"ஒரு அடியாவது எடுத்து
வை."
இது மகாத்மா காந்தியின்
பிரபல்யமான வாசகம்.
அடிக்கடி நானே எனக்குச் சொல்லிக் கொள்ளும் வாசகமும் கூட.
27.1.2013 திருப்பூரில்
டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழா இனிதாக நடந்து முடிந்தது.
இந்த விழா மூலம் நான்
நினைத்து வைத்திருந்த அத்தனை விசயங்களும் சிறப்பாக நடந்தது. இது குறித்து விரைவில்
விரிவாக எழுதுகின்றேன்..
இந்த பதிவில் சிலவற்றை
மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகின்றேன்.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
திரு. மலைநாடன்
4 tamilmedia.com நிறுவனர் ஆசிரியர்.
நான் வலைதளத்தில் எழுத
வந்தது (2007 மே) ஒரு எதிர்பாரத நிகழ்வு.
ஒரு மிகப்பெரிய தோல்வியில் இருந்து மீண்டு வர அப்போது மனதிற்கு மாறுதல்
தேவைப்பட்டது.
தமிழ் தட்டெழுத்துப்
பயிற்சியென்பது பள்ளி முதல் இன்று வரையிலும் மிக நன்றாக தெரிந்த காரணத்தால் இணைய
எழுத்துப் பயணம் தொடர்ந்தது. இன்று வரைக்கும் தொடர்கின்றது.
வருகின்ற 2013 ஜுலை
மாதம் ஐந்தாம் ஆண்டு முடியப்போகின்றது.
ஐந்து வயது முடியும் போது முதல் வகுப்பில் அடி எடுத்து வைப்பது போல நானும்
டாலர் நகரம் என்ற புத்தகம் எழுதி 4 தமிழ் மீடியா குழுமம் வெளியிட்டுள்ளது.
எழுத்துலகில் என்னைப்
பொறுத்தவரையிலும் இது முதல் ஆண்டு.
எனக்கு ஆசிரியராக
வாய்த்தவர் திரு. மலைநாடன். கண்டிப்பு வாத்தியார். இவர் அகராதியில்
சமரசம் என்ற வார்த்தையே இல்லை. தரம்
மட்டுமே குறிக்கோள். ஆனால் எப்போதும் வேகத்திலேயே பயணித்துக் கொண்டு இருப்பவனை
எதற்கும் அடங்காதவனை தன் வார்த்தைகளால் வசமாக்கி என்னையும் அவர் 4 தமிழ்மீடியா
தளத்தில் வெளியிடும் மனமே வசப்படு என்பது போல மாற்றியவர். இலக்கணத்திற்குள் அடங்காத
என் வார்த்தைகளை, எழுத்துக்களை, வாசிக்க உகந்ததாக மாற்றியவர்.
இன்று நானும் திருப்பூரில் உள்ள தொழில் துறை சார்ந்த நண்பர்களிடம் வேறொரு வகையில் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றேன் என்பதற்கு இந்த வாத்தியரே காரணம்.
இன்று நானும் திருப்பூரில் உள்ள தொழில் துறை சார்ந்த நண்பர்களிடம் வேறொரு வகையில் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றேன் என்பதற்கு இந்த வாத்தியரே காரணம்.
இவரைப் பற்றி இவருடன்
உண்டான தொடர்பு குறித்து தனியாக எழுதுகின்றேன்.
கற்றுக் கொண்ட
பாடம்
உழைப்புக்குண்டான பலன் நிச்சயம் ஒரு நாள் கிடைக்கும். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வதிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
உழைப்புக்குண்டான பலன் நிச்சயம் ஒரு நாள் கிடைக்கும். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வதிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
திரு. ராஜராஜன்.
சென்னை.
ஈழம் தொடர்பான பதிவுகள்
எழுதத் தொடங்கிய போது எனக்கு மின் அஞ்சல் வாயிலாக அறிமுகம் ஆனவர். ஈழம் தொடர்பாக எழுதிய முதல் தலைப்பின் போது உருவான அறிமுகம் இன்று வரை நல்ல புரிந்துணர்வோடு தொடர்கின்றது.. அப்போது இவர் பெங்களூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் உயர் பொறுப்பில் பணியாற்றிக் கொண்டிருந்தார். தற்போது
சென்னையில் இருக்கின்றார்.
இவர் குடும்பத்திற்கு சென்னையில்
இருக்கும் வசதிகளைப் பார்த்தால் மிரண்டு போய்விடுவீர்கள். அது என் அப்பா சம்பாரித்த சொத்து. என்னுடையது அல்ல என்பார்.
எது குறித்தும்
எவரிடமும் சொல்ல மாட்டார். தனது கொள்கை ரீதியான சித்தாந்தத்தில் தெளிவாக இருக்கின்றார். ஆனால் ஆயிரம் மடங்கு நம்பமுடியாத கொள்கை
பிடிப்பாளர். கடந்த நான்கு வருடங்களாக கடவுள் என்ற வார்த்தையை விட மனிதன் என்ற
வார்த்தையை நாம் அதிகம் நம்புகின்றேன். மிக முக்கிய காரணம் இவர் தான்.
மனிதர்களிடத்தில் எத்தனை குறைகள் இருந்தாலும் நான் சந்திக்கும், பழகும் ஒவ்வொரு மனிதரையும் கடவுளாகத் தான் பார்க்கின்றேன். காரணம் இவர்கள் தான் எனக்கு கற்றுக் கொடுக்கும் கடவுளாக இருக்கின்றார்கள். பல சமயம் சோர்ந்து போன சமயங்களில் என்னை தூக்கி சுமந்து கொண்டு செல்லும் கடவுளாக இருக்கின்றார்கள்.

