அஸ்திவாரம்

Tuesday, January 15, 2013

திருப்பூர் 2013 புத்தகத் திருவிழா


திருப்பூர், பின்னல் புத்தக அறக்கட்டளை தொடங்கியது முதல், அதன் வேராக இருந்து செயல்பட்ட தி.மு.ராசாமணி, பி.ராமமூர்த்தி இருவருக்கும், எங்கள் இதய அஞ்சலி. உங்கள் நினைவுகளோடு, ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சியை வெற்றிகரமாக்க உறுதியேற்கிறோம்.

 "இயந்திர வாழ்க்கையிலிருந்து இதயங்களை மீட்போம் ..." 

என்ற நோக்கத்துடன் செயல்பட்டுவரும் திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் & சென்னை பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் திருப்பூர் புத்தகக் கண்காட்சி, கடந்த 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.



திருப்பூர் சார்ந்த நண்பர்கள் வலைதளத்தில் கீழே கொடுக்கப்பட்ட கோடிங் வார்த்தைகளை பயன்படுத்தி திருப்பூர் புத்தக கண்காட்சியை பலருக்கும் சென்று சேர்க்க உதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.



<iframe src="http://files.bannersnack.com/iframe/embed.html?hash=bu9yx00s&wmode=transparent&t=1358237514" width="728" height="90" seamless="seamless" scrolling="no" frameborder="0" allowtransparency="true"></iframe>




பங்கேற்கும் பதிப்பகங்கள் !
01:19  பின்னல் - பாரதி  

அகர வரிசையில்:

1, 2) ஏகம் பதிப்பகம்
3) ஆனந்த நிலையம்
4) அனிதா பதிப்பகம்
5,6) அபெக்ஸ் ஏஜென்சீஸ் (சிடி)
7, 8) ஆசியன் புக் செண்டர்
9, 10) பாலாஜி புத்தக விற்பனையாளர்கள்
11, 12) பாரதி புத்தகாலயம்
13, 14) பஸ்ஸர் சிடி
15) குரோமோசோம் விற்பனையாளர்கள்
16, 17) டி.கே பதிப்பகம்
18) டிஜிட்டல் மீடியா
19, 20) டவ் மல்டி மீடியா
21, 22) ஈஸ்வர் புக் செண்டர்
23, 24) எதிர் வெளியீடு
25) யுரேகா புக்ஸ்
26) கங்காராணி பதிப்பகம்
27) ஹயக்ரீவா பதிப்பகம்
28) இஸ்கான்
29) இஸ்லாமிக் புக் செண்டர்
30) இஸ்லாமிக் பவுண்டேசன் டிரஸ்ட்
31) ஜீவா புத்தகாலயம்
32, 33) காலச்சுவடு
34, 35) கனிமொழி புத்தக விற்பனையாளர்கள்
36, 37) கண்ணப்பன் பதிப்பகம்
38, 39) கார்த்திக் பதிப்பகம்
40, 41) கிழக்கு பதிப்பகம்
42) குமுதம்
43) எல்.கே.எம். பதிப்பகம்
44, 45) லியோ புத்தக விற்பனையாளர்கள்
46) லோட்டஸ் மல்டி மீடியா
47) மகேந்திரா புத்தக விற்பனையாளர்
48, 49) மகேஸ்வரி புத்தக நிலையம்
50, 51) மணியம் பதிப்பகம்
52) மயிலவன் பதிப்பகம்
53, 54) மெர்க்குரி சன் பதிப்பகம்
55, 56) நாதம் கீதம்
57, 58) நியூ சென்சுரி புத்தக நிலையம்
59) நிழல்
60, 61) ஓம் சக்தி புத்தக நிலையம்
62) உதகை உலர் பழங்கள்
63) பாடம் பதிப்பகம்
64) பெரியார் புத்தக நிலையம்
65) பின்னல் புத்தகாலயம்
66) ராஜ ராஜ சோழன் புக்ஸ்
67, 68) ராம்கா புக்ஸ்
69, 70) சாகித்ய அகாதமி
71) சக்தி பதிப்பகம்
72) சாந்து அறிவியல்
73) சஞ்சீவியார் பதிப்பக்ம்
74, 75) சங்கர் பதிப்பகம்
76) சாட் வாட் இன்போ சோல்
77) ஸ்கூல் ரோம்
78) ஸ்கூல் ரோம் சிடி
79) அறிவியல் பூங்கா
80, 81) சீசன்ஸ் பப்ளிசிங்
82) ஸ்ரீ ஜி கல்வி உலகம்
83) சிவா புத்தகாலயம்
84, 85) சிவகுரு பதிப்பகம்
86, 87) சிவம் புக்ஸ்
88) சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம்
89) சாப்ட் வியூ
90) ஸ்ரீ பாலகங்கை பதிப்பகம்
91, 92) புத்தக களஞ்சியம்
93) விவேகானந்த சேவாலயம்
94) சுபத்ரா புக்ஸ்
95, 96) சக்ஸஸ் புக் செல்லர்
97, 98) சுதா புக்ஸ்
99, 100) சுரா காலேஜ் ஆப் காம்பெட்டீசன்
101) தமிழினி
102) திருமகள் நிலையம்
103) திக் சாப்ட்
104, 105) டைகர் புக்ஸ்
107) உரிமை பதிப்பகம்
108, 109) வள்ளலார் புத்தகக் கடை
110, 111) விகடன் மீடியா


