. அடுத்தடுத்து அதனை அரசாங்கம் கைவிட்டது. கண்டுகொள்ளாமல் இருக்க மக்கள் எப்போதும் போல பழைய குருடி கதைத் திறடி.

இப்போது சென்னையில் வெளியே உள்ள அனைத்து ஏரிகளிலும் நீர்மட்டம் உயர்ந்து அதன் கொள்ளவை முழுமையாக எட்டியுள்ளது. எடப்பாடி நல்லவரா? கெட்டவரா? ஆட்சி செய்யத் தெரிந்தவரா? தொலை நோக்குத் திட்டப்படி செயல்படத் தெரிந்தவரா? என்பது தனியாக பேச வேண்டிய விசயம். ஆனால் மனிதருக்கு நீர் ராசி இருக்கும் போல. தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றது.

மதுராங்கம் எரியில் நிறைந்த தண்ணீரை அதிகாரிகள் திறந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் உருவானபின்பு தண்ணீரை திறந்த விட இப்போது சென்னை புறநகர்ப் பகுதி முழுக்க கட்டிய வீடுகள் அனைத்து வெள்ளக்காட்டில் தத்தளிக்கின்றது. சிலரின் பேட்டியைப் பார்த்தேன்

குழிக்குள் வீடு கட்டி உள்ளனர். வயலுக்குள் வீடு கட்ட ரியல் எஸ்டேட் மக்கள் விற்று விட்டு சென்று விட்டனர். அதிகாரிகள் காசை வாங்கிக் கொண்டு அனுமதி கொடுத்து விட்டனர். எந்த வரைமுறையும் இல்லை. இப்போது அரசாங்கம் எங்களைக் கண்டு கொள்ளவே இல்லை என்ற புலம்பல் புராணம்.

அரசாங்கம் உத்தரவு இல்லாமல் இங்குள்ள மக்கள் எதையும் செய்ய மாட்டார்கள். செய்யத் தயாராகவும் இல்லை. கட்டாயம் இல்லாமல், கண்டிப்பு இல்லாமல் இவர்கள் மாற மாட்டார்கள். வீட்டுக்குள் ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்றால் கூட அரசாங்கம் ஆப்பு வைத்து விடுமோ என்ற பயம் இருந்தால் மட்டுமே வேண்டா வெறுப்பாக செடியை நட்டு வைப்பார்கள். இல்லாவிட்டால் வீட்டைச் சுற்றியுள்ள இடம் முழுக்க சிமெண்ட் தரை அமைத்து தங்கள் பெருமையை அதன் மூலம் காட்ட முடியுமா? என்று பார்ப்பார்கள்?

காரணம் இங்கு எல்லாமே கௌரவம்? எல்லாமே அந்தஸ்த்து. சாதி முதல் மகன் படிக்கும் பள்ளி வரை.

அரசியல்வாதிகள், அதிகாரிகளை விட ஒவ்வொரு தனி மனிதர்களின் மனமும் Corrupt ஆகி வெகு நாளாகி விட்டது. காரணம் அவர்களின் பொருளாதார நிலை வளர்ந்து விட்டது. முன்பு போல பசி, பட்டினி, பஞ்சம் எதுவும் இல்லை. தேவைக்கு அதிகமானவைகள் எல்லாமே இங்கு உண்டு. இப்போது தங்கள் ஆண்ட சாதி என்று காட்டிக் கொள்ளவும், எதன் மூலம் எப்போதும் வருமானம் பார்க்க வாய்ப்புண்டு என்பதில் தான் பலருக்கும் ஆர்வமுள்ளது. அப்படி உள்ளவர்களை அனுசரித்து நடக்க விரும்புகின்றார்கள்.

இதனால் தான் எங்கள் பகுதிக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்க வரவில்லை என்று வெட்கமில்லாமல் தெருவில் வந்து நின்று சாலை மறியல் செய்து போராட்டம் செய்யத் துணிவு வந்துள்ளது.

இந்தப் போராட்டங்களைச் செய்யக்கூடியவர்கள் அவரவர் வீட்டில் இருக்கும் இடங்களில் ராஜா ஒரு செடி நட்டு வளர்த்தால் என்ன? என்று கேட்டுப் பாருங்கள்? அடிக்க வந்து விடுவார்கள். ஒரு அம்மையாரிடம் இதே போல கேட்டு விட்டு திட்டு வாங்கி வந்தேன். தினமும் குப்பை கூட்ட நீ வருகிறாயா? என்று சிரித்துக் கொண்டே கேட்டார்

புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, காரைக்குடி இதனைச் சுற்றியுள்ள மொத்த கிராமங்களையும் ஒரு சுற்று சுற்றி வந்தேன். இங்கு எல்லா இடங்களிலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து தான் காய்கறிகள் செல்கின்றது. திருப்பூரில் நான் உண்ணும் சுவையான காய்கறிகள் எங்கள் ஊரில் இல்லை. எனக்கு இங்கே கிடைக்கும் எதுவும் அங்கே கிடைக்கவில்லை என்பது தான் எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

இங்கே கடல் மீன்கள் நூறு ரூபாய்க்கு என்னால் வாங்க முடிகின்றது. அங்கே சந்தையின் போது 500 ரூபாய்க்கு கிடைக்கின்றது. அதுவே சாதாரண நாட்களில் ஒரு கிலோ 800 ருபாய்க்கு கிடைக்கின்றது.

