அஸ்திவாரம்

Sunday, February 28, 2021

இசைஞானி இளையராஜா என்ற மருத்துவர்

என் நெருங்கிய நண்பர் சில மாதங்களுக்கு முன்பு சித்ரா லெஷ்மணன் காணொளிக் காட்சிகளைப் பாருங்கள் என்று பரிந்துரைத்தார். நான் பார்த்து விட்டு "எனக்கு இது போன்ற காட்சிகளைப் பார்த்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அந்தச் சமயத்தில் கூடுதலாக 300 வார்த்தைகள் கொண்ட சமூக நிகழ்வைப் பதிவு செய்யவே விரும்புவேன்" என்றேன். 



Saturday, February 27, 2021

இந்தியா முழுக்க கொண்டு சேர்த்த ரயில்வே துறை அமைச்சர்

கொரோனா பகவான் அருள் வழங்கத் தொடங்கிய மாதம் முதல் பிறந்த ஊருக்குப் போவதையே மறந்து விட்டேன்.  அங்கே சென்று நாம் என்ன பேசினாலும் செல்லுபடியாகாது. நாம் ஏன் வம்பை விலைக்கு வாங்க வேண்டும் என்று செல்ல வேண்டிய சூழல் வந்தால் சபாநாயகர் சென்று விடுவார். 



Thursday, February 25, 2021

வங்கியில் கடன் அட்டை வாங்கியவரின் கதை

ஜெயலலிதா முதன் முறையாக ஆட்சிக்கு வந்த போது தமிழக அரசியலும், அதிகார இயக்கங்களும் அதுவரையிலும் காணாத அனைத்து கெட்ட சகுனங்களையும் சந்தித்தது. 

ஆனால் தற்போது அதனை விட எல்லை கடந்து போய்க் கொண்டிருக்கிறது என்பதனை மத்திய அரசு எப்படி சகித்துக் கொண்டிருக்கிறது என்பதே புரியவில்லை. ஓர் இடம் இரண்டு இடம் அல்ல. தமிழகத்தின் அனைத்துத் துறைகளும் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. சுரண்டச் சுரண்ட இன்பம் என்பது போலக் கேள்வி கேட்பார் இன்றி எவரால் அடக்க முடியும்? எவரால் இவர்களை வழிக்குக் கொண்ட வர வாய்ப்புள்ளது என்பது அறியாமல் அனைத்துத் தரப்புகளும் தனக்கென்ன லாபம் என்ற ஒற்றைப்புள்ளியில் அமைதி காத்து வருகின்றார்கள் என்றே தோன்றுகின்றது. 

தேர்தல் நெருங்க கொள்ளைக்கூட்டத்தின் துணிச்சல் எல்லை கடந்து போய்க் கொண்டேயிருக்கிறது. 

குரூப் 1 முதல் குரூப் 4 வரைக்கும் முறைப்படியான தேர்வுகள், நேர்முகத் தேர்வு என்று உருவாக்கி வைத்திருந்த அனைத்து பதவிகளும் இப்போது வாய்மொழி வழியாக வாங்கும் தொகையின் பொருட்டு ஏலம் இட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அரசுத்துறையில் எந்தப் பதவிகள் உள்ளதோ? அதற்குத் தேவை இருக்கிறதோ? இல்லையோ? அனைத்தையும் ஏலமிட்டுச் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றார்கள். கடந்த ஆண்டு எந்தந்த துறைக்கு எத்தனை கோடிகள் ஒதுக்கினார்கள்? அதனை எப்படி செலவழித்தார்கள்? என்ன விபரங்கள்? என்பதனை எங்கேயாவது பார்த்து இருக்கின்றீர்களா? 

சமீபத்தில் பெய்த பெரும் மழையில் கடலூர் மாவட்ட அரசுப் பள்ளிகளைப் பற்றி அங்கிருப்பவர்கள் சொல்லும் போது எத்தனை உயிர்கள் பலியாகுமா? எப்போது நடக்குமோ? என்கிற அளவிற்கு பள்ளிக்கட்டிடங்கள் ஒவ்வொன்றும் சிதிலமடைந்து சில்லு சில்லாக அந்தரத்தில் இருப்பதைப் பயன்படுத்தி டெண்டர் விடுகின்றோம் என்ற பெயரில் தொகை சூறையாடப்படுகின்றது. 

கொரோனா காரணமாகச் சுத்தப்படுத்தினோம் என்ற வகையில் ஒரு தொகை. உருமாறிய கொரோனா வந்த பின்பு மற்றொரு தொகை. ஆனால் இன்று வரைக்கும் ஒன்பதாம் வகுப்பு வரைக்கும் பள்ளி திறக்க வாய்ப்பில்லை என்பதனை ஒரு புண்ணியவான் போகின்ற இடங்களெல்லாம் மனப்பாடச் செய்யுள் போலவே ஒப்புவித்துக் கொண்டிருக்க மாணவர்கள் வீட்டிலிருந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருப்பது நம் அதிர்ஷ்டம்.