நான் வலையுலகில்
வெற்றியடைந்துள்ளேன் என்பதற்கு இவர் என் மேல் வைத்துள்ள மரியாதை, அக்கறையும் முக்கிய
காரணமாக இருக்கிறது. தேவியர் இல்லம் இவருக்கு நிறைய கடமைப்பட்டுள்ளது. நான் இன்று
இந்த அளவுக்கு தொழில் வாழ்க்கையில் உயர்ந்து நிற்பதற்கு, குடும்ப வாழ்க்கை
மகிழ்ச்சியாக வாழ்வதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றார்.
இவரின் நன்றிக்கடனை தீர்க்க
வேண்டும் என்று முயற்சிகளை எடுப்பேன்.
ஆனால் கட்டை போட்டு தடுத்து விட்டு ஒரு நக்கல் சிரிப்பை உதிர்ப்பார்.
நாங்கள் இருவரும்
எல்லாவிதங்களிலும் நேரெதிர் கருத்து கொண்டவர்கள்.
சண்டை போடாத நாளே இல்லை. ஆனால் இரட்டையர் போல ஏதோவொரு புள்ளியில் ஒவ்வொரு
முறையும் இணைந்து கொண்டே இருக்கின்றோம். கடந்த நான்கு ஆண்டுகளில் இவர் எனக்கு
செய்த உதவிகளை பட்டியலிட்டால் எவராலும் நம்ப முடியாது.
டாலர் நகரம் புத்தகம் அச்சாகி திருப்பூர் கொண்டு வந்து சேர்ந்தது வரை, திருப்பூருக்குள் பலருக்கும் கொண்டு சேர்த்தது வரைக்கும் இவரின் உழைப்பு பற்றி வார்த்தைகளால் எழுதிவிட முடியாது. டாலர் நகரம் விழாவுக்கென்று சென்னையில் இருந்து கிளம்பி வந்து இந்த விழாவுக்காக உழைத்து விட்டு சென்றவர்.

நான்
இவரைப்பற்றி முழுமையாக எழுதினால் சென்னையில் திருப்பூருக்கு வந்து என்னை அடிக்ககூடிய
உரிமையுள்ளவர்.
தனது வெளிநாட்டு பயணத்தை ஒத்திவைத்து விட்டு எனக்காக திருப்பூர் வந்தவர்.
தனது வெளிநாட்டு பயணத்தை ஒத்திவைத்து விட்டு எனக்காக திருப்பூர் வந்தவர்.
டாலர் நகரம் நூல் வெளியீட்டு
விழாவை திரு. ராஜராஜனுக்கு காணிக்கையாக்குகின்றேன்.
கற்றுக் கொண்ட
பாடம்
மனிதர்கள் தான் கடவுள் உருவத்தில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
மனிதர்கள் தான் கடவுள் உருவத்தில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
வீடு சுரேஷ் குமார்
திருப்பூரில் ஒரு சொந்தமான வடிவமைப்பு (யுவா கிராபிக்ஸ்) என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றார். அசாத்தியமான திறமைசாலி, படைப்பாளி.
விழா அழைப்பிதழ் முதல் வடிவமைப்பு சார்ந்த அத்தனை வேலைகளுடன் மற்றும் விழா மலர் உருவாக்கம்
வரைக்கும் உழைத்தவர் தம்பி வீடு சுரேஷ் குமார்.
நாங்கள் உருவாக்கிய
விழா மலர் அவசரத்தில் உருவாக்கியது. காரணம் என்னால் இரவு நேரங்களில் மட்டுமே இந்த
வேலைகளில் ஈடுபட முடிந்தது. (தனியாக எழுத வேண்டிய விசயங்கள் உள்ளது) விழா மலர் அச்சு வடிவத்தில் உருவாக்கிய பிறகு உருவான
சில பிழைகளைக் கூட எங்களுக்கு மாற்ற நேரம்
கிடைக்கவில்லை. யோசிக்கக்கூட அவகாசம் இல்லாது ஓடிக் கொண்டேயிருந்தோம்.
டாலர் நகரம் சிறப்பு
விழா மலரை பிடிஎஃப் கோப்பாக மாற்றி இணையத்தில் ஏற்றும் போது அந்த தவறுகளை
முடிந்தவரைக்கும் மாற்ற முயற்சித்துள்ளோம்.
வீடு சுரேஷ் குமார் இன்று (29 1 2013) தருகின்றேன் என்று சொல்லி உள்ளார். இவர் என் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை
என்ற போதிலும் தனது ஆடைத்தொழில் வடிவமைப்பு பணிகளுக்குகிடையே பல நாட்கள் நள்ளிரவு
வரை என்னோடு ஒத்துழைத்து இந்த விழாவின் கடைசி நிகழ்வு வரைக்கும் மனம் நோகாமல்
காட்டிய ஈடுபாடு என்பது மகத்தானது.
கற்றுக் கொண்ட பாடம்.
வடிமைப்பு சார்ந்த
பெரும்பாலான விசயங்களை, மற்றும்
கிரியேட்டிவிட்டி என்பதன் முழு அர்த்தத்தையும் நான் கற்றுக் கொண்டேன். ஏற்றுமதி
துறை தவிர மற்றொரு புதிய தொழில் என் கைவசம் இருக்கிறது என்ற நம்பிக்கை இன்று
எனக்கு உருவாகியுள்ளது.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
செண்பகம் மக்கள் சந்தை
நிறுவனர் திரு. ஈஸ்வரன் சீனிவாசன்.
இவர் நிறுவனத்தில்
பணிபுரிபவர் தம்பி அருண்.
