அஸ்திவாரம்

Monday, August 24, 2020

கமலா தேவி ஹாரிஸ்

தமிழச்சி கொஞ்சம். ஜமைக்காச்சி கொஞ்சம். கமலா ஹாரிஸ். அமெரிக்காவின் இன்றைய நட்சத்திரம். துணை அதிபருக்குப் போட்டியிடுகின்றார். ட்ரம்ப் க்கு எதிரணி. மேனரிசம் அப்ளாஸ் வகை. 2004 ல் கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்தவர். 2016 ல் செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் தொடுக்கும் கேள்விகள் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு குடைச்சலாக இருக்கும் அளவிற்கு வாதப்புலி.


கடந்த ஆண்டு அமெரிக்காவின் ஜனநாயக கட்சி சார்பாக அதிபர் தேர்தலுக்கு போட்டியிட அறிவித்த போது அமெரிக்க அரசியல் உலகம் இவரை திரும்பிப் பார்த்தது. சமீபத்தில் இறந்த ஜார்ஜ் ப்ளாய்டு இறந்த பின்பு உருவான இனவெறிக்கு எதிரான அலை இப்போது அமெரிக்காவில் புதிய அலையை உருவாக்கியுள்ளது. தற்போது திருவாளர் ஜோ விற்காக (அதிபர் பதவிக்கு போட்டியிடுபவர்) தன் அதிபர் ஆசையை திரும்பப் பெற்று அவர் வாக்குறுதியின்படி துணை அதிபராக களத்தில் நிற்கின்றார். 1964 ல் கலிபோர்னியாவில் பிறந்தவர். அம்மா சென்னையைச் சேர்ந்த சியாமளா கோபாலன்.

தமிழகத்தில் என் வாழ்நாளுக்குள் அரசியலில் முதல்வர் பதவிக்குப் போட்டியிடக்கூடியவர்கள் நேரிடையான ஒளிபரப்பில் மக்கள் பிரச்சனை குறித்து பத்திரிக்கையாளர்கள் பாரபட்சமின்றி கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளித்து, போட்டியிடுபவர்களின் தகுதி தராதரத்தை வெளிக் கொணர வேண்டும் என்ற (அற்ப) ஆசை எனக்குண்டு. கமலா ஹாரிஸ் பேட்டியில் பேசும் வார்த்தைகள் வெல்லும் சொல்லாக இருப்பது ஆச்சரியமே. தமிழகத்தில் இவரைப் போன்ற பெண்கள் (CM) போட்டியிட்டால் என்ன ஆகும் என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன்.😁

"முகமற்ற வருமானவரி மதிப்பீடு" (Faceless Assessment)

8 comments:

  1. தமிழகத்தில் முன்பு இருந்துள்ளார்கள்... ஆனால், ஒருவருக்கு Press Meet என்றாலே...

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான். ட்ரம்ப் க்கு பத்திரிக்கையாளர்கள் ஏகப்பட்ட குடைச்சல் கொடுக்க அவர் பாணி அலாதியானது. நம்மூர் ங்தோத்தா நொம்மா பாணியில் பேச அது பெரிய பூகம்பத்தை உருவாக்கியது. பார்த்தார். இது வேலைக்கு ஆகாது என்று சிஎன்என் தொலைக்காட்சியில் பணிபுரிந்த பெண்மணியை ஊடகப் பிரிவு தலைவராகப் போட்டு பத்திரிக்கையாளர்களை கையாள வைத்தார். அம்மிணி படு பயங்கர கெட்டி. பந்து வந்தால் பிடித்து அப்படியே கேட்டவர் மேல் எரிய கேள்வி கேட்டவர் கப்சிப். அந்த அளவுக்கு ஷார்ப்.

      Delete
  2. ஜோ பிடன் கம்யூனிஸ்ட் சிந்தனைக்காரர் என்று கூறப்படுகிறதே! உண்மையா?

