அஸ்திவாரம்

Friday, February 05, 2021

இறந்தவர் கற்றுக் கொடுத்த பாடம்

அடுத்த வருட நிதியாண்டில் ரயில்வே துறையில் நடக்கப் போகும் மிகப் பெரிய மாறுதல் அதி வேக ரயில் அனைத்தும் குளிர்சாதன வசதியாக மாற்றப்பட உள்ளது. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் குளிர்சாதனக் கட்டணம் அளித்து தான் பயணம் செய்ய வேண்டும். பயணத்தில் உணவுகள் தேவை எனில் குறிப்பிட்ட நிறுவனங்களின் பொருட்களை மட்டுமே வாங்க முடியும். 



ஊத்துக்குளியில் மோர், திண்டுக்கல்லில் முறுக்கு, திருச்சி அருகே வாழைப்பழம், வெள்ளிரிக்காய் போன்ற பழங்கதைகளை மனதில் வைத்துக் கொண்டு பயணம் செய்ய நினைக்காதீர்கள். இவர்கள் தொற்று நோய் பரப்பக்கூடியவர்கள். தொல்லை தரக்கூடியவர்கள். 

மாறும் சமூகத்திற்கு தொந்தரவாக இருக்கக்கூடியவர்கள். அரசாங்கத்திற்கு இவர்களால் அம்மஞ்சல்லி பெறுமானம் இல்லாதவர்கள். நவீன ரக நிர்வாக அமைப்பு என்பது மேலிருந்து படிப்படியாக கீழே இருக்கும் வர்க்கத்தினரை அமுக்கி அழுத்தி காணாமல் போய்விட புதிய வர்க்கத்தினரை உருவாக்க ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு விதமான தத்துவங்கள் இங்கே காற்றில் பறந்து வரும். பணம் பேசும். பணம் இருந்தால் தான் பேச முடியும். வாழ முடியும். 

பயணத்தில் சுகம் வேண்டும் என்பவர்களுக்கும் கட்டணப் பணத்தை நினைத்தால் பயமாக உள்ளது என்பவர்களுக்கும் உண்டான சிந்தனை மாற்றத்தின் தொடக்கப் புள்ளியாக இருக்கும். மக்கள் சேவைக்குத் தான் அரசு என்று பழைய பல்லவியைப் பாடாதீர்கள். அரசு என்பது நிர்வாகம் செய்ய மட்டுமே என்பதனை வலியோடு ஏற்றுக் கொள்ளத் தயாராக இருங்கள். 

ஏன் வாகனப் பெருக்கத்தைக் குறைக்க பொதுப் போக்குவரத்தை இலகுவாக மாற்றுங்கள். காயலான் கடைக்குச் சென்றாலும் வாங்க மறுக்கும் அரசு பொதுப் போக்குவரத்தை எப்படி மாற்றப் போகின்றார்கள்? என்று குதர்க்கக் கேள்வி கேட்காதீர்கள். சமூகத்தில் உள்ள மற்றவர்களைப் போல எப்போதும் எதனையும் கொண்டாட்ட மனோநிலையில் அணுக கற்றுக் கொள்ளுங்கள்.😇 

எவையெல்லாம் பெரும்பான்மையினரால் சரியென்று வழி மொழியப்படுகின்றதோ அதுவே சரியென்று நம்பத் தொடங்குங்கள். 

சாதி வர்க்க வேறுபாடுகள் அழியும் அது பணத்தின் அடிப்படையில் மாறும் போது. Special price of Rs. 59,999* for 2N /3D journey *+ Taxes @ 5%. T&C Apply Comments

5 comments:

  1. // அரசு என்பது நிர்வாகம் செய்ய மட்டுமே என்பதனை வலியோடு ஏற்றுக் கொள்ளத் தயாராக இருங்கள். // உண்மை ;-

    பொய்யர்களின் அரசு என்பது நிர்வாகம் செய்யக் கூட தகுதியில்லை என்பதனை ஐயனின் உலக "கண்ணோட்டம்" கொண்ட வழியை, அறிந்து தெரிந்து புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்ளத் தயாராக இருங்கள்...

    பாடல் : வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை... வந்தவர் யாருமே நிலைத்ததில்லை... தொகுப்பார் சிலர் அதை சுவைப்பதில்லை... தொடங்குவார் சிலர் அதை முடிப்பதில்லை...

    // எவையெல்லாம் பெரும்பான்மையினரால் சரியென்று வழி மொழியப்படுகின்றதோ அதுவே சரியென்று நம்பத் தொடங்குங்கள். // உண்மை :-

    எவையெல்லாம் மதவாதிகளால் சரியென்று புகுத்தப் படுகின்றதோ அதுவே சரியென்று நம்பி, அடுத்த தலைமுறையையும் கெடுக்க தொடங்காதீர்கள்...

    பாடல் : சிரிப்பவன் கவலையை மறக்கின்றான்... தீமைகள் செய்பவன் அழுகின்றான்... இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்...?

    ReplyDelete
    Replies
    1. மதவாதம் என்பது ஒரு பக்கம் உள்ள கத்தியல்ல. அது பலமுனை கொண்டது. வடகிழக்கு மாநிலங்கள் முதல் கடற்கரையோர கிராமங்கள் வரைக்கும் கவனித்தால் புரியும். இந்தப் பகுதிகள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை.

      Delete
  2. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் குளிர்சாதனக் கட்டணம் அளித்து தான் பயணம் செய்ய வேண்டும்.

    ReplyDelete
  3. என்று உலகமயமாக்கல் என்ற வார்த்தையை இந்திய அரசியல்வாதிகள் கூற ஆரம்பித்தார்களோ அன்றே இதற்கான விதைகள் ஊன்றப்பட்டு விட்டன.

    ReplyDelete
  4. ரயில்.. பயணம் கனவாகி விடும் போலிருக்கு..

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.