தனது சுய முயற்சியால் ஒட்டி என்ற திரட்டியை உருவாக்கும்
அளவிற்கு தொழில் நுட்பத்தில் முன்னேறி வந்து ஒரு இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டு
இருக்கின்றார்.
பல சாதனைகளை சப்தம் இல்லாது
செய்து கொண்டு இருக்கின்றார். தம்பி அருண் வாழ்வில் பல உயரங்களை தொடுவார் என்று
நம்புகின்றேன்.
மக்கள் சந்தை.காம், ஒட்டி
என்ற திரட்டி, உறவோடு, தொழிற்களம் போன்ற அத்தனையும் திரு சீனிவாசன்
அவர்களின் ஆதரவோடு தம்பி அருண் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் போன்ற ஊரில்
ஒரு வணிக (மளிகைப் பொருட்கள் முதல் மற்ற அத்தனை பொருட்களையும் ஒரே கூரையின் கீழ்
கொண்டு வந்துள்ள பிரமாண்டமான நிறுவனம் தான் செண்பகம் மக்கள் சந்தை) நிறுவனத்தின்
முதலாளி தமிழ் இணையத்தில் கவனம் செலுத்தியதோடு பல நல்ல சமூக காரியங்களை சப்தம்
போடாமல் செய்து கொண்டு இருக்கின்றார். திருப்பூரில்
இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் தாய்த் தமிழ் பள்ளி என்பது இவர்கள் மூலம்
தான் எனக்கு அறிமுகம் ஆனது.
இதைப்பற்றி விரிவாக விரைவில்
எழுதுகின்றேன்.
திருப்பூர் 2013 புத்தக கண்காட்சியில் செண்பகம் மக்கள் சந்தை நிறுவனம் வைத்துள்ள (என்
புத்தகம் குறித்த) ப்ளெக்ஸ் போர்டு என்பது ஒரு பெரிய பிரபல்யமான எழுத்தாளருக்கு
உரிய மரியாதையைப் போல உருவாக்கியதோடு, டாலர் நகரம் விழா முடியும்
வரைக்கும் பல உதவிகளை செய்து இது எங்கள் நிறுவனத்தின் விழா என்று சொல்லி எனக்கு பல
உதவிகளை செய்து கொடுத்தார்.
திரு. சீனிவாசன் அவர்களின் துணைவியார் கூட விழாவில்
கொடுத்த பழச்சாறு என்பதை தனது நேரிடையான கவனத்தில் எடுத்துக் கொண்டு செய்து
கொடுத்து அனுப்பினார் என்பதை கேட்ட போது மகிழ்ச்சியாக இருந்தது. தனது நிறுவனத்தில் எனது
புத்தகத்திற்காக தனியாக ஒரு நபரை போட்டு அவர் மூலம் சந்தைப்படுத்திக்
கொண்டிருக்கின்றார்.
திரு. அருண் அலைபேசி
எண் 95 66 66 12 14
திரு. ஈஸ்வரன்
சீனிவாசன் அலைபேசி எண் 98 94 86 76 43
கற்றுக் கொண்ட
பாடம்.
மனிதர்களை நேசிக்க
கற்றுக் கொண்டால் ஒவ்வொரு மனிதரும் கடவுள் தான். செண்பகம் மக்கள் சந்தை
நிறுவனத்திற்கு நான் தனிப்பட்ட முறையில் எந்த உதவிகளையும் பெரிய அளவில் செய்து விட
வில்லை. என்னை என் ஆலோசனைகளை பல
விதங்களிலும் தம்பி அருணும், திரு. சீனிவாசன் அவர்களும்
கேட்பார்கள் என்பது மட்டுமே நான் செய்த உதவி என்று எடுத்துக் கொள்ளலாம்.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
நிகழ்காலததில் சிவா.
சொந்தமாக ஒரு ஏற்றுமதி
நிறுவனம் நடத்திக் கொண்டிருக்கின்றார்.
இவரும் பல ஆண்டுகளுக்கு
முன் ஒரே நிறுவனத்தில் வெவ்வேறு துறையில் பணியாற்றினோம். ஆனால் அப்போது பெரிய
அளவில் தொடர்பு இல்லை. ஆனால் இணையம் மூலம்
எனக்கு அறிமுகம் ஆனது முதல் இன்று வரையிலும் என்னை என் வேகத்தை, என் சிந்தனைகளை, என் நோக்கத்தை தெளிவாக புரிந்து கொண்டவர். பல சமயங்களில் வேகத்தடையை போடுவதோடு உரிமையோடு
தன் மனதில் பட்டதை அப்பட்டமாக எடுத்து வைத்து இவர் தளத்தில் எழுதும் மனம் சார்ந்த
கருத்துக்களைப் போல எடுத்துச் சொல்லி என்னை எனக்கே புரியவைப்பார்.
தேவியர் இல்லத்தின் குடும்ப அங்கத்தினர்.
தேவியர் இல்லத்தின் குடும்ப அங்கத்தினர்.
டாலர் நகரம் புத்தக
உருவாகத்தின் தொடக்கம் முதல் விழா முடிந்து நண்பர்கள் அறை காலி செய்து சென்றது
வரைக்கும் தொடர்ந்து தனது அசுரத்தனமாக உழைப்பை காட்டியவர். டாலர் நகரம்
புத்தகத்தில் வந்துள்ள ஏற்றுமதி நிறுவனம் சார்ந்த படங்கள் அனைத்தும் இவரின் சொந்த
நிறுவனத்தில் எடுத்தது. மிகச் சிறந்த படைப்பாளி. இவரின் அணிந்துரை டாலர் நகரம்
புத்தகத்தில் வந்துள்ளது. ஆனால் இவரின் முழுத் திறமையை இவர் இன்னமும் உணரவில்லை
என்று அடிக்கடி இவரிடம் கோவித்துக் கொள்வதுண்டு.
தற்போதுள்ள தொழில் சூறாவளி வாழ்க்கையின் காரணமாக இவரின் உண்மையான பல திறமைகளை வெளியே காட்டிக் கொள்ள முடியாத நிலையிலும் என் பார்வையில் தெளிவான உண்மையான சிந்தனை உள்ள நண்பர்.
தற்போதுள்ள தொழில் சூறாவளி வாழ்க்கையின் காரணமாக இவரின் உண்மையான பல திறமைகளை வெளியே காட்டிக் கொள்ள முடியாத நிலையிலும் என் பார்வையில் தெளிவான உண்மையான சிந்தனை உள்ள நண்பர்.
கற்றுக் கொண்ட பாடம்.
இவருக்கு நான் செய்ய வேண்டிய நன்றி என்பது கடனாக இருக்கின்றது.
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
இரவு வானம் தம்பி சுரேஷ்.
ஒரு ஏற்றுமதி
நிறுவனத்தில் மனித வளத்துறையில் உயர் பொறுப்பில் இருக்கின்றார்.
அலுவலகம் மற்றும்
குடும்ப நிகழ்ச்சிகளின் காரணமாக விழா
நடக்க இருந்த கடைசி இரண்டு நாளில் தான் இவரால் டாலர் நகரம் விழாவில் கவனம் செலுத்த
முடிந்தது. அப்போதும் கூட குடும்பம்
சம்பந்தப்பட்ட பல நிகழ்வுகள் இருந்த போதிலும் அதனை ஒத்தி வைத்து விட்டு நான்
பார்த்துக் கொள்கின்றேன். நீங்க ஓய்வெடுங்க என்று உரிமையோடு கண்டித்து என்னை
வீட்டில் உட்கார வைத்தவர்.
இரண்டு மாதமாக தொடர்ந்து புத்தகத்திற்காக உழைத்துக் கொண்டிருந்த காரணத்தால் கடைசி மூன்று நாளில் உடம்பு ஒத்துழைக்க மறுத்தது. என் ஆரோக்கிய நிலையின் காரணமாக என்னால் நகர முடியாத
சூழ்நிலையில் தம்பி சுரேஷ் மொத்த வேலைகளையும் தானே எடுத்துக் கொண்டு சிறப்பாக செயலாற்றினார்.
விழா நடக்க இருந்த
கடைசி அந்த இரண்டு நாளிலும் தேங்கிக் கிடந்த மொத்த வேலைகளையும் சூறாவளி போல
செயல்பட்டு உழைத்து விழாவின் இறுதி வடிவமைப்புக்கு கொண்டு வந்து முக்கிய
பங்காற்றினார். என்னை முழுமையாக புரிந்து கொண்டவர். தேவியர் இல்லத்தின் ஒரு அங்கத்தினர்.
கற்றுக் கொண்ட
பாடம்
இளைஞர்களை வழிநடத்துவதை விட வழி
காட்டி விட்டு ஒதுங்கினால் போதுமானது. அவர்களின் அளப்பறிய திறமையை நாம் கண்டு
கொள்ள முடியும்.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
வெயிலான் ரமேஷ்
தலைவர். சேர்தளம்.
திருப்பூரில்
வலைபதிவர்களுக்கு ஒரு அமைப்பை முதன் முதலாக உருவாக்கியவர் வெயிலான் ரமேஷ். இவர் முயற்சியால் சேர்தளம் என்ற அமைப்பு
உருவானது. இந்த அமைப்பின் தலைவராக இருக்கின்றார்.
ஏறக்குறைய தமிழ்
இணையத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக எல்லோராலும் அறியப்பட்டவர். நான் வேர்ட்ப்ரஸ் (2007)
எழுதத் தொடங்கிய போது என்னை தொடர்பு கொண்டார்.
அப்போது நான் எழுதிய அவசரங்களைக் கூட அசராமல் பாராட்டியவர். திருப்பூரில்
இவர் நடத்திய பல விழாக்களுக்கு, நிகழ்வுகளுக்கு
எனக்கு அழைப்பு விடுப்பார். என்னுடைய
சூழ்நிலை என்பது அப்போது எனக்கு சாதகமாக இல்லை. ஒரு முறை ஒரு ஹோட்டலில் நடக்க
இருந்த முக்கிய விழா ஒன்றிக்கு நடக்கத் தொடங்கும் அந்த நேரத்தில் கூட என்னை
அழைத்து கலந்து கொள்ள வைக்க வேண்டும் என்று முயற்சித்தவர். ஆனால் நான் புறக்கணித்து விட்ட கொடுமையெல்லாம்
உண்டு.
பல முறை இது போன்ற
விசயங்களை மனதிற்குள் அசைபோட்டு இவரை படுத்தி எடுத்தியிருக்கிறாம் என்று மனம்
வருந்தியது உண்டு. டாலர் நகரம் விழாவின் தொகுப்புரைக்கு இவரைத் தவிர வேறு எவரையும்
போட்டு இருந்தால் நிச்சயம் அது சொதப்பலாகத்தான் முடிந்து போயிருக்கும்.
ஆனால் விழா நடக்க
இருந்த முதல் நாள் நள்ளிரவு வரைக்கும் நான் பலரையும் வேலை வாங்கியது போல என்னையும்
இவர் எழுப்பி இணையத்தில் உட்கார வைத்து வேலை வாங்கியவர். இருவரும் சம வயது
என்றாலும் என் மரியாதைக்குரியவர்.
