இது ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. ஞானாலயா திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வருகின்ற ஞாயிறு (27.1.2013) டாலர் நகரம் விழாவில் உரையாற்றுகின்றார்.
திருப்பூர் வருகின்ற நண்பர்கள் கவனத்திற்கு.
தங்கும் வசதி திருப்பூரில் உள்ள எஸ் எஸ் ஹோட்டல் என்ற தங்குமிடம் நண்பர்களுக்காக அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஞாயிறு காலையில் வந்து சேர முடியும் என்ற நிலையில் இருப்பவர்கள் மற்றும் இந்த விழாவில் தங்கள் மேலான ஒத்துழைப்பை உழைப்பை தேவியர் இல்லத்திற்காக பல வகையிலும் தந்து உதவிக் கொண்டிருப்பவர்களை கீழ் கண்ட அலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளவும்.
தங்களுக்கு தேவையான உதவிகளை, வழிகாட்டுதலை,அழைத்து வருதல் போன்றவற்றில் உதவி புரிவார்கள்.
சேர்தளம் தலைவர்.
வெயிலான் ரமேஷ் 9 44 22 35 602
தமிழ்ச்செடி அங்கத்தினர்கள்
வீடு சுரேஷ் குமார் 98 439 41 916
இரவு வானம் சுரேஷ் 860 86 910 55
வாகன போக்குவரத்து ஒருங்கிணைப்பு மற்றும் எனக்கு தனிப்பட்ட முறையில் பல உதவிகள் செய்தவர் செய்து கொண்டிருப்பவர்
நிகழ்காலத்தில் சிவா 97 900 36 233
எனது உடன்பிறப்பு போல கடந்த நான்கு ஆண்டுகளாக என் வாழ்வில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவியர் இல்லத்தின் மேல் அக்கறை கொண்டு சென்னையில் இருந்து திருப்பூர் வந்து இந்த விழாவுக்கு உழைத்துக் கொண்டிருப்பவர்
புத்தகம் தொடர்பாக உங்கள் வீடு தேடி வர தொடர்புக்கு, மற்றும் மொத்த புத்தகத்தையும் வாங்கி சந்தைப்படுத்துதல் என்ற மகத்தான் உதவியை செய்து கொண்டிருக்கும் ஒரு பிரபல நிறுவனத்தின் பங்குதாரர் தன்னுடைய பெயரை எந்த இடத்திலும் போடக்கூடாது என்று கட்டளையோடு தேவியர் இல்லத்தின் மேல் அதிக அக்கறை கொண்டிருப்பவர். அவரின் பணியாளர் அலைபேசி எண்
இங்கே குறிப்பிட்ட எந்த அலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளும் போது விழாவில் கலந்து கொள்ள, உங்கள் வருகையை உறுதிப்படுத்தும் போது உங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய காத்திருக்கின்றார்கள்.
காலை 9 மணிக்கு அரங்கத்தில் இருக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன்.
தாய்த்தமிழ் பள்ளி குழந்தைகளின் அற்புத பாடல் நிகழ்ச்சிகளை நீங்கள் அவசியே கண்டு களிக்க வேண்டும். தமிழ் இலக்கியம் சார்ந்த, மகாகவி பாரதி, பாவேந்தர் பாரதிதாசன், மற்றும் தந்தை பெரியார் பெருமையை பறைசாற்றும் பாடல்கள் என் நீங்கள் இது வரையிலும் கேட்டிராத பல அற்புத பாடல்களை தங்களது அசாத்தியமான திறமைகளால் உங்களை மகிழ்விப்பார்கள்.
என்னுடைய புத்தக அறிமுகம், வெளியீடு அறிமுகம் என்பதை விட பல நண்பர்களை இதன் சந்திக்க வாய்ப்பு என்பதாக கருதியுள்ளேன்.
இது தவிர வலைபதிவர்களை மேடையில் பேச வைக்க வேண்டும் என்று எண்ணியுள்ளேன்.
தாய்த்தமிழ் பள்ளி, ஞானாலயா வை நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும். தமிழ் இணையம் மற்றும் திரட்டிகள் குறித்த அறிமுகத்தை திருப்பூரில் உள்ள பலருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளேன்.
விழா மலர் மூன்று பகுதியாக கொண்டு வந்துள்ளோம்.
குறிப்பாக தமிழ்மணம் உருவாக்கிய திரு. காசி ஆறுமுகம் அவர்களின் உழைப்பை இந்த உலகத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று தமிழ்ச்செடி அமைப்பாளர்களில் ஒருவரான திரு வீடு சுரேஷ்குமார் பிடிஎஃப் கோப்பாக தனது அற்புத வடிவமைப்பு திறமையின் மூலம் உருவாக்கியுள்ளார்.
விழா அன்று அந்த கோப்பு இணையத்தில் வெளியிடப்படும்.
எளிமையான அந்த விழா மலர் விழா அரங்கத்தில் வெளியிடப்படும்.
