இன்று அதிகாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது எதிரே ஒருவர் வந்து "வணக்கம் சாமி" என்றார். முதலில் அடையாளம் தெரியவில்லை. நெற்றி நிறைய விபூதி, சந்தனம், ஐயப்பன் சாமியாக மாறியிருந்தார். என் வீட்டுக்கு அடுத்த சந்தில் இருப்பவர். நேற்று வரை வேறொரு விதமாக வாழ்ந்து கொண்டு இருந்தவர். ஓர் இரவுக்குள் ஐயப்பன் வந்து கனவில் என்ன சொன்னாரோ? இப்படி வந்து நிற்பார் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை.