அஸ்திவாரம்

Sunday, October 31, 2021

கு. அண்ணாமலை எனும் நான்

#கற்றுக்கொள்களத்தில்இறங்கு அமர்வில்  

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை "கு. அண்ணாமலை எனும் நான்" என்ற தலைப்பில் நான் ஒரு மணி நேரம் பத்து நிமிடம் பேசினேன்.  இந்த தகவல் எத்தனை பேர்களுக்குத் தெரியும் என்று தெரியவில்லை.  நாளை காட்சி வடிவம் கிடைக்கலாம். 

பேசிய முக்கிய தகவல்களை இங்கு எழுதி வைக்கின்றேன்.  


Saturday, October 30, 2021

இந்த பாவம் நின்று கொல்லும்

எனக்கு இந்த ஆட்சியின் மேல் எந்த வருத்தமும் இல்லை. விருப்பமும் இல்லை. காரணம் பத்திரிக்கையுலகமும் நீதிமன்றங்களும் திருந்தாத வரைக்கும் அரசியல்வாதிகள் அக்மார்க் வியாதிகளாகத்தான் இருப்பார்கள்.  

1. உதயநிதி ரசிகர் மன்றத் தலைவர் போகின்ற இடமெல்லாம் அற்புதமாக பேட்டி கொடுத்துக் கொண்டே வருகின்றார்.  ஆனால் பத்துப் பைசாவிற்கு பெறுமானம் இல்லை. இதை  நான் காழ்ப்புணர்வுடன் எழுதவில்லை.

2. ஒரு சின்ன உதாரணம் தருகின்றேன்.  கல்வி அமைச்சருக்குத் தனிப்பட்ட முறையில் ஒரு நேர்முக உதவியாளர் ஏழெட்டு வாரங்களுக்கு முன் சேர்ந்தார். அவரை பெரும்பாலானவர்களுக்குத் தெரியும். இப்போதைய முதன்மைச் செயலாளர் ஜெயச்சந்திரன் உடன் ஏற்கனவே பணியாற்றியவர். அவர் தான் கல்வி அமைச்சர் உதவியாளராக நியமிக்கப்பட்டார்.  தனித் தேர்வர்கள் குறித்து நண்பர் கேட்டுக் கொண்டே இருந்தார் என்று அவரை அழைத்துக் கேட்டேன். அப்படிங்களா? அந்த விபரம் தெரியவில்லையே? என்று சொன்ன போது அதிர்ந்து போனேன்.  அதாவது துறையில் நடப்பது என்னவென்றே அமைச்சர் முதல் அவரைச் சுற்றியுள்ள எவருக்கும் தெரியவில்லை. ஆணையர் நந்தகுமார் அவர்களை வேறொரு நண்பர் மூலம் தொடர்பு கொண்டு தகவல் பெற்றேன்.

2. கல்வி அமைச்சர் என்ன சொல்கின்றார்? 

பள்ளி வரலாம். வராமலும் இருக்கலாம். பெற்றோருடன் வரலாம். வெளியே காத்திருக்கலாம். அனுமதி உண்டு. தேர்வு எழுதலாம். எழுதாமலும் இருக்கலாம். டிசம்பர் முதல் தேர்வு வைக்க எண்ணம் உண்டு. அடுத்த மூன்று மாதங்களில் பொதுத் தேர்வு உண்டு.

3. ஒரு மாணவ மாணவியர் கூடப் படிக்கத் தயாராக இல்லை. ஆசிரியைகள் செத்து சுண்ணாம்பு போல ஆகிக் கொண்டு இருக்கின்றார்கள். ஒவ்வொரு மாணவர்களும் இந்த வருடமும் தேர்வு வைக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் தான் இன்று வரையிலும் இருக்கின்றார்கள். அடிக்கக்கூடாது. பேசக்கூடாது. திட்டக்கூடாது. இன்னும் ஆசிரியர்கள் கழுவிவிட வில்லை. அதுவும் செய்தால் குழந்தைகள் போல ஆகி விடுவார்கள். பல ஆசிரியைகள் கதறுகின்றார்கள்.  

4. ஒரு பக்கம் ஆணையர் ஆப்பு அடித்து நகர்த்திக் கொண்டே இருக்கின்றார்.  அந்தப் பயத்தில் ஆசிரியர்கள் கடந்த இரண்டு மாதங்களில் படு வேகமாக இருக்கின்றார்கள். ஆனால் அமைச்சர் என்ற பதவியில் இருப்பவர் பேசும் பேச்சு அனைத்தும் சிரிப்பைத் தருகின்றது. ஏற்கனவே ஒரு புத்திசாலி பள்ளம் தோண்டி வைத்து விட்டுப் போனார். இவர் பாதாளக்குழியை உருவாக்குவார் என்றே நினைக்கின்றேன்.

5. அமைச்சர் மற்றொரு விசயத்தைச் சொல்கின்றார்.  சுழற்சி முறையில் பள்ளிகள் செயல்படும் என்கிறார்.  காரணம் என்ன? ஆசிரியர்கள் பற்றாக்குறை? போட மனம் இல்லை. வகுப்பறை பற்றாக்குறை? உருவாக்க மனம் இல்லை. காசு இல்லை என்பார்கள்.  ஆனால் சுடுகாட்டை அலங்கரிக்க காசு இருக்கின்றது. மதுரையில் நூலகம் கட்ட பணம் இருக்கின்றது?

பயங்கர கேவலமாக பள்ளிக்கல்வித்துறை சென்று கொண்டு இருக்கின்றது.

மாறிய தொழில் நுட்ப உலகில் கல்வித்துறைக்கு வரக்கூடிய அமைச்சருக்கு அடிப்படை உலக அறிவு, இந்திய அளவில் உள்ள ஒப்பீடு அறிவு அல்லது குறைந்த பட்சம் நிஜமான அர்ப்பணிப்பு உணர்வு இல்லாமல் இதில் யாரையோ ஒருவரைப் போட்டுத் தான் ஆக வேண்டும் என்ற சூழலில் தமிழகக் கல்வித்துறை திமுக மற்றும் அதிமுக பினாமிகள் வேட்டைக்காடாகவே இன்னமும் உள்ளது.

கடைசியாக...

நீட் குறித்து திராவிட திருடர்கள் பொதுவெளியில் எப்படிப் பேசுகின்றார்கள்? எப்படி மடை மாற்றுகின்றார்கள்? எப்படி நாடகம் போடுகின்றார்கள் என்பதனை நாம் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றோம்.  சென்ற வருடம் அந்தப் புண்ணியவான் கடைசி வரைக்கும் கமிஷன் பிரச்சனையில் நீட் தேர்வுக்குத் தனிப்பட்ட ஆர்வத்தின் அடிப்படையில் அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்குப் பயிற்சி கொடுக்க வந்த ஒருவரையும் அனுமதிக்காமல் அலைக்கழித்து அவமானப்படுத்தி ஏனோ தானோ என்று மாணவர்களை மன உளைச்சல் அடைய வைத்தது தான் மிச்சம்.


இப்போது இன்று வரையிலும் அதற்கான ஏற்பாடுகள் ஒரு துளி கூட நடக்கவில்லை என்பதனை ஆதரிப்பவர்கள் யாராவது கல்வி அமைச்சர் அவர்களிடம் கொண்டு செல்லுங்கள்.  

இந்த பாவம் நின்று கொல்லும் என்று உறுதியாக நம்புகிறேன்.

-----

(பசும்பொன் தேவர் திருமகனார்) நினைவு அஞ்சலி. ஒலி வடிவில் கேட்க சொடுக்கவும்.

Listen to "மீண்டும் பிறந்து வர மட்டாரா? கோவில்களை மீட்டெடுக்க மாட்டாரா? - 38" 

by ஜோதிஜி பேச்சு JothiG Pechu. ⚓ https://anchor.fm/jothig/episodes/--38-e19gtiq 



நான் கடந்த சில நாட்களாக வையாபுரிக்கு கட்சியை தானம் வழங்கியது.  துரை வைகோ என்று பெயர் மாற்றியது தொடங்கி 28 வருடங்கள் பல ஆயிரம் இளைஞர்களின் வாழ்க்கையை அழித்த வெட்கமின்றி இன்றும் உயிரோடு நடமாடும் இவரை நினைத்து ஆச்சரியமாக உள்ளது.

--------------

இதனைப் படித்து விட்டு ஆதி தமிழிலில் மிக அழகாக அடுக்கடுக்காக எழுத விரும்புகின்றேன்.  தப்புங்களா பாஸ்?  நான் தூங்கிக் கொண்டு இருக்கும் போது திட்டுவிங்களா பாஸ்?

நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் காமராஜர் ஒருவர் மட்டும் தூங்கிக் கொண்டிருக்கும் போது இறந்தார். வலி இல்லாமல் ஆன்மா பிரிந்தது. எப்போது இறந்தார் என்பதே அவர் உதவியாளர் வைரவனுக்கே தெரியவில்லை.  வாழ்க்கை என்றால் இது தான் வாழ்க்கை.  வாழ்ந்த வாழ்க்கைக்கு இயற்கை இறைவன் கொடுத்த பரிசு.   

அய்யா செ. பாலாஜி ஆத்துமணல் தொடங்கி சரளை மண் வரைக்கும், டாஸ்மாக் ஹாலோகிராம் அச்சடிப்பது தொடங்கி ஸ்பிரிட் தனியாக வாங்கி தனி ஆவர்த்தனம் நடத்துவது வரைக்கும் எல்லோரும் செய்தது தான்.