25.1.2013 அன்று புத்தக கண்காட்சியில் பின்னல் அறக்கட்டளை மற்றும் மகேஸ்வரி புத்தக நிலையம் என்ற இரண்டு கடையில் டாலர் நகரம் புத்தகத்தை கொண்டு போய் நண்பர்கள் கொடுத்தார்கள்.
திருப்பூர் 2013 புத்தக கண்காட்சியில் டாலர் நகரம் குறித்த ஒரு ப்ளக்ஸ் போர்டு வைத்துள்ளார்கள்.
மாதிரி டாலர் நகரம் புத்தகங்களை பின்னல் மற்றும் மகேஸ்வரி புத்தக நிலையத்திற்கு நண்பர்கள் கொண்டு போய்ச் சேர்ந்த அந்த நிமிடத்தில் காத்திருந்த ஒருவர் உடனடியாக வாங்கிக் கொண்டு சென்றதை நண்பர்கள் அழைத்துச் சொன்ன போது என்னை விட என் தம்பிமார்கள் அதிக மகிழ்ச்சியில் அழைத்துச் சொன்னார்கள். .
நாலைந்து பேர்கள் டாலர் நகரம் புத்தகத்தை வாங்கிக் கொண்டு சென்றதை பார்த்த போது தான் எனக்கே உங்கள் புத்தகம் கடைகளுக்கு வந்து விட்டது என்று தெரிந்தது என்று வெயிலான் ரமேஷ் அழைத்துச் சொன்னார்.
உள்ளுரில் பத்திரிக்கையுடன் கொடுக்கப்பட்ட சுவரொட்டி விளம்பரங்கள் மூலம் முன்பதிவு செய்ய என்ற தகவலை என் மேல் அக்கறை டெக் மீடியா (கணினி துறை) நண்பர் விஜய் மற்றும் விகேஆர் பிரிண்ட்டிங், செண்பகம் மக்கள் சந்தை, சாப்ளின் வாட்ச் ஹவுஸ், ப்ரகாஷ் நியூஸ் ஏஜென்ஸி போன்றவர்கள் தங்களின் மகத்தான் உதவிகள் மூலம் விளம்பரம் என்பதையும், நேரிடையான சந்தைப்படுத்துதல் என்ற புதிய சாதனையை உருவாக்கி காட்டியுள்ளனர்.
நிச்சயம் இந்த புத்தகம் திருப்பூர் முழுக்க சென்று சேரும் என்று நம்புகின்றேன்.
வெட்டிக்காடு ரவி பெங்களூரில் இருந்து திருப்பூர் வந்து சேர்ந்து தற்போது எஸ் எஸ் ஹோட்டலில் ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கின்றார். இவர் இந்த விழா சிறப்பாக நடக்க வேண்டும் என்பதற்காக கடந்த இரண்டு வாரமாக அவரது தினசரி கடமைகளில் ஒன்றாக அழைத்து பேசி உதவிகள் பல செய்து தன் பங்களிப்பை செய்து உள்ளார்.
முகம் தெரியாமல் பழகி இதயத்தால் இணைவது தான் இணைப்பது தான் இந்த தமிழ் இணையம்.
எழுத்தாளர் சிந்தனையாளர், பத்திரிக்கையாளர் என் ஆசான் திரு. ஞாநி அவர்கள் இன்று இரவு 9 மணிக்கு எஸ் எஸ் ஹோட்டல் வந்து சேர்கின்றார்.
திரு. அப்துல்லா, திரு. ஜோசப் பால்ராஜ் (சிங்கப்பூர்) இருவரும் இன்று மாலை திருப்பூரில் இருக்கின்றார்கள்.
மீதியுள்ள விபரங்கள் இன்று அடுத்த வெளியிடப்படும் அடுத்த பதிவில் வெளியிடுகின்றேன்.
அன்பின் ஜோதிஜி - விழா வெற்றிகரமாக சிறப்புடன் நடைபெற நல்வாழ்த்துகள் - இத்தனை நண்பர்கள் உடனிருக்க - நடைபெறும் விழா எதிர்பார்ப்பினை விட நல்ல முறையில் மகிழ்ச்சியுடன் திருப்பூர் காணாத விழாவாக நடைபெறும் என்பதில் ஐயமில்லை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஜோதிஜி - விழா வெற்றிகரமாக சிறப்புடன் நடைபெற நல்வாழ்த்துகள்
ReplyDeleteஇந்த மாதிரி நடக்கும் விழாவில் கலந்து கொள்ள முடியாமல் இருப்பது எங்களைப் போல வெளிநாட்டில் வசிப்பவர்களின் துரதிர்ஷ்டமே...
