எனக்கும் தனிப்பட்ட முறையில் ஜிஎஸ்டி குறித்து ஏராளமான வருத்தங்கள் இருந்தது. காரணம் நாம் கட்டிய தொகை நம் உடனே வருவதில்லை. அதற்கான வலைத்தளத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் தணிக்கையாளர்கள் புலம்பல்கள் மற்றொரு புறம். இதுவரையிலும் நேரிடையாக எதையும் பார்க்காமல் கேட்காமல் உறுதிப் படுத்திக் கொள்ளாமல் இவையெல்லாம் அரசின் தவறு என்றே நேற்று வரையிலும் நினைத்திருந்தேன். இன்று எங்கள் பகுதி உயரதிகாரியைச் சந்தித்து இருக்காவிட்டால் இதை எழுத வாய்ப்பு அமைந்திருக்காது.
அஸ்திவாரம்
Sunday, August 30, 2020
Friday, August 28, 2020
முதல் விமர்சனம் - ராபின்சன் பூங்கா முதல் திருக்கழுக்குன்றம் வரை (பிகேஆர்)
வாழ்க்கை என்பது பலர் நினைப்பது போல முழுவதும் வெண்மையாகவோ அல்லது கறுப்பாகவோ இருப்பதில்லை. இரண்டும் கலந்த சாம்பல் நிறத்தில்தான் அது உள்ளது. அதுபோல்தான் எந்த ஒரு செயலும் எல்லோருக்கும் நலம் தருவதாகவோ அல்லது அனைவருக்கும் பிரச்சனையை உண்டு செய்வதாகவோ இருப்பதில்லை. எந்த அளவிலான நல்லதைச் செய்யவேண்டும் என்று நினைத்துச் செய்யப்படும் செயலும் சிலருக்குத் துன்பம் விளைவிக்கவே செய்யும். தனிமனிதர்களின் வாழ்விலேயே இதுதான் இயற்கையின் நியதி என்றால் பல கோடி மக்களின் வாழ்க்கையை முடிவு செய்யும் இடத்தில் இருக்கும் அரசியல் தலைவர்களின் முடிவுகள் மட்டும் இந்த விதிக்குக் கட்டுப்படாமலா இருக்கும்?
Thursday, August 27, 2020
பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம்
கடந்த இரு வாரமாக எஸ்பிபி தொடர்பான செய்திகளை படித்து வருகிறேன். எம்.ஜி.ஆரிடம் நிருபர் ஒரு கேள்வி கேட்கிறார்.
"எத்தனை நாளைக்கு மக்கள் உங்களை நினைவு வைத்திருப்பார்கள்?"
"என் கடைசி பிலிம் சுருள் இருக்கும் வரைக்கும் அவர்களுடன் நான் இருப்பேன்" என்றார்.
இன்று அலைபேசியில் அவர் படங்களைப் பாடல்களைப் பார்க்கும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அவர் இப்படி உலகம் மாறும் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். அது போலத்தான் எஸ்பிபி அவர்களும். அவருக்கு அஞ்சலியோ வாழ்த்துகளோ ஆறுதலோ தேவையில்லை.
Wednesday, August 26, 2020
வறட்டுக் கௌரவும் வாரிச் சுருட்டும் டாஸ்மாக்கும்
"வறட்டுக் கௌரவம்" என்றால் என்ன?
கொரானா செய்த மாய மந்திரங்களின் விளைவாக அரசுப் பள்ளிக்கூடங்களில் கூட்டம் அலை மோதுகின்றது. தனியார் பள்ளிக்கூடங்களில் விண்ணப்ப பாரம் என்ற ஒற்றை காகிதத்திற்கு ரூபாய் ஐந்து ஆயிரம் கட்டி தங்கள் கௌரவத்தை நிலைநாட்டிய எளிய தமிழ்ப் பிள்ளைகளின் பெற்றோர்கள் பலரையும் வரிசையில் பார்த்தேன். எவரெல்லாம் முதல் கட்டணமான இருபது ஆயிரத்தைக் கட்டுகின்றார்களோ? அவர்களுக்கு மட்டும் தான் இணைய வகுப்பு என்ற அறிவிப்பைப் பார்த்து துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று அடுத்த இரண்டு வருடச் செயலாக்கத்தின் அடிப்படையில் அரசு பள்ளிக்கூடச் சேர்க்கையில் முன் வரிசையில் நிற்கின்றார்கள்.