விரைவில் நத்தம் விசு போல இந்தோனேசியாவில் நிலக்கரி சுரங்கம் வாங்க வாழ்த்துகிறேன்.

தொடரட்டும் உங்கள் பணி.


"விஷ்வ சம்வாத் கேந்திரா" சார்பாக விருது


இதுவரை எழுதப்பட்ட புத்தகங்களின் விபரம்

Wednesday, October 27, 2021

திருட்டு திராவிடத்தின் ஊழல் மகாராஜாக்கள்

நீட் தேர்வு குறித்து இன்னமும் தங்கள் குரலை உயர்த்திக் கொண்டே இருக்கும் நம் சமூகநீதி காவலர்கள் இந்த ஆண்டு (2021) பொறியியல் கல்லூரி மாணவ மாணவியர்கள் சேர்க்கை குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.  என்ன சாதித்து உள்ளோம்? என்பதனையும் புரிந்து கொண்டு மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்று தமிழ்ப்பிள்ளைகளின் சங்கம் சார்பாக கோரிக்கை வைக்க கடமைப்பட்டுள்ளோம்.

1. இந்த ஆண்டு 1, 51, 871  இருக்கைகளுக்கு நிரம்பிய எண்ணிக்கை என்பது  95,069.  அதாவது 62.6 சதவிகிதம்.  52,802 அரசு இருக்கைகள் நிரப்பப்படவில்லை என்பதனை விட இந்த முறை 7.5 சதவிகித இட ஒதுக்கீடு என்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு என்ற அறிவிப்பு வந்தும் இந்த நிலைமை என்பதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

2. கடந்த இரண்டு வருடங்களில் உள்ள எண்ணிக்கையை விட இந்த ஆண்டு 14.4 சதவிகிதம் அதிகரித்து உள்ளதற்கு ஒரே காரணம் மாமா நிலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வியாளர்கள் என்ற போர்வையில் வாழும் புலிகேசியின் புகழ்பாடிகளுக்குத் தான் அந்த பெருமை.

****
@annamalai_k கடிதம் ஒலி வடிவில்

Listen to 

"விடா முயற்சியால் வெற்றியை விளைவித்த வித்தகர் தாதாசாகேப் பால்கே விருதாளர் ரஜினிகாந்த்' 


இன்ஜினியரிங் படிப்பில் 95,000 இடங்கள் நிரம்பின. கடந்த 5 ஆண்டுகளை விட மாணவர் சேர்க்கை அதிகம். சரி ஆனா 2016ல் 525 கல்லூரி 2021ல் 440  கல்லூரி தான் அதுவும் 71 கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை பாதியாக குறைத்துள்ளது. 







திருட்டு திராவிடத்திற்கு வசூல் செய்து கொடுக்க அமைச்சராக அமர்ந்துள்ள செந்தில் பாலாஜியை வாழ்த்துங்கள். இத்துடன் திருட்டு பரம்பரைக் கோஷ்டிகளை முடிவு கட்ட உதவக்கூடியவர் என்று மனமார நம்புங்கள்.  விரைவில் முட்டுச் சந்துக்குள் நிறுத்துவார் என்று நம்பிக்கை வையுங்கள். 
இவர் எதிர்கால சிறப்பான தமிழகத்திற்கு தேவையற்ற கிருமிகளை அழிக்க உதவுவார் என்று நம்புங்களேன்




Tuesday, October 26, 2021

இதுவரை எழுதப்பட்ட புத்தகங்களின் விபரம்

2009 முதல் 2021 வரை இணைய தளத்தில் செயல்பட்டு வருகின்றேன். தொடக்கத்தில் நண்பர் சீனிவாசன் தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கும் இலவச மின் நூல் தளத்தில் கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டு வந்தேன்.  கூகுள் ப்ளஸ் ல் விமலாதித்த மாமல்லன் மூலம் அமேசான் அறிமுகம் ஆனது.  அதில் புத்தகமாக வெளியிட்டு வந்தேன்.  



Sunday, October 24, 2021

அட்டைப்படம் பார்த்துக் கதை எழுது.(DMK-Corruption-Collection)

1. புலிகேசி ஆட்சி அமைந்ததும் வெளிநாட்டில் வாழும் நண்பர் கொரோனா நிதி அனுப்பி விட்டு என்னையும் அனுப்பச் சொன்னார். நான் 48 000 கோடி ஒரு கணக்கிலும் மற்றொரு கணக்கில் 6 ஆயிரம் கோடி வைத்திருக்கின்றார்கள். வருகின்ற வட்டியை வைத்து என்னவெல்லாம் இப்போது செய்து கொண்டு இருக்கின்றார்கள்? உங்களுக்குத் தெரியுமா? என்று விளக்கினேன்.  இது தனி. செய்துள்ள முதலீடு தனி. பினாமி பெயரில் உள்ளது தனி என்று விளக்கினேன். அவர் சமாதானம் ஆகவில்லை.



2. இந்த நண்பர் மற்றொரு தகவல் சொன்னார். அற்புதமான நேர்மையான அதிகாரிகள் ஒவ்வொரு துறையிலும் போடப்பட்டதால் இனி அனைத்தும் அற்புதம் என்றார்.  இப்போது நடந்து கொண்டு இருக்கும் தகவல்களைப் பார்த்தால் உங்களுக்கே புரியும். உலக புத்திசாலி இறையன்பு ஒகே என்று கையெழுத்துப் போட மட்டும் கோப்புகள் போகின்றது என்று அவர் பக்கம் புலம்பும் புலம்பல்களை மற்றொரு பத்திரிக்கை கிசுகிசு பாணியில் எழுதியுள்ளது. ஆக மொத்தம் இணை துணை முதன்மைச் செயலாளர்கள் முதல் தலைமைச் செயலாளர்கள் வரைக்கும் அவர்களின் கட்டத்தைச் சரி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தொடக்கத்தில் எழுதி இருக்கின்றேன்.  நீங்கள் தான் சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.

3. சில வாரங்களுக்கு நக்கீரன் இதழில் லேசாக எழுதத் தொடங்கி உள்ளனர்.  "கோட்டைக்குள் பி.ஏ போடும் ஆட்டம்" என்கிற ரீதியில் சுவரொட்டியில் இருப்பதைச் சாலையில் சென்ற போது பார்த்தேன்.  

4. மற்றொருவர் சொன்னார். புலிகேசி மகன் பதவிக்கு வரும் வரை எந்த ஊழலும் இருக்கக்கூடாது என்பது உத்தரவு. அனைவரும் பயந்து சாகின்றார்கள் என்றார்.  என்ன ஆயிற்று? தற்போது புலிகேசி பேருந்துகளில் ஏறி இறங்கி ஆய்வு வேலை பார்த்துக் கொண்டு இருக்கின்றார். புலிகேசி மகன் படத்தில் நடித்துக் கொண்டு இருக்கின்றார். தமிழக மக்கள்?  ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாங்கிய 500 ரூபாயை வைத்து செலவழித்து முடித்து புறங்கையை நக்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.

5. பத்திரிக்கைகள் எவரையும் தொடர்ந்து புகழ மாட்டார்கள். முடியாது. வாய்ப்பில்லை. வாசிப்பவர்களுக்குத் தெரிந்து விடும். வாசக வட்டம் குறைந்து விடும்.  என்ன தான் உருட்டல் மிரட்டல் அன்பளிப்பு எது என்றாலும் தேன் நிலவு காலம் என்பது ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் தான்.

6. ஆறு மாதங்கள் இன்னமும் முடியவில்லை.  குடும்ப நிதி. கட்சி நிதி. அமைச்சர் நிதி. எடுப்பு நிதி. தொடுப்பு நதி என்று பலவாறாகப் பிரிந்து கொண்டே செல்ல எங்கிருந்து தொடங்கி எங்கே இந்தப் பாதை முடியும் என்பதே தெரியவில்லை.

கடைசியாக

மோடி ஒவ்வொரு பெரிய திட்டங்களையும் அறிவிக்கும் போது பத்து அல்லது பதினைந்து துறைகளை ஒன்று சேர்த்து மொத்த நிதி ஆதாரம், இணைத்த விபரங்கள், காரணங்கள், நோக்கங்கள், திட்டங்கள், இலக்கு, கால அளவு என்று உடனே வந்து விடுவதைப் பார்க்கலாம்.  அதே போல அந்தத் திட்டம் முடிந்தவுடன் அது சார்ந்த விபரங்களும் இணையத்தில் வாசிக்க கிடைக்கின்றது.  ஏன் துறைகளைக் கட்டாயம் இணைக்கின்றார் என்றால் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையது. ஒன்றைக் காரணம் காட்டி மற்றொன்றைக் குறை சொல்லக்கூடாது. இங்கே நிலைமை எப்படி உள்ளது?

இதை இங்கே எழுதக் காரணம்

ராஜகண்ணப்பன் ஆவின் இனிப்பு வாங்கிக் கொடுக்க மனம் இல்லாமல் மகன் மூலம் 30 சதவிகிதம் வாங்கும் இனிப்பு மூலம் கொள்ளையடிக்க முடிகின்றது என்றால், கஜானாவில் காசே இல்லாத போது செந்தில் பாலாஜி திருடத் தயாராக இருக்கின்றார் என்றால், ஒவ்வொரு அமைச்சர்களும் அவரவர்களுக்கு உகந்த வரையில், முடிந்த வரையும் திருடுவதையே வாடிக்கையாக கொண்டு இருக்கும் இப்போதைய சூழலில்,  இவர்களுக்கு ஏன் ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும்?.