எங்களால் வரமுடியவில்லை என்றாலும் எங்களது வாழ்த்துக்கள் உங்களுக்கு என்றென்றும் உங்களுக்கு உண்டு
வாழ்க வளமுடன்
அன்பின் ஜோதிஜி அண்ணா,
ReplyDeleteவிழா சிறப்பாக நடை பெற எனது அன்பான வாழ்த்துகள். வெளிநாட்டில் இருப்பதால் நிறைய விசயங்களை இழந்து போகிறோம்...இது போன்ற விழாக்களில் பங்கெடுத்துக் கொள்ள முடியாதது மிகவும் குறையாக இருந்தாலும்...
என் அன்பும்.. வாழ்த்தும் எப்போதும் உண்டு. டாலர் நகரம் புத்தகத்தை எப்படி பெறுவது என்று உங்களிடமோ அல்லது சிவாவிடமோ அலைபேசி விபரமறிகிறேன்...!
ப்ரியங்களுடன்...
தேவா. S
அன்பின் ஜோதிஜி...
ReplyDeleteவிழா சிறப்புடன் நடைப்பெற மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவிக்கின்றேன். தங்களின் உழைப்பிற்கு கிடைக்கும் மரியாதை...உயருங்கள்...வாழ்த்துகள்.
அன்புடன்
தவறு
ஜோதிஜி மலைபாயும் பிரமிபாயும் உள்ளது. சிங்கபூர் கனடாவில் இருந்து வந்திருப்பவர்களைப் பார்க்கும் பொழுது சென்னையில் இருந்தும் என்னால் வர இயலவில்லை என்பதை நினைக்கும் பொழுது வருத்தமாய் உள்ளது....
ReplyDeleteபுத்தக விழா வெற்றியடைய வாழ்த்துக்கள் ஜோதிஜி
திட்டமிட்டு செய்யும் காரியங்கள் அனைத்தும் சிறப்பாகவே நடக்கும் என்பதை நிரூபிக்கும் மற்றுமொரு நிகழ்ச்சிக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள், ஜோதிஜி சார்.
ReplyDeleteதேவா கூறியது போல, வெளி நாட்டில் வாழ்ந்து பணத்தை தவிர மற்ற அனைத்தையும் இழப்பது இது போன்ற சந்தர்ப்பங்களில் மனதை ஏங்கச்செய்கிறது.
உள்ளம் நிறை வாழ்த்துக்கள் சார்
ReplyDeleteஅழைப்பிற்கு இணங்கி, வருகிறேன்.
ReplyDeleteநிறைய எழுத்துப்பிழைகளுடன் காலையில் அவசரமாய் வெளியிட்டேன். காரணம் உடல் உழைப்பு தந்த அசதியில் வண்டி பஞ்சராகிப் போய் உள்ளது. நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteநிறைய எழுத்துப்பிழைகளுடன் காலையில் அவசரமாய் வெளியிட்டேன். காரணம் உடல் உழைப்பு தந்த அசதியில் வண்டி பஞ்சராகிப் போய் உள்ளது. நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteபுத்தக வெளியீட்டிற்கு பாராட்டுகள் ஜோதிஜி!
ReplyDeleteவிழா சிறப்பாக நடைபெற்று உங்கள் புத்தகம் தமிழ் கூறும் நல்லுலகத்தில் ஒரு மைல்லாக
சிறந்து விளங்க மனமார்ந்த வாழ்த்துகள்!
விழா இனிதே நடைபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்!
ReplyDeleteவிழா இனிதே நடைபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇணையத்தின் "லைட் ஹவுஸ்" திருப்பூரின் பவர் ஹவுஸ்" அண்ணன் ஜோதிஜியின் "டாலர்" நகரம்" டாப்பாக வெளிவர வாழ்த்துக்கள்!
ReplyDeleteடாலர் நகரம் புத்தக வெளியீட்டு விழா
ReplyDeleteநன்றே நடைபெற வாழ்த்துக்கள்
கேட்பவர் இருந்தால்தான் கொடுக்க நினைப்பவர் கொடுக்க முடியும்
இருவரும் சமுதாயத்திற்கு தேவை.
எனினும். இரப்பவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதுதான் ஒரு நாட்டின் வளமை.
நமது இணைய இனிய தோழர்களுக்கு (Mail, G+ and Fb) தகவல் அனுப்பி விட்டேன்... வாழ்த்துக்களுடன் DD...
ReplyDeleteவிழாவும்,உங்கள் புத்தகமும் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள்.
ReplyDelete
ReplyDeleteவிழா சிறப்பாக நடை பெற எனது அன்பான வாழ்த்துகள்.
மகிழ்ச்சி.
ReplyDeleteவாழ்த்துகள்.
விழா சிறக்க வாழ்த்துகளும் பூங்கொத்தும்!!
ReplyDeleteவிழா சிறப்பாக நடைபெற எனது அன்பான வாழ்த்துக்கள்.
ReplyDelete27.1.2013
ReplyDeleteவிழா சிறப்பாக நடந்தது. வாழ்த்திய வருகை தந்த அத்தனை நல்ல இதயங்களுக்கும் நன்றி.