Tuesday, August 25, 2020
வலதுசாரி தீவிரவாதம்? தி இந்து ராம் அவர்களுக்கு 3 கேள்விகள்! - மாரிதாஸ் |...
ஐரோப்பாவிலிருந்து பேசும் தமிழ் நண்பர் இவரின் அதி தீவிர ரசிகர் & பக்தர். பேசத் தொடங்கும் போது இவர் அப்போது போட்ட வீடியோ விமர்சனத்தைப் பற்றிச் சொல்லி விட்டு அதன் பிறகே மற்றதைப் பேசத் தொடங்குவார். அவர் தவறாமல் ஒன்றைச் சொல்வார். பாரம்பரிய கை வந்த கலையான 'பெண்கள் குற்றச்சாட்டு' 'பண மோசடி', 'மிரட்டிப் பார்த்தல்' "அவதூறுகள் மூலம் மடைமாற்றுதல்" என்று இன்னமும் கையில் எடுக்காமல் இருக்கின்றார்களே? உயிரோடு விட்டு வைத்திருப்பார்களா? என்று என்னிடம் கேட்டதுண்டு.
கடைசியில் இவரின் சாதி வரைக்கும் நைஸாக உள்ளே கொண்டு வந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. எறியப்பட்ட பந்து அனைத்தும் சிக்ஸராக மாற இனி என்ன செய்வது? என்று யோசித்து இப்போது அமைதியாகவே இருக்கின்றார்கள். அடுத்த நாலைந்து மாதங்களில் இறுதிக் காட்சிகள் இன்னமும் விறுவிறுப்பாக இருக்கப் போகின்றது என்பது மட்டும் நிச்சயம்.
Monday, August 24, 2020
கமலா தேவி ஹாரிஸ்
தமிழச்சி கொஞ்சம். ஜமைக்காச்சி கொஞ்சம். கமலா ஹாரிஸ். அமெரிக்காவின் இன்றைய நட்சத்திரம். துணை அதிபருக்குப் போட்டியிடுகின்றார். ட்ரம்ப் க்கு எதிரணி. மேனரிசம் அப்ளாஸ் வகை. 2004 ல் கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்தவர். 2016 ல் செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் தொடுக்கும் கேள்விகள் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு குடைச்சலாக இருக்கும் அளவிற்கு வாதப்புலி.
Sunday, August 23, 2020
"முகமற்ற வருமானவரி மதிப்பீடு" (Faceless Assessment)
பிரதமர் அறிவித்துள்ள "முகமற்ற வருமானவரி மதிப்பீடு" (Faceless Assessment) என்றால் என்ன? வரி செலுத்துவோருக்கு ஏற்படும் சாதக பாதக அம்சங்கள் என்ன?
இந்தியாவில் அதிகபட்ச காப்பித் தோட்டங்களுக்கு சொந்தக்காரர் திரு. வி.ஜி.சித்தார்த்தா. பா.ஜ.க பிரமுகரும், முன்னாள் கர்நாடக முதல்வருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன். கஃபே காபி டே நிறுவனர். 13,000 ஏக்கர் காப்பி தோட்டங்கள். நாடெங்கும் 1,600 காபி டே கடைகள். சித்தார்த்தா ஜூலை 2019ல் தற்கொலை செய்துகொண்டார். தனது தற்கொலைக் கடிதத்தில் "நிறுவனத்தின் பரிவர்த்தனைகளை வருமான வரித்துறை நிறுத்தியதால் நெருக்கடி ஏற்பட்டது. மற்றவர்களை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கம் எனக்கில்லை. நான் ஒரு தோல்வியடைந்த தொழிலதிபர்" என்று விரக்தியுடன் கூறியிருந்தார்.