வலையில் அத்தனை சீக்கிரம் எழுத மாட்டார். எழுதினால் அதில் நாம் கற்றுக் கொள்ள ஏதோவொன்றை விட்டு வைத்திருப்பார். ஆனால் தமிழ் இணையத்தில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளையும் அமைதியாக அசராமல் கவனித்துக் கொண்டு இருப்பார். இவரிடம் இருந்து இன்று வரை நான் பத்து சதவிகிதம் தான் கற்றுள்ளேன்.

நண்பர்கள் வீட்டுக்கு
வந்து சாப்பிட்டு விட்டுச் சென்றபோது மனைவி கொடுத்த விருந்து ஏதும் இல்லாத எங்களுக்கான இயல்பான சாப்பாட்டையே
பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டார்.
பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டார்.
கற்றுக் கொண்ட பாடம்.
பெருந்தன்மை.
டாலர் நகரம் விழா
அழைப்பிதழை இவருக்கு நேரிடையாக கொண்டுப் போய் சேர்க்காமல் மின் அஞ்சல் வழியே
அனுப்பிய போதிலும். இவரும் சேர்தளம் நண்பர்கள் அத்தனை பேர்களும் அதனை
பெருந்தன்மையாக எடுத்துக் கொண்டு ஒத்துழைத்த விதம் மறக்க முடியாத ஒன்று.
பரிசல்காரன் கிருஷ்ணகுமார் சொன்னபடியே விழாவில் கலந்து கொண்டு புத்தகத்தையும் (பணம்
கொடுத்து) வாங்கிக் கொண்டு என்னை பெருமைபடுத்தினார்.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
திரு. வரதராஜன் மற்றும்
திரு பூபதி.
இவர்கள் இருவரும் என்
துறையான ஏற்றுமதி தொழில் சார்ந்த நணபர்கள். ஒரு பெரிய அச்சு நிறுவனத்தை நடத்தி
வருகின்றார்கள். ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர்பில் இருப்பவர்கள். இவர்கள்
மூலம் திருப்பூரில் நான் இருக்கும் அவினாசி சாலை பக்கம் உள்ள வீடுகளுக்கு புத்தகம்
பற்றிய சுவரொட்டிகளை அடித்துக் கொடுத்து உதவினார்கள். இவர்களும் வாய் வழியே டாலர்
நகரம் புத்தகம் குறித்துச் சொல்லி ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கினார்கள்.
இவர்களுக்கு நான்
எழுதுவது தெரியாது. நம்ப மாட்டேன் என்றார்கள்.
இணையத்தில் உள்ள என் தளத்தை திறந்து காட்டிய போது அதன் பிறகே இருவரும் பல
விதங்களிலும் பம்பரமாக (மின் தடை கொடுமையைத் தாண்டி) செயல்பட்டு உதவி
புரிந்தார்கள்.
புத்தக விற்பனையை தாங்களாகவே எடுத்துக் கொண்டார்கள். எனது சொந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் இவர்களது பங்கு முக்கியமானது. இன்று வரையிலும் இவர்களின் தொடர்பு என்பது பணத்திற்கு அப்பாற்பட்ட என் வளர்ச்சி சார்ந்த அத்தனை விசயங்களிலும் ஆர்வத்தோடு தங்களால் முடிந்த பங்களிப்பை காட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்.

பெருமாநல்லூர் சாலையில் 60 அடி சாலை பிரியும் இடத்தில் கரூர் வைஸ்யா வங்கி பின்புறம் இவர்களது நிறுவனம்
உள்ளது.
கற்றுக் கொண்ட
பாடம்.
பத்துவருடங்களுக்கு மேல் பல
நிறுவனங்கள் நான் மாறிய போதும் நம்மிடம் உள்ள நேர்மையான எண்ணங்கள், குணாதிசியங்கள்
நிச்சயம் நல்ல மனிதர்களை நம்மிடம் தக்க வைக்கும்.
திரு. வரதராஜன் அலைபேசி
எண் 98 422 08 330
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
திரு. விஜய்
(www.techmedia.in)
நான் முதன் முதலாக
கணினி வாங்கியது (12 வருடங்களுக்கு முன்) முதல் இன்று வரை என்னுடைய மிக நல்ல நட்பு
ரீதியான தொடர்பில் இருப்பவர்.
இவரின் இயல்பான
வளர்ச்சி இன்று டெக் மீடியா என்ற பெரிய ஆலமரம் போன்ற ஒரு கணினி சார்ந்த விற்பனை
நிறுவனத்தை உருவாக்க முடிந்துள்ளது. விழாவில் காட்சிகளை நேரிலையாக கொண்டு வந்தவர்.
(இதில் உள்ள குழப்பங்களைப் பற்றி தனியாக எழுதுகின்றேன்)
யூ டியூப் ல் காணொளி
காட்சியாக கொண்டு வர தற்போது உழைத்துக் கொண்டிருக்கின்றார். விரைவில் வெளியிடப்படும்.
திரு. மலைநாடன்
இவரைச் சந்தித்து விட்டு சென்ற போது நான் தமிழ்நாட்டில் சந்தித்த மிக நல்ல
மனிதர்களில் இவரும் ஒருவர் என்று என்னிடம் பாராட்டிவிட்டுச் சென்றார்.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
திரு. முத்து.
பிரகாஷ் நியூஸ் எஜென்ஸி,
பெரியார் காலணி, திருப்பூர்.
இவர் முகத்தை கூட நான்
மறந்து விட்டேன். என் மனைவிக்குத்தான் இவரைத் தெரியும். காரணம் நான் இதற்கு
முன்னால் இருந்த இரண்டு வீட்டிற்கு செய்தி தாள்களை கொண்டு வந்து சேர்க்கும்
நிறுவனத்தை நடத்தி வருபவர். அவர் அலைபேசி
எண் மட்டும் வைத்திருந்தேன். புத்தகத்தை சந்தைப்படுத்துதல் என்ற நோக்கத்தை
பலரையும் அழைத்துப் பேசி விட இவரையும் அழைத்தேன். என்னை மறந்திருப்பார் என்று
நினைத்து முதலில் என்னை அறிமுகம் செய்து கொண்டேன்.