தமிழ்நாட்டிற்கு இறுதிச் சடங்கு செய்யும் இவர்களைப் போன்ற வெட்டியான்களுக்கு மரியாதை தேவையா?

கரப்ஷன், கமிஷன், கலெக்சன்

Saturday, October 23, 2021

"விஷ்வ சம்வாத் கேந்திரா" சார்பாக விருது


22/10/2021 கோவையில், "விஷ்வ சம்வாத் கேந்திரா" சார்பாக விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
"இங்க விருது வாங்குன மத்தவங்கள்ளாம் ஊடக துறையில ஒரு நீண்ட கால அனுபவம் உள்ளவங்க, ஆனா வலைமனைகளிலும், சமூக ஊடகங்களிலும் எழுதிகிட்டிருக்க என்னை போன்றவர் களையும் கவுரவிச்சு விருது வழங்குனது பெருமை.

மொதல்ல நான் பொதுவான பல விஷயங்களை பத்தி தான் எழுதிட்டிருந்தேன்.  அப்புறம் இந்த மோடிங்கற மனிதர் பத்தி தெரிஞ்சுக்க  ஆரம்பிச்சு, அவரோட அசாத்திய செயல்களாள ஈர்க்கப்பட்டு, ஏன் இவருக்கு எதிரா தமிழ்நாட்ல மட்டும் இப்படி ஒரு அவதூறு பிரச்சாரத்தை செய்யறாங்க என யோசிக்க ஆரம்பிச்சேன்.  

ஒரு சாமானியனா, ஒரு இந்திய குடிமகனா இவரை ஆதரிக்கறது என் கடமைனு உணர ஆரம்பிச்சு அவரோட சாதனைகள் பத்தி நிறைய எழுத ஆரம்பிச்சேன்.  

எனக்கு விருது வாங்க தகுதியிருக்கானு தெரியல.  ஆனா இனிமே அந்த தகுதிய வளர்த்திக்க கடுமையா உழைப்பேன்.




**************

சென்ற வருடம் 2020 ஜனவரி 6 அன்று நான் 1 முதல் 8 வரை படித்த பள்ளியில் அழைத்து வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்புரை பேச வைத்து அங்கீகரித்தார்கள்.  என் எழுத்தைத் தொடர்ந்து படித்து வந்த பள்ளி தாளாளர் மகன் அப்பாவிடம் சொல்லி அதன் பிறகு நான் பள்ளியில் படித்த பழைய மாணவன் என்று அறிந்து ஆச்சரியப்பட்டனர்.  எதிர்பாராத நிகழ்வு. 1922 முதல் நடந்து வரும் பள்ளி. அரசு உதவி பெறும் பள்ளி. அடுத்த வருடம் நூற்றாண்டு விழா கொண்டாடப் போகும் பள்ளி.  அடுத்த வருடமும் பேச அழைத்து உள்ளனர்.  ஆனால் சென்ற வாரம் தாளாளர் உடல் நலக்குறைவால் வயது முதிர்வால் காலமானார். வருத்தமாக இருந்தது.

இந்த வருடம் இந்த விருது மற்றும் அங்கீகாரம். 

என் எழுத்துப் பணியைக் கவனித்து அழைத்துப் பேசினார்கள். அப்போது நான் சென்னையில் இருந்தேன்.  தகவல் சொன்னதும் "நீங்கள் தவறாக அழைத்து உள்ளீர்கள். நான் பெரிதாக எந்தச் சாதனையும் செய்யவில்லை" என்று சொல்லிவிட்டு அலைபேசியை நிறுத்த முயன்ற போது மேலும் பல தகவல்கள் சொன்ன போது சற்று நம்பினேன்.

சிறிது நேரத்தில் நண்பர் குறுஞ்செய்தி அனுப்பினார்.  அதன் பிறகு தான் புரிந்தது.  யாரிடமும் சொல்லவில்லை.  சொல்வதற்கு என்ன இருக்கின்றது? என்றே தோன்றியது.  இப்போது வரைக்கும் அந்த எண்ணம் தான் மனதில் உள்ளது.  இந்தப் படத்தை இங்கே போடலாமா? வேண்டாமா? என்ற எண்ணம் மாறி மாறி வர சில தகவல்களைத் தெரிவிக்கும் பொருட்டு இதனை இங்கே போட்டே ஆக வேண்டும் என்று தோன்றியது.



என்னுடன் நிற்கும் பெண்மணி தி ஹிந்து வில் பணிபுரிபவர்.  மற்றொருவர் தமிழ் இந்து திசையில் பணிபுரிபவர்.  

ஆர்எஸ்எஸ், பாஜக போன்ற கட்சிகளுக்கும் இந்தப் பத்திரிக்கைகளும் தொடர்பு இல்லையே என்று உங்களுக்குத் தோன்றும்.  

கள அரசியல் வேறு.  எதார்த்த அரசியல் வேறு.  

நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த, நடத்திய, வந்து கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

*************

Listen to "பெருமிதம் கொள்கிறது தேசம். மோடி அவர்களின் மக்கள் நேசம் - 33" by JothiG ⚓


*******

மோடி அரசின் காப்பீடு திட்டங்கள்-பகுதி 2- கேசவன் சிதம்பரம்

Wednesday, October 20, 2021

October 18 - மகளின் கல்லூரி வாழ்க்கைப் பயணம் தொடங்கியது

நான் சென்னைக்கு முதல் முறையாக கல்லூரி முடித்து ஒரு வருடத்தில் சென்றேன். பள்ளித் தோழன் சொக்கலிங்கம் எனக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தான். எழும்பூரில் இன்னமும் பிரபல்யமாக இருக்கும் ஆம்னி பேரூந்து அலுவலகத்தில் அதிகாலையில் சென்று சேர்ந்தேன். விடியாமல் இருந்தது. சொக்கலிங்கம் வருகைக்காகக் காத்திருந்தது இன்னமும் என் நினைவில் உள்ளது.  



Tuesday, October 19, 2021

தமிழகத்தில் மின்சார ஊழல் தொடங்கப் போகின்றது


2021 தமிழக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க-வை 1446 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மகத்தான வெற்றி பெற்ற திருமதி.ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் அவர்கள்


அண்ணாமலை அவர்கள் தமிழகத்தில் மின்சார ஊழல் தொடங்கப் போகின்றது என்பதனை கோடிட்டு காட்டியுள்ளார்.  

இவர்களைத் தான் நான் ஆதரிப்பேன் என்று கங்கணம் கட்டி மனசாட்சியை அடகு வைத்து விட்டு வாழும் ஜீவன்கள் கீழே உள்ள படத்தை லேமினேட் செய்து வீட்டில் வைத்திருப்பது நல்லது.



தலைவர் கடிதம் - 30 - பூத்தது தாமரை பொலிவுடன் மாநிலம் முழுவதும் பாஜக விற்கு மக்கள் பிரதிநிதிகள்

Listen to "தலைவர் கடிதம் - 30 - பூத்தது தாமரை பொலிவுடன் மாநிலம் முழுவதும் பாஜக விற்கு மக்கள் பிரதிநிதிகள்" by JothiG ⚓ https://anchor.fm/jothig/episodes/--30---e190nbc/a-a6ntjva 


மோடி அரசின் காப்பீட்டுத் திட்டங்கள் - கேசவன் சிதம்பரம்

Thursday, October 14, 2021

ஊரக உள்ளாட்சித் தேர்தல் என்பது

உள்ளாட்சித் தேர்தல் என்பது கட்சிகளோடு தொடர்பற்றது. எந்தக் கட்சியும் வேட்பாளர்களை மிரட்ட முடியாது. பணிய வைக்கவும் முடியாது.  வேட்பு மனுத்தாக்கல் செய்ய சென்னை வா? என்று அழைக்க முடியாது. பணம் கட்டு பார்க்கலாம் என்று சம்பாதிக்க முடியாது. இது முழுக்க உண்மையான மக்களுக்கான தேர்தல். அடித்தட்டு மக்களின் ஜனநாயகப் புரட்சி சார்ந்த முன்னெடுப்பு என்று தான் சொல்ல வேண்டும். 

இந்த விசயத்தில் அமரர் ராஜீவ் காந்தி அவர்களுக்கு ஒவ்வொரு கிராம வாசிகளும் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.  ஆனால் அவர் ஆசைப்பட்டார். அவர் கட்சிக்காரர்கள் அவர் இருப்பதையே விரும்பவில்லை என்பது தான் கசப்பான உண்மை. ஆனால் மோடி அவர்கள் ஒவ்வொரு மாநிலமும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் தான் நிதி என்று கடிவாளம் போட்டு இன்று மாநில அரசுகள் விரும்பாத இந்தத் தேர்தல் நடக்க காரணமாக இருக்கின்றார் என்பதனை நன்றாக நினைவில் வைத்திருங்கள்.

இது சார்ந்த விதவிதமான காட்சிகளைத்தான் இப்போது நாம் தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பார்த்தோம். தனி நபர்கள், அவர்களின் செல்வாக்கு, செல்வாக்கு, பண பலம், சமூக பலம், சாதியச் சார்பு, மதம் சார்ந்த ஆதரவு இவைகள் தான் முக்கிய இடத்தைப் பிடித்தன.  

ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற பாரபட்சம் இல்லை. 