Saturday, February 20, 2021

வங்கிகளின் EMI உலகம்

தன்னுடைய 16 வயது வரைக்கும் சிறந்த குழந்தை மருத்துவராக மாற வேண்டும் என்று எண்ணம் கொண்டு இருந்த ஸ்வாதி மோகன் என்ற இந்திய வம்சாவளிப் பெண் ( எந்த மாநிலம் என்று எந்தப் பத்திரிக்கையும் எழுதவே இல்லை?) செவ்வாய்க் கிரகத்தில் பெர்சவரன்ஸ் ரோவர் இயந்திரத்தை இறக்கி சாதனை புரிந்துள்ளார். 

பிப்ரவரி 18, வியாழக்கிழமை இரவு 20.55 ஜி.எம்.டி நேரப்படி செவ்வாயில் தரையிறங்கியது. குறைந்த ரெசல்யூஷன் கொண்ட பொறியியல் கேமராக்களால் எடுக்கப்பட்ட செவ்வாய்க் கோளின் இரண்டு படங்களை அனுப்பியது 


Friday, February 19, 2021

எல்லை மீறிய அம்மையார் கிரண்பேடி

கிரண்பேடியின் வாழ்க்கை வரலாற்றை ஓரளவுக்குச் சொல்லும் ஆங்கில நூலின் பெயர் Dare to Do. "நான் துணிந்தவள்" என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்ப்பு நூலும் உண்டு.  

ஆங்கிலத்தை வாசித்து விட்டு தமிழ் நூல் வெளியான சமயத்தில் வாங்கி பத்திரமாக வைத்திருந்தேன். இரண்டு முறைக்கு மேலாக பத்து வருடங்களுக்கு முன்பே வாசித்துள்ளேன்.  சென்ற வருடக் கொரோனா சமயத்தில் மகளிடம் இதனை முழுமையாக வாசித்து விடு என்று கொடுத்து வாசிக்கச் சொன்னேன். அற்புதமான அழகான புத்தகமது. 



Tuesday, February 16, 2021

அரசு பள்ளிக்கூட ஆசிரியர்களின் அவல வாழ்க்கை

நான் பள்ளியில் படித்த போது பள்ளியில் அலுவலகம் என்றொரு அமைப்பு இருந்தது. அதில் பலர் பணிபுரிந்தனர்.  நமக்கு ஏதும் தேவையெனில் அவர்களிடம் சென்று பேச வேண்டும்.

ஆசிரியர்களுக்கும் எழுத்தர் துறைக்கும் தொடர்பே இருக்காது.  ஆசிரியர் தன் வகுப்பு முடிந்ததும் ஆசிரியர்கள் அமர்ந்துள்ள அறைக்குச் சென்று விடுவார்.  சில சமயம் அந்த அறைக்குச் செல்லும் சூழலில் அங்கிருந்த அமைப்பைப் பார்த்துள்ளேன். நாற்பது நிமிடம் பாடம் நடத்தி முடிக்கும் போது என்ன மாதிரியான மன ரீதியான தாக்கம் உருவாகும்? 


Monday, February 15, 2021

விளம்பரத்திற்குள் மிதக்கும் மனிதர்கள்

"நேற்று சாப்பிட்ட சாப்பாட்டில் மீதம் கஞ்சியாக உள்ளது. துவையல் ஏதும் வேண்டுமா? ஊறுகாய் போதுமா"? என்று மனைவி கேட்டால் அதற்குப் பெயர் உங்கள் பொருளாதாரத்தை மிச்சப்படுத்தி உங்களை வளர்த்து வாழ வைக்கும் "நிதானக் காதல்". 


Saturday, February 13, 2021

சசிகலா - வரவு செலவு கணக்கு

ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு சின்னம்மா என்ற சசிகலா என்ற தியாகத்தலைவி கொடுங்கோலர்களின் சிறுமதியால் சிறை சென்று தன் தாய் தமிழ்நாட்டிற்கு வருகை தந்த போது, நடந்த முன்னேற்பாடுகள், நிகழ் கால அரசியல் சூழல் குறித்து எழுதியிருந்தேன். நான் பத்திரிக்கையாளர் அல்ல.  களத்தில் சென்று பார்க்கக்கூடிய வாய்ப்பும் உள்ளவன் அல்ல.  



உணர்ச்சிவசப்படும் குறள்சித்தருக்கு ஒரு கடிதம்

அன்புள்ள குறள் சித்தர் அவர்களுக்கு

இந்தக் கடிதத்தில் உங்கள் பெயரைக் குறிப்பிட்டு எழுதுகிறேன் என்று வருத்தப்படாதீர்கள்.  நீங்கள் அடிப்படையில் வெகுளி. இல்லாவிட்டால் நாம் இருவரும் இந்நேரம் நாம் சார்ந்திருக்கும் தொழிலில் கொடியை நாட்டியிருப்போம். நாம் தொழிலோடு, குடும்பத்தோடு நம் வாழும் சமூகத்தையும் கருத்தில் கொள்கின்றோம்.  