இரட்டைக்குழந்தையின் அப்பாதானே? என்று தானே என் ஜாகத்தையே சொல்லி
நேரே வரச் சொன்னார். நயா பைசா எதிர்பார்க்காமல், பல
விசயங்களை செய்தார். செய்து கொண்டு இருக்கின்றார்.
அவினாசி சாலை பெரியார்
காலணி பெட்ரோல் பங்க் அருகே உள்ள சந்தில் இவரின் பிரகாஷ் நியூஸ் ஏஜென்ஸி
இருக்கிறது. புத்தகங்களை இவர் தொடர்பில் உள்ள அத்தனை பேர்களுக்கும் நேரிடையாக
கொண்டு போய் சேர்த்துக் கொண்டு இருக்கின்றார்.
அலைபேசி எண் 97 89 477 979
கற்றுக் கொண்ட
பாடம்.
வாழ்வில் எத்தனை பண ரீதியான
பிரச்சனைகள் இருந்த போதிலும் 1ந் தேதி முதல் 10ந் தேதிக்குள் முந்தைய மாதம்
கொடுக்க வேண்டிய பணத்தை சம்மந்தப்பட்ட அத்தனை பேர்களையும் அழைத்து கொடுத்து
விடுவதுண்டு. அல்லது நேரில் கொண்டு போய் கொடுத்து விடுவதுண்டு. நம்முடைய நேர்மை தான் பல ஆண்டுகள் கழிந்தாலும்
பலரின் மனதிலும் நம்மை நிலை நிறுத்தி வைக்கும்.
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
திரு. ராஜேஷ்
சாப்ளின் வாட்ச் ஹவுஸ், ஆர். ஏ. டவர்ஸ்,
மேட்டுப்பாளையம் பேரூந்து நிறுத்தம், திருப்பூர்.
நான் வாழ்ந்த
கூட்டுக்குடித்தன வாழ்க்கையைப் போல சாப்ளின் வாட்ச் ஹவுஸ் என்று டைட்டான் ஷோரூம்
நிறுவனத்தை அண்ணன் தம்பி இருவர் நடத்தி வருகின்றனர். இதில் தம்பி ராஜேஷ் என்னுடன்
நெருக்கமாய் பழகிக் கொண்டிருப்பவர்.
வேறொரு நண்பர் மூலம்
பத்து வருடங்களுக்கு முன் அறிமுகம் ஆனார்கள்.
இன்று வரையிலும் என் வீழ்ச்சி வளர்ச்சி அனைத்தையும் பார்த்தவர்கள்.
புத்தகம் குறித்து சொன்ன போது பல உதவிகள் செய்தார்கள். இவர்களுக்கு நான் எழுதுவது
சமீப காலமாகத்தான் தெரியும். விழாவில் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட பரிசு
இவர்களின் நிறுவனம் வழங்கியது. புத்தக விற்பனையிலும் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திரு. ராஜேஷ் அலைபேசி
எண் 98 94 777 278
கற்றுக் கொண்ட
பாடம்.
நட்பு என்பது ஒரு முறை
கிடைத்துவிட்டால் அதை கடைசி வரைக்கும் காப்பாற்றிக் கொள்வது நமது நடத்தையின்
அடிப்படையிலேயே உள்ளது.
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
திருப்பூரில் சேர்தளம், தமிழ்ச்செடி, உறவோடு,
தொழிற்களம் போன்ற அமைப்புகளைப் போல இணையத்தில் கழுகு என்றொரு
அமைப்பு உள்ளது. அதில் உள்ள தம்பி தேவா இணையத்தில் டாலர் நகரம் விழா குறித்து
பரப்புரையை தனது கடமையாக வைத்திருந்தார். ஞானாலயாவிற்காக தனது பங்களிப்பை காட்டிக் கொண்டு இருப்பவர்களின் இவர் முக்கியமானவர்.
தம்பி தேவா அவர்கள் என்
முகம் பார்க்காமல் பல உதவிகள் தொடக்கம் முதல் செய்து கொண்டு இருக்கின்றார்.
ஞானாலயா வலைதளத்தை வெகு ஜனத்திற்கு கொண்டு செலுத்த உதவிய கழுகு குழும நண்பர்கள்
அத்தனை பேர்களுக்கும் என் சார்பாகவும் நிகழ்காலத்தில் சிவா சார்பாகவும் தேவாவுக்கு
நன்றியை இங்கே எழுதி வைக்கின்றேன்.
கற்றுக் கொண்ட
பாடம்
முகம் தெரியாது, பழக்கம் இருக்காது. நம்மைப் பற்றி
முழுமையாகக்கூட தெரியாது. ஆனால் இணக்கமான நட்பு உருவாகும். அது தான் தமிழ் இணையம்.
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
வெட்டிக்காடு ரவி.
நான் இவரின் தளத்தின்
தீவிர வாசகன். மண்ணின் மைந்தன் என்றே
இவருக்கு பெயர் வைத்துள்ளேன். சீனா பற்றிய
தொடர் எழுதிய போது நான் நினைத்தபடியே அவரின் உண்மையான எழுத்து திறமை வெளியே வரத்
தொடங்கியது. ஒரு சராசரி வாசகனாக அறிமுகம்
ஆனேன். வலைச்சரத்தில் இவரை சென்ற முறை அறிமுகம் செய்து வைத்தேன். ஆனால் படிப்படியாக இருவரின் நட்பும் ஒரு நல்ல
புரிந்துண்ர்வோடு தொடர்ந்து கொண்டே இருந்தது. அலைபேசி பேச்சு மட்டும் தான். விழாவில் தான் சந்தித்துக் கொண்டோம். அதன்
பிறகு விழா முடிந்த மாலையில் ஹோட்டல் அறையில் இரண்டு மணி நேரம் பேசிக்
கொண்டிருந்தோம்.