மாவட்டச் செயலாளர்கள் முதல் கிளை நகரச் செயலாளர்கள் வரைக்கும் பங்கு பிரித்துப் பக்குவமாக ஆட்களைப் பார்த்து, எதார்த்தம் புரிந்து, நிஜத்தை உணர்ந்து இதில் வேட்பாளராக நிறுத்த உதவி புரிந்தனர். வார்த்தைகளைக் கவனித்துக் கொள்ளுங்கள். எவரும் நீ தான் நிற்க வேண்டும் என்று சொல்லவில்லை. எனக்குத் தகுதி இருக்கிறது. நான் நிற்கிறேன் என்று வந்து சொன்னவர்களை ஒவ்வொரு கட்சியும் அரவணைத்து தங்கள் கட்சி வேட்பாளர்கள் போலக் காட்டிக் கொண்ட தேர்தல் இது.

இந்த வெற்றிக்காக திமுக எப்போதும் போது அதற்குண்டான அனைத்துக் கேவலமான ஜனநாயக நெறிமுறைகளை மீறி பணத்தை இறைத்து, ஆட்களைக் கடத்தி, மிரட்டி, பணிய வைத்து, அரசு வேலைகள் தருகிறேன், 

ஒப்பந்தம் தருகின்றோம் என்று ஒவ்வொரு நபருக்கும் விலை பேசி கடைசியில் ஊடகங்கள் மூலம் ஐந்து மாத ஆட்சிக்கு உண்டான வெற்றி என்பது கட்டியக்காரர்கள் போலக் காட்சி ஊடகங்களில் சிரிப்பு மூட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்.

மதிப்பிற்குரிய தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் ஒன்று உண்டு. என் எண்ணப்படி இன்னும் சில தினங்களில் நடந்தேறும் என் உள்மனம் சொன்னாலும் நான் மனதில் நினைப்பதை இங்கே இப்போதே எழுதி வைத்து விடுகின்றேன்.

பாஜக வில் இருப்பவர்கள் மூன்று விதமான நபர்கள்.

1. திமுக வழங்கும் சலுகைக்காகக் கட்சியைக் காவு கொடுப்பவர்கள்.

2. அதிமுக வுடன் பழகிய பாவத்திற்கு அங்காளி பங்காளியாக தொழில் கூட்டாளியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

3. கட்சி வளர்ந்தால் தன் இருப்பு போய் விடும் என்ற எண்ணத்தை எவையெல்லாம் செய்யக்கூடாதோ அதையே தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் நபர்கள்.

4. கருத்துக்களைப் பரப்ப வேண்டிய இடத்தில் உள்ளவர்கள் பகடிப்படங்களைப் பரப்பும் நபர்களாக இருந்து கொண்டு தாங்கள் செய்யும் பாவங்களை இன்னதென்று அறியாமல் அப்படியே அதன் வழியே பயணித்து கட்சியைக் காட்சிப் பொருளாக மாற்றிக் கொண்டிருக்கும் தகுதியற்ற நபர்கள்.

இந்த நான்கு திசைகளில் உள்ள அசுத்தக் காற்றை உறிஞ்சும் குழல் ஒன்றைத் தயார் செய்யுங்கள் தலைவரே. 

தேவையில்லாதவற்றை  நீக்கினால் போதும். 
சிலை  பார்வைக்குத் தெரியும். 
காரணம் உங்கள் உழைப்பு வீணாகிப் போய் விடக்கூடாது.  
லடாக் முனை கைவசமானது போலக் குமரி முனை உங்கள் உழைப்பு சாத்தியப்படுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை.

அதற்கு பாரத்தைக் குறையுங்கள். பயணம் இனி இனிதானதாக மாறும்.

வலிமையான பாரதம் மோடியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - PART -1   நிதி ஆலோசகர் திரு. ஷ்யாம் சேகர்
 

 வலிமையான பாரதம் மோடியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - PART -2    நிதி ஆலோசகர் திரு. ஷ்யாம் சேகர்

Sunday, October 10, 2021

20 ஆண்டுகளும் 7 ஆண்டுகளும்

மோடி பிரதமராக பதவியேற்று 7 ஆண்டுகள் முடிந்து இப்போது 8 வது ஆண்டு.

மோடி அவர்கள் குஜராத் முதல்வராக பதவியேற்று 20 ஆண்டுகள் முடிந்து இப்போது 21 வது ஆண்டு.

வளர் முகம். வளர் பிறை. கறை இல்லாத பொது வாழ்க்கை. 

விமர்சித்தவர்கள் பல காத மைல்கள் பின்னால் இருந்து இன்னமும் இன்றும் கத்திக் கொண்டு எழுதிக் கொண்டே இருக்கின்றார்கள்.

மோடி ஆட்சியில் மக்கள் அரசு திட்டங்களை உணர்கின்றார்கள். 
அனுபவிக்கின்றார்கள். 
கூனிக்குறுகி வெந்து நொந்து நமக்கு கிடைக்குமா? என்று எவரும் அவஸ்த்தைப்படவில்லை.  

நலத்திட்ட உதவிகளில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர், சீக்கியர் என்ற பாகுபாடும் இல்லை. 


மோதி அரசின் வெளியுறவுக் கொள்கை வெற்றிகள் பகுதி -2


இந்தியர்கள் கக்கூஸ் போகும் செயலை சுதந்திரமாக செய்ய மோடி என்றொரு மனிதர்  பிரதமராக வர வேண்டியிருந்தது என்பதனை யோசித்தால் போதுமானது. இதன் மூலம் இதற்கு முன்னால் இருந்தவர்கள் எப்படி ஆண்டார்கள்? என்பதனை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

கடந்த ஏழு ஆண்டுகள் மத்திய அரசின் சிறப்புகளில் ஒன்று எல்லாவற்றுக்கும் தரவுகள் உள்ளது.  எந்த துறையாக இருந்தாலும் நீங்கள் தகவல்கள் பெற முடியும்.  இணையத்தில் உள்ளே நுழைந்தால் கட்டாயம் ஒப்பீடு வரைக்கும் நம்மால் கணக்கீடு செய்து கொள்ள முடியும். தமிழ்நாட்டில் கடந்த 50 வருடங்களில் எந்த துறைகளிலும் தரவுகள் இல்லை. எல்லாத் துறைகளும் உத்தேசமாக ஓடிக் கொண்டு இருக்கின்றது என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். எந்த இடத்திலும் கணக்கு மற்றும் தரவு என்பதே இல்லை. பணிபுரியும் அதிகாரிகளுக்கே தங்கள் துறை குறித்த புள்ளிவிபரங்கள் ஒன்றுமே தெரியாது என்பது தான் உண்மை.

நம் தமிழகத்தில் அமைச்சராக  வர வேண்டும். தொடர்ந்து இருக்க வேண்டும் என்றால் சில தகுதிகள் வேண்டும்.  

சுடுகாட்டினை அலங்கரிக்கத் தெரிய வேண்டும்.  வெட்டியான் வேலை வரைக்கும் செய்ய வேண்டும். வயது வித்தியாசமின்றி சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கத் தெரிந்து இருக்க வேண்டும். புத்திசாலித்தனம் ஆகாது. அப்படி கொஞ்சம் உள்ளே இருந்தாலும் காட்டக்கூடாது. முடியாது. 

கிச்சன் காபினெட் முதல் இணைவி, துணைவி, வரைக்கும் வந்தது போனது முதல் அனைத்து பேர்களுக்கும் பேட்டா வழங்க கற்று இருக்க வேண்டும்.  மாமா என்பது இரண்டு முதுகலை பட்டப்படிப்பு அல்ல.  ரசிகர் மன்ற கோமாளிகள் அமைச்சர்களாக வருவதும் முக்காத அறிஞர் என்று புகழ்வதும் நம் தமிழகத்தின் சிறப்புகளில் ஒன்று.

இவர்கள் தங்கள் திறமைகளை காட்ட முடியாமல் மோடி என்ற பிம்பத்தை வைத்து இன்னமும் ஓட்டுப் பிச்சை எடுக்கின்றார்கள். எடுக்கப் போகின்றார்கள். 

மோடி ஆட்சியின் சிறப்பு என்ன?

பிரதமர் மோடி ஆட்சியில் குறைகளே இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இதற்கு முன்பு சுமார் 58 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆண்ட காங்கிரஸ் ஆட்சியை ஒப்பிடும்போது, ஸ்திரத்தன்மை கொண்ட மோடி ஆட்சி மக்களுக்குப் பெரிதும் நன்மை பயக்கும் விதத்தில் உள்ளது.

நாட்டில் தீவிரவாதம் / வெடிகுண்டு வெடித்து உயிர் பலிகள் 2014-க்குப் பிறகான காலத்தில் அறவே இல்லை. 2014-க்கு முன்பு வரை, சுமார் 30000-க்கும் மேலாக அப்பாவி மக்கள் தீவிரவாதம் காரணமாக உயிர் இழந்தனர் என ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறது மோடி அரசு. குறிப்பாக எப்போதும் தீவிரவாதம் என்ற பெயரில் நமக்குத் தொல்லை கொடுக்கின்ற பாகிஸ்தான் நாட்டை (இந்திய அரசு ஐக்கிய நாடுகள் சபை வரை சென்று) தனிமைப்படுத்தியது மோடி அரசு.

தீவிரவாதிகளின் புகலிடமாக விளங்கிய காஷ்மீர் பகுதியில் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவை (Article 370 abrogated) நீக்கியது மற்றும் அப்பகுதியை இந்தியாவுடன் இணைத்தது (one Constitution one India), இஸ்லாமியப் பெண்களின் வாழ்க்கையில் பாதுகாப்பு (Triple Talaq) அளித்தது போன்ற பல முக்கியமான விஷயங்களைச் செயல்படுத்தியது மோடி ஆட்சியில் தான்.

காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் அட்டூழியம் தொடர்கதையாக இருந்த நிலையில், சிறப்பு அதிகாரம் கொண்ட சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து, சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த எல்லைதாண்டிய தீவிரவாதிகள் / தீவிரவாதம் குறித்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மிக குறுகிய காலத்தில் தக்க நடவடிக்கை எடுத்து, வரலாற்றுச் சாதனை படைத்தது மோடி அரசு. 

ஜம்மு காஷ்மீர் பகுதியை இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்து, அவைகளின் நிர்வாகத்தை நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அங்குள்ள மக்களுக்கு அமைதியான வாழ்க்கை வாழ வழிவகுத்தார் பிரதமர் மோடி அவர்கள். இதனால் நாடு முழுவதும் ஒரே சட்டம் அமுலுக்கு வந்தது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கான நல்ல பல திட்டங்களைத் தந்துள்ளது இந்த மோடி அரசு. கிராமங்களில் உள்ள வீடுகளில் கழிப்பறை வசதிகள், ஏழைகளுக்கு எரிவாயு உருளை, மின்சார வசதி, வங்கிக் கணக்கு மற்றும் நேரடியாக அதில் அரசு மானியம், அனைவரும் பயன்படுத்தும் வகையில் ஆரோக்கியம் இன்சூரன்ஸ் போன்ற நல்ல பல திட்டங்களை உருவாக்கித் தந்தது மோடி ஆட்சியில் தான்.

நாட்டில் ரொக்கப் பணப் பரிவர்த்தனையை (cashless transactions) பெருமளவு குறைத்து மின்னணு பண வர்த்தனையை (electronic payments via paytm etc.) முன்னெடுத்து அமல்படுத்தியது  மோடி ஆட்சியில் தான்.

நாடு முழுவதிலும் ஒரேவிதமான வரிவிதிப்பு - ஜி.எஸ்.டி. எந்தவொரு நிறுவனமும் முறையாகப் பதிவு செய்யாமல், வியாபாரம் / தொழில் / உற்பத்தி செய்ய முடியாது. பதிவு செய்யாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்த மோடி அரசு, கிட்டத்தட்ட 300000 நிறுவனங்களுக்கு மேல் பதிவு செய்யாமலேயே இருந்து வந்தது கண்டுபிடித்து சீல் வைத்தது.

எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் சரியான முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 30 மில்லியன் போலி உருளைகள் விநியோகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக நிறுத்தப்பட்டது. போலி ரேஷன் அட்டைகள் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் கண்டுபிடிக்கப்பட்டு ஒழிக்கப்பட்டது மோடியின் வெளிப்படையான ஆட்சி நிர்வாகத்தால் தான்.

வங்கியில் சர்வதேச பணப் பரிவர்த்தனை (international money transfer) முறையாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டது மோடி ஆட்சியில் தான். அனைத்து வரவுகளும் முறையாக கணக்கில் கொண்டு வரப்பட வேண்டும் என்ற நடைமுறையை அமலாக்கம் செய்தது.

சாமானியனின் வங்கிக் கணக்கில் உள்ள பணம் சரியான முறையில் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது மோடியின் ஆட்சியில் தான். அதன்படி யாரும் பணத்தைக் கணக்கில் கொண்டு வராமல் இருப்பது மற்றும் வரிஏய்ப்பு செய்வது குற்றமாகும்.

எரிவாயு மானியம் உட்பட மக்களுக்கு வழங்கப்படும் பணத்தை நேரடியாக அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது மோடி ஆட்சியில் தான் ஆரம்பித்து வைக்கப்பட்டது - இடைத்தரகர்கள் எவருமில்லை.

கடத்தல், பதுக்கல் மற்றும் கள்ள நோட்டு அச்சடிப்பு / கள்ள நோட்டு புழக்கம்  குறைந்தது மட்டும் அல்ல, தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக அத்தியாவசியப் பொருட்களின் விலையும் மோடி அரசாங்கத்தால் - கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது சிறப்பு. 

நாடு முழுவதும் சாலை வசதிகள், புதிய பாலங்கள் அமைப்பு, தேவையான கட்டமைப்பு வசதிகள் (infrastructure developments), நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் அதிநவீன விமானங்கள் / கருவிகள் /தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் ரயில்வே துறையில் ஏற்படுத்தப்பட்ட தேவையான மேம்படுத்தப்பட்ட வசதிகள் (ஆளில்லா ரயில்வே கிராஸ்ஸிங் உட்பட) என பட்டியல் நீளுகிறது.

ஊழல்கள் புரிந்த எந்த அரசியல் கட்சியும் / கட்சித் தலைவர்களும் மோடி ஆட்சியில் / மோடி அரசுக்கு எதிராக "அரசியல்" செய்ய முடியவில்லை என்பது வெளிப்படை.

மக்களுக்கு ஒரு மாற்றம் வேண்டும் என்பதால் 2014-ம் ஆண்டு தேர்தலில் பாஜக-வுக்கு ஓட்டு போட்டு ஆட்சிக்கட்டிலில் அமர வைத்தார்கள். 

அதன் பிறகான காலகட்டத்தில் பாஜகவின் ஆட்சி அதாவது மோடி ஆட்சியின் நடவடிக்கைகள் பிடித்துப் போக, மீண்டும் 2019-ம் ஆண்டு தேர்தலில் பாஜக அரசுக்கு / மோடி ஆட்சிக்குச் சான்றளித்து இரண்டாம் முறையாக மோடி அரசு நீடிக்க வாக்களித்தார்கள் மக்கள்.

எதிர்க்கட்சிகள் (காங்கிரஸ் உட்பட) அனைத்தும் ஒன்று சேர்ந்து / சேர்த்துத் தேர்தலில் போட்டியிட்ட போதிலும் பாஜக-வை / மோடி அரசை ஆட்சியை விட்டு அகற்ற முடியவில்லை. பெருவாரியான மக்கள் பாஜகவுக்கு ஆதரவு கொடுத்தனர் என்பதே முக்கிய காரணமாகும்.


ஜனநாயக நாட்டில், மக்களின் நம்பிக்கையை / நன்மதிப்பைப் பெற்ற எந்த ஓர் அரசையும், எதிர்க்கட்சிகளால் அவ்வளவு எளிதாக வீழ்த்த முடியாது என்பதே நிதர்சனம். அதற்கு பாஜக அரசும் / மோடி ஆட்சியுமே உதாரணம் ஆகும்.


Saturday, October 09, 2021

ருத்ர தாண்டவம் உணர்த்தும் செய்திகள்

திரௌபதி, ருத்ர தாண்டவம் என்ற இந்த இரண்டு படங்கள் எனக்கு தற்போதைய சமூகத்தில் உள்ள சில துறைகளைப் பற்றியும் அதில் வாழும் அரிய ஜீவன்களைப் பற்றியும் புரிய வைத்தது.

என் உறவுக்கூட்டத்தில் ஒரு பெண்மணி 1980 ஆம் ஆண்டு நாகர்கோவில் அருகே உள்ள ஹோலிகிராஸ் கல்லூரியில் முதுகலை பட்டப் படிப்புக்காக (எம்எஸ்சி) சேர்ந்தார். அவருக்குப் பின்னால் வாங்கிய மதிப்பெண்கள் (கிறிஸ்துவர்கள்) அனைவருக்கும் இடம் கிடைத்தது. 



மோதி அரசின் வெளியுறவுக் கொள்கை வெற்றிகள்/பிரகாஷ்  


இவருக்குக் கிடைக்கவில்லை. இவர்களும் கண்டு கொள்ளவில்லை. படித்தது போதும் என்று வீட்டில் சொல்லிவிட்டார்கள்.  

அப்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கீழ் அந்தக் கல்லூரி இருந்தது. ஏதோ ஒரு காரணத்தின் அடிப்படையில் அந்த ஆண்டு சேர்க்கை ஓர் அதிகாரியின் பார்வைக்குப் போக இளங்கலையில் 85 சதவிகிதம் வாங்கிய அந்தப் பெண்ணுக்கு ஏன் இடம் வழங்கவில்லை என்று கேள்வி எழுப்ப அதன் பின்பு வேண்டா வெறுப்பாக இடம் வழங்கினார்கள்.  

முதல் பருவத் தேர்வு முடியும் வரைக்கும் இவரை கண்டு கொள்ளவே இல்லை.  விடுதி முதல் வகுப்பறை வரை ஆசிரியர்கள் அனைவரும் பாராமுகமாகத்தான் இருந்தார்கள்.  முதல் பருவம் தேர்வு முடிவு வந்த போது இவரின் மதிப்பெண் 89 சதவிகிதம்.  இவர் தான் பல்கலைக்கழக அளவில் டாப் ரேங்க்.  அதன் பின்பு தான் அனைவரும் சகஜமாக பேசினார்கள்.

சென்றவாரம் இதனை அவர் என்னிடம் பேசிக் கொண்டிருந்த போது சொன்னார்.

எனக்கு மனதில் இருந்த ஆச்சரியம் என்னவெனில் இன்று பாஜக, ஆர்எஸ்எஸ், மதவாதம் என்று இங்கே கதறுகின்றார்கள்.  