111 அரங்கங்கள் எந்த வரிசையில் அமையும் என்பது குலுக்கல் செய்தே முடிவு செய்யப்படும. 

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு அடுத்து அமைந்திருக்கும் கண்காட்சி என்பதால், இந்த ஆண்டின் எல்லா புதிய தலைப்புக்களும், புத்தகங்களும் எதிர்பார்க்கலாம். சிறப்புக் கழிவு 10 சதவீதம் உண்டு. ரூ.250க்கு மேல் புத்தகம் வாங்கினால், திருப்பூர் புத்தகக் கண்காட்சியின் அங்கீகாரமும் நிச்சயம்.



விளம்பரக் குழு ஒருங்கிணைப்பாளர் - 94433 57147

தேவியர் இல்லம் திருப்பூர் உங்களை அன்போடு வரவேற்கின்றது.

புத்தக கண்காட்சியில் டாலர் நகரம் புத்தகம் கிடைக்கும் .


13 comments:

  1. ஜோதிஜி,

    திருவள்ளுவர் திருநாள் மற்றும் மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்!!!

    புத்தகத்திருவிழா கலைக்கட்ட வாழ்த்துக்கள்!

    // திருப்பூர் புத்தகக் கண்காட்சியின் அங்கீகாரமும் நிச்சயம்.//

    ஒரு வேளை பொன்னாடைப்போர்த்தி,மாலை மருவாதி எல்லாம் கொடுப்பாங்களோ? :-))

    ReplyDelete
    Replies
    1. சென்ற முறை வீட்டில் உள்ள சேர சோழ பாண்டி மன்னர்களுடன் சென்றோம்.

      நுழைந்தவுடன் தீனி சமாச்சார கடைகளில் நுழைந்து ஓரு ஆட்டத்தை ஆடி முடித்தார்கள்.

      அதன் பிறகே உள்ளே செல்ல அனுமதி கொடுத்தார்கள்.

      உள்ளே சென்றவுடன் பார்க்கின்ற ஒவ்வொரு புத்தக கடையிலும் உள்ள புத்தகங்களையும் எனக்கு இது வேண்டும் எனக்கு இது வேண்டும் என்று போட்டி போட்டு எடுத்தார்கள். அத்தனையும் காலி. நிதி மந்திரி என்னை முறைத்த போதிலும் என்ன தான் செய்கின்றார்கள் என்கிற உத்தேசத்தில் அள்ளிக் கொண்டு வெளியே வந்த போது வாங்கிய தொகை வைத்து மூவருக்கும் தனித்தனியே சான்றிதழ் கொடுத்தார்கள்.

      வீட்டிக்கு வந்ததும் ஒவ்வொரு புத்தகமும் மூலையில் பல நாட்கள் கிடந்தது.

      மிரட்டி பணிய வைக்க முடியாது.