Wednesday, February 10, 2021

சசிகலா வரவேற்பும் நிகழ் கால சமூகமும்

நாடே கெட்டுப் போய் விட்டது? ஊடகங்களின் அழுகல் நாற்றம் அருவருப்பாக உள்ளது என்று அலறாதீர்கள். உங்கள் பார்வையில் முதிர்ச்சியில்லை என்பதனை முதலில் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களைச் சுற்றியுள்ள சமூகத்தை முழுமையாக உணராமல் உங்கள் விருப்பப்படி சமூகத்தைக் கட்டமைக்க விரும்பாதீர்கள்?

முதல் கட்டமாக உள்ள 25 குடும்பங்கள் அதனைச் சார்ந்து உறவு வட்டங்களில் உள்ள 250 குடும்பங்கள் இவர்களை அண்டிப்பிழைக்கும் 2500 குடும்பங்கள்.

Tuesday, February 09, 2021

வணிக வெற்றி ????

இது சில நாட்களுக்கு முன் நடந்த உண்மைக் கதை. இதை இங்கே எழுதுவதற்குக் காரணம் சமீப காலமாக நண்பர்கள் அனைவரும் தனியார் முதலாளிகள் மூலமாகத்தான் இந்தியா முன்னேறும். அரசுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் விடியக்காத்தாலே எழுந்து பார்ப்பதற்குள் வங்காள விரிகுடா பக்கம் கொண்டு போய் தள்ளி அமுக்கி கொன்று விட்டால் போதும் என்கிற ரீதியில் உணர்ச்சி வசப்படுகின்றார்கள். அதற்குப் பின் இணைப்பாக 90க்குப் பிறகு நாம் அடைந்த இன்றைய வளர்ச்சிக்குக் காரணம் தனியார் முதலாளிகள் தான் என்கிறார்கள்.  



Sunday, February 07, 2021

மனிதர்களுடன் உறவாடுவது, உணர்ந்து கொள்வது.....

நான் வசிக்கும் பகுதியில் சற்று பெரிய நான்கு மளிகைக்கடைகள் உள்ளது. நான்கும் அண்ணாச்சி வகையினராக இருந்த காரணத்தால் நான்கு கடைகளிலும் வாங்கிக் கொண்டிருந்தேன். இப்போது நான்கு கடைகள் பக்கமும் செல்வதில்லை.

ஒருவர் பத்துக்கு பத்து அடியில் தொடங்கி ஒரு வருடத்தில் அடுத்த வருடத்தில் அந்த இடம் அருகே உள்ள இடம் என்று வாங்கி மாடி கட்டி செழிப்பாகவே உள்ளார். வீட்டுக்குப் பின்புறம் இருந்த காரணத்தால் அதிகாலையில் ஐந்து மணிக்கே அவர் திறந்து வியாபாரம் செய்யும் அவர் உழைப்புக்குத் தலை வணங்கிச் செல்வேன். 



Friday, February 05, 2021

இறந்தவர் கற்றுக் கொடுத்த பாடம்

அடுத்த வருட நிதியாண்டில் ரயில்வே துறையில் நடக்கப் போகும் மிகப் பெரிய மாறுதல் அதி வேக ரயில் அனைத்தும் குளிர்சாதன வசதியாக மாற்றப்பட உள்ளது. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் குளிர்சாதனக் கட்டணம் அளித்து தான் பயணம் செய்ய வேண்டும். பயணத்தில் உணவுகள் தேவை எனில் குறிப்பிட்ட நிறுவனங்களின் பொருட்களை மட்டுமே வாங்க முடியும். 


Wednesday, February 03, 2021

இங்கே இனி ஒவ்வொன்றுக்கும் விலையுண்டு?

ஒரு கட்சி தேர்தலுக்கு முன் தங்கள் கொள்கைகள் என்று வாக்குறுதிகள் அடங்கிய சிறிய புத்தகம் போன்ற ஒன்றை வெளியிடுவார்கள். ஒரு வேளை ஆட்சிக்கு வந்தால் அதில் சொல்லப்பட்டது அனைத்தும் முழுமையாக உண்மையாகவே நிறைவேற்றப் பட்டுள்ளதா? என்பதனை யோசிக்கும், கவனிக்கும் அளவிற்கு மக்களுக்கு அரசியல் புரிதல் இல்லாத காரணத்தால் இன்னமும் ஒரு சடங்கு போலவே தேர்தல் வாக்குறுதிகள் என்பதனை ஒவ்வொரு கட்சியினரும் இன்று வரையிலும் கர்மசிரத்தையாக வெளியிட்டுக் கொண்டு வருகின்றனர்.



Tuesday, February 02, 2021

சொந்தமாக பேச எழுதத் தெரியாது. யாருக்கு?

2021 தேர்தலில் நடக்கப் போகும் ஆச்சரியங்களைப் போல 2016 ஆம் ஆண்டு தேர்தலும் தமிழக அரசியல் பார்வையாளர்களால் மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது.  

ஏறக்குறைய வாழ்வா? சாவா? என்ற போராட்டம் என்கிற நிலைக்கு இருந்தது.