ஆனால் இது நடந்தது 1980.  அப்போது நான் பள்ளிக்கூடச் சிறுவன்.  இதையே வேலூர் சிஎம்சி என்று கணக்கிட்டு ஒவ்வொரு கிறிஸ்துவ நிறுவனங்களாக கணக்கிட்டால் அவர்கள் மதத்தில் உள்ளவர்களுக்கு மனசார அவர்கள் உதவி செய்து உள்ளனர். இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களில் இது நடைபெறவில்லை. இந்து மதத்தில் இட ஒதுக்கீடு, அது இது என்று வசதிகள் பொறுத்து எப்படியே படித்து மேலேறி வந்துள்ளதும் நடந்து உள்ளது. 

ஆனால் இஸ்லாமியர்கள் கல்வி குறித்த விழிப்புணர்வு இல்லாமல் கடந்த சில வருடங்களாக மாறி உள்ளனர்.  

இதை இங்கே எழுதுவதற்குக் காரணம் பத்திரிக்கை என்றால் அது அய்யர்கள் மட்டும் ஆட்சி செலுத்திய துறை என்றும், அவர்கள் தான் அனைத்து இடங்களிலும் நீக்கமற இருந்தார்கள் என்றும் இன்று வரையிலும் சொல்லக்கூடியவர்கள் இப்போது காட்சி ஊடகம், அச்சு ஊடகம் பெரும்பான்மையாக யாருடைய கையில் உள்ளது? என்பதனைப் பற்றி ஏன் பேச மறுக்கின்றார்கள்?

இந்த நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் 90 சதவிகிதம் யார் என்று உங்களுக்குத் தெரியும்.

விகடன் வழங்கிய இந்த மதிப்பெண்கள் முதல் ஒவ்வொருவரும் கதறும் கதறலைப் பார்க்கும் போது மோகன் அவர்கள் இராமநாராயணன் மாதிரி மினிமம் கேரண்டி இயக்குநர் என்று கொடி நாட்டுவார் என்றே என் உள் மனம் சொல்கின்றது.

Thursday, October 07, 2021

மோடி யாருடன் போட்டி Modi 20 Years / கு. அண்ணாமலை பாஜக தமிழக தலைவர்.

இதே அக்டோபர் 7 போல இருபது வருடங்களுக்கு முன்பு 2001 அக்டோபர் 7 அன்று மோடி அவர்கள் குஜராத் முதல்வராக பதவியேற்றார். இன்றைய தினத்தோடு இருபது வருடங்கள் முடிந்து விட்டது. நாளை முதல் 21 ஆம் ஆண்டு. 

அதே போல மோடி அவர்கள் பிரதமராக பதவி வகித்து 7 ஆண்டுகள் முடிந்து 8 வது ஆண்டும் தொடங்கி விட்டது. இன்றைய தினமணியில் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் மோடி அவர்களின் இருபது ஆண்டு கால சாதனைகளைப் பற்றி, மோடி கொண்டு வந்த திட்டங்களைப் பற்றி மிக மிக அற்புதமான ஒரு கட்டுரை எழுதியிருந்தார். 

அதன் காணொளி வடிவம் இது. உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். (கீழே இணைப்பில் உள்ளது)

Tuesday, October 05, 2021

வட மாவட்டங்களில் சூழ்ந்துள்ள ஆபத்து




நண்பர் கிரி இந்த தளத்தை பாஜக தளமாகவே மாற்றி விட்டீர்களா? என்று கேட்டு இருந்தார்.  எனக்கு எதையும் எழுத விருப்பம் இல்லை. காரணம் மக்களின் மனோபாவம் முற்றிலும் மாறிவிட்டதைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன்.  இன்னமும் திரைப்படம் சார்ந்த செய்திகள், துணுக்குள், காட்சிகள் என்று அதன் மேல் உள்ள ஈர்ப்பு தமிழர்களுக்குக் குறையவில்லை. வாசிப்பு என்பதன் நோக்கம் மாறிக் கொண்டே வருகின்றது.  எனவே நான் பார்க்கும் சமூகத்தை உள்ளே வைத்துக் கொண்டு இனி இங்கே மாற வேண்டிய சூழலுக்கு என்னால் ஆன பங்களிப்பு செய்ய அதன் அடிப்படையில் அந்த எண்ணத்தில் செயல்படவே விரும்புகிறேன்.  எல்லாத் தளங்களிலும் அதற்காகவே என் பணியைச் செய்ய விரும்புகிறேன்.  இது என் தனிப்பட்ட சுய விருப்பம்.

அதற்கு முதலில் இவர்கள் இருவரையும் இங்கே அப்புறப்படுத்தப்பட வேண்டும். புதிய நபர்கள் எவர் வேண்டுமானாலும் வந்து ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தாலும் பரவாயில்லை. காரணம் அந்த அளவுக்கு அரசு நிர்வாகம் உழுத்துப் போய்விட்டது.

•••

அரவிந்த் கெஜரிவால், ராகுல், பிரியங்கா, அகிலேஷ் இவர்கள் அடுத்த வருடம் மட்டுமல்ல. 2024 நாடளுமன்றத் தேர்தல் வரைக்கும் தூங்கப் போவதில்லை.  

ரத்த ஆறு ஓடினாலும் கவலைப்படப் போவதில்லை.  

இந்தியாவின் வளர்ச்சி என்பது இவர்களுக்கு எரிச்சலூட்டும் சமாச்சாரம்.  

இதன் தொடக்கப்புள்ளி இப்போது உபி யில் நடந்து கொண்டு இருக்கின்றது.  

மோடி இடத்தில் வேறொருவர் இருக்கும் பட்சத்தில் வருடக்கணக்கில் உள்ளே இருந்து களி திங்க வேண்டியிருக்கும். பிரியங்கா அறையை சுத்தம் செய்து தன் உடையை தானே துவைத்துக் கொள்ள வேண்டியதாக இருக்கும். 

அதுவும் நிரந்தரமாக ஹெரால்டு வழக்கு முடிவுக்கு வரும்பட்சத்தில்.


•••

திண்டுக்கல் ஐ பெரியசாமி அவருடைய குடும்பத்தில் மருமகள் பேசிய பின்பு தான் அங்கு பெந்தகோஸ்து எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார்கள் என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிந்தது அதுபோல விரைவில் மருத்துவர் குடும்பத்திலும் இது போல ஏதோ ஒன்று கிளம்பும் என்று என் உள் மனம் சொல்கின்றது

விழுப்புரம், திண்டிவனம் , கடலூர் போன்ற வடக்கு மாவட்டங்கள் அனைத்தும் பெந்தகோஸ்தே கோஷ்டி ஊடுருவல் மிக மிக அதிகம்.  

காரணம் படிப்பறிவு இல்லை. இடை நிற்றல் அதிகம்.  வருமானம் இல்லை. சாதி பெயரில் கட்சி நடத்தி தங்கள் குடும்பத்தை வளர்த்துக் கொண்டது தான் மிச்சம்.  

மக்களுக்கு ஒரே வழி யார் பணம் கொடுக்கின்றார்களே அவர்கள் சொல்வதைக் கேட்பது. அவர்கள் அழைத்துச் செல்லும் பாதையில் பயணிப்பது.  

மதமாற்றிகள் மிகப் பெரிய அஜண்டாவுடன் இந்தப் பகுதிகளில் செயல்பட்டு வெற்றி கண்டுள்ளார்கள்.  

ராமதாஸ் அய்யா குடும்பம் நிச்சயம் இதில் கை வைக்க மாட்டார்கள்.  அவர்கள் கிறிஸ்துவ வன்னியரும், சாதா வன்னியரும் இரண்டுமே ஒன்று தான்.  ஓட்டு மட்டும் மாம்பழத்திற்கு போட்டால் போதும்.  🤪


நன்றாக இருந்த தமிழகத்தைத் தங்களுடைய சுயநல அரசியலுக்காக இரு கழகங்களும் தேர்தலுக்குத் தேர்தல் ஏராளமான இலவச வாக்குறுதிகளை அறிவித்து வாக்குகளைப் பெற்றனர். 

இலவசங்களுக்கு எதிராக யாராவது கேள்வி கேட்டால் அவர்களை மக்கள் நலத் திட்டங்களுக்கும், சமூக நீதிக்கும் எதிராக செயல்படும் கட்சிகள் என்று கூறி முத்திரை குத்தியதன் விளைவுதான் 2021 மார்ச் இடைக்கால நிதிநிலை நிலவரப்படி தமிழகத்தின் கடன் தொகை ₹485502.54 கோடி ரூபாய். 

புதிதாக பதவியேற்ற அரசு நிதிநிலை தாக்கல் முன்னரே சுமார் ₹40000 கோடி அளவிற்குக் கடன் பெற்றுவிட்டார்கள். 

2021-22 நிதிநிலை தாக்கலுக்குப் பிறகு வருவாய் பற்றாக்குறை ₹58692.68 கோடியாகவும், நிதிப் பற்றாக்குறை ₹92529.43 கோடியாகவும், இந்த நிதி ஆண்டில் ₹92484.50 கோடி அளவுக்குக் கடன் பெறுவதற்குத் திட்டமிட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்கள்.

ஆக மக்களுக்கு வேண்டிய அத்தியாவசியத் திட்டங்களைச் செயல்படுத்தவே கடன் வாங்கி செயல்படுத்த வேண்டிய நிலையில் உள்ளார்கள். ஏற்கனவே போக்குவரத்துத் துறையில் இலவசங்களை அறிவித்து செலவினங்களைச் சமாளிக்க முடியாமல் பல பணிமனைகளை வங்கியில் அடமானம் வைத்து போக்குவரத்துத் துறையை நாசம் செய்ததோடு, மகளிருக்குப் புதிதாக இலவசப் பேருந்து சேவையையும் தற்போது ஆரம்பித்துள்ளார்கள். 