Saturday, August 22, 2020
Dr.S.ஜெகத்ரட்சகன் - சொத்துப் பட்டியல்
எளிய தமிழ்ப்பிள்ளைகள் வளரும் போது நாம் வாழ்த்த வேண்டும். காலம் காலமாக அடிமைப்பட்டு படிக்கவிடாமல் நாக்கில் சூடு வைத்து அழுத்தப்பட்ட எங்கள் மானமிகு தமிழ்ப்பிள்ளைகள் பெரிய ஆளாக வளர்ந்தது குறித்து எனக்கொன்றும் வருத்தமில்லை. பெருமையாகத்தான் இருக்கிறது. ஆனால் எனக்குள் இருக்கும் பெரிய கேள்வி என்னவென்றால் ஒதுக்கீடு மூலம் கல்வி கற்க வாய்ப்பில்லாமல் இருக்கும் இவர்களை விட எளிய எளிய தமிழ்ப் பிள்ளைகளை இவர்கள் போன்ற பலரும் கைதூக்கி விடலாமே? அண்ணன் ஜெகத் இதுவரையிலும் சேர்த்துள்ள சொத்துப் பட்டியல் விபரங்களை இங்கே எழுதியுள்ளேன்.
Friday, August 21, 2020
சமாதி (தமிழக) அரசியல்
தமிழக கிராமங்களில், கிராமங்களை ஒட்டிய சிறு நகரங்களில் இன்று வரையிலும் வியாபாரிகள் சங்கம் மூலமாக ஒரு வாரம் முழுக்க "மண்டகப்படி" என்று அந்தப் பகுதியில் உள்ள முக்கியமான கோவில் திருவிழா களைகட்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இன மக்கள் அந்த விழாவை தங்கள் சார்பாக எடுத்து நடத்துவார்கள். சந்தனக் காப்பு, பூச்சொரிதல், வாணவேடிக்கை என்ற திருவிழாக் கூட்டத்தைப் பார்க்கக் கண் கொள்ளாக் காட்சியாகயிருக்கும்.
Sunday, August 16, 2020
வயது 12
கடந்த ஜூலை 3 ஆம் தேதி என்ன செய்தேன் என்று இப்போது தான் பார்த்தேன். இரண்டாம் தேதி ஒரு பதிவு எழுதியுள்ளேன். ஐந்தாம் தேதி ஒரு பதிவு எழுதியுள்ளேன். மூன்றாம் தேதி என்ன செய்து கொண்டிருந்தேன் என்று எனக்கே நினைவில் இல்லை.
ஆனால் ஜூலை 3 ஆம் தேதி என் எழுத்துப் பயணத்தில் 11வது ஆண்டு.
11 ஆண்டுகள் முடிந்து விட்டது. 12 ஆம் ஆண்டு தொடங்கியுள்ளது.
திருப்பூர் குறித்து ஒழுங்காக எழுதி உலகம் முழுக்க சென்று சேர்ந்து விட்டது. டாலர் நகரம். பஞ்சு முதல் பனியன் வரை 5 முதலாளிகளின் கதை.
என் விருப்பத்திற்காக உலகம் முழுக்க வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்து ஒவ்வொருவரும் எதிர்காலத்தில் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எழுதப்பட்ட ஈழம் புத்தகமும் உலகம் முழுக்க சென்று சேர்ந்து விட்டது.
மற்ற புத்தகங்கள் வலைபதிவு எழுத்துக்கள் எல்லாமே போனஸ் தான். பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.
மொத்தம் இதுவரையிலும் 30 புத்தகங்கள் வெளியிட்டு உள்ளேன். கிண்டில் மொழி என்ற நூலைத் தவிர அனைத்துப் புத்தகங்களையும் இலவசமாக பலமுறை கொடுத்து விட்டேன். 29 புத்தகங்கள் இலவசமாகவே சென்று சேர்ந்தது.
ஆனால் கடந்த 90 நாட்களாக நள்ளிரவு 12 முதல் அதிகாலை 7 மணி வரை தினமும் சலிப்பில்லாமல் தொடர்ந்து எழுதி தொகுத்த தமிழக அரசியல் வரலாறு நூலை நேற்று சுதந்திர தினத்தில் வெளியிட்டு குறிப்பிட்ட நண்பர்களின் பார்வைக்கு மட்டுமே அனுப்பினேன். இன்னமும் ஃபேஸ்புக், ட்விட்டர் எங்கும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
அதில் திருத்த வேண்டியது, வாக்குவாதங்கள், சச்சரவு உருவாக வாய்ப்பிருந்தால் திருத்த வேண்டியிருக்கும் என்பதனை கருத்தில் கொண்டு கிண்டில் அக்கவுண்ட் மூலம் மட்டுமே வெளியிட்டேன். அரசியல் கட்சி சார்புடைய நண்பர்கள், சார்பு இல்லாத நண்பர்கள் என்று அனைவருடனும் நெருக்கமான நட்பு இருப்பதால் அனைவரும் நேற்றே வாசித்து என்னைக் குத்த ஆரம்பித்து விட்டனர். 24 மணி நேரத்திற்குள் பத்தாயிரம் இடத்திற்குள் வந்து நிற்கின்றது. எனக்கான அங்கீகாரமும் என் உழைப்புக்கான வெகுமதியும் இது தான்.
