அஸ்திவாரம்

Wednesday, January 23, 2013

டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி காலமானார்



என்னுடைய பள்ளிப்பருவம் முதல் கல்லூரிப் பருவம வரையிலும் என் வாழ்க்கையில், என் சிந்தனையில் அதிகம் தாக்கத்தை உருவாக்கியவர் மதிப்பிற்குரிய எம்.எஸ் உதயமூர்த்தி அவர்கள் மாரடைப்பால் காலமானார். திரு. உதயமூர்த்தி அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும்.

மக்கள் சக்தி இயக்கம் சிவகங்கை மாவட்ட முக்கியப் பொறுப்பில் இருந்த போது மதுரையில் நடந்த மாநாட்டில் ஒரு மணி நேரம் தனிப்பட்ட உரையாடலுடன் இவர் தொடர்பு உருவானது. 

நல்லவற்றை மட்டும் சிந்தித்த, செயலில் காட்டிய, இளைஞர்களின் வாழ்க்கையில் அக்கறை செலுத்திய, தனது வசதியான அமெரிக்கா வாழ்க்கையை விட்டு வெளியே வந்து தமிழகத்திற்காக எண்ணிய இவரது எண்ணங்கள் அனைத்தும் இங்கிருக்கின்றவர்களின் தந்திர மூளைக்கு முன் எடுபடாமல் போனாலும் இன்று வரையிலும் இவர் மேல் உண்மையான அக்கறையும் அன்பும் மரியாதையும் கொண்ட ஏராளமான இளைஞர்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றார்.

மிகப் பெரிய இழப்பு.


தமிழ் மக்களின் குமுகம் புதிய எழுச்சியுடன் வளர வேண்டும் என்று கருதிய
குமுக ஆர்வலரும் எழுத்தாளருமான எம்.எசு. உதயமூர்த்தி  அவர்கள்
மாரடைப்பால் இன்று காலமானார். 

இவர் எழுதிய தன்முன்னேற்ற உதவிநூல்கள்  புகழ்பெற்றவை.

`எண்ணங்கள்`,`உன்னால் முடியும் தம்பி`, 'நீதான் தம்பி முதலமைச்சர்`.

இவருடைய எழுத்துகளை முதன் முதல் ஆனந்தவிகடனில் படித்தேன், 

ஆனால் இவருடைய நூல்களை முழுவதுமாகப் படிக்கவில்லை. 

மிகவும் நல்ல முயற்சிகளை முன்னெடுத்தார், ஆனால் இன்று நம்மிடையே இருந்து  பிரிந்துவிட்டார். 

அவர் புகழ் வாழ்க! அவருடைய நற்தொண்டை மேலும் பரவச் செய்வோம், 

அது நம் கடமை!

குழும மின் அஞ்சலில் திரு. செல்வகுமார்.

ஆழ்ந்த இரங்கல்கள்.

இவரது முழக்கமான உன்னால் முடியும் தம்பி என்பது (கமலால்) திரைப்படம் ஆனது இவரது  உரைகளின் வெற்றிக்கு அடையாளம். 

தன்னம்பிக்கை யாளர்கள் அவரது எண்ணங்களை மேலும் பரப்புவதே அவரது தொண்டின் தொடர்ச்சிக்கு அடையாளமாக நிலைக்கும்

திருவள்ளுவன் இலக்குவனார் 


மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனர் எம்.எஸ். உதயமூர்த்தியின் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில்:

அமெரிக்காவில் ஆற்றிய பணி, வசதியான வாழ்க்கையைத் துறந்து தமிழகத்தின் முன்னேற்றத்துக்குத் தன்னால் இயன்ற தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்தவர் எம்.எஸ். உதயமூர்த்தி.

உன்னால் முடியும் தம்பி என்ற அவரது நூல் 1980-களில் தமிழக இளைஞர்களை வெகுவாக ஈர்த்தன. உன் திறமைகளை வளர்த்துக் கொள், பொருளாதாரத்தில் முன்னேறு, சமுதாயத்துக்கு தொண்டாற்று என்பதை வலியுறுத்தி இளைஞர்களிடம் முற்போக்குச் சிந்தனைகளை விதைத்தார்.