'தமிழக அரசு' மின்சார நிறுவனமான "TANGEDCO"க்கு கொடுக்க வேண்டிய கடன் பாக்கியைக் கொடுக்காததோடு, புதிய அரசு தமிழகத்தில் பதவியேற்ற பிறகு கடுமையான மின்சாரத் தட்டுப்பாடும் புதிதாக உருவாகி உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான DAவை (Dearness Allowance) மத்திய அரசு கொடுத்தது போல், மாநில அரசானது மாநில அரசு ஊழியர்களுக்குக் கொடுக்க வேண்டிய DAவை கொடுக்காமல் 2022 மார்ச் வரை நிறுத்தி வைத்துள்ளார்கள்.

நிதிநிலை அறிக்கையிலும் அதைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. திராவிட கட்சிகளின் நிர்வாகத் திறமையின்மையால் தமிழகத்தை நாசம் செய்ததோடு, அரசு ஊழியர்களின் DA, மின்சாரம், போக்குவரத்து உட்பட மேலும் பல சீரழிவுக்கும் காரணமாகவும் இருந்தது தான் இந்த இரு கட்சிகளின் சாதனை. உள்ளாட்சித் தேர்தலுக்காக திமுக அரசு அமைதியாக இருக்கிறது. 

தேர்தல் முடிந்தவுடன் அனைத்து விதமான வரிகளும் கூடும். 

(இலவசங்களுக்கு ஆசைப்பட்டு திமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கு உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்தவுடன் சாட்டையடி நிச்சயம்)



கர்மவீரர் காமராஜர் கண்ணுறங்கும் இடம் கவலைக்கிடமாக

மாநிலத்தலைவரின் கடிதம்
கடித  எண்  19

04 october 2021



தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தினமும் தொண்டர்களுக்கு எழுதும் கடிதம் ஒலி வடிவத்தில் கேட்க

Listen to "கர்மவீரர் காமராஜர் கண்ணுறங்கும் இடம் கவலைக்கிடமாக (BJP Anna Letter-19)" by JothiG 

------------------------------------------
கர்மவீரர் காமராஜர் கண்ணுறங்கும் இடம் கவலைக்கிடமாக

பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே... அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே.... அனைவருக்கும் வணக்கம்.

நெஞ்சம் நிறைந்த நேர்மை    
ஏழைகளுக்கான எண்ணம்      
தெளிவான சிந்தனை    
சாதனைக்கான செயல்   
தெய்வீகத் தேசப்பற்று   
சுத்தமான சுயநலமின்மை     
ஆண்மை மிக்க அஞ்சாமை          
எவரும் அணுகும் எளிமை      
ஓய்வறியா உழைப்பு

இதன் ஒட்டுமொத்த வடிவமாகத் திகழ்ந்தவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள். கணக்கில் அடங்காத அவரின் சாதனைகள் அவரை கர்மவீரர் ஆக்கியது. கல்விக்கான கரை காணா பங்களிப்பு அவரை கல்விக் கண் திறந்த காமராஜர் ஆக்கியது.

விருதுநகரில் குமாரசாமி நாடாருக்கும் சிவகாமி அம்மைக்கும் 1903ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்த குழந்தையை அவர்கள் குலதெய்வமான காமாட்சியின் பெயர் சூட்டி காதலாய் ”காமாட்சி” என்று அழைத்தனர். அவரின் அன்னை மட்டும் ஆசை மிகுதியால் ”ராசா” என்றழைக்க, காமாட்சி ராஜா ”காமராஜர்” ஆனார்... அவரின் அன்னையாருக்கு மட்டும் அவர் ராஜாவாக இல்லை. தமிழகத்தின் அத்தனை ஏழை தாய்மார்களுக்கும் அவர் ராஜாவாக இருந்தார். அன்றைய இந்தியாவின் ராஜாக்களை உருவாக்கும் ராஜாதி ராஜனாக காமராஜர் இருந்தார். அக்டோபர் 2 ஆம் தேதி காமராஜரின் நினைவு தினத்தன்று சென்னை கிண்டியில் உள்ள கர்மவீரர் காமராஜர்  நினைவிடத்தின் அவல நிலையைப் பார்த்து மிக வருந்தினேன். அவரது நினைவு நாளன்று கூடக் கண்ணுறங்கும் இடம் திருத்தப்படவில்லை. ஒற்றை விளக்கு கூட ஏற்றப்படவில்லை. அங்கே அவரின் சாதனைச் சரிதம் இல்லை. பல தலைவர்களுடன் எடுத்த படங்கள் இல்லை. அவர் பயன்படுத்திய பொருட்கள் இல்லை. 

அட!.. காங்கிரஸ் கட்சிதான் தன் தேசியத் தலைவரை தேடாமல் சௌகரியமாக மறந்து விட்டது என்றால் ஆட்சியில் உள்ள அரசாவது அல்லது ஒரு சில அதிகாரிகளாவது  காமராசர் என்ற புனிதனின் சமாதியைச் சிதிலம் ஆகாமல் திருத்தி இருக்கலாம்.

இன்றைக்கும் விவசாயிகள் பெரும் பங்கு நம்பிக் கொண்டிருக்கும் பாசனத்திட்டங்களான மணிமுத்தாறு, ஆரணியாறு, சாத்தனூர், அமராவதி, கிருஷ்ணகிரி,வீடூர், வைகை, காவிரி டெல்டா, நெய்யாறு, மேட்டூர் பரம்பிக்குளம், புள்ளம்பாடி, கீழ்பவானி என்று காமராஜர் உருவாக்கிய நீர் ஆதாரங்களைப் பராமரிக்கவே மற்ற ஆட்சிகளுக்கு நேரமில்லை.

நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம்,    
பெரம்பலூர் ரயில் பெட்டித் தொழிற்சாலை,
திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்,
ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை, 
ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலை, கல்பாக்கம் அணுமின் நிலையம்,     கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை,   சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலை, கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை, துப்பாக்கித் தொழிற்சாலை, சேலம் இரும்பு உருக்காலை,

அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்ளான்ட் தொழிற்சாலை,    சமய நல்லூர் அனல்மின் நிலையம், சென்னை அனல்மின் நிலையம் நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை என்று அவர் அமைத்த தொழிற்சாலைகளுக்குக் கணக்கில்லை. தமிழகத்துக்குப் பொற்காலக் காட்சி தந்த மனிதன் கண்ணுறங்கும்  இடம் கற்காலக் குகை போலக் கவலைக்கிடமாக இருந்தது கண்டு என் மனதுக்குள் வருத்தம் குடிகொண்டது. ஏதாவது இதற்கு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எல்லை மீறியது. என்ன செய்வது காமராசர் இந்தக் காலத்திற்கு ஒவ்வாத மனிதராகி விட்டார். துரதிர்ஷ்டவசமாக தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் காமராஜரின் இலட்சியத்திலிருந்து விலகி வெகுதூரம் சென்றுவிட்டது.  

தேர்தல் நேரத்தில் மட்டும் தெருவிலே முழக்கம் செய்ய அவருடைய பெயர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிக்காரர்களால் கடன் வாங்கப்படுகிறது. மாதாமாதம் தன் தாய்க்கு 120 ரூபாய் பணம் அனுப்புவதைக் காமராஜர் வழக்கமாகக் கொண்டிருந்தார். முதல்வரின் வீட்டையும் அவரின் தாயாரையும் சந்திக்க பலர் அடிக்கடி வீட்டுக்கு வருவதால் சோடா கலர் காபி என்று செலவு அதிகமாகிறது எனக்கு முப்பது ரூபாய் சேர்த்து அனுப்பவும் என்று தாயார் கடிதம் எழுதினார்.

நம் வீட்டிற்கு வருபவர்களுக்குச் சோடா கலர் காபி நீங்கள் வாங்கித் தர வேண்டிய அவசியமில்லை. அவர்கள் காபி குடிக்கவும் வரவில்லை. எனக்கு 30 ரூபாய் கூடுதலாக கொடுக்க இயலாது ஆகவே 120 ரூபாய்க்குள் உங்கள் செலவைச் சுருக்கிக் கொள்ளுங்கள் என்று பதில்  அனுப்பினார். 

ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்த நபரின் செலவுக்  கணக்கைப் பார்த்தால் காமராஜருக்குக் கோவில் கட்டி கும்பிடவேண்டும் என்றுதான் நமக்குத் தோன்றுகிறது. 

எனவேதான், அங்கு கூடியிருந்த 

ஊடகவியலாளர்களுக்கு முன்பாகத் தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தேன்.

இனி காமராஜரின் நினைவாலயத்தைக் கமலாலயம் பார்த்துக் கொள்ளும்.

அவர் நினைவிடம் அழகு படுத்தப்படும்.      
அவர் பயன்படுத்திய பொருட்கள் காட்சிப்படுத்தப்படும்.       
அவர் சாதனைகள் வெளிப்படுத்தப்படும்.
பல தலைவர்களுடன் அவர் எடுத்த படங்கள் சுவர்களை அலங்கரிக்கும்.         
அவருடைய பேச்சின் பதிவுகள் அங்கே ஒலிபரப்பப்படும்.
அவரின் வாழ்க்கை வரலாறு காணொளிக் காட்சியாக அமைக்கப்படும். 