      பாருங்கப்பா இந்த சான்றிதழை படிக்காத குழந்தைகளிடம் இருந்து வந்து வாங்கிச் சென்று விடுவார்கள் என்று போட்டேன் ஒரு போடு.

      மக்கள் அரண்டு போய் அடுத்த இரண்டு மாதத்திற்குள் அத்தனையும் படித்து வரைய வேண்டியதை வரைந்து வாங்கிய தொகைக்கு என்னை காப்பாற்றியது அந்த சான்றிதழ் தான்.

      அது தான் இவர்கள் சொல்லியுள்ள அங்கீகாரம்.

      Delete
    2. ஜோதிஜி,

      விரிவான விளக்கத்திற்கு நன்றி!

      உங்க வீட்டுல மழலையர் ராஜ்ஜியம் தான் போல, அப்போ நல்லா மாட்டிக்கிட்டு முழிப்பீங்கன்னு தெரியுது :-))

      பார்த்தீங்களா நான் கேட்டதால் ஒரு நல்ல விடயம் பற்றி சொல்லி இருக்கிங்க, இதனை தெளிவாக பதிவிலும் சொல்லி இருக்கலாம், அப்போ தான் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆர்வமாக புத்தகம் வாங்கி தருவார்கள், இப்படி சான்றிதழ் அளிப்பது குழந்தைகள் இடையே படிக்கும் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் நல்ல செயல்,எல்லா புத்தக விழாக்களிலும் இதனை செயல்ப்படுத்தலாம் என நினைக்கிறேன்,எனக்கு தெரிந்து சென்னையில் அப்படி இல்லை.

      நெய்வேலி புத்தக விழாவின் போது ,வாங்கிவிட்டு வந்தவங்களை எல்லா புத்தகத்துக்கும் பில் காட்டிட்டு வெளியில போக சொல்லி கடுப்பேத்தினாங்க, நானும் விடாமல் கேட்டேன் , சிலப்பேரு திருடிக்கிட்டு போயிடுவாங்க அதை தடுக்கனு பதில் கொடுத்தார்கள் :-((

      இதனை ஒரே அடியா குற்றமும் சொல்லமுடியாது, ஆனால் பில் சரிப்பார்த்து அனுப்பும் இடத்தில் பெரிய வரிசை, ஆமை வேகத்தில் நகர்ந்தது தான் எரிச்சலாக்கியது. பலப்பேரால் உடனே பில் எங்கேனு தேடி எடுக்க முடியவில்லை, பலரும் ஏதேனும் புத்தகத்தின் நடுவில் சொறுகிட்டு புரட்டி புரட்டி தேடினார்கள் :-))

      Delete
    3. அடிக்கடி என் நெருங்கிய நண்பர் (சாயப்பட்டறை மேலாளர்) என்னிடம் சொல்லும் ஒரு வாசகம்

      புத்தகம் பற்றி பொது விசயங்கள் குறித்து சமூக அக்கறை குறித்து என்னிடம் கேட்டால் என்ன சொல்ல முடியும். நான் என்ன வேண்டுமானலும் உங்களுக்கு உதவி செய்கின்றேன். ஆனால் நானும் சூழ்நிலை கைதி தான். நீங்கள் கேட்கும் எந்த விசயத்தையும் நான் மற்றவர்களிடம் பகிர முடியாது. சொல்லவும் மாட்டேன். என்னை எங்கள் மக்கள் ஓரம் கட்டத் தொடங்கி விடுவார்கள் என்பார். மேலும் சில புத்தகங்களைப் பற்றி இவற்றை சிலருக்கும் அறிமுகம் செய்து வைங்க என்றால் சப்தம் போட்டு சிரிப்பார்.

      ராத்திரி மது அருந்த அழைக்க ஒரு குறுஞ்செய்தி கொடுத்துப் பாருங்க. மக்கள் படை படையாக வருவார்கள். புத்தகம் பற்றி பேசினால் உங்களை மட்டும் அல்ல என்னையும் கிறுக்கனாக நினைத்து விடுவார் என்று உரிமையோடு என்னை கண்டிப்பார்.