என் தளத்தை 50 வயது கடந்தவர்கள் தான் அதிகம் படிக்கின்றார்கள் என்பதனை நான் நன்கு புரிந்தே வைத்துள்ளேன். பாரபட்சமின்றி சரியான தகவல், உருப்படியான செய்திகளைத்தான் எழுதுவார் என்ற நம்பிக்கையில் இன்று வரையிலும் என்னைத் தொடர்ந்து வரும் ஏராளமான முகம் அறியாத நண்பர்களுக்கு என் நன்றி.
எனக்கான கடமை என் பொறுப்பு இது என்று நான் கருதிக் கொள்வது 30 வயதுக்குள் இருக்கும் இளையர்கள் சரியான பாதைக்குச் செல்ல வேண்டும். இணையம் உள்ளே வந்தவுடன் குப்பைகளைப் படித்து விட்டு அது தான் உண்மை என்று நாட்டுக்கு எதிராக மாறிவிடக்கூடாது என்பதற்காகவே நான் தொடர்ந்து எழுதுகிறேன். என் எழுத்தின் மூலம் அடுத்தடுத்த நல்ல வாசிப்புகளை அவர்கள் தேடிப் போக வேண்டும். என் எழுத்தை வாசிப்பவர்கள் அவர்கள் வாரிசுகளுக்கும் அறிமுகம் செய்து வைக்க வேண்டும். அதன் மூலம் அவர்களுக்கு வாசிப்பு ருசி அறிய வேண்டும் என்பதே என் ஆசை.
இன்று 100 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாறு நூலை அறிமுகம் செய்து வைக்கின்றேன். இது பத்திரிக்கைகளின் வந்த சம்பவங்களை வைத்து அடுக்கடுக்காக கோர்த்து தொகுத்து எழுதியுள்ளேன். இந்தப் புத்தகம் தங்கள் குழந்தைகள் படிக்க வேண்டும் என்று எண்ணினால் நிச்சயம் அவர்களுக்குத் தமிழக அரசியல் களம் குறித்து நன்றாகவே அடிப்படை விசயங்களைப் புரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும். என் மகள் முழுமையாக படித்து முடித்து விட்டார். எளிமையாக புரியும் வண்ணம் உள்ளது என்றார். பலவற்றை அறிந்து கொண்டேன் என்றார்.
ஒரு மாத கிண்டில் அக்கவுண்ட் முதல் பலவிதமான ஆஃபர்கள் அமேசான் கொடுக்கின்றார்கள். இந்தப் புத்தகம் கடைசிவரைக்கும் கிண்டில் அக்கவுண்ட் மூலம் மட்டுமே வாசிக்க முடியும். காரணம் பிடிஎப் மக்கள் சூறைத் தேங்காய் போல மாற்றிவிடுவார்கள். எத்தனை நாளைக்கு இது உயிர் பிழைத்திருக்கும் என்றே தெரியவில்லை.
நேற்று வளைகுடா நாட்டிலிருந்து பேசிய நண்பர் "எத்தனையோ நூல்களைப் படித்துள்ளேன். படித்துக் கொண்டும் இருக்கிறேன். இது போன்ற பெரிய நூலை இப்போது தான் என் வாழ்நாளில் படிக்கத் தொடங்குகிறேன்" என்றார்.
புதிய தலைமுறையில் பணியாற்றும் நண்பர் "அண்ணா சரியான பெயரை சூட்டியிருக்கிறீர்கள். எவருக்கும் தோன்றாத எண்ணமிது" என்றார். "இரண்டு ஊர்கள் (இடங்கள்) தமிழகத்தில் புதிய மாற்றத்தை உருவாக்கியது. எப்படியண்ணா உங்களுக்கு இந்த ஐடியா தோன்றியது" என்றார்.
