அன்புள்ள அய்யா Ma Foi K Pandiarajan Ma Foi K Pandiarajan இன்று தினமணி இளைஞர் மணியில் ஒரு இளைஞர் குறித்து சின்னச் சிறு கட்டுரை வந்துள்ளது. வாசிப்பவர்கள் எளிதாக வாசிக்கும் வண்ணம் அக்கட்டுரை அமைந்துள்ளதே தவிர அந்த இளைஞர் செய்த சாதனை என்பது தமிழ்கூறும் உலகம் இன்னமும் அறியாதது. புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் ச. பார்த்தசாரதிநிதி உதவியின் காரணமாகவே அந்த இளைஞர் இன்னமும் ஊக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார் என்பதனை நீங்கள் அறிந்தே இருப்பீர்கள்.
மற்ற மாநிலங்களை விட மொழி அரசியல் என்பது நம் மாநிலத்தில் தான் மிக அதிகம். மும்மொழி, முற்றுகையில் மொழி, விழிபிதுங்கும் மொழி, உன்னத மொழி, உன் மொழி என் மொழி என்று ஆயிரத்தெட்டு அரசியலில் நம் தாய் மொழியை உண்மையிலேயே வளர்க்கும் காரணங்களை நாம் மறந்து விட்டோம் என்பதனை குழந்தைகள் பேசும் டாடியும் மம்மியின் மூலம் நீங்கள் அறிந்தே இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
பேசாத மொழி அழியும். எழுதாத மொழி மறையும். காலத்திற்கேற்ப தகவமைத்துக் கொள்ளாத மொழி சிதையும். தமிழ் மொழி வளர்ச்சிக் கழகம், தமிழ்ப் பண்பாட்டுக் கழகம், மொழி ஆய்வுக்கழகம், பண்பாட்டுத்துறை அமைச்சகம் என்று நம் மாநிலத்தில் தான் பல கிளைகள் உள்ளது. ஆனால் கனிகளை நாம் சுவைத்துள்ளோமா? என்பதனை மெட்ரிகுலேசன் மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களிடம் கேட்டால் உங்களால் தெரிந்து கொள்ள முடியும் என்றே நம்புகிறேன்.
விண்ணைத் தாண்டி வருவாயா? என்று கேள்விப்பட்டுருப்பீங்க? தமிழ்நாட்டைத் தாண்டி செல்வாயா? என்று கேட்டால் தமிழ் மொழி சென்றுள்ளது. வளர்ந்துள்ளது. வாழ்ந்துள்ளது. மேலும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. காரணம் இவரைப் போன்ற பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அரசு உதவியின்றி, தனி நபர்களின் உதவிகளை வைத்துக் கொண்டு தங்கள் வயிற்றுப்பாட்டையும் பார்த்துக் கொண்டு மூத்த மொழியை புது மொழியாக கணினி மொழியாக மாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு உயரிய விருது வழங்கினால் அந்த விருதுக்கே பெருமை சேர்க்கும். உங்கள் அம்மா அரசு செய்தால் அதன் பெருமை அனைத்தும் உங்களுக்கே சேரும் அல்லவா?
பின் இணைப்பு
தினமணி கட்டுரை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இனிய நண்பருக்கு வாழ்த்துகள்...
ReplyDeleteஅவரின் தொழிநுட்பக் கருவிகள் அனைத்தையும் சொல்லாமல், இணைப்பில் சிலவற்றை மட்டும் குறிப்பிட்டு உள்ளார்... அதுவும் அவரின் சிறப்புகளில் ஒன்று...
ReplyDeleteஉழைக்கவே பிறந்தவர்கள் அங்கீகாரத்தை எதிர்பார்க்காமல் அடுத்த வேலை என்ன? என்று நகர்வது வாடிக்கை தானே?
Deleteஇவருக்கு என்றைக்கோ அங்கீகாரம் கொடுத்திருக்க வேண்டும். சத்தமில்லாமல் மிகப்பெரிய பணியைச் செய்திருக்கிறார். அவரின் சாதனைகளைப் பற்றி தெரியவந்தபோது பிரமிப்புதான் ஏற்பட்டது. மா.பா. பாண்டியராஜனுக்கா...
ReplyDeleteஅரசு நினைத்தால் நொடிப் பொழுதில் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். மனம் இல்லையே?
Deleteஇனிய இணைய மனிதருக்கு வாழ்த்துகள்
ReplyDeleteநல்லாயிருக்கு. இணைய மனிதர்.
Deleteஆச்சர்யப் படவைக்கும் இளைஞர்.இவரைப் போன்றவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் தமிழ் அறியாமல் வளர்த்துக்கொண்டிருப்பவர்கள்தான் அலட்டிக் கொள்கிறார்கள்.
ReplyDeleteஉவேச முதல் ராஜாராமன் வரைக்கும் தமிழ் மொழியை வளர்க்க பாடுபட்டவர்களுக்கு அன்றும் இன்றும் மக்கள் ஆதரவு இல்லை என்பது மகத்தான சோகம்.
Deleteஅமைதியாக தமிழ்த்தொண்டு ஆற்றிவரும் இளைஞர். அசராத உழைப்பாளி. வளரும் இளைஞர்கள் இவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை நிறையவே இருக்கின்றன.
ReplyDeleteஎனக்குத் தெரிந்து இவரைப் போன்றவர் சீனிவாசன். அவர் பணியும் இன்னமும் உலகம் அறியாதது.
Delete