தமிழக கிராமங்களில் இப்போது உருவாகிக் கொண்டிருக்கும் வளர்ச்சிக்குப் பெயர் என்ன தெரியுமா? 

வீக்கம்.

வெடிக்கும் போது ஒரு நாள் புரியும்?

தமிழக அரசியல்வாதிகள் பாவம். அவர்களைத் திட்டாதீர்கள். காரணம் அவர்கள் தேர்தலுக்குத் தேர்தல் அவர்கள் முதலீடு செய்ய வேண்டிய தொகை எகிறிக் கொண்டேயிருக்கிறது.

அதனைக் கவனிப்பார்களா? மக்களைப் பற்றி யோசிப்பார்களா?

வாழ்க ஜனநாயகம்.

Wednesday, December 04, 2019

திருமதி ரவி - கண்ணீர் அஞ்சலி


"நீங்க வருத்தப்படுகிறீர்களா? பொய் சொல்லாதீர்கள். உங்களைப் பற்றி எனக்குத் தெரியாதா?" என்றார் மனைவி.  

ஆனால் அரை மணி நேரம் அவருடன் பேசாமல் வெளியே நின்று கொண்டு வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றேன்.  மரங்களில் வந்தமர்ந்த காக்கை, குருவி, அப்போது சரியாகப் பறந்து வந்த மயில் என ஒவ்வொன்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே நின்றேன்.  கண்களில் நீர் வந்து விடுமோ? என்று தோன்றியது.  கஷ்டப்பட்டு தான் அடக்கிக் கொண்டேன். 

 பின்னால் எனக்குத் தெரியாமல் வந்து நின்ற மனைவி மீண்டும் கேட்டார்.

"உங்களைத்தான் மரணம் என்பது பாதிக்காதே? கூடப் பிறந்த அக்கா, அதுவும் உங்களுக்குப் பிடித்த, உங்கள் வாழ்க்கையோடு அதிகம் தொடர்பு கொண்டு அக்கா இறந்த போது கூட நீங்கள் கலங்கவில்லையே? இவரின் மனைவி இறந்து விட்டார் என்றவுடன் உங்களுக்கு ஏன் இந்த அளவுக்கு வருத்தம்?" 

"இன்னும் அவரை நேரில் கூடச் சந்தித்தது கூட இல்லை.  ஆனால் நிறையத்தான் உருகுகிறீர்கள்?" என்று கேட்டார்.

"அது தான் எனக்கும் புரியவில்லை?" என்றேன்.



Monday, December 02, 2019

தலைமுறை இடைவெளி ?

தலைமுறை இடைவெளி என்றால் என்ன?

33 வருடங்கள். ஒரு தலைமுறையின் ஆயுள்காலம் என்கிறார்கள்.

அதன் பிறகு எல்லாமே மாறுகின்றது.

புனிதம் தன் இயல்பை இழந்து விடும். கொள்கைகள் வலுவிழந்து விடும். புதிய கொள்கைகள் உருவாகும். பெரிய மாற்றங்களைக் கண்டு சிலருக்குப் பயம் வந்து விடும். பதட்டமடைந்து விடுகின்றார்கள். பதவியிழந்த அரசியல்வாதிகள் போல நாம் அனாதை ஆகிவிட்டோமே? என்று எண்ணத் தொடங்குகின்றார்கள். முரண்பாடுகள் எட்டிப் பார்க்கத் தொடங்கும். கீழுள்ள தலைமுறைகள் செய்யும் ஒவ்வொன்றும் தவறாகத் தெரியும். தான் வாழ்ந்த காலம் தான் பொற்காலம் என்று நம்புவார்கள்.

ஜனத்தொகை பெருக்கத்தின் அடிப்படையில் உருவாகும் ஒவ்வொரு துறையையும் அவர்கள் பார்வையில் கேவலமாக விமர்சனம் செய்வார்கள். மொத்தத்தில் கலிகாலம் என்று கொண்டு வந்து முடிப்பார்கள்.


Sunday, December 01, 2019

வாசகர் கடிதம் 2

வாசகர் கடிதம் 3

அன்புள்ள ஜோ

படைப்புகளில் நல்லது கெட்டது என்று வித்தியாசம் உள்ளதா?