      இதை இங்கே எழுதக்காரணம் திருப்பூர் என்பது இப்படிப்பட்ட வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. எதார்த்தம் என்பதும் இதுவே. ஆனால் விடாமல் பலரும் முயற்சித்துக் கொண்டே தனிப்பட்ட நபர்களும் முயற்சித்துக் கொண்டே இருக்கின்றார்கள். குறிப்பாக திருப்பூரில் உள்ள பின்னல் அறக்கட்டளை.

      திருப்பூர் மக்களை இது போன்ற விழாவிற்கு வரவழைப்பதே ஒரு மகத்தான் சாதனை தான். பள்ளிக்கூட 12 ஆம் வகுப்பு ஆசிரியர் சொன்னார். புத்தகம் படிக்க எங்கே நேரம் கிடைககின்றது என்றார். என்ன சொல்வீர்கள்? இப்போது இங்கே எந்த சமயத்திலும் கோவித்துக் கொள்ளவே முடியாது.

      ஆனால் சந்து கேப்பில் தான் நாம் சைக்கிள் ஓட்டியே ஆக வேண்டும்.

      நாம் விரும்பிய விசயங்களையும் அனுபவித்தே ஆக வேண்டும்.

      நீங்கள் சொன்ன ஏற்பாடுகள் நிச்சயம் திருப்பூர் புத்தக கண்காட்சியில் நடக்க வாய்ப்பில்லை. தெளிவான திட்டமிடுதல் ஒரு குழுவாக சேர்ந்து செயல்படுகின்றார்கள். நிச்சயம் வெற்றி பெறக்கூடிய அத்தனை அம்சங்களும் உண்டு. பல சாதனையாளர்கள் ஒன்று சேர்ந்து நடத்துகின்றார்கள்.

      Delete
  2. தகவலுக்கு நன்றி.
    அவசியம் வர முயற்சிக்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி. சென்ற பதிவை லட்டு தின்ன ஆசையா பாருங்க. வலைச்சரத்தில் உங்களை அறிமுகம் செய்து வைத்துள்ளேன்.

      Delete
  3. திருப்பூர் புத்தக கண்காட்சி அறிமுக பதிவுக்கு நன்றி,மேலே பின்னூட்டங்களும் சில புரிதல்களை ஏற்படுத்தியது, அன்புடன் ---செழியன்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொன்னதைத் தான் சட்ட மன்ற உறுப்பினரும் சொன்னார். படித்துவிட்டு.

      Delete
  4. புத்தகத் திருவிழா குறித்த நல்லதொரு பகிர்வு....

    விழா சிறக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete


  5. நண்பர் ஜோதிஜி,

    நலமா ?
    நீண்ட நாட்களாக தோதுப்படவில்லை.
    இப்போது தான் எல்லாவற்றையும் படிக்க
    வாய்ப்பு கிடைத்தது. கலக்குகிறீர்கள் !

    ஆர்வம் + திறமை + நல்ல உழைப்பு = ஜோதிஜி !

    உங்கள் முயற்சிகளுக்கு பாராட்டுக்களும்,
    என் மனம் நிறைந்த வாழ்த்துக்களும்.

    அன்புடன்,
    காவிரிமைந்தன்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு எழுதிய இடுகைகளை படித்து விட்டேன். வேர்ட் ப்ரஸ் ல் விமர்சனம் எழுதி முடித்து பிறகு ஒவ்வொரு முறையும் கடவுச் சொல் கேட்டுக் கொண்டே இருப்பது சலிப்பைத் தருகின்றது. அதனால் விமர்சனம் எழுத வில்லை.

      உங்கள் உடல் நலத்தில் அக்கறை செலுத்துங்க. வாய்ப்பு இருந்தால் பேத்தியுடன் 27 ஞாயிறு திருப்பூர் வாங்களேன். உங்கள் காலத்திற்குள் உங்களை பார்த்த திருப்தி கிடைக்கும்.

      Delete

  6. அழைப்புக்கு மிக்க நன்றி ஜோதிஜி.

    திருப்பூர் ரொம்ப தூரம் ஆயிற்றே ...
    எனக்கு - இப்போதைக்கு !

    நேரம் வரும் ! சந்திப்போம் !!

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.