இருவரும் சம வயது.
நிச்சயம் இவரைப் போன்ற இளைஞர்களால் எதிர்கால இந்தியாவிற்குத் தேவைப்படும் இளம்
தொழில் முனைவோர்களை அதிக அளவு உருவாக்க முடியும் என்பது என் எண்ணம். அசாத்தியமான
திறமைசாலி. அளவு கடந்த பொறுமைசாலி. என்
விழாவிற்காக பெங்களூரில் இருந்தபடியே நிறைய உதவிகள் வழிகாட்டுதலை
செய்துள்ளார்.
திருப்பூர் 2013 புத்தக கண்காட்சியில் . பின்னல், மகேஸ்வரி புத்தக நிலையத்தில் டாலர் நகரம் கிடைக்கின்றது நானும் ரவியும் புத்தக கண்காட்சி சென்ற போது அங்கு இவரின் நண்பரின் நிறுவனமான நூல் உலகம் (ஜீவா புத்தகாலயம்) என்ற கண்காட்சி கடையில் அங்கிருந்தே நண்பரிடம் பேசி புரிந்துணர்வை உருவாக்கி அந்த கடையில் என் புத்தகத்தை இடம் பெறச் செய்தார்.

அதற்கு மேலாக நான் இந்த
விழாவின் மூலம் செய்ய நினைத்த இரண்டு முக்கிய காரியங்களுக்கு தொடக்க விதையை
ஊன்றியுள்ளார். நிச்சயம் மரமாகும் என்ற
நம்பிக்கை உண்டு. காரணம் கல்விக்கு
அப்பாற்பட்டு, பதவிக்கு அப்பாற்பட்டு மனம்
முழுக்க சமூகம் சார்ந்த மனிதர்கள் மேல் கொண்ட அக்கறை கொண்ட அதிக சிந்தனைகள்
இருப்பதால் அந்த காரியங்கள் ஜெயிக்கும் என்று நம்புகின்றேன்.
நூறு சதவிகிதம் நேர்மையான மனிதராக
இருக்கின்றார்.
நிச்சயம் இவர்
குடும்பம் எந்நாளும் நலமுடன் வாழ வேண்டும் என்று விரும்புகின்றேன். புதுக்கோட்டை சென்றதும் ஞானாலயா திரு. கிருஷ்ண மூர்த்தி அவர்கள் இவரைப் பற்றி பேசிய போது ஒரு வாசகம் சொன்னது எனக்கு பெருமையாக இருந்தது.
உங்கள் முகம் கூட தெரியாமல் எத்தனை பெரிய பதவிகளில் இருந்தவர்களை உங்கள் எழுத்துக்கு வாசகராக கொண்டிருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. அத்தனை பேர்களும் வந்து கலந்து கொண்டது நிச்சயம் உங்கள் மேல் உள்ள மரியாதையை எனக்கு அதிகமாக்கியது என்றார்.
கற்றுக் கொண்ட
பாடம்.
உன் நண்பர்கள் வழியே உன்னைப் பற்றி
அறிய முடியும். உன் எழுத்துக்கள் வழியே உன் நோக்கம் பற்றி அறிந்து கொள்ள முடியும்.
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
திரு. சங்கர நாராயண்ன்.
ஒரிஸ்ஸா
(சொந்த ஊர் திண்டல் ஈரோடு)
இவர் அனுப்பும்
படங்களைத்தான் கூகுள் பளஸ் ல் பகிர்ந்து கொண்டு வருகின்றேன். இவரைப்பற்றி ஒரு தனி
பதிவே எழுத வேண்டும்.
ஒடிஷா (தற்போதைய
பெயர்) வில் இருந்து கொண்டே எனக்கு வழிகாட்டுதல் போன்ற பல உதவிகளை செய்தவர்.
குறிப்பாக டாக்டர் ஜெ. ஜீவானந்தம் அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர். இவர்
ஒடிஷா வில் ஒரு மிகப் பெரிய கட்டுமான நிறுவனத்தின் இயக்குநராக இருக்கினறார். என் மேல் அதிக
அக்கறை கொண்டவர். ஒரே ஒரு முறை மட்டும்
இவரை சந்தித்துள்ளேன்.
கடைசி வரைக்கும்
விழா குறித்த அக்கறையை அழைத்து கேட்டுக் கொண்டே இருந்தார். விழாவிற்கு முக்கியமான
சிலரை வரவழைத்து கலந்து கொள்ள ஏற்பாடு செய்தார். தமிழ்நாட்டில் உள்ள அரசியல், தொழில் அதிபர்கள் சமூக ஆர்வலர்கள், பெரிய இயக்கங்களின் தலைவர்கள்
என்று அத்தனை பேர்களுக்கும் நன்கு அறிமுகம் ஆனவர். இவர் மூலம் தான் தி ஹிண்டு வில்
என்னைப் பற்றி விபரமான விளக்கமான டாலர் நகரம் புத்தகம் குறித்த தகவல் வந்தது.
கற்றுக் கொண்ட
பாடம்.
மனிதர்களின் உண்மையான ஆர்வம் சார்ந்த அன்பு கொண்ட அக்கறை
என்பதற்கு வயது என்பது பொருட்டல்ல.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
திரு. கிருஷ்ணகுமார்
விழா மலர் கொண்டு
வந்ததில் இவரின் அக்கறை முக்கியமானது. திருப்பூரில் ஒரு நிறுவனத்தின் பங்குதாராக இருக்கின்றார்.