தந்தி டிவியில் பணியாற்றும் நண்பர் "டேய் ராட்சசா? நீ மனுசனே இல்லை. இது போன்ற புத்தகங்கள் உருவாக்க ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் ஆகும். தூங்குவியா? தூங்க மாட்டீயா? செத்து தொலைக்கப் போற" என்று அன்போடு ஆசிர்வாதம் செய்தார்?
இரவில் ட்யூட் லைட் திடீரென்று எரிந்து கொண்டிருக்கும். மனைவி முழித்துப் பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமல் திரும்பி படுத்துக் கொள்வார். இரண்டு மாதங்களில் ஒரு நாள் கூட திட்டவே இல்லை. ஒரே ஒரு நாள் மட்டும் "உடம்புக்கு ஏதாவது ஆகப் போகின்றது. கொஞ்ச நேரமாவது தூங்குங்க" என்றார். அவருக்குத் தான் வாசித்து முடிப்பவர்கள் நன்றி சொல்ல வேண்டும்.
இந்தப் புத்தகத்தை என் ஞானத் தகப்பன் தெய்வத்திரு ஞாநி அவர்களுக்கும் என் மரியாதைக்குரிய நண்பர் திரு. ப. திருமா வேலன் அவர்களுக்கும் சமர்ப்பித்துள்ளேன். அவர்கள் தான் என் வழிகாட்டி. அரசியல் கட்டுரைகளை வாசிக்க அவர்களின் எழுத்தில் இருந்து தான் தொடங்கினேன். ஒருவரை இன்னமும் சந்திக்கவே இல்லை.
நம் உழைப்பு சிந்தனை சரியாக இருந்தால் நிச்சயம் உலகம் ஒரு நாள் நம்மை ஏற்றுக் கொள்ளும் என்பதனை உறுதியாக ஆழ்மனதிலிருந்து நம்புங்கள்.
Friday, August 14, 2020
அந்த 42 நாட்கள்
சம்பவம் நடந்த போது, சம்பவம் நடத்த களத்திலிருந்து போன்ற வார்த்தைகள் ஊடகங்கள் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் போது நம் மனநிலை எப்படியிருக்கும்?
Wednesday, August 12, 2020
சென்னை-அந்தமான் இடையே கண்ணாடி இழை கேபிள் திட்டம்
Monday, August 10, 2020
கிஞ்சல், பிரஞ்சல் தன்னம்பிக்கை சகோதரிகளின் கதை
ஒருவருக்குக் கொடுக்கும் மிகச் சிறந்த பதிலடி எது?
காவல்துறை குழு ஒன்று, மார்ச் 12,1982 இரவு கோண்டா - (உத்தரப்பிரதேசம்) கிராமத்திற்குச் சென்று, ராம் மற்றும் அர்ஜுன் பாசி ஆகிய இரு குற்றவாளிகளைத் தேடியது. அங்கு இரண்டு குற்றவாளிகள் தலைமறைவாக இருப்பதாகத் துப்பு கிடைத்திருந்தது. அந்த வட்டத்தின் தலைமை காவல் அதிகாரியாக இருந்த டி.எஸ்.பி சிங், குற்றவாளி ராம் வீட்டின் கதவைத் தட்டினார். அவர் தட்டும் போது யாரும் பதிலளிக்கவில்லை. சிங் திரும்பி நடக்க ஆரம்பித்தார். அவர் திரும்பிச் செல்லும்போது, பக்கத்தில் இருந்த, சப்-இன்ஸ்பெக்டர் சரோஜ் அவரை மார்பில் சுட, சிங் மருத்துவமனையில் இறந்து போனார். அந்தச் சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் கிஞ்சலுக்கு வயது வெறும் ஆறு மாதங்கள். அவளுடைய தந்தை DSP சிங் கொல்லப்பட்ட அந்தச் சமயத்தில் அவளது இளைய சகோதரி தாயின் வயிற்றில் கருவாக இருந்தாள்.