எண்ணங்கள், நீதான் தம்பி முதல் அமைச்சர், ஆத்ம தரிசனம் என இவர் எழுதிய 10 நூல்களும் நம்பிக்கை முத்துக்கள். 1988-ல் மக்கள் சக்தி இயக்கத்தை தொடங்கி நதிநீர் இணைப்பு, கிராம முன்னேற்றம், மதுவிலக்கு ஆகியவற்றுக்காகப் பாடுபட்டார். 

அவரது மறைவு தமிழகத்துக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், மக்கள் சக்தி இயக்கத்தினருக்கும் மதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் வைகோ தெரிவித்துள்ளார்

17 comments:

  1. ஆழ்ந்த அனுதாபங்கள்

    ReplyDelete
  2. // தமிழ் மக்களின் குமுகம் புதிய எழுச்சியுடன் வளர வேண்டும் என்று கருதிய
    குமுக ஆர்வலரும் எழுத்தாளருமான// எழுத்துப்பிழை சமூக,சமூகம் என்றிருக்க வேண்டும்.

    புத்தகங்கள் வாயிலாக என் தந்தையார் இவரை அறிமுகப்படுத்தினார். பல சுய முன்னேற்ற தன்னம்பிக்கை புத்தகங்களை சிறுவயதில் இருந்து ஆர்வமாக படித்து வந்தேன் அண்ணாரது மறைவு மனதில் கலக்கத்தை ஏற்படுத்தியது. அவரது ஆத்மா நம்மை வழி நடத்தும்.

    ReplyDelete
    Replies
    1. //
      எழுத்துப்பிழை சமூக,சமூகம் என்றிருக்க வேண்டும்.
      //

      பார்க்க

      Delete
  3. ஆழ்ந்த இரங்கல்கள்.

    ReplyDelete
  4. உதயமூர்த்தி ஐயாவின் புத்தகங்கள் என்னை செழுமைப்படுத்தியது எனில் அது மிகையாகாது, நம்மிடையே அவர் இல்லை என்றாலும் அவரின் எழுத்தும் சிந்தனையும் சாகா வரம் பெற்றவை, காலம் கடந்தும் இளையோரை வழி நடத்தவல்லது.

    ReplyDelete
  5. நம்புங்கள் நம்மால் முடியும் என்று நம்பிக்கை ஊட்டியவர், ஆழ்ந்த இரங்கல்கள்

    ReplyDelete
  6. டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களைப்பற்றி கேள்விபட்டிருக்கிறேன். வாசித்ததில்லை. அவர் மறைவுக்கு இறங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் ஆத்மா சாந்தியடைய வேணடிக்கொள்கிறேன்.

    ReplyDelete
  7. பெருந்தகை உதயமூர்த்தியின் ''உன்னால் முடியும் தம்பி'' ஒரு அருமையான ஸ்லோகன்.

    வியட்நாம் போர் முடிந்த நிலையில் அகிலன் இவரை அகில இந்திய வானொலிக்காக ஒரு பேட்டி கண்டார். அந்த இளம் வயதில் இந்தப் பேட்டி எனக்கு மிக மகிழ்வு தந்தது.

    அவர் பேசிய சில விஷயங்கள் இன்னும் எனக்கு நினைவில் நிற்கிறது:

    1.அமெரிக்கா அதனுடைய ராட்சத தொழில்சாலைகள், கார்கள், விமானங்கள், ராணுவம் போன்றவைகளை நம்பி மட்டும் இல்லை. இந்த ஆண்டு தொழில் துறையில் ஏற்பட்ட பொருளாதார சரிவை விவசாய வருமானத்தில்தான் சமாளித்தனர். (2) ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலை என்றால் நாம் எப்படி விவசாயத்தை இரண்டாம் மூன்றாம் தர தொழிலாக நினைக்கிறோம் என்பது புரியவில்லை.(3) நமது நாட்டில் சுமார் எழுபது சதவிகிதம் பேர் விவசாயத்தை நம்பி உள்ளனர். ஆனால் நமது கல்வி முறையில் குறிப்பாக பல்கலை கழகங்களில் மற்றும் ஆராய்ச்சி கூடங்களில் விவசாயத்தின் பங்கு என்ன?

    படிப்பு - உத்தியோகம் - பணம் - மேலும் பணம் - குடும்பம் என்ற படித்த சமுதாயத்தின் சுயநலக் கொலைவெறியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு பேராசிரியர் திரு உதய மூர்த்தி.