இந்தப் பராமரிப்புப் பணிகளை, 
காங்கிரஸ் கட்சியும், 
திமுகழக அரசும், செய்யத் தவறியதால், 
அந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளத் தமிழக பாரதிய ஜனதா கட்சி தயாராக இருக்கிறது.     
பாரதியஜனதாகட்சியின்  தொண்டர்கள் காமராஜருக்குத் திரும்பச் செய்யும் 

கைமாறாக, புனிதப் பணியாக இதைச் செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்று உங்கள் அனைவரின் சார்பாக நான் உத்தரவாதம் அளித்து இருக்கிறேன்.

என்ன சரிதானே நான் சொன்னது.

அன்புச் சகோதரன்
உங்க ‘‘அண்ணா’’

Sunday, October 03, 2021

அவர்கள் மனநோயாளிகள். மன்னித்து விடுங்கள்.

சில கேள்விகள் தம்பிமார்கள் அனுப்பி உள்ளனர்.  குறிப்பாக இணையத்தில் அவர்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்து எழுதி இருந்தார்கள்.  தீர்வு என்ன? என்று கேட்டு இருந்தார்கள்.  கடித வரிகள் முழுமையாக வெளியிட வேண்டாம் என்றும் கேட்டு இருந்தார்கள்.


Saturday, October 02, 2021

'தொடரும் திமுக அரசின் பிடிவாதம்! ஆலயம் முன்னர் அறப்போராட்டம்!!' - 18

பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே... அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே....

அனைவருக்கும் வணக்கம்.

(ஒலி வடிவில் திரு. அண்ணாமலை அவர்களின் கடித வரிகளைக் கேட்க இந்த இணைப்பை சொடுக்கவும். நன்றி)

(ஒலி வடிவில் திரு. அண்ணாமலை அவர்களின் கடித வரிகளைக் கேட்க இந்த இணைப்பை சொடுக்கவும். நன்றி) Listen to "'தொடரும் திமு.க அரசின் பிடிவாதம்! ஆலயம் முன்னர் அறப்போராட்டம்!!' (BJP Anna Letter-18)" https://anchor.fm/jothig/episodes/BJP-Anna-Letter-18-e186gc9/a-a6khs5u

தமிழர்கள் வாழ்வோடு கலந்த இறை நம்பிக்கையின் அவசியத்தை வள்ளுவர் சொல்லும்போது, கடவுள் மறுப்பாளர்களைக் கண்டிக்கிறார்.


Friday, October 01, 2021

கற்றுக் கொள் களத்தில் இறங்கு OCT 22 2021 வரைக்கும்

(1) திரு. ஜோதிஜி

(1) VISTA Project - புதிய பாராளுமன்றக் கட்டிடம் அவதூறும் பரப்பும் விஷக்கிருமிகள்

https://youtu.be/lehU9_OAqxI?t=1

••••

திரு. ஜோதிஜி

(2) எரிபொருட்கள் விலையுர்வுக்கு காரணம் என்ன? பகுதி - 1

https://youtu.be/HxPs7pS4gFc?t=33

எரிபொருட்கள் விலையுர்வுக்கு காரணம் என்ன? பகுதி - 2

https://youtu.be/h6FJyYwHCpI

எரிபொருட்கள் விலையுர்வுக்கு காரணம் என்ன? பகுதி - 3

https://youtu.be/yt7EYkRLb0Y

•••••

(2) திரு. லெஷ்மண பெருமாள் 

(3) திமுகவின் ஒன்றிய நாடகம் ? பகுதி -1

https://youtu.be/HsOHUQjn6e0?t=1

திமுகவின் ஒன்றிய நாடகம் ? பகுதி -2

https://youtu.be/MFGlRRbToY8?t=2

••••••

திரு. ஜோதிஜி

(4) NEET குறித்து அடிப்படை புரிதல்கள்

https://youtu.be/9eUbgXVeR-c?t=1

•••••

(3) திரு. மாணிக்கம் அருணாசலம்

(5) மத்திய அரசின் முத்ரா லோன் மற்றும் பயிர் காப்பீடு - பகுதி 1

https://youtu.be/ykcKcAFW4Xk?t=1

மத்திய அரசின் முத்ரா லோன் மற்றும் பயிர் காப்பீடு - பகுதி 2

https://youtu.be/A6yXumhARjo?t=4

மத்திய அரசின் முத்ரா லோன் மற்றும் பயிர் காப்பீடு - பகுதி 3

https://youtu.be/mUbiYbOsEAo?t=2

••••

திரு. ஜோதிஜி

(6) அண்ணாமலை உருவாக்கப்போகும் அதிர்வலைகள்

https://youtu.be/PRj9-8bRHew?t=3

•••••

(4) திரு பிகேஆர்

(7) பாரத தேசத்தின் உண்மையான வரலாறு பகுதி- 1

https://youtu.be/GsAAbkUSptY?t=25

பாரத தேசத்தின் உண்மையான வரலாறு பகுதி- 2

https://youtu.be/GsAAbkUSptY?t=25

•••••

(5) திரு. அரவிந்தன் நீலகண்டன்

(8) ஹிந்துத்துவாவும் பாரதிய இஸ்லாமியர்களும்

https://youtu.be/FGLyWgbe0IA?t=2

•••••

(6) திரு. சரவண பிரசாத் பாலசுப்ரமணியன் 

(9) புதிய கல்விக் கொள்கை- பகுதி-1

https://youtu.be/Tdf9jnk6rXA?t=1

புதிய கல்விக் கொள்கை- பகுதி-2

https://youtu.be/2qEqrE-6xSQ

•••••

(7) திரு. சுபி தளபதி

(10) தமிழக கிராமங்களை சீரழித்த திராவிட அரசியல்-பகுதி 1

https://youtu.be/_JiYWcCiOvw

தமிழக கிராமங்களை சீரழித்த திராவிட அரசியல்-பகுதி 2

https://youtu.be/8nHZikaP2Dk


••••

(8) திரு. வீ. ராஜமாணிக்கம்

(11) திராவிட அரசியலின் மோசடி வரலாறு - பகுதி-1

https://youtu.be/4d_UgIyCnbg

திராவிட அரசியலின் மோசடி வரலாறு - பகுதி-2

https://youtu.be/bcecjtR8E1k?t=17

***

(9) திரு. செல்வநாயகம்

(12) கொரோனாவும் உள்ளூர் மற்றும் உலக அரசியலும் - பகுதி 1

https://youtu.be/TzzpqtI1r2c

கொரோனாவும் உள்ளூர் மற்றும் உலக அரசியலும் - பகுதி 2

https://youtu.be/EnIt0p10vOA

***

திரு. பிகேஆர்

(13) பாரத நாட்டின் சொல்லப்படாத வரலாறு பகுதி - 2

https://youtu.be/hO-rOXPGJ6c?t=4

*****

(11) திரு. ஜா. ராஜகோபாலன் அவர்கள்

(14) தமிழ் ஊடக திராவிட அரசியல்

https://youtu.be/7SkrSJjOdtU?t=2

*****

(12) திரு. ஜடாயு அவர்கள்

(15) தடம் மாறும் தமிழகம் - பகுதி 1

https://youtu.be/3qZ4NZBsjbo

தடம் மாறும் தமிழகம் - பகுதி 2

https://youtu.be/G-zsvkukVx0

*****

திரு. ஜோதிஜி

(16) மோடி 71 இந்தியா 75

 https://youtu.be/kpBd_YDEdSE

•••

(13) திரு. பிரகாஷ் ராமசுவாமி

(17) காங்கிரஸ் கால வெளியுறவு பேரிழப்புகள் -பகுதி-1

https://youtu.be/V_8WzKFu0To

காங்கிரஸ் கால வெளியுறவு பேரிழப்புகள் -பகுதி-2

https://youtu.be/oLjCc2UoZlE?t=1

காங்கிரஸ் கால வெளியுறவு பேரிழப்புகள் -பகுதி-3

https://youtu.be/OUrkBEf0n8o?t=9

••••••

(14) திரு. ஸ்தாணுமாலயன் ஜி அவர்கள்

(18) மாப்ளா கலவரம் 100வது ஆண்டு தரும் பாடங்கள்-பகுதி 1

 https://youtu.be/Vx0hmvDvZJg?t=8

மாப்ளா கலவரம் 100வது ஆண்டு தரும் பாடங்கள்-பகுதி 2 

 https://youtu.be/9kWsYDq-EJ8


(20) 

மோதி அரசின் வெளியுறவுக் கொள்கை வெற்றிகள்/பிரகாஷ் ராமசுவாமி


(15) திரு. ஷ்யாம் சேகர் அவர்கள்


வலிமையான பாரதம் மோடி அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பகுதி 2 நிதி ஆலோசகர் திரு. ஷ்யாம் சேகர்



(16) திரு கேசவன் சிதம்பம்

(22) 

மோடி அரசின் காப்பீட்டுத் திட்டங்கள் / கேசவன் சிதம்பரம்



(17) திரு மேஜர் மதன் குமார்




(18) திரு. ஹெச். ராஜா ஜி அவர்கள்


(19) முனைவர் திரு. எம். நாகலிங்கம் அவர்கள்

26.  பழங்குடியினர் -  மத்திய அரசின் வெற்றி பெற்ற திட்டங்கள்

'காந்­தி­யை போற்­று­வோம்! கதர் ஆடை­யை போற்­று­வோம்!!'

பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே... அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே.....

 அனைவருக்கும் வணக்கம்.

Listen to "காந்­தி­யை போற்­று­வோம்!

கதர் ஆடை­யை போற்­று­வோம்!!'

(BJP Anna Letter-17)" by JothiG

https://anchor.fm/jothig/episodes/BJP-Anna-Letter-17-e1853up/a-a6kbmj1