Sunday, August 09, 2020
பாஜக மேலடுக்கு அரசியல்
தமிழக பாஜக வில் மேலடுக்கு என்று உண்டு. களத்தில் இறங்கமாட்டார்கள். தெருத் தெருவாக அலைய விரும்ப மாட்டார்கள். குறிப்பாகக் கட்சி வளர வேண்டும் என்ற எண்ணமும் இருக்காது. வளர உதவுபவர்களை அமுக்கி வைப்பது தான் இவர்கள் பணி. பாஜக வில் பணிபுரிபவர்கள் பலரும் ஆதங்கத்துடன் இதனை ஒவ்வொரு முறையும் சொல்லியிருக்கின்றார்கள். திமுக அதிமுகவில் இருக்கும் அங்கீகாரம் பாஜக வில் கிடைக்க வாய்ப்பே இல்லை. கட்சிக்கு புதியவர்கள் வந்து வளர்ந்து அதன் மூலம் போட்டி வளர்ந்து விட்டால் இவர்களின் பூட்டு கழட்டப்படும் என்ற அச்சத்துடன் வாழும் அரிய உயிரினம் இவர்கள்.
இதன் காரணமாகவே கடைசி அடுக்கு வரைக்கும் அந்தக் கட்சி சென்று சேராமல் இன்னமும் தொலைக்காட்சி கட்சியாகவே உள்ளது. இவர்களைப் போன்ற சுகவாசிகள் அத்தனை பேர்களும் கட்டாயம் ஒவ்வொரு தொலைக்காட்சியாக ஏறி முகத்தைக் காட்டிக் கொண்டேயிருப்பார்கள். நக்கல், நையாண்டி, கிருத்துருவம், ஏட்டிக்குப் போட்டி, எகனைக்கு முகனை, பேசுவதையே திரும்பத் திரும்ப பேசுவது என்று பார்ப்பவர்களை எரிச்சலூட்டுபவர்கள் இவர்கள்.
பலமுறை யோசித்ததுண்டு. இவர்களுக்கு யாராவது மூக்கணாங்கயிறு கட்ட மாட்டார்களா? என்று. சமீபத்தில் அந்தக் காரியத்தை கனகச்சிதமாகச் செய்தவர் திருச்சி வேலுச்சாமி. ராஸ்கல் பிச்சுபிடுவேன் என்று அன்போடு அர்ச்சனை செய்தார். இவர் ஏற்கனவே சூனா சாமியை உண்டு இல்லை என்று படுத்தி எடுத்தவர்.
Thursday, August 06, 2020
EIA 2020 மற்றும் புதிய கல்விக் கொள்கை 2020 (தமிழ் மொழி பெயர்ப்பு)
கடும் வேலைப்பணிகளுக்கு நடுவே விழியனின் முன்னெடுப்பில் தொடங்கப்பெற்ற தேசியக் கல்விக் கொள்கையின் தமிழ் மொழி பெயர்ப்பு முடிந்து விட்டது.
முழுக்க முழ்க்க தன்னார்வலர்கள் இணைந்து இதை செய்து முடித்திருக்கிறோம். நியாயமாகப் பார்த்தால் மத்திய அரசு வெளியிடும் போதே அட்டவணை 8ல் உள்ள அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிட்டிருக்க வேண்டும். அல்லது மாநில அரசேனும் இதற்கான அழுத்தத்தை கொடுத்திருக்க வேண்டும். அரசு தரப்பிலிருந்து எப்போது வரும் என்று தகவல்கள் கணுக்கெட்டிய தூரம் வரை தெரியாததால், நாங்களே இம்முறையும் செய்து முடித்து விட்டோம்.
Wednesday, August 05, 2020
அமைச்சர் மாபா. பாண்டியராஜன் அவர்கள் பார்வைக்கு
அன்புள்ள அய்யா Ma Foi K Pandiarajan Ma Foi K Pandiarajan இன்று தினமணி இளைஞர் மணியில் ஒரு இளைஞர் குறித்து சின்னச் சிறு கட்டுரை வந்துள்ளது. வாசிப்பவர்கள் எளிதாக வாசிக்கும் வண்ணம் அக்கட்டுரை அமைந்துள்ளதே தவிர அந்த இளைஞர் செய்த சாதனை என்பது தமிழ்கூறும் உலகம் இன்னமும் அறியாதது. புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் ச. பார்த்தசாரதிநிதி உதவியின் காரணமாகவே அந்த இளைஞர் இன்னமும் ஊக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார் என்பதனை நீங்கள் அறிந்தே இருப்பீர்கள்.