    பெ ச

    ReplyDelete
  8. எம்.எஸ். உதயமூர்த்தி மறையவில்லை அவரது “எண்ணங்கள்” போன்ற நூல்களின் மூலம் பலருடைய வாழ்வில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழ்கூறும் நல்லுலகம் குறிப்பாக மாணவர் சமூகம் அவருக்கு என்றென்றும் கடைமைப்பட்டிருக்கிறது.

    ReplyDelete
  9. ராணி வார இதழில் அவர் எழுதிய ”நீதான் தம்பி முதலமைச்சர் தொடர்”,ஜேம்ஸ் ஆலன் எழுதியதன் மொழிபெயர்ப்பான ”எண்ணங்கள்”புத்தகம் போன்ற எராளமான நூல்கள் எமைப்போன்றவர்களின் நினைவில் அவரை எப்போதும் நிலை நிறுத்தியிருக்கிறது,ஆழ்ந்த இரங்கல்--------செழியன்.

    ReplyDelete
  10. ஜேம்ஸ் ஆலன் கட்டுரைகளை மொழி பெயர்த்து தமிழுக்கு வழங்கிய போது அவரை தெரிந்துகொள்ள தொடங்கி இன்றுவரை அவரை தொடர்கிறோம்...

    ReplyDelete
  11. டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி அவர்களை எனக்கு என்னுடைய நண்பன் அதியமான் 1984ல் "உன்னால் முடியும் தம்பி என்று ஒரு தொடர் விகடனில் வருகிறது. வாசி. மிகவும் சிறப்பாக உள்ளது" என்று அறிமுகப்படுத்தினான்.
    அன்று ஏற்பட்ட அறிமுகம் பின்னர் மக்கள் சக்தி இயக்கத்தின் மதுரை மாநகர செயலராக உயரும்வரை சென்றது.
    1996ல் மதுரை மத்திய தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டு மிகவும் சொற்ப ஓட்டுக்களையே பெற்றார்.
    பழனி பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
    நரிமணத்தில் பெட்ரோல் இருக்கிறது என்பதை தெரியப்படுத்தியவர்.
    கங்கை காவிரி நதிகளை இணைக்க project plan with estimated cost போட்டு கொடுத்தவர்.
    எம்ஜியார் முதல்வராக இருந்த போது அவரை மேலவை உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியை ஏற்க வர்புறுத்தினார். ஆனால் அதை மறுத்துவிட்டவர்.
    இளைஞர்களை பொருளாதார முன்னேற்றத்தில் அதிக கவனம் செலுத்த சொல்லியவர்.
    நாமக்கல்லில் இன்றும் இவரது பெயரில் கல்விக்கூடம் மிகச்சிறந்த சேவையை செய்துகொண்டுள்ளது.
    WHO IS WHO in america எனும் புத்தகத்தில் பெயர் இடம் பெற்ற மாபெரும் அறிவியலாளர் மற்றும் தொழிலதிபர. தன்னுடைய கடைசிகாலத்தில் கிட்டத்தட்ட முப்பதுக்கும் அதிக ஆண்டுகளை தன் மக்களின் எண்ணங்களை உயர்த்துவதற்காக செலவிட்டவர்.

    ReplyDelete
  12. He is one in a million...RIP..

    ReplyDelete
  13. ஆழ்ந்த அனுதாபங்கள்

    ReplyDelete
  14. மனித வளம் பற்றி பல ஆண்டுகளுக்கு முன் பேசியவர் திரு உதயமூர்த்தி. வெளிநாட்டில் பல ஆண்டுகள் இருந்தாலும் இந்தியாவின் மேல் மாறாத பற்று வைத்திருந்தவர்.சீடன் தயாராகும்போது குரு தோன்றுவார் என்ற இவருடைய சொற்கள் மறக்க முடியாதவை. நிறைய தடவைகள் இந்தச் சொற்களை நானும் என் மாணவர்களிடம் கூறியிருக்கிறேன்.

    இவரது மறைவு மிகுந்த வருத்தத்தைக் கொடுக்கிறது. மன எழுச்சி தரும் இவரது எழுத்துக்கள் நம்மிடைய மறையாமல் வாழ்ந்து வரும். இவரது நூல்களை இன்றைய தலைமுறையினர் கட்டாயம் படிக்க வேண்டும்.

    ReplyDelete
  15. மிகவும் நல்ல மனிதர்..!! அவரது எழுத்துக்களைப் படித்திருக்கிறேன். அவரது மறைவு வருத்தமளிக்கிறது.

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.