அஸ்திவாரம்

Thursday, August 06, 2020

EIA 2020 மற்றும் புதிய கல்விக் கொள்கை 2020 (தமிழ் மொழி பெயர்ப்பு)

 Nandhakumar Nagarajan


கடும் வேலைப்பணிகளுக்கு நடுவே விழியனின் முன்னெடுப்பில் தொடங்கப்பெற்ற தேசியக் கல்விக் கொள்கையின் தமிழ் மொழி பெயர்ப்பு முடிந்து விட்டது.

முழுக்க முழ்க்க தன்னார்வலர்கள் இணைந்து இதை செய்து முடித்திருக்கிறோம். நியாயமாகப் பார்த்தால் மத்திய அரசு வெளியிடும் போதே அட்டவணை 8ல் உள்ள அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிட்டிருக்க வேண்டும். அல்லது மாநில அரசேனும் இதற்கான அழுத்தத்தை கொடுத்திருக்க வேண்டும். அரசு தரப்பிலிருந்து எப்போது வரும் என்று தகவல்கள் கணுக்கெட்டிய தூரம் வரை தெரியாததால், நாங்களே இம்முறையும் செய்து முடித்து விட்டோம்.


படியுங்கள். உரையாடுவோம்.



Umanath Selvan


"சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை (வரைவு- -2020) தமிழ் மக்களின் மொழிபெயர்ப்பு-1.0"

Nandhakumar Nagarajan

----------------------------------------------------------------------------

பல நண்பர்களின் தூக்கமில்லா தொடர் இரவுகளுக்குப் பின்பு EIA 2020 வரைவு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. ஒரு வேலையை முடிச்சிட்டு நம்மளை நாமளே மலைப்பா பார்ப்போம் இல்லையா அப்படியான ஒரு வேலை இது என்று தோன்றுகிறது. அத்தனை டெக்னிக்கல் வார்த்தைகள். என்ன 83 பக்கம் தான அப்படி ஒரு திருப்பு, இப்படி ஒரு திருப்பு திருப்புனா முடிஞ்சிடாதா என்று அமர்ந்தவர்கள் ஒரே வரியில் மணிக்கணக்காய் உட்கார வேண்டியதாய் இருந்தது.

அவ்வளவு கடினமாகவும், கடும் விவாதங்களுக்கேற்ப வார்த்தைகளை பொறுக்கிப் போடுவதாய் இருந்தது. யாரென்றே முகம் தெரியாத பல நண்பர்கள் ஓடோடி வந்து தங்களால் ஆனதைச் செய்தனர். ஒவ்வொரு மொழி பெயர்ப்பையும் தன்னார்வலர்கள் சேர்ந்து வெளியிடும் போதும் மத்திய அரசும் மாநில அரசும் கொஞ்சமேனும் வெட்கப்பட வேண்டும்.


அதிலும் இயற்கை வாழ்வாதாரங்கள் குறித்தான ஒரு வரைவில், விவசாயிகள், மணல் சார்ந்த வியாபாரிகள், குடிசைத் தொழில்கள் செய்பவர்கள், நீர் வளங்கள் சார்ந்த தொழில் செய்பவர்கள் உள்ளிட்டோருக்கான ஒரு வரைவை அவர்களுக்கான மொழியில் கொடுக்க முயல்வதும் அது குறித்தான அவர்களின் பார்வையை பெறுவதும் ஒரு ஜனநாயக அரசின் அடிப்படைப் பண்பாய் இருக்க வேண்டியவை. அதை அவர்கள் செய்யத் தவறும் போது இது போல சில நிகழ்வுகளை நாமே முன்னெடுக்க வேண்டியதாய் இருக்கிறது.

அடுத்த தலைமுறையையும் இந்தியாவின் எதிர்காலத்தையும் நிர்ணயம் செய்யும் EIA 2020 வரைவும், தேசியக் கல்விக் கொள்கையும் இப்போது தமிழில் உங்களது கைகளில் இருக்கிறது. படியுங்கள் உரையாடுவோம்


EIA 2020 வரைவு தமிழ் மொழி பெயர்ப்பு வாசிக்க தரவிறக்கம் செய்ய,

1 comment:

  1. படிப்பறிவு இல்லாதவர்களிடம் யார் வாசித்து காண்பிப்பார்கள்...?

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.