    ReplyDelete
    Replies
    1. கிரி முக்கியமான சிரிப்பான சமாச்சாரம். ட்ரம்ப் மோடிக்கு பங்காளி. ஆமாம். நண்பர் அல்ல. ஏதோவொரு கெமிஸ்ட்ரி இருவருக்கும் ஒத்துப் போய்விட்டது. அமெரிக்க அதிபர் புரோட்டகால் சமாச்சாரங்களைக் கடந்து (அல்லது அது தொந்தரவாக இருக்கிறது) மோடியுடன் ட்ரம்ப் காதலன் போல உறவாடத் தயாராக இருக்கின்றார். ஆனால் அமெரிக்காவில் உள்ள இந்தியர் மட்டுமல்லாது அனைத்து (அமெரிக்கர்கள் தவிர்த்து) நபர்களை வெளியேற்ற விரும்புகின்றார். கள்ளக்குடியேறியாக இருந்தவர்கள், யாராவது ஒருவர் அமெரிக்காவின் பிரஜையாக இருந்தால் கூட இருவரையும் வெளியேற்றி, குழந்தை அங்கே பிறந்து இருந்தால் அதனை காப்பாகத்தில் சேர்ப்பது என்று ஏகப்பட்ட கிளை அத்தியாயங்கள் அங்கே நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியாவிற்கு முழு ஆதரவு. ஆனால் நம்மூரு கமலா இந்தியர் இல்ல. இந்திய ரத்தம் கொஞ்சூண்டு தான் இருக்கும். ஆப்ரிக்கா, அமெரிக்கா (முதல் கணவர்) யூதர் இரண்டாவது (இவரை திருமணம் செய்து கொண்டார். முதல் நபர் லிவிங் டு கெதர்) கணவர் என்று யாதும் ஊரே யாவரும் கேளீர் வகை. காஷ்மீர் 370 க்கு எதிராகவும் கருத்து சொல்லி உள்ளார். அமெரிக்கர்களும் நம்ம ஊர் எம்ஜிஆர் வகை போலத்தான். பாதி மாநிலங்கள் ட்ரம்ப் ஆதரவு என்றால் கடைசி வரைக்கும் மாறவே மாட்டார்கள். இப்போதைய சூழலில் பத்து புள்ளிகள் கமலா பார்ட்டீ மேலே உள்ளது. அங்கு கடைசி வரைக்கும் பாலியல் புகார் வராமல் இருக்க நம்மூர் கொண்டாத்தம்மன் கோவில் சாமியை நாம் வேண்டிக் கொள்ள வேண்டும். அது வந்தால் பணால் தான். அது ஒன்று தான் மொத்த களத்தையும் மாற்றும். இருவரில் எவர் அங்கே ஆட்சிக்கு வந்தாலும் கருப்பின மக்களுக்கு எதுவும் செய்யப் போவதில்லை. அது (மட்டும்) உண்மை. அப்படி செய்ய நேர்ந்தால் அவர்கள் ஆட்சியில் நீடித்த இருக்க வாய்ப்பும் இல்லை. இது தான் அமெரிக்காவின் உலகளாவிய ஜனநாயகம்.

      Delete
  3. தமிழகத்தில்...சற்று சிரமமே..

    ReplyDelete
    Replies
    1. நயன்தாரா வுக்கு எதிர்காலத்தில் வாய்ப்பு உள்ளது. எப்படி என்று கேட்காதீர்கள். நம்ம சித்தருக்கு அந்த ரகசியம் தெரியும். அவர் தான் கன்னாபின்னவொன்று ஆதரித்துக் கொண்டிருக்கிறார்.

      Delete
  4. இவரைப் பற்றி எத்தனை எத்தனை செய்திகள்! வந்து கொண்டே இருக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. இனி தான் முழுமையாக வரும். இப்போது நியூஸ் ரீல் மட்டுமே.

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.