தேவியர் இல்லத்தின் மேல் அதிக அக்கறை கொண்டவர். நான் எழுதிய சாயப்பட்டறை
சம்மந்தப்பட்ட அத்தனை விசயங்களும் அதன் பலன் அனைத்தும் முறைப்படி இவருக்கே போய்ச்
சேர வேண்டும்.
அத்துடன் டாலர் நகரம் மொத்த புத்தகங்களையும் பெற்று மொத்தமான சந்தைபடுத்தும் அத்தனை வேலைகளையும் செய்து கொண்டிருப்பவர். பல்லடம் சாலை வித்யாலயம் பேரூந்து நிறுத்தம்
அருகே இவர்களது நிறுவனம் உள்ளது.
அங்கேயிருந்தபடியே இவர்கள் தொடர்பில் உள்ள அத்தனை பேர்களுக்கும் கொண்டு
சேர்க்கும் பணியை செய்து கொண்டிருக்கின்றார்.
இவருடன் பணியாற்றும்
திரு. மகேஷ் செய்து கொண்டிருப்பது மகத்தான் உதவி. முகம் சுழிக்காமல் ஒவ்வொரு
பகுதிக்கும் அழைத்துச் சொல்லும் நபர்களுக்கு தனது வேலைக்கிடையே கொண்டு போய்
கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்.
திரு கிருஷ்ணகுமார்
அலைபேசி எண் 944 26 39 703
திரு. மகேஷ்குமார்
அலைபேசி எண் 97 89 311 666
கற்றுக் கொண்ட
பாடம்.
பணத்தை தேடும் உலகில் மனத்தை
தேடும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
ராமச்சந்திரன்
இவருக்கு திரு என்று போட்டு எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் அது தேவையில்லை என்பதாக வெறுமனே ராமச்சந்திரன் என்று எழுதியுள்ளேன். காரணம் இவரும் தேவியர் இல்லத்தின் ஒரு அங்கத்தினர். வளைகுடா நாடுகளில் நீண்ட காலம் பன்னாட்டு நிறுவனங்களில் மனிதவளத் துறையில் உயர் பதவியில் இருந்தவர். தற்போது தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளுக்கும் சென்று தனது சொந்த நிறுவனத்தின் மூலம் தன் முனைப்பு முகாம் நடத்திக் கொண்டு இருக்கின்றார். இருவரும் சமவயது. தேவியர் இல்லத்தின் நீண்ட நாள் வாசகர். நான் எழுதியது மட்டுமல்ல. வலையில் வந்த முக்கியமான ஆக்கபூர்வமான அத்தனை கட்டுரைகளையும் படித்து விடுவார். வலைதளத்தில் எழுதுவதை விட தற்போது கூகுள் கூட்டலில் மட்டும் அவ்வப்போது வந்து களேபரத்தை உருவாக்கி விட்டுச் செல்வார்.
இவரை பங்காளிங்க அத்தனை பேர்களும் பிகேஆர் என்றும் காக்கி டவுசர் என்றும் அழைப்பார்கள். ஆனால் படத்தில் உள்ளதைப் போல ஒரு புன்னகையோடு கடந்து சென்றுவிடுவார். நான் வலையில் எழுதிய பல அரசியல் ரீதியான சமூகம் சந்தப்பட்ட பல கட்டுரைகளுக்கு பின்புலமாக இருந்தவர். அற்புதமான நினைவாற்றல். ஆங்கிலத்தில் ஷார்ப் என்று சொல்லும் வார்த்தைக்கு இவரைத்தான் என்னால் உதாரணம் காட்ட முடியும். புத்தகப்புழு. சங்க இலக்கியம் முதல் சங்கட இலக்கியங்கள் வரைக்கும் மனிதர் பேசத் தொடங்கினால் புள்ளி விபரத்தோடு பொளந்து காட்டுவார்.
வலையுலகில் ஆலமரத்தின் அத்தனை விழுதுகளுக்கும் இவரை நன்றாகவே தெரியும். தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் தன்மைகளை, அவர்களின் நலன்களை, கடந்து வந்த பாதையை, எதிர்மறை நேர்மறை சிந்தனைகளை, பின்புலமாக இருந்து சுயநலத்தோடு இருப்பவர்களை எனக்கு அடையாளம் காட்டி தனது ஆக்கபூர்வமான அறிவை பல சமயங்களில் எனக்கு கடனாக தந்து உதவிக் கொண்டிருப்பவர்.
டாலர் நகரம் என்ற நூலை உருவாக்கியவர் திரு.மலைநாடன். ஆனால் அதை உருவமாக மாற்றியவர் இவர். இன்று பலரின் கைகளில் கொண்டு சேர்க்க பின்புலமாக இருந்தவர் ராமு.
இவரின் செல்வாக்கு சொல்வாக்கு பற்றி பலருக்கும் தெரியாது. எதையும் வெளியே காட்டிக் கொள்வதில்லை என்பது தான் இன்று வரையிலும் எனக்குள் இருக்கும் தீராத ஆச்சரியம்.
இவர் செய்த உதவி என்னால் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது ஒன்று. இதை படித்தவுடன் அழைத்து திட்டுவார். பரவாயில்லை. விழாவிற்கு வேட்டியில் வந்திருந்தார். எனக்கு அடையாளம் தெரியவில்லை. யாரோ மாப்பிள்ளை பொண்ணு பார்க்க வந்துருப்பாங்க போலிருக்கு என்று பயத்தோடு அவர் அழகை சைட் அடித்தேன்.

மீதி அடுத்த பதிவில்,,,,,,,,,