அன்புள்ள ஜா

தமிழ்த் திரைப்பட உலகத்தை புதிய பாதைக்கு நகர்த்திய பாரதிராஜா படங்களைப் பார்த்து விடலைக் காதல், வயல் பரப்புகளில் ஆடும் தேவதைப் பெண்கள் என்று ஏராளமாக இருந்தாலும் வடிவுக்கரசி, காந்திமதி நடித்த நடிப்பு கதாபாத்திரம் அல்ல. அவர்கள் இன்னமும் தமிழகக் கிராமங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் உயிருள்ள ஜீவன்கள். அச்சு அசலான அவர்களைப் போன்றவர்களுடன் நான் முதல் இருபது வருடம் வாழ்ந்துள்ளேன்.

ஆனால் நகர்ப்புறங்களில் வாழ்ந்தவர்களுக்கு பாரதிராஜா படமென்பது வெறுமனே பொழுது போக்கு சமாச்சாரமாக இருக்கும். படைப்பு ஒன்று தான். ஆனால் பார்வை வெவ்வேறு.

வடசென்னை என்ற படம் ஐம்பது எழுத்தாளர்கள் நினைத்தாலும் நினைத்துப் பார்க்க முடியாத சாதனை. ஒவ்வொரு ப்ரேமிலும் ஓராயிரம் செய்திகள்.

தீரன் அதிகாரம் ஒன்று என்ற படம் இனி வரும் இயக்குநர்களுக்கு பெரும் உத்வேகத்தைக் கொடுக்கக்கூடிய படம்.

ஒரு திரைப்பட இயக்குநருக்கு 25 சதவிகிதம் துறை சார்ந்த அறிவு இருந்தால் போதும். ஆனால் 75 சதவிகிதம் மற்ற 30 துறைகளில் உள்ளவர்களை வேலை வாங்கத் தெரிய வேண்டும். தான் விரும்பிய, மக்கள் எதை விரும்புவார்கள்? எப்படி விரும்புவார்கள் என்று அவர்களிடம் கேட்டு வாங்கத் தெரிய வேண்டிய நிறுவன சிஈஓ வாக இருக்கத் தெரிய வேண்டும். அதைச் செய்யத் தெரிந்தவர்கள் முன்னிலையில் இருக்கின்றார்கள்.

ஆனால் எழுத்தாளர் ஜோ டி குரூஸ் Joe D Cruz எழுதிய ஆழி சூழ் உலகு புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். சாகித்ய அகாடமி பரிசு பெற்ற கொற்கை படித்துப் பாருங்கள். முனைவர் பட்டம் பெற்று, தான் இருக்கும் துறையில் உயர்பதவியிலிருந்து கொண்டு காலத்தை முன்னும் பின்னும் அளந்து உங்கள் கண் முன்னால் நிறுத்தியிருப்பார். நீங்கள் உள்ளே நுழைந்து வெளியே வர சில வாரங்கள் ஆகும்.

கடல் என்றால் அலைகள், நல்ல மீன்கள் என்ற எண்ணம் மாறி அவர்களின் வாழ்க்கை மற்றும் வரலாற்றுச் சுவடுகளை உணரும் போது உள் அடங்கிப் போவீர்கள். இதுவே காட்சி வடிவில் வந்தால் சில நிமிடங்கள் தங்கும். எழுத்து வடிவம் என்னும் போது ஆழ் கடல் அமைதி போல உங்கள் எண்ணம் மாறும்.

மற்றபடி புதிதாக உருவாகி உள்ள இணைய எழுத்தாளர்கள் எழுதும் ஒவ்வொன்றும் ஆழம் இல்லாவிட்டாலும் இவர்கள் தான் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்கள்.

இலக்கியம் என்ற பெயரில் உருவான மூடநம்பிக்கைகளை உடைத்து எந்தத் துறை சார்ந்தும் எழுதலாம். எழுத முடியும்? என்று உணர்த்திக் கொண்டிருப்பவர்கள் இணையத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள். அவர்களைக் கோர்வையாக எழுதத் தெரிந்தவர்கள் என்றும் கூடச் சொல்லலாம்.

அவர்களுக்கு எழுத்தாளர் என்ற பட்டம் தேவையில்லை.

அவர்கள் தமிழ் மொழியை இலகுவாக்கி, சர்க்கரை பாகு போல மாற்றி வாசிக்க வேண்டும் என்று நினைப்பவர்களை எறும்பு போல தங்கள் பின்னால் வர வைத்துக் கொண்டிருப்பவர்கள்.

நீங்கள் தான் சொல்ல வேண்டும்? எது நல்லது? எது கெட்டது என்று?

உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி.

#5MuthalaleegalinKathai
#Amazonpentopublishl2019
#PenToPubish
#JothiGanesan
#LFPentoPublish
#5முதலாளிகளின்கதை

இன்று கீழே உள்ள இரண்டு மின் நூல்களும் இலவசம்.  

அமேசான் வழியாகப் படிக்கலாம்.


8 புத்தகங்களின் விமர்சனம்: வாசித்தே ஆக வேண்டிய